Thursday, September 17, 2009

பெரியாரின் பெருந்தன்மை

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
(டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தென்கச்சி சுவாமினாதன் கூறியது)

14 comments:

venkat said...

திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

ஆஹா என்ன பெருந்தன்மை.

குடுகுடுப்பை said...

இந்த சம்பவம் நானும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். என் தாத்தா பெரியார் கட்சிக்காரர், தீவிர கல்கி ரசிகர் அவர் மூலம் அறிந்தது.
--------------------------
பாலான்னு ஒருத்தர் வந்து பெரியார திட்ட வருவாரு விரைவில்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வெங்கட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
இந்த சம்பவம் நானும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். என் தாத்தா பெரியார் கட்சிக்காரர், தீவிர கல்கி ரசிகர் அவர் மூலம் அறிந்தது.
--------------------------
பாலான்னு ஒருத்தர் வந்து பெரியார திட்ட வருவாரு விரைவில்.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

ஜானி வாக்கர் said...

பெரியாருடன் ஒப்பிடும்பொழுது இன்று உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் அரசியல்வாதிகளே அல்ல.

அக்னி பார்வை said...

Nice..thanks for the info...

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஜானி வாக்கர் said...
பெரியாருடன் ஒப்பிடும்பொழுது இன்று உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் அரசியல்வாதிகளே அல்ல.//




வருகைக்கு நன்றி ஜானி வாக்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
Nice..thanks for the info...//

நன்றி அக்னி

தமிழ் ஓவியா said...

அதனால்தான் பெரியார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் ஓவியா said...
அதனால்தான் பெரியார்//

வாங்க..தமிழ் ஓவியா..நீண்ட நாட்கள் கழித்து நம்ப கடைப்பக்கம் வந்து இருக்கீங்க..நன்றி

கபிலன் said...

அட புது விஷயமா இருக்கே...
இந்த காலத்து திராவிட இயக்க கோஷ்டிகள் கத்துக்க வேண்டிய பண்பு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கபிலன் said...
அட புது விஷயமா இருக்கே...
இந்த காலத்து திராவிட இயக்க கோஷ்டிகள் கத்துக்க வேண்டிய பண்பு!//

நன்றி கபிலன்