1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்
2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.
3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..
5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
12 comments:
எண் 4 நன்றாக உள்ளது சார்!
எண் 2 சிரி சிரியாக இருந்தது
வருகைக்கு நன்றி சுப்பையா சார்
வருகைக்கு நன்றி goma
:)))))))))
ஐயா... தாங்க முடியலை... அதுவும் எண்கள் 1, 4 & 5 - சிரிச்சு சிரிச்சும் வயத்து வலி வந்ததுடுச்சு...
// நையாண்டி நைனா said...
:)))))))))//
வருகைக்கு நன்றி நைனா
//இராகவன் நைஜிரியா said...
ஐயா... தாங்க முடியலை... அதுவும் எண்கள் 1, 4 & 5 - சிரிச்சு சிரிச்சும் வயத்து வலி வந்ததுடுச்சு...//
நன்றி இராகவன்
ரொம்பவே அருமையா யோசிக்கிறீங்க
முதல் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி மேடம்..ஆமாம்..அது என்ன ஃப்ரோஃபைலில் சாதாரண குடும்பத்தலைவி...குடும்பத்தலைவி என்றால் சும்மாவா? முதலில் அந்த சாதாரணத்தை எடுங்க
///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
:)))))))))///
நன்றி Starjan
///மங்களூர் சிவா said...
:))))///
நன்றி சிவா
Post a Comment