Thursday, September 24, 2009

தமிழ் சினிமாதான் நம்பர் ஒன்

தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் பட இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது.


இன்று இந்தியாவில் தமிழ் சினிமாக்கள்தான் நம்பர் ஒன் என்றார்.,காதல்,வெயில்,சுப்பிரமணியபுரம்,பருத்தி வீரன் போன்ற படங்களை மலையாள இயக்குநர்களால் தர முடிவதில்லை.மலையாளத்தில் மோசமான படங்களே வருகின்றன.அங்குள்ள இயக்குநர்களால் கலாசாரங்களை சரியாக பதிவு செய்ய முடியாது..சில மோசமான படங்களைக் காப்பியடித்து..அதைவிட மோசமாக எடுக்கிறார்கள். பட்ஜெட்டில் மட்டுமே ஹிந்தி படங்கள் மிஞ்சலாம்.நான் சந்திக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசுகிறார்கள் என்றார்.

ஆஸ்கர் விருது பற்றிக் கேட்டபோது ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கும் போது பல பேரங்கள் நடக்கின்றன.சத்யஜித்தின் எந்த படத்தையும் இவர்கள் அனுப்பவில்லை..எனினும் அவரைப் பற்றி புரிந்துக் கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை அவர்கள் கொடுத்தார்கள்.கமர்ஷியல் படங்களை மட்டுமே ஆஸ்கருக்கு அனுப்புகிறார்கள்.அப்படங்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடுகின்றன என்றும் கூறினார்.

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தெய்வ மகனை ஏன் துரத்திவிட்டார்களாம்?

க.பாலாசி said...

இந்த செய்தியை நானும் திணமனியில் படித்தேன்...அவர் சொல்வதும் உண்மைதான்...ஏனென்றால் அவர் எடுத்த காஞ்சிவரம் தமிழ் சினிமா...ஒருவேளை இதை மலையாளத்தில் எடுத்திருந்தால் மலையாள சினிமாதான் இந்தியாவின் நம்பர் ஒன் என்று சொல்லியிருப்பார்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
தெய்வ மகனை ஏன் துரத்திவிட்டார்களாம்?//

ஏனெனில் அவன் உன்னைப் போல் ஒருவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாஜி said...
இந்த செய்தியை நானும் திணமனியில் படித்தேன்...அவர் சொல்வதும் உண்மைதான்...ஏனென்றால் அவர் எடுத்த காஞ்சிவரம் தமிழ் சினிமா...ஒருவேளை இதை மலையாளத்தில் எடுத்திருந்தால் மலையாள சினிமாதான் இந்தியாவின் நம்பர் ஒன் என்று சொல்லியிருப்பார்....//

உண்மையிலேயே பல இளம் இயக்குநர்கள் வருகையால்...சில நல்ல படங்கள் தமிழில் வருவதை மறுக்கமுடியாது பாலாஜி

venkat said...

தமிழ் சினிமாதான் நம்பர் ஒன்-என்பது ஓரளவு உண்மை.
நம்பர் ஒன்- என்பது ஒவ்வொரு காலகட்டதிறக்கு ஏற்ப மாறி வரும்
கேரள சினிமா நம்பர் ஒன்- என்பது ஒரு காலம் அடுத்து பெங்காலி படம். அடுத்து தெழுகு சினிமா
ஏற்ற இறக்கம் எல்லா மொழிக்கும் உண்டு.தற்பொழுது தமிழ் சினிமா என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.- இது மாறும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வெங்கட்

மங்களூர் சிவா said...

/

உண்மையிலேயே பல இளம் இயக்குநர்கள் வருகையால்...சில நல்ல படங்கள் தமிழில் வருவதை மறுக்கமுடியாது பாலாஜி
/

கண்டிப்பாக!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
/

உண்மையிலேயே பல இளம் இயக்குநர்கள் வருகையால்...சில நல்ல படங்கள் தமிழில் வருவதை மறுக்கமுடியாது பாலாஜி
/

கண்டிப்பாக!///



நன்றி சிவா