Tuesday, September 1, 2009

விக்கிபீடியா..என்ற காமதேனு..

என்சைக்ளோபீடியா..இது உலகின் அனைத்து பொருள்கள் குறித்து தேவையான தகவல்களைத் தொகுத்து தந்துள்ள தகவல் களஞ்சியம்.

அது போல இணையத்தில் அனைத்து தகவல்களையும் அளிக்கும் தளமே விக்கிபீடியா.இத் தளத்தின் ஆங்கிலக் கட்டுரைகலின் எண்ணிக்கை கடந்த மாதம் 17ஆம் தேதியுடன் 30 லட்சத்தைத் தாண்டியுள்ளதாம்.

விக்கிபீடியா வரலாறு..

2000 - நுபெடியா திட்டம் லாரிசாஞ்சர் துணையுடன் தொடங்கப்பட்டது.

2001 - ஜனவரியில் விக்கிபீடியா உருவானது.12..13 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர்கள்
wikipedia.com
wikipedia.org

2001 - மார்ச், மே மாதங்களில் பிரஞ்ச்,ஜெர்மனி உட்பட பிறமொழிகளில் தொடங்கப்பட்டன.ஆகஸ்ட் 2001 க்கு பிறகு இத் தளம் குறித்து மக்கள் ஆர்வம் அதிகமாகியது.

2002- பல தொழில் நுட்ப மேம்பாடுகல் புகுத்தப்பட்டது

2003 - தடக்கத்திலேயே கட்டுரைகளின் எண்னிக்கை ஒரு லட்சத்தை தொட்டதாம்

2004-உலகளாவிய தன்மையுடன்..ஓராண்டில் இரு மடங்கு வளர்ச்சி.கட்டுரை எண்ணிக்கை 10லட்சம் தாண்டியது.ஏறத்தாழ 100 மொழிகளில் உருவானது.

2006 - கட்டுரைகள் 15 லட்சத்தை தொட்டன.

2007 - அனைத்து மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்களில் 174 கோடி சொற்கள் இருந்தன.250 மொழிகள் 75 லட்சம் கட்டுரைகள் என தளம் விரிந்தது.ஆங்கிலத்தில் ஒரு நாளைக்கு 1700க்கு மேல் கட்டுரைகள் வரத் தொடங்கின.

2008 - ஏப்ரலில் ஒரு கோடியாவது கட்டுரை வெளியானது.பின் சில மாதங்களில் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் 25 லட்சம் ஆயின.

2009 - ஆகஸ்ட் 17ம் நாள் காலை 4 மணிக்கு 30,03,379 கட்டுரைகள் என கட்டுரைகள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது.

தகவல் தேடி அலைபவர்களுக்கு விக்கிபீடியா ஒரு காமதேனு..அதில் விஷயங்களை கரந்துக் கொண்டே இருக்கலாம்..விக்கிபீடியாவிற்குள் போனால்..உங்களால் எந்த தலைப்பிலும் கட்டுரைகள் எழுத விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

உண்மையைச் சொல்வதானால்...உழைக்காமல் சோறு கிடைப்பது போல..மண்டையை பிய்த்துக் கொள்ளாமல்..வேண்டிய விவரங்களை இது தருகிறது.

ஆதாரம் - தினமலர்

No comments: