மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?
வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.
ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..
நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.
சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.
வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.
நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.
ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.
தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.
(மீள்பதிவு )
22 comments:
ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்
அப்பாடியோவ்! அது நான் இல்லை. :-))
நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்///
உண்மைதாங்க!
சும்மா 'Sorry'ன்னு சொல்லிட்டுப் போகக்கூடாது. ஒரு விநாடியாவது மனப்பூர்வமா நம்ம தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கணும்.
\\ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\\
வாழ்வில் முன்னேற அருமையான கருத்து நண்பரே
வாழ்த்துக்கள்
"செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்".
அதனால் எங்கள் மனம் ஆறுதல் கொள்ளும் என்பது உண்மைதான்.
காஞ்சனா ராதாகிருஷ்ணன் அம்மா,
ஓசாமா பின் லேடன்,மஞ்ச துண்டு,சூரமணி,தமிழோவியா,ம க இ க நக்சல் கொலைகாரர்கள் போன்ற பலே தீவிரவாதிகளின் மனம் புண் படும் படியாக நாம் எழுதிவிட்டு,பிற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தால் அவர்கள் மனம் திருந்தி நல்ல மனிதர்களாக வாழ வாய்ப்பிருக்கிறதா?
பாலா
/
"தவறு செய்பவரா நீங்கள்..."
/
நான் செய்யறது எல்லாமே தப்புதானாமே அப்பிடித்தான் என் பொஞ்சாதி சொல்லுறா
:))
பதிவின் கருத்து நன்று.
***ஓசாமா பின் லேடன்,மஞ்ச துண்டு,சூரமணி,தமிழோவியா,ம க இ க நக்சல் கொலைகாரர்கள் போன்ற பலே தீவிரவாதிகளின் மனம் புண் படும் படியாக ***
பாலா,
தெரிந்தோ தெரியாமலோ பெரிய தப்பு/தவறு செய்துவிட்டீரே.ஒசாமாவோடு ம்ஞ்ச துண்டை ஒப்பிட்டு எழுதிவிட்டீர்களே.ஒசாமா இன்டெர்நேஷனல் லெவலில் அட்டூழியம் செய்பவன்.நம்மவ்ரோ வெறும் லோக்கல் லெவல்.இப்படி ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்படாதா?பேசாம நம்ம காஞ்சனா அம்மா சொன்னது போல் ஒசாமாவிடம் ம்ன்னிப்பு கேட்டுவிடுங்கள்.
வீரபாண்டியன்
மிகவும் பயனுள்ள பதிவு. மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
சின்ன சின்ன விசயங்களே பூதாகரங்களாகிவிடுகின்றன.
//இப்படி ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்படாதா?பேசாம நம்ம காஞ்சனா அம்மா சொன்னது போல் ஒசாமாவிடம் ம்ன்னிப்பு கேட்டுவிடுங்க
ள்.//
வீரபாண்டியன் அய்யா,
தெரியாமல் தப்பு செய்யவில்லை அய்யா.தெரிந்தே தவறு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்டேன்.
நீங்கள் சொன்னபடி ஒசாமா இன்டர்நேஷனல் ரேஞ்சுல புகழ் பெற்ற டெர்ரொரிஸ்ட்.நம்ம ஊர்க்காரர் தமிழ்நாட்டு லெவெலில் கட்டப்பஞ்சாயத்து செய்து,ரெள்டி ராஜ்யம் நடத்துப்வர்.ஒப்பிட்டதால் ஒசாமாவின் மனம் புண்பட்டிருக்கும் தான்.
ஆனால் ஒப்பிடாவிட்டால் நம்ம லக்கிலுக்,ஜாலிஜம்பர்,வைரமுத்து,சும்பை.வீரபாண்டியன்,சூரமணீ,தமிழோவியா போன்ற பிரியாணி குஞ்சுகளின் மனம் புண்படுமே.
மீடியொக்கர் ஆசாமிகளை, புகழ்ந்து தள்ளீ,ஜால்ரா போட்டு,டாக்டரேட் பட்டம் கொடுத்து,போஸ்டர் ஒட்டி கோவிந்தா போடும் கலாசாரம் தானே திராவிட கலாசாரம்.அதனால் தான் நம்ம ஊர் குஞ்சுகளின் மனம் குளிரட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் மஞ்ச துண்டையும்,ஏன் சூரமணி அய்யாவையும்,இன்னும் கொஞ்சம் ஓவராகப் போய் கட் அண்ட் பேஸ்ட் ஜாம்பவான் தமிழோவியா அய்யாவையும் ஒசாமா லெவலுக்கு ஏத்தி வச்சு சோஷலிஸம் செய்து விட்டேன்.
எதுக்கும், ரகசியமா ஒசாமாவுக்கு ஒரு சின்ன சாரி சொல்லிக்கிறேன்.
பாலா
// தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //
சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
//வடுவூர் குமார் said...
ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்
அப்பாடியோவ்! அது நான் இல்லை. :-))//
நம்ப கடைப்பக்கம் வந்ததற்கு நன்றி குமார்
//தேவன் மாயம் said...
நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்///
உண்மைதாங்க!//
வருகைக்கு நன்றி சார்
நன்றி தமிழினி
//துளசி கோபால் said...
சும்மா 'Sorry'ன்னு சொல்லிட்டுப் போகக்கூடாது. ஒரு விநாடியாவது மனப்பூர்வமா நம்ம தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக்கணும்.//
நன்று சொன்னீர்கள் மேடம்
///நிகழ்காலத்தில்... said...
\\ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.\\
வாழ்வில் முன்னேற அருமையான கருத்து நண்பரே
வாழ்த்துக்கள்///
வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்...
//மாதேவி said...
"செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்".
அதனால் எங்கள் மனம் ஆறுதல் கொள்ளும் என்பது உண்மைதான்//.
வருகைக்கு நன்றி மாதேவி
///மங்களூர் சிவா said...
/
"தவறு செய்பவரா நீங்கள்..."
/
நான் செய்யறது எல்லாமே தப்புதானாமே அப்பிடித்தான் என் பொஞ்சாதி சொல்லுறா
:))
பதிவின் கருத்து நன்று.//
வருகைக்கு நன்றி சிவா
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன். அருள்கூர்ந்து தொடரவும்//
சுரேஷ்..செய் என்றால் செய்ய தயாராய் இருக்கிறேன்..அருள்கூர்ந்து எல்லாம் வேண்டாம்..
bala ,veerapandian ..தப்பு செய்தவனால் திருந்த முடியும்..தவறு செய்தால்..வருந்தி ஆகணும்..அது எந்த கொம்பனுக்கும் பொருந்தும்
//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் பயனுள்ள பதிவு. மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
சின்ன சின்ன விசயங்களே பூதாகரங்களாகிவிடுகின்றன.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்
//இராகவன் நைஜிரியா said...
// தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //
சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.//
நன்றி இராகவன்
Post a Comment