(சொன்னதும்..சொல்ல மறந்ததும்)
1)1967க்குப் பிறகு மாறி மாறி திராவிட கட்சிகள் பணத்தை வாரி இறைத்தே தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன..
(ஈரோட்டில் அதுகூட என்னால் முடியாமல் போயிற்று)
2)எதிர்ப்பார்த்த அளவிற்கு தமிழக காங்கிரஸில் இளைஞர்கள் சேராதது குறித்து ராகுல் காந்தி வருத்தம்
(இதற்கே 3நாட்கள் விசிட்டிற்கு 1 கோடி செலவாயிற்றே என வருந்துகிறார் வரி செலுத்துமொரு காமன் மேன்)
3)நானும் திரைத்துறையில் இருப்பவன்தான்..இவர் கதைக்கு யார் 50 லட்சம் கொடுக்கிறார்கள்..விஜய்காந்த் ஒரு பேட்டியில்
(எனக்கே அவ்வளவு கொடுப்பதில்லை)
4)திருநாவுக்கரசர் காங்கிரசில் சேரலாம் - செய்தி
(இன்னொரு கோஷ்டி உருவாகிறது என்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்)
(சினிமா நட்சத்திரங்கள் கட்சியில் சேரலாம் என்றதும் ஒரு படத்தில் நடித்த தானும் நட்சத்திரம்தான் என்கிறார்)
5)சரத்குமார் நடித்த ஜக்குபாய் படத்தின் ஆடியோ கேசட்டை கலைஞர் வெளியிடுகிறார்.
(ஆட்டைக் கடிச்சு..மாட்டைக் கடிச்சு தன் கிட்டே வந்துதான் சேரணும் என்கிறாரோ கலைஞர்)
6) முரசொலி அறக்கட்டளையின் அண்ணா விருது கலைஞருக்கு கொடுக்கப்படுகிறது
(எனக்கு அண்ணா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோதே..தானும் இப்படி ஒரு விருது வாங்குவார் எனத் தெரியும் என்கிறார் ஸ்டாலின்)
7)சென்னை பாக்ஸ் ஆஃபீஸில் உன்னைப்போல் ஒருவனுக்கு முதல் இடம்.கந்தசாமி நான்காம் இடத்திற்கு சென்றது
(காமன்மேன் சேவலை அடித்துவிட்டார்)
8)கொசுறு
வில்லு இருந்தும் வேட்டைக்காரனால் குருவியை சுடமுடியவில்லையே
அதற்காகத்தான் சுறா தயாராகுது
9 comments:
NO8 நச்...............
ME THE 1ST ...............
வருகைக்கு நன்றி shabi
தேங்காய்..மாங்காய்.. பட்டாணி.. சுண்டல் - சூப்பர் சுவை.. அருமையா இருக்கு
வருகைக்கு நன்றி இராகவன்
சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
:))
சுண்டல் ஓக்கே!
கொசுறு சூப்பர்!
//Varadaradjalou .P said...
சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
:))//
வருகைக்கு நன்றி Varadaradjalou
//மங்களூர் சிவா said...
சுண்டல் ஓக்கே!
கொசுறு சூப்பர்!//
நன்றி சிவா
Post a Comment