Tuesday, September 8, 2009

தமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..


நம் தமிழனுக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு..

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்வோம்.நம்மில் பல திறமைசாலிகள் இருந்தாலும்..வேறு மாநிலக்காரன் திறமைவாய்ந்தவன் என்றால் மனதார பாராட்டுவோம்.

இப்போதும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஆம்..தமிழை தாய்மொழியாய் கொள்ளாத நடிகர் பிரகாஷ் ராஜ் (துளு தாய்மொழி)..சிறந்த நடிகருக்கான தேசிய விருதை..காஞ்சிவரம் படத்தின் மூலம் பெற்றுள்ளார்.(இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் சம்பளமே வாங்கவில்லையாம்.)படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன்..ஒரு மலையாளி.கதாநாயகி ஷ்ரேயா ரெட்டி..படத் தயாரிப்பாளர் ஷைலந்தர் சிங்.இவர்கள் முயற்சியில் வந்துள்ள தமிழ் படம் தேசிய அளவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.கலைக்கு மொழி முக்கியமில்லை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

இனி பிரகாஷ்ராஜ் பற்றி..

ஏந்த ஒரு கலைஞனும்..தனக்கென தனிப்பாணியைக் கையாளாவிடின்..நீண்ட நாள் தொழிலில் நிற்கமுடியாது. இதற்கு உதாரணம்..சிவாஜி,எம்.ஜி.ஆர்.,ஜெமினி,ராதா,வீரப்பா,நம்பியார்,கலைவாணர்,தங்கவேலு,நாகேஷ் இப்படிப் பலர் தனித் தனி பாணியைக் கையாண்டதால் நிலைத்த புகழ் பெற்றனர்.

அதுபோல பிரகாஷ் ராஜும்..வில்லன் நடிப்பானாலும் சரி,தந்தை யானாலும் சரி,நகைச்சுவை வேடமானாலும் சரி தனித்து நிற்பவர்.

மங்களூரில் பிறந்த இந்த 44 வயது நடிகர்...பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமானார். 'கல்கி' படம் மூலம் வில்லத்தனம் நிறைந்த நாயகனாக பிரகாசித்தார்.அது போன்ற பாத்திரங்கள் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது.இவருக்குக் கிடைத்தது இவரது அதிர்ஷ்டமே.

பின்னர்..கில்லி,திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் வில்லனாக தன் திறமையைக் காட்டினார்.

தன்னால்..நகைச்சுவையாக நடிக்க முடியும் என மொழியின் மூலம் நிரூபித்தார்.

பாசமிகு தந்தையாக அபியும் நானும்...இயல்பான நடிப்பு.

தவிர..தரமான படங்களை தயாரிக்க வேண்டும்..என்ற கொள்கை உடையவர்.அவர் தயாரிப்பில் வந்த படங்கள்..மொழி, அபியும் நானும்

இனி இயக்குநர் பிரியதர்ஷன் பற்றி...

மலையாளம்..ஹிந்தி படங்களை இயக்கியவர் இவர்.கமல் நடித்த தேவர் மகன் ஹிந்தி இவர் இயக்கத்தில் வந்ததே..தமிழில்..கோபுர வாசலிலே..லேசா லேசா,..சிநேகிதியே..விருது பெற்றுள்ள காஞ்சிபுரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
முந்தைய பதிவு

11 comments:

வால்பையன் said...

மற்ற தமிழ் நடிகர்களை விட பிரகாஷ்ராஜ் தமிழ் அழகாக பேசுவார்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

பிரகாஷ்ராஜ் மிக திறமையானவர்

JesusJoseph said...

நல்ல தகவல்.

கில்லி படத்தில் நடிப்பு சூப்பர்

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

passerby said...

Shreya is a Bengali

goma said...

செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாசகத்தை ஒரு சிலர்தான் உள்ளத்தில் கொண்டு வாழ்கின்றனர்.அவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ்.அவரது நடிப்பு தொழில் மேலும் பிரகாசிக்க வாழ்த்துவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி உலவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
மற்ற தமிழ் நடிகர்களை விட பிரகாஷ்ராஜ் தமிழ் அழகாக பேசுவார்!//

துளு சரியாக பேசத் தெரியாதோ?
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பிரகாஷ்ராஜ் மிக திறமையானவர்//

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// JesusJoseph said...
நல்ல தகவல்.

கில்லி படத்தில் நடிப்பு சூப்பர்

நன்றி,
ஜோசப்//

செல்லம்....:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
Shreya is a Bengali//

தகவலுக்கு நன்றி சிந்திக்க விரும்பும் சிலருக்காக

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
செய்யும் தொழிலே தெய்வம் //அதில் திறமைதான் நமது செல்வம்