Tuesday, September 29, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)

சிவாஜியின் நடிப்பைப் பற்றி சிலர்

சிவாஜியின் நடிப்பா!இது உலகறிந்ததே!!
(கவியரசு கண்ணதாசன்)



சிவாஜியைப் பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது
எதை விடுவது

இமயமலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும்
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி
சிவாஜி ஒரு இமயமலை

ஒரு பெருங்கடல்
அவரது கண்களின்
கூர்மையைச் சொல்வேனா
அல்லது
அவரது கம்பீரத்
தோற்றத்தைச் சொல்வேனா
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாக
நடித்துக் காட்டிய
அந்த நடிப்பைச் சொல்வேனா

அவரைப்போல இதுவரை
ஒருவர் பிறந்ததில்லை
இனி பிறப்பார் என்பத்ற்கும்
உறுதி இல்லை!
இது உண்மை
இது உலகறிந்ததே!!

சிவாஜியின் புகழ் நாளும் நாளும் வளரும் காரணம்..அவரிடம் அளவற்ற நடிப்புத் திறமை அடங்கியுள்ளது - ராணி எலிசபெத்

சிவாஜி அவர்கள் உலகிலேயே சிறந்த நடிகர்.பண்பாட்டின் பெட்டகம்..எகிப்து நாட்டின் விருந்தினராக அவர் வந்தி இருப்பது பழைய கலாச்சாரத் தொடர்பை நினைவூட்டுகிறது - எகிப்து அதிபராய் இருந்த நாசர்

சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத எனக்கு சிவாஜி கணேசன் நடித்த சம்பூர்ண ராமாயணம் பார்த்தபின் என் உள்ளத்தை சினிமா பார்க்கத் தூண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - மூதறிஞர் ராஜாஜி

***** ****** **** *****

கடந்த 30 வாரங்களாக சிவாஜியைப் பற்றிய என் பதிவை படிக்க வந்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. இச்சமயத்தில் நான் நண்பர் ஜோ அவர்களைப் பற்றி எழுதாவிட்டால் தவறிழைத்தவன் ஆகிவிடுவேன்..தவறாமல் என் பதிவுகளைப் படித்து..தொடர்ந்து பின்னுட்டம் இட்டு எனக்கு ஊக்கம் அளித்தவர் அவர்.அவருக்கு என் நன்றி.
அனைவரும் மீண்டும் ஒருமுறை நன்றி..வணக்கம்.

18 comments:

பீர் | Peer said...

பொக்கிஷம் :)

ஜோ/Joe said...

TVR ஐயா,
தமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.

கோவி.கண்ணன் said...

'சாகா'ப்தம் !

ஜோ/Joe said...

நாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்

க.பாலாசி said...

//அவரைப்போல இதுவரை
ஒருவர் பிறந்ததில்லை
இனி பிறப்பார் என்பத்ற்கும்
உறுதி இல்லை!
இது உண்மை
இது உலகறிந்ததே!!//

மிகச்சரியான வரிகள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
பொக்கிஷம் :)//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி பீர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
TVR ஐயா,
தமிழ் திரையுலகின் சரித்திர நாயகனை ஒரு தொடர் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு என் வந்தனங்கள்.//

நன்றி ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
'சாகா'ப்தம் !//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
நாளை நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.//
நினைவிருக்கிறது ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சிவாஜியை பத்தி நிறைய அறிய வைத்துள்ளீர்கள் , மிக்க நன்றிகள்//


வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாஜி

IKrishs said...

நான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் இதுவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன் ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கிருஷ்குமார் said...
நான் விரும்பி வாசித்த தொடர் பதிவுகளில் இதுவும் ஒன்று ..நடிகர் திலகத்தின் அற்புதமான படங்களை தொடர் பதிவாக நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ...ஆனால் தொடரின் பிற் பகுதிகளில் படங்கள் பற்றிய தகவல்கள் அதிகமின்றி வெறும் புள்ளி விவரங்களாக (வருடம் -படங்கள் ) இடம் பெற்றது போல் உணர்ந்தேன்//

சொல்ல பெரிய விஷயங்கள் அவற்றில் இல்லாததால் புள்ளி விவரங்களுடன் நிறுத்திக் கொண்டேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் செய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உலகம் சுற்றும் வாலிபன் வெளியாக சிவாஜி கணேசன் செய்த உதவிகளையும் அதற்காக அவர் சந்தித்த கடும் எதிர்ப்புகளையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அதை நீங்கள், ஜோ, அல்லது முரளிக்கண்ணன் யாராவது விரிவாக எழுதவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு//

அதையெல்லாம் இப்பொழுது எழுதினால்..பல கசப்புகளை சந்திக்க நேரிடும்..வேண்டுமானால் மேலோட்டமாக எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியானதும் பட்ட துன்பங்களை(அரசியலைத் தவிர்த்து) எழுதலாம்.என்ன சொல்கிறீர்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிவாஜி கணேசன் செய்த உதவிகளை மட்டும் எழுதுங்கள். அவை சிவாஜிக்கு மேலும் புகழ் சேர்க்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உலகம் சுற்றும் வாலிபன் பற்றி பதிவிட்டிருக்கிறேன் suresh