Tuesday, September 15, 2009

ஆயுதம் - திரைவிமரிசனம்

சமீபத்தில் ஆயுதம் என்னும் மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.

சுரேஷ் கோபி நடித்த படம்.

இப்படத்தில்..வெளியம் என்னும் கிராமத்து கடற்கரை ஓரம் குண்டு வெடிப்பு நடக்கிறது.மகேந்திர வர்மா என்னும் காவல் அதிகாரி..அன்வர் என்பவனை கைது செய்கிறார்.அவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது..அது முடிந்து அவன் துபாயில் வேலைக்கு சேர உள்ளான்.ஆனால்..அன்வர் அப்பாவி.

முதலமைச்சர் , ரிஷி என்னும் I.P.S., D.I.G., யை இவ்வழக்குப் பற்றி விசாரிக்க நியமிக்கிறார்.

அன்வர் அலைபேசியில் வந்திருக்கும் அழைப்புகளை வைத்தே அன்வரை கைது செய்ததாய் வர்மா சொல்கிறார்.ஆனாலும் அப்பாவிகளை இம்சிப்பதே இவர் வழக்கம்.

ஆனால்..உண்மையில் நடந்தது..அந்த கிராமத்து கடலோரம்..சிறு துறைமுகம் வருவதாக இருக்கிறது.ஆனால்..முதல்வரோ..கிராமத்து மக்களை விரட்டியடித்துவிட்டு..துறைமுகம் வராது என சூளூரைக்கிறார். அதனால்தான் அக்கிராமத்து மக்களை விரட்டி அடிக்க ஒரு பெரும்புள்ளியால் இப்படி குண்டு வெடிப்புகள் என கண்டுபிடிக்கப் படுகிறது.

அன்வர் பாத்திரத்தில் பாலா நடித்துள்ளார்.முதல்வராக திலகன்.

வழக்கமாக பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்துவிட்ட சுரேஷ் கோபி இதிலும் ரிஷியாக நடித்துள்ளார்.இயக்கம் நிஷாத்

இப்படத்திலும்..திரைப்படங்களில் வழக்கம்போல வருவது போல..அன்வர் என்ற பெயரால்..அவர் கைது செய்யப்படுகிறார்.பட விமரிசனம் உண்மைத்தமிழன் போல எழுத ஆசை.ஆனால்..இப்படத்தின் கதையை அரை பக்கத்தில் எழுதி விடலாம்.

இப்படத்தைப் பார்த்ததும்..அண்மையில் நியூஜெர்ஸி விமான நிலயத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகளால்..சாருக்கான்..(அவரது இந்த பெயரால்) இரண்டு மணிகளுக்கு மேல் இம்சிக்கப்பட்டது ஞாபகம் வந்தது.

15 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கூட பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, நீண்ட கால சிறைதண்டனை அனுபவித்தது சமீபத்தில் வெளிவந்துள்ளது.

கைதிற்கான காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டுமே.


பகிர்தலைத் தவிர நம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் நல்லா இருக்கா

JesusJoseph said...

நல்ல இருக்கு

ஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ??? ;-)

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

டி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

டி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை நான் பிரசாந்த் நடிச்ச ஆயுதமோ னு நினச்சு பயந்துட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பகிர்தலைத் தவிர நம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம்.//

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
படம் நல்லா இருக்கா//

40/100

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
ஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ??? ;-)//

நன்றி JesusJoseph

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
ஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ??? ;-)//

நன்றி JesusJoseph

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
டி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் //

ஜமாய்த்து விடுவோம்,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை நான் பிரசாந்த் நடிச்ச ஆயுதமோ னு நினச்சு பயந்துட்டேன்//

:-)))

அக்னி பார்வை said...

//இப்படத்திலும்..திரைப்படங்களில் வழக்கம்போல வருவது போல..அன்வர் என்ற பெயரால்..அவர் கைது செய்யப்படுகிறார்.பட விமரிசனம் உண்மைத்தமிழன் போல எழுத ஆசை.ஆனால்..இப்படத்தின் கதையை அரை பக்கத்தில் எழுதி விடலாம்.///

avanaga eppavume appati thaan boss

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி mix

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்னி