பிரணாப் முகர்ஜி..நாட்டில் வறட்சியுள்ளதால்..அரசும்..அதிகாரிகளும் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்.சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசிய அன்றே..காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி..திருவனந்தபுரம் வந்து ..அங்கிருந்து..நாகர்கோவிலுக்கு..ஹெலிகாப்டரில் வந்தார்.மூன்று நாள் தமிழக சுற்றுப்பயணம்.
விவசாயிகளையும் சந்தித்தாராம்..அவரிடம் அவர்கள் காவிரி பிரச்னை குறித்து பேச..கவலையுடன் அதைக் கேட்டுக்கொண்டார்.
மீனவர்களிடையே பேசும்போது..இலங்கை கடற்படையினரால் அவர்கள் துன்பப்படுவதைக் கேட்டுக் கொண்டார்.(கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தனது பாட்டி என்பது அவர் ஞாபகத்தில் இருக்குமா?)
பின்னர் சத்யமூர்த்திபவனில்..காங்கிரஸார் இடையே பேசுகையில்..
உ.பி.யில் பா.ஜ.க., வை வீட்டிற்கு அனுப்பி விட்டோம்.சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்.இனி அங்கு பா.ஜ.க., வளரமுடியாது என்றார்.
வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும் என்றார்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சி அமைப்பதால் பொதுமக்களுக்கு சலிப்பு எற்படும் என்றார்.
(உள்பொருள்- தி.மு.க., ஆட்சியில் மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்கிறாரா?)
தி.மு.க., காங்கிரஸ் இடையே ஆன கூட்டணி முறியும் நிலைக்கு வருகிறது என்பதை ராகுலின் பேச்சு கோடிகாட்டுகிறது.
சரி..திரும்ப பதிவின் ஆரம்பத்திற்குப் போவோம்...
ராகுல் வர செய்யப்பட்ட ஏற்பாடுகள், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது..ராகுலின் ஹெலிகாப்டர்,கார் ஆகியவைக்கான செலவு..இதெல்லாம் பிரணாப் பேச்சுக்கு சம்பந்தம் இல்லாதவை என நம்புவோம்.
11 comments:
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..
பெரிய இடத்து சின்னப் பையன் பொழச்சுப் போறார் !
:)
சுற்று பயணத்தைக் குறைத்து கொள்ள தானே சொன்னார். சுற்று பயணமே போகக் கூடாது என்று சொல்லவில்லையே. பல இடங்களுக்கு போக நினைத்திருப்பார். அதைக் குறைத்து சில இடங்களுக்கு மட்டும் போய் இருக்கிறார்.
//goma said...
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..//
வருகைக்கு நன்றி கோமா
// கோவி.கண்ணன் said...
பெரிய இடத்து சின்னப் பையன் பொழச்சுப் போறார் !
:)//
போறார்
//ananth said...
சுற்று பயணத்தைக் குறைத்து கொள்ள தானே சொன்னார். சுற்று பயணமே போகக் கூடாது என்று சொல்லவில்லையே. பல இடங்களுக்கு போக நினைத்திருப்பார். அதைக் குறைத்து சில இடங்களுக்கு மட்டும் போய் இருக்கிறார்.//
காங்கிரஸ் பொது செயலாளராக பயணம் செய்யட்டும்..ஆனால் அதற்கு பாதுகாப்பு என்று எவ்வளவு ஆயிரக்கணக்கான போலீஸ்,பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் வீண்..அவர்களுக்கான சம்பளம் அரசு கஜானாவிற்கு வீண்..அதைத்தான் குறிப்பிடுகிறேன்..
நன்றி உலவு
ஐயா,
நீங்க காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தப் பார்க்கிறீர்களா?
நல்லாத் தெரியுது!.
:)))
///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐயா,
நீங்க காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தப் பார்க்கிறீர்களா?
நல்லாத் தெரியுது!.
:)))///
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..
ரிப்பீட்டு
அன்புடன்
உழவன்
//" உழவன் " " Uzhavan " said...
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..
ரிப்பீட்டு
அன்புடன்
உழவன்//
வருகைக்கு நன்றி உழவன்
Post a Comment