Thursday, January 22, 2009

தந்தை...சகோதரன்..வில்லன் = ஒருவன்

கமல்,ரஜினி ஆகியவர்கள் போல்..பிரகாஷ்ராஜும்..இயக்குநர் பாலசந்தர் கண்டுபிடிப்பு. ..மணிரத்னம்.ஷங்கர்..ஆகியவர் படங்களிலும் நடித்துள்ள. . இவர்..பிரச்னை பண்ணாத நடிகர் என்ற
பெயரையும் பெற்றவர்.

ஒரு படத்தில் கதாநாயகியை துரத்தும் வில்லனாக வருவார், அடுத்த படத்தில் அதே நடிகைக்கு சகோதரனாக வருவார், இன்னொரு படத்தில் அதே நடிகைக்கு தந்தையாகவும் வருவார்.இடையிடையே..படத்தில் நகைச்சுவை ந்டிகனின் சுமையையும் சுமப்பார்.

தமிழ்த் திரை உலகில்..பாலையா,எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு வந்துள்ள குணச்சித்திர நடிகர் இவர் எனலாம். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்.

கல்கி படத்தில்..இவர் பாத்திரத்திற்குப்பின் தான்..மக்களிடையே 'இப்ப என்ன சொன்ன....அதுக்கு முன்னால...அதுக்கு அப்பறம்..'போன்ற வசனம் பிரபல்யமானது.கில்லி க்குப்பின் தான்..'செல்லம்'பிரபலமானது.

நடிப்பதைத்தவிர..பல அருமையான படங்களை தயாரித்திருக்கிறார்.

இவர் தயாரிப்பில் உருவான மொழி, வெள்ளித்திரை,அபியும் நானும் ஆகிய படங்கள்...தமிழ்த் திரையுலகின் மைல் கற்கள் எனலாம்.

ஆனாலும்...இவருக்கு நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தந்தது..இவரது குருநாதர் பாலசந்தர் நடிக்க இவர் எடுத்த பொய் படு தோல்வி அடைந்தது.

திரைப்படங்களில் சம்பாதித்த பணத்தை திரையிலேயே கொட்டும்..மற்றொரு கமல் இவர்.

6 comments:

ARV Loshan said...

ஒரு பிரம்மாண்ட நடிகன் பற்றிய பதிவு ரொம்ப சிறுசாப் போச்சே.. குரு பக்தி மிகுந்த ஒரு மனிதர்.. நல்ல படங்களின் நல்ல தயாரிப்பாளர்..

அழகிய தீயே, அபியும் நானும்..

ILA (a) இளா said...

நெறைய சொல்லலாங்க. தனிமனிதனாய் சொல்லனும்னா நட்புக்கு உயிரைக் குடுக்கக்கூடிய ஆள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எம்.ஆர்.ராதாவோடும், பாலையா உடனும் ஒப்பிட்டப்பின்... அதிகம் எழுத தேவையா?
வருகைக்கு நன்றி லோஷன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உண்மை இளா...இன்று தமிழ்த் திரை உலகில் காணப்படும் மாமனிதர் இவர் என்பதில்..சந்தேகமில்லை.
மேலும் இப்பதிவு..முன்னரே தீர்மானம் பண்ணி எழுதியதில்லை.திடீரென அவரை எழுத வேண்டும் என்று தோன்றியது..எழுதினேன்..அவ்வளவுதான்.

நசரேயன் said...

எனக்கும் ஒரு வாய்ப்பு கொண்டுங்க கமல்/பிரகாஷ் ராஜ், நானும் நல்ல கதை சொல்லுவேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
எனக்கும் ஒரு வாய்ப்பு கொண்டுங்க கமல்/பிரகாஷ் ராஜ், நானும் நல்ல கதை சொல்லுவேன்//

:-))))