நாடகக் கலைஞர் கலைஞரின் நாடகங்கள்
தமிழா...தமிழா..
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, April 12, 2023
அடுத்த வீட்டு ஜன்னல் - 22 கலைஞர் கருணாநிதி
Saturday, August 27, 2022
இனிக்கும் தமிழ்
நள வெண்பா - நெஞ்சும் போயிற்று
கணவன் வெளியூர் போயிருப்பான். போன இடத்தில் ஏதோ கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கும். இங்கு, மனைவிக்கு மனசு என்னமோ செய்யும். அவருக்கு என்னமோ என்று கிடந்து தவிப்பாள். அங்கே அவருக்கு ஒன்று என்றால், இங்கே இவளுக்கு எப்படித் தெரியும். உடல் இங்கே இருக்கிறது. மனம் அவன் கூடவே போகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியையே . புகழேந்தி, நளவெண்பாவில் காட்டுகிறார்.
தமயந்தியை காண நளன் வந்தான். அவளோடு பேசி சந்தோஷமாக இருந்த பின், பிரிந்து சென்றான். அவன் கூடவே, தமயந்தியின் மனமும் சென்று விட்டது. தன் மனம் அவன் பால் சென்ற பின், பாவம் அவள் தான் என்ன செய்வாள்?
பாடல்
தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து.
பொருள்
தூதுவந்த காதலனைச் = தேவர்களுக்காக தன்னிடம் தூது வந்த காதலனை (நளனை )
சொல்லிச் = பேசி
செலவிடுத்த = செல்லும் படி விட்ட
மாது = (மாது)தமயந்தி
வந்து பின்போன = தன்னிடம் வந்து பின் போன
வன்னெஞ்சால் = வன்மையான நெஞ்சால். (இத்தனை நாள் தன்னோடு இருந்து விட்டு, அவனைக் கண்டவுடன், அவன் கூடவே போனதால், அதை வன்நெஞ்சு என்கிறாள்.)
யாதும் = அனைத்தும்
அயிர்த்தாள் = =பதறினாள்
உயிர்த்தாள் = உயிர் பிரிந்து போன மாதிரி தவித்தாள்
அணிவதனம் = ஆபரணம் அணிந்த முகம்
எல்லாம் = எல்லாம்
வியர்த்தாள் = வியர்த்தாள்
உரைமறந்தாள் = பேச மறந்தாள்
வீழ்ந்து = கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்
காதலன் போன பின், அவன் கூடவே அவள் மனமும் போய் விட்டது.
Tuesday, July 13, 2021
முன்னுரை
------------------------
உழைப்பிற்கு தேனீயை உதாரணம் சொல்வார்கள்.ஆனால் அதைவிட இறக்கும் வரை விடாது உழைப்பது "விநாடி முள்" ஆகும்.அது நின்றுவிட்டால் அந்தக் கடிகாரம் வேலை செய்யாமல் நின்றுவிட்டது எனப் பொருள்.
கலைஞரும் விநாடி முள் போலத்தான்.வாழ்வில் ஒரு விநாடி கூட வீணாக்காது உழைத்தவர்
உழைப்பு...உழைப்பு..உழைப்பு அதன் மறுபெயர் கலைஞர் எனலாம்.
75 படங்களுக்கு கதை வசனம்..அவற்றிற்கு 100க்கும் மேற்பட்ட பாடல்கள்.ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர்.ரஷ்ய இலக்கிய மேதை எழுதிய காவியத்திற்கு தமிழில் .கவிதை வடிவில் நவீனம் (தாய்), தொல்காப்பியம், திருக்குறளுக்கு கலைஞர் உரை....இப்படி இலக்கியத் தொண்டிற்கு ஆற்றிய பணிகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்றால்....
அரசியல் வாழ்வு என்னை மறந்து விட்டாயே என்கிறது.ஐந்து முறை முதல்வர், அப்படி இல்லா காலத்தில் எதிர்க் கட்சித் தலைவர் எனத் தொடரும் பொதுப்பணி...இவை போதாது என அகவை 91 வயதிலும் "இராமானுஜர்" தொலைக் காட்சித் தொடருக்கு கதை, வசனம் .அதற்காக அந்த வயதிலும் அவர் படித்த புத்தகங்கள்.
ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியில் எழுதி கா.ஸ்ரீ.ஸ்ரீ யால் மொழிபெயர்க்கப்பட்ட ராமானுஜர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் வாலி எழுதிய 'ராமானுஜ காவியம்". டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய "ஸ்ரீ இராமானுஜர்", சாண்டில்யன் எழுதியுள்ள "மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜம்', பி.ஸ்ரீ.எழுதிய "ஸ்ரீ ராமானுஜர்"., கங்கா ராமமூர்த்தியின்','ஸ்ரீராமானு
இன்று புத்தகத்தின் பத்து பக்கங்களைக் கூட படிக்க இயலாது, ஆன் லைனில் அவற்றைத் தேடுவோர் நடுவே...எழுத்தையும்,படிப்பையு
கலைஞ்ரின் அரசியல் பயணத்தியப் பற்றியில்லாது..அவரதி கலியப்பயணத்தை மற்றுமே குறித்து எழுதப்பட்ட னூல் இது.
அனைவரும் பார்த்து பயனடைய வேண்டும் என்பதே அவா
நன்றி
அன்புடன்
டி வி ராதாகிருஷ்னன்
1 - மருதநாட்டு இளவரசி
அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரை
எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலைஞன் பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..
1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி
இப்படத்தில் எம் ஜி ஆர்., மாலதி, பாலையா,நம்பியார் நடித்துள்ளனர்/ஏ எஸ் ஏ சாமி இயக்கம்.எம் ஜி ஆரின் 15ஆவது படம்.அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்படத்தில் சின்னப்ப தேவருக்கு சிறு வேடம் கொடுக்கப்பட்டது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு
1948ல் அபிமன்யூ படம்.
இப்புராணப் படத்தில் சாமார்த்தியமாக அரசியல் வசனங்களை எழுதினார் கலைஞர்.படம் முடிந்ததும் தியேட்டரில் மனைவியுடன் படம் பார்க்கப் போனவருக்கு அதிர்ச்சி, வருத்தம்.டைட்டிலில் வசனம் என இயக்குநர் பெயரே இருந்தது (பின்னர் வந்த படங்களில், படத்த்லைப்பிற்குப் பின் வசனம் கருணாநிதி எனப் பெயர் வர ஆரம்பித்தது.இதுவே கலைஞர் பேனாவின் வலிமை)
அபிமன்யூவில் கலைஞரின் சில வசனங்கள்
"ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்
"அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை" "கண்ணன் மனமும் கல்லா"
"அர்ச்சுனனால் துளைக்க முடியாத சக்கரவியுகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண மூளை
1950ல் மருத நாட்டு இளவரசி ..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..
. இதில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
கதை-வசனத்தை மு.கருணாநிதி எழுத ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!
மருதநாட்டு அரசரை பதவியில் இருந்து இறக்க அவரது இளைய மனைவியின் சகோதரன் (மைத்துனன்) திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பதே இப்படத்தின் மூலக்கதை.
இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்! கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி.ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் அமோக வெற்றி பெற்றது
1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி ..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் நினைத்தார்
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யவில்லை.இயக்குநர் டங்கனும், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்
1951 மணமகள் (6)இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.
கணவரின் கொடுமையைத் தாங்க முடியாத கதாநாயகி மனைவியாக விரும்பாமல் மணமகளாகவே இருக்கும் கதையாகும்.
17-10-1952 தீபாவளி நாள். தமிழ்த் திரையுலகையே திருப்பிப் போட்ட நாள் எனலாம்'
ஆம்...அன்று வெளிவந்த படம்...பராசக்தி
இன்றளவும் மக்கள் மனதை விட்டு அகலாத ஒரு படம்.
நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ பெருமாள் ஏ வி எம்முடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த படம்
இப்படத்தில் சிவாஜி கணேசன் என பின்னாளில் நடிகர் திலகமாய்க் கொடிக்கட்டிப் பிறந்த வி.சி கணேசன் அறிமுகமான படம்.இப்படத்தில் அவர் நடிக்க எதிர்ப்பு இருந்தது.கே ஆர்.ராமசாமி தான் நடிக்க வேண்டும் என்றனர்.ஆனால். பெருமாள், வி சி கணேசன் தான் என்பதில் உறுதியாய் இருந்தார்.
கணேசன் நடித்தார்.முதல் நாள் படபிடிப்பில் அவர் உச்சரித்த முதல் வார்த்தை "சக்சஸ்"
படமும் சக்சஸ், அவர் திரையுலக்ப் பணியும் சக்சஸ்
கலைஞரின் வசனத்தாலும், சிவாஜி, எஸ் எஸ் ஆர்., ஆகியோரின் உச்சரிப்பாலும் அவை அப்படியே இன்னமும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன
சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் மூன் று சகோதரர்கள் ரங்கூனில் வசித்து வருகின்றனர்.அவர்களது த்ங்கையோ மதராசில்.இரண்டாம் உலக யுத்தம் நடைபெறும் நேரம்.மதராசிற்குக் குடிப் பெயர சகோதரர்கள் நினைக்கின்றனர்.ஆனால்...சரியான போக்குவரத்து சீட்டுக் கிடைக்காததால், அவர்கள் ஒவ்வொருவரும் பிரிய நேரிடுகிறது.
அவர்களது த்ங்கை கல்யாணியோ இங்கு விதவை..கையில் ஒரு குழ்ந்தையுடன்.அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறார்கள் சமுக விரோதிகள்.அவள், வறுமை தாங்காது, தன் குழ்ந்தையை ஒரு கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயல்கிறாள்.
காப்பாற்றப்பட்டு...நீதி மன்ற கூண்டில் அவள்.அப்போது..
நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் கலைஞரின் இந்த வசனம் ஒலிக்காத இடங்கள் இல்லை அன்று.ஒவ்வொரு இளைஞனுக்கும் மனப்பாடம் இது.
இந்தளவு தாக்கத்தை இதுவரை எந்தப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை என உறுதியாகக் கூற்லாம்.
அந்த வசனத்தைப் பாருங்கள்-
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
பூசாரி, சிவாஜியின் விதவைத் தங்கையிடம் முறைகேடாக நடப்பான்.அப்போது அவனைக் கண்டிக்க வரும் சிவாஜி அம்பாள் சிலையின் பின்னே இருந்து பேசுவார்.பூசாரி, "அம்பாளா பேசறது" என்பான்
அதற்கு சிவாஜி, "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்பார் சிவாஜி
பெரும் சர்ச்சைக்கு உள்ளான வசனமாய் இது அமைந்தது
பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.
. மக்களுக்கு தேவையில்லாத அல்லது ஆபத்தான கருத்தை பாராசக்தி சொல்லவில்லை. மாறாக பல புதிய சீர்திருத்தக் கருத்துக்களைத்தான் சொன்னது.
இப்படத்திற்கு இசையும் கைகொடுத்ததை மறக்க முடியாது.
சுதர்சனம் இசையில்
1)எல்லோரும் வாழ வேண்டும் எம்.எல்.வி., டி எஸ் பகவதி பாடினர்
2)காகாகா (சி எஸ் ஜெயராம்)
3)நெஞ்சு பொறுக்குதிலையே (பாரதியார் பாடல் பாடியவர் ஜெயராமன்)
4)ஓ ரசிக்கும் சீமானே (எம் எஸ் ராஜேஸ்வரி)
5)பெண்ணே ஒரு தொல்லையா (டி எஸ் பகவதி)
6) நேசம் ஞானம் (பாரதிதாசன் பாடல் ஜெயராமன் பாடினார்)
7) கொஞ்சும் மொழி (டி எஸ் பகவதி)
8)பூமாலை நேயேன் (டி எஸ் பகவதி)
9) புது பெண்ணின் மனசைத் தொட்டு(டி எஸ் பகவதி)
முதல் பாடலும் நான்காவது பாடலும் கடைசி பாடலும் அண்னல்தாங்கே என்பவர் எழுதினார்
2,5,7.8 படல்களை எழுதியவர் உடுமலை நாராயணகவி
1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் வந்த படம் "பணம்"
பராசக்தி வெளியாகி இரண்டே மாதத்தில் வந்த படம்..ஏ எல் ஸ்ரீனிவாசன் தயாரிக்க என் எஸ் கே இயக்கத்தில் கலைஞர் திரைக்கதை வசனத்தில் வந்த படம்
பேராசைப் பிடித்த பணக்காரனுக்கு ஒரே மகன்.அவன் ஏழைப் பெண்ணை மணக்கிறான்.அவள், வரதட்சணை கொண்டு வராததால் பணக்காரனால் வீட்டை விட்டு துரத்தப் படுகிறாள்.அவளைக் காப்பாற்றுபவன் அவளை ஒரு மாளிகையில் அடைத்து வைக்கிறான்.இதனி டையே, அந்தப் பணக்காரன் தன் மகனுக்கு வேறு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்கிறான்.ஆனால், அவளோ திருமணத்தன்று இரவு, தான் வேறு ஒருவனைக் காதலித்ததாகக் கூறி வெளியேறுகிறாள்.
இந்நிலையில், கதாநாயகி அடைத்து வைக்கப் பட்டுள்ள மாளிகையில் ஒரு கொலை நடக்கிறது.கதாநாயகன் கைதாகிறான்.உண்மைக் குற்றவாளி யார்..அவன் கைதானானா, கதநாயகன் விடுவிக்கப் பட்டானா, கணவன் ;மனைவி இணைந்தனரா..என்பதே மீதிக் கதை.
கலைஞரின் வசனங்கள் இப்படத்திலும் பாராட்டப்பட்டன
கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.
ஒரு பாடல்..என்.எஸ் கே பாடிய :தினா மூனா கானா" என்ற பாடல்.தணிக்கை அதிகாரிகளுக்காக ''அது "திருக்குறள் முன்னேற்ற கழகம்" எனப் பாடப்பட்டது.
இரண்டு மாதங்கள் முன்னர் வந்திருந்தால் சிவாஜிடின் முதல் படமாக இது அமைந்திருக்கும்
சிவாஜி, பத்மினி, என் எஸ் கே., மதுரம், எஸ் எஸ் ஆர்., வி கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்
4 திரும்பிப்பார்(9)
பராசக்தி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கூட்டணியிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்தது "திரும்பிப்பார்" படம் வெளியான நாள் 10=7-1953
இதில் சிவாஜி வில்லன் (என்ன ஒரு தைரியம்)
முழுக்க முழுக்க அயோக்கியன்.ஆனால், அழகான, திறமையான,புத்திசாலியான வில்லன்
பரந்தாமன் (சிவாஜி) ஒரு பெண்பித்தன் தன் அக்காள் (பண்டரிபாய்) வளர்த்து வருகிறாள்.பல பெண்களை ஏமாற்றி,தொழிலாளர்களை சுரண்டி, பிறர் எழுதும் கதைகளை தன் பெயரில் போட்டு....இப்படி அவரது கொடுமையான செயல்களுக்கு அளவே இல்லை
இவனுக்கு நேர் எதிர் பாண்டியன் (நரசிம்ம பாரதி).
பரந்தாமன், அவனது அக்காள், பாண்டியன் இவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடு, மோதல்கள் இதுதான் கதை
ஆரம்பமே கோர்ட் சீன்.பரந்தாமனைக் கொன்றதாக பாண்டியன் குற்றவாளிக் கூண்டில்.அவன் குற்றவாளி யில்லை என பண்டரிபாய் வாதாடுகிறாள்.படம்...பின்னோக்கி
வசனம் முழுதும் இப்படத்தில் ஹியுமரிலேயே செல்லும்
அந்த நாட்களில் நேரு தி முக வினரை ஒருசமயம் நான்சென்ஸ் என விமரிசித்தார்.இதை வைத்து, நேருவைப் போலவே கருப்பு கண்ணாடி, சூட் அணிந்து சிவாஜி வருவார்.அடிக்கடி நான்சென்ஸ் என்பார்
ஒருகாட்சியில் தொழிலாளி ஒருவன் சம்பளம் கேட்டு வருவான்.அதற்கு நான்சென்ஸ் என்பார் சிவாஜி
கருடன் பதிப்பக உரிமையாளர் துரைராஜ்..அவர், பரந்தாமா நீ புத்தகம் எழுது.வரும் லாபத்தில் முக்கால் எனக்கு கால் உனக்கு என்பார்
அப்போது தொழிலாளி "எனக்கு" என்பார்
அவனுக்குக் கால் உனக்கு அறை (என தொழிலாளி கன்னத்தில் அடிப்பார்)
பராசக்தி போலவே குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நிறபார் சிவாஜி (பராசக்தி எஃபெக்டில் வசனம் பேசப்போகிறார் என மக்கள் இருக்கையின் நுனிக்கு வருவார்கள்)ஆனால் இவரோ..இந்த குற்றச்சாட்டுத் தவறு.உண்மையாய் இருந்தால் என்னை மன்னிக்கவும் என முடித்துக் கொள்வார்
இப்படத்திற்கு இசை ஜி ராமநாதன்
ஜிக்கி பாடிய ஆனா டுனா ஆடு, எஸ் சி கிருஷ்ணன் பாடிய "கலப்பட கலப்படம்", திருச்சி லோகநாதன், பி.லீலா பாடிய கண்ணாலே பண் பாடும் ஆகிய பாடல்கள் இனிமை
பண்டரிபாய் பேசும் வசனங்களும், சிவாஜி பேசும் வசனங்களும் படத்தின் ஹைலைட் எனலாம்..
பெண்பித்தனான பரந்தாமனிடம்..உனக்கு ஒரு பெண்தானே வேண்டும் நான் இருக்கிறேண் என் அக்காள் கூறுவதும்..
பின்னர் தவறுணர்ந்த பரந்தாமன்..
தன்னைத் தானே திட்டிக் கொள்வதும்..
"ஏ..மானிட இனமே ..நீ குரங்கிலிருந்து வந்தாயாம்..குரங்கு மனப்பானமை உனக்குக் குறைந்துவிட்டதா என திரும்பிப்பார்.. என பேசும் வசனங்களும் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது வசனகர்த்தாவின் சிறப்பின்றி வேறு என்ன..
5 நாம் (10)
10ஆவது படம் நாம்
1953 ல் வந்த படம்
ஜூபிடெர் பிக்சர்ஸும், மேகலா பிக்சர்ஸும் இணைந்து தயாரித்த படம் நாம்
கலைஞர் திரைக்கதை, வசனம்.
(மேகலா பிக்சர்ஸில் கலைஞர், பத்திரிகையாளர் ராஜாராம் என்பவர், எம் ஜி ஆர்., ஜானகி ஆகியோர் பங்குதாரர்கள்)
குமரன் ..முற்போக்குக் கொள்கைகள் கொண்டவன்.இளைஞன்.அவன் தாயார் இறக்கையில் தான், அவன் பணக்காரன் என்றும் எஸ்டேட் முதலாளி என்றும் தெரிய வருகிறது.மலையப்பன் என்பவனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது ஆனால், மலையப்பனின் சகோதரி மீனாவை குமரன் விரும்புகிறான்.ஆனால்..சஞ்சீவி என்னும் மருத்துவர் ஒருவர் குமரனுக்கு தன் மகளை திருமணம் செய்வித்து, அவனது சொத்தை அடைய நினைக்கிறார்.
சொத்து சம்பந்தமான உயில் குறித்து, மீனா மீது சந்தேகம் ஏற்பட..குமரன் ஊரை விட்டு செல்கிறான்.
இதனிடையே...குமரன் ஒரு குத்துச் சண்டை வீரனாகிறான்.ஒரு சண்டையின் போது முகத்தில் அடிபட்டு..அவன் முகம் மாற,,வெளியில் தலைகாட்டுவதைத் தவிர்த்து..இரவில் உலாவும் அவனை மக்கள் பேய் என பயப்படுகின்றனர்
கடைசியில் உண்மை வெளிவந்து..காதலர்கள் ஒன்று சேருகின்றனர்,
குமரனாக எம் ஜி ஆரும், மீனாவாக ஜானகியும், மலையப்பனாக பி எஸ் வீரப்பாவும், மருத்துவராக எம் ஜி சக்ரபாணியும் நடித்தனர்
சிதம்பரம் ஜெயராமன் இசையமைத்துள்ளார்
ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை
6 மனோகரா (11)
,மனோகரா
ஜூபிடெர் பிக்சர்ஸ் தயாரிப்பான மனோகரா வெளியான நாள் 3-7-1954
திரைக்கதை- வசனம் கலைஞர்..இயக்கம் எல் வி பிரசாத்
இது பம்மல் சம்பந்த முதலியாரின் கதை.மேடை நாடகமாக நடிக்கப்பட்டு 1936ல் திரைப்படமாக வந்தது.பின்னர் கே ஆர் ராமசாமியால் மீண்டும் மேடையில் நடிக்கப்பட்டது.இந்நாடகத்தில் சிவாஜி கணேசன் அரசியாக பெண் வேடத்தில் நடித்திருந்தார்.
சிவாஜி, கண்ணாம்பா,ராஜகுமாரி, எஸ் எஸ் ஆர், எஸ் ஏ நடராஜன், ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்
ஒவ்வொருவரும் போட்டிக் கொண்டு நடித்தனர்.யார் நடிப்பு சிறப்பு எனச் சொல்லுவதே கடினம்.
டி ஆர் ராஜகுமாரி, வசந்த சேனை என்ற வில்லி பாத்திரத்தில் மிகவும அருமையாக நடித்தார்
மனோகரானகவே வாழ்ந்தார் சிவாஜி
கண்ணாம்பா மனோகரின் தாயாக வாழ்ந்தார்.
பின்னாளில் இப்படம் பற்றி பேசும்போது சிவாஜி கணேசன் சொன்னாராம்.."என் நடிப்பு...நான் பேசிய வசனங்கள் அனைத்தையும் தன் ஒரே வரி வசன உச்சரிப்பிலும், நடிப்பாலும் தகர்த்தெறிந்துவிட்டார் கண்ணாம்பா என்று.அந்த ஒரு வரி வசனம்..
"பொறுத்தது போதும் மனோகரா..பொங்கி எழு" என்பதே
சிவாஜி கணேசன் ..சங்கிலியால் கட்டப்பட்டு அரசவையில் பேசிய வசனம்...
அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?
சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.
அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!
அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!
அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.
அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!
அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"
வேறு ஒரு காட்சியில் வசனம்
- புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.
இந்த அளவிற்கு வசனங்களையும், தமிழையும், உச்சரிக்கும் நடிகர்களையும் இன்றைய திரையுலகில் பார்ப்பது அரிது..அரிது..அரிதாகும்
நல்ல கதையமைப்பும், அருமையான வசனங்களும், கலைஞர்களின் நடிப்பும் இருந்தால் அப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்ற பொருள் பட ஆனந்தவிகடன் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியது
எஸ் வி வெங்கட்ராமன்,டி வி ராமநாதன் இசையில் வந்த பாடல்கள்
சிங்கார பேண் கிளியே பேசு (ஏ எம் ராஜா, ராதா ஜெயலட்சுமி)
நிலவில் உல்லாசமாய் ஆடலாம் (மோதி, ரத்னம்)
சந்தேகம் இல்லை(எஸ் வி வெங்கட்ராமன், சி எஸ் பாண்டியன்)
என்னைப் பாரு என் அழகைப் பாரு (டி வி ரத்னம்)
7 அம்மையப்பன் (12)
அம்மையப்பன்
அம்மையப்பன் திரைப்படம் வெளியான நாள் - 24-9-1954
அம்மையப்பன் திரைப்படம் பற்றி கலைஞர் கூறுகையில் மூன்று விசித்திரங்களின் விளக்கமே என் கிறார் கலைநயத்தோடு
காதல் புறா - கன்று நாடும் - பசு- மான் தோல் வேங்கை என
முத்தனும் (எஸ் எஸ் ஆர்), முத்தாயியும் (ஜி சகுந்தலா) காதலிக்கிறார்கள்.வேடன் ஒருவன் இவர்களுக்கு வில்லனாக வந்து..இந்த ஜோடிப் புறாக்கள் மீது அம்பெய்தி கொல்லப் பார்க்கிறான்.இடையிலே நூலாடும் தாய்ப்பாசம்.முடிவில் மான் தோல் போர்த்த வேங்கை மாள்கிறது.முத்தனும், முத்தாயியும் இணைகின்றனர்
டி ஆர் பாப்பா இசையமைத்தார்
கதை- வசனம் கலைஞர்.ஏ பீம்சிங்க் இயக்கம்.நேஷனல் புரடக்சன்ஸ் தயாரிப்பு.இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை
(ஆனால் இதே கதையமைப்புடன் கே ஆர் ராமசாமி, சாவித்ரி நடிக்க கண்ணதாசனும், ஏ கே வேலனும் திரைக்கதை வசனம் எழுத , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் வந்த சுகம் எங்கே என்ற படம் வெற்றி பெற்றது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்).
8 ராஜா ராணி (13)
வெளியான நாள் 26-2-1956
சிவாஜி,பத்மினி,எஸ் எஸ் ராஜேந்திரன், , என் எஸ் கிருஷ்ணன் மதுரம்
கலைஞர் கதை வசனம்
கண்பார்வையற்றவரின் பெண் ராணி.அவருக்கு பாபு என்பவன் நடத்தும் நாடகக் கம்பெனியில் டிக்கெட் விற்று வரும் பணத்திற்கு பொறுப்பாளர்.வேலை
ஒருநாள் நாடகத்திற்கான வசூல் பணம் முழுதும் திருடுப் போகிறது.இதைப் பயன்படுத்தி பாபு, ராணியிடம் தவறாக நடக்க முயலுகிறான்.தப்பி ஓடும் ராணி,ராஜாவின் காருக்குள் புகுந்து கொள்கிறாள்.
அந்த நேரத்தில் லீலா என்ற பணக்காரப் பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தியை ராஜா படிக்கிறான் .ராணியை..ராஜா லீலா என எண்ணுகிறான்.ராணியும், அப்படியே அவனிடம் நடிக்கிறாள்.
ராஜா, ஒரு நாடகக் குழு ஆரம்பிக்க, லீலா என்ற பெயரிலேயே ராணி அதில் நடிக்கிறாள்.
சாக்ரடீ ஸ் நாடகம் நடக்கிறது.அதில்..சாக்ரடீஸிற்கு பாபு உண்மையான விஷத்தைக் கலந்து விடுகிறான்
ராஜா தப்பித்தானா...ராணியை மணக்கிறானா..என்பதே மீதக் கதை
சிவாஜி, பத்மினியின் சிறந்த நடிப்பு .சேரன் செங்குட்டவன் என்ற நாடகம் 12 நிமிடங்கள் படத்தில் வருகிறது.சிவாஜி,எஸ் எஸ் ஆர்.,நடிப்பு, கலைஞரின் வசனம் ..இன்றும் பேசப்படுகிறது
டி ஆர் பாப்பா வின் இசையில்
எம் எல் வி பாடிய வாங்க வாங்க இன்றிரவு
சீர்காழி கோவிந்தராஜன், ரத்னம் பாடிய பூனைக்கண்ணை மூடிக் கொண்டால்
இன்ப நன்னாள் இதே (எழுதியவர் கலைஞர் பாடியவர் எம் எல் வி)
புது மணிப்புறா (எம் எல் வி)
ஆகிய பாடல்கள் சிறப்பு
எல்லாவற்றிலும் மணிமகுடமாக என் எஸ் கே., மதுரத்தின் குரலில் பலவிதமான சிரிப்புகள் பற்றிய மருதகாசி எழுதிய பாடல் அமைந்தது
:"சிரிப்பு...இதுதான் சிரிப்பு"
9 ரங்கோன் ராதா (14)
அண்ணாதுரையின் கதைக்கு கலைஞரின் வசனத்தில் வந்த படம் ரங்கோன் ராதா
வெளியான நாள் - 1-11-1956
கோட்டையூர் தர்மலிங்க முதலியார் வக்கிர எண்ணங்களைக் கொண்டவர்.தன் மனைவியின் சகோதரி மீது அவருக்கு ஆசை.அவளை மணமுடிக்க எண்ணுகிறார்.அத்ற்காக தன் மனைவிக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி அவளை பைத்திய நிலைக்கு ஆளாக்குகிறார்
கடைசியில் அவர் சுயரூபம் வெளியாகிறது
மேகலா பிகசர்ஸ் தயாரித்த இப்படத்தை ஏ காசிலிங்கம் இயக்கினார்
டி ஆர் பாப்பா இசையில்பாரதியார்,பாரதிதாசன் பாடல்களுடன், உடுமலை நாராயண கவி,எம்,கே ஆத்மநாதன்,பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், கலைஞர் ஆகியோர் பாடல்கள் எழுதினர்
சிவாஜி கணேசன், த்ர்மலிங்க முதலியாராக ஒரு நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார்.அவர் மனைவியாக பானுமதி, மைத்துனியாக எம் என் ராஜமும் மற்றும் எஸ் எஸ் ராஜேந்திரன், ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்தனர்.
மந்திரவாதியாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார்.
முத்துராமன், வக்கீலாக ஒரு சிறு வேடத்தில் இப்படத்தில் வந்தார்
10 புதையல் (15)
புதையல் ..வெளியான நாள் 10 -5-1957
சிவாஜி,பத்மினி,பாலையா,சந்திரபா
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை
கலைஞர், கதை-வசனம்..கமால் பிரதர்ஸ் தயாரிப்பு
புதைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட தங்கம் பற்றிய கதை.சிவாஜியும், பத்மினியும் பேசிக்கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் கொலையான அவளது தாயாரைப் பற்றியும் , தவிர்த்து கைதான தன் தந்தை பற்றியும்,இந்தியாவில் பத்மினியின் சகோதரி தங்கம்இ றந்தது பற்றியும் அவள் புதைக்கப்பட்ட இடம் பற்றியும் பேசுகின்றனர்.
தங்கம் புதைக்கப்பட்டது என்பது கேட்டு..தங்கநகைகள் என நினைத்து அலையும் கும்பல்.
கடைசியில்..எல்லாம் சுகமாய் முடிகிறது
இப்படப்பாடல்கள் சில
விண்ணோடும் முகிலோடும் (ஜெயராமன், சுசீலா)
உனக்காக எல்லாம் உனக்காக (சந்திரபாபு)
சின்னச் சின்ன இழை (பி.சுசீலா)
ஹலோ மை டியர் ராணி (சந்திரபாபு)
தங்க மோகன தாமரையே (சுசீலா),
11 புதுமைப்பித்தன்.(16)
புதுமைப்பித்தன் - 16
படம் வெளியான நாள் 2-8-1957
எம்.ஜி.ஆர்., டி ஆர் ராஜகுமாரி,பி எஸ் சரோஜா, சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
டி ஆர் ராமண்ணா இயக்கம்.
கலைஞர் கதை வசனம்.
தன் சகோதரனின் பதவி ஆசையால் அரசன் கைதாகிறான்.அவன் இறந்து விட்டதாகவும் வதந்தியைப் பரப்புகிறான் சகோதரன்.அந்நாட்டு இளவரசனோ வெளிநாடு சென்றுள்ளான்.
அவன் திரும்பி வருகையில் மன்னன் இறந்து விட்டான் என செய்யப்படும் போலி இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறான்.ஆனால், அப்போது அவனுக்கு ரகசிய செய்தி ஒன்று வருகிறது
மன்னன் இறக்கவில்லை என்பதே அது.
ஆனால்..அந்த செய்தியைத் தருவது ஆண் வேடமிட்ட பெண் ஒருத்தி.அப்பெண்ணை இளவரசன் விரும்புகிறான்
இதனிடையே, மன்னனின் சகோதரன் இளவரசனையும் அழிக்க முயல,நாடகங்கள் நடத்திவரும் ஒரு பெண், இளவரசனுக்கு உதவுவதுடன், அவன் மீது காதலும் கொள்கிறாள்.கடைசியில் தன் காதலைத் தியாகம் செய்கிறாள்.இளவரசன் காக்கப்பட்டு வில்லன் அழிகிறான்
இளவரசனாக எம் ஜி ஆர்., அவன் காதலியாக பி எஸ் சரோஜா,நாடகப் பெண்ணாக டி ஆர் ராஜகுமாரி, மன்னனின் சகோதரனாக பாலையா ஆகியோர் நடித்திருந்தனர்
ஜி ராமநாதன் இசையில்
ஜிக்கி பாடிய "அழகைப்பார்"
ஜெயராமன், ஜிக்கி பாடிய "உள்ளம் இரண்டும் ஒன்னு"
பி சுசீலா வின் "தேன் மதுவை வண்டினம்"
தில்லானா பாட்டுப் பாடணும் எனசந்திரபாபுவின் பாட்டு ஆகியவை இன்றும் மனதை விட்டு அகலாதவை
12 குறவஞ்சி (17)
படம் வெளியான நாள் -4-3-1960
சிவாஜி கணேசன், சாவித்திரி,பண்டரிபாய்
ஏ காசிலிங்கம் இயக்கம்.
கதை, வசனம் கலைஞர்
இன்பபுரி அரசன் தென்பாண்டிகோ .எல்லைபுரம், அவன் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதி.அதை, தன் தம்பி முகாரி ஆளக்கொடுத்திருந்தான்.இமயா..மு
கதிரவன் என்னும் இளைஞன் மக்களுக்கு நல்லது செய்பவன்.நாடோ டி போல திரியும் இவன் ஊருக்கும், மக்களுக்கும் நல்லது செய்து வருகிறான்.இளவரசி குமாரி அவனை மணக்க விரும்புகிறாள்.ஆனால், அவனோ பொன்னி என்ற நாட்டுப்புற கலை அறிந்த பெண்ணை விரும்புகிறான்
அதேநேரம், இமயா விடமிருந்து நாட்டைக் காக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறான்.
சிவாஜி, கதிரவனாகவும், சாவித்திரி நாட்டுப்புற கலைஞராகவும் நடித்தனர்
டி ஆர் பாப்பா இசைய மை த்திருந்தார்
13 எல்லோரும் இந்நாட்டு மன்னர் (18)
1960 ஆண்டு வந்த மற்றொரு திரைப்படம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்.
கசை, வசனம் கலைஞர் ..(மூலக்கதை- மா.லட்சுமணன்)
டி பிரகாஷ்ராவ் இயக்கம்
உழைப்போருக்கு வாழ்வு
உரிமையுடையோர்க்கு நாடு - என
நல்லாரும், அறிவில் வல்லாரும்
வகுத்திட்ட தத்துவமே
எல்லோரும் இந்நாட்டு மன்னன்
இதுவே இப்படத்தின் மையக்கரு
ஜெமினி கணேசன், சரோஜா தேவி, எம் என் நம்பியார் நடித்தனர்
டி ஜி லிங்கப்பா இசையில்..பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுத் டி எம் எஸ். பாடிய என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே" என்ற பாடல்..இன்றும் காதுகளில் ஒலிக்கும் தேனிசைப்பாடலாகிம்
14 அரசிளங்குமரி (19)_
படம் வெளியான நாள் 1-1-1961
எம் ஜி ஆர்., பத்மினி, நம்பியார், ராஜ சுலோசனா ஆகியோர் நடித்திருந்தனர்
ஏ எஸ் ஏ சாமி இயக்கினார்..படத்தின் பெரும்பகுதி எடுத்து முடித்த நிலையில் அவர் விலக ஏ காசிலிங்கம் இயக்கி, படத்தை முடித்தார்.
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு.
கதை வசனம் கலைஞர்
அறிவழகனின் சகோதரி அன்புக்கரசி. அன்புக்கரசி, வெற்றிவேலனைக் காதலிக்கிறாள்.அவன், அரசவையில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், தான் ஒரு சாதாரண குடிமகன் என்று சொல்லி அவளை மணக்கிறான்.
சகோதரியின் திருமணத்திற்குப் பின்...வெளியூர் சென்று விடுகிறான் அறிவழகன்.
அன்புக்கரசிக்கு குழந்தை பிறக்கிறது.குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரியும் வெற்றிவேலன், அரசை கைப்பற்ற திட்டமிடுகிறான் .
அதை அறிவழகன் முறியடிக்கப் பார்க்கிறான்.அன்புக்கரசி, தன் சகோதரனுக்கு எதிராகவும், தன் கணவனுக்கு ஆதரவாகவும் இருக்கிறாள்
முடிவில்...சுபமாய் அனைத்தும் நடந்து முடிகிறது
அறிவழகனாக எம் ஜி ஆரும், அன்புக்கரசியாக பத்மினியும், வெற்றிவேலனாய் நம்பியாரும் நடித்திருந்தனர்
ஜி ராமனாதன், இசையில்..பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்த "சின்னப் பயலே..சின்னப் பயலே சேதி கேளடா" இன்றும் எவராலும் மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது
எம் ஜி ஆரும்..நம்பியாரும் படிக்கட்டில் போடும் கத்திச்சண்டை மட்டும் எடுத்து முடிக்க ஒரு வருடமானதாம்
மொத்த படபிடிப்பும் முடிய ஐந்து வருடங்கள் ஆனதாகத் தெரிகிறது
15 தாயில்லாப் பிள்ளை (20)
கலைஞரின் கதை வசனத்தில், எல் வி பிரசாத் இயக்கத்தில்..கல்யாண்குமார்,பா
வெளியான நாள் 18-8-1961..
பதஞ்சலி சாஸ்திரி மிகவும் ஆசாரமானவர்.இவருக்கு குழ்ந்தை பாக்கியம் இல்லை.இவர் மனைவி இருமுறை கருத்தரித்தும், கரு கலைந்துவிடுகிறது.
மனைவியின் சகோதரர் ஒரு மருத்துவர்.ஆனால், சாஸ்திரிக்கும் அவருக்கும் உறவு சுமுகமாய் இல்லை
இந்நிலையில், சாஸ்திரியின் மனைவி மீண்டும் கருத்தரிக்கிறாள்.அவள்..தன் சகோதரன் மருத்துவ மனைக்குச் சென்று குழந்தை பெறுகிறாள்.ஆனால்..அங்கு அப்போது பிறந்த மற்றொரு குழந்தையின் தாய் இறக்க..பிறந்த குழந்தையையும் அவள் தத்தெடுக்கிறாள்.
ஆனால், இதனால் ஏற்பட்ட குழப்பத்தில்..எது தன் குழந்தை..எது தத்துக் குழந்தை என சாஸ்திரிக்கு தெரியவில்லை.
தத்துக் குழந்தை இவர் குழந்தையாகவும், இவர் குழந்தை ஒரு ரிக்க்ஷாக்காரனாகவுமாகிறது
ஆனால்..அந்த இருவரும் சாதி, மதங்களை உடைத்தெறிகின்றனர்
கே வி மகாதேவன் இசையில் சூலமங்களம் ராஜலட்சுமி பாடிய "சின்னச் சின்ன ஊரணியாம்".ஏ எல் ராகவன் பாடிய "காலம் மாறுது".ஏ எல் ராகவன் பாடிய "கடவுளும் நானும் ஒரு ஜாதி".பி பி ஸ்ரீனிவாஸ் ,ஜமுனாராணி பாணி பாடிய படிக்க வேண்டும் புதிய பாடம் பாடலும் இனிமை
16 இருவர் உள்ளம் (21)
படம் வெளியான நாள் 29-3-1963
இயக்கம் எல் வி பிரசாத்
எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்மனம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
திரைக்கதை, வசனம் கலைஞர்
சிவாஜி, சரோஜா தேவி,எம் ஆர் ராதா,ரங்காராவ் ஆகியோர் நடித்திருந்தனர்
சிவாஜி ஒரு பிளேபாய்.பணக்காரர்.பல பெண்களுடன் உறவு வைத்திருப்பர்.
அப்படிப்பட்டவர் வாழ்வில் ,ஒருநாள், ஏழை டீச்சர் சரோஜா தேவியைப் பார்க்கிறார் .அவளை மணக்க விரும்புகிறார்.சரோஜாதேவியும் ஆசையுடன் மணப்பார் என எதிர் பார்க்கிறார்.ஆனால் இவர் இசையவில்லை
தன் பணத்தால் , அவர் பெற்றோர்களிடம் பேசி அவரையே மணக்கிறார் சிவாஜி
திருமணத்திற்குப் பின் அவர் நல்லவராக மாறினாலும், டீச்சர் அதை ஏற்கவில்லை.
இதனிடையே, சிவாஜி மாறியதையும், த்ன்னை மட்டுமே விரும்புவதையும் சரோஜா தேவி அறியும் போது, சிவாஜி ஒரு கொலை பழியில் சிக்குகிறார்.
அவர் மீண்டு வருவதும், இருவரும் ஒன்று சேருவதுமே மீதிக் கதை
இப்படத்தில் எம் ஆர் ராதா..ஒரு மாறுபட்ட நகைச்சுவை வேடத்தில் வந்து, டி பி முத்துலட்சுமியுடன் சேர்ந்து கலக்குவார்
இப்படத்தின் சில காட்சிகளுடன், மீண்டும் சிவாஜி, சரோஜாதேவியை வயதானவர்களாக சமீபத்தில் வந்த ஒன்ஸ்மோர் படத்தில் காட்ட்ப்பட்டது
கே வி மகாதேவன் இசையில் அனைத்துப் பாடல்களும் தேன்.பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்
பறவைகள் பலவிதம்
கண்ணெதிரே தோன்றினாள்
இதய வீணை தூங்கும் போது
நதி எங்கே போகிரது
அழகு சிரிக்கிறது
ஏன் அழுதாய் ஏன் அழுதாய்
மேற்சொன்ன பாடல்களை டி எம் சௌந்தரராஜனும்,சுசீலாவும் பாடினர்
ஏ எல் ராகவன் , ராதாவிற்காக பாடிய "புத்தி சிகாமணி" பாடலும் சிறப்பு
தனது சாதாரண குடும்பப்பாங்கான வசனங்கள் மூலமும் கலைஞர் வெற்றி பெற்றார்
17 காஞ்சித் தலைவன் (22)
வெளியான ஆண்டு 26-10-1963
எம் ஜி ராமசந்திரன்,எஸ் எஸ் ராஜேந்திரன்,பானுமதி, விஜயகுமாரி,எம் ஆர் ராதா, அசோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கலைஞர், முரசொலி மாறன், ஏ காசிலிங்கம் ஆகியோர் இணைந்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் வெளியான படம் இது.
காஞ்சித் தலைவன் என அண்ணாவைக் குறிப்பதாகக் கூறி, தணிக்கை அதிகாரிகளால் பல காட்சிகள் வெட்டப்பட்டு வந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வில்லை எனலாம்.
கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்பை கலைஞர் ஏற்றார்.இயக்கம் ஏ காசிலிங்கம்
நரசிம்ம பல்லவனாக எம் ஜி ஆர்., பரஞ்சோதியாக எஸ் எஸ் ஆர்., சோழ இளவரசியாக பானுமதி, புலிகேசியாக அசோகன் ஆகியோர் நடித்த்னர்.
கே வி மகாதேவன் இசை.
இப்படத்தில் ஏ எல் ராகவன், எல் ஆர் ஈஸ்வரி பாடிய நீர் மேல் நடக்கலாம் என்று தொடங்கும் பாடலை கலைஞர் எழுதினார்
ஆலங்குடி சோமு எழுதிய மயங்காத மனம் கூட மயங்கும் (பாடியவர் பானுமதி). ஒரு கொடியில் இரு மலர்கள் (பாடியவர் டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா) ஆகிய பாடல்கள் ஹிட்.
அண்ணன் தங்கை பாசத்திற்குச் சவாலான ஒரு பாடல் ...
' ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா...' பாடல் அது சமயம் அனைவரது மனத்தையும் உருக வைத்தது . தமையனின் தன்மானத்திற்கு களங்கம் வரக் கூடாது என்ற நிலையில் தங்கை .
கண்கவரும் சிலையே ! காஞ்சி தரும் கலையே ...!! பாடல் ஒரு அற்புத இனிமை
18 பூம்புகார் (23)
1964ல் வந்த படம் பூம்புகார்
மேகலா பிக்சர்ஸ் சார்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில், கலைஞர் திரைக்கதை, வசனத்தில் வந்த படம் பூம்புகார்
ஏற்கனவே பி யூ சின்னப்பா, கண்ணாம்பா நடித்து கண்ணகி படம் வெளிவந்திருந்தாலும், கலைஞர்..தன் எண்ணத்திற்கேற்ப கதையில் சில புதுமைகளைப் புகுத்தி...தன் வசனங்களாலும், நடிகர்களின் நடிப்பினாலும் வெற்றியை அடைந்த படமாகும் பூம்புகார்
இப்படத்தில் சமணத்துறவி கவுந்தியடிகளாக கே பி சுந்தராம்பாள் நடித்திருந்தார்.ஆனால் அவரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பெரு முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டத்து
அவர் ஒரு முருக பக்தர்.எப்போதும், நெற்றியில் வீபூதிப்பட்டையுடன் இருப்பார்.ஆனால், சமணத்துறவி எப்படி விபூதி இடமுடியும்.ஆகவே அவர் இப்பாத்திரத்தில் நடிக்க மறுத்தார்.கடைசியில், கலைஞரே சென்று, அவரை சமாதானப்படுத்தி, நெற்றியில் ஒரு கோடாக நாமத்தைப் போட்டு நடிக்க வைத்தார்.
மீண்டும், அவர் பாடும் போது ஒரு பிரச்னை ஏற்பட்டது..பாடலாசிரியர் எழுதிய பாடல் வரிகள்..
"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது"
இறைவனை கேலி செய்வது போல வரும் இவ்வரிகளை தான் பாட மாட்டேன் என்று விட்டார் கேபிஎஸ்.,கடைசியில் அவ்வரிகள்..
"அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது"
என்று மாற்றிய பின்னரே..அவர் அப்பாடலைப் பாடினார்
மதுரையை கண்ணகி தீயிட்டுக் கொளுத்தியதாக கதை.ஆனால் கலைஞரோ..மதுரை பூகம்பம் ஏற்பட்டு அழிவது போல மாற்றினார்
பொற்கொல்லர்கள் மனம் நோகாதவாறு வசனங்கள் எழுதப்பட்டன
காலத்திற்கேற்ப மாற்றங்களில் செயல்பட்டு வந்ததாலேயே கலைஞரால் கலை, இலக்கியம், மேடைப் பேச்சு,எழுத்து நடை,ஆகியவற்றில் வெற்றி நடை போட முடிந்தது.
இப்படத்தின் ஆரம்பம்..கலைஞரே வந்து..கதைச்சுருக்கத்தை சொல்வது போல அமைந்தது சிறப்பாகும்.சிலப்பதிகாரம், உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார்.
ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர் எழுத கே பி சுந்தராம்பாள் பாடிய வாழ்க்கை என்னும் ஓடம் இன்றும் பலர் முணுமுணுக்கும் பாடலாகும்( வருமுன் காப்பவன் அறிவாளி, துயர் வந்தபின் தவிப்பவனோ ஏமாளி)
எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி இருவரின் வசன உச்சரிப்பும், கலைஞரின் வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.நெடுஞ்செழியன் அரசபையில் கண்ணகி நீதி கேட்டு சிலம்பை வீசும் காட்சி வசனங்களும் பராசக்தி வசனம் போல பாராட்டுப் பெற்றவையாகும்
இப்படத்தில் கலைஞரின் வசனத்தில் ஒரு துளி
மனசாட்சி உறங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது
19 பூமாலை (24)
1965ல் முரசொலி மாறன் தயாரிக்க மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம் பூமாலை.
ப நீலகண்டன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை, வசனம்
எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி,, ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்
விஜயகுமாரியும், எஸ் எஸ் ஆரும் தங்கள் தோழி/தோழன் திருமணத்திற்கு வருகிறார்கள்.ஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாதவர்கள்.
திருமண நிகழ்ச்சியில் நடனப் பெண் ராஜஸ்ரீ "கன்னம் கன்னம் சந்தனக் கிண்ணம்" என்று பாட்டுப் பாடி நடனமாடுகின்றார்.
இரவு, விஜயகுமாரியும், ராஜஸ்ரீயும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகள் மாறிவிடுகின்றன.இது அரியாத எஸ் எஸ் ஆர் குடிபோதையில் நடனப் பெண்மணி அறைக்குப் போவதாக நினைத்து விஜயகுமாரி அறைக்குச் சென்று அவரை கற்பழித்துவிடுகிறார்.
இதனால் விஜயகுமாரி கர்ப்பம் அடைய...கடைசியில் தன் தவறு உணர்ந்து எஸ் எஸ் ஆர் அவரை மணக்கிறார்.
விஜகுமாரியின் பெயர் இப்படத்தில் பூமாலை ஆகும்
பூம்புகார் போலவே இப்படத்திலும் கலைஞர் படம் ஆரம்பிக்கும் முன் தோன்றி படம் பற்றி பேசுவார்
ஆர்.சுதர்சனம் இசை.கன்னம் கன்னம் கலைஞர் எழுதிய பாடல் ஆகும்
20 அவன் பித்தனா(25)
1966ல் வந்த படம் அவன் பித்தனா...வெளிவந்த நாள் 29-4-1966
எஸ் எஸ் ராஜேந்திரன், விஜயகுமாரி நடிக்க ப.நீலகண்டன் இயக்கத்தில் உமையாள் புரடக்சன்ஸ் தயாரிப்பில் வந்த படம்
கலைஞர் திரைக்கதை, வசனம்
அவன் பைத்தியக்காரனா என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகமே அவன் பித்தனா என வெள்ளித்திரைக் காவியமானது
பெரிய தொழிலதிபர் நல்லையா ராஜா.ஏழைப் பெண் ஓருத்தியைக் காதலிக்கும் தன் மகனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார்.மகனோ, அந்தப் பெண்ணை மணந்து, அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்து விட்டு இறக்கின்றான்.அதன் பின்னர் அப்பெண்ணும் நீண்ட நாட்கள் வாழவில்லை
குமார் எனப் பெயரிடப்பட்ட மகனை, ஒரு டீக்கடைக்காரர் பார்த்து, வளர்த்து பெரியவன் ஆக்குகிறார்
ஒருநாள், கோமதி என்ற பெண், தன்னை சிலர் துரத்தி வருவதாக, ஓடி வந்து டீக்கடையில் தஞ்சமடைகிறாள்.அப்பெண்ணை, உடல்நலமில்லாத நல்லையாவின் வீட்டிற்கு நர்ஸாக அனுப்புகிறான் மகன்.(அவர் தனது தாத்தா என அறியாமல்)கோமதி நல்லையாவின் அன்பிற்கு பாத்திரமாகிறாள்
பின்னர், நல்லையா இறக்க, அவர் சொத்துக்கு சொந்தம் கொண்டாடி பாலையா, நாகேஷ் ஆகியோர் வருகின்றனர்
கடைசியில் டீக்கடை குமார்தான் வாரிசு எனத் தெரிய வருகிறது
பார்த்தசாரதி இசையில், இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கின்றான் என்ற பாடல் பிரசித்திப் பெற்றது
21 - மறக்க முடியுமா? (26)
கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்த படம் மறக்க முடியுமா?
இப்படத்தின், திரைக்கதை, வசனம் கலைஞருடையது.படத்தயாரிப்பாளர், இயக்கம், முரசொலி மாறன் ஆவார்
அரும்பு முதல் கருகிய மலராகும் வரை அல்லல்பட்டு அழிகின்ற பென் ஒருத்தியின் கண்ணீரால் தீட்டப்பட்டதே இந்த சித்திரம்என்றார் கலைஞர்
ஒரு சகோதரி, இரு சகோதரர்கள் சிறு வயதிலேயே அனாதை ஆகின்றனர்
விதி வசத்தால் அவர்கள் பிரிய நேரிடுகிறது.அந்தப் பெண் வளர்கிறாள்.அவள் வாழ்வில், அடி மேல் அடி.
ஒரு கட்டத்தில், வேறு ஒரு வீட்டில் வசிக்கும் அவளது சகோதரன் குடிபோதையில், அவள் தன் சகோதரி எனத் தெரியாமல் அணுகுகிறான்.
அவளுக்கோ அவன் சகோதரன் எனத் தெரியும்..அதைஉ அவனுக்கு அவள் எப்படி புரிய வைக்கிறாள்?
இது போன்ற பல உணர்ச்சிகரமான காட்சிகளூம், வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.
டி கே ராமமூர்த்தி இசையில், கலைஞர் எழுதி பி சுசீலா பாடியிருந்த "காகித ஓடம்..கடல் அலைமேலே போவது போல மூவரும் போவோம்' என்ற பாடல் இன்றும் காதுகளில் தேனாக ஒலிக்கிறது
தவிர்த்து, ஜேசுதாஸ், சுசீலா பாடிய , சுரதா எழுதிய "வசந்த காலம் வருமோ" பாடலும் சிறப்பு
உபரி தகவல்_
படத்திற்கு முக்கியப் பாடல் தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.மாயவநாதன் எழுதியது இசையமைப்பாளர் ராமமூர்த்திக்கு திருப்தியை அளிக்கவில்லை."இங்களுக்கு எப்படித்தான் வேண்டும்?" என மாயவ நாதன் கேட்க, கோபத்தில் இருந்த ராமமூர்த்தி.."மாயவநாதா...மா
இதனால் மாயவநாதன் கோபித்துக் கொண்டு போய்விட, விஷயம் அறிந்த கலைஞர் அதேபோல தானே ஒரு பாடலை எழுதினாராம் அந்த பாடலே "காகித ஓடம் பாடல்"
(மூலக்கதை தெலுங்கு.ஏற்கனவே சந்தானம் என்ற பெயரில் மொழிமாற்று படமாய் வெளிவந்தது)
22 - மணிமகுடம் (27)
1958ஆம் ஆண்டு கலைஞர் எழுதிய நாடகம் மணிமகுடம்
1966ஆம் ஆண்டு கலைஞரின் கதை வசனத்தில், எஸ் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.
எஸ் எஸ் ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு.
எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெயலலிதா, விஜயகுமாரி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்
கொடுங்கோல் மன்னன் மணிமாறன் என்பவனை அழித்து வெற்றி கண்ட கதை.ஆங்காங்கே சில அரசியல் நெடி வசனங்கள்
இந்த படத்தில் நடித்ததன் மூலம், கலைஞரின் வசனத்தைப் பேசியதன் மூலம், தான் வசனங்களைத் தெளிவாகப் பேசக் கற்றுக் கொண்டதாக ஜெயலலிதா கூறியதாக ஒரு பேட்டியில் எஸ் எஸ் ஆர். கூறியுள்ளார்
ஆர்.சுதர்சனம் இசையில் நான் கடந்து வந்த பாதை என்ற பாடலும், ஆதவன் உதித்தான் மலை மேலே என்ற பாடலும் சிறப்பு
23 - தங்கத் தம்பி (28)
உமையாள் புரடக்சன்ஸ் சார்பில் இப்படம் வெளிவந்த நாள் 26-1-1967
ரவிசந்திரன், சுந்தரராஜன், வாணிஸ்ரீ, பாரதி நடித்த இப்படத்திற்கு திரைக்கதை ,வசனம் கலைஞர்
இரு அன்பான சகோதரர்கள் வரதன் (சுந்தரராஜன்), வேணு (ரவிச்சந்திரன்)
வரதனின் மனைவி (வாணிஸ்ரீ)க்கு பிள்ளைப் பிறப்பின் மீது பயம்.அதனால் குழ்ந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.இதனிடையே, வேணுவிற்கு, ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க அண்ணன் நினைக்கையில், இவரோ..அவன் ஒரு ஏழைப் பெண்ணை மணக்க வேண்டும் என நினைத்து, பாரதியை மணமுடிக்கிறார்.
இப்போது, இருவருக்குமே குழந்தை பிறக்க, பாரதியே வாணிஸ்ரீயின் குழ்ந்தையையும் வளர்க்கிறார்.
ஒருகட்டத்தில் மனம் மாறி தன் தவறை உணர்கிறார் வாணிஸ்ரீ.
கே வி மகாதேவன் இசையில், பி சுசீலா பாடிய "ஆளுக்கொரு முத்தம் உங்கம்மா கன்னத்திலே" என்ற பாடல் சூபர் ஹிட்.
24- வாலிப விருந்து (29)
மேகலா பிக்சர்ஸ் சார்பில் 1967ல் வந்த படம் வாலிப விருந்து
அண்ணாவின் கதைக்கு, கலைஞர் வசனம்.இயக்கம் முரசொலி மாறன்
ரவிச்சந்திரன் , பாரதி, சந்திர பாபு ஆகியோர் நடித்திருந்தனர்
ரவிச்சந்திரன் ஒரு வேலையில்லாத இளைஞர்.பக்கத்து வீட்டில் இருப்பவர் பாரதி.இருவருக்கும் எப்போதும் சண்டை, சச்சரவு,பாரதியின் தந்தை பாலையா, தன் சொத்தில் ஒரு பகுதியை தர்ம ஸ்தாபனத்திற்கு செலவிடுவதைத் தடுக்க நினைக்கிறார் அவர் உறவுப்பையன் அசோகன்.தவிர்த்து, பாரதியை மணந்து அனைத்து சொத்துக்களையும் அடைய நினைக்கிறார்.அதனால் பாலையாவை கடத்தி, பாலையா போல இருக்கும் வேறு ஒருவரை வீட்டிற்குள் வர வழைக்கிறார்.இது பாரதிக்குத் தெரியாது.ஆனால், அசோகனின் இந்த சதிசெயல்களை அறிந்த ரவிச்சந்திரன் உண்மையை வெளிக்கொணர்வதுடன்பாரதியையும் மணக்கிறார்.பாலையாவிற்கு இரட்டை வேடம்
ஆர்.சுதர்சனம் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய <அவன் காதலித்தான்..அவள் ஆதரித்தாள்" பாடலும், டி எம் சௌந்தரராஜன் பாடிய எங்கே என் மனம், வாலிப விருந்து ஆகிய பாடல்களும் ஹிட்
தவிர்த்து, சந்திரபாபு பாடிய, "ஒன்றைக்கண்ணும் டோரியா" அனைவரும் ரசிக்கும் பாடலாக அமைந்தது எனலாம்
25 - எங்கள் தங்கம் (30)
படம் வெளியான நாள் 9-10-1970
கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.
மேகலா பிக்சர்ஸ் சார்பில் வந்த படம்.கதை, வசனம், தயாரிப்பு முரசொலி மாறன்.இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.
டைடிலில், கலைஞரின்"எங்கள் தங்கம்" என்று வரும்.அந்த அளவே கலைஞருக்கும், இப்படத்திற்கும் தொடர்பு
தங்கம் ஒரு லாரிடிரைவர்.அவரது சகோதரி சுமதி.கண் பார்வை இல்லாதவர்.மூர்த்தி சுமதியின் கணவர்.மூர்த்தி, ஒரு சமூக விரோத கும்பலிடம் சிக்குகிறார்.அதற்கான காரணம், இரும்பு பெட்டகத்தை உடைக்கும் திறமை வாய்ந்தவர் அவர் என்பதால்.
தங்கம், எப்படியாவது, மூர்த்தியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.அவருக்கு உதவியாக கலாதேவி இருக்கிறார்.
தங்கமாக...தங்கம் எம் ஜி ஆர்., மூர்த்தியாக ஏ விஎம் ராஜன், சுமதியாக புஷ்பலதா, கலாதேவியாக ஜெயலலிதா நடித்தனர்
இப்படத்தில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பியதை நகைச்சுவையாக சொல்வதுபோல எம் ஜி ஆர் கதாகாலட்சேபம் செய்வது ரசிக்கத்தக்கது
தவிர்த்து, எம் எஸ் விஸ்வநாதன் இசையில், நான் அளவோடு ரசிப்பவன் (சௌந்தரராஜன் ,சுசீலா), தங்கப்பதக்கத்தின் மேலே (டி எம் எஸ்., சௌந்தரராஜன்) பாடல்கள் ஹிட்.கதாகாலட்சேபம் டி எம் எஸ் குரல்.
பட ஆரம்பத்தில், சிறு சேமிப்புப் பற்றி ஒரு கூட்டம் நடைபெறும்.அதில் எம் ஜி ஆர்., எம் ஜியாராகாவே கலந்துகொண்டு, சிறு சேமிப்பு குறித்து பேசுவார்.
படம் வெற்றி படமாக அமைந்தது.
26 - பிள்ளையோ பிள்ளை (31)
1970ல் எங்கள் தங்கம் வெளிவந்த பின்னர், சிறிது சிறிதாய் எம் ஜி ஆர்., கருணாநிதி இடையே உறவில் சிறிய சிறிய விரிசல்கள் ஏற்படலாயிற்று.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் சார்பில், முரசொலி மாறன் எடுத்த "எங்கள் தங்கம்" படத்திற்குப் பின், இனி படங்களே தயாரிக்கப் போவதில்லை என்று மாறன் சலிப்புடன் கூறினார்
1972ல் எம் ஜி ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு க முத்துவை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர்.முத்துவும் எம் ஜி ஆர் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார்.சொந்தக் குரலிலும் பாடினார்
1972ல் அவர் நடித்து கலைஞர் கதை, வசனத்தில் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த படம் பிள்ளையோ பிள்ளை.
கலைத்தாயின் பொன்மகுடத்தில் புது முத்து, கலைஞரின் செல்வன் முத்து நடிக்கும் கலைஞரின் கருத்தோவியம் என டைடிலில் காட்டப்பட்டது
"உயர்ந்த இடத்தில் பிறந்தவன் நான்...ஓய்வு இல்லாமல் உழைப்பவன் நான்..துயர் வந்தாலும் தீர்ப்பவன் நான்..தொடர்ந்து முன்னேறத் துடிப்பவன் நான்" என டி எம் சௌந்தரராஜன் பாட, எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க அறிமுகமானார் முத்து.
கங்காதரன் ஒரு சமுக விரோதி.சிலை கடத்துபவன்.அவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை தன் வேலைக்காரன் முருகன் மீது போட்டு அவனை சிறைக்கு அனுப்புகிறான்.முருகன் சிறையிலிருந்து தப்பி, கங்காதரன் மகனை கடத்திவிடுகிறான்.இதனிடையே கங்காதரன், காஞ்சனா என்ற பெண்ணை மணக்கிறான்.அவளையும் முருகன் கடத்த, அவள் கருவுற்று இருப்பதை அறிந்தவன் அவளை விடுவிக்கிறான்.அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்கிறது.
முருகன் வளர்க்கும் மகன் குமார் ஒரு மருத்துவர் ஆகிறான்.கங்காதரனுக்கு பிறந்த அடுத்த மகன் கண்ணன், ஒரு நேர்மையானவனாகவும், கடின உழைப்பாளியும் ஆகிறான்.
இதனிடையே, அரசு வழக்கறிஞர் ஒருவரின் மகள் அவர்களில் ஒருவனுடன் காதல் வயப்படுகிறாள்.கண்ணனும், குமாரும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
அது எப்படி முடிகிறது.கங்காதரன் என்ன ஆனான்.அவனுக்கு குமார் தன் மகன் எனத் தெரிந்ததா என்பதே மீதிக் கதையாகும்
கண்ணனாகவும், குமாராகவும், முத்து தன் முதல் படத்திலேயே இரு வேடங்களில் நடித்தார்.
தவிர்த்து, கங்காதரனாக ஆர் எஸ் மனோகர், காஞ்சனாவாக விஜயகுமாரி, முருகனாக எம் ஆர் ஆர் வாசு நடித்தனர்.லட்சுமி கதாநாயகியாக நடித்தார்
27 - பூக்காரி (32)
. அணையா விளக்கு- (33)
டி என் பாலு கதை, வசனம் எழுத பூக்காரி என்ற படம் மு க முத்து நடிக்க வெளிவந்தது.அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
பின்னர் கலைஞர் கதை எழுத மு க முத்து நடித்த அணையாவிளக்கு படம் அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் வந்தது.கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசையில், முத்து. பி சுசீலா பாடிய மோகம் அது முப்பது நாள் பாடல் ஹிட்
வண்டிக்காரன் மகன் -34)
அண்ணாவின் கதைக்கு கலைஞர் கதை வசனம் ஜெயசித்ரா ஜெயசங்கர் நடிக்க அமிர்தம் இயக்கினார்.
இசை எம் எஸ் விஸ்வநாதன்
நெஞ்சுக்கு நீதி - (35)
கலைஞர் கதை-திரைக்கதை, வசனம் - கலைஞர்
ஆடுபாம்பே - 35 (36)
பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிப்பில் அமிர்தம் இயக்க ஜெயசங்கர்,சுமித்ரா நடிப்பில் வந்த படம் ஆடுபாம்பே.
மூடத்தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் கலைஞர்
28 - மாடிவீட்டு ஏழை (37)
30 - குற்றவாளிகள்(41)
1983ல் வந்த படம்.எது எங்க நாடு
சுரேஷ், சுலக்சணா நடிக்க இராம நாராயணன் இயக்கம்.பூம்புஹார் தாரிப்பு
திருட்டு ராஜாக்கள் -42
1984ல் பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க இராம நாராயணன் இயக்கத்தி வந்த படம் "திருட்டு ராஜாக்கள்'.இசை ஷங்கர் கணேஷ்
காவல் கைதிகள் - 43
பூம்புகார் புரடக்சன்ஸ் சார்பில் ராதாரவி நடிக்க இராம் நாராயணன் இயக்கத்தில் வந்த படம் காவல் கைதிகள்.இசை ஷங்கர் கணேஷ்
குற்றவாளி -
1985ல் பூம்புகார் தயாரிப்பில் வந்த படம் குற்றவாளி.ரவீந்தர், விஜி நடிக்க இயக்கம் இராம நாராயணன்
31 - பாலைவன ரோஜாக்கள்(44)
காகித ஓடம் - 45
பூம்புஹார் பிகசர்ஸ் தயாரிப்பில். இராம நாராயணன் இயக்கத்தில் வந்த படம் "காகித ஓடம்".படம் வெளியான ஆண்டு 1986
பாலைவன ரோஜாக்கள்-4
கலைஞர் திரைக்கதை, வசனத்தில், பூம்புகார் பிக்சர்ஸ் தயாரிக்க
மணிவண்ணன் இயக்கத்தில் வந்த படம் "பாலைவன ரோஜாக்கள்" பிரபு, சத்தியராஜ், நளினி, லட்சுமி நடித்திருந்தனர்.இசை இளையராஜா.1986ல் இப்படம் வெளியானது
நீதிக்கு தண்டனை- 46
1987ல் வெளியான படம் நீதிக்கு தண்டனை.கலைஞர் திரைக்கதை, வசனத்தில் எஸ் ஏ சந்திர சேகர் இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை.நிழல்கள் ரவி, ராதிகா நடித்திருந்தனர்.நியாயனி ஷிக்க்ஷா என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கம்.இப்படத்தில் ஷோபா சந்திர சேகர் பாடிய இருபாடல்கள் "சின்னஞ்சிறு கிளியே" (slow motion) நீதானே மகாராணி பாடலும், சின்னக்ண்சிறு கிளியே என்ற பாடலே ஜேசுதாஸ், சுவர்ணலதா பாட ஹிட்
ஒரே ரத்தம் -47
1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக் நடிக்க கே சொர்ணம் இயக்கம்.இசை தேவேந்திரன்.கலைஞர் குங்குமம் பத்திரிகையில் எழுதி வந்தத் தொடர் திரைப்படமானது.
வீரன் வேலுத்தம்பி - 48
1987 வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் கதை வசனம்.இராம நாராயணன் இயக்கம்.இசை எஸ் ஏ ராஜ்குமார்.ராதாரவி, விஜய் காந்த் நடிப்பு.அநீதியை எதிர்த்து போராடும் கதை.ஆரம்பத்தில் கோர்ட் சீன் இப்படத்திலும் உண்டு.ராதாரவி..கலைஞரின் கூரிய வசனங்களைப் பேசுவார்.
1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்(49).பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.
1989ல் வந்த படம்(50)தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்
நியாயத்தராசு (51)
1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை
1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்(53)
தேவா இசையமைக்க.. பாடல்களை கலைஞரும்,வைரமுத்துவும் ஏற்றனர்.
1996ல் வந்த படம் "புதிய பராசக்தி"(55). "yerra mandram" என்ற பெயரில் தெலுங்கில் வந்த இப்படத்தை அனிதா ஃபில்ம்ஸ் சார்பில் ஜி.அகஸ்டின் தயாரிக்க கௌரிராஜன் இயக்கியிருந்தார்செல்வா,சுகன்யா
பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா(56)..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்
2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை(57)
தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது
1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது