Wednesday, April 30, 2008

இவரை தெரிந்துக் கொள்ளுங்கள் - காமராஜ்

காமராஜின் அன்னை நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார்.மதுரையில் ஒரு விழாவில் கலந்துக்கொள்ள வந்த காமராஜ்,அன்னையைப் பார்க்க வந்தாராம்.தன் மகனை (இறுதியாக?!)பார்த்த தாய் 'ஒரு வாய் சாப்பிட்டுட்டு
போ'என்றாராம்.தாயின் கண்களில் கண்ணீரைப்பார்த்த தலைவர்..என்ன நினைத்தாரோ 'சரி' என்றபடி அடுக்களைக்குள் நுழைந்து, அவசர அவசர மாக சிறிது சாப்பிட்டு எழுந்தாராம்.பின் தாய் சந்தோஷமாக விடை கொடுத்தாராம்.ஆமாம்..இதில் என்ன செய்தி?என்கிறீர்களா? காமராஜ் தன் தாயைப் பார்ப்பது அதுதான் கடைசி தடவை.
மேலும் அவர் வீட்டில் அவர் சாப்பிட்டு 25 வருஷங்களுக்கு மேலிருக்குமாம்.

Tuesday, April 29, 2008

இவரை தெரிந்துக் கொள்ளுங்கள்-காமராஜ்

1954 முதல் 1963 வரை தொடர்ந்து 10 ஆண்டு காலம் தமிழக முதல்வராய் இருந்தவர் காமராஜ்.ஒருவரே தொடர்ந்து
பதவி வகிப்பது சரியல்ல என்று காமராஜ் திட்டத்தில் முதலில் பதவி விலகிய தலைவர் இவர் மட்டும்தான்.
காந்தியைப்போல் ஏழை எளிய மக்களிடம் பற்றி கொண்டவர்.இவர் மறைந்த போது ஒரு அமெரிக்க பத்திரிகை என்ன எழுதியது தெரியுமா?
இந்தியாவின் கடைசி காந்தியவாதி இறந்தார்
எவ்வளவு உண்மையான வரிகள்.

Thursday, April 24, 2008

இறைச்சி உண்பதும்,புகை பிடிப்பதும் சீர்திருத்த நோக்கம்(?!)- கலைஞர்

விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என சட்டசபையில் நேற்று கலைஞர் கூறினார்.
பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துக்களை பெரியார்,அண்ணா கருத்துக்களை பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர்.அப்படிப்பட்டவரிடம் நாங்கள் ஏன் விரோதம் பாராட்ட வேண்டும்?விவேகானந்தர்,மூட நம்பிக்கை,ஜாதி வெறியை சாய்த்தவர்.மத வெறிக்கு ஆளாகாதவர்.அவர் இறைச்சி உணவு சாப்பிடுபவர்..புகை பிடிப்பவர்..ஆனால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்றும்,மனம் சுத்தமாக இருந்தால் போதும் என சீர்த்திருத்த நோக்கங்களுடன்
செயல் பட்டவர்(?!)(அன்புமணி கவனிக்க)அப்படிப்பட்டவர் பெயரில் உள்ள மண்டபத்தை இடிப்போமா? என்றார்.ஆனால், நமக்கு ஒரு சிறு சந்தேகம்.. நீங்கள் சொல்லும் அய்யன் திருவள்ளூவர் புலால் உண்பவரிடம் அருளுடைமை
இருக்காது என்கிறாரே..அவர் சீர்திருத்த வாதி இல்லையோ?

Thursday, April 17, 2008

யாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் சொன்னேன்

..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

Sunday, April 6, 2008

ஒகேனக்கல் விவகாரம் ஒரு சிறு அலசல்

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு-கலைஞர்
தமிழ் திரை உலகமே வீறுகொண்டு எழுந்தது.மாபெரும் உண்ணாவிரதம்.
பெங்களூரு தமிழ் பட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
தமிழ்நாட்டு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
வக்கீல்கள் போராட்டம். கன்னடர் நடத்தும் உணவு விடுதிகள் இவ்வளவு நாட்கள் சாப்பாடு போட்டதை மறந்து
அடித்து நொறுக்கப்பட்டன.
முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் ரஜினி பேச்சு.
ராஜ்குமாரை வீரப்பன் பிடித்து வைத்திருந்த போது உங்கள் கண்ணீர் துடைத்த கலைஞருக்கு தண்ணீர் இல்லையா?வாலி பேச்சு.
இப்படி இந்த பதிவு மூலம் எழுதிக்கொண்டே போகலாம்.
கடைசியில் என்ன நடந்தது?
வழக்கம்போல் தமிழன் வாய் மூடி மௌனியானான்.
கர்நாடகாவில் மீண்டும் நுழைந்த கிருஷ்ணாவிற்கு முதல் வெற்றி.
கலைஞரே!! தமிழனின் பொறுமை எல்லைக்குள்தான் இருக்கிறது என எண்ணி விட்டீர்களா?
தேர்தல் முடிந்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுமூக தீர்வு ஏற்படும் என எண்ணுகிறீர்களா?
திடீர் என மனம் மாறியதற்கு காங்கிரஸ் கொடுத்த பிரஷரா?
தமிழனை வெட்கி தலை குனிய வைத்து விட்டீர்களே!!