Monday, April 30, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 35

அத்தியாயம் - 35
(இரண்டாம் ரகசியம் நாடக டிவிடியை ரஜினி வெளியிட்டபோது)
2013ல் மகேந்திரன் இயக்க வெங்கட் எழுதிய "இரண்டாம் ரகசியம்" நாடகம் அரங்கேறியது.65 முறை நடந்தது
ஒரு ரயில் நிலையத்தில் ,புயல் காரணமாக ரயில் வர தாமத கிறது.அதனால் வையிட்டிங் அறையில் மூவர் தங்க நேரிடுகிறது
இந்த மூவர்தான் நாடகத்தில்  முக்கிய கதாபாத்திரங்கள்.அவர்கள்-
அரசியல்வாதி (ஒய்ஜிஎம்)
குடும்பத்தலைவி ஒருத்தி
இதய மருத்துவர்
தவிர்த்து அதே அறையில் தற்கொலை செய்து கொண்ட ஆவி ஒன்று இரவு வரும் ..பயமுறுத்தும்
இதயமருத்துவருக்கும்ம்,குடும்பத்தலைவிக்கும் மட்டுமே ஆவி தெரியும்.அது அவர்களின் அந்தரங்கத்தையும் சொல்கிறது.பின்னர் அது அரசியல்வாதிக்குத் தெரியும்போது மற்றவருக்குத் தெரியவில்லை.
மர்மங்கள் நிறைந்த நாடகமாக அமைந்தது எனலாம்.
இந்நாடகத்தில் ஆவியாக நடித்தவர் ஐஸ்வர்யா ஆகும்.
ருக்மணி , லட்சுமி(கண்ணன் வந்தான்) ஐஸ்வர்யா என மூன்று தலைமுறையினரும் யூஏஏவில் நடித்துள்ளனர்.
ரயில்வே நிலையம், தூரத்துத் தெரியும் பகவதி கோயில் என அரங்க அமைப்பும் சிறப்பு

Thursday, April 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 54

கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே


பதவுரை-

உண்- கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற

ஆ - பசு இனங்கள் (வாழ்கின்ற)

முலை - முல்லை நிலத்திற்கு

உ - தலைவனாகிய திருமாலின்

மை - கருமை நிறத்தையும்

மைந்து  - வலிமையும்

ஆசு - உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)

அரண் - கோட்டையாக உள்ள

அம்பர் - கடலில் ஒளிர்ந்திருக்கின்ற அசுரர்களின்

உயிர் - ஜீவனை

சேர் - மாய்த்து

உள்= தேவர்களின் உள்லத்தில் இருந்த

நாம் - அச்சத்தை

உளையும்- போக்கி அழித்த

ஐ- தெய்வமே


மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்

சர் - உழணத்தை உடைய அக்னி தேவன்

அண் - சேர்ந்திருக்கும்

நம் - நம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய

அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்

உண் - மிகுதியாகப்

ஆம் - பெருகும்

முலையும் - கற்புடமைக்கும்

ஐ- அழகிய

மை - அஞ்சனம் தீட்டிய

தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்

சர - விழிகளின்

நந்தனமும் - கிருபைக்கும்

ஒப்பில்- ஒப்புவமை இல்லாத

உண்ணாமலை உமை - உண்ணாமுலை என் கிற பெயர் கொண்ட பார்வதியின்

மைந்தா - குமரனே

சரண்..சரண்..உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்பொழிப்புரை -

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொரூபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் ,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதிதேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்


ஒய்ஜிபியும் யூஏஏவும்

அத்தியாயம் - 32

வெங்கடா 3 நாடகம் பற்றி எழுதுகையில், மற்றொரு செய்தியும் சேராவிடில், அப்பதிவு முழுமைப் பெறாது
2010ஆம் ஆண்டுதான் யூஏஏவின் கிளை ஒன்று அமெரிக்கா நாட்டில் சிகாகோ நகரில் துவக்கப்பட்டது.
என்னடா..இது? கார்ப்பரேட் கம்பெனி துவக்கியது போல யூஏஏ கிளை அமெரிக்காவிலா? புரளி விடுகிறேனா? என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதா?
நான் சொல்வது உண்மை.
யூஏஏ உலகின் பல நாடுகளில் தங்கள் நாடகங்களை நடத்தி வந்துள்ளனர்.அவர்கள் நாடகம் நடத்திய வெளிநாடுகள் பற்றியெல்லாம் பின்னால் வரும் பதிவொன்றில் சொல்லப்பட உள்ளது
.ஆனாலும் 2010 முதல் அமெரிக்காவில் இவர்கள் நாடகம் போடும் நகரங்களில் எல்லாம், முக்கிய சில நடிகர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லாம் அமெரிக்க வாழ் தமிழர்கள் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
ஆனால் அதுதான் உண்மை
2010ல் சிகாகோவாழ் தமிழர்கள் சிலர், நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் திரிவேணி என்ற குழுவை நடத்தி வந்தார்.அவர்களுக்கு skype மூலம் மகேந்திரன் நடிப்புப் பயிற்சி கொடுத்தார்.அத்துடன் இல்லாது தான் நாடகம் நடத்தும் அமெரிக்கா நகரில் எல்லாம் தன் நாடகங்களில் இவர்களையும் நடிக்க வைத்தார். 
தமிழ்நாடகங்கள்பால் மகேந்திரனின் பற்றிற்கு மற்றுமொரு உதாரணம் இது. 

இப்போது சொல்லுங்கள் அந்த குழுவினரைச் சேர்ந்தவர்களை யூஏஏ2 குழுவைச் சேர்ந்தவர்கள் என அழைப்பதில் தப்பில்லையே.