Tuesday, January 31, 2012

ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்

 தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது.
 இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் என்ற தேமுதிக எம் எல் ஏ எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,
தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும்
விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில்
 தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார்.

 தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர்..ஆளுநர் ஆட்சி எனில் தனித்து நிற்கத் தயார் என விஜய்காந்த் கூறினார்


Monday, January 30, 2012

2ஜி ஊழல்...- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி 
விசாரணை நடத்த ஜனதா கட்சி தலைவர் சாமி பிரதமரிடம் அனுமதி கோரியும் பதில் இல்லை. இந்நிலையில் யாராவது 
அரசு ஊழியர், அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால்
 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிரான விசாரணையை 
பிரதமர் மன்மோகன் சிங் தாமதம் செய்தார் என்று கூறி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது 2ஜி ஊழல் விவகாரத்தில் 16 மாத காலமாக ஆ. ராசாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் பிரதமர் எடுக்காதது ஏன் 
என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. சூடான விவதாதத்திற்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம்
 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


2ஜி வழக்கில் ஆ. ராசா மூளையாக செய்ல்பட்டதாக குற்றம்சாட்டி விசாரணை நடத்த அனுமதி கோரி சாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். 
ஆனால் கடந்த 11 மாதங்களாக பிரதமர் அலுவலகம் இது குறித்து பதில் அளிக்கவில்லை.


இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஏ.கே. கங்குலி வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஓய்வு பெறுவதால் 
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,


யாராவது அரசு ஊழியர், அதிகாரி, அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை கோரியோ, வழக்கு தொடர அனுமதி கோரியோ எந்த குடிமகனாவது 
அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினால் அவர்கள் 3 மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில்
 4வது மாதத்தில் அனுமதி அளித்ததாகக் கருதி அந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(நன்றி - தட்ஸ் தமிழ்)


Sunday, January 29, 2012

அம்மாவின் சக்தி மகத்தானது...
அம்மா...

அவரின் சக்தி மகத்தானது...என்கிறார் பாக்கியராஜ் தனது பாக்யா பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில்..

கடவுளின் சக்தியை விட ஒப்புவமை இல்லா சக்தி இந்த உலகத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு அவரின் பதில்....

ஏன் இல்லாம..நாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சக்திதான் அது..சொன்னா..நீங்களும் ஒத்துப்பீங்க..அதாவது..

ஒரு மலைப்பிரதேசத்துல மலை உச்சியில் ஓர் இனத்தாரும், அடி வாரத்தில் ஒன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தாங்க.இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு தடவை மலை உச்சியில இருந்தவங்க அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி மலை உச்சியில வச்சுட்டாங்க.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினா குழந்தையை மீட்டுட்டு வர சாத்தியம் இருப்பதா ஊரில் இருந்த இளைஞர்கள் கிட்ட அறிவுரை கூறினாங்க.
,
இளைஞர்கள் சிலர் உடனே முன் வந்தாங்க.அவங்க கடினமான வேலைகள் செய்து பழகியவங்க.எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியோட செய்து முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவங்க.ஊர்ப் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவங்கதான் சிறந்தவங்கன்னு அவங்களை வாழ்த்தி வழி அனுப்பினாங்க.

இளைஞர்களும் ஆர்வத்தோட கிளம்பினாங்க.அந்த மலையோட சில பகுதிகள் செங்குத்தானவை.அந்த இளைஞர்களால் சீக்கிரமா அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்கமுடியவில்லை.விடாமுயற்சியோட அப்பகுதியைக் கடக்க பல மணி நேரம் பல வழிகள்ல முயன்று, களைத்துப் போய் ஓய்வெடுத்துட்டு காலைல மீண்டும் முயற்சித்தப்போ..

தங்களோட ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக்கிட்டு லாவகமா கீழே இறங்கி வருவதைப் பார்த்து மலைச்சுப் போய், அவ அருகில வந்தவுடன், "நாங்களே ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்று திரும்பியிருக்கிறாயே, உன் கடின முயற்சி எங்களைவிட சிறந்ததாக உள்ளதே..அது எப்படி?'ன்னு வியப்போடு கேட்டாங்க.

அதுக்கு அந்த அம்மா இடுப்பில இருந்த குழந்தையைக் காட்டி, 'பெரிசா ஒண்ணுமில்ல..இது உங்க குழந்தை இல்லை, என் குழந்தை அவ்வளவுதான் வித்தியாசம்'னு பதில் சொன்னப்பத்தான் கண் எதிரில் உள்ள தாய் ஸ்தானத்தோட சக்தி எவ்வளவு மகத்தானதுன்னு அவங்களுக்கு புரிஞ்சது.

டிஸ்கி- தலைப்பைப் அப்டித்து..வேறு எதையோ எதிர்ப்பார்த்து வந்தவரா நீங்க..அப்போ சாரிங்க..


Saturday, January 28, 2012

எம்.ஜி.ஆர் பற்றி கேரளம் தவறான பிரசாரம்

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பாசனத்துறை அமைச்சராக இருந்த கா. ராஜா முகமது, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்,
கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறிவருகிறது.
அணைக்கு தகுந்த பாதுகாப்பு தருவோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் அதே அரசு அணையை உடைக்க முயற்சிக்கிறது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கருதி ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கிறது. ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சரான
 கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனியோ அணையின் பாதுகாப்பு குறித்து கப்பல் படையைக் கொண்டு ரகசியமாக ஆய்வு நடத்துகிறார்.
எனவே ஏ.கே. அந்தோனியை அந்த பதவியில் இருந்து விலக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டியதில்லை என்று ஒரு போதும்
எம்.ஜி.ஆர். பேசியது இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பேசியதாக, மத்திய அரசுக்கு அச்சுதானந்தன் தவறான தகவலை அளித்துள்ளார்.
அப்போதைய மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அணையைப் பார்வையிட்டு, நீர் வடிகட்டிகள், வெள்ளம் வழிய 3 பெரிய மதகுகள் அமைத்து
காலத்திற்கேற்ற வகையில் மாற்றி வடிவமைக்கக் கேட்டுக் கொண்டார். அந்த பணிகளை நிறைவேற்றவே அப்போது அணையின் நீர்மட்டத்தை
 136 அடியாக குறைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.

1980-ல் பணிகள் முடிந்த பிறகு, அணை புதிய அணை போல ஆகிவிட்டது, எனவே நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று
 மத்திய நீர்வள ஆணையத் தலைவர் கூறினார். ஆனால் அதற்கு அப்போது கேரள அரசுதான் முட்டுக்கட்டையாக இருந்தது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் முல்லைப் பெரியாறு அணை
பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது இவ்விரு பகுதிகளை தமிழக அரசு தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டம் இருக்குமேயானால்
 சட்டப்பேரவையில் அது குறித்த தீர்மானம் கொண்டு வரலாம் என்று மொழிவாரி மாநிலம் அமைக்கும் கமிட்டியின் தலைவர் பணிக்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்போது நாம் நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டோம்.

இப்போது அவ்விரு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்த ஒரு தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும்
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும்.

இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் முல்லை பெரியாறு அணைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றனர்.


Friday, January 27, 2012

ஆடம்பரத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் - உச்ச நீதி மன்றம் கவலை

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

 நீதிபதிகள் கூறுகையில், "இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும்," என்றனர்.

(தகவல் தட்ஸ் தமிழ்)


Thursday, January 26, 2012

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-1-12)
1) இந்தியா நேற்று தனது 63வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.இந்திய அரசியல் அமைப்பை தயாரிக்க ஆன செலவு 63,96,724 ரூபாயாகும்.செலவான நேரம் 2 வருடம் 11மாதம் 18 நாள்.பங்குக் கொண்ட அங்கத்தினர்கள் எண்ணிக்கை 368 ஆகும்

2)1000க்கும் மேற்பட்ட உப நதிகளைக் கொண்டுள்ள உலகின் ஒரே நதி அமேசான் நதியாகும்.

3)தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி.இப்போது..தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்..அனைத்து நோய்களும் நம்மை அண்டாது என்கிறார்கள்.

4)நடிகர் 'வினய்' கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாய் நடிக்க அஞ்சலியைக் கேட்டார்களாம்.ஆனால் அவர் மருத்துவிட்டாராம்.'டேம் 999 படத்தில் கதாநாயகனாக வினய் நடித்துள்ளார்.அதனால் தான் மறுப்பாம்.தமிழ் மக்கள் என்னிடம் அன்பாக உள்ளனர்..அதைக் கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்றுள்ளார்.
(கலைக்கு மொழியில்லை என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டும் கலைஞர்களிடையே அஞ்சலி வித்தியாசமானவர்தான்)

5)நமது தேசிய கீதத்திற்கு வயது 100.ரவீந்திர நாத் தாகூர் எழுதிய இப்பாடல் 1911 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மஹாநாட்டில் பாடப்பட்டது.1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் இந்திய அரசு முறைப்படி இப்பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்தது.

6)உலகில் பெருகிவரும் வெப்பச் சூழல் காரணமாக பனி மலைகள்,இயற்கை மலைகள் ஆகியவற்றிற்கான அபாயம் பெருகி உள்ளதாம்.

7)இண்டெர்நெட் துவக்கப்பட்ட ஆண்டு 1969 ஆகும்

8)வால்ட்டீஸ்னி 26 முறை ஆஸ்கார் விருது வென்று உலக சாதனை படைத்தவர் ஆவார்

9)இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இருபத்தினான்கு வயதில் இருபத்தைந்து படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

10)ஒரு பொன்மொழி..
  உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறை இல்லாமல் நீங்கள் இருப்பீர்களானால் நீங்கள் ஒரு குற்றவாளி - ஜக்கி வாசுதேவ்

11)ஒரு ஜோக்..

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையைத் தீர்க்க என்கிட்ட ஒரு வழியிருக்கு
என்ன வழி
தைத்திங்கள் முதல் நாள் முதல்..சித்திரைத் திங்கள் முதல்நாள் வரை தமிழ்ப்புத்தாண்டு நாட்கள் என அறிவித்து விடலாம்.இன்னுமொரு ஜோக்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவோடான நாலாவது டெஸ்ட்ல சக்கைப் போடு போடுது பார்த்தியா?
அப்படியா சொல்ற
ஆமாம்..டெஸ்ட் மேட்ச்சை ஐந்தாவது நாளுக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டாங்களே! இது சாதனைதானே

Wednesday, January 25, 2012

உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது-தமிழக இளைஞர் காங். பொறுப்பாளர்
சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மேலிட பொறுப்பாளரும்,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ,

தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்
பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது. இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும்
அதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார்.
அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல
சத்தம், அமளி, துமளிகள், குற்றங்கள், கூப்பாடுகளுடன் கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார்.
 முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால்,
அதை நடத்துங்கள். ஆனால் போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை
 ஏற்படுத்திவிடும் என்றார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்.
உங்களுக்காக எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் லிஜூ பேசியதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர் தமிழக இளைஞர் காங்கிரஸார்.
Tuesday, January 24, 2012

மத்திய அரசுக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை
தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள்,
 மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்று, `அமைதியை ஏற்படுத்திவிட்டேன், இனி தமிழக மீனவர்களுக்கு
இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது' என்று உறுதியளித்து விட்டு திரும்பிய சூழ்நிலையில் வருகின்றன.

சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை கொடுமையாகத் தாக்கி,
 அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழக மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும்.

அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் கூறுவதும், அப்படி அவர் சொன்ன வாசகங்கள் அனைத்தும் கடல் காற்றிலேயே கரைந்து போவதும்
 தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகிறது. எனவே, இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பத்து ஆண்டுகள் பாத்ரூமில் அடைக்கப்பட்டிருந்த பெண்..
பாலஸ்தீனத்தில் தன் மகளை பத்து ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இவர் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர்.

இவர் தனது மனைவி விவாஹரத்து செய்தவர்.ஆனால் தன் மகள் பாராவை தன்னுடன் வைத்துக் கொண்டார்.ஆனால் அவளை சிறிய பாத்ரூமிற்குள் அடைத்து வைத்தார்.அப்போது அவர் மகளுக்கு வயது 11.அவளை இரவு நேரத்தில் மட்டும் வெளியே வர அனுமதித்தார்,ஆனால்..வீட்டை விட்டு வெளீயே போக அனுமதி இல்லை.இத் தகவல் பத்து ஆண்டுகள் கழித்து போலீஸிற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது..

இது குறித்து மகள் பாரா கூறுகையில் : நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. எனது அப்பா எனது முடியை அகற்றி விடுவார். அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது . இனிமேல் தான் என் வாழ்க்கை துவங்குகிறது, எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன் . அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான்‌ வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை . அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார் கண்ணீர் மல்க.


Monday, January 23, 2012

அரசியலுக்கு நான் ஏன் வரவில்லை - பாரதிராஜா

 பெருந்தலைவர் காமராஜரை இந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்ததைப் பார்த்த பிறகு, அரசியலுக்கு வரும் ஆசையே
எனக்கு போய்விட்டது, என்றார் பாரதிராஜா.

மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.

எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா...
 அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.

நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில்
ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.

பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக
எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே
என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம்
இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.

தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும்.
ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
அது உங்க கடமை.

தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது.
அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.


 

தமிழர்கள் படுகொலைக்கு உதவிவிட்டு இப்போது பள்ளிக்கூடம் கட்டுகிறார்களாம் _ வைகோ
 இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு
 இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும்.
அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும்
 வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை
 இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும்,
ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள விமானப்படை குண்டுவீச்சாலும்,
பீரங்கி தாக்குதலாலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள அரசு செய்த கொலை பாதகக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டதற்கு
ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள்
 ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் எடுத்த முயற்சியை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தோற்கடித்து,
சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க உதவியாகச் செயல்பட்டன.

இலங்கையில் போரின்போது சிங்கள ராணுவம் நடத்திய குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அறிந்து ஆய்வு செய்து
 அறிக்கை தர, மார்சுகி தாரிஸ்மன், யாஸ்மின் சுகா, ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ராஜபக்சே அரசு, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக,
essons Learned and Reconciliation Council-LLRC என்ற ஒரு கமிஷனை தானே அறிவித்துக் கொண்டது.

முழுக்க முழுக்க பொய்களைக் கொண்ட 388 பக்கங்கள் கொண்ட அந்தக் கமிசன் அறிக்கையை, கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டது.
 குறிப்பாக, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, ஆதாரங்களோடு வெளியிட்ட, சிங்கள ராணுவத்தின் இனக்கொலைக் குற்றங்களை,
சிங்கள அரசின் கமிசன் மூடி மறைத்து விட்டது.

சிங்கள ராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அதை மறுக்க வழியின்றி,
 விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளது. ஈழத்தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்,
அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதையும், இசைப்பிரியா எனும் தமிழ் நங்கை, ராணுவத்தினரால்
 கொடூரமாகக் கொல்லப்பட்டதையும், இத்தகைய பல்வேறு சம்பவங்களைப் பற்றி, ஒரு வரி கூட அந்த அறிக்கையில் இல்லை.

எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை.
ராணுவ சிப்பாய்கள் உடன் இருந்து மிரட்டிய நிலையிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

திட்டமிட்டே இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, உலகின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான்,
தானே மோசடியாக கமிசனை நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி, அறிக்கையும் தந்து விட்டது.

உலகின் பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளன.

எனவே, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக் குற்றத்தை, முழுமையாக உலக அரங்குக்குத் தெரியப்படுத்தவும்,
 அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ராஜபக்சே அரசை நிறுத்தித் தண்டிக்கவும், ஐ.நா. மன்றமும்,
உலக நாடுகளும், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரமான விசாரணை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மூவர் குழு, ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

இந்திய அரசுதான் போரை நடத்த உதவியது என்றும், இயக்கியது என்றும், அதனால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றும்,
 சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அமைச்சர்களும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினர்.
ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

2009 மே மாதத்துக்குப் பின்னரும், தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளிலேயே சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழர் தாயகத்தில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது,
 கற்பழிப்பது போன்ற அக்கிரமங்களில் சிங்கள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும்
சிங்கள ராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது.
பௌத்த விகாரைகளைத் தமிழர் பகுதிகளில் அமைக்கிறது.

உண்மைகளை வெளியே சொல்ல, ஈழத்தமிழர்கள் அஞ்சுகின்ற அபாயத்தில் உள்ளனர். உலக நாடுகள், சிங்கள அரசின் இனக்கொலைக்
குற்றத்தை அறிந்து வருவதாலும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாலும், இந்திய அரசு திட்டமிட்டு,
சிங்கள அரசுக்கு உதவுகின்ற வேலையில் தற்போது ஈடுபட்டு உள்ளது.

2006ம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள், சிங்கள விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக்
கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதைக்
 கண்டிக்காத இந்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத
 இந்திய அரசு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு,
இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது.

தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும், சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும், சிங்களவர்களுக்கு அடங்கித்தான்
தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட ராஜபக்சேவிடம், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரூஷ்ணா
 இப்போது பேசி விட்டதாகவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது, தமிழக மக்களையும்,
 உலகத்தையும் ஏமாற்றுவதற்காக, இந்திய அரசு செய்கின்ற பித்தலாட்ட வேலை ஆகும்.

தமிழக மீனவர்கள் மீது இனி சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தாது, என்று தன்னிடம் சிங்கள அரசு உறுதி அளித்ததாக கூறிய
இந்திய அமைச்சர் கிருஷ்ணா முகத்தில் சிங்கள அரசு மூன்று நாட்களுக்குள் கரியைப் பூசிவிட்டது. நேற்றும், ராமேஸ்வரம் அருகில்
 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.

சிங்கள அரசும், இந்திய அரசும் செய்கின்ற மாய்மால வேலைகளை முறியடித்து, ராஜபட்சவை குற்றக்கூண்டில் நிறுத்தவும்,
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு ஆகும் என்பதை நிலைநாட்டவும், ஈழத்தமிழர்கள் மத்தியில்
அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும்
உறுதி பூண வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

(தகவல் - தட்ஸ்தமிழ்)


Saturday, January 21, 2012

கைக் குழந்தையுடன் ஈழத் தமிழ்ப் பெண் நார்வேயில் தீக்குளித்து பரிதாப மரணம்!

ஒன்றரை வயது குழந்தையுடன் ஈழத் தமிழ்ப பெண் ஒருவர் நார்வேயில் தனது வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
 அவரது சகோதரி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட வேதனையாலும், தனது அகதி புகலிடக் கோரிக்கையை
நார்வே அரசாங்க அதிகாரிகள் நிராகரித்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் அவர் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.

24 வயதான அந்தப் பெண் ஈழத்தில் உள்ள சாவகச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் நார்வேயில்
 தஞ்சமடைந்து வசித்து வருகிறார். இவரைப் போலவே நார்வே நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வரும் குர்திஷ் இனத்தவர்
ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது.

அகதி அந்தஸ்து கேட்டு இவர் நார்வே குடியேற்றத்துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த விண்ணப்பம்
 நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்தது. இந்த சமயத்தில்தான், யாழ்ப்பாணத்தில் வசித்து
 வந்த இவரது 18 வயது சகோதரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நார்வேயில் வசித்து வந்த இப்பெண் பெரும் சோகமும், வேதனையும் அடைந்தார்.

இந்த நிலையில் தான் வசித்து வந்த இருப்பிடத்தில் தனது கைக்குழந்தையோடு அவர் தீக்குளித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் முதலில் அப்பெண்ணும்,
 பின்னர் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான அகதிகள் கலந்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வழக்கறிஞர் கிறிஸ்டைன் ஆரே ஹான்ஸ் கூறுகையில், தனது தங்கை மீது இப்பெண்
மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தார். அவரது மரணம் இவருக்கு மிகப் பெரிய வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
 பெரும் கவலையுடன் இருந்து வந்தார் என்றார்.

(தகவல் தட்ஸ்தமிழ்)


Friday, January 20, 2012

பெண்ணை வர்ணிக்கும் வைரமுத்து..
சாதாரணமாக எழுத்தாளர்களும், கவிஞர்களும் பெண்ணை வர்ணிக்கும் போது...

பிறை நுதல், எள்ளுப் பூ நாசி, ஆரஞ்சு சுளை உதடுகள், முத்துப் பற்கள், கயல் விழி என்றெல்லாம் வர்ணிப்பர்.

விகடனில் , மூன்றாம் உலகப் போர் தொடரில் வைரமுத்துவின் பெண் வர்ணனையைப் பாருங்கள்..

கெழங்கு ராணி மாதிரி பிறவிய யாரும் பார்த்திருக்க மாட்டீங்க.பார்த்திருந்தா கடைவாயில பாலு ஊத்தற வரைக்கும் கண்ணைவிட்டுப் போகாது அவ ரூவம்.கொஞ்சம் எக்கி நின்னா ஆறடி இருப்பா அவ.பின்னி வச்ச சடை.பின் முதுகு தாண்டிப் பிருஷ்டப் பள்ளத்தில எறங்கி, கெண்டைக்கால உரசிக் குதிக்காலத் தொட இன்னும் கொஞ்சம் வசதியில்லையேன்னு வருத்தப்படும்.

அகலமான ஒடம்பு அவளுக்கு.சொளகு மாதிரி முதுகு.அதுல - ஒரு துளி இருட்டு ஒழுகி விழுந்த மாதிரி ஒரு மச்சம்.விளைஞ்ச தேனைப் புழிஞ்சு வடிகட்டிவச்சு ரெண்டு நாளைக்குப் பெறகு தொறந்து பாத்தா- தெளிஞ்சு நிக்குமே..அப்படி ஒரு நெறம்.எண்ணால 8 எழுதினா நடுவில ஒடுங்கி நிக்குமா இல்லையா அப்படி ஒரு இடுப்பு.

விளைஞ்ச வெள்ளைப் பாறைய வாழைத்தண்டு பதத்துக்கு வழவழன்னு செதுக்கி வச்ச மாதிரி ரெண்டு காலு.ஊமை காதுல சொன்ன ரகசியம் மாதிரி உள்ளடங்கிப் போன வயிறு.'ஆம்பளையா இருந்தா அடக்கிப் பாரு' ன்னு வாரவன் போறவனை எல்லாம் வம்புக்கு இழுக்கிற மார்பு.இள வாழை இலைய நெய்யில துடச்சுவச்ச மாதிரி மினுமினுன்னு ஒரு கழுத்து.இந்தப் பொருத்தமான உடம்புக்குத் திருத்தமான மூஞ்சி.இதுதாண்டான்னு பிரம்மனே வேட்டி போட்டுத் தாண்டுற மாதிரி செதுக்கிவச்ச மொகம்.


Wednesday, January 18, 2012

ஐ.ஐ.டி. மாணவர்களின் விந்தணு தேவை - விளம்பரம்
 ஐஐடி மாணவர்களின் விந்தணுக்கள் தேவை என்று சென்னையில் உள்ள தம்பதி விளம்பரம் தந்துள்ளனர்.

 இந்த விளம்பரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடியில் படிக்கும் புத்திசாலியான, ஆரோக்கியமான, உயரமான, அழகான மாணவர்களின் விந்தணுக்கள் தேவை.
 அதற்கு சன்மானமாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணும், இ-மெயில்
 முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளில் படிக்கும் மாணவர்களின் விந்தணுக்களை பெற்று புத்திசாலித்தனமாக குழந்தைகளை
 உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
 
இந்த விளம்பரம் ஐஐடி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள்,
 ஐஐடியில் படிப்பவர்கள் மட்டும் புத்திசாலிகள் அல்ல. இது முட்டாள்தனமான விளம்பரம் என்று கூறியுள்ளனர்.

டைம் ஆப் இந்தியா நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது


Sunday, January 15, 2012

பொங்கல் பொங்கியதா?
பொங்கல் பொங்கிற்றா

என்றான் நண்பன் இன்று...

பொங்கல் மட்டுமா...

மனம் பொங்கிற்று

கையால் ஆகாதார் மேல்...

கோபம் பொங்கிற்று

ஏறி மேய்ப்பவர் மீது...

ஆத்திரம் பொங்கிற்று

ஏமாற்றுவார் மீது...

சலிப்பு பொங்கிற்று

அரசியல்வாதிகள் மீது...

கொலைவெறி பொங்கியது

பொய் புரட்டு காணுகையில்..
Saturday, January 14, 2012

இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்..
சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? அந்த விவசாயி நமக்கு உணவு படைத்துவிட்டு அவன் வறுமையில் வாடலாமா?

அவன் நிலங்களை பறித்துக் கொண்டு காங்கிரீட் கட்டிடங்களாகவும்..தொழில் நகரங்களாகும் உருவாகும் நிலை தொடரலாமா?

வறுமை தாங்காது..மக்களுக்கு உணவு வழங்கிய ஒரே காரணத்திற்காக அவன் தற்கொலை செய்து கொள்ளலாமா?

மென் பொருள் துறையினரால்..அரசுக்கு அந்நியச் செலவாணி வருவாய் இருந்தாலும்...தொழில்களால் வேலை வாய்ப்புகள் கூடினாலும்  அடிப்படை எது என எண்ணினால்..விவசாயியின் கைகள் தான்.

அரசு இலவச மின்சாரம், மானியம் என்று வழங்கினாலும்..அதெல்லாம் அவனுக்குப் போய் சேருகிறதா?

இயற்கையின் சீரழிவுகள் அவனை எவ்வளவு பாதிக்கின்றன...ஒரேயடியாக..அவன் வாழ்வாதாரமே பாதிக்கப் படுகிறதே...

இந்தியா விவசாய நாடு என்பது சிறிது சிறிதாக மாறிவரும் நிலை தோன்றுகிறதே!

என்று விவசாயிகள் வறுமை மறைகிறதோ..அன்றுதான் நாடு சிறக்கும்..

அதுவரை ஏட்டளவிலே தான் அவன் பெருமையை பேசிக்கொண்டிருக்க வேண்டும்..

நிலைமை மாறுமா???

மாறும்..மாற வேண்டும் என்னும் நம்பிக்கையுடன் பொங்கலிடுவோம்..

அனைவருக்கும் மங்கலம் நிறைந்த இனிய பொங்கல்தின நல்வாழ்த்துகள்

Friday, January 13, 2012

அதிமுக விலிருந்து விலக்கம் ஏன்? - நடராஜன்

அதிமுகவிலிருந்து தான்,தனது மனைவி சசிகலா மற்றும் குடும்பத்தினர் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்புத் தகவல்களை
 தஞ்சாவூரில் தான் நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது நடராஜன் வெளியிடுவார் என்று பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

தனது குடும்பத்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே என்ன பிரச்சினை, என்ன காரணத்திற்காக தாங்கள் வெளியேற்றப்பட்டோம்
என்பது உள்ளிட்ட பல தகவல்களை அவர் அந்த விழாவின்போது அம்பலப்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

 சசிகலா குடும்பத்தினர் சமீபத்தில் கூண்டோடு அதிமுகவை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்ட பின்னர் இவர்களில் யாருமே இதுவரை வாய் திறக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் முதல் முறையாக சசிகலா குடும்பத்தினர் வாய் திறக்கப் போகின்றனர். குடும்பத்தினர் சார்பாக
 நடராஜன், அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தங்களது தரப்பு நியாயத்தை தஞ்சாவூரில் தான்
நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது விரிவாக எடுத்துரைக்கப் போகிறாராம்.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சாவூரில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா நடத்துவது
 நடராஜன் வழக்கம். அந்த வகையில், தற்போதைய பொங்கல் பண்டிகையயையொட்டியும் அவர் விழா நடத்துகிறார்.

தமிழர் கலை இலக்கிய திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா தஞ்சாவூரில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான
கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.. இதில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும், நண்பர்களையும்
அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக் காட்டவும், தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை
 காட்டவும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.

3 நாள் விழாவாக இது நடைபெறுகிறது. ஜனவரி 15ம் கலை, கலாச்சார நிகழ்ச்சியாக நடைபெறும்.
ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில், அடுத்த நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு, பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற
பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.

3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிடுகிறார்.
விழாவின் இறுதி நாளில் சிறப்புரையாற்றுகிறாராம் நடராஜன்.அப்போதுதான் ஜெயலலிதா குறித்தும்,
அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

(தகவல் -தட்ஸ்தமிழ்)

Thursday, January 12, 2012

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவை....
மக்களிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது..என யார் சொன்னது...

அவர்களையெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வாருங்கள்...மக்கள் ஆர்வமாக தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை..மாத குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவது பற்றிகூட கவலைப்படாது ஆயிரக் கணக்கில் செலவு செய்து புத்தகமாய் வாங்கிக் குவிக்கிறார்கள்.கண்டிப்பாக வாங்கியவற்றில் சிலவற்றையாவது ஜனவரியில் படித்திருப்பர்.

சென்னையில் உள்ள பதிவர்களில் யாராவது புத்தகக் கண்காட்சிப் பற்றி பதிவிடாமல் இருந்தால்..அவர்களை பதிவர்கள் சேர்ந்து விலக்கி வைக்கப் போவதாக ரகசியத் தகவல் கிடைத்ததால்..அவசர அவசரமாக ..கையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கண்காட்சிக்கு விரைந்தேன்.அந்தப் பணத்தில் கணிசமான தொகை பேருந்திற்கும்..ஆட்டோவிற்கும் செலவானது தனிக்கதை.

இம்முறை நான் வாங்கிய சில புத்தகங்கள்..

1) சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி ரூ. 90

2)மரப்பசு -தி ஜா ரா-ஐந்திணை ரூ 100

3)லா.ச.ரா.  கதைகள் (முதல் தொகுதி) - உயிர்மை -ரூ 300

4)பெற்ற மனம் -மு.வ.,   -பாரி நிலையம் -  ரூ 120

5) வட்டத்தின் வெளியே - நீல.பத்மனாபன் - திருவரசு - 70

6) மருக்கொழுந்து மங்கை (சரித்திர நாவல்) சல்லிசான விலையில் கிடைத்தது. 463 பக்கங்கள் விலை 32

தவிர்த்து சில விலை குறைவு புத்தகங்கள் வாங்கினேன்..அதைப் பற்றி பிறகு.

நாஞ்சில் நாடனின் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.அருமை..கண்டிப்பாக படிக்க வேண்டிய, படித்த பின் கருத்துகளை ஒத்த கருத்துள்ளவருடன் பகிர்ந்து கொள்ள வெண்டும்.புத்தகம் பற்றிய விமரிசனம் விரைவில்.

Wednesday, January 11, 2012

என்.டி.டிவி-ஹிந்து டிவி சேனல்..இனி தினத்தந்தி வசம்..??!!

என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி
நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து
வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்தப் புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் செய்திச் சேனலுக்குக் கடும் போட்டியைத் தரலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன்
 Metronation Chennai Television Ltd என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து
 என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும்
 செய்திகள் ஒளிபரப்பட்டன.

ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுருவிப் போக இவர்களால் முடியவில்லை.
மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால்
என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது.

தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும்
 இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன.

இந்த நிலையில் என்.டி.டி.வி-ஹிந்து சேனல் தினத்தந்தி வசம் கைமாறியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மாற்றம் செய்து
களமிறக்க தினத்தந்தி தீவிரமாக உள்ளதாம்.

புதிய செய்திச் சேனலின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஒ) சந்திரசேகரன் என்பவரும், செய்தி ஆசிரியராக ராஜ் டிவியில்
 இருந்த ஜெயசீலன் என்பரும் இணைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாளிதழ்களின் அரசனான தினத்தந்தியின் செய்திச் சேனலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சேனலுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டுக்கு ஒளிபரப்பை தொடங்க
தினத்தந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தலைமுறையின் வருகையினால் சன் டிவியின் செய்திச் சேனலுக்கு தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தினத்தந்தியும் புதிய செய்திச் சேனலை களம் இறக்குவதால் செய்திப் போட்டி மகா கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(தகவல் - தட்ஸ்தமிழ் )

Monday, January 9, 2012

பிரணவ மந்திரம்....(சிறுகதை)"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே? நீ எடுத்தியா?..இல்லையா..? சொல்லுடா...வாயில என்ன கொழுக்கட்டையா?..பதில் சொல்லேண்டா"

கல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.

"பளார்" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.

பாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.

'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.

ஹோட்டல் ராஜன்....உரிமையாளர் சிவராமன்..

நகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.

சிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.

பாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.

நல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.

பாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.

உடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.

வகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.

அப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.

அந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..

ஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.

அப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.

பாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..

ஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.

ஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.

தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.

தவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..

அவனது வறுமை....

இடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..?' என்றான்.

'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா? உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.

அன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.

அம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.

சிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.

விமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.

$$$$$    $$$$$$      $$$$$    %%%%

அன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..

சர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.

அவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.

ஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.

@@@@    @@@@@      @@@@@    @@@@@@

சிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.

இரவு பத்து மணி..

கடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.

அதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க? எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.

பாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு "ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.

அன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.

தீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் "ஓம்" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

Sunday, January 8, 2012

ரசம் வைப்பது எப்படி..- அதன் பயன்கள் என்ன - வைரமுத்துவைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் தொடர் பற்றி நான் ஏற்கனவே என் பக்கங்களில் எழுதியுள்ளேன். மிகவும் அருமையான இலக்கிய நடையுடன் எழுதி வருகிறார். இந்த வாரம் கிராமத்தில் வாழும் சிட்டம்மா..அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எமிலிக்காக ரசம் வைக்கிறார்.அது எப்படி என்பதை..வைரமுத்து எழுதியுள்ளபடி...

'சிட்டம்மா ரசம்வைக்கிறதையே கொட்டக் கொட்டப் பார்த்துக்கிட்டிருக்கா எமிலி.எப்படியாச்சும் அந்த 'சூப்" பு வைக்கிற சூத்திரத்தைக் கண்டுபுடிச்சாகணும் அவளுக்கு..

இடுப்புல கொசுவத்த இழுத்துச் சொருகி ஆரம்பிச்சுட்டா சிட்டம்மா.

குத்துச் சொம்புல தண்ணி ஊத்தி ஒரு புடிச்சபுடி புளி எடுத்துக் கரகரகரன்னு கரைச்சு ஊற வச்சா.அதுல உப்புத் தூளை அள்ளி எறிஞ்சா.அதத் துண்டா எடுத்துத் தூர வச்சுட்டா.மிளகு,சீரகம் ரெண்டையும் அம்மியில் வச்சு நச்சு நச்சுன்னு நசுக்கினா.பள்ளிக்கூடத்துல வாத்தியாரு தன் பிள்ளைய அடிக்கிற மாதிரி, வெள்ளைப் பூண்டைத் தட்டியும் தட்டாம வச்சுக்கிட்டா.மூணையும் ஒண்ணு சேத்தா. வட சட்டியில கடலெண்ணெய ஊத்தி எளஞ்சூட்டுல சுட வச்சா.கடுகு, உளுத்தம் பருப்பு ரெண்டையும் எடுத்து எறிஞ்சா கொதிக்கிற எண்ணெய் மேல.அதுக சட்புட்டுன்னு வெடிச்சு சட்டிக்குள்ள தீபாவளி கொண்டாடுதுக.இப்ப...கிள்ளி வச்ச பட்ட மொளகாயும் கருவேப்பிலையும் போட்டுச் செல்லமா வதக்குனா.நான் கறுப்பாய் போகப் போறேன்னு கருவேப்பிலை சொன்னதும் நிறுத்திட்டா.நசுக்கி வச்ச மிளகு,சீரகம், பூண்டு மூணையும் இப்ப உள்ள போட்டா.

இப்ப..கரைச்சு வச்ச புளித்தண்ணிய எடுத்தா சிட்டம்மா.அதுல பொதுக்குன்னு கைய விட்டுக் கொதுக்குகள ஒதுக்கிப் புழிஞ்சு எறிஞ்சா.

அடுப்புச் சட்டியில ஊத்துனா புளித் தண்ணிய.மாமியா மாதிரி தகதகன்னு எரிஞ்சுக்கிட்டிருந்த நெருப்ப புதுப் பொண்ணு மாதிரி அடக்கி வாசிக்க வச்சா.

ஒரே சீரா எரிச்சா..

அது பொதுபொதுன்னு சூடாகி பொத்துனாப்புல நுரை கட்டவும் ஒரு மல்லித் தழைய உள்ள போட்டுக் கொதிக்கு முன்ன எறக்கிட்டா.

ஆவி பறக்காம மூடி போட்டு ஒரு ஓரமா வச்சுட்டா.

செய்முறை இருக்கட்டும்.ரசம் என்ற பானத்துக்குள் இத்தனை உள்ளீடுகளா? திக்கு குக்காடிப் போனா எமிலி.மடிக்கணினி எடுத்து ஒண்ணொண்ணா ஆராய்ச்சி பண்றா.

மிளகு  -   சுவை அரும்புகள் தூண்டுவது.புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம்  - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது.மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.

பூண்டு  - கிருமிகளின் முதல் எதிரி.கொழுப்புகளை உடைப்பது.பக்கவாதம் தடுப்பது.ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம்,கால்சியம், பொட்டாசியம் கொண்டது

கடுகு  -  எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது.நல்ல கொழுப்பு உடையது

புளி   -  வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது

மிளகாய்  - வைட்டமின் ஏ,சி இரண்டும் கொண்டது.ரத்த ஓட்டம் அதிகரிப்பது.ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது

கறிவேப்பிலை  - தோல் தொற்று தடுப்பது.சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது.தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது

மல்லித் தழை  - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது

கணினிய மூடிட்டுக் கண்னையும் மூடிக் கிட்டா எமிலி.

ஓர் உணவின் துணைப் பொருட்களில் இத்தனை மருத்துவக் குணங்களா?

இந்தியாவே உனக்கு வணக்கம்.

சிட்டம்மாவுக்கும் அவ சமயல்கட்டுக்கும் நல்லா வளஞ்சு நம்ம ஊரு கும்புடு ஒண்ணு போட்டா.

டிஸ்கி- வைரமுத்துவின் இலக்கிய நடைக்கு கும்புடு ஒண்ணு போடுவோம்.

Saturday, January 7, 2012

நக்கீரன் செய்தது சரியா...அதிமுக வினர் செய்தது சரியா..
பட்டிமன்றத் தலைப்பு..

இதன் நடுவராக யாரைப்போட்டாலும் சொல்லப்படப்போகும் தீர்ப்பு..

இவர்கள் செய்ததும் சரியில்லை..அவர்கள் செய்ததும் சரியில்லை என்பதாகத்தான் இருக்கும்..

ஏனெனில்..எந்த ஒரு காரியத்திற்கும், செயலுக்கும்..இரு பக்கங்கள் உண்டு.ஆதரிப்பார் பக்கமும் உண்டு...எதிர்ப்பார் பக்கமும் உண்டு...

நக்கீரன் போன்று அதிமுக வை எதிர்க்கும் பத்திரிகையில்..இப்படிப்பட்ட கட்டுரையும்..முகப்பும் வெளிவராவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..

தினகரன் அலுவலகம் எரிப்பு விவகாரம் ஏன் ஏற்பட்டது...

மக்கள் குரல் பாமக , மார்க்ஸிஸ்ட் தாக்குதல் ஏன்?

எல்லாமே...தொண்டர்களை உசிப்பி விட்டு..விளம்பரம் தேடும் சில இரண்டாம் கட்ட தலைவர்களால் வருவதுதான்.

'இன்வஸ்டிகேடிவ்' ஜர்னல் நடத்த ஆசைப்படும் தமிழ் ஊடகங்கள்..உண்மையில் அப்படிச் செயல் படுவதில்லை....அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு..மோட்டுவளையையைப் பார்த்தபடியே..எந்த செய்தியைப் போட்டால்..மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள்...எந்த செய்தியைப் போட்டால்..தான் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை மகிழும் என்றும்..எதைப் போட்டால் சர்குலேஷன் அதிகரிக்கும் என்றே செயல்படுகின்றனே..தவிர...சொல்லும் செய்திகளில் பத்து விழுக்காடு கூட உண்மை இருப்பதில்லை.

கட்சிகளும் அவ்வாறே இருப்பதுதான் நம் வேதனை...

ஆனால்..சமீபத்திய சில நிகழ்வுகளில் கலைஞரின் அறிக்கை...வரவேற்கத்தக்கதாகவே உள்ளது..

சமீபத்தில் புயல் அழிவுகளை பார்வையிடச் சென்ற கலைஞர்..'நான் மாநில அரசைக் குறை சொல்லவில்லை..இத்தருணத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம்..என்றும்..புயல் சேதத்தை மாநில அரசு சொல்லித்தான் மைய அரசு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை' எனும் பொருள்பட பேசியுள்ளது வரவேற்கத்தக்கது.

அதே போல நக்கீரன் விஷயத்திலும்..'முதல்வர் பற்றி அவதூறு செய்தி வந்தால்..நீதிமன்றத்தை நாடலாம்' என்றும் கூறியுள்ளார்..அதிகமாய் அதிமுகவை வழக்காய் சாடுவது போல சாடவில்லை..

நில அபகரிப்பு புகார் வந்தால்,,அதில் உள்ள புகாரை பரீசலித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்...என்றும் கூறியுள்ளார்.

எழ்வு வீட்டில்..சுருட்டும் வரை சுருட்டிக் கொண்டு போகலாம்..என்னும் உறவு போல செயல்படாமல்....கலைஞரின் பொறுப்பான அறிக்கைகள் மனத்தை மகிழ்விக்கின்றன.

ஆளும் கட்சியும்..திமுகவின் சமிபத்திய நிலைப்பாடை உணர்ந்து இணக்கமாய் செயல்பட்டால்...

தமிழன் மகிழ்வான்...ஒன்று பட்டால் எதையும் சாதிக்கலாம்...

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், போராட்டம், அரசுக்கு சவால் என பெரிய அளவில் பேசி வரும் ஹஸாரே குழுவின
 முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள
சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர்
(அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும்
 காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை
உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில்
உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு
முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே. இவ்வளவு பெரிய இடம் மற்றும் பங்களாவை வெறும்
 ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே பதிவு செய்துள்ளார் அவர்!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து
 சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம்
 இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம்
 செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு
 விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

ஆனால் வழக்கம் போல இதை அரசின் பழிவாங்கல் என்றும் சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்
 சாந்தி பூஷண். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வருவாய்த் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாந்தி பூஷண் மீது ஊழல் குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை அல்ல!

(நன்றி- தட்ஸ்தமிழ்)

Friday, January 6, 2012

புத்தகக் கண்காட்சி
  புத்தகக் கண்காட்சி

  ஆரம்பமாம்

  நினைவிற்கு வந்துவிட்டது

  சென்றமுறை வாங்கியவற்றை

  படிக்க வேண்டுமென2) குட்டிக்  குட்டி

  கவிதை வராதாம்

  குடத்திலிட்ட விளக்காய்

  நீ


3) துயிலுகையில்

  கனவில் உன் உளறல்

  கவிதையாய் எனக்கு4) முட்டையின்

  மஞ்சள் கரு கண்டதும்

  உன் நினைவு

 கரு(க்) கிடத்தால்

 கவிதை பிறக்கிறதே

 உடன் உன்னிடம்

Thursday, January 5, 2012

தலைவர் போகாத சிறை...
நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா?
உங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே

அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்
அப்படியா..அந்த புத்தகம் பெயர்..
நான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்

தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை
தொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா?

உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா?
அஞ்சாறு ஏக்கரிலே போட்டிருக்கேன்..

அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..
 பிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே!

அந்த எலிமெண்டரி ஸ்கூல் வாசல்லே ஏன் போலீஸ் கூட்டம்..
இரண்டாவது படிக்கிற பையன் செல்ஃபோன்ல சில்மிஷம் பண்ணிட்டானாம்

(டிஸ்கி_-  கடைசியில் சொல்லியுள்ளது சற்று வேதனையாய் இருந்தாலும்..நாட்டில் நாளைக்கு இப்படியும் நடக்குமோ என்று சற்று அச்சத்தையே ஏற்படுத்துகிறது)

Wednesday, January 4, 2012

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?
தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அரசு மருத்துவர்கள் 15000 க்கு மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் 8 லட்சத்திற்கு மேல் நோயாளிகள் பாதிப்பு அடைந்தனர்.1500 அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.

தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமி என்பவர் ஈஎஸ்ஐ தலைமை மருத்துவர்.இவர் தனியாகவும் கிளீனிக் நடத்தி வந்தார்.கடந்த திங்கள் அன்று இரவு கிளீனிக்கில் இருந்தவரை மகேஷ் என்னும் வாலிபர் வெட்டி கொலை செய்தார்.இவரது கிளினிக்கில் நித்யா என்பவர் கர்ப்பமாய் இருந்ததால் இவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் நித்யா வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை  பலனின்றி இறந்தார்.நித்யா இறந்ததற்கு மருத்துவர் சேதுலட்சுமிதான் காரணம் என மகேஷ் அவரை வெட்டிக் கொன்றார்.

மருத்துவர் சேதுலட்சுமியைக் கொலை செய்ததற்குக் கண்டித்தும், அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனை,மாவட்ட மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை, மற்றும் ஈஎஸ்ஐ மருத்துவர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்...முக்கியமாக கடைசி தட்டு நோயாளிகள் எவ்வளவு அவதிப் பட்டிருப்பார்கள்?

இன்று தனியார் மருத்துவமனைகளில் வேலை நிறுத்தம் தொடர்கிறது.இப்போராட்டம் தொடர்ந்தால்..வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதைக் குறித்து யோசிக்கலாம் என்றுள்ளார் உயர்ந்தி மன்ற தலைமை நீதிபதி..

எல்லாத் துறையையும் விட மருத்துவத் துறை புனிதமான ஒன்று..

ஒரு வக்கீலிடம் கூட கட்சிக்காரர் நம்பிக்கைதான் வைப்பார்..

ஆனால்..மருத்துவர்களிடம் நோயாளிகள் ..பல நேரங்களில் இறை பக்தியே வைப்பர்..

கடும் நோயிலிருந்து விடுபட்ட நோயாளியும்..அவர் குடும்பமும் மருத்துவரை..'டாக்டர்..எங்க கடவுள் நீங்க' என்று தங்கள் நன்றியைத் தெரிவிப்பர்.

அப்படிப்பட்ட தொழிலைச் செய்பவர்கள்..நோயாளிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்யலாமா..இயற்கை வேலை நிறுத்தம் செய்து..பூமி சுழலாமல் இருந்தால் என்னவாகும்...

மருத்துவ பட்டம் வாங்கும் போது இவர்கள் எடுக்கும் உறுதிமொழி என்ன?

ஆகவே எந்த நிலையிலும்..மருத்துவர்களின் இந்த போராட்டம் கண்டிக்கத்தக்கதே..

அதற்காக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்த வில்லை..மருத்துவர்களுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன.

(டிஸ்கி -ஆட்டோ டிரைவரால் வெட்டிக் கொல்லப்பட்ட பெண் டாக்டர் சேதுலட்சுமி வெறும் மயக்க மருந்து நிபுணர் தான். ஆனால் அவர் ஒரு கர்ப்பிணிக்கு ஆபரேஷன் செய்துள்ளார். இது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.)

Monday, January 2, 2012

முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு:
முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர் குழு
தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில்
 ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள்
 மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு புகார் கூறியதைத்
 தொடர்ந்து சமீபத்தில் தத்தே, தத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த ஐவர் குழு அணைக்கு நேரடியாக
 அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது தங்களது இஷ்டத்திற்கு நடக்குமாறு குழுவினரை கேரளத் தரப்பு வலியுறுத்தியது.
ஆனால் அதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர்.
 அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும்,
முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம்
மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட
வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தமிழகமும் இதைத்தான் கூறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அரசும் கூட, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மிக மிக குறைந்தஅளவிலான
நிலநடுக்கமே ஏற்பட்டதாகவும், அவை கூட பதிவாகவில்லை என்றும் விளக்கியிருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் கேரள அரசுதான் பிடிவாதமாக நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே
திரும்பத் திரும்பச்சொல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி-தட்ஸ்தமிழ்)


Sunday, January 1, 2012

நட்பெனும் மலர்..
அன்பு நண்பா

உன்னைத்தான்

புரிந்துக்கொள்ள இயலவில்லை

நீ எப்படியோ போய்க்கொள்

உன் நட்பெனும்

நிழலில் இளைப்பாறிக்

கொள்கிறேன்..

முட்களை மறந்து

மலரை எண்ணி......