Tuesday, June 30, 2009

சாரு..பைத்தியக்காரன்...நர்சிம் ..லக்கி ..நடப்பது என்ன- முழுவிவரங்கள்

கடந்த நாளைந்து நாட்களாக சாரு பற்றி ஹிட்லர் ரிட்டர்ன்ஸ் பதிவும்..தொடர்ந்து இதை சம்பந்தப் படுத்தி நர்சிம் பதிவும்..சாரு புகழ் பாடி லக்கி பதிவும் என வலைப்பக்கம் அமர்க்களப்படுகிறது.திடீரென ஏன் இப்படி ..என விவரம் புரியாதோர் மூளையை குழப்பிக் கொள்கின்றனர்.அவர்களுக்கான பதிவு இது.

தெரியாத..புரியாத..விஷயங்களில் தலையிடக் கூடாது என முன்னோர்கள் கூ றியுள்ளனர்.

எனக்கும்..இது பற்றிய விவரங்கள் தெரியாததால்..இது பற்றி என்ன எழுத முடியும்..ஆகவே வாளா இருக்கிறேன்..

நீங்களும் என்னைப் போல இருந்துவிட்டுப் போங்கள்.

பின் எதற்கு இந்த இடுகை என்கிறீர்களா..

குடிசை பற்றி எரியும்போது..தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் ஈடுபடுவார்கள்..ஆனால்...இதில்..தீ இட்டதும் அவர்கள் அணைக்கும் பணியும் அவர்களுடையது.

ஆனால்..எவ்வளவு பேர்..வேடிக்கைப் பார்ப்பார்கள்..

அப்பணி...

ஹி...ஹி..ஹி..

சிவாஜி ஒரு சகாப்தம் - 16

1970ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்

எங்க மாமா
தர்த்தி (சிவந்தமண்-ஹிந்தி பதிப்பு)
விளையாட்டுப் பிள்ளை
வியட்நாம் வீடு
எதிரொலி
ராமன் எத்தனை ராமனடி
எங்கிருந்தோ வந்தாள்
சொர்க்கம்
பாதுகாப்பு

இவற்றுள் வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி,எங்கிருந்தோ வந்தாள்,சொர்க்கம் ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஒடியவை.

கருப்பு..வெள்ளை படம் ஒன்று 107 அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து நடைபெற்றது வியட்நாம் வீடு படத்திற்குத் தான்.இதுவும் ஒரு சாதனை ஆகும்.மலேஷியாவில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் இது.சிவாஜி நாடக மன்றத்தினரால்..சிவாஜி,ஜி.சகுந்தலா நடிக்க நாடகமாக நடிக்கப் பெற்றது இது.சாதாரண சுந்தரம்..இப்படத்திற்கு கதை, வசனம் எழுத..வியட்நாம் வீடு சுந்தரமானார்.படத்தில்..ஜி.சகுந்தலா ஏற்ற வேடத்தை பத்மினி ஏற்றார்.

இவ்வருட தீபாவளீக்கு வந்தவை..எங்கிருந்தோ வந்தாள் (பாலாஜி..தயாரிப்பாளர்) மற்றும் சொர்க்கம் (டி.ஆர்.ராமண்ணா).இரண்டு படங்களும் வெற்றி.அத்துடன் இல்லாது..வெற்றி விழாவை..இரு தயாரிப்பாளர்களும் சேர்ந்து ஒரே மேடையில் நடத்தினர்.இதுவும் சாதனை.

ராமன் எத்தனை ராமன்..பி.மாதவன் இயக்கத்தில் வந்த படம்..சிவாஜி இதில் ஒரு நடிகனாக வருவார்.

தர்த்தி..சிவந்தமண் ஹிந்தி பதிப்பு.தமிழில் முத்துராமன் ஏற்ற வேடத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்.

கே.பாலசந்தரும் ,சிவாஜியும் முதலும்..கடைசியுமாய் இணைந்த படம் எதிரொலி...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

அடுத்த பதிவில் 1971 படங்களைப் பார்க்கலாம்.

Monday, June 29, 2009

அவள்..அவன்..அது.. (உயிரோடை..சிறுகதை போட்டி)

அவனது ஆறாம் ஆண்டு திருமணநாள்.

அவன் மனதிற்குள் அழுதுக்கொண்டிருந்தான்..ஒரு லாட்ஜின் அறையில்
படுக்கையில் புரண்டவாறு.

அவன் மனைவி அழகி..இல்லை..இல்லை..பேரழகி.இவன் அவளைப்போல
இல்லாவிடினும்...பார்க்கவாவது சுமாராய் இருப்பானா எனில் அதுவும் இல்லை.

அவள் பளீரென..அடுத்து..அடுத்து பந்துகளில் சிக்சர் அடிக்கும் ரின் தரும்
வெண்மை..இவனோ...

கருப்பு கூட அழகுதான்..கரியில் இருந்துதான்..வைரம்
பிறக்கிறது.ஆனால்..இவன் சோடா பாட்டில் கண்ணாடியோடு..முன் பற்கள்
இரண்டும் வெளியே துருத்திக் கொண்டு..கல்யாணராமன் கமலை ஞாபகப் படுத்திக்
கொண்டிருப்பான்..என்ன..கமல் இவனைவிட சிகப்பு.

தன் தாழ்வுமனப்பான்மையை மறைக்க..முதல் இரவன்று..எவ்வளவு தரக்குறைவாக
அவளிடம் நடந்துக் கொண்டான்.'இவ்வளவு அழகாய் இருக்கியே..இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியா? என்றான்..'யாருடனாவது படுக்கையை
பகிர்ந்துக் கொண்டிருக்கியா?' என்றான்.

அவளோ..இவனை அறிந்து..இவன் அவமதிப்புகளை பொறுத்தாள்...'இந்த உடல்
அழகுதானே...அழகுதானே..என பிரகாஷ்ராஜ் பாணியில் பேசியபடியே..மறைவிடங்களில்
சிகரெட்டால் சுட்டிருக்கிறான்.

அழகிய மனைவி ஒருவனுக்கு சத்ரு..என நண்பர்கள் வேறு அவ்வப்போது தூபம்
போட்டனர்.அவர்கள் பேச்சைக் கேட்டு....ம்ஹூம்..அவளை அப்படி சித்திரவதை
செய்திருக்கக் கூடாது.

தூக்கம் வராமல்..திரும்பி படுத்தான்..

மணி 10-30

அவள் ஞாபகமாக அன்று ஒரு பெண்ணை அனுபவித்து விட வேண்டும்..என அந்த
லாட்ஜில் அறை எடுத்தான்.ஒரு மாமாப்பையனை பிடித்தான்.அவன் 11 1/2
க்கு..ஒரு பெண்ணுடன் வருவதாகக் கூறினான்.அதற்கு முன் பழைய நிகழ்ச்சிகள்
அவன் முன் கோர நடனமாடின...

*** **** **** **** ***

அன்றும் அப்படித்தான்..அவன் முதலாம் ஆண்டு..திருமண நாள்..

அவள் அன்று தேவை..என்று..ஒப்புக்காக மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு..சற்று
முன்னதாக அலுவலகம் விட்டு கிளம்பி வந்தான்..

அவன் வீட்டு தெருமுனை வந்த போது...அவன் வீட்டிலிருந்து ஒருவன்
வெளியேறுவதைக் கண்டான்.

சந்தேகம்..தலை விரித்து ஆட..அவளிடம்.."யாரேனும் தேடி வந்தார்களா?' என்றான்.

அவள் ஏதும் பேசாது அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அவன் நாசி...சிகரெட் புகை வாசனையை உணர்த்தியது.

குப்பைக் கூடையில்..ஒரு சிகரெட் துண்டு..பாதி அணைந்தவாறு..'மேட் ஃபார்
ஈச் அதர்' சிகரெட் அது.வந்தவனும்..அவளும் தானோ அது?

பின்..பலமுறை..இப்படி நடப்பதை அறிந்தான்.

வம்புக்கென்றே அலையும்..பக்கத்து வீட்டுக்கார பெண்மணி
ஒருத்தி..'தம்பி..நீ வேலைக்குப் போனதும்..காலைல வர்ற ஆளு...மாலைல தான்
போறான்' என்று சொன்னாள்.

கோபத்தோடு..சில கெட்ட வார்த்தைகளுடன் அவளை விசாரித்தான்...அவளும்..இவன்
சித்தரவதையை எவ்வளவு நாள் பொறுப்பாள்...'ஆமாம் நான் அப்படித்தான்
இருப்பேன்' என்று சொன்னாள்.

பிறகுதான் அந்த முடிவுக்கு வந்தான்..

**** ***** ***** ***** *****

சார்...சார்...அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.

எழுந்து வந்து கதவைத் திறந்தான்..

அவனுடன் ..அவள் ..நின்றிருந்தாள்..பார்க்க அவன் மனைவி போலவே
இருந்தாள்..'இவளில் அவளைக் கண்டேன்' மனம் குதூகலித்தது.

'என் தங்கைதான்..' என அசடு வழிந்தான்..உடன் வந்தவன்.. சிகரெட் புகை வாசனை
அவனிடம்...மேட் ஃபார் ஈச் அதர் வாசனை.'காலைல வரேன்..' என அவளை
விட்டுவிட்டு நகர்ந்தான்.

உள்ளே..இயந்திர கதியில் வந்தவள்...ஆடைகளை அகற்ற
ஆரம்பித்தாள்..ஏற்கனவே..அரங்கேற்றம்..ஆகி இருந்தும்..அன்றுதான்
அரங்கேற்றம் என்றாள்..அரங்கேறியது.

கைகளை அவள் மீது..போட்டபடியே உறங்கிவிட்டான்.

திடீரென...விழித்தான்..

ஒரே நாற்றம்...பிணவாடை அல்லவா..அடிக்கிறது..குமட்டல் எடுத்தது..உடல்
கருகும் நாற்றம்..

படுத்தவாறே...பக்கவாட்டில் இருந்த ஸ்விட்சைப் போட...அறையில் வெளிச்சம்
பரவியது.பக்கத்தில்...அவள் ..அமைதியாக..சிட்டுக்குருவி போல..சின்ன வாயை
சற்றே திறந்தவாறு..தூங்கிக் கொண்டிருந்தாள்.

நாற்றம் குடலை பிடுங்க..ஏதேனும் செத்துக் கிடக்கிறதா...என..கட்டிலின்
அடியில் பார்த்தான்..ஒன்றுமில்லை..

திரும்பி வந்து படுத்தான்..இப்போது..ஊதுவத்தி வாசனை..ஆனால்..பிணத்தருகே
ஏற்றப்படும்..மட்ட ஊதுவத்தி வாசனை.

சன்னல் வழியே..நிலவைப் பார்க்கமுடிந்தது...பால் நிலா...ஒளி வீசிக்
கொண்டிருந்தது. தூரத்தில்..எங்கோ நாய்கள் குரைக்கும் ஓசை..

திடீரென..அவன் முகத்தில் ஏதோ விழுந்தது..தலையணை..

அவள் அவன் முகத்தில்..தலையணை வைத்து அழுத்தினாள்...எவ்வளவு வலிமை அவளுக்கு...

'ஏய்...ஏய்..என்ன செய்கிறாய்?'

'நீ அன்னிக்கு..என்ன செஞ்சியோ..அதைத்தான் செய்யறேன்.

கைகால்களை உதறுகிறான்..கொஞ்சம்..கொஞ்சமாக..நினைவிழக்க
ஆரம்பிக்கிறது..கால்கள் விரைக்க..நாடித்துடிப்பும் அடங்குகிறது.

இதற்கும் நிலவுதான் சாட்சி.

**** ***** **** **** ****

மணி 11-30

'சார்..சார்..' என்று ரகசியகுரலில் கூப்பிட்டபடி..கதவைத்
தட்டினான்..மாமாப்பையன்..ஒரு பெண்ணுடன்.

வேலைக்குப்போன அதிபுத்திசாலி அண்ணாசாமி (நகைச்சுவை)

அதிபுத்திசாலி அண்ணாசாமி நீண்டநாட்கள் வேலைகிடைக்காது இருந்தார்.அவர் அதிர்ஷ்டம்..சென்ஸஸ் எடுக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

அவரிடம் ஒரு கொஸினர் கொடுத்து...அதில் உள்ள கேள்விகளைக் கேட்டு..மக்கள் தொகை கணக்கிடும் வேலை தரப்பட்டது.

முதல் வீட்டிற்கு சென்றார்..முதல் வீட்டில் இருந்த பெண்மணியிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

கேள்வி- உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

பதில்- இல்லை

அடுத்து இருந்த கேள்வியைக் கேட்டார்

கேள்வி-எத்தனை குழந்தைகள்

அந்த பெண்மணி பளார் என கன்னத்தில் அறைய..அடுத்த வீட்டிற்கு வந்தார்..இம்முறை கேள்வியை மாற்றிக் கேட்க முடிவெடுத்தார்..இரண்டாம் கேள்வியை முதல் கேள்வியாகக் கேட்டார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கா

அந்த வீட்டு பெண்மணி சொன்னார்...இருக்கு...இரண்டு குழந்தைகள்.

அண்ணாசாமி அடுத்தக் கேள்வியைக் கேட்டார்..

கல்யாணம் ஆயிடுச்சா?

இங்கேயும் 'பளார்" அடி

சரி..இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி..இரண்டு கேள்வியையும் ஒன்றாக கேட்பதாக எண்ணி..

அடுத்ததாக வந்த வீட்டு பெண்ணிடம் கேட்டார்...உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டு குழந்தை பிறந்ததா? குழந்தை பிறந்ததும் கல்யாணம் ஆச்சா?

இம்முறை இரண்டு கன்னத்திலும் 'பளார்'

ம்..ஹூம்..இந்த வேலை சரிவராது என..வேலையை ராஜிநாமா செய்தார்.

Friday, June 26, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (26-6-09)

1.பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையில்..கடந்த இரண்டு ஆண்டுகளில்..அந்த நாட்டைச் சேர்ந்த 143 நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கிப் போட்டுள்ளனவாம்.இதனால் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோவது தடுக்கப் பட்டுள்ளதாம்.இந்திய தொழில்துறை கூட்டமைப்பு.எப்.ஐ.சி.சி.ஐ.,மற்றும் எர்னஸ் அண்ட் யங்க் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2.விஜய் கட்சி ஆரம்பிப்பது இருக்கட்டும்.அவரது தந்தை இயக்கும் ஒரு படத்துக்கு புது முகங்கள் தேவை என விளம்பரம் கொடுத்து..நேர்முகத் தேர்வு திண்டுக்கல் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடந்ததாம்.அதில் கலந்துக் கொண்டோர்...இஞ்சினீயர்கள்,கம்ப்யூட்டர் பர்சனல்ஸ்,எம்.பில்.படித்தவர்கள் ஆகியோர்.

3.போகிறப் போக்கில் சுப்ரமணிய சாமியை தோற்கடித்து விடுவார் போலிருக்கிறது..காமெடி வேலைகளில் தங்கபாலு. ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருக்கிறது..இனியும் தனித்து ஆட்சி செய்யும் தகுதியும் அதற்கு உண்டு..என்று பேச ஆரம்பித்துள்ளார்.

4.இரண்டு கோடி ரூபாய் வரதட்சணை பணம் தந்தும் போதாமல் வரதட்சணையாக பல கோடி ரூபாய் பங்களாவை எழுதித் தரும்படி கேட்ட கோடீஸ்வர தந்தை,மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் மாவட்ட நீதிபதிகள்.ஹைதராபாத்தைச் சார்ந்த நரசிம்ம ராவ்..மெஹபூப் நகரில் மாவட்ட கூடுதல் நீதிபதி.இவர் மகன் கிரண்குமார் அனந்தப்பூர் மாவட்ட சிவில் நீதிபதி.இவருக்கு 2005ல் திருமணம்னடந்தது.இரண்டு கோடி வரதட்சணை வாங்கியும்...மேலும் கேட்டு மகன்..தந்தை..தாய் ஆகியோர் மருமகள் சசிகலாவைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.பின் போலீஸில் சசிகலா புகார்தர..அவர்கள் நீதிபதிகள் என்பதால்..புகாரை வாங்க மறுத்துள்ளனர்.பின்னர் ஹைகோர்ட் பதிவாளர் அனுமதி பெற்று..புகாரை எடுத்தனர்.தந்தை,தாய்,மகன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

5. ஒரு ஜோக்
அவன் பகுத்தறிவாதின்னு எப்படி சொல்ற
பிரமோஷன் கிடைச்ச உடன் குலதெய்வ கோவிலுக்கு ரகசியமா போயிட்டு வந்தானே

Thursday, June 25, 2009

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

தினமும் ஒரு பதிவு போடவே நாக்கு நமக்கெல்லாம் வெளியே தள்ளிடுது.இதுல மத்தவங்க பதிவை எல்லாம் படிச்சு பின்னூட்டம் இட ஏது நேரம்..

நாம பிறர் பதிவை படிச்சாத்தானே..நம்ம பதிவையும் சிலர் படிப்பாங்க..

ஆனால் ..சில பிரபல பதிவர்கள் பதிவையும் போட்டு...மற்ற பதிவுங்களுக்கு பின்னூட்டமும் போடறாங்களே...அதன் ரகசியம் என்ன ..

நாம அமைச்ச கமிட்டி...இதை விசாரித்து..இன்னிக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கு..அதன் விவரம்..

கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே

இப்படி அவங்க கம்ப்யூட்டர்ல தயாரா ஒன் லைன்ல நிறைய போட்டு வைச்சிருக்காங்க..ஒருவர் பதிவு போட்டதுமே...உடனே போட்டு வைத்துள்ள..நிரந்திர பின்னூட்டத்தை பதிவை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி போட்டுடுவாங்க..

நாமும்...அடடா..எவ்வளவு நேரம் செலவழிச்சு..எவ்வளவு பெரிய பதிவர்..நம்ம பதிவை படிச்சு பாராட்டி பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு மகிழ்ச்சி அடைவதுடன்..அவங்க பதிவை எல்லாம் மாங்கு..மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் இடுவோம்.

ஆனால்..அவங்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்னா...பக்கம் பக்கமா..பாராட்டி, ஆலோசனை சொல்லி பின்னூட்டம் இடுவாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பதிவர்ங்க பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.

அது சரி..புது பதிவர்கள் பதிவுக்கும்..இவங்க பின்னுட்டம் வருதேன்னா...அவங்க பதிவுக்கு வர பின்னூட்டத்தைப் பாருங்க..பெரும்பாலும்..ரொம்ப சிரமம் எடுத்துக் கிட்டு :-)))ன்னு போட்டுடுவாங்க.

இப்ப..நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா..

படிச்சுட்டு..நீங்க ஓட்டைப் போடலேன்னாலும்..:-)) ன்னாவது ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க.

Wednesday, June 24, 2009

அந்த கிரகமும்..அதன் மக்களும்.. (சிறுகதை)

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..

'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.

(மீள்பதிவு)

Tuesday, June 23, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.முன்னால ஈ ஓட்டிக்கிட்டு இருந்த உன் வியாபாரம் இப்ப எப்படி இருக்கு
ஈ மெயில் ஓட்டிக்கிட்டு இருக்கு இப்ப..

2.எங்க ஆஃப்ஸ்ல யார் தப்பு பண்ணினாலும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க
அப்போ..நீங்க இப்ப வேலை இல்லாமலா இருக்கீங்க

3.டாகடர் அந்த நோயாளிக்கு வயிற்றுப்போக்கு
நல்லவேளை..இன்னிக்கு வயிற்றுப்பிழைப்புக்கு என்ன செய்யறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

4.அந்த டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்..ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த ரிபோர்ட் இருக்கு..அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்.

5.என் மாமியாரை நாய் கடிச்சுடுத்து
இப்ப..நாய் எப்படி இருக்கு

6.உன் பையன் ஒரு ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொன்னியே..அப்பறம் என்ன ஆச்சு
டாக்டருக்கு 500 ரூபா கொடுத்து..ஒரு ரூபாயை மீட்டேன்.

முத்துகுமாரும்...வைகோ வும்

வைகோ சொன்னது ஜெயலலிதாவையா? என்ற என் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்களுக்கு சங்கொலி அளித்த பதில் பின்னூட்டம்.பின்னூட்டம் என்பதால் பலர் படிக்க வாய்ப்பில்லை.அதனால் தனி பதிவாக்கியுள்ளேன்.

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :

"சேராத இடம் சேர்ந்ததால் "

மதிமுக ஆரம்பித்து முதல் இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்துவிட்டோம் . எங்களை விரும்பியவர்கள் மற்றும் நாங்கள் தனியாக இருக்க விரும்பியவர்கள் , எங்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வில்லையே !

அதே போல் நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்களது தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை .

சிறுத்தை அவர்களுக்கு :

முத்துக்குமார் விஷயத்தை நான் தெளிவு படுத்தாமல் இருந்தேன் . இப்போது கொஞ்சம் விலாவாரியாக எழுதுகிறேன்.

முத்துக்குமார் இறந்த அன்று :-

சாஸ்திரி பவனில் அவர் தன்னை எரித்துக்கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

பத்திரிக்கையாளர் உட்பட எவரையும் ஏன் அவரது உறவினரையும் கூட போலீஸ் முதுகுமரை பார்க்க அனுமதிக்கவில்லை.

தீக்குளித்தார் என்று தெரியும் யார் அவர் என்று தெரியாது .

பத்திரிகையாளர் என்று தெரியும் எந்த பத்திரிக்கை என்ற விவரம் எல்லாம் அப்பொழுது தெரியாது .
போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை .

பத்திரிக்கையாளர்களுக்கு அவர் எரிந்த பொழுது எடுத்த தீ யாய் எரியும் உடலை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் செல் போனிலிருந்து கொடுத்து கொண்டிருந்தனர்.

பல பேர் பல ஆதங்கத்தில் பெசிகொண்டிருந்தனர் . பெரியார் திக தோழர்கள் இருந்தனர்.

வைகோ முதலில் வந்தாரா அல்லது வெள்ளையன் முதலில் வந்தாரா என்று சரியாக தெரியவில்லை .

ஆனால் வைகோ போலீஸ் இடம் வாதாடினார் .

கட்டாயம் அவரை பார்க்கவேண்டும் என்றார்.

போலீஸ் அனுமதி இல்லை என்றது.

உங்களின் அனுமதியோடு உள்ளே செல்ல விரும்பிகிறேன் .

உங்களின் தடையை மீறி உள்ளே செல்ல வைத்துவிடாதீர்கள் என்றார்.

பின் ஒருவாறு உங்களோடு இரண்டு பேர் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று போலீஸ் அனுமதி கொடுத்தது.

வைகோ உடன் இரண்டு பேர் உள்ளே சென்றார்கள் .

வைகோ உள்ளே சென்றிருந்த நேரத்தில் நெடுமாறனும் திருமாவும் வந்துவிட்டார்கள் .

வைகோ வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் . "முத்துக்குமார் " என்று அவரின் பெயரை சொன்னார் சொந்த ஊர் விவரத்தை சொன்னார் . முக்கியமாக முத்துகுமாரின் கடிதத்தை பத்திரிக்கையாளருக்கு கொடுத்தார் . (அப்பொழுது பதினாறு நகல்கள் எடுத்து கொடுக்கப்பட்டது, சாஸ்திரி பவனிலேயே அவர் கடிதங்களை விநியோகிதிருந்தார் அனால் அவை எதுவும் பத்திரிக்கையாளரின் கைகளுக்கு வரவில்லை பெரிது படுத்தப்படவில்லை ).

இப்பொழுது டாக்டர் ராமதாஸ் வந்து விட்டார் . உடன் அவரது புதல்வி யும் வந்தார்கள் .

நெடுமாறன் வைகோ ராமதாஸ் திருமா,காசி அனந்தன் மற்றும் வெள்ளையன் அதன் பின் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் , அவரது உடலை பாரவைக்கு வைத்தது பின் நடந்தது எல்லாமும் .
முத்துக்குமார் விடயத்தை பெரிதாக்காமல் அமுக்கிவிட எவ்வளவோ பேர் முயற்சித்தார்கள் . அது மேற்கண்ட அரசியல் நடவடிக்கையினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது உண்மை .
மாணவர்கள் பல பேர் அதீத கோபத்தில் பல வார்த்தைகளை பேசினார்கள் . தலைவர்களை ஏசினார்கள் . ஆனால் மேற்கண்ட வைகோவின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் முத்துகுமாரின் கதையையே வேறு மாதிரி திரிதிருப்பார்கள் .

அரசியல்வாதிகள் அப்பொழுது இல்லை என்றால் முத்துகுமாரின் கதை வேறு மாதிரி எழுதப்படிருக்கலாம் .

ஏனென்றால் முத்துகுமாரின் உடல் இருக்கும் பக்கம் கூட யாருக்கும் அனுமதி இல்லை அப்பொழுது.

நான் மேற்சொன்ன அதனையும் சத்திய உண்மை . என்னோடு இருந்த ஈழ போராட்ட தோழர்கள் பலருக்கும் இது நன்றாய் தெரியும் .
இப்பொழுது அரசியல் லாபத்திற்காகவும் அல்லது அவர் அவர் மன விருப்பத்தின் படியும் எது வேண்டுமானாலும் பேசலாம் . ஆனால் உண்மை ஒன்றுதான்.

//
தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !
//
அரசியல் வாதிகள் எடுத்தால்தானே எந்த பிரச்சினையும் வெளியில் தெரிகிறது . அல்லது எந்த போராட்டத்தின் நோக்கமும் அரசாங்க பதவியில் உள்ள ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த அரசியல் வாதியை நோக்கித்தானே. பொத்தம் பொதுவாய் அரசியலை அரசியல் வாதிகளை விமர்சனம் செய்வது நல்ல நோக்கு அல்ல. அரசியல் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் .

விடை இல்லa வழிமுறைகளை சிந்திக்க தோன்றும் .

இந்த பதிவை எழுத இடம் கொடுத்த ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .
-தோழர்
www.mdmkonline.com

Monday, June 22, 2009

செந்தழல் ரவி..நீங்கள் செய்வது நியாயமா..?

ஒரு பரிட்சை நடக்கிறது.அது நடந்து முடிந்ததும்..தேர்வாளரிடம்..திருத்தி..மதிப்பெண் இடப் போகும் விடைத்தாள்கள்.

ஆனால்...அதற்குமுன்னரே..வேறு ஒருவர் அதைப்படித்து..மதிப்பெண்ணும் போட்டுவிடுகிறார்.திருத்தம் செய்யப்போகிறவர்..தன் இஷ்டத்திற்கு..திருத்த முடியுமா? அல்லது..ஏற்கனவே இந்த மாணவனுக்கு..ஒருவர் மதிப்பீடு போட்டுவிட்டாரே..நாம் குறைத்தோ...அதிகரித்தோ போட்டால்..நம்மீது..நம்பிக்கை குறைந்துவிடுமோ? என்ற எண்ணம் வந்து விட்டால்..

என் பதிவு...என் உரிமை என்று நீங்கள் சொல்லலாம்...அப்படியென்றாலும்...இன்னும் தேர்வு முடியவில்லை..நீங்கள் 30ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் விமரிசனங்களை வைத்துக் கொண்டிருக்கலாம்.உங்கள் விமரிசனங்களைப் பார்த்துவிட்டு...சிலர்..கலந்துக் கொள்ள வேண்டாம்..அப்படியே..கலந்துக் கொண்டாலும்..பரிசு வெல்லுவது சிரமம்..என எண்ணமாட்டார்களா?

ரவி...உங்கள் மீது..எனக்கு மதிப்பு உண்டு..ஆகவே தான் இப்பதிவு.தவறாக எண்ண வேண்டாம்.

வைகோ சொன்னது ஜெயலலிதாவையா?

சேலத்தில் செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசும்போது..ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என கலைஞர் ஈடுபட்டு வருகிறார் என்றார்.சேலத்திலும் அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது.ஆனால் அது நடக்கவில்லை..என்றார்.

(சேலத்தில் இவர் வேட்பாளர் வெற்றிக்கு காரணம்..எதிர்த்து போட்டியிட்டவரின்..அராஜகப் போக்கும்...கள்ளுக்கடை விவகாரமும்..ஆணவமும் தான் காரணம்.மேலும் தான் தலைவர் என்ற கர்வம் வேறு)

எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார்.ஆனால் அ.தி.மு.க., ஒரு போதும் எங்களை அழிக்க நினைக்கவில்லை.தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டது என்றார்.(ஜெ..இதற்கும் குறைவாகத்தான் கொடுத்திருப்பார் போல இருக்கிறது)

நாங்கள் தோல்வி அடைந்ததற்காக வருந்தவில்லை...ஆனால் புலிகள் தோற்றுவிட்டார்களே என வருந்துகிறோம்.(இங்கு நாங்கள் என யாரைச் சொல்கிறார்..ஜெ உடன் ஆன கூட்டணீ தோற்றதை என்றால்...ஜெ.. தேர்தலில் தோற்றதைவிட..புலிகள் தோற்றதற்கு கவலைப்பட்டாரா?)

Sunday, June 21, 2009

சாதூர்ய பேச்சு

ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

Friday, June 19, 2009

அப்பா........(சிறுகதை)

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(19-6-09)

1.ஒருவன் தன் தாய்,தந்தையரை இழக்கலாம்..சகோதரர்களை இழக்கலாம்,நட்பை இழக்கலாம்..ஆனால் இழக்கக்க்டாது தன்னம்பிக்கையை.

2.நாம் செய்யும் காரியங்கள் பாராட்டப் பட வேண்டும் என மனம் ஆசைப்படுகிறது.ராமாயணத்தில் அனுமன் கடலைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.அப்படி தாண்டுவதற்கு ஊக்கம் முதலில் ஏற்படவில்லை.ஜாம்பவானோட பாராட்டு உரைகள் தான்..'தன்னால் கடலைத் தாண்டமுடியும்" என்ற தன்னம்பிக்கையை அனுமனுக்கு ஏற்படுத்தியது.அதுபோல சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வருவதற்குக் கூட ஜாம்பவானோட பாராட்டு உரைகள் தான் அனுமனுக்கு வலிமையைக் கொடுத்தது.செயற்கரிய செயல் செய்ய பாராட்டுகள் கண்டிப்பாக ஒருவருக்கு பலத்தைக் கொடுக்கும்.

3.உயரத்தில் பறக்கிறோம் என்ற இறுமாப்பு வேண்டாம்..எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் காற்றாடி கீழே இறங்கித்தான் ஆக வேண்டும்.

4.ஒருவனின் வெளித்தோற்றம் கண்டு..நல்லவன் என்றோ...தீயவன் என்றோ உறுதி செய்ய முடியாது.வீணை கோணல்தான்..ஆனால் இனிய நாதம் உண்டு.அம்பு நேராக இருக்கும்..ஆனால் உயிரை வாங்கிவிடும்.

5.அதிர்ஷ்டத்தின் ரகசியம் இரண்டே இரண்டு சொற்களில்தான் இருக்கிறது.அதை வாழ்வில் பின்பற்றுங்கள்.அது கடின உழைப்பு ஒன்றுதான்.
சமையல் மோசமானால் ஒருநாள் கஷ்டம்
அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்
கல்வி மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்

6.கொசுறு ஜோக்

டாக்டர் ராத்திரி பூரா கண்ணே மூடலை
அதான் இங்கே வந்துட்டீங்க இல்ல...நான் மூட வைச்சுடறேன்.

Thursday, June 18, 2009

தந்தையர் தினமும்...அமைச்சர்களும்...

காதலர்தினம்..மகளிர் தினம்..அன்னையர் தினம்...தந்தையர் தினம்..என ஒவ்வொரு தினத்தை ஒவ்வொருவருக்கு ஒதுக்கி வைத்துள்ள முறை..இன்று நம் நாட்டிலும் பிரபலமாகி விட்டது.

அதன்படி..இம் மாதம் 21ஆம் நாள்..தந்தையர் தினம்.

தாய்க்கும்...தந்தைக்கும்..என ஒவ்வொரு தினத்தை ஒதுக்கி வைப்பதை...எதிர்ப்பவன் நான்.ஒவ்வொரு நாளும்..ஒவ்வொரு மனிதனும்...தன் தாய்-தந்தையை ஒரு முறையேனும் நினைக்காமல் இருக்க முடியாது.பிறகு அவர்களுக்கு என தனி தினம் தேவையில்லை.மேற்கிந்திய கலாசாரத்தில் நாம் மாறிவருவதால்...இப்பழக்கமும் ஏற்பட்டுவிட்டது என எண்ணுகிறேன்.

இப்போது தலைப்புக்கு வருகிறேன்..

கலைஞர் அமைச்சராய் இருப்பதால் தான்..கனிமொழி எம்.பி., ஆக முடிந்தது.,அழகிரி மத்ய அமைச்சர் ஆக முடிந்தது.ஸ்டாலினை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை.ஏனென்றால்..அவர் அரசியலில் பல ஆண்டுகாலம்..பல இன்னல்கலை அனுபவித்து விட்ட பின்னரே அமைச்சர் ஆனார்.

ஜி.கே., மூப்பனார்..தான் எந்த பதவியும் வகிக்கவில்லை எனினும்..அவரது மகன் என்பதாலேயே..எந்த முன் அனுபவமும் இன்றி அவரால் மைய அமைச்ச ஆக முடிந்தது.

அன்புமணி..ராமதாஸின் மகனாய் இருந்ததால் தான்...கூட்டணி பேச்சு வார்த்தையின் போது..ராமதாஸால்..ஒரு ராஜ்ய சபா இடம் வேண்டும் என கேட்கப்பட்டு..அவரை மைய அமைச்சராக ஆக்க முடிந்தது.

முரசொலி மாறனின் மகனாய் இருந்ததால் தான்..தயாநிதிக்கு..அரசியல் அனுபவம் இல்லாத போதும் அமைச்சராக முடிந்தது.

இதுபோலவே..மத்தியில்..நேருவின் குடும்பமும்.

நம் அப்பாக்கள்..அரசியலில் இல்லாததால்..அவர்களால் முடிந்த கல்வியை நமக்குக் கொடுத்து நம்மை சமுதாயத்தில்..ஒரு ஒழுக்கமான குடிமகனாக ஆக்க முடிந்தது.

நம் தந்தையை...நினைக்க என்று நமக்கு தனி நாள் தேவையில்லை என மீண்டும் கூறுகிறேன்.

எஸ்.வி.சேகர் தி.மு.க.,வில் சேர்ந்தால்...

சட்டசபையில்..எஸ்.வி., சேகர் அ.தி.மு.க., எம்.எல் ஏ., என்ற முறையில்..நடந்துக் கொண்ட விதம்..சரியா..சரியில்லையா..என்ற சர்ச்சைக்கான பதிவல்ல இது.

சேகரே அ.தி.மு.க.,விலிருந்து வெளியே வந்தால்..எம்.எல்.ஏ., பதவி பறி போகும்..அதுவே..கட்சி அவரை நீக்கினால்..சபையில் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு அடுத்த இரண்டு வருடங்களை ஓட்டிவிடலாம்.அதற்குண்டான..சலுகைகளை அனுபவித்துக் கொண்டு.

அதற்கு பிறகு சேகர் கட்சி ஆரம்பித்தால்...அதில் அவர் கூறும் சமூகத்தினர் அனைவரும் சேருவார்கள்..என்ற எதிர்ப்பார்ப்பு தவறு.ஏனெனில்..அவர் தற்போதுள்ள கட்சியின்..தலைவிக்கும்..இவருக்குமே பரஸ்பரம் ஒற்றுமை இல்லையே.

ஒரு சமயம்..தனிக் கட்சி என்று சொல்லிக் கொண்டு...வரும் சட்டசபை தேர்தலில்...தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து..தனக்கான எம்.எல்.ஏ., சீட் வாங்கும் திட்டம் கூட இருக்கலாம்.

அதை விடுத்து..தி.மு.க.,வில் சேரும் முடிவெடுத்தால்..அதிகபட்சம் அவரால்..இயல்,இசை,நாடக மன்றத்தின் செயலர் ஆகவோ..தலைவர் ஆகவோ மட்டுமே முடியும்.

இதுதான் நடைமுறை உண்மை..கலைஞரின் நண்பர் சாவி க்கும் இப்பதவி கிடைத்ததை..இப்போது அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

Wednesday, June 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 15

1969ல் வந்த படங்கள்

அன்பளிப்பு
தங்கச்சுரங்கம்
காவல்தெய்வம்
குருதட்சணை
அஞ்சல் பெட்டி 520
நிறைகுடம்
தெய்வமகன்
திருடன்
சிவந்த மண்

சிவாஜி,சரோஜாதேவி நடித்த படம்..அன்பளிப்பு..படம் தோல்வி.'வள்ளிமலை மாங்குட்டி எங்கே போறே' என்ற நல்லதொரு பாடல் இடம் பெற்ற படம்.

பாரதி நாயகியாய் நடித்தபடம் த்ங்கச்சுரங்கம்..சிவாஜி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் துப்பறிபவராய் வருவார்.ராமமூர்த்தி  இசை அமைத்த முதல் படம்.

காவ்ல்தெய்வம்...படத்தில் பெரும்பகுதி சிவாஜி வந்தாலும்...இதில் நட்புக்காக நடித்திருப்பார்.எஸ்.வி.சுப்பையா சொந்த படம்.அவருக்கு உதவும் பொருட்டு..பணம் பெறாது நடித்தார்.

குருதட்சணை..ஏ.பி.என்., படம்
அஞ்சல்பெட்டி 520...இயக்குநர் டி.என்.பாலு நாடகமாக போட்டு..பின் அவர் இயக்கத்திலேயே படமானது.சரோஜாதேவி நாயகி.

நிறைகுடம்..முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.

கடைசியாக வந்த 3 படங்களே..வெற்றிப்படங்கள் எனலாம்.அவையே 100 நாட்கள் ஓடியவை.

தெய்வமகன்..சிவாஜி 3 வேடங்களில் நடித்திருப்பார்.

திருடன்..பாலாஜி படம்..விஜயா நாயகி.நல்ல வசூல் இப்படத்திற்கு.பாடல்கள் அனைத்தும் அருமை.

சிவந்தமண்..ஸ்ரீதர் படம்.முதன் முதலாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது இப்படத்துக்குத்தான்.பட்டத்து ராணி பாடலுக்கு..அதிகமாய் இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டன.

இந்தியாவின் சார்பில்..ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்படும் படங்களில் முதலில் பரிந்துரை செய்யப்பட்ட படம் தெய்வமகன் ஆகும்.

இனி 1970 படங்கள் அடுத்த பதிவில்.

நெஞ்சிருக்கும் வரை..யும்..பூ வும்..

சமீபத்தில் பூ படம் பார்த்தேன்..சமீப காலமாக..சில நல்ல திரைப்படங்கள் தமிழில் வந்துக் கொண்டிருக்கின்றன.அவற்றில் பூ படமும் ஒன்று.

சிறு வயது முதல் நண்பர்கள் அவர்கள்.அவன் நலனில் அக்கறை உள்ள அவளின்..தினசரி பிரார்த்தனையே..அவனின் நலமே..அதற்காக அவள்..எதையும் செய்ய தயார்.அப்படிப்பட்ட நாயகன்...திருமணத்திற்கு பின்..சந்தோஷமாக இல்லை என்று..தெரிந்ததும்...இத்த்னைநாட்கள்...கவலைகளை முழுங்கி..சிரித்துக்கொண்டே இருந்தவள்..பொங்கி அழுகிறாள்.இதுவே கதை.

நாயகியாக நடித்தவர் புதுமுகம்..யதார்த்த நடிப்பு..

இப்படத்தைப் பார்த்த தாக்கம் ..மனதில்..இரண்டு நாட்களாக இருந்து வந்தது..

இந்நிலையில்..திடீரென..இப்படத்தை..ஸ்ரீதரின் 'நெஞ்சிருக்கும் வரை' படத்துடன் ஒப்பிடத் தோன்றியது.

அப்படத்தில்..சிவாஜி விஜயாவை காதலிப்பார்.. விஜயாவோ..சிவாஜியின் நண்பன் முத்துராமனை காதலிப்பார்..விஜயாவின் நலமே முக்கியம் என எண்ணி சிவாஜி..தானே முன்னின்று திருமணத்தை முடிப்பார்.பின்..முத்துராமனுக்கு..சிவாஜி அவரை காதலித்த செய்தி தெரிய வர..விஜயாவை வெறுப்பார்..முத்துராமன்.

விஜயாவின் நலம் மட்டுமே..குறிக்கோளுடன் இருக்கும் சிவாஜி...அவர் நன்கு வாழ வேண்டும் என்பதற்காக வேறு வழி தெரியாது..தன்னையே மாய்த்துக் கொள்வார்.

ரகுராமன்,ராஜேஸ்வரி,சிவராமன்..இந்த பாத்திரப் படைப்புகளாகவே..மாறிவிட்டனர்..அந்த நடிகர்கள்.இந்த இடத்தில்..பீட்டர் என்ற நண்பர் வேடத்தில் நடித்த வி.கோபாலகிருஷ்ணனையும் குறிப்பிட வேண்டும். இப்படத்தில் அனைவரும் மேக்கப் இன்றி நடித்திருப்பர்.

ஆனால்..அந்த படம்..நல்லதொரு படமாக இருந்தும்...அதிகம் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, June 15, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அவர் போலி பல் டாக்டர்னு எப்படி சொல்ற..
பல் பளீச்சுன்னு இருக்கணும்னா..சபீனா போட்டு தேய்க்கச் சொல்றாரே

2.அந்த டாக்டர் முன்னால் அரசியல்வாதியாய் இருப்பார்னு எப்படி சொல்ற
நர்ஸிங் ஹோம் திறப்புவிழாவிற்கு..பிணி திரண்டு வாரீர்னு அழைப்பிதழ் அடிச்சிருக்காரே

3.எங்க கட்சியில தலைவருக்கு தொண்டர் எல்லாம் கட்டுப்படுவோம்..
அவ்வளவு கட்டுக்கோப்பான கட்சியா?
ஆனா..யார் தலைவர்..யார் தொண்டர்கள் என்பதிலேதான் பிரச்னை

4.பாட்டி இறந்துட்டான்னு இரண்டாம் முறை லீவ் கேட்கறே..அதனால உன்னை நம்ப மாட்டேன்..உங்க பாட்டிகிட்ட லெட்டர் வாங்கிட்டு வா
எங்க பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாதே சார்

5.அந்த கிரிக்கட் வீரர் மிகவும் புகழ் வாய்ந்தவர்னு சொல்றியே..நிறைய செஞ்சரி அடிச்சிருக்காரா?
அதெல்லாம் இல்லை..விளையாடும் போதெல்லாம்..இஞ்சுரி தான்

6.என்னோட கணவர் ரொம்ப தற்புகழ்ச்சிக்காரர்
ஏன் அப்படி சொல்ற
தான் சமைச்சதை..அருமையா இருக்குன்னு தானே பாராட்டிக்கிட்டு சாப்பிடுவார்.

ஐடி நிறுவனங்கள் மீண்டும் எழுச்சி பெறும்..

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால்...நம் நாட்டு பல ஐ.டி., நிறுவனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களின் அவுட் சோர்ஸிங்க் வேலைகள்....குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில்..ஒபாமா வேறு..அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு வேலை குடுக்குமேயாயின்..அவற்றிற்கு வரி உண்டு என்று கூறிவிட்டது..இது எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிட்டது.

மைய அமைச்சர் ராசா..சமீபத்தில்..பிரதமரை சந்தித்து..ஐ.டி. நிறுவனஙளுக்கான சலுகைகள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட வேண்டும்..எனக் கேட்டுள்ளார்.அவர்..நிதி அமைச்சர் பிரணாபையும் சந்தித்து..இது குறித்து..மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எனக் கேட்க உள்ளார்.

நமது ஐ.டி., துறை..இதுவரை..பெரும்பாலும்..அமெரிக்க..ஐரோப்பிய நாடுகளையே சார்ந்து இருந்தது...ஆனால் சமீபகாலமாக..ஜப்பான் பக்கம்...நமது இந்திய கம்பெனிகள் பார்வை விழ ஆரம்பித்துள்ளது.ஏற்கனவே..ஜப்பானில்..விப்ரோ, இன்ஃபோஸிஸ் ஆகியவை கால் ஊன்றிவிட்டன அங்கு.ஏற்கனவே..சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அங்கு குறைந்த கட்டணத்தில் வேலை செய்கின்றன.நம்மிடமும் குறைவாக..இல்லையாயினும் அந்த அளவாவது எதிர்ப்பார்க்கப்படும்.

அதற்கு நம் நிறுவனங்கள் தயாராய் உள்ள நிலையில்...ஐ.டி., நிறுவனங்களின்..வளர்ச்சியை தடுக்கமுடியாது..அவை மீண்டும் எழுச்சி பெறும்.

இத் துறையில் வேலையில் உள்ளோர்..இத் துறை கல்வி பயிலுவோர்..ஆகியோர் மனத் தளர்ச்சி அடைய வேண்டாம்.

Sunday, June 14, 2009

மகளிர் இட ஒதிக்கீடு மசோதா...ஒரு பார்வை

நாடாளுமன்றத்தில் பத்து ஆண்டுகளூக்கு மேல் நிறைவேற்றப் படாமல்..ஒவ்வொரு தொடரின் போதும் பேச்சளவிலேயே இருந்து வருகிறது இம் மசோதா..

அரசியல்வாதிகள்..ஆதாயம் கருதி இதைச் சொல்லப் போக...இப்போது தவிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்..ஒரு அரசியல்வாதி...இம் மசோதா..இப்படியே நிறைவேறினால்..நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்கிறார்..(இப்படி அனைத்து அரசியல்வாதிகளும் கூறினால்...மசோதாவை நிறைவேற்ற வேண்டாம்..நாடும் இவர்களிடமிருந்து தப்பிக்கும்).வேறு ஒருவரோ..இதிலும் உள்
ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்.வேறு ஒருவர் 20% ஒதுக்கீடு போதும் என்கிறார்.

இம் மசோதா..இப்படியே..நிறைவேறினால்..தற்போது உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆன..543க்குள் அது வராது.33 சதவிகிதம் எம்.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்..(எய்ம்ஸ்,ஐஐடி 27% ஒட ஒதுக்கீடு போல)அப்போது 724 எம்.பி.க்களுக்கு மேல் ஆகும்..இப்போதே..நாடாளுமன்ற கூட்டத்தொடர் செலவுகள்,எம்.பி.,க்களுக்கான சலுகைகள் எல்லாம் கோடிக் கணக்கில் செலவாகிறது..மேலும் கோடிகள் செலவு அதிகரிக்கும்..நாடாளு மன்றத்தில்..3 தொகுதிகளுக்கு ஒரு தொகுதியில்..2 எம்.பி.க்கள் இருப்பார்கள்.

இது எல்லாம்..மசோதா நிறைவேறினால்..நடைமுறையில் ஏற்படப் போகும் மாற்றங்கள்.

இனி இது பற்றி என் எண்ணம்..

இன்று..அனைத்துத் துறையிலும் சவால் விடும் அளவு பெண்கள் வளர்ந்து வருகின்றார்கள்..தேர்வுகளில்....முதல் இடங்களைப் பிடிப்பதும்...அதிக எண்ணிக்கையில் இவர்கள் தேர்ச்சி பெருவதும் கண்கூடு.அவர்களை...இன்று..தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் போன்று..இட ஒதுக்கிட்டிற்குள் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை.(அவசியம் என நீங்கள் நினைத்தால்...கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு கொடுங்கள்)

பெண்களுக்கு சம உரிமை உள்ளது...மறுக்கவோ..மறைக்கவோ இல்லை..

இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின்..செயல்பாடுகள்..சோனியா என்ற பெண்மணியிடம் உள்ளது.

டெல்லி முதலமைச்சர் ஷீலாதீக்க்ஷித்

மேற்குவங்க ..இன்றைய ரயில்வே அமைச்சர்..மம்தா பேனர்ஜி

யு.பி.,யின் மாயாவதி

தமிழகத்தில்..ஒரு பெரும் கட்சியின் தலைவியும்..முன்னாள் முதல்வருமான ஜெ

மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் முதல் குடிமகன் பிரதீபா பட்டேல்

பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்

நாடாளுமன்ற எதிர்க் கட்சி துணைத்தலைவர் சுஷ்மா சிவராஜ்..

இவர்கள் எந்த ஒதுக்கீட்டில் அரசியலில் முக்கியமான இடத்திற்கு வந்தார்கள்..

இட ஒதுக்கீடு என பெண்களை சிறுமைப்படுத்த வேண்டாம்.

'எங்கள் உண்மையான நோக்கம்..பெண்கள் முன்னேற்றம்தான் 'என்று சொல்லும் அரசியல்வாதிகளே...நீங்கள் சொல்வது உண்மையெனில்..இன்று தனித்தொகுதிகள் இருப்பதுபோல..மூன்று நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதி பெண்களுக்கு என ஒதுக்கி பெண் வேட்பாளர்களை நிறுத்துங்கள்.(உதாரணத்திற்கு..தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 13 பெண்களுக்கு..234 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதி பெண்களுக்கு)..அது போதும்.

அதைவிடுத்து..720 நாடாளுமன்ற உறுப்பினர்கள்..என்ற நிலை வருமேயாயின்..தனிக்கட்சி ஆட்சிப் போய்...தொங்கு நாடாளுமன்றம்.என்ற நிலை நிரந்தரமாக உருவாகும்..அவ்வப்போது..தேர்தல்கள் நடக்கும் நிலை உருவாகும்.

Saturday, June 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(12-6-09)

1.மனிதனுக்குத் தேவை மாற்றமில்லை.விழிப்புணர்வு.செடியின் கிளைகளிலோ..இலைகளிலோ..தண்ணீர் ஊற்றினால் அது வீணாகிவிடும்.ஆனால்..அதே தண்ணீரை வேருக்கு ஊற்றினால்தான்..அதன் பலன் இலைகளுக்கும்..கிளைகளுக்கும் கிடைக்கும்.

2.நம்ம குழந்தைகள் பொறியாளர்கள் ஆக வேண்டும்..மருத்துவர்கள் ஆக வேண்டும்..என்று ஆசைப்படும் பெற்றோர்கள்..அவர்கள் நல்ல மனிதர்களாக வேண்டும்..என்ற நினைப்பை குறைத்துக் கொண்டு வருகிறார்களே ஏன்?

3.பகலில் ஒரு அறைக்குள் கதவை நன்றாக மூடிக்கொண்டு..உட்கார்ந்துக் கொண்டிருப்பவர்..'எனக்கு மட்டும் சூரியன் ஒளி தருவதில்லை" என புலம்புவதில் பலன் இல்லை.சூரிய ஒளி எங்கும் நிறைந்திருக்கிறது.அது கிடைக்க வேண்டுமானால்..அறையின் கதவுகளை நன்றாகத் திறந்து வைத்திருந்தால் போதும்.

4.அடக்கம் இல்லையெனில்..அகங்காரம் என்னும் பாம்பு நம்மிடம் படம் எடுத்து ஆட ஆரம்பிக்கும்.

5.நமக்கு வெற்றி கிடைக்க வேண்டுமா...பிரம்மாண்டமாய் சிந்திப்போம்..வித்தியாசமாக சிந்திப்போம்..வேகமாக சிந்திப்போம்..சிந்தனையின் உறுதியை செயலிலும் காட்டுவோம்..வெற்றி நமதே..

6.ஒரு ஜோக்

கதாநாயகன்- உங்க அடுத்த படத்தில எனக்கு மூன்று வேஷங்களா?
தயாரிப்பாளர்-இல்லை..முதல்ல ரௌடியா வர்றீங்க..அப்புறம் அரசியல்வாதி ஆகறீங்க..பிறகு ஒரு கோடீஸ்வனா ஆகி விடறீங்க..

Friday, June 12, 2009

வாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...

வாலி...திரைப்பட பாடலாசிரியர்..கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அசைக்க முடியா சக்தியாய் இருக்கிறார்.அன்று..கண்ணதாசனையும் சந்தித்தவர்..இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருப்பவர்.

அவர்..ஆரம்பகால ..காதல் கடிதம் எப்படி இருந்தது தெரியுமா?

பேசும் தெய்வம் படத்தில் வந்த அந்த பாடல்...

நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்


என்னவொரு...எளிமையான அருமையான காதல் கடிதம்...

அவரின் துரதிருஷ்டம்..அந்நாளில் இவரின் பல பாடல்கள்..கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..அப்படி ஒரு பாடல்
இருமலர்கள் படத்தில் வரும்..'மாதவி பொன்மயிலாள்"

பட்டுக்கோட்டையாரும்...இவர் எழுத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தார் என நிரூபிக்கும் பாடல்..;நான் ஆணையிட்டால்.

அதில் வரும் வரிகள்

ஒரு தவறு செய்தால்-அதை
தெரிந்து செய்தால்-அவன்
தேவன் என்றாலும் விடமாட்டேன்-உடல்
உழைக்க செய்வேன் அதில்
பிழைக்கச் செய்வேன் அவர்
உரிமைப் பொருள்களைத்
தொடமாட்டேன்.

வாலி...ஏற்ற பெயர்.அவர் எதிராளியின் பலம் கூட அவரைப் பார்த்தால்..பாதி அவருக்கே போய்விடும்..இது நிதர்சனமான உணமை

Thursday, June 11, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 14

1968ல் வந்த படங்கள்

திருமால் பெருமை
ஹரிசந்திரா
கலாட்டா கல்யாணம்
என் தம்பி
தில்லானா மோகனாம்பாள்
எங்க ஊர் ராஜா
லட்சுமி கல்யாணம்
உயர்ந்த மனிதன்

கலாட்டா கல்யாணம்...சிவாஜி..ஜெயலலிதா நடித்து வந்த ஒரு நகைச்சுவை படம்..சி.வி.ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம்.100 நாள் படம்

என் தம்பி...பாலாஜியின் சொந்த படம்..சிவாஜி, சரோஜாதேவி..100 நாள் படம்

தில்லானா மோகனாம்பாள்...கொத்தமங்கலம் சுப்பு விகடனில் கலைமணி என்ற பெயரில் வந்த தொடர்கதை.சிவாஜி நாதஸ்வர வித்வான். சேதுராமன் சிவாஜிக்கு நாதஸ்வரம் பிண்ணனியில் வாசித்தார்.ஆனால்..உண்மையில் சிவாஜியே வாசிப்பது போல் நடிகர் திலகம் அருமையாக ..அற்புதமாக நடித்தார்..பத்மினி...மோகனாம்பாள் என்ற நடன மங்கை யாக ஈடுகொடுத்தார்.பாலையாவின் நடிப்பும் அருமையாக அமைந்தது.கே.வி.மகாதேவன் இசையில் அனைத்து பாட்டும் அருமை.ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா..நடித்து..பொம்பளை சிவாஜி என பெயரெடுத்தார்.திரைக்கதை,வசனம்,இயக்கம்..ஏ.பி.நாகராஜன்.மகத்தான வெற்றி படம்.

உயர்ந்த மனிதன்..சிவாஜியின் 125 ம் படம்..16 ஆண்டுகளில் இந்த சாதனை.

125 படம் எடுத்த ஏ.வி.ஏம்., இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு ஆகியவர்களே..நடிகர் திலகத்தின் முதல்படமான பராசக்தியிலும் பங்கு கொண்டவர்கள் என்பது தனிச் சிறப்பு.சிவாஜி,வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்தனர். 100 நாள் படம்.

மற்றபடி..திருமால் பெருமையில்..சிவாஜி நடிப்பு அருமையாய் இருந்தும்...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஹரிசந்திரா தோல்வி படம்.

எங்க ஊர் ராஜா...பி.மாதவன் இயக்கம்..படம் சுமாரான வெற்றி.

லட்சுமி கல்யாணம்..கண்ணதாசன் படம்..பாட்டுகள் அனைத்தும் அருமை.ராமன் எத்தனை ராமனடி..இன்னமும் காதில் ஒலிக்கிறது.சிவாஜிக்கு ஜோடி இல்லை இப்படத்தில்.

1969 படங்கள் அடுத்த பதிவில்.

யாவரும் நலமும்...சுஜாதா கதையும்..


சமிபத்தில் வந்த படங்களில் யாவரும் நலம் வெற்றி பெற்ற படம்.இப்படம் இந்தியில் 13 B என்ற பெயரில் வந்தது.மாதவன் நடித்திருந்தார்.இப்படத்தின் கதையை ஹாலிவுட் படத்தயா ரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக செய்தி வந்தது.

ஆமாம்..இதற்கும்...இப்பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என பார்க்கிறீர்களா?

இருக்கிறது..

சுஜாதாவின்..தர்மு மாமா..என்ற கதை எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என தெரியவில்லை.அக்கதையின் நாயகன் ராஜாங்கத்தின் வீட்டு டி.வி.,யில். ஊரெல்லாம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடும்பொது..
வேறு நிகழ்ச்சி தெரியும்..அதில் அவர் மாமா தோன்றி..'மெடிகல் ஷாப்பிற்கு வா' என்பார்.

ராஜாங்கம்..பக்கத்துவீட்டிற்கு சென்று பார்த்தான்..அவர்கள் டி.வி.யில்..வயலும் வாழ்வும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைசியில்..ஒரு எதிர்ப்பாரா திருப்பத்துடன் கதை முடியும்..

யாவரும் நலம் படத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..கதானாயகன் வீட்டில் மட்டும்..வேறு ஒரு மெகா சீரியல் ஓடும்..

சுஜாதா..அன்றே..எழுதியதை..இப்படத்தின் கதாசிரியர்..மையக் கருவாக எடுத்து..சற்று வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.

இதை ஏன் எந்த ஊடகங்களும் சுட்டிக் காட்டவில்லை.

ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது.

Wednesday, June 10, 2009

நேர்முகத் தேர்வுக்குப் போன அதிபுத்திசாலி அண்ணாசாமி..

அண்ணாசாமிக்கு ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது..அங்கே கேட்கப்பட்ட கேள்விகளும்...நாம்மாள் சொன்ன பதில்களும்.

கேள்வி- ஐந்தும்..நாலும் எவ்வளவு
அண்ணாசாமி-9
கேள்வி-நாலும் ஐந்தும்
அண்ணாசாமி-இப்படி தலைகீழா கேட்டா..எனக்குத் தெரியாதா...ஆறு..

2.உங்களுக்கு ஒரு கம்ப்யுட்டரை வேலைசெய்ய கொடுப்போம்..அது உங்க வேலையில் பாதி செய்துவிடும்...
தயவுசெய்து எனக்கு இரண்டு கம்ப்யூட்டர் கொடுத்துடுங்க

3.கம்ப்யூட்டர் பற்றி ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?
கம்ப்யூட்டர் அடிக்கடி பொய் சொல்கிறது..அதுதான் பிடிக்கவில்லை.எனக்கு மெயில் இருப்பதாகச் சொல்கிறது..வெளியே..போஸ்ட் பாக்ஸில் சென்று பார்த்தால்..எதுவும் இல்லை.

4.நீங்கள் வேலையில் சேரலாம்...
ஒரு சின்ன சந்தேகம்
என்ன
நான் VRS ல் செல்லமுடியுமா?

அண்ணாசாமி வெளியே அனுப்பப்பட்டார்...ஐயா...நான் VRS வாங்கிட்டேன்..என குதித்துக்கொண்டே வெளியே வந்தார்.

Tuesday, June 9, 2009

பதிவர்களுக்கு ஒரு பரிட்சை...

அது மதுவிலக்கு அமுலில் உள்ள நாடு.அந்நாட்டிற்கு விஜயம் செய்தனர் மூன்று தமிழர்கள்..

மது அருந்தினர்...அந்நாட்டு மன்னனுக்கு இவ்விஷயம் தெரிந்தது,,உடனே மூவரும் கைது செய்யப்பட்டு..அரசன் முன் நிறுத்தப் பட்டனர்.

ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்க மன்னன் உத்த்திரவிட்டான்..உத்தரவை காவலாளிகள்..நிறைவேற்ற ஆயத்தமாயினர்.அப்போது அங்கு வந்த ராணி அன்று தனது பிறந்த நாள் என்றும்..குற்றவாளிகளுக்கு.. கசையடி கொடுப்பதற்குமுன்..அவர்களின் ஏதேனும் ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும்..ஆணையை மாற்ற சொல்ல...அரசரும் ஒப்புக் கொண்டார்.

முதல் தமிழன்..தன் முதுகில் பாகிஸ்தானி ஒருவனை கட்டிவிட்டு...கசையடி கொடுங்கள் என்றான்...தண்டனை அப்படியே நிறைவேற்றப்பட்டது..முதுகில்தானே கசையடி பலமாக விழும்.இவன் ஓரளவு தப்பித்துக் கொண்டான்.

அடுத்தவன்..தன் முதுகில் ராஜபக்சேவை கட்ட வேண்டும் என்றான்.அரசியல் விஸிட்டாக ராஜபக்சே அங்கு இருந்தார்.அவன் முதுகில் ராஜபக்சே கட்டப்பட...தண்டனை நிறைவேறியது.கசையடியை ராஜபக்சே பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது தமிழன்..தன் முதுகில் ஒரு தமிழனும்...முன்னால் ஒரு தமிழனும் கட்டப்பட வேண்டும் என்றான்.அப்படியே தண்டனை நிறைவேறியது.

இக்கதையால் அறியும் நீதி என்ன?

Sunday, June 7, 2009

தமிழ்மணமும்..நெகடிவ் ஓட்டுமுறையும்...

நான் இவ்வளவு நாட்கள்..இந்த ஓட்டுக்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.

ஆனால்..சமிபத்தில்..எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது..என்னுடைய பதிவு ஒன்று.

அதற்கு தேவையே இல்லாமல் ஒரு நெகடிவ் ஓட்டு விழுந்திருந்தது..பிறகுதான் இதில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்..குறிப்பிட்ட தலைவரைப் பற்றி நான் எழுதினால்..அனேகமாக எல்லோருமே
தம்ப்ஸ் டௌன் தான்..நான் நிறைய அத்தலைவரைப் பாராட்டி பதிவு போடுவதால்...என் பதிவு என்றாலே..அதைப் படித்தும் பார்க்காது..குறிப்பிட்ட சிலர் ..நெகடிவ் ஓட்டு போடுவதாக எனக்கு ஐயம்.

நெகடிவ் ஓட்டு என்பதே..தவறானது என்பது என் எண்ணம்..ஒரு பதிவை பாராட்டி வரும் பதிவை மட்டுமே தமிழ் மணம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..அது இயலாநிலை எனில்..நெகடிவ் ஓட்டிற்கு..ஏற்கனவே விழுந்த பாசிடிவ் ஓட்டிலிருந்து ஒன்றை கழிப்பதையாவது நிறுத்த வேண்டும்.

ஏனெனில்..பாராட்டுவோர் ஒட்டின் மதிப்பு..ஒன்று எனில்..எதிர்ப்பவர்களுக்கு அது இரட்டிப்பாய் விடுகிறது அல்லவா?

பாராட்டி எவ்வளவு...எதிர்த்து எவ்வளவு என்று பார்ப்பதே சரி என கொள்ள வேண்டும்.

நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?

Saturday, June 6, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -13

1967ல்வந்த படங்கள்
கந்த கருணை
நெஞ்சிருக்கும்வரை
பேசும் தெய்வம்
தங்கை
பாலாடை
திருவருட்ச்செல்வர்
இரு மலர்கள்
ஊட்டி வரை உறவு

நாலு படங்கள் நூறு நாட்கள் ஓடின.

கந்தன் கருணை..இதில் வீரபாகு என்ற உப பாத்திரம்..ஆனாலும்..சிவாஜியின் நடிப்பே படத்தை ஆக்கிரமித்து இருக்கும்.

இந்த வருடம்...தீபாவளிக்கு வந்த படங்கள்..இரு மலர்கள், ஊட்டி வரை உறவு..இரண்டும் வெற்றி..

இருமலர்கள் படத்தில்...வாலியின்..மாதவிப் பொன் மயிலாள்..பாட்டுக்கு..விஸ்வநாதனின் இசையும்..டி.எம்.எஸ்.குரலும்.,பத்மினியின் நடனமும்..நடிகர் திலகத்தின் நடிப்பும்..மனதை விட்டு நீங்காதவை.

திருவருட்ச்செல்வர்..ஏ.பி.என்.,படம்...அப்பர் நடிப்பு அருமை.


மற்றபடி ஸ்ரீதரின்..நெஞ்சிருக்கும்வரை..வெளியான போது சரியாக ஓடாவிடினும்..பின்னர் செகண்ட் ரன்னில் ஓடிற்று.இதில் சிவாஜி..மற்றும் அனைத்து கலைஞர்களும் ஒப்பனை இன்றி நடித்திருப்பர்.

பாலாஜி..சிவாஜியை வைத்து தயாரித்த முதல் படம் தங்கை..படம் சுமாராக ஓடியது..திருலோகசந்தர் இயக்கம்.பின்னர் இவர்கள் காம்பினேஷன் பின்னர் நல்ல படங்களைக் கொடுத்தன.பாலாஜி சிவாஜியை வைத்து 17 படங்கள் எடுத்தார்..பெரும்பான்மை திருலோகசந்தர் இயக்கமே.

பேசும்தெய்வம்..கே.எஸ்.ஜி., படம்.நல்ல படம்..ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாலாடை நீண்ட நாட்கள் தயாரிப்பில்..இருந்த் படம்..தோல்வி.

1968 படங்கள் அடுத்த பதிவில்.

Friday, June 5, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (5-6-09)

1. மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை.முதலில் பசி..இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது..மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது.இந்த மூன்றிற்கும் அடிப்படையான குணம் எல்லாவற்றையும் தனக்கென ஆக்கிக்கொள்வது.

2.பணம்..பெண்..இரண்டுமே போதையானது.அது நல்வழியில் வந்தால் நிற்கும்..கெட்ட வழியில் வந்தால் விட்டு விலகும்.

3.சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்கள் 400 பேர்.இதில் பிராமணர்கள் 282(70%) மற்ற உயர் வகுப்பினர் 40(10%) பிற்படுத்தப்பட்டோர் 40 (10%) தாழ்த்தப்பட்டவர்கள் 3 (.75%), கிறித்துவர்கள் 15
எந்த முஸ்லீமும் இல்லை.மீதி ஜெயின் போன்ற சிறுபான்மையினர்.(ஏதோ பத்திரிகையில் படித்தது)

4.புலியாக இருந்தாலும்..சிறுத்தையாக இருந்தாலும்..கூண்டுக்குள்ளே இருந்தா சவுக்கு அதை தழுவத்தான் செய்யும்.

5.இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிறீர்கள்...பின் கோவில்கள் எதற்கு..என ஒரு துறவியிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் சொன்னார்..
'சமையல் என்பது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்..கெரஸின் அடுப்பிலும் சமைக்கலாம்.ஆனால்..அடுப்பும்..அரிசி,பருப்பு,காய்கறிகள் கொண்ட சமையல் பாத்திரம் மட்டுமே இருந்தால் சமையல் தயாராகிவிடுமா?
அதற்கு நெருப்பு வேண்டும்.அதாவது நெருப்பு என்ற ஈர்ப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும்.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது..அதற்குத் தான் கோவில்கள் ' என்றார்.
(இதற்கு சிங்கை கோவியானந்தா விடமிருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்)

6.ஒரு ஜோக்...

என் பையன் படிப்பு கெட்டுடும்னு நான் டீ.வி.யே வாங்கலே..
பரவாயில்லையே..ஆமாம் உன் பையன் எங்கே?
பக்கத்து வீட்ல டீ.வி., பார்க்க போயிருக்கிறான்.

Thursday, June 4, 2009

கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும்...

கடந்த ஓரிரு மாதங்களாக..கலைஞர்பால் அன்பு கொண்டவர்களும்..என்னைப்போன்ற கழக ஆதரவாளர்களும்..அவரை பற்றி
சிறு குறைகளையும்...நமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆமாம்..அவர் என்னதான் செய்திருக்க வேண்டும்..

1.தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்திருக்க வேண்டும்

2.கலைஞர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்

இந்த இரண்டு ஆப்ஷன்ஸ் தான் செய்திருக்க முடியும்..

முதலில் சொன்ன எம்.பி.க்கள் ராஜிநாமா...செய்திருந்தால் என்னவாகி இருக்கும்...சற்று யோசிப்போம்..

நாடாளுமன்ற தேர்தல் சற்று முன்னரே வந்திருக்கும்...காங்கிரஸுடன்..கூட்டணி இல்லாமல் போயிருக்கும்.இச் சந்தர்ப்பத்திற்காகவே காத்துக்கோண்டிருந்த அம்மா..காங்கிரஸ்,பா.ம.க.,உடன் கூட்டு சேர்ந்திருப்பார்.தி.மு.க., தனித்து விடப்பட்டிருக்கும்.தி.மு.க., எம்.பி.,க்கள் இல்லாத நாடாளுமன்றம் அமைந்திருக்கக்கூடும்.

நாம் எதிர்ப்பார்ப்பு..இதுதானா..கட்டாயம் இல்லை..ஆகவே ராஜிநாமா என்ற விஷயம் உதவாது.

அடுத்து..கலைஞர் ராஜிநாமா...இதைச் செய்திருந்தால்..ஏற்கனவே..மைனாரிட்டி அரசு என சொல்லிக் கொண்டிருப்பவர்..மற்றவர்களுடன் சேர்ந்து..ஆட்சியை கவிழ்த்திருப்பார்.இப்படி நடந்ததற்கான முன்னுதாரணமும் உள்ளது.

கலைஞர் ஆட்சியில் இருந்தால் தான்..எதாவது பேச முடிகிறது..இல்லாவிட்டால்..என்ன ஆகும்.என வை.கோ.,வைத்தான் கேட்க வேண்டும்..

ஆகவே..இப்படிப்பட்ட சூழலில்..கலைஞர் என்ன செய்திருக்க முடியும்?

உண்மையாகவே.. கலைஞரின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தியைத் தந்தாலும்...சற்று யோசித்தால்..இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.

ஆகவேதான்..இலங்கை தமிழர் விஷயத்தில்..மைய அரசுக்கு அதிகாரம்..இருந்தாலும்..அது தமிழ் இனம் பற்றி கவலைப்படாததால்...காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில்..அந்த வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்யுங்கள் என..கூக்குரல் கொடுக்க முடிந்தது.

ஆகவே..நண்பர்களே..கலைஞரை குறை சொல்வதை விட்டுவிடுங்கள்..

Wednesday, June 3, 2009

அ.தி.மு.க., எம்.பி.க்கள் பதவி பறிபோகுமா?

15ம் நாடாளுமன்றத்திற்கு..சமீபத்தில் அ.தி.மு.க., சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள்., பதவி பறிபோகுமா என்று தெரியவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் அனைவரும்..திங்கள் மற்றும் செவ்வாய் அன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்..கடவுள்சாட்சியாகவும்..தி.மு.க.,வினர் மனசாட்சியாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆனால்...தமிழக எம்.பி..,க்கள் ஒவ்வொருவரும் பிரமாணம் எடுத்து முடிந்ததும்..அனைத்து தமிழக எம்.பி., க்களும், கட்சி வேறுபாடு பார்க்காது..மேசையைத் தட்டி..தங்கள் வாழ்த்துக்களையும்..மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

இது..இன்றைய..அ.தி.மு.க.,வின் அரசியல் நாகரிகத்திற்கு முரணானது..ஆனதால்..மேலிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.

எம்.பி.க்களின் பதவி பறிபோகுமா அல்லது சட்டசபையில் எஸ்.வி. சேகர் போல டம்மியாய் இருப்பார்களா? என போகப்போகத் தெரியும்.

வாய் விட்டு சிரியுங்க..

1. நம்ம அடுத்த படத்தில ஹீரோவிற்கு திருடன் வேஷம்
கதை என்ன
அதைத்தான் எந்த மொழியிலே இருந்து திருடலாம்னு யோசித்துக் கிட்டு இருக்கோம்.

2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

3.அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்

4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்

5.பாடகி பல்லவி திருமணம் முடிந்து பல வருஷம் பாடாம இருந்தவர்..இப்போ திரும்ப பாட வந்துட்டார்
இப்ப எப்படி பாடறாங்க
பழைய பல்லவியைத்தான்

6.உங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்டு நாய் விடாம குரைக்குது
பயப்படாதே! குரைக்கிற நாய் கடிக்காது
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே!

Tuesday, June 2, 2009

வாலிப கலைஞருக்கு வயது 86


ஆண்டொன்று போனால்

அகவை ஒன்று கூடும்..

ஆயின்..பொலிவொன்று ஏறும்

அருமைத் தலைவா உனக்கு..

ஆயிரமாயிரம் குறைசொல்வாரும்

ஆரவாரத்திலிருந்து ஒதுங்கி

அறுபது மணித்துளி யோசித்தால்

அகிலத்தில்.உன்னைப்போல்

அமையவில்லை வேறு யாருமென

அறிவர்..

ஆயிரம் கைகள் தடுத்தாலும்

ஆதவா...நீ மறையாய்

அன்புடன் வாழ்த்த வயதில்லை

வணங்குகிறேன் என மாட்டேன்

வாழ்த்துகிறேன்

நாளும் சிறப்பாய் பணிபுரிந்திட..

பிரபல பதிவர் பற்றி ஒரு கிசுகிசு..

அவர் ஒரு பிரபல பதிவர்.அவர் பதிவுகள் என்றால்..எல்லாமே..அரை மணி நேரத்திற்குள் சூடான இடுகையில் வந்துவிடும்.

அவருக்கு பைத்தியக்காரன் உருவில்..மே 15 முதல் ஒரு சோதனை வந்து விட்டது.

எப்போதும் கணிணியை விட்டு அகலாமல்..பதிவிடும் அவரை..அவரது தங்கமணி...கோபித்ததுக்கொள்வதுண்டு..திடீரென..15ம் நாள்..தங்கமணி..'இனி ஜூன் 30வரை உங்கப் பக்கமோ..கணிணி பக்கமோ நான் வரமாட்டேன்.ஆனால்..உரையாடல்..சிறுகதைப் போட்டிக்கு ஒரு அருமையான சிறுகதை எழுதி..இருபதில்..ஒருவராக ஆகவேண்டும்..என கல்யாணபரிசு எம்.சரோஜா கணக்காய் கூறிவிட்டாராம்.அத்துடன் நில்லாது..அக்கம் பக்கத்திலும்..'என் கணவர்..சிறுகதை போட்டியில் கலந்துக் கொள்கிறார்'என செய்தி பரப்பிவிட்டாராம்.வேளா வேளைக்கு ஆரஞ்ச் ஜூஸ்,ஆப்பிள் ஜூஸ் என தங்கமணி கவனித்துக் கொள்கிறாராம்

நம்ம ஆளுக்கோ..வேற பதிவும் போடமுடியவில்லையாம்.பைரவன் கணக்கா...ஆமைக்கதை எழுதலாமா..காக்கா கதைஎழுதலாமா..என ஒரு கொயர் பேப்பரை வாங்கிவைச்சுக்கிட்டு..தலையைப் பிச்சுக்கிறாராம்.

நம்மால் முடிந்தது..அவர்மீது..இரக்கப்படுவது..ஒன்றுதான்.

Monday, June 1, 2009

தொடர்கதை.. (சிறுகதை)

நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார்.

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கைய்யை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.