Sunday, May 31, 2009

மீண்டும் ஒரு தொடர் பதிவு..

நண்பர் முரளிக்கண்ணன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்.அவருக்கு நன்றி..இனி கேள்விகளும்..பதில்களும்..

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு என்ன..ஆரியபடைக் கடந்த நெடுஞ்செழியன்..அப்படி..இப்படின்னு கொடுத்த பெயரா..இது..என் பெற்றோர் வைத்தது..லக்கி மாதிரி பெற்றோராய் இருந்திருந்தால்..மாற்றியிருப்பேன்.

2.கடைசியாக அழுதது எப்போது..?
தினமும் அழுகிறேன்..யூ டியூபில்..இலங்கைதமிழர் துயர் பற்றிய வீடியோ கிளிப்பிங்கைப் பார்க்கும் போது என்னை அறியாது கண்களில் கண்ணீர் கொப்பளிக்கிறது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
நான் எழுதியதை..நானே படிக்கத் தடுமாறும்போது..என் கையெழுத்தை வெறுப்பேன்.

4.பிடித்த மதிய உணவு..
நான் கொஞ்சம் சாப்பாட்டுபிரியன்.விஜிடேரியன் உணவு எதுவானாலும்..மதிய உணவை ஒரு வெட்டு வெட்டிடுவேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவரைப் பார்த்ததுமே..தக்கார்..தகவிலர் என்பது தெரிந்துவிடும்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
வீட்டில்..பாத் ரூமில்..ஆனந்தமாக ஷவரில் குளிக்கப் பிடிக்கும்..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
அவர்கள் நம்முடன் பழகும் முறையை

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
சிலர் செய்யும் கேடுகளை காலவரையின்றி பொறுத்துக் கொண்டிருப்பேன்..திடீரென ஒரு நாள் கோபம் வந்து இவ்வளவு நாட்கள் பொறுத்ததை அழித்திடுவேன்..இந்த இரண்டு குணங்களுமே எனக்குப் பிடிக்காது.

9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
எந்த ஒரு வேலையையும்..தள்ளிப்போடாமல் உடனே செய்யவேண்டும் அவர்களுக்கு.இதில் நான் சோம்பேறி.இந்த ஒன்றுதான்..இரண்டுக்கும் பதில்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
இதை இப்போ படிக்கற உங்கக் கூட இப்ப இருக்க முடியலேன்னு வருத்தம்.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
சிகப்பு டீ ஷர்ட்,கட்டம் போட்ட லுங்கி..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
ஒரு சமயத்தில் என்னால் ஒரு காரியத்தில்தான் ஈடுபாடோடு செயல்பட முடியும்.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கறுப்பு..(கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு)

14.பிடித்த மணம்..
மல்லிகை மணம்...

15.நீங்க அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..
கோவி.கண்ணன் - எந்த ஒரு விஷயத்தையும்..நமக்குத் தோன்றாத புதுக் கோணத்தில் யோசிப்பவர்..பழக இனியவர்.
அக்னிப்பார்வை- வெள்ளை உள்ளம் படைத்தவர்..எதிர்ப்பார்ப்புக்குமேல் விஷயம் தெரிந்தவர்.
அத்திரி-இவரை சந்தித்தது இல்லை..ஆனால்..எனக்கு வந்த ஆரம்பகாலம் முதல் ஃபாலோயர்.இவரை சந்திக்க ஆசை உண்டு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இடங்கள் பற்றிய பதிவு. (சிறுகிராம..கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா) http://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_10.html

17.பிடித்த விளையாட்டு...
கிரிக்கெட் தான்..வேறு என்ன..

18.கண்ணாடி அணிபவரா?
அணிபவன்...

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
யதார்த்தமான படங்கள்

20.கடைசியாக பார்த்த படம்..
S.M.S.,

21.பிடித்த பருவ காலம்...
என் இளமைப் பருவ காலம்.
.
22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்//
நான் அதை செய்வதில்லை...என்னில் சரிபாதி அவ்வப்போது மாற்றிவிடுவார்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
எங்கேனும் ஊருக்கு போய் திரும்புகையில்...என் பெட்டிகளை சுமக்கும் போர்ட்டர்களுக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்கும்..
மீட்டருக்கு மேல் ஆட்டோக்காரருக்கு கொடுக்கும் சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
அமெரிக்கா...(இப்போதும் அக்டோபர் வரை அமெரிக்க வாசம்தான்)

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
திறமை என்றால் என்ன?

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
எந்த ஒருவரையும் அறிவாளி என்று சொல்வதை

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
தட்டச்சில் டைப் அடிக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
அடிக்கடி பெங்களூர் செல்ல விருப்பம்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் மனிதனாய்..

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
அப்படி ஏதேனும் இருக்கிறதா?

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைவிட..எப்படி வாழ்ந்தோம் என நமக்குப் பின் பிறர் பேச வேண்டும்.

Saturday, May 30, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 12

1965ல் வந்த படங்கள்

பழனி
அன்புகரங்கள்
சாந்தி
திருவிளையாடல்
நீலவானம்

சாந்தி 100நாட்கள்..

திருவிளையாடள் மாபெரும் வெற்றி படம்.வெள்ளி விழா படம்.வசூலில்..ஒரு புராண படம் ஒரு கோடியைத் தாண்டியது இப்படத்திற்கு மட்டுமே.முதன்முதல் ஃஃபிலிம் ஃபேர் தமிழ்படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த ஆண்டு.சிவாஜிக்கு சிறந்த கதாநாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.

இலங்கை வானொலியில்..224 முறை..இப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிப்பரப்பப்பட்டது.

1966ல் வந்த படங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ்
சரஸ்வதி சபதம்
செல்வம்

மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம்..100 நாட்கள் ஓடிய படம்.

இவ்வாண்டுதான் ஜனவரி 26ல் சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இவ்விருது பெற்ற முதல் தமிழ்ப் பட காதாநாயகன் இவர்தான்.

மோட்டார்..படத்தில் 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி..அப்போது அவ்ர் வயது 38.அதில் ஜெயும் ஒரு மகள்...,

1967 படங்கள் அடுத்த பதிவில்...

Friday, May 29, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (29-5-09)

1.சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள்.தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ் 173 கோடி சொத்துக்கு அதிபதி.காங்கிரஸ் கட்சியில் 137 பேர்,பி.ஜே.பி., 58 பேர்,சமஜ்வாதி 14 பேர்,பகுஜன்சமாஜ் 13 பேர் கோடீஸ்வரர்களாம்.தமிழகத்து எம்.பி.க்களில் 17 பேர் இந்த லிஸ்டில் உள்ளவர்கள்.

2.பசு பால் தருவதால்தான் அதை நாம் அன்பு காட்டி பராமரிக்கிறோம்..கறவை வற்றிவிட்டால்..கருணை இல்லாமல் கசாப்பு கடைக்காரனுக்கு விற்றுவிடுவோம்.,

3.இது இனாம்..அது இனாம்..என்று சொல்லி மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்குகின்றன அரசியல்கட்சிகள்.நாங்க எங்க கால்ல நிக்க ஆரம்பிச்சாச்சு..உங்க இலவச பிச்சை வேண்டாம்னு மக்கள் சொல்லவேண்டும்.

4.இடஒதுக்கீடு பற்றி புரியாமல் சிலர் குதிக்கிறார்கள்.இட ஒதுக்கீடு என்பது..வறுமை ஒழிப்பு திட்டமோ..வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் திட்டமோ இல்லை.நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீடு கொள்கை.

5.கவிஞர் கண்ணதாசன் ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றார்.கதவைத் தட்டியதும்..நண்பர் உள்ளிருந்து 'யாரது?' என்றார்.கவி அரசு உடனே..'an outstanding poet is standing outside' என்றார்.

6.ஒரு ஜோக்..

பிரதமர்- (சோனியாவிடம்) எல்லோருக்கும் கேபினட் ரேங்க் கொடுத்தா..ஒதுக்க இலாக்காக்களே இருக்காதே..
சோனியா- அதனால் என்ன...அவங்க எல்லாம் இலாகா இல்லாத மந்திரிகளாய் இருக்கட்டும்.

துணை முதல்வரை வாழ்த்துவோம்...


தமிழகத்தின் துணைமுதல்வர் பதவி தளபதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.பொறுமை காத்த அவருக்கு...காலதாமதமாக கிடைக்கப்பட்ட பதவி இது.அதற்கு காரணம் இவர் கலைஞரின் மகன் என்பதே!இல்லவிடின்..இவர் திறமைக்கு என்றோ உச்சிக்கு போயிருக்க வேண்டியவர்.

இரண்டு நாட்கள் முன் கழகத்தில் நுழைந்து,நேற்று..பதவி கிடைத்து..இன்று அமைச்சர் ஆனவர் இல்லை இவர்.

தனது சிறு வயதிலேயே..கழகத்தின்பால் பற்றுக் கொண்டவர் இவர்.

இந்திராவின்..அவசரக்காலநிலையின் போது...ஸ்டாலின் கைது செய்யப்பட்டு...சிறையில் துன்புறுத்தப்பட்டார்.அடி உதை வாங்கினார்.அன்று மட்டும்..சிட்டிபாபு ஸ்டாலினுக்கு விழுந்த அடியில்..குறுக்கே புகுந்து தடுக்கவில்லையெனில்..இன்று ஸ்டாலின் இல்லை.ஆகவே இந்நாளில் சிட்டிபாபுவிற்கு நாம் நன்றி செலுத்த்க் கடமைப்பட்டிருக்கிறோம்.

தற்போது..கலைஞரின் மந்திரிசபையில்..உள்ளாட்சித் துறை அமைச்சரான இவர்..நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.தி.மு.க., சென்னை மாநகர மேயராக இருந்திருக்கிறார்.அச்சமயத்தில்..சென்னையை சிங்காரச்சென்னையாக ஆகியவர்.பாலங்கள் நிறைந்த நகரமாக சென்னை உருவாக காரணமாய் இருந்தவர்.

தனிப்பட்டமுறையில்...யாரையும் கடுஞ்சொல் கூறி வசை பாடாதவர்.கடந்த நாடாளுமன்றத்தேர்தலில்...கலைஞரால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியா உடல் நிலையில்...மாநிலம் முழுதும்..பிரச்சாரம் செய்து..கழகத்தை பெரும் வெற்றி பெறச் செய்தவர்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குமேல்..பொதுவாழ்வில் இருந்துவரும் ஸ்டாலின்..கலைஞரின் மகன் என்பதால் துணைமுதல்வராய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்..என சில அறிவுஜீவிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தது போல பேசினாலும்...

ஒரு திறமையற்றவர்க்கு இப் பதவி வழங்கப்படவில்லை...

ஒரு உண்மை ஊழியனுக்கு...ஒரு நல்ல மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது..

மேலும்...தி.மு.க.,ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்..அதில் யாருக்கு எந்த பதவி தர வேண்டும் என்பது அக்கட்சியின் விருப்பம்.

ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி..வரவேற்பதுடன்..மக்கள் உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்..அவர்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுங்கள் என்கிறோம்.

சரியான சமயத்தில்..சரியான நபரை..சரியான பதவிக்கு தேர்ந்தெடுத்த கலைஞருக்கு நம் பாராட்டுகள்.

Thursday, May 28, 2009

ஆரிய..திராவிடர் போராட்டமும்..அண்ணாசாமியும்..

ஒரு திருமணவிழாவில்..தமிழக முதல்வர் கலைஞர் கலந்துக் கொண்டு..பேசுகையில்..திராவிட..ஆரிய போராட்டம் மீண்டும் ஆரம்பம் என்றார்.

அரசியலில் சமீபத்தில் இணைந்த அதி புத்திசாலி அண்ணாசாமிக்கு அதிரடியாக ஏதேனும் செய்து..தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்.

முதல்வரின் இந்த பேச்சு அவர் கவனத்தைக் கவர..உடனே அறிக்கை விடுத்தார்..அதன் விவரம் வருமாறு..

பிரதமர் உடனடியாக தலையிட்டு...இப்போராட்டத்தை நிறுத்த வேண்டும்.

கட்சியில் அனைவரும்..பிரதமருக்கு..போராட்டத்தை நிறுத்தச் சொல்லி தந்தி அனுப்ப வேண்டும்.

வருகின்ற திங்களன்று..மனிதச்சங்கிலி நடத்தப்படும்.இதில் கட்சி வேறுபாடு கருதாதுஅனைவரும் கலந்துக் கொண்டு..போராட்டத்தை நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கும்..மத்திய அரசு மசியாவிட்டால்...ஒரு நாள்..அல்லது குறைந்தது 6 மணி நேரம்..உண்ணாவிரதம் இருப்போம்.

அமெரிக்கா போன்ற வல்லரசுகள்..இதில் தலையிட்டு...போராட்டத்தை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

போராட்டத்தால்...பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு..உணவு, மருந்து ஆகியவைகளை உடனே மைய அரசு கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

வாய் விட்டு சிரியுங்க..

அதிகாரி- நேற்று வலது கைல கட்டுப்போட்டு லீவ் கேட்ட..இன்னிக்கு இடது கைல கட்டு போட்டுண்டு இருக்கே?
அலுவலர்- ஆஃபீஸிற்கு கிளம்பற அவசரத்தில..நேற்று எந்த கைல கட்டுப்போட்டேன்னு மறந்து போச்சு சார்..

2.கதை,வசனம்,டைரக்ஷன்,பாடல்,ஹீரோ பாத்திரம் என எல்லாப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு..ஒரு படம் பண்ண ஆசை..யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாங்களா?
அவ்வளவு ஈஸியா ஒரு ஏமாளி கிடைக்க மாட்டாங்களே!

3.அந்த கோவில்ல ஒரு உண்டியல்ல ஏன் லஞ்சம்னு போட்டிருக்கு
தங்களுக்கு எந்த காரியத்தையாவது சாதித்துதர வேண்டிகிட்டு..அதுக்கு பக்தர்கள் போட்ட லஞ்ச உண்டியல் அது.

4.டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்

5. கொடுத்த கடனை மூணு தரம் கேட்டும்...திரும்ப கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்களே
நான் அஞ்சுதரம் கேட்டப்பிறகு தானே கடன் கொடுத்தீங்க

6.என்னோட அதிகாரி..அவர் துணிகளை நான் துவைச்சுத் தர முடியுமான்னு கேட்கிறார்
ஏன் அப்படி கேட்கிறார்
நான் நல்லா சோப் போடறேனாம்.

Wednesday, May 27, 2009

தமிழா..இதுதானா உன் இன்றைய நிலை...

தமிழன் வீரமுள்ளவன்..என பழம் பெரும் காப்பியங்கள் உரைக்கின்றன.மறத்தமிழன் என்றே போற்றப்பட்டவன்..அவன்.

ஆனால்..இன்றோ..அவன் போகுமிடம்..இருக்குமிடம் எல்லாம் அடி வங்குகிறான்.

நம்ம இடம்..கச்சத்தீவு..அதை வாரி இலங்கையிடம்..தாரைவார்த்தது இந்தியா..இன்று..அந்த இடத்தில் ..தங்கள் வயிற்றைக் கழுவ...மீன் பிடிக்கச் செல்லும் தமிழன்..மீண்டும் மாலை வீடு திரும்புவது நிச்சயமில்லை.இலங்கை கடற்படையினரால்..கைது செய்யப்பட்டு..கொடுமைப்படுத்தப் படுகிறான்.தமிழகத் தலைவர்..கடிதம் எழுதி..தந்தி அடித்து..பிரதமரை தட்டி எழுப்பி..அவனை விடுவிக்க வேண்டியிருக்கிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு..நேரமில்லையா...மனமில்லையா..தெரியவில்லை.

அது போனால் போகட்டும் என்றால்...அண்டை நாட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி..தட்ஸ் தமிழில் வந்துள்ளது.

பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்.வழக்கமான ஆய்வு செய்துவிட்டு..திரும்பிய பொறியாளர் ராஜேஷ்,உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன்,தினேஷ் கண்ணன்,தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோரை அத்துமீறி நுழைந்ததாக கெரள வனத்துறை சிறைப்பிடித்து வைத்தனர்.

பின்..தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு..அதிகாரிகள் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழினத்தை காக்கவில்லை..என சொல்லும்..இலங்கை தமிழின சகோதரர்களே..தமிழ்நாட்டிலும் தமிழனுக்கு நடக்கும் அட்டூழியங்களைக் கேட்க ஆளின்றி அவன் அனாதையாகத்தான் இருக்கின்றான்.

Tuesday, May 26, 2009

" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை

என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது.

'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர்.

நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..

ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..

'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்..

'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா?' என்றார்.

ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்..

தமிழக வீரர் மரணம்

என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..

தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில் இறந்ததாகவும்...குறிப்பிட்டிருந்தது.

மேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

'கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில் கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு' என்றார் ஆசிரியர்.

என் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.
*** *** *** ****

பூங்குளம்..

பிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத் தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று
வடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான் இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்...பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில் சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை?

கிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும் சிறுவர்களை பார்த்தோம்.தமிழக ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. ...

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு..'தம்பி..பட்டாளத்துக்கு போனாரே..தனசேகர்..அவர் வீடு எது?' என்றேன்.

பையன்...ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை...கை காட்டினான்.

அங்கு சென்றவன்..'ஐயா..ஐயா..' எனக் குரல் கொடுக்க...

வயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..'யாரு' என்றார்.

'ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச் சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்' என்றேன்.

'என்னத்த சொல்றது..தம்பி..' என்றபடியே ஆரம்பித்தார் அவர்.

'நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப் போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம் கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன் கூட பேசறதில்லையாம்.

ஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர் இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான் வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமா?ன்னாராம். ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல படலியா?

அவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.

அவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.

சாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன் சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.' ஏண்டா ......பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.

அன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய் பார்த்தேன்...முதக்கறானான்னு..ம்...காணும்..எங்க போனான்னு தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.

கொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.

அவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை தேத்திக்கிட்டேன்.'

இந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி...

'என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க..மனுஷனைத் தொடக்கூடாதாம்' என்றேன்..

அதற்கு..அவர்..'அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே தம்பி வாங்கறாங்க' என்றார்.

அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.

'அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன் அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம்.அப்படின்னு சேதி இருந்தது.

தம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..

சேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன் செத்து..அவனுக்கும்...எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி'அதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..

ஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித் தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.

குடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள் இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.

அன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.

அடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

குண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம் செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.

அந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..'டேய்..நீ சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..' என அழ ஆரம்பித்தார்.

இப்போது எனக்கு ஒன்று புரியவில்லை...

உடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்.......ஏன்?

ஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க...

உயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா?

நாங்கள் கிளம்பினோம்..அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.

(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)

சிவாஜி கணேசன்..அடேங்கப்பா..

நடிகர் திலகம் சிவாஜி போல இவ்வளவு முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்..உலகளவிலேயே யாரும் இல்லை.அவற்றைப் பார்க்கலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் - கட்டபொம்மன்
பாரதியார் - கை கொடுத்த தெய்வம்
வ.வு.சி.- கப்பலோட்டிய தமிழன்
கர்ணன்- கர்ணன்
பரதன்- சம்பூர்ண ராமாயணம்
சாம்ராட் அசோகன்- அன்னையின் ஆணை
ஹேம்லட்-ராஜ பார்ட் ரங்கதுரை
திருப்பூர் குமரன்-ராஜ பார்ட் ரங்கதுரை
பகத் சிங்- ராஜபார்ட் ரங்க துரை
ஐந்தாம் ஜார்ஜ்- கௌரவம்
ஹரிச்சந்திரன்-ஹரிசந்திரன்
அக்பர்-உத்தமன்
வீர சிவாஜி- ராமன் எத்தனை ராமனடி
ஒதெல்லோ- ரத்தத்திலகம்
சாக்ரடீஸ்-ராஜா ராணி
தெனாலிராமன்-தெனாலிராமன்
அப்பர்-திருவருட்செல்வர்
நாரதர்-சரஸ்வதி சபதம்
சிவன்-திருவிளையாடல்
முருகன்- ஸ்ரீவள்ளி
விஷ்ணு-மூன்று தெய்வங்கள்
காளிதாஸ்-மகா கவி காளிதாஸ்
சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்

ஞாபகம் உள்ளவையை எழுதியுள்ளேன்..ஏதெனும் விட்டுப்போயிருந்தால்..பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அம்பிகாபதி - அம்பிகாபதி
தான்ஸேன்-தவப்புதல்வன்

Monday, May 25, 2009

பரிசலின் பதிவின் தொடர்ச்சி...

விஜய் கட்சி ஆரம்பிப்பது பற்றி பரிசல்..ஒரு பதிவு இட்டிருந்தார்.அப்பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு..

இளையதளபதி விஜய்க்கு..

பரிசல் கடிதம் படித்தீர்களா..

அதில், பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சரத்குமார்,சிவாஜி ஆகியோர் கட்சி ஆரம்பித்து தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டார்.அவர்கள் மட்டுமல்ல..அரசியலில்..ஒரு கட்சியில் இருந்துவிட்டு வெளியே வந்த தலைவர்களான..சம்பத், நெடுஞ்செழியன் பொன்றோரே தாக்கு பிடிக்கமுடியவில்லை.வைகோ ஏதோ..தள்ளிக்கொண்டிருக்கிறார்.கண்ணப்பன்..கட்சி ஆரம்பித்து..பின்.தி.மு.க.,வில் இணைந்து மீண்டும் அ.தி.மு.க., வந்து விட்டார்.திருனாவுக்கரசர் கட்சியாரம்பித்து..தனியே போணி ஆகாமல் பி.ஜே.பி.யில் சேர்ந்து காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆரை..ஞாபகம் இருக்கிறதா..அவரும் கட்சி ஆரம்பித்து ஏமாந்தவர்.

இதையெல்லாம்..ஏன் சொல்கிறேன் என்றால்..கட்சி ஆரம்பித்து..செயல் படுவது என்பது சாதாரண விஷயமல்ல.

மேலும்..மேலே நான் குறிப்பிட்ட நடிகர்கள் அனைவரும்..பாக்யராஜை தவிர்த்து..பதவியை அனுபவித்து விட்டு..ஆசையில் (பதவி ஆசை?) கட்சி ஆரம்பித்தவர்கள்.

ராஜேந்தர், தி.மு.க., எம்.எல்.ஏ., ஆக இருந்தவர்.,சரத்குமார் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார்,சிவாஜியும்..காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அதற்கு பின்னரே ..கட்சி ஆரம்பித்து..தலைவராக ஆசைப்பட்டவர்கள்.

பாக்யராஜோ..எம்.ஜி.ஆர்., தன்வாரிசு என்றதும்..கலையுலக வாரிசு என்கிறார்..என்பதை உணராது..அவரின் அரசியல் வாரிசாக எண்ணிவிட்டார்.

ரஜினி இன்றும்..தன் ரசிகர்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக..அவ்வப்போது..எப்ப வருவேன்..எப்படி வருவேன்னு தெரியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

விஜய்காந்த் ஓரளவு தாக்கு பிடித்திருக்கிறார்..இன்னும்..இவர் பயணம் நீண்டது.

இந்நிலையில் தாங்கள் கட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.மக்கள் உங்கள் படத்தை பார்க்கிறார்கள் என்பது வேறு..அதுவே..உங்களுக்கு அரசியல் ஆதரவு என எண்ணுவது வேறு.இவ்விஷயத்தில் நடிகர்திலகத்தை தவிர வேறு சிறந்த உதாரணம் சொல்லமுடியாது.

மேலும்..நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்பதை..உங்கள் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில்..நீரூபித்துவிட்டீர்கள்.அப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு தகுதியில்லாதவர்கள்.

இதையும் மீறி உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால்...ஏதேனும் கட்சியில் சேருங்கள்.,சட்டசபையிலோ,பாராளுமன்றத்திலோ நுழையுங்கள்..பிறகு..பார்க்கலாம்.

அதைவிடுத்து நீங்கள் சம்பாதித்த சொத்தை இழக்க ஆசைப்பட்டால்..கட்சி ஆரம்பியுங்கள்.

விதி வலியது...அவ்வளவுதான்.

இவண்
தங்கள் வெள்ளித்திரை ரசிகன்.

Sunday, May 24, 2009

பிரபாகரன் மரணம்...

பிரபாகரன் ஒரு வாரத்திற்குமுன் மரணம் அடைந்ததை விடுதலைப்புலிகள் இன்று உறுதி செய்துள்ளார்கள்.

18 ஆண்டுகள் கழித்து...பழி வாங்கியதற்கு..காங்கிரஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளதை மறக்கவோ, மறுக்கவோ முடியா உண்மை.

இனி தமிழின மக்களின் கதி என்ன?

அதைப்பற்றி என்னக் கவலை..3 கேபினட் அமைச்சர்கள்..வாங்கியாய் விட்டது.நம்மால் முடிந்தளவு உண்ணாவிரதம், மனிதசங்கிலி,தந்தி என முயற்சி செய்தாகிவிட்டது.

அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும்..வெளியிருந்து ஆதரவு என்று பயமுறுத்தியவரால்...அன்று..இதை செய்ய முடியாமல் போயிற்றே!

பிரபாகரா..போய் வா..தமிழின துரோகிகள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

அவர்களால் முடிந்தது இதுதான்.

Saturday, May 23, 2009

தவித்த வாய்க்கு தண்ணீ தராதவர் கிருஷ்ணா..

கர்நாடகாவில் முதல்வராய் இருந்த போது...உச்ச நீதிமன்றம்..காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடச் சொல்லியும்...நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இருந்தவர் இவர்.

ஓரே நாட்டில்..பக்கத்து மாநில மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்தபோது..தர மறுத்தவர்..இப்போது மத்தியில்..வெளியுறவுத்துறை அமைச்சராம்.

இவரால்..நியாயமாக நடந்துக்கொள்ளமுடியும் என தமிழன் நினைப்பானா?

உள்ளூர் தமிழனுக்கே..உதவாதவர்..வெளிநாட்டு..இலங்கை தமிழர் பிரச்னைக்கு என்ன செய்து விடப்போகிறார்.அந்தோணி..என்ன கிழித்தாரோ..அதைத்தான் இவரும் செய்யப்போகிறார்.

இந்த கிருஷ்ணாதான்...கலைஞரால்..அவரது 50 ஆவது ஆண்டு பொதுவாழ்வைக் கொண்டாட..அழைக்கப்பட்டவர் என்பது ஒரு உபரி செய்தி.

இலங்கை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது---இந்தியா

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிப்பதை தடுக்கும் வகையில், ஐ.நா.விடம் ஒரு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது இலங்கை அரசு.

ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை, போர்க் குற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் ஐ.நாவுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளது இலங்கை.

அதில் இலங்கையில் நடப்பது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் பிற நாடுகள், அமைப்புகள் தலையிட முடியாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் இலங்கை கோரியுள்ளது.

இலங்கையின் இந்த தீர்மான ஆவணத்தை ஆதரித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் , எகிப்து, மலேசியா, கியூபா, இந்தோனேசியா, பொலீவியா, நிகாரகுவா, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய 12 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

Friday, May 22, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 11

1964ல் வந்த சிவாஜி படங்கள்.

கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி

ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.

மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.

புதியபறவைக்கு..எங்கே நிம்மதி பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வனாதன்..100க்கும் மேற்பட்ட இசை கருவிகளை பயன்படுத்தினார்.

நவராத்திரி படத்தில் 9 வேடங்களில்..சிவாஜி நடித்தார்.

1952 தீபாவளியன்று முதல் படம் பராசக்தி வந்தது..12 ஆண்டுகளுக்குப் பின் 1964 தீபாவளிக்கு வந்த நவராத்திரி சிவாஜியின் 100 ஆவது படம்.

இந்த தீபாவளிக்கும் நடிகர் திலகத்தின்..நவராத்திரி, முரடன் முத்து ஆகிய இரண்டு படங்கள் வந்தன.

1965 படங்கள் அடுத்த பதிவில்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (22-5-09)

சீனாவில் கன்ஃப்யூசியஸ் என்ன சொன்னார் தெரியுமா..'ஓ..சீன தேசத்து குழந்தைகளே! நீங்கள் ஒழுக்கத்தோடு இந்தப் பிறவியில் நல்ல கல்வியைக் கற்றால் அடுத்த பிறவியில் இந்திய மண்ணில்
பிறப்பீர்கள்' என்றார்.

2.தான் இறக்கும் போது தன் சட்டைப்பையில் வைத்திருந்த சில சில்லறைக்காசுகள்தான்..காமராஜரின் சொத்து.அதனால்தான் இன்னும் பல கோடி மக்கள் மனதில் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

3.குட்டியானையைக் கொண்டுவந்து..சங்கிலியால் கட்டிப்போட்டு பழக்குவார்கள்.அந்த குட்டியானை பலம் கொண்ட மட்டும் சங்கிலியை இழுக்குமாம்.ஆனால் சங்கிலி பலமாக இருப்பதால் அதன்
முயற்சி பலிக்காது.அந்த குட்டி யானை வளர்ந்து பெரிதானதும் கயிறால் கட்டிவைத்தாலும்..அந்த யானை தப்பிக்க முயற்சிக்காது.அதற்கு யானையின் மனோபாவம்தான் முக்கியம்.இரும்புசங்கிலியால் கட்டப்பட்ட காலத்தில்..அது அடைந்த தோல்வி..அதன் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.அந்தக் காலத்தில் செய்யாத முயற்சியா..எவ்வளவோ முயற்சி செய்தும்..அப்போது தப்ப முடியவில்லை..இப்போதா முடியப்போகிறது என அது நினைக்குமாம்.இந்த தவறான மனோபாவம் நம்மிடமும் இருக்கு.இது கலைந்தால் போதும்.வெற்றி காற்றை சுவாசிக்க தொடங்கிவிடலாம்.

4.சிலர் எப்போதும்..எதையும் சந்தனம்..சகதி என ஒப்பிடுவார்கள்.ஆனால் சேறு சந்தனம் ஆகாது..அதுபோல சந்தனமும் சேறாகாது.சந்தனம் பூஜைக்கு உதவும்..சேறோ..கட்டடம் கட்ட தேவை.ஒவ்வொன்றிற்கும் ..ஒவ்வொரு தனித்தன்மை.எதையும்..எதனோடும் ஒப்பிடக்கூடாது.

5.உலகத்தில் உள்ள எல்லா இருளும் சேர்ந்து முயன்று பார்த்தாலும் கூட ஒரு சிறு மெழுகுவர்த்தி தரும் ஒளியை மறைத்துவிட முடியாது.

6. ஒரு ஜோக்

உனக்கு எப்படிப்பட்ட கணவன் வேணும்
பார்க்க அழகாய் இருக்கணும்.நான் சொன்னால் மட்டுமே பேசணும்.நிறுத்தச் சொன்னால் நிறுத்தணும்.உலக நடப்புப் பற்றி எது கேட்டாலும் சொல்லணும்.பிஸினஸ்,நாடகம்,சினிமா இப்படி எல்லாவற்றிலும் ஆர்வம் இருக்கணும்
அப்ப உன்னை டி.வி.,க்குத்தான் கல்யாணம் பண்ணிவைக்கணும்

Thursday, May 21, 2009

தி.மு.க., - காங்கிரஸ் பேச்சு வார்த்தை தோல்வி..

நாளை மன்மோகன்சிங் பிரதமராக பதவி ஏற்கிறார்.தி.மு.க.,விற்கான அமைச்சர்கள் பற்றிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்..தி.மு.க., வெளியே இருந்து ஆதரவு தரும் என தெரிகிறது.மேலும் நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டி.ஆர்.பாலு, ராஜா தவிர அழகிரி,தயாநிதி மாறன் ஆகியவர்களுக்கு கேபினட் அந்தஸ்தும்..கனிமொழி மற்றும் இருவருக்கு ஸ்டேட் அமைச்சர்களும் தி.மு.க., கேட்கிறது.

18 எம்.பி.க்கள் கொண்ட கட்சிக்கு இது அதிகம் என காங்கிரஸ் கருதுகிறது.மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி தர இயலாது என காரணம் காட்டிவிட்டது.

காங்கிரஸ் சென்ற தேர்தலில்..கலைஞர் தங்குமிடம் வந்து..பேசியது..ஆனால்..இம்முறை..உடல்நிலை சரியில்லாத போதும்..அவர் சோனியாவைத் தேடி அவர் இல்லம் சென்றார்.

எதிர்ப்பார்த்ததைவிட..அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால்..காங்கிரஸ் தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே தேர்தலுக்குப் பின் தி.மு.க., கழட்டி விடப்படும்..என்ற வதந்தி..இப்போது உண்மையாகி விடும் போலிருக்கிறது.

கலைஞர் அரசியல் வாழ்வில்..சென்றமுறை காங்கிரஸ் முழுகாலமும் ஆட்சியில் நீடிக்க ..செய்த வேலைகள்..அவர் பெயருக்கு..சில களங்களை வரவழைத்தன என்பது..எவ்வளவு உண்மையோ..அவ்வளவு உண்மை நன்றி கெட்ட கட்சி காங்கிரஸ் என்பதும்.

வாய் விட்டு சிரியுங்க..

நான் பத்திரிகையை யாருக்கும் ஓசி கொடுக்கறதில்லைன்னு கொள்கை உடையவன்
பரவாயில்லையே., எனக்கும் கிட்டத்தட்ட அதே கொள்கைதான்..பத்திரிகையை ஓசிலதான் படிக்கணும்னு.

2.ரூபாய் 5000 லஞசம் வாங்கினதுக்காக மாட்டிண்டியாமே
ஆமாம்.10000 கொடுத்தப்பறம்தான் வெளியே விட்டாங்க

3.நீங்க நடிச்ச முதல் படமே வெற்றி..அடுத்து உங்க நடவடிக்கை..
ஒரு கட்சி ஆரம்பிப்பதுதான்

4.நம்ம தலைவர் அவர் பையனுக்கு மந்திரி பதவி கொடுக்கப்போறாராமே
அதுலே என்ன தப்பு..நீ கூடத்தான்..உன் ஆஃபீஸ்ல உன் பையனை நுழைக்க முயற்சிக்கறே..

5.எனக்கு இப்போ உடனே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆகணும்..
ஏன்
டாக்டர்..என்னை அப்பப்ப எழுந்து நடக்கணும்னு சொல்றார்.எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ன்னா அப்பப்ப வெளிநடப்பு செய்யலாமே

6.நேற்று பைக்ல போகும்போது ஒரு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு
அடடா..அப்புறம்..
நல்லவேளை..உன் அட்ரெஸ் ஞாபகம் வந்தது..அதைக் கொடுத்து தப்பிச்சுட்டேன்..

Monday, May 18, 2009

தி.மு.க., 12 தொகுதிகளில் தோற்றது ஏன்?

சென்ற தேர்தலில் 40 க்கு 40ம் வென்ற தி.மு.க., கூட்டணி இத் தேர்தலில் 28 தொகுதிகளில் மட்டுமே வென்று 12 தொகுதிகளில் தோல்வி அடைந்தது ஏன்?

இது குறித்து கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்

கடந்த தேர்தலில் 40க்கு 40 கைப்பற்றி வெற்றி பெற்றீர்கள். ஆனால் இந்த தேர்தலில் 12 தொகுதிகள் குறைந்துவிட்டதற்கு என்ன காரணம்?

ஒருவேளை மீண்டும் நாங்கள் 40க்கு 40-ஐயும் கைப்பற்றி இருந்தால் வாக்குப்பதிவு எந்திரத்தையே மாற்றி விட்டார்கள், முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஆகிவிடுமோ என்று கருதியோ என்னவோ நல்லவேளையாக எதிர்க் கட்சிகளுக்கும் 12 தொகுதிகளை மக்கள் கொடுத்துவிட்டார்களோ என்னவோ''

கலைஞர்க்கு பதில் அளிக்க சொல்லியா தர வேண்டும்.

பிரபாகரன் மரண வதந்தி குறித்து கேட்டபோது..அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டாராம்.

Sunday, May 17, 2009

விஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சக்தி..

சரத்குமார்,டி.விஜய் ராஜேந்தர்,பாக்கியராஜ் அவ்வளவு ஏன்? நடமாடும் பல்கலைக் கழகம் என போற்றப்பட்ட நெடுஞ்செழியன் ஆகியோர் கட்சி ஆரம்பித்து தோல்வி கண்டவர்கள்.இன்றும்..முதல் இருவர் கட்சிகள் இருந்தும்..மக்கள் ஆதரவு இல்லை.

ஆனால்...விஜய்காந்த் அவர்கள் ஆரம்பித்த தே.மு.தி.க., மூன்றாவது சக்தியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது..என்பது மறுக்க முடியா..மறக்க முடியா உண்மை.

நாடாளுமன்ற தேர்தலில்..7 தொகுதிகளுக்கு மேல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்றுள்ளது இக்கட்சி.முழு விவரங்களும் வந்ததும்..இது பெற்ற சத விகித ஓட்டுகள் தெரியும்.ஆயினும்..25 தொகுதிகளில்..இது பெற்ற ஒட்டுகளை கணக்கிட்டால்..20 லட்சத்திற்கும் மேல்.மொத்தம் 40 தொகுதிகளிலும் கணக்கிட்டால் இக்கட்சி கணிசமாக ஓட்டுகள் பெற்றிருப்பதும்..பல முக்கிய வேட்பாளர்கள் தோற்பதற்கு இக்கட்சி காரணமாய் இருந்திருப்பது தெரிய வரும்.

நான்..சில பதிவுகளில் அவரை கிண்டல் செய்து..குறைத்து மதிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

இது எப்படி சாத்தியமாயிற்று?

விஜய்காந்தின் இடைவிடா உழைப்பு...அதை பாராட்டும் அதே நேரத்தில்...விஜய்காந்த் அவர்கள்..இன்றைய நடைமுறையை மனதில் கொண்டு.. சற்று வளைந்து கொடுக்க வேண்டும்..தேர்தல் சமயங்களில் கூட்டு வைப்பது இன்று..தேசிய கட்சிகளுக்கே இன்றியமையாததாய் ஆகிவிட்டது.இக்கூட்டணி விஷயத்தில்..இனி வரும் தேர்தல்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.மற்றக் கட்சித் தலைவர்களை வசை மாறி பொழிவதை நிறுத்த வேண்டும்.

பா.ம.க., வை இவர் வரவு கண்டிப்பாக பாதித்துள்ளது.அக்கட்சி இன்று பல இடங்கள் கீழே தள்ளப்பட்டுவிட்டது.இனி..இரு திராவிடக் கட்சிகளும் பா.ம.க., வை மதிக்காது.

எது எப்படியோ..விஜய்காந்த் இன்று வளர்ந்து வரும் சக்தி.இவரை சாதாரணமாக இனி நினைக்கக் கூடாது.

(மொத்தமாய் 31,25,801 வாக்குகள்.
10.09%.

கழகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சக்தி விஜயகாந்த் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.)

Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகளும்...மக்களும்...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..

பணநாயகம் வென்றது..தோற்ற கட்சியினர்கள் சொல்வது..எப்போதுமே வழக்கம்.தி.மு.க., முதன் முதலில் தமிழக அரசை பிடித்தவுடன்..அப்போதைய முதல்வர்...'நாட்டில் விஷக்கிருமிகள்' நுழைந்து விட்டன.' என்று சொல்லவில்லையா.

அதாவது..தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை..அதற்கான காரணம் எதாவது சொல்ல வேண்டாமா?

தேர்வில் தோற்ற மாணவன்..வாத்தியார் சரியா பேப்பரை திருத்தவில்லை..அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டுட்டாங்க..என்றெல்லாம் சொல்வதில்லையா? அப்படித்தான்.

பாதி முடிவுகள் வந்த போதே..காங்கிரஸ் முன்னிலை என தெரிந்ததும்..அத்வானி, மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த..அரசியல் பண்பாடு..நம் தமிழகத்தில் இல்லை.

5 தொகுதிகளில் மட்டுமே வென்ற லாலு..காங்கிரஸுடன் கூட்டு வைக்காதது தவறு..என்று சொன்னது போல நம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை.

மக்கள் மனோநிலை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.அவர்களுக்கு தேவை..நிலையான ஆட்சி.அதற்கேற்ப ஓட்டளித்துள்ளார்கள்.

பல இடங்களில்...மாநிலக் கட்சிகள்..தங்கள் பலத்தை தவறாக கணக்குப் போட்டு விட்டன.

ஆந்திராவில்..தனியாக ஆட்சி அமைப்போம்..என..சிரஞ்சீவியும்...தெலுங்கு தேசம்கட்சியும் சொன்னாலும்..வென்றது..தனிப்பெரும்பான்மையாக காங்கிரஸ்தான்.

தமிழகத்தில்...அரித்மெடிக் சரியாகத்தான் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.அ.தி.மு.க.உடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் ..தி.மு.க.,வில் இருந்த போது 40க்கு 40 கிடைத்தது.அது பிரிந்ததால்தான் 9 இடங்களில் அ.தி.மு.க., வென்றது.

சில காங்கிரஸ் தலைவர்கள் வெல்லக் கூடாது என்ற மனோபாவம் தமிழக மக்களிடம் எல்லா இடங்களிலும் இருந்ததால்தான்..இவ்வளவு வெற்றியிலும்..தங்கபாலு,இளங்கோவன்.மணிசங்கர், தோல்வி யுற்றனர்.

எப்படியானாலும்.....நிலமை சாதகமாக இல்லை என பரவலாக செய்திகள் இருந்தும்..மா பெரும் வெற்றி பெற்ற தி.மு.க., வை வாழ்த்துவோம்.

தமிழக புத்திசாலி வாக்காளர்கள்...

தமிழக..அதுவும் குறிப்பாக சேலம்,,ஈரோடு,மயிலாடுதுரை வாக்காளர்களுக்கு நன்றி.என் பதிவுகளில்..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்..காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும் என எழுதி இருந்தேன்.குறிப்பாக அடக்கமின்றி..பேசிய தங்கபாலு,இளங்கோவன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தேன்.

இவர்களுடன்..மத்தியில் அமைச்சர் பதவி வகித்த மணிசங்கர ஐயர் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்.

இவர்களை மக்கள் சரியாக தண்டித்து விட்டனர்.

அடுத்து..தேர்தலுக்கு தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறிய..பா.ம.க., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வில்லை.

தென் சென்னை..தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப் பட்ட போதே வீக்கான வேட்பாளர் என எண்ணினேன்.அது உண்மை ஆயிற்று.

மற்றபடி..தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அது போட்டியிட்ட 21 தொகுதிகளில் 18ல் வெற்றிக் கனியை கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி.

முதலில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் அதே 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மறு எண்ணிக்கையில் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.:-)))

Friday, May 15, 2009

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..

அண்ணாசாமி ஒரு பத்திரிகை நடத்திவருகிறார்.அவ்வப்போது..நடக்கும் நிகழ்ச்சிகளை..நமது பிரத்தியேக நிருபர் என்று செய்தி வெளியிடுவார்.

உண்மையில்..அவரும்..அவர் மனைவி ..மற்றும் உறவினர் ஆறு பேரும்தான் அங்கு எல்லாம்.

தேர்தல் கணிப்புப் பற்றி மற்ற பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதைக் கண்டவர்..தன் பத்திரிகையிலும்..ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட எண்ணினார்.ஆனால்..சர்வே எடுக்க ஆட்கள் இல்லையே என்ன செய்வது என நினைத்தவர்.. தன் பத்திரிகை உறவைக் கூப்பிட்டார்.

தான்..தி.மு.,க., ஆதரவு எனச் சொல்லிவிட்டு மற்றவர்களைக் கேட்டார்.அவர் மனைவி,மற்றும் இருவர்..தி.மு.க.,விற்கு ஓட்டு என்றனர்.

வேறு மூவர் அ.தி.மு.க.,விற்குதான் எங்கள் ஓட்டு என்றனர்.

எஞ்சியவர்..இம்முறை விஜய்காந்திற்கு ஓட்டு என்றார்.

எட்டில்..நால்வர்..தி.மு.க., அப்போது தி.மு.க.விற்கு..50% ஆதரவு.

எட்டில் மூவர் அ.தி.மு.க., அப்போது..37.5 % அதி.மு.க.,

எட்டில் ஒருவர் விஜய்காந்த்,..அப்போது தே.மு.தி.க., 12.5%

தி.மு.க.,விற்கு 50%ஆதரவு...நம் பத்திரிகை கருத்துக் கணிப்பில் என செய்தி வெளியிட்டார்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (15-5-09)

1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.
பிறப்பு..தகப்பன் அளிப்பு..இறப்பு ஆண்டவன் அழைப்பு..இவை இரண்டுக்கும் இடைப்பட்டது அரிதாரம் பூசாத நடிப்பு என்னும் வாழ்க்கை.

2.ஒரு எறும்பு தன்னைவிட 50 மடங்கு எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்கிச்செல்லுமாம்.தன் குடும்பத்துக்காகவும்,எதிர்காலத்திற்காகவும்..எவ்வளவு சுமை தூக்கி உழைக்கிறது?அது..என்றாவது..நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு புலம்பி இருக்கிறதா?இல்லை..என் உழைப்பை இன்னொருவன் திருடிட்டான்..அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு எரிச்சல் பட்டிருக்கா? அது பாட்டிற்கு..தன் கடமையைச் செய்..பலனை எதிர்ப்பாராதேங்கிற மாதிரிதான் நடக்கிறது.

3.ஒருவனுக்கு கோபம் வந்தால்..மிருகம் மாதிரி நடக்கிறான் என்கிறோம்..ஆனால்..அப்படி சொல்வது தவறு. ஏன் தெரியுமா? ஏனென்றால்...மிருகங்களிடையே பொறாமை, குரோதம்,சுயநலம், அடுத்தவனை கெடுப்பது போன்ற ஈனத்தனங்கள் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா குழந்தைகள் போல.

4.உங்களைவிட திறமையில்லாதவனுக்கு..உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்...திறமையில்லாமல் மேலே வந்தவர்கள்..அந்த நிலை என்று பறிபோகுமோ என்ற பயத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம்.

6.அனுபவம்

அனுபவம் விவேகத்திற்கு தந்தை
அனுபவம் துன்பத்தின் சாரம்
அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி
அனுபவம்..சிறந்த வெற்றிக்கு அடிப்படை
அனுபவம் செயல்களை எளிதாக்கும்

(எங்கோ படித்தது)

7.ஒரு ஜோக்..
தலைவா..5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்னு நீ சொன்னதை..எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யறாங்க..
ஏன்
நம்ம தொகுதியில மொத்தமே 4.5 லட்சம் வாக்காளர்கள்தான்.

Thursday, May 14, 2009

கங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..

இந்திய கிரிக்கெட் அணியை..உலகக் கோப்பையில் செமி ஃபைனல் வரை ந்டத்திச் சென்றவர் கங்குலி.

இந்திய அணியின் திறமையான கேப்டன்களில் இவரும் ஒருவர்.ஐ.பி.எல்.,20-20 இல் கல்கத்தா அணிக்கு இவருக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று எண்ணியும்...அதில்..பல சச்சரவுகள் இருந்ததால் ,குழுவில் ஒரு ஆட்டக்காரராகவே இருந்து..வருகிறார்.இந்நிலையில் மீண்டும் கேப்டன் ஆகும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டை 6வது குறுக்குத்தெருவில்..சிலர் சேர்ந்து ஒரு கிரிக்கெட் குழு ஆரம்பித்துள்ளனராம்.அவர்கள்..உள்ளூரில் உள்ள மற்ற குழுக்களுடன் மேட்ச் விளையாட உள்ளனராம்.அவர்களை வழி நடத்த சரியான கேப்டன் இல்லை என்பதால்..கங்குலியை அணுக உள்ளனராம்.

ஷாருக்கானும்..உடனடியாக அவரை மகிழ்ச்சியுடன் விடுவிக்க தயாராம்.

ஒரு சுற்று பயணம் முடிந்து..ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும்..கங்குலி..இதற்கு ஒப்புக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Wednesday, May 13, 2009

தேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...???

ஜெ- மண்வெட்டி எடுத்துக்கிட்டு இலங்கையிலிருந்து தமிழ் ஈழம் தனியே வெட்ட கிளம்புவாங்க..
(ஆமாம்..சேது சமுத்திர திட்டம் வருமாங்க)

கலைஞர்- சோனியா..அன்னையை..சுத்த ப்ளாட்டினமே..தியாகத்தில் எவரெஸ்டே என அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்
(ஆமாம்..இலங்கை தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் எப்போது)

ராமதாஸ்- அடுத்து தி.மு.க., கூட்டணிக்கு ..அம்மாமீது..என்னென்ன புகார் சொல்லலாம் என எண்ணிப்பார்த்துக் கொண்டிருப்பார்.
(அப்படின்னா..அன்புமணிக்கு அம்ம கிட்ட கேட்ட ராஜ்யசபா இடம் என்னவாச்சு?)

வைகோ-இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கைதாகி இருப்பார்.
(நாஞ்சில் சம்பத் கைதானா யார் வாதாடுவாங்க )

விஜய்காந்த்-அவருக்கே ஜெயிச்சதை நம்பமுடியாது.ஆனால் அதைச் சொன்னால் கலைஞர் காப்பியடித்து விடுவார் என்பார்.
(அண்ணியும்..மச்சானும் தில்லி பயணம்..விஜய்காந்தை பிரதமராக்கவா? பண்ருட்டி நிலமை?)

கம்யூனிஸ்ட்-மத்தியில் ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பார்கள்
(123 மறந்து..எண்கள் 4 லிருந்து ஆரம்பிக்கிறது என்பார்களா)

அத்வானி-ராமர் கோவில் திட்டத்தை அடுத்த தேர்தல் வரை ஒத்திவைப்பார்.
(ரத யாத்திரை? போட்டியாக வரும் மோடி?)

மன்மோகன் சிங்-ஜிம் மிற்கு போய் உடற்பயிற்சி செய்வார்..அத்வானி வீக்கான பிரதமர் என்று சொல்லக்கூடாதே என்பதற்காக
(பாகிஸ்தான் சீக்கியர் பிரச்னை தீர்ப்பாரா)

(அடைப்புக்குறிக்குள் இருப்பவை நமது கேள்வி)

தே.மு.தி.க., வெற்றிமுகம்..FLASH NEWS

இன்றைய தேர்தல் ..தமிழகத்தில் பட ..ஓரிரு சம்பவங்களைத் தவிர மற்ற இடங்களில் அமைதியாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களே..எதிர்பாராத வகையில்..ஊடகங்களின் கணிப்பு..இணைய தள பிரகஸ்பதிகளில் கணிப்பு..என எல்லாவற்றையும் ஏமாற்றி..தே.மு.தி.க., எல்லா தொகுதிகளிலும் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்..விஜய்காந்த்..நிருபர்களுக்கு..வாக்களித்து முடிந்ததும்..அளித்த பேட்டியில்..40க்கு 40ம் தே.தி.மு.க., வெற்றி பெறும் என்றும்..பல தி.மு.க.,வினர் டிபாசிட் தொகையை இழப்பதோடு..3ம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.இச் செய்தி அறிந்து..கலைஞர்,ஜெ..இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டவனுடனான என் கூட்டணியில் ஆண்டவன் என்னை ஏமாற்றவில்லை.ஆகவேதான் பெரியவர்கள்..சாமியை நம்பு..ஆசாமியை நம்பாதே என்று கூறியுள்ளனர்.

விருதுநகரில்..கார்த்திக்கிற்கு..அமோக ஆதரவு உள்ளது.அவர் தே.தி.மு.க., விற்கு சரியான போட்டியாய் இருப்பதாகத் தெரிகிறது.இந்த தொகுதி மட்டுமே..தே.தி.மு.க., விற்கு வெல்வது சற்று கடினம்..ஆனாலும்..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்..கார்த்திக்...தோற்கடிக்கப்பட்டு..தே.தி.மு.க., வெல்லும்..என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படியெல்லாம்..ஏப்ரல் 1ஆம் தேதி தேர்தல் நடந்திருந்தால் பதிவுகள் போடலாம்..ஆனால்..என்ன செய்வது..அதற்குக் கூட வழி இல்லாமல் போயிற்றே.

Tuesday, May 12, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 10

1963ல் வந்த படங்கள்

சித்தூர் ராணி பத்மினி
அறிவாளி
இருவர் உள்ளம்
நான் வணங்கும் தெய்வம்
குலமகள் ராதை
பார் மகளே பார்
குங்குமம்
ரத்தத்திலகம்
கல்யாணியின் கணவன்
அன்னை இல்லம்

அறிவாளி நீண்டநாட்கள் வெளிவராமல் இருந்த படமாதலால்..நகைச்சுவை நிறைந்த படமாய்..இருந்தும்..தோல்வியுற்ற படம்.தங்கவேலு,முத்துலக்ஷ்மி சப்பாத்தி நகைச்சுவை வயிறு புண்ணாகும் ஒன்று.

கலைஞர் வசனத்தில்..லக்ஷ்மி அவர்களின் பெண்மனம் நாவல்..இருவர் உள்ளமாக வந்தது.அருமையான பாடல்கள்..சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு ..படத்திற்கு வெற்றி அளித்தது.100 நாள் படம்.சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் திரையிட்ட போதும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

குலமகள் ராதை,கல்யாணியின் கணவன் ஆகிய படங்களும்..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்றன.

ரத்தத்திலகம்..இந்திய..சீனப்போரை வைத்து வந்த படம்.

குங்குமம்...பாசமலர் படத்தை எடுத்த தயாரிப்பாளர் படம்.நல்ல பாடல்கல்..சிவாஜியின் அற்புத நடிப்பு ஆகியவை இருந்தும் தோல்விப்படம்.
அன்னை இல்லம்..சிவாஜி,தேவிகா நடித்த படம்..100 நாள் படம்.

பார் மகளே பார்..பெற்றால் தான் பிள்ளையா? என்ற நாடகம்..படமானது.100 நாள் படம்.

இந்த ஆண்டு 10 படங்கள் வந்தாலும்...4 படங்களே வெற்றி படங்களாக் அ மைந்தன எனலாம்.

1964 படங்கள் அடுத்த பதிவில்.

தேர்தல் கணிப்புகள்..அ.தி.மு.க.,அதிக தொகுதிகளில் வெற்றி

ஜெ அணிக்கு நிறைய தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக..பல பதிவுகள் இரண்டு நாளாக தமிழ்மணத்தில் காணப்படுகின்றன.ஒரு பதிவர்..ஜெ யின் கூட்டங்களில் அவர் பேச்சு இதற்கு ஒரு காரணம் என்றுள்ளார்.

ஈழப்பிரச்னை..பிரமாத மாறுதலை ஏற்படுத்தாது..என அனைத்துப் பிரிவினருக்குமே தெரியும்..ஏதோ ஆற்றாமையில்தான் பதிவிடுகிறோம்.கட்சி வேறுபாடின்றி..இரு திராவிட கட்சி தொண்டர்களிடையே
காங்கிரஸ் வெல்லக்கூடாது என்ற எண்ணம் உள்ளது.மேல்தட்டு மக்கள்,மத்திய வர்க்கத்தினர் கூட இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது சந்தேகமே.

தி.மு.க., கட்டுக்கோப்பான கட்சி என்பதால்..அதன் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ஓட்டுகள் சிதறாது.அதுவே..அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்
வாக்குகள் சிதறி..அ.தி.மு.க.வோ..அதன் கூட்டணியோ வெற்றி பெறும்.

ஆகவே..ஜெ வெற்றி பெறும் தொகுதிகளில் அவர் பேச்சாலோ,அவர் வாக்குறுதி நம்பியோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

மேலும்..ஜெ கூட்டணி பலம் வாய்ந்தது,..என்பதில் சந்தேகமில்லை.கூட்டணி பலம்தான்..பேச்ச் பலம் இல்லை என்பது திட்டவட்டமே!

ஆகவே ஜெ பெறும் வெற்றி கணிசமாக இருக்கும்..என்பது..உண்மையே.

அதே போன்று தி.மு.க.,வும் 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.காங்கிரஸ் படு தோல்வி அடையும்.

இதுதான் நிதர்சனம்.

Monday, May 11, 2009

பிரதமரின் இரட்டை வேஷம்

அமிர்தஸரஸில்..ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன் மோகன் சிங்..'பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர் மீது ஜசியா என்ற மத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது விஷயமாக இந்திய அரசு..பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது என்றும்..விரைவில் அவர்கள் குறை அகலும் என்றும் கூறியுள்ளார்.

சிறுபான்மையினரான சீக்கியர் மீது வரி விதிப்பிற்கே..நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் பிரதமர்..இலங்கையில் இனப்படுகொலை ந்டந்து வருவதைப் பற்றி அவ்வளவாக ஏன் கவலைப்படவில்லை.

ஏனெனில்..அங்கு அவதிப்படுபவன் சீக்கியன்...இங்கோ தமிழன்..

தமிழன் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.

நம் பிரதமர்..மட்டும் இரட்டை வேடம் போடவில்லை..அனைத்து காங்கிரஸ்காரனும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.அதை உணர்ந்துக்கொள் தமிழனே.காங்கிரஸிற்கு பாடம் கற்பி. இதுதான் தருணம்.

தமிழா..ஒரு முறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசால்தான் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

கலைஞரும்...திருமா..வும்

ராமதாஸின் அன்பு தம்பியாக..இருந்து வந்த திருமா..கூட்டணி விஷயத்தில்..கலைஞரின் தம்பியாக மாறினார்.

தன் பதவியைக் காத்துக்கொள்ள சோனியாவை..தியாகச்செம்மல், சொக்கத்தங்கம் என்றெல்லாம் வர்ணித்த கலைஞர்..ஒரு நிலையில்..அன்னையே..எங்கள் இலங்கை தமிழர்களைக் காப்பாற்று என வேண்டினார்.

திருமா..வோ..ஒரு படி மேலே போய்விட்டார். கலைஞராவது..தி.மு.க., அரசுக்கு ஊறு ஏற்படக்கூடாது என்பதற்கு அப்படிச் சொன்னார் என்றால்..திருமா..ஒரு எம்.பி.பதவிக்கு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் சோனியா கலந்துக் கொண்ட கூட்டத்தில் பேசிய திருமா 'இஸ்லாமியர்கள் அல்லாவை இறஞ்சுவதுபோல, கிறித்துவர்கள்..யேசுவை இறஞ்சுவது போல..எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்..சோனியாவே இலங்கை தமிழர்களைக் காக்க உங்களை இறஞ்சுகிறேன்.' என சோனியாவை..அல்லா, யேசு ரேஞ்சுக்கு உயர்த்திவிட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால்..இருவரும் சோனியாவிற்கு கோவில் கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.

பதவி ஒரு மனிதனை என்னவெல்லாம் பேச வைக்கிறது..

ஆனால்..சோனியா அன்று திருமா..வை கண்டுக்கொள்ளவே இல்லை என்கிறது ஊடக செய்திகள்.

Sunday, May 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(அன்னையர்தின ஸ்பெஷல்)

1.வெண்ணைய்க்குள் நெய்யைப்போல்
விறகுக்குள்ளே தீயைப்போல்
மலருக்குள்ளே மணத்தைப்போல்
எள்ளுக்குள்ளே எண்ணைய்ப்போல்
பெண்ணுக்குள்ளே தாய்ப்பாசம்

2.தென்றலாய் இருந்தால்..தீண்டிப்பார்ப்பார்கள்..புயலாக மாறுங்கள்..பயந்து ஓடுவார்கள்

3.ஒரு பெண்ணின் ரோஷம்தான்..மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை தோன்ற காரணம்,

4.பெண்களுக்கான சம அந்தஸ்து இருக்கிறதா? பெண்களுக்கும் ஒரு மனம் இருப்பதை பலர் உணர மறுக்கிறார்களே ..ஏன்?

5.பெண் ஆணைவிடத் தாழ்ந்தவளும் இல்லை..உயர்ந்தவளும் இல்லை..பெண் ஆணிலிருந்து வேறானவள்.ஆகவே பெண்களுக்கென பல சிறப்புச் சலுகைகள் கண்டிப்பாக வேண்டும்.

6.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை..தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை.அதுபோல..தாயை பழிப்பவன் வாழ்ந்ததும் இல்லை.


நமக்கு முகவரி தந்தவள்..முகத்தைத் தந்தவள்..தரணியில் வாழவிட்டவள்..அன்னையே..உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் இந்நாளில்.

Friday, May 8, 2009

காங்கிரஸை தோற்கடிப்போம்...

தி.மு.க., கூட்டணியுடன்..அ.தி.மு.க., கூட்டணி வலுவுள்ளது.அதனால் தான் எனது முந்தைய பதிவு ஒன்றில் கூட அ.தி.மு.க., அதிக இடங்களில் வெல்லும் என சொல்லியிருந்தேன்.

சமீபத்தில் வேறு..சில காங்கிரஸ் வால்கள்..(தலை என்பதே காங்கிரஸில் இல்லை) தேர்தலுக்குப் பின் கூட்டணி மாற்றம் வரலாம் என பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸை நம்பி தி.மு.க., கெட்டது.இல்லையேல்..காங்கிரஸை விடுத்து..அது..வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்.கெட்ட பெயரையும் தவிர்த்திருக்கலாம்.சொக்கத்தங்கம் இல்லை பித்தளை என்பது தெரிந்திருக்கும்.

இந்நிலையில்..ஒரு வேளை அ.தி.மு.க., சில அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால்...காங்கிரஸ் தி.மு.க.,வை கழட்டிவிட தயார்..இப்போது.

ஆகவே..தமிழக வாக்காளர்கள்..காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலை உணர்ந்து...அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில்..அதைத் தோல்வி அடைய செய்யுங்கள்.அப்போதுதான்..தங்கபாலு...இளங்கோவன் ஆகியோர் நாவடக்கம் கொள்வர்.

தமிழன் இதிலாவது ஒற்றுமையாய் இருந்து அவர்களை தோற்கடிக்கட்டும்.

Thursday, May 7, 2009

பதிவர்களின் மனிதநேயம்...

பதிவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் பதிவுகள் மூலமே அறியப்படுபவர்கள்..ஆனாலும்..ஒரு பதிவருக்கு ஏதேனும் உடல் நலம் சரியில்லையெனில்..பதை பதைப்போர் எவ்வளவு பேர்?
நமக்குள் இந்த அன்னியோனியம் எப்படி வந்தது?

ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையெனில்..அவருக்காக பிரார்த்தனை செய்பவர்கள் எவ்வளவு பேர்?

கலைஞர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்ந்து..சிகிச்சை முடிந்து வெளியேறியதும்...மருத்துவ மனையில்..தினசரி நடந்த நிகழ்ச்சிகளை எழுதினார்..அதை சற்று கிண்டல் செய்யும் விதத்தில்..எனக்கு..தலைவலி என்றும்...மருத்துவமனையில் அனுமதி...என ஒரு பதிவிட்டேன்..

உடன்...அந்நிகழ்ச்சியை உண்மையாக நினைத்து..கோவி சிங்கையிலிருந்து தொலைபேசி நலம் விசாரித்தார்.

பதிவர் இயற்கையோ...எதோ ..இதோட போயிற்றே..என என் உடல்நிலை குறித்து கவலைப்பட்டார்.எவ்வளவு வெள்ளந்தி மனம் படைத்தவர் இவர். மனம் கனத்தது..

தினசரி குறைந்தது இரு பதிவாவது இடும் நான்..கடந்த சிலநாட்களாக எப் பதிவும் இடவில்லை..உடன் மணிகண்டன்..எங்கே போயிட்டீங்க? என்கிறார்.

எனக்கும்...மென் துறை யில் வேலை புரியும் பதிவர்கள்..தொடர்ந்து சில நாட்கள் பதிவிடவில்லையெனில்..'ஐயோ..அவர்களுக்கு வேலையில் பிரச்னை ஏற்பட்டிருக்குமோ? என கவலை ஏற்படுகிறது..

பதிவுகள் இடுவதில் லாபம்..இருக்கிறதா என எண்ணுபவர்களுக்கு...இப்படிப்பட்ட நட்பு கிடைக்கிறதே...அது போதாதா?

நட்பைவிட சிறந்தது என்ன இருக்க முடியும்?

(யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி)

Monday, May 4, 2009

குட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்

ஒரு குழந்தை அம்மாவிடம்...'அம்மா நான் எப்படி பிறந்தேன்'னு கேட்டுதாம்..அதற்கு அம்மா..சாமி கொண்டுவந்து கொடுத்தார்னு சொன்னாளாம்.அம்மாவின் பதிலில் திருப்தி அடையா குழந்தை அப்பாவிடம் போய் கேட்டதாம்..அப்பா சொன்னாராம்..'குரங்கிலிருந்து மனுஷன் பிறக்கிறான்'.

திரும்ப குழந்தை அம்மா கிட்ட வந்து..அப்பா சொன்னதை சொன்னதும்..அம்மா சொன்னாளாம்..'எங்க சைட்ல எப்படி வந்தாங்களோ..அதை நான் சொன்னேன்..அப்பா அவர் சைட்ல வந்ததை சொல்றார்'என்று.

கொஞ்சம் சீரியஸ் ஆவோம்..தினசரி பத்திரிகைகளில்..சின்னஞ்சிறுசு குழந்தைகள்..கயவர்களால்..காமுகர்களால்..சீரழிக்கப் படுவதை படிக்கிறோம்..இவர்கள் மனிதர்களா? என்று..இவர்கள் மீது காரி துப்பினாலும்...நமக்கென ஒரு கடமை இருக்கிறது.

நம் குழந்தைகளுக்கு..குட் டச் என்பது எப்படி இருக்கும்...கெட்ட எண்ண தொடுதல் எப்படி என சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக ஒரு கலந்துரையாடல்..10ஆம் தேதி..கிழக்கு பதிப்பக மாடியில் (எல்டாம்ஸ் சாலை..மியூசிக் வேர்ல்ட் எதிரில்) 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.டாகடர்.ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோரிடம்..உங்கள் சந்தேகங்களை இவ் விஷயமாக கேட்டு தெளிவு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கிழ் கண்ட பதிவர்களை தொடர்பு கொள்ளவும்

லக்கிலுக்...9841354308
நர்சிம்...9940666868
அதிஷா..9884881824

பதிவர்களின்...இந்த உருப்படியான செயலில் பங்கு கொண்டு பயனடைவீராக.

Sunday, May 3, 2009

புலவர்களிடம் விளையாடும் தமிழ்..

வறுமையில் வாடிய புலவர் ஒருவர் ..ஒரு வள்ளலிடம் சென்று, அவரைப் புகழ்ந்து பாடினார்.

வள்ளலும்..'இரு... நூறு ரூபாய் தருகிறேன்' என்றார்.

புலவர் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளவில்லை..'இருநூறு'ரூபாய்' தருவதாக சொன்னீர்கள்' என்றார்.

நூறை..இருநூறு ஆக்குகிறீர்களே...என்றார் வள்ளல்.

அதற்கு புலவர் ,,'முன்னூறு ரூபாய் தருவதாக சொன்னீர்கள்' என்றார்.

வள்ளலுக்கு கோபம் வர'எவனையா..முன்னூறு தருவதாகக் கூறியது?' என்றார்.

ஆனால் புலவரோ..'நானூறு தருகிறேன்..என்று..நீங்கள் தானே சொன்னீர்கள்?'என்றார்.

வள்ளல் கூறினார்..நான் உமக்கு நூறு ரூபாய் கொடுப்பதாகத்தான் கூறினேன்.ஆனால்..நீரோ..இருநூறு,முன்னூறு,நானூறு..என உயர்த்தி சொல்கிறீர்களே!" என்றார்.

நான் எங்கே உயர்த்துகிறேன்..நீங்கள் தான் முதலில்..இரு...நூறு தருகிறேன் என்றீர்கள்.நான்..இரு...நூறு இரண்டையும் சேர்த்து இருநூறு என்றேன்.நீங்கள் எப்போது சொன்னேன் என்றதும்..முன்..நூறு தருவதாகச் சொன்னீர்கள் என்பதை..முன்னூறு தருவதாகக் கூறினீர்கள்..என்றேன்.எவனய்யா சொன்னது..என நீங்கள் வினவ..நான் நூறு தருகிறேன் என நீங்கள் சொன்னதைச் சேர்த்து..நானூறு தருவதாகக் கூறினீர்கள் என்றேன்'என்றார் புலவர்.

புலவரின் வாக்குவன்மையையும்..அவரின் தேவை.1000 ரூபாய்(100+200+300+400) என்பதையும் அறிந்து வள்ளல் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

Saturday, May 2, 2009

நடிகர்..தயாரிப்பாளர்..பாலாஜி அமரர் ஆனார்..

தமிழ் படத்தயாரிப்பாளர்களில்..அனேகமாக அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதில்..முதலில் இருப்பவர் பாலாஜி..

மிகுந்த முயற்சிக்குப் பின்..ஜெமினிகணேசனின் ஆதரவுடன்..திரைஉலகில் அறிமுகமானவர் பாலாஜி.ஔவையார் படத்தில்..முருகனாக சிறு பாத்திரத்தில் நடித்தார்.பின்னர் படிப்படியாக முன்னேறி..பானை பிடித்தவள் பாக்யசாலி,மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகன் ஆனார்.சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார்.

பின்..தன் மகள் சுஜாதா பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.ஜெமினி நடிக்க அண்ணாவின் ஆசை..இவர் தயாரித்த முதல் படம்.அது ஓரளவு வெற்றி பெற..தன் படத்தயாரிப்பைத் தொடர்ந்தார்.

சிவாஜியை வைத்து..திருடன்,தங்கை,எங்கிருந்தோ வந்தாள்..என் தம்பி..போன்று பல படங்களை எடுத்தார்.

பின்னர் கமலை வைத்து சில படங்கள் வந்தது..(சவால்)

பின் ரஜினியை வைத்து...தீ..பில்லா போன்ற வெற்றி படங்கள் தயாரித்தார்.

தமிழ்த் திரை உலகில் ராசியான தயாரிப்பாளர் ஆனார்., ஆனால் நடிப்பதையும் விட்டு விடவில்லை..கிட்டத்தட்ட அவர் படங்களில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை அவரே செய்வார்.

சமீபத்தில் மீண்டும் தன் மகன் தயாரிப்பில் ஈடுபட...அஜித் நடிக்க பில்லா படமும்...சமீபத்தில் யாவரும் நலம் படமும் இவருடையதே..

எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத இவர் கடைசியாக ஜெயா டிவியில்..திரும்பிப்பார்க்கிறேன்..என்ற நிகழ்ச்சியில் சமீபத்திதான் கலந்துக் கொண்டார்.

மோகன்லால் இவரது மருமகன் ஆவார்

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டவர் இன்று அமரர் ஆனார்.

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

சிவாஜி ஒரு சகாப்தம் - 9

1962ல் வெளியான படங்கள்

பார்த்தால் பசி தீரும்
நிச்சயதாம்பூலம்
வளர்பிறை
படித்தால் மட்டும் போதுமா
பலே பாண்டியா
வடிவுக்கு வளைகாப்பு
செந்தாமரை
பந்தபாசம்
ஆலயமணி

சிவாஜி..பீம்சிங் கூட்டணியில்..பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா? இரண்டுமே நூறு நாட்கள் படம்.தொடர்ந்து ஒரு நடிகரும்..இயக்குநரும்..பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்கள்.அவற்றில் 3 படங்கள் வெள்ளிவிழா.இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.

ஆலயமணி..கே.ஷங்கர் இயக்கத்தில்..நடிகர் பி.எஸ்.வீரப்பா எடுத்த படம்.100 நாட்கள் படம்.அருமையான பாடல்கள்.
கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும்,சட்டி சுட்டதடா..போன்ற பாடல்கள்.

இந்த வருடம் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.நயாகரா நகரம்.சிவாஜிக்கு ஒரு நாள் மேயராக பதவி அளித்து கௌரவித்தது.

மற்ற படங்கள் பிரபல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் ஆகியோருடன்..சிவாஜியின் அற்புத நடிப்பும் இருந்தும்..பிரமாத வெற்றி அடையவில்லை.

1963 படங்கள் அடுத்த பதிவில் காணலாம்.

Friday, May 1, 2009

பத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் மோகன்லால் நடிப்பது தெரிந்த விஷயம்.

இது பற்றி கமல் கூறுகையில்..'மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டன.இம்மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும்.உடனுக்குடன் எடிட்டிங்கும் முடிந்துவிடுகிறது.என்னை அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா ஆகஸ்டில் பொன்விழா கொண்டாடுகிறது.அதே மாதத்தில் இப்படத்தை வெளியிட ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.'என்றார்.

இப்படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலை ஏன் நடிக்க வைத்துள்ளீர்கள் எனக் கேட்கிறார்கள்.என்னை தமிழன் என மலையாள ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.அப்படியிருந்திருந்தால்..என்னால் அங்கு 40 படங்கள் நடித்திருக்க முடியாது.மோகன்லால் சிறந்த நடிகர்..a wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் இது.இப்படம் அனைத்து ரசிகர்களையும் சென்று அடையுமா எனத் தெரியாது.அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்துவது எளிதல்ல.எம்.ஜி.ஆர்., நடித்த பாசம் படம் பரமக்குடியில் 10நாட்கள் தான் ஓடியது என்றும் கூறினார்.

இப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன் இசை அமைக்கிறார்.இரா.முருகன் வசனங்களை எழுத..மனுஷ்யபுத்திரன் பாடல்களை எழுதிகிறார்.

உன்னைப்போல் ஒருவன்...ஜெயகாந்தனின் ஒரு நாவல் பெயர்..இப்பெயரிலேயே ஜெயகாந்தன் படம் எடுத்து...தேசியவிருது பெற்றார்..என்பது ஒரு உபரி செய்தி.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (1-5-09)

1.மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித கர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம்.அதில் அறிவாளிகளும்(உங்களைச்சொல்லலைங்க), ஞானிகளும் கூட விதிவிலக்கல்ல.பிறரைவிட நாம் ஞானத்தில் பெரியவர்கள், அறிவில் பெரியவர்கள்..என்ற எண்ணம் இயல்பாகவே வந்துவிடுகிறது.பிறை தாழ்த்திப் பார்ப்பதில் ஒரு இன்பம்.

2.உலகத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாகத்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல்..இவை எல்லாம் உலகம் முழுதும் அழகுதான்.

3.உப்பு...இனிப்பாக மாறுமா? கண்டிப்பாக மாறும்.வியர்வைவர உழைத்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.வியர்வை..உப்பு...அதனால் வாழ்வில் கிடைப்பது இனிப்பு.

4.அட்சயதிரிதியைக்கு மட்டுமல்ல..நம் வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளது தங்கம்.பொற்றாமரை பாதங்கள் என்கிறோம்.பொன்னான வாய்ப்பு..என்கிறோம்.குழந்தையை கொஞ்சும் போது 'என் தங்கமே'என்கிறோம்.பூமியை பொன் விளையும் பூமி என்கிறோம்.நல்ல காலத்தை பொற்காலம் என்கிறோம்...மனைவியை..ச்சின்னப்பையன் போன்றோர் தங்கமணி என்கிறார்கள்.

5.காய்கறிக்காரன்,ஆட்டோக்காரன் இவர்களுடன் பணத்திற்கு பேரம் பேசுகிறோம்.அவர்களிடம் கோபமாக பேசுகிறோம்.ஆனால் ..செய்தித்தாள்களில் அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான ஊழல்
பற்றி படிக்கும் போது கோபம் கொள்வதில்லை.ஏமாற்றுவது ஒரு குற்றம் என்ற மனப்பாங்கு..நம்பிக்கை நம்மைவிட்டு போய் விட்டது.

6.வழுக்கை

பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமியாய் ஆனது தலை

7.தலைவர் ஏன் திடீர் உண்ணாவிரதம் இருக்கார்..
வயிறு சரியில்லையாம்...டாகடர் ஒரு நாள் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கச் சொல்லியிருக்காராம்.