Saturday, July 31, 2010

உயிர் காப்பான் தோழன்


இன்று நண்பர்கள் தினம்..உயிர் காப்பான் தோழன் என்பார்கள்..

தாய்,தந்தை,உறவு,மனைவி இவர்களுடன் கூட பகிரமுடியாத சில அந்தரங்களை நண்பர்களிடம் மட்டுமே பகிரமுடியும்.அந்த அளவு வலிமை வாய்ந்தது நட்பு.

இந்நாளில் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளும்..நன்றியும்..

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளுவர் நட்பு,நட்பாராய்தல்,பழமை,தீ நட்பு, கூடா நட்பு ஆகிய ஐந்து அதிகாரங்களில் சொல்லியுள்ளதை..எளிமையாகக் கொடுத்துள்ளேன்.

79.நட்பு

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்
அது ஏற்ற செயலாகும்.

2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.
அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.

3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்
நட்பு இன்பம் தரும்.

4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போது
இடித்து திருத்துவதற்கும் ஆகும்.

5.நட்புக்கொள்ள ஒருவருடன் தொடர்பும்..பழக்கமும் இருக்க வேண்டும் என்பதல்ல..
அவருடைய ஒத்த மன உணர்ச்சியே போதுமானது.

6.முகமலர்ச்சி மட்டும் நட்பு அல்ல..நெஞ்ச மலர்ச்சியும் உண்மையான நட்புக்கு தேவை.

7.அழிவைத் தரும் தீமையை நீக்கி..நல்ல வழியில் நடக்கச்செய்து அழிவு காலத்தில் உடனிருந்து
துன்பப்படுவதே நட்பாகும்.

8.அணிந்திருக்கும் உடை நெகிழும்போது..கைகள் உடனடி செயல்பட்டு சரி செய்வதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் களைவதே சிறப்பு.

9.மன வேறுபாடு கொள்ளாது தன்னால் முடியும் போதெல்லாம் உதவி செய்து நண்பனை
தாங்குவதே நட்பின் சிறப்பாகும்.

10.நண்பர்கள் ஒருவருக்கொருவர்..இவர் இப்படி..நான் அப்படி என செயற்கையாக புகழும்போது
நட்பின் பெருமை குறையும்.

80.நட்பாராய்தல்

1.ஆராயாமல் கொள்ளும் தீய நட்பு பின்னர் விடுபட முடியா அளவுக்கு கேடுகளை உண்டாக்கும்.

2.மீண்டும்..மீண்டும் ஆராயாமல் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு..இறுதியில் சாவதற்கு காரணமாகிற
அளவு துயரத்தைக் கொடுக்கும்.

3.குணம்,குடிபிறப்பு,குற்றங்கள்,குறையா இயல்புகள் என அனைத்தும் அறிந்தே ஒருவருடன் நட்பு
கொள்ள வேண்டும்.

4.உயர்குடியில் பிறந்து பழிக்கு நாணுகின்றவனின் நட்பை எப்பாடுபட்டாவது பெறவேண்டும்.

5.தீமையான செயல்களை செய்யும் போது கண்டித்து சொல்லி,அறிவுரை வழங்கும் ஆற்றலுள்ளவரின்
நட்பே சிறந்த நட்பாகும்.

6.தீமை வருவதும் நன்மைதான்..அப்போதுதான் நம் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியமுடியும்.

7.அறிவில்லாதவருடன் செய்துக் கொண்ட நட்பிலிருந்து நீங்குதலே ஒருவனுக்கு பெரும் பயனுடையதாக
அமையும்.

8.ஊக்கம் குறையும் செயல்களையும்,துன்பம் வரும்போது விலகும் நண்பர்களையும் விட்டுவிட வேண்டும்.

9.இறக்கும் தறுவாயிலும்..நமக்கு கேடு வரும்போது கைவிட்டு ஓடிய நண்பர்களின் நினைப்பு வந்தால்..
அது உள்ளத்தை வறுத்தும்.

10.குற்றமற்றவர்களை நண்பனாகக் கொள்ள வேண்டும்..இல்லாதவர் நட்பை எந்த விலைக் கொடுத்தாவது
விலக்க வேண்டும்.

81.பழைமை

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.

2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.

3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமே
செய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.

4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..
நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக் கொள்வர்.

5.வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை மட்டுமல்ல..
மிகுந்த உரிமையே என்று எண்ண வேண்டும்.

6.நீண்டநாள் நண்பகள் தமக்கு கேடு செய்வதாக இருந்தாலும் நட்பின் இலக்கணம்
தெரிந்தவர்கள் அந்த நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7.பழைய நண்பர்கள் அன்புடன் அழிவு தரும் செயல்களைச் செய்தாலும்
நட்பு கொண்டவர்கள் அன்பு நீங்காமலிருப்பர்.

8.பழகிய நண்பர் செய்த தவறுப்பற்றிப் பிறர் கூறினாலும் கேளாமலிருப்பவர்க்கு..
அந்நண்பர் தவறு செய்தால் அந்நட்பால் என்ன பயன்.

9.பழைய நண்பரின் நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகு போற்றும்.

10.பழகிய நண்பர்கள் தவறு செய்தாலும் ..அவர்களிடம் தமக்குள்ள அன்பை
நீக்கிக் கொள்ளாதவரை பகைவரும் விரும்புவர்.

82.தீ நட்பு

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை
குறைத்துக் கொள்வதே நல்லது.

2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்
நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.

3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்
போன்றவர்களுக்கு ஒப்பாவார்.

4.போர்க்களத்தில்..நம்மைத் தள்ளிவிட்டு ஓடும் அறிவற்ற குதிரையைப் போன்றவர் நட்பைப்
பெறுவதைவிட அந்த நட்பு இல்லாததே சிறந்ததாகும்.

5.தீய நட்பு..பாதுகாப்பாக அமையாததாகும்...அவர்களுடன் நட்பு கொள்வதைவிட அந்நட்பை
ஏற்காமல் இருப்பதே நலம்.

6.அறிவில்லாதவரின் நட்பைவிட..அறிவுள்ளவர்களிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு
நன்மை தருவதாகும்.

7.சிரித்துப்பேசி நடிப்பவரின் நட்பைவிட பகைவர்களால் வரும் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.

8.நிறைவேற்ற முடியும் செயலையும் முடிக்க விடாதவர் உறவை..அவர் அறியாதபடி மெல்ல மெல்ல
விட்டு விட வேண்டும்.

9.சொல் ஒன்று,செயல் ஒன்று என்றுள்ளவர்களின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

10.தனியாக உள்ளபோது இனிமையாக பேசி..பொது மன்றத்தில் பழித்துப் பேசுவோர் நட்பு நம்மை
சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

83.கூடா நட்பு

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்ற
கல்லுக்கு ஒப்பாகும்.

2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக
வேறுபட்டு நிற்கும்.

3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.

4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு, அஞ்சி ஒதுங்கவேண்டும்.

5.மனம் வேறு..செயல் வேறாக இருப்பவர்களின் நட்புக்கு அஞ்சி ஒதுங்க வேண்டும்.

6.நண்பர் போல பகைவர் பழகினாலும்..அவர் சொல்லும் சொற்களில் அவர்களது உண்மைத் தன்மை வெளிப்படும்.

7.பகைவரின் சொல் வணக்கம் என்பது..வளையும் வில் போல தீங்கு விளைவிக்கூடியது.

8.பகைவர் வணங்கும் கையினுள்ளும் கொலைக்கருவி இருக்கும்.அவர் கண்ணீர் விட்டாலும் அது போலிக்கண்ணீரே

9.வெளியே நண்பர் போல மகிழ்ந்து அகத்தில் இகழ்கின்றவரின்..நட்பை நலிவடையச்செய்ய நாமும் அதே முறையை
கைப்பிடிக்க வேண்டும்.

10.பகைவருடன் பழகும் காலம் வரும்போது..முகத்தளவில் நட்புக் கொண்டு வாய்ப்பு வரும் போது அந்த நட்பை
விட்டுவிட வேண்டும்.

Friday, July 30, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (30-7-10)

உயிர் வாழ இன்றியமையாத உணவுப் பொருள்களைப் 'படி' என்பது வழக்கம்.இன்றும் பஞ்சப்படி,வீட்டு வாடகைப் படி என அது வழக்கில் உள்ளது. அதுபோல இன்றியமையா உணவு முதலியவற்றை இயற்கை நமக்கு வழங்கி வருவதால் 'இயற்கை படி அளக்கிறது' என்கிறோம்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் 'இறைவன் படியளக்கிறான்' என்பார்கள்.அளத்தல் என்பது கொடுத்தல்,தருதல்,செலுத்துதல் ஆகியவற்றை குறிக்கும்.

2)நீ பணக்காரன் என்பதால்..பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்கலாம் என எண்ணாதே! யார் உன் பணத்துக்கு மசிந்தாலும் காலனிடம் நீ லஞ்சம் கொடுத்து தப்பமுடியாது..(எங்கோ படித்தது)

3)தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு வாழ்நாளில் ஒவ்வாமை என்னும் நோய் வருவதில்லை.

4)பெண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் பெண்ணை 'வஞ்சி' என்றார்கள்.மனம் கன்னிப் போனவர்கள் எல்லாம் 'கன்னி' என்றழைத்தார்கள்.காதலில் தோல்வியுற்று குமரிக் கடலில் விழுந்தவர்கள் 'குமரி'என்றார்கள்.மது அருந்தியபின் கால் வாங்கியதால் 'மாது' என்றார்கள்.உள்ளதெல்லாம் அவள் மூலம் இழப்பதால் 'இல்லாள்' என்றார்கள். - கண்ணதாசன்

5)ஏவீ.எம் தயாரித்த 'அந்த நாள்' படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் அந்த நாளிலேயே லட்சம் ரூபாய் கேட்டாராம்.அவ்வளவு பணம் கொடுக்க முடியா நிறுவனம்..ஆனால் அப்பாத்திரத்தில் அவர் தான் நடிக்க வேண்டும் என விரும்பியதாம்.படத்தின் இயக்குநர் உடனே கால்ஷீட்டிற்கு இவ்வளவு என சம்பளம் பேசி சிவாஜியை புக் செய்தாராம்.எட்டு கால்ஷீட் முடிந்ததும் 'அடுத்து என்று ஷூட்டிங்' என்றாராம் சிவாஜி.'நீர் வரவேண்டாம்..உமது வேலை படத்தில் முடிந்து விட்டது' என்றார் இயக்குநர்.இப்படி ஒரு சிறு தொகையில் வேலையை முடித்த அந்த இயக்குநர் எஸ்.பாலசந்தர்

6)மனிதன் இறந்ததும் அவனது உறுப்புகள் செயல் இழக்கும் நேரங்கள்..கண்கள் 31 நிமிடங்கள், கால்கள் 4 மணி நேரம். மூளை 10 நிமிடங்கள், இதயம் ஒரு நிமிடம், தசைகள் 5 நாட்கள்

7) சென்ற வாரம் நான் படித்தவற்றுள் சிறந்த இடுகை இது..தமிழா..தமிழாவின் மகுடம் இந்த வாரம் இந்த இடுகைக்கு..வாழ்த்துகள் வினவு

8) கொசுறு ஒரு ஜோக்

என் மேலதிகாரி சரியான நன்றி கெட்ட ஜென்மம்..எதைக் கேட்டாலும் 'வள்..வள்..'ன்னு விழுவார்
'வள்..வள்' ன்னு விழறவர் நன்றியுள்ளவராகத்தானே இருக்க முடியும்.

Thursday, July 29, 2010

கேபிளாரின் வேடம் கலைகிறது


கேபிள் சங்கர்...தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களில் அனைவராலும் அறியப்பட்ட பதிவாளர்.

இவர் இவ்வளவு நாட்களாக போட்டுக் கொண்டிருந்த வேஷம் சிறிது சிறிதாகக் கலைந்து வருகிறது.

இவர் 'டக்கீலா' கதைகளும், நிதர்சனக் கதைகளும்,கொத்து பரோட்டாவும், அதில் போடும் A ஜோக்குகளும்,சாப்பாட்டுக் கடையும்..அவ்வப்போது நானும் 'யூத்து தான்" என சுய விளம்பரங்களும்..சக பதிவர்களிடம்..இவர் யூத்துதான் போல இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கி வந்தது.

இந்நிலையில்..இன்று இவரது வேஷம் சிறிது கலையத் தொடங்கியுள்ளது.

ஆம்..இன்று அவர் வயது மேலும் ஒன்று அதிகரிக்கிறது..

இப்படி..இன்னும் சில ஆண்டுகள் அவர் பிறந்த நாள் வரும் போது அவரின் யூத் முகத்திரை முழுதும் கிழியும்.

இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு..நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உடன்..இன்று பதிவுலக மார்க்கண்டேயன் ..முந்தைய தன் ஏழு மூதாதையரை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவிற்கும் பிறந்த நாள்.

அவருக்கும் நம் பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் மண்குதிரையா...?

தமிழகத்தில்..காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை இழந்த 1967 முதல்.. அது வெற்றி வாய்ப்பை பெறவில்லை.தவிர்த்து..தி.மு.க., உடைந்து அ.தி.மு.க., உருவானதும் அதன் நிலைமை மேலும் மோசமானது.ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலே ..அக்கட்சி சட்டசபையில் நுழைய முடிந்தது..அதே போன்று காங்கிரசுடன் கூட்டணியால் தான் திராவிடக் கட்சிகளுக்கும் கூட்டணிக்கு ஏற்றார்போல் நாடாளுமன்றத்தில் நுழைய முடிந்தது.மத்திய அமைச்சர்கள் பேரம் பேச முடிந்தது.

ஆனால்..சமீப காலமாக ராகுல் காந்தி கட்சிக்கு புது ரத்தம் ஊட்ட முற்பட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்கு அச்சாரமாக உத்தரபிரதேஷ்,பீஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரசால்
கணிசமான இடங்கள் வெற்றிபெற முடிந்தது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு ராகுல் ஆலோசனையின் பெயரிலேயே தமிழகத்திலும் காங்கிரஸ் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதற்கேற்றாற் போல ராகுலும் இரண்டு முறை தமிழகம் வந்தும் கலைஞரை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார்.

காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெ விரும்புகிறார்.அதற்கான முயற்சிகள் நடந்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.அதனால் தான் கோவை யில் அவர் பேசுகையில் கூட 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி உருவாகும்..அதை நான் கவனித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

தங்கள் கூட்டணியில்..காங்கிரசை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு உள்ளது. 18 எம்.பி.க்களை தன் வசம் வைத்துள்ள தி.மு.க.,மத்தியில் 3 கேபினட் அமைச்சர்கள்,4 இணை அமைச்சர்களை பேரத்தில் பெற்றிபெற்றருக்கிறது. ஸபெக்ட்ரம் ஊழல்,அழகிரியின் மொழிபிரச்னை போன்றவை இருந்தாலும் மைய அரசுக்கு பல விஷயங்களில் சாதகமாகவே தி.மு.க., இருப்பதால்..2011ல் கூட்டணி மாறினால் பிரச்னைகள் எழும் என காங்கிரஸ், கூட்டணயை மாற்றவும் தயங்குகிறது.இது தி.மு.க.விற்கு சாதகம்.

தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவதில் பெரும் பங்கு காங்கிரஸிற்கு இருக்கும் என்பதால்...அதை இப்போது உணர்ந்து சட்டசபையில் ஆட்சியிலும் இம்முறை பங்கு கேட்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தி.மு.க., தங்கள் கூட்டணியில் இம்முறை ம.தி.மு.க.,வையும் எதிர்பார்க்கும் எனத் தெரிகிறது.அதனாலேயே வைகோ வை பாராட்டி முரசொலி சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.பா.ம.க., வையும் தி.மு.க. எதிர்பார்க்கிறது. அதனாலேயே..டா ஸ்மாக் ஊழியர் பற்றி ராமதாஸ் கூறியதற்கு..மதுவிலக்கு ஏற்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது என கலைஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில்..செம்மொழி மாநாடு, அ.தி.மு.க., கூட்டம் என அல்லோகலப்பட்ட கோவையில் ஆகஸ்ட் 2ஆம் நாள் தி.மு.க., பொதுகூட்டம் நடைபெற உள்ளது.கலைஞர் கலந்து கொள்ளும் இக்கூட்டத்திற்கு ஜெ க்கு வந்த கூட்டத்திற்கு மேல் கூட்டம் கூட்டவேண்டும் என ரகசிய உத்தரவு.

எல்லாவற்றையும்..calmஆக கையில் ஓட்டுச் சீட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் காமன் மேன்.

Tuesday, July 27, 2010

திரைப்பட இயக்குநர்கள் -1 S.S.வாசன்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரைப் பற்றி ஒரு தொடர் இது.தமிழ்த் திரைப்படங்களை இயக்கி சரித்திரம் படைத்த சில இயக்குநர்களின் விவரங்கள் இதில் இடம்பெற உள்ளன.

சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் மார்ச் 10 ஆம் நாள் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.இவரே பின்னாளில் பெரும் புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

1928ல் ஆனந்தவிகடனை வாங்கி நடத்திவந்த இவர்..நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எழுத்தாளராய் திகழ்ந்தார்.இவரது நாவலான 'சதி லீலாவதி' யை மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.1941ல் அந்த நிறுவனம் தீக்கிறையானது.அதனால் நஷ்டப்பட்ட அந்நிறுவனத்தை வாங்கி மீண்டும் கட்டி அங்கு 'ஜெமினி ஸ்டூடியோ' வை நிறுவினார் வாசன்.பின் முழு நேர வெற்றி படத் தயாரிப்பாளர் ஆனார்.1969ல் இந்திய அரசு 'பத்மபூஷன்' தேசிய விருதை வழங்கி அவரை கவுரவித்தது.தவிர்த்து தமிழ்த் திரையுலகின் 'சிசில் பி டிமிலி' என மக்களால் போற்றப்பட்டார்.Film federation of india வின் தலைவராய் இருந்தார்.ராஜ்ய சபா எம்.பி, ஆகவும் இருந்தார்.ஜெமினி நிறுவனம் மூலம் அவரது காலத்தில் 30 படங்களுக்கு மேல் வந்துள்ளது.அவற்றைப் பற்றி சிறு குறிப்பு.

1948ல் சந்திரலேகா..ஹிந்தி,தமிழ் என இரு மொழிகளிலும் வாசன் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.அந்த காலத்திலேயே இப்படம் 600 பிரிண்ட்கள் போடப்பட்டது.முதல் முறையாக ஒரு
திரைப்படம் நாடு முழுதும் வெற்றி பெற்ற பெருமையை இப்படம் பெற்றது.இந்த படத்தில் டிரம் நடனம் இன்றும் பேசப்படுகிறது.

1951ல் சன்சார், சம்சாரம் ஆகிய படங்களை தயாரித்து இயக்கினார்.இவர் தயாரித்து இயக்கிய மற்ற படங்கள்..

மிஸ்டர் சம்பத் (1952) (ஹிந்தி)

பகுத் தின் ஹுயே (1954)

இன்ஸானியத் (1955) ஹிந்தி மற்றும் தமிழ்

வஞ்சிக் கோட்டை வாலிபன் (1958) ஜெமினி,பத்மினி,வைஜெயந்தி மாலா,வீரப்பா ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றி படம்.நடனப் போட்டி இன்றும் மறக்க முடியாமல்'சபாஷ் சரியான போட்டி' என்று சொல்ல வைக்கிறது.

ராஜ் திலக் (1958) வஞ்சிக் கோட்டை..ஹிந்தியில்

பைகம் (1959)ல் ஹிந்தி.. 1960ல் சிவாஜி, வைஜெயந்தி நடித்து வந்த 'இரும்புத்திரை"

கரானா (1961)

தீன் பஹுருன்னியான் (ஹிந்தி)

ஸ்த்ரஞ் (1969)

தவிர்த்து வாசன் தன் தயாரிப்பில் மற்ற இயக்குநர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்துள்ளார்.

1947ல் மிஸ் .மாலினி இப்படத்தில் தான் ஜெமினி கணேசன் அறிமுகம்.

1953ல்ஔவையார் படத்தில் கே.பி.சுந்தராம்பாள் நடிக்க வேண்டும் என நினைத்த வாசன்..அவரை அணுக..கணவரை இழந்தது முதல் திரையலகை விட்டு விலகி இருந்த சுந்தராம்பாள்..நடிப்பை தட்டிக் கழிக்க எண்ணி அதிக சம்பளமாக ஒரு லட்சம் கேட்க உடனே சம்மத்தித்தார் வாசன்.இந்த இரு படங்களையும் 'கொத்தமங்கலம்' சுப்பு இயக்கினார்..தவிர்த்து இரும்புத்திரையின் ஹிந்தி வடிவை ராமானந்த் சாகர் இயக்கினார்.


1968ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிக்க எம்.ஜி.ஆரின்.125 ஆவது படமான ஒளிவிளக்கு படத்தை சாணக்கியா வை இயக்கச் செய்தார் வாசன்.

வாசன் தயாரிப்பில் வந்த மற்ற வெற்றிபடங்கள், மங்கம்மா சபதம், கண்ணம்மா என் காதலி,வள்ளியின் செல்வன்,மூன்று பிள்ளைகள் அபூர்வ சகோதரர்கள் ஆகியவை.

வாசன் 1969 ஆம் ஆண்டு அமரரானார்.

Monday, July 26, 2010

கம்பனும்..குரங்கும்..(கொஞ்சி விளையாடும் தமிழ் - 19)நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..

நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..

இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...

ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..

அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..

அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புநீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.
..


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவு படத்தவனுக்கு ,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

கதையான போதிலும்....கருத்துள்ள பாடமே...

ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.

ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.

ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.

நீதி - நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.

Sunday, July 25, 2010

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

பதிவுலகம் என்பது நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.

அச்சில் பார்க்க முடியா நம் படைப்புகளை..நம் வலைப்பூவில் எழுதி..அதை மற்ற பதிவர்களும் படித்து..அதற்கான பின்னூட்டம் இட்டு...ஆதரவு ஒட்டுகள் பெற்று...அடடா..நம் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்ற மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தவிர்த்து..நமக்குள் ஒரு அருமையான நட்பு வட்டத்தையும் உருவாக்குகிறது.

இன்று..அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற வலைப்பூ, கட்சிகளே நடத்தும் வலைப்பூ, குறிப்பிட்ட ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்கும் வலைப்பூ என அனேகம் உள்ளன.

சமீபத்தில் சர்ச்சைக் குரிய ஒரு நிகழ்வு குறித்து ஊடகங்கள் பற்றியும்,அரசியல் தலைவர்களை இணைத்தும் பல பதிவர்கள் பதிவிட்டிருந்தனர்.

நான் அதை தவறு என்று சொல்லவில்லை.. நம் கருத்தை நாம் தெரிவிப்பது தவறில்லை..

ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும்..

எல்லை மீறும் எந்த ஒரு செயலும்,நிகழ்வும் தவறாகும்.

பதிவர்கள் நாம் பெரும்பாலோர் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து, மாதசம்பளம் பெற்று வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.அவர்களுக்கு ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு...ஏன்..இல்லையென்றே கூறலாம்.

ஆகவே பதிவர்கள்...சர்ச்சை பதிவுகளுக்கும்..உணர்ச்சி தூண்டப்படும் பதிவுகளுக்கும்..அரசியல் ஆதாயம் வேண்டி எழுதப்படும் பதிவுகளுக்கும்..வரம்பு மீறாமல்..எல்லை மீறாமல் .சட்டச்சிக்கலில் மாட்டாதவிதமாக தங்கள் எண்ணங்களை பதிவிடவும்..

மீறி பதிவிடும்போது..சிக்கல்கள் வந்தால்..நம் எழுத்தால் ஆதாயம் அடைந்த யாரும் , நம் உதவிக்கு வர மாட்டார்கள் என்பதை மறக்காதீர்கள்.

Saturday, July 24, 2010

பாலைவனம்

இசைக்கருவியின்றி

இசை எழுப்புகிறது

கடலலைகள்


2)இந்து

முஸ்லீம்

கிறிஸ்துவன்

யாராயினும்

ரத்தவகைகள் ஒன்றுதான்


3)இன்னல்கள் ஏதிருந்தாலும்

மறக்க வைத்து விடுகிறது

இன்பத்தைத் தந்து

விசும்பு


4)இறந்த உடல்

அழும் உறவுகள்

இனி இந்த குடும்பத்தைக்

காப்பாற்றுவது யார்

கேள்வி எழுந்ததும்

பாலைவனமானது இடம்

Friday, July 23, 2010

தேங்காய்-..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (23-7-10)


1) இந்தியாவில் அதிகம் பேர் வேலை பார்ப்பது ரயில்வே துறையில்தான்.இத் துறை 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கின்றனர்

2)உலகின் மிகப் பெரிய நூலகம் வாஷிங்டனில் உள்ளது.இது 1800ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்நூலகத்தில் 8.75 கோடி புத்தகங்கள் உள்ளனவாம்.

3)அ.தி.மு.க.,விலிருந்து பிரபலங்கள் பலர் தி.மு.க.,விற்கு சென்றுக் கொண்டிருப்பதால்..அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்த ஜெ..கோவை..பொதுக்கூட்டத்தில் 'நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்' என்று பேசினாராம்.அதைக் கேட்ட சில ரத்தத்தின் ரத்தங்கள் ' கட்சி மாறும் எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.

4) இதயமும், நுரையீரலும் சரியாக இயங்க தைராயிடு சுரப்பி முக்கிய பங்காற்றுகிறது.தைராயிடு சுரப்பி நன்கு சுரந்தால்தான் உடலின் சக்தி அதிக அளவாக இருக்கும்.தைராயிடு problem இருப்பவர்கள் அதை அலட்சியம் செய்யாது..உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மாத்திரைகளை விடாது சாப்பிடவும்.

5)ஒவ்வொரு நாளும் நமது மூக்கு 14 கன மீட்டர் காற்றை குளிர்விக்கிறதாம்.இது ஒரு சிறிய அறையில் நிரம்பியிருக்கும் காற்றின் அளவாகும்.

6)ஐ.நா., வளர்ச்சிக் குழுவில் இடம் பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.பணத்தேவை உள்ள இடங்களையும்,மக்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்வது இக் குழுவின் வேலை.பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பணக்காரர்கள் இடம் பெற்றிருக்கும் இக் குழுவில் ஒரு இந்தியர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

7)சென்ற வாரம் நான் படித்த இடுகைகளில் தமிழா தமிழா வின் மகுட இடுகை இதுதான் ..வாழ்த்துகள் குமரன்

8)கொசுறு ஒரு ஜோக்..

ரீடர்ஸ் டைஜஸ்டில் நான் படித்த ஜோக்..

one sunday our house was filled with friends watching the finals of a foot-ball tournament.As the game was ending, my brother-in-law, a sold ier , called all the way from Japan where he is stationed.As he spoke with my wife, I told my pals 'He is 14 hours ahead of us.It is already monday there'.
one of my friend had a brilliant suggesion 'Ask him who won.'

Thursday, July 22, 2010

களவாணி..- என் பார்வையில்


இந்த இடுகையை போடுவதா..வேண்டாமா..என பல நாட்களாக டிராஃப்டிலேயே வைத்திருந்தேன்..இன்று ஏனோ போடவேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படம்..நல்ல பொழுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை. நகைச்சுவைக்கு நகைச்சுவை..கிராமத்துக் காட்சிகள் ..ரிகார்ட் டான்ஸ்..வெட்டு குத்து என எல்லாம் சரிவிகித கலவை.கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் எல்லாம் நரசிம்ம ராவ்களையும் சிரிக்க வைக்கும்.நாயக,நாயகி,நண்பர்கள் எல்லாம் இதிலும் உண்டு.இரண்டு மணி நேரம் படம் போனதே தெரியவில்லை.படத்தில் தொய்வென்பதே இல்லை..

இந்நிலையில்..இப்படம் கூறுவதென்ன..

அன்று பாரதிராஜா ஆரம்பித்து வைத்த அலைகள் ஓய்வதில்லை....யின் அலைகள் ஒயவில்லை.

இதே கதையம்சம் கொண்டு எவ்வளவு படங்கள்..காதல்,சுப்ரமணியபுரம் எல்லாம் இதே ரகம்தான்.

பால்ய விவாகம் என்பது..சட்டத்திற்கு விரோதமானது..ஆனால் இந்த படத்தில் எல்லாம் 10ஆம் வகுப்பு..11ஆம் வகுப்பு படிக்கும் பெண்கள்..சிறுமிகள் என்றே சொல்லலாம் ஏனெனில் வயது 16க்குள் தான் இருக்கும்..இவர்களுக்கு படிக்காமல்..ஊர் சுற்றி திரியும்..வம்பு சண்டைகளை விலைக்கு வாங்கி..வில்லனுடன் போராடி..இரு தரப்பிலும் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி..கடைசியில்..எவ்வளவு பெரிய காயங்களானாலும் அடுத்த காட்சியிலே ஜான்சன் பேன்டெய்ட் போட்டு வரும் நபருடன் காதல்.

பள்ளி சிறுவர், சிறுமியர் மனதில் இது போன்ற ஆசை நஞ்சை விதைத்து படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமா? என்பதே கேள்வி.

கட்டபொம்மன் என்றால் ,வ.உ.சி., என்றால்,கர்ணன் என்றால் பாரதி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என அந்த நாளில் சிறுவர்கள் மனதில் வேரூன்ற வைத்தன படங்கள்..அன்றும் காதல் காட்சிகள் வந்தன..ஆனால் இளமைப் பருவத்தில்.. அப்படித்தான் சித்தரித்தன படங்கள்.

இன்று செய்தித்தாள்களைப் பார்த்தாலே..காதலன் காதலி ஓட்டம், கணவனைக் கொன்ற மனைவி,கள்ளக் காதல் காரணமா? வெட்டி கொலை, இப்படிப்பட்ட செய்திகளையே பார்க்க முடிகிறது.

அன்றும் படங்களைப் பார்த்து கொன்றேன் என கொலைகாரர்கள் கூறியதுண்டு..ஆனால் அவை சொற்பம்..

இன்றோ...நடைபெற்று வரும் பாதி குற்றங்களில்..குற்றவாளிகள்..சினிமாவைப் பார்த்துதான் அதுபோல செய்தோம் என்கின்றனர்.

இதைத் தெரிந்துக் கொண்டவர்கள் ..குற்றத்திற்கான் தண்டனையை நினைப்பதில்லை..

படத்தில்...ஆறு மாத தண்டனைக்குப் பிறகு..ஒரு வருடத்திற்குப் பிறகு என அடுத்தக் காட்சியிலேயே வரும்..வாழ்வில் அந்த தண்டனைக் காலம்..எதிர் கால வாழ்வையே பாதிக்கும் என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணரவில்லை.

இயக்குநர்களே..சினிமா ஒரு பவல்ஃபுல் மீடியா..அதில் ஈடுபடும் அதிர்ஷடம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது..சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றி வெற்றிகளை குவியுங்கள்..

வெற்றி பெறுவது என்பதைவிட எப்படி வெற்றி பெற்றோம் என்பதே உண்மையான வெற்றியாகும்.

டிஸ்கி..இந்த இடுகைக்கு ஆதரவு..எதிர் ஒட்டு போடும் அனைவருக்கும் நன்றி

Wednesday, July 21, 2010

தமிழகம் தொழில் நகரமாகிக் கொண்டிருக்கிறது

நண்பர் அக்பர் எனது இந்த பதிவிற்கு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுள்ளார்.

//மற்ற மாவட்டங்களுக்கும் தொழிற்சாலைகளை அமைத்தால்தானே சீரான முன்னேற்றம் ஏற்படும்//

ஆம்..உண்மை..ஆனால் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆனால்..சென்னை போன்ற பெரு நகரங்களை ஏன் தொழிலதிபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்..பார்ப்போம்

ஒரு இடத்தில் ஒரு தொழிற்சாலை உருவாக வேண்டுமெனில் தொழிலதிபர்கள் பல வசதிகளை எதிர்பார்ப்பதுண்டு.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் finished pruductஐ ஏற்றுமதிக்கு எடுத்துச் செல்ல துறைமுகம் அருகில் இருக்க வேண்டும்.துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல ரயில்/லாரி போன்ற போக்குவரத்து வசதி.

சுற்று வட்டாரத்தில் தொழிலாளர்கள் வசதி..

இவற்றை எதிர்பார்த்தே ஏற்றுமதியாகும் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.

ஆகவே தான் இத்தொழிற்சாலைகள் பெரும்பாலும் பெரும் நகரை ஒட்டியே இருக்கும்.தவிர்த்து ..இப்போதே சென்னை கிட்டத்தட்ட ஒரு பக்கம் மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும்,தெற்கே செங்கல்பட்டு -மகாபலிபுரம் வரையிலும், வடக்கே ஆந்திர எல்லைவரை (பழவேற்காடு) தொழிற்சாலைகள்..பெருகி வருகின்றன.. புறநகர் பகுதிகளில் இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.ரியல் எஸ்டேட்டும்..திண்டிவனம் வரை பல வயல் நிலங்களை பிளாட் போட்டு விற்கின்றன.ஆகவே..விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட மிகவும் குறைந்து விட்டன.தவிர்த்து நாம் போகும் இடங்களில் எல்லாம் பல விளை நிலங்கள் ஏக்கர் கணக்கில் வளைத்துப் போடப்பட்டு பொறியியல் கல்லூரியாய் மாறியுள்ளன. இனி வரும் காலங்களில் தண்ணீர் இல்லாமல் வயல்வெளிகள் மேலும் குறையும். அவை முற்றிலும் குறைந்து தமிழகம் தொழில் நகரமாய் மாறும் வாய்ப்புகள் அதிகம்.அப்போது மக்களுக்குத் தேவையான உணவு பொருள்களும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை எற்படும்.

தெரிந்தோ..தெரியாமலோ..அறிந்தோ..அறியாமலோ விவசாய நிலங்கள் குறைந்துக் கொண்டே வருவதே இது போன்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.மற்றபடி..'சுழன்றும் ஏர் பின்னது உலகம்' என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் உடனே ஒரு கேள்வி கேட்பார்..தென் மாவட்டங்களில் வேறு தொழிற்சாலைகளே கிடையாதா என..

உண்டு..திருச்சி BHEL,சர்க்கரை ஆலைகள், டெக்ஸ்டைல்ஸ்,உணவு பதனிடுதல் போன்றவை உண்டு.

அவை பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கான தொழிற்சாலைகள் மூலப்பொருள்கள் கிடைக்கும் இடத்தைச் சுற்றியே அமையும்.உதாரணமாக சர்க்கரை ஆலைகள்..கரும்பு அதிகம் பயிராகும் இடத்தின் அருகாமையில் அமையும்.

சென்னையில் TVS குரூப்..வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்..லூகாஸ்,பிரேக்ஸ்,ஃபாஸ்ட்னெர்ஸ்,கிளேட்டன் ஆகியவை பக்கம் பக்கம் அமைந்துள்ளன.

சைகிள் தொழிற்சாலைக்கான பாகங்கள் டியூப் , சைகிள் செயின்,மில்லர் லேம்ப் ஆகியவை சுற்றுவட்டாரத்திலேயே உள்ளன.

தென்மாவட்டங்களில் இப்போதெல்லாம் சிறு தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.

சில தொழில்கள் அந்த இடத்தின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அமையும்.உதாரணமாக..கோயம்பத்தூர், திருப்பூர் ஆகிய இடங்கள் ஆடைகளுக்கும்..பின்னலாடைகளுக்கும் ஏற்ற இடம்.இவை தவிர்க்க முடியாது.

கூடியவிரைவில் தமிழகம் முழுதும் தொழிற்சாலைகள் பெருகி தொழில் நாடாய் மாறக்கூடும்.

தொழில் வளர்ச்சி: முதலிடம் நோக்கி தமிழகம்

அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், தொழில் வளர்ச்சியில் முதலிடத்தை நோக்கி பீடுநடை போட்டு வருவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொரியாவின் முன்னணி சாக்லேட் நிறுவனமான லோட்டே கன்பெக்ஷனரி பிரபல தமிழக சாக்லேட் நிறுவனமான பாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கடந்த 2004ம் ஆண்டு வாங்கியது.

காபிபைட், கேரமில்க், லோட்டோகிங், எக்ளர்ஸ், சாக்கோ, சான்விச் பிஸ்கெட், லோட்டே சாக்கோ பை என்ற உள்ளிட்ட பிரபல வகைகளை இந்நிறுவனம் இந்தியாவில் விற்று வருகிறது.

இதில் இந்த சாக்கோ பை சாக்லேட் உற்பத்தி்க்காக சென்னையை அடுத்த நேமம் பகுதியில் புதிய தொழிற்சாலையை இந்த நிறுவனம் கட்டியுள்ளது.

மாதத்துக்கு 500 டன் சாக்கோ பை சாக்லேட்டை இங்கு உற்பத்தி செய்ய முடியும. இந்த தொழிற்சாலையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, புதிய சாக்லெட் வகைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையி்ல், தென் கொரிய நாட்டைச் சேர்ந்த லோட்டே நிறுவனம் இந்தியாவில் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்து வருகிறது.

கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய், சாம்சங், லோட்டே, எல்ஜின், குவாசின், போஸ் ஹூண்டாய் ஆகியவை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ளன.
சென்னையில் மட்டும் 160 கொரிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 8,400 கொரிய மக்கள் வசிக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 3,000 பேர் வாழ்கின்றனர்.

சென்னைக்கு அருகே தென் கொரியாவின் சிறு, குறு நிறுவனங்களின் தொழில் முனையம் ஒன்றை தமிழக அரசு அமைக்கவுள்ளது.

தகவல் தொடர்பு, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணு, தோல் பொருட்கள் உற்பத்தியில் சென்னை ஏற்கனவே முன்னிலையில் உள்ளது. தற்போது உணவுப் பதப்படுத்தும் தொழிலிலும் தமிழகம் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது.
தொழில் துறையில் தமிழகம் புகழ் மிக்க கடந்த காலத்தையும், எழுச்சி மிகு நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டுள்ளது. நாட்டிலேயே தற்போது தொழில்மயமாவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சென்னை புதிய டெட்ராய்ட்டாக உருவெடுத்து வருகிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி காண வேண்டும் என கருதி சிறப்பு சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக அண்மைக் காலத்தில் அப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமான முதலீடு வந்துள்ளது.

கடந்த வாரம் கூட தூத்துக்குடியில் ரூ.2,500 கோடியில் கூட்டு முயற்சியிலான உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் என் முன்னிலையில் கையெழுத்தானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழிலில் முதலீடு செய்ய கொரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் லோட்டே இந்தியா நிறுவனத் தலைவர் யாங் டாக் கிம், நிர்வாக இயக்குனர் மியுங் கி மின், துணைத் தலைவர் டாங் பின் சென், தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, July 20, 2010

லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!

உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.

இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.

ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

இங்கிலாந்தில் இப்படி வேற்று மொழிகளுக்கு மரியாதை தருகிறார்கள். ஆனால் நமது இந்தியாவில் நாடாளுமன்றத்தில், நமது தாய்மொழியில் ஒரு அமைச்சரால் பேச முடியாத அவல நிலை!

(நன்றி தட்ஸ்தமிழ்)

Monday, July 19, 2010

எந்திரனும்..திரையரங்க உரிமையாளர்களும்..


திரையரங்கு உரிமையாளர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ!!!

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள எந்திரன் படப்பிடிப்பு முடிந்து விட்டது..ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.

ஆனால் குறிப்பாக இப்படிப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது அவை மினிமம் கேரன்டி/விழுக்காடு அடிப்படையிலேயே வெளியாகும்.

படங்கள் திரையரங்குகளில் நான்கு வித ஒப்பந்தங்களில் வெளியாகிறது..

முதல் - மினிமம் கேரன்டி..இந்த தொகையை அதிகமாக எந்த தியேட்டர் கொடுக்கிறதோ..அவர்கள் திரையரங்கிற்கு படம் கொடுக்கப் படுகிறது.வசூல் குறைவாக இருந்தால் நஷ்டம் திரையரங்க உரிமையாளருக்கு.ஆனால் கேரன்டி தொகையை விட அதிகம் வசூல் அதிகமானால்..அதிகப்படியாக ஆகும் தொகையில் பாதி தயாரிப்பாளருக்கு..பாதி திரையரங்கிற்கு..

உதாரணமாக மினிமம் கேரண்டி 60 லட்சம் எனில்..வசூல் பத்து லட்சம்தான் என்றால் திரையரங்கிற்கு 50 லட்சம் நஷ்டம்
அதுவே 80 லட்சம் வசூல் என்றால் லாபம் 20 லட்சத்தில் 10 லட்சம் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களும்..பெரிய நட்சத்திரங்கள் படமும் இந்த அடிப்படையிலேயே திரையிடப்படுகின்றன..ஆகவே படம் தோல்வியடைந்தாலும்..எதிப்பார்த்த வசூல் செய்யவில்லை என்றாலும் நஷ்டம் திரையரங்கிற்கு மட்டுமே.

இரண்டு- விழுக்காடு அடிப்படை..70:30., 65:35.,60:40 இப்படி..70:30 எனில் 70விழுக்காடு தயாரிப்பாளர்களுக்கு 30 விழுக்காடு திரையரங்கிற்கு.... திரையரங்கிற்கு..திரையரங்கு விழுக்காடு மாறுபடும்

மூன்று-ஃபிக்ஸட் ரேட்..படத்திற்கு இவ்வளவு தொகை தியேட்டர் அதிபர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள்.தொடர்ச்சியாக படம் ஓட வேண்டும்.பின் பெட்டி தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

நான்கு-தியேட்டர் வாடகையை படத் தயாரிப்பாளர் முன் கூட்டியே தியேட்டருக்கு கொடுத்து விட வேண்டும்..சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது ஒத்து வராது.

மினிமம் கேரன்டி யில் பிரபலங்கள் படம் வருவதாலேயே சுறா,குசேலன் போன்ற படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தன..

எந்திரன் என்ன செய்யப்போகிறான் எனப் பார்ப்போம்

Sunday, July 18, 2010

கவலை..கவலை..கவலை..
பணமில்லையே என்ற கவலை

அதிகாரி என்ன சொல்வாரோ

வேலையாளியின் கவலை

நாம் அறிந்த கவலைகள் இவை

ஆயின்

காதலியை... காதலன் கவலை

மணவாட்டிக்கு கணவன் மீது கவலை

இருளில் செல்லக் கவலை

நடக்கையில் கவலை

திரும்புகையில் கவலை

மரத்தில் பார்க்கும் கவலைகள்

வேதம் தவறாய் ஓதுகையில் கவலை

கொழுகொம்பற்ற கவலை

தண்ணீரில் நீந்தும் கவலை

விவசாயி வயலுக்கு நீர்பாய்ச்சும் கவலை

கவலை கவலை கவலை

தமிழில் எவ்வளவு கவலையடா!!!


(சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படிக்கும் போது ஓரிடத்தில் தமிழில் 'கவலை' என்பதற்கு நினைவு அலைதல்,அக்கறை,பயம்,பல தெருக்கள் கூடும் இடம்,பாதைகள் பிரியும் இடம்,மரக்கிளை,வேதம் ஓதுகையில் குழப்பம்,ஒரு வகைக்கொடி,சிறிய மீன்,விவசாயத்தில் நீர் இறைக்க ஏற்பட்ட தோல் பக்கெட்..இவற்றிற்கெல்லாம் கூட கவலை என்று பெயர் என்கிறார்.அதைப் படித்ததால் வந்த கவலை இது)

Friday, July 16, 2010

அபி அப்பாவும்..தொண்டர்களும்..

உடன்பிறப்பு இடுகை ஒன்றிற்கு அபி அப்பாவின் பின்னூட்டம் இது..

//அபி அப்பா said...
கோவை பொதுகூட்டத்திலே புரட்சி தலைவி இந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலே விவசாயம் அழிஞ்சு போச்சுன்னு ஒப்பாரி வச்சாங்க. அதுக்கு உடன்பிறப்பு பதில் சொல்லலைன்னா நான் அ.தி.மு.கவுக்கு போய்விடுவேன் என மெரட்டுகின்றேன்:-))//
அதைப் படித்ததால் இந்த இடுகை

அபி அப்பா உண்மையில் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகச் சொல்லியிருக்கிறார் என எண்ணிய 'ஜெ' சசிகலாவைக் கூப்பிட்டு..'யாரையேனும் அனுப்பி அவரை என் முன்னிலையில் அ.தி.மு.க., அலுவலகத்தில் வந்து சேரச் சொல்..உடன் ஜெயகுமாரிடம் சொல்லி ஆயிரம் பேரை ஏற்பாடு பண்ணச் சொல்,,அபி அப்பா ஆயிரம் பேருடன் வந்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார் என நமது எம்.ஜி.ஆரில் போட்டுவிடுவோம்' என்கிறார்.

சசிகலா உடன் பன்னீரைக் கூப்பிடுகிறார்..அம்மா சொன்னதைச் சொல்லி அபி அப்பாவைப் பார்க்கச் சொல்கிறார்..சசியைக் கண்டதும் கும்பிட்ட பன்னீர் 'ஆமாம் ..இதுக்கு மட்டும் நான் வேணும்..மத்த சமாச்சாரங்களுக்கு தினகரனும்..இளவரசியும்......' முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்.

அவர் முணுமுணுப்பை முடிப்பதற்குள்..'என்ன..'என மிரட்டல் தொனிக் கேட்க..'உடனே செஞ்சுடறேன்' என்கிறார்.

ஜெயகுமாரைப் பார்த்து ஆயிரம் பேர் விஷயத்தைச் சொன்னதும்...அதற்கென்ன இரண்டாயிரம் பேரையே ஏற்பாடு செய்கிறேன்..என்கிறார் அவர்.

பன்னீர் அபி அப்பாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னதுடன் நில்லாது..அம்மாகிட்ட 2011லே ராஜ்யசபா சீட்டும் வாங்கித் தரேன் என்கிறார்.

சிறிது யோசித்த அபி அப்பா ஒப்புக் கொள்கிறார் ..அதற்குள் விஷயம் மாயவரம் முழுதும் பரவ ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க. வினர் அபி அப்பா வீடுமுன் கூடிவிடுகின்றனர்.அவர்களிடம் தான் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும் என்கிறார் அபி அப்பா.பன்னீரும் ஒப்புக் கொள்கிறார்.

அடுத்த நாள் அம்மா கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளருடன் காத்திருக்கிறார்.

ஆனால் அபி அப்பா அழைத்து வந்த பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் சேர்ந்ததாக முரசொலியில் செய்தி வருகிறது

Thursday, July 15, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (16-7-10)

2009ல் இந்தியாவில் மொத்த ஜனத்தொகை 119.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.சீனாவின் மக்கள் தொகை 134.5 கோடியாம்.அதுவே 2050ல் சீனாவில் 141.7 கோடியாய் இருக்குமாம்..இந்தியாவோ முதலிடத்தைப் பிடித்து 161.38 கோடியாகத் திகழுமாம்.

2)போலி மருத்துவர்,போலி ரேஷன் கார்டு,போலி முத்திரைத் தாள்,போலி ஆவணம்,போலி சாதிச் சான்றிதழ், போலி காவல்துறை அதிகாரி, இவற்றைத் தொடர்ந்து போலி மதிப்பெண் பட்டியல்...சபாஷ்..இந்தியன் என்று சொல்லி பெருமைப்படுவோம்.:(((

3)பேசுபவரின் முகம் பார்த்து பேசக்கூடிய வீடியோ கால் வசதிக் கொண்ட 3ஜி வசதிக் கொண்ட செல்ஃபோன்கள் எம்.பி.க்களுக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

4)ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்படங்களை மினிமம் கேரண்டி முறையில் வெளியிடுவதால் தமிழக தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு 200 முதல் 300 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறதாம்.தியேட்டர்களின் எண்ணிக்கைக் குறைய இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

5)இந்திய ரூபாய்க்கான் சின்னம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.சின்னத்தை வடிவமைத்தவர் தமிழகத்தைச்சேர்ந்த உதயகுமார்.தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் கொண்டு இதை உருவாக்கியதாகவும், மேலே இரண்டு கோடுகளும்,நடுவே வெள்ளை நிறத்துடன் இடைவெளியும் இருக்கும் என்கிறார்.

6)quick brown fox jumps over the lazy dog
Pack my box with five dozen liquor jugs
இந்த இரு வாக்கியங்களிலும் ஆங்கில ஆல்ஃபபெட் 26ம் வரும்

7)ஒவ்வொரு வாரமும் நான் படிக்கும் இடுகைகளிலிருந்து 'தமிழா தமிழா' வின்'மகுடம் 'அளிக்கும் இடுகை ஒன்றை தேங்காய்..மாங்காயில் ஒவ்வொரு வாரமும் சொல்ல உள்ளேன். இந்த வாரம் தமிழா..தமிழாவின் மகுடம் வால்பையனின் இந்த இடுகைக்கு.. வாழ்த்துகள் அருண்


8)கொசுறு ஒரு ஜோக்

உன்னோட மேல் அதிகாரிஉன்னைப் பார்த்து பயப்படுவாரா? அப்போ ஒரு வேளை அவரும் போலி அதிகாரியாக இருக்குமோ?

Wednesday, July 14, 2010

கர்மவீரரின் 108ஆம் பிறந்தநாள்..
பெருந்தலைவர் காமராஜரின் 108ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது..அவரைப் பற்றி சில குறிப்புகள்..

1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அனைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.

2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.

3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.
காமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.

4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்

5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.

6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.

7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.

8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது

Tuesday, July 13, 2010

பதிவுலகில் வானம்பாடிகள் எப்படிப்பட்டவர்..
பாமரனாயிருந்து வானம்பாடிகளாய் மாறிய பாலா 'பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்' என்ற பதிவு ஒன்றை இட்டு இருந்தார்.

உண்மையில் நாம் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்..நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆகவே ..'கிணற்றுதவளை'யாக இருந்து பின் வானம்பாடியாய் சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கும் வானம்பாடி பாலாஜி (வாசுதேவன் பாலாஜி) பதிவுலகையும் தாண்டி, எப்படிப்பட்டவர் என நான் அறிந்தவரையில் கூறுகிறேன்.

ரயில்வேயில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாய் பணிபுரிந்து வரும் இவர் மனிதநேயம் மிக்கவர்..யார் உதவி என்று வந்தாலும் தன்னால் முடிந்தால்..அந்த உதவியைச் செய்யத் தயங்காதவர்.

ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்பதை..அறிந்து கொள்ள அவருடன் சில நிமிடங்கள் பழகினாலே போதும்..அதுபோல நானும் பாலாவை ஒருமுறை தான் சந்தித்துள்ளேன்.பின் ஒரு மின்னஞ்சலும்..ஒரு அலைபேசி பேச்சும்தான்.

அதிலேயே நான் அறிந்து கொண்டது ஏராளம்.

டெம்ப்ளேட் பின்னூட்டம் இடாமல்..அனைத்து பதிவர்கள் பதிவும் படித்து...பின்னூட்டம் இடுபவர்...புது பதிவர்களையும் ஊக்குவிப்பவர். பதிவு பிடித்திருந்தால் பரிந்துரையும் உண்டு.

மொக்கை பதிவுகளுக்கும் தன்னால் மொக்கை பின்னூட்டம் போட முடியும் என நிரூபிப்பவர்.

இவரின் அனைத்து பதிவுகளும் சிறந்தது என்றாலும், இவர் துறை சார்ந்த பதிவுகள், கேரக்டர் என்ற தலைப்பில் வித்தியாசமான நபர்கள் பற்றிய இடுகை இவர் புகழ் பாடும் இடுகைகள்.

உண்மையான..நியாயமாக வாசகர்களின் வாக்குகளைப் பெற்று..வாசகர் பரிந்துரையிலும்...மகுடத்திலும் இடம் பெறும் ஒரு சில பதிவர்களில் இவரும் ஒருவர்.

எந்த எதிர்வினை பதிவானாலும் படித்து..தன் கருத்தைச் சொல்லத் தயங்காதவர்.

சற்றும் அகங்காரம் இல்லாதவர்...ஆனால் அதே வேளையில்..ஒருவரிடம் உடனே நெருங்கி பழகாத கூச்ச சுபாவம் உள்ளவர்.

இவருக்கான குறள்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

(உறுதியான உள்ளமும் ..அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்

Monday, July 12, 2010

கலைஞரும்...கை ரிக்க்ஷாக்களும்..
மனிதனை..வைத்து மனிதன் இழுப்பது என்பது மனிதநேயமற்ற செயல்..69க்கு முன்னால் சென்னை வீதிகளில் கை ரிக்க்ஷாக்கள் பிரபலம்..பல மேட்டுக்குடி மக்கள் இப்படிப்பட்ட ரிக்க்ஷாக்களில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்..

ரிக்க்ஷா இழுப்புவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கும்..கையில் லைசன்சை மாட்டிக்கொண்டு..காலில் செருப்பும் இல்லாமல்..மூச்சிறைக்க பருத்த மனிதர்களை சுமந்து..நா வெளியேத் தள்ள இழுத்துச் செல்வார்கள்...

மனதில் ஈரமில்லா மனிதர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் கூலியில் பேரம் பேசுவார்கள்..

கலைஞர் 69ல் முதல்வர் ஆனதும்..முதலில் கை ரிக்க்ஷாக்களை ஒழித்தார்..அவற்றை ஒப்படைத்து சைக்கிள் ரிக்க்ஷாக்களைப் பெற்றனர்.பின் சிறிது வசதி உள்ளவர்கள் அவற்றில் மோட்டர் இணைத்து ஓட்டினர்.

பின் ஆட்டோக்கள்..நிறைய வர ஆரம்பித்ததும்..படிப்படியாக இவையும் குறைய ஆரம்பித்துள்ளன.

சென்னையில் சமீபத்தில் மேலும் 46098 ஆட்டோ பர்மிட்டுகள் வழங்கப்பட்டுள்ளன..

ஆனால்..இன்று மனித நேயமற்ற செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள்..

டிஜிட்டல் மீட்டர் போட்டும்..யாரும் அவற்றை உபயோகிப்பதில்லை..முன்னராவது..மீட்டருக்கு மேல் பத்து..பதினைந்து ரூபாய்கள் கேட்பர்...சிலர் அப்படிக் கேட்காமல் மீட்டர் அதிகமாக சுழல சூடு வைப்பர்.இப்போதெல்லாம் அப்படிப் பட்ட பிரச்னையே எழுவதில்லை.எங்கு செல்வதானாலும் அவர்கள் கேட்கும் தொகைதான்.

சமீபத்தில்..பெசன்ட் நகரிலிருந்து..வாணிமகால் (தி.நகர்) செல்ல என்னிடம் ஒரு ஆட்டோக்காரர் 180 ரூபாய் கேட்டார்.நான் வேண்டாம் என மறுத்துவிட்டு..சிறிது தூரம் சென்று வேறு ஒரு ஆட்டோவை அணுக அவர் 120 க்கு வருவதாகக் கூறினார்..

அதுவும் அதிகம் என்றாலும்..அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்..நான் பயணித்தேன்..

அரசு ஆட்டோக்களை அதிகரிப்பதால்..பொது மக்களுக்கு பெரும் பயன் வரப்போவதில்லை..நியாயமான ரேட் அவர்கள் வாங்குகிறார்களா என்று கடுமையாக அரசு கண்காணிக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் உண்மையில் பயன் அடைவர்.

இல்லையேல் எண்ணிக்கையில் தான் சென்னையில் ஆட்டோக்கள் அதிகம் ஓடுகின்றன என்று சொல்லலாம்.

பெரும்பான்மையான ஆட்டோ உரிமையாளர்கள் போலீஸ்துறையினர் என்பதால்..நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் ஒரு வதந்தி..

Sunday, July 11, 2010

நடிகை ரோகிணியும்..ஐஸ்வர்யா (ராயும்) பச்சனும்..
குரு,ராவணன் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராயைப் பார்த்து..அவர் நடிப்பையும் பாராட்டியவர்கள் அதிகம்...

அவர்..ஏற்ற இறக்கத்துடன் பேசுவதும்...சோகக் காட்சியில் சோகத்துடன் பேசுவதும்..ஆத்திரக் காட்சியில் ஆத்திரப்படுவதும்...பயந்து வீல் என அலறுவதையும் ..அடடா..ஐஸ்வர்யா என்னமாய் நடித்திருக்கிறார் என வியந்தவர் பலர்...

ஆனால்..அவர் பேசும் வசனங்கள்..அவர் படத்தில் வாயைத் திறந்தால்..அது சோகமோ,ஆச்சரியமோ,மகிழ்ச்சியோ வரும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் நடிகை ரோகிணி ஆவார்.

ஆம்..ஐஸ்வர்யாவிற்கு டப்பிங் கொடுத்தவர் ரோகிணி..ராவணன் படத்தில்..ஐஸ்வர்யா அலறும் காட்சிகளில் 25முறைகளுக்கு மேல் ரோகிணி கத்தியிருக்காராம் டப்பிங்கில்.இதைத் தவிர்த்து ரோகிணி
ஜோதிகாவிற்கு..'வேட்டையாடு விளையாடு' படத்திலும்,இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலாவிற்கும் குரல் கொடுத்துள்ளார்.

சிம்ரன் நடித்த படங்களில் குறிப்பாக வாலி படத்தில்...கிளைமாக்சில்..அவருக்கு டப்பிங் கொடுத்த கலைஞரால்தான் அவரது நடிப்பு பிரகாசித்தது.குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு சூர்யா குரல் கொடுத்துள்ளார்..அதே போல் தாரே ஜமீன் பர் படத்தில் தமிழ் டப்பிங் அமீர்கானிற்கு சூர்யா.

இவர்களை விடுங்கள்..வெளியுலகிற்குத் தெரியாமல்..பல நாயகியர்க்கு குரல் கொடுத்து..அவர்கள் நடிப்பைப் பாராட்டவைத்தவர்கள் இக் கலைஞர்கள்.

இப்படி..பல நடிக,நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து, அந்த நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டியவர்கள் இவர்கள்..ஆனால் தகுந்த முறையில் இவர்கள் சிறப்பிக்கப் படுகிறார்களா என்றால்...இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது..

தயாரிப்பாளர்களே..சற்று சிந்தித்துப் பாருங்கள்...சம்பந்தப்பட்ட நடிகர்களே குரல் கொடுத்திருந்தால்..அதற்கான கால்ஷீட்டிற்கு எவ்வளவு சம்பளம் கேட்டிருப்பார்கள்..அதில் கால் பகுதியேனும்..திறமை மிக்க இவர்களுக்குக் கிடைத்திருக்குமா...

இன்னும்..என்னை ஆச்சரியப் பட வைத்த ஒன்று...

இப்போதெல்லாம்..தமிழில் டப் செய்யப்பட்டு..வரும்..ஆங்கிலப் படத்திற்கு என்னமாய்..இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்..

இன்று கோடம்பாக்கத்தில்..இந்த டப்பிங் ஆர்டிஸ்டுகள் இல்லையெனில்..தமிழ்திரை உலகம் பல கோடியை அதிகமாக சம்பந்தப் பட்ட நடிக, நடிகையருக்கு செலவழிக்க வேண்டியிருக்கும்..தமிழ்த் தெரியாத நடிகைகள் கதாநாயகியாக நடிக்க முடியாது..

டப்பிங் கலைஞர்களுக்கு பாராட்டுகள்..

தமிழ்த் தயாரிப்பாளர்கள்..இவர்களையும் பெருமைப் படுத்த வேண்டும்..

Saturday, July 10, 2010

மதராசபட்டினம் - ஒரு பார்வை
சாதாரணமாக நான் எல்லா படங்களைப் பார்த்தாலும்..அவற்றை விமரிசித்து பதிவிடுவதில்லை.

சில..அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என விழைபவன்.

அப்படி..உங்களுடன் நான் பகிர்ந்துக் கொள்ள நினைத்து எழுதிய கடைசி விமரிசனம் 'அங்காடித் தெரு'

இப்போது..மற்றொரு சந்தர்ப்பம் வந்துள்ளது..ஆம்..நான் பார்த்த 'மதராசபட்டினம்'

ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும்..படத்தில் சில குறைகள் இருந்தாலும்...மன நிறைவை ஏற்படுத்திய படம் இது.

லண்டனில் வசிக்கும் மூதாட்டி ஏமி..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் போது..இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி வருகிறாள்.அவளது பார்வையில் படம் சொல்லப் படுகிறது Flash back உக்தியில்.

தமிழ்த்திரைக்கு இக்கதை புதிதல்ல என்றாலும்..கதைக் களம்...கலைஞர்கள் அனைவரின் உழைப்பு ஆகியவை இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குகின்றன.தனியாக காமெடிக் கென தனி டிராக் இல்லாவிடினும்..எல்லாப் பாத்திரங்களும் ஆங்காங்கே பேசும் வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

ஆர்யாவின் நடிப்பு சூப்பர்..பாத்திரத்தில் ஒன்றி விட்டார் எனலாம்..ஆத்திரப்படுவதும்,காதலை கண்களால் சொல்வதும், சண்டைக் காட்சிகளிலும், கிளைமாக்சிலும்....நகைச்சுவை இடங்களிலும் (வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்) அசத்தல் நடிப்பு.

கதாநாயகி ஏமி...ராவணனையும் பொறாமைப் படவைக்கும் அழகு..படம் பார்ப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்..'மறந்து விட்டியா' என்று கேட்கும் காட்சி ஒன்றே எடுத்துக்காட்டுக்கு போதும்.

படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பது ஆர்ட் டைரக்டர் செல்வகுமார்..1947 மதராசபட்டினம்..இவரது உழைப்பை பறைசாற்றுகிறது.கூவம் ஆறு,போட் சவாரி,சென்ட்ரல் ஸ்டேஷன்,கை ரிக்க்ஷா (கலைஞர் நினைவிற்கு வருகிறார்),டிராம்,வால்டேக்ஸ் சாலை,பாரிமுனை,செகண்ட் லைன் பீச்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்..

ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவின் திறமைக்கு கிளைமாக்ஸ் காட்சி ஒன்றே போதும்.இசை ஜி.வி.பிரகாஷ்குமார்...பாடல்கள் கேட்க வைக்கின்றன...தியேட்டரில் இருந்து எழ வைக்கவில்லை.

..எல்லாத் துறையிலும்..அனைத்து நபரும் உழைத்து வந்த படம் இது..இயக்குநர் விஜய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

படத்தில் குறை என்று சொன்னால்தானே விமரிசனம்..

இடைவேளை..கிட்டத்தட்ட 90 மணித்துளிகள் கழித்து வருவதால்...பக்கத்தில் படம் பார்ப்பவர்...இந்த படத்திற்கு இடைவேளையே கிடையாது எனக் குரல் கொடுத்தார்..உண்மை...முழுப் படம் பார்த்த ஆயாசம் இடைவேளையில் தோன்றிவிடுகிறது. அதுவே படம் மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.

லகானில் மழையே இல்லாமல் மேகங்கள் திரண்டுவருகையில்...டான்ஸும்..பாட்டும் இருந்தது..இங்கு அப்படி ஒரு நிலையில்லாதபோது..மழையைக் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி..ஆட்டம்...ம் ஹூம்..ஒட்டவில்லை.

எல்லாவற்றையும் திறமையாய் கையாண்ட செல்வகுமார்..இரு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளார்..சென்ட்ரல் ஸ்டேசன் முகப்பு கடிகாரம்..அப்போதெல்லாம்..இன்னும் பிரம்மான்டமாய் இருந்தது.பாரிமுனையில் பேருந்தை காட்டும் இவர்..அப்போதெல்லாம் பேருந்து இஞ்சின் வெளியே (இன்றைய லாரிகள் போல் இருக்கும்)இருக்கும்..அதையும் கோட்டைவிட்டு விட்டார் எனலாம்.

இவை சிறுகுறைகளே..மற்றபடி..

படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

தமிழ்த் திரையுலகில் திறமை மிக்க இயக்குநர்கள் உருவாகிவருவது..பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது

Friday, July 9, 2010

வாசகர் பரிந்துரையும்...குல்மாலும்..


இப்போதெல்லாம்..சில பி.ப.,க்கள் எழுதும் பதிவுகள் வாசகர் பரிந்துரையில் ஐந்து மணித்துளிகளில் தெரிய ஆரம்பித்து விடுகின்றன..பரிந்துரை வாக்குகள் எண்ணிக்கை அடேங்கப்பா...

இது எப்படி.

ஒரு வேளை சுஜாதா ஒரு சமயம்..நான் லாண்டிரி கணக்கு எழுதினாலும் படிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னது போல இவர்கள் எது எழுதினாலும் + ஓட்டு போட நண்பர்கள் உள்ளனரோ என எண்ணினேன்.

அப்போதுதான் buzzல்..ஒரு பதிவரின் எதிர்வினை பதிவும்..சுட்டியும் கொடுக்கப் பட்டிருந்தது.அதைப் படிக்கும் நோக்கில்..சுட்டியை கிளிக்கியதில்..இடுகையே வராமல்..'உங்கள் ஓட்டு சேர்க்கப் பட்டது' என தமிழ்மணம் தெரிவித்தது.

ஆஹா..இவர்களுக்கு வாசகர்கள் பரிந்துரையில் இப்படித்தான் இடம் கிடைக்கிறதா...என்ற எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தது.

தேர்தலில்...நாம் ஓட்டுப் போடவில்லையெனில்..மாலை 4 மணிக்கு மேல்..நம்ம ஓட்டுகள் வேறு ஒரு நபர் போட்டிருப்பார்..அதாவது பரவாயில்லை..அதைவிடக் கேவலம்..நாம் படிக்காத..நாம் பரிந்துரை செய்ய விரும்பாத பதிவு..நம் ஆதரவு ஓட்டை நம்மை அறியாமல் போட வைக்கும் பதிவர்களின் சாணக்கியத்தனம்..(அவர்களும் நம் நண்பர்கள் என்பதால் வேறு வார்த்தையை உபயோகிக்க மனம் வரவில்லை)

தமிழ்மணம்..பதிவர்களுக்காக எதைச் செய்தாலும்..அதில் ஓட்டையைக் கண்டு பிடித்து...பலனையே கெடுப்போர் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்..

இந்நிலையில்..வாசகர் பரிந்துரையையே..நூற்குறியை தமிழ்மணம் நீக்கியது போல நீக்கிவிட்டு..பழைய முறையில்..அதிகம் படிக்கப்படும் இடுகையை சூடான இடுகை என பழைய முறையையே பயன்படுத்தலாம்.

Thursday, July 8, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (9-7-10)

நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் எதிர்ப்பார்ப்பைவிட குறைவாகவே வளர்ச்சிக் கண்டுள்ளதாம்.3.5 சதவிகிதம் வளர்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால் வளர்ச்சி 2.7 சதவிகிதம் தானாம்

2)இந்தியாவில் 1000 பேரில் 62 பேருக்கு நீரிழிவு..159 பேருக்கு உயர் ரத்த அழுத்தம்..37 பேருக்கு இருதயக் கோளாறு,.ஒருவருக்கு பக்கவாதம் பாதிக்கப் பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுதும் 25 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்

3)வீணை எஸ்.பாலசந்தர்..மாமேதை இசையில்..தவிர்த்து வெள்ளித்திரையில்..திரைக்கதை,வசனம், தயாரிப்பு,இசை, நடிப்பு என அஷ்டாவதானியாய் திகழ்ந்தார்.அந்தநாளிலேயே பாடல்கள் இடம் பெறாமல்
புரட்சி ஏற்படுத்திய படம் இவரின் 'அந்த நாள்'..இது எல்லாம் நாம் அறிந்த செய்திகள்..ஆனால் அவர் ஏழு வயதிலேயே செஸ் விளையாட்டில் அகில இந்திய சேம்பியனாகத் திகழ்ந்தாராம்

4)ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு செப்டம்பர் 3ஆம் நாள் திருமணம் நடக்க உள்ளது.திருமணத்திற்கு சோனியாவும்..ராகுலும் வரக்கூடுமாம்...வழுவும் மீனுக்கு காங்கிரஸ் வலை வீசிப் பார்க்கிறதோ!!!

5)சென்னையில் 1000 பேரில் 45 பேரிடம் கார் உள்ளது.ஆண்டுதோறும் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரித்து வருகிறதாம்..

6) செம்மொழி மாநாட்டில் கவியரங்கத்தில் வாலி..'சோ வின் ஐய நோக்கு..அது ஐய நோக்கல்ல அய்யர் நோக்கு'.. என்றார்..கலைஞர் ரசிக்க வேண்டும் என வாலி அப்படி சொன்னது 'அய்யங்கார் நோக்கு' என்பாரோ சோ :)))

7)கொசுறு ஒரு ஜோக்

செம்மொழி மாநாட்டிற்கு எப்படி போனே?
பஸ்ல சீட் கிடைக்காம..டிரைன்லயும் டிரை பண்ணி ஃபுல் ஆனதால் டட்கல்ல ரிசர்வ் பண்ணியும் டிரைன்ல கிரௌட்ல மாட்டிண்டு போனேன்..ஸ்டேசன்ல இருந்து டாக்சியோ..ஆட்டோவோ கிடைக்காம சஃபர் ஆகி மிட்னைட்லதான் லாட்ஜுக்குப் போனேன்

வாய் விட்டு சிரியுங்க..

1) நான் புத்தகங்களை யாருக்கும் ஓசி கொடுக்கறதில்லைங்கற கொள்கையை உடையவன்..
நானும் அப்படித்தான்...ஆனால்..ஒரு சின்ன மாற்றம்..நான் புத்தகங்களை ஓசில தான் படிக்கணும்ங்கற கொள்கையை உடையவன்

2)அந்த அதிகாரி லஞ்சம் வாங்கறப்போ..அதிகாரிகள் கிட்ட மாட்டிக்கிட்டார்
அப்புறம்..
பத்தாயிரம் லஞ்சம் கொடுத்து தப்பிச்சுக்கிட்டார்

3)நம்ம தலைவர் அவர் பையனை அரசியல்ல நுழைக்க முயற்சி பண்றார்
அதுல என்ன தப்பு..நீ கூடத்தான் உன் வியாபாரத்திலே உன் பையனை சேர்த்துண்டு இருக்கே

4)டாக்டர் என்னை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆகச்சொல்றார்னு நினைக்கிறேன்
எப்ப்டிச் சொல்ற
என் உடல்நிலைக்கு நான் நிறைய நடக்கணுமாம்..எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆனா..சட்டசபைல இருந்து அடிக்கடி வெளிநடப்பு செய்யலாமே

5)உங்க மிஸ் என்னை மக்கு ன்னு சொன்னாங்களா? எப்போ
நேத்து நீ செஞ்சுக் கொடுத்த ஹோம் ஒர்க்கைப் பார்த்து..'மக்கு' ஹோம் ஒர்க்கை தப்பு தப்பாய் செஞ்சிருக்குன்னு சொன்னாங்க

6) உன்னோட ஆஃபீஸ் ஸ்டெனோ சுத்தத் தங்கம்னு எப்படிச் சொல்ற
உரசிப் பார்த்துட்டுத்தான்

7)இந்தாங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்..இன்னிலேயிருந்து நம்ம ஆஃபீஸ்ல உங்களுக்கு வேலை...எதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க..
நான் வி.ஆர்.எஸ்.,ல போகமுடியுமா சார்

Sunday, July 4, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 18

பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)

Friday, July 2, 2010

ஏழுமலையானுக்கே போடப்பட்ட பட்டை நாமம்..


திருமலையில் ஏழுமலையான் கோயிலை கட்டிய கிருஷ்ண தேவராயர் 1513ஆம் ஆண்டு முதல் கிரீடம் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை வழங்கியதாக கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன..

கிருஷ்ண தேவராயரின் 500 ஆவது பட்டாபிஷேக நாளை ஹைதராபாத்தில் நடத்துமாறு தேவஸ்தானத்திற்கு ஆந்திர அரசு உத்தரவிட்டது.அவ்விழாவில் நமது ஜனாதிபதி கலந்துக் கொள்ள உள்ளார்.

விழாவில்..தேவராயரின் புகழை வெளிப்படுத்தும் முறையில்..ஏழுமலையானுக்கு அவர் அளித்த நகைகளை காட்சிக்கு வைக்க அரசு முடிவெடுத்தது.அது பற்றி கோயில் அதிகாரிகளிடம் தெரிவித்த போது
'அது போன்ற நகைகள் ஏதுமில்லை..40 ஆண்டுகளுக்கு முன்னரே அவை உருக்கப்பட்டு..தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டன' எனக் கூறப்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க ஆவணங்கள் ஏதும் இல்லை.அறங்காவலர்க் குழுத் தலைவரோ..அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.முன்னால் அதிகாரி ஒருவரோ..'தேவராயர் நகை அளித்தற்கான ஆதாரம் ஏதுமில்லை' என்கிறார்.

இந்நிலையில் தலைமை செயல் அதிகாரியோ'தேவராயர் கொடுத்து கிரீடம் 1930-33 ஆம் ஆண்டுகளில் உருக்கப்பட்டு வேறு கிரீடம் தயாரிக்கப் பட்டுவிட்டது என்கிறார்.மேலும் 52-53 ஆம் ஆண்டுகளில், கோயிலின் ஆனந்த நிலையத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டபோது ..கோயிலுக்குச் சொந்தமான 20 நகைகள் உருக்கப்பட்டன ..காணாமல் போனதாகச் சொல்லப்படும் நகை இவையாகவும் இருக்கலாம் என்கிறார்.

இது குறித்து தொல்பொருள் துறை அதிகாரிகளும்..கோயில் அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர்.அதில்..மைசூர் மகாராஜா கொடுத்த நகைகளும்..தேவராயர் கொடுத்த நகைகளும்..காணாமல் போன நகைகள் விவரமும் தெரியவந்துவிடும் என்கின்றனர்.தெரிய வருமா..அல்லது உண்மை மறைக்கப்பட்டுவிமா..என நாம் அறியோம் பராபரமே!

பார்ப்போம்...நகைகள் இருக்கின்றனவா...உருக்கப்பட்டதாகச் சொல்வது உண்மையா..இல்லை

அந்த ஏழுமலையானுக்கே பெரிய நாமம் போட்டுவிட்டனரா...என்று...

Thursday, July 1, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (2-7-10)

1)எந்திரன் பட கேஸட் வெளியீட்டு விழா மலேஷியாவில் நடக்க இருப்பது..பழைய செய்தி..

ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள செய்தி...தீபாவளிக்கு தங்கள் படங்களை வெளியிடலாம் என நினைத்த பல தயாரிப்பாளர்கள்..நடிகர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்..

ஐங்கரனால் கழற்றிவிடப்பட்டு..சன் குழுமத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த படம் 190 கோடிகள் செலவில் தயாராகி வருகிறது.

3000 பிரிண்டுகள் (ஆதாரம்-தமிழ் சினிமா) போடப்போகிறார்களாம்..உலகம் முழுதும்..சைனா உள்பட தீபாவளி அன்று படத்தை வெளியிடப் போவதாகத் திட்டமாம்.

இந்நிலையில்..திரையரங்குகள் அனைத்தையும் இப்படம் ஆக்கிரமித்துக் கொண்டால்..அன்று வெளியிட திட்டமிட்டிருந்த சில முன்னணி நடிகர்கள் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது..

ஆகவே..தீபாவளி அன்று சாதாரண தியேட்டர்களில் குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே வரும் நிலை ஏற்படப் போகிறது.


2)நான் எழுதியிருந்த செம்மொழி சிறப்பு (3 இடுகைகள்) மின்னஞ்சலில் வலம் வரும் செய்தியைக் கூறி...சந்தோஷமும் பட்டுள்ளார் சக பதிவர் உலகநாதன்..

அவர் என் பதிவிற்கு இட்ட பின்னூட்டம் கீழே;-


// என். உலகநாதன் said...
சார்,

உங்களுடைய கட்டுரையான "தமிழ் செம்மொழி சிறப்பு" உலகம் முழுவதும் மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

பரவாயில்லை, நன்றி "tvrk.blogspot.com" என்று போட்டு இருக்கிறார்கள்.

சந்தோசமாக உள்ளது.//


என் பதிவு மின்னஞ்சல் மூலம் பலரை சென்றடைகிறது என்ற சந்தோஷத்தைவிட உலகநாதனின் பண்பு என்னை வியக்கவைக்கிறது.நன்றி நண்பரே..

3)157 வயதாகும் இந்திய ரெயில்வேயில் 8000 ரயில்களும்..50000 பெட்டிகளும் 16 லட்சம் ஊழியர்களும் உள்ளனராம்.நாளொன்றிற்கு சராசரியாக இரண்டு கோடி மக்கள் பயணம் செய்கின்றனராம்.

4)இந்தியாவில் 25 கோடிகளுக்கு மேல் வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 550. வருமான வரி பற்றி கவலைப்படுபவர்கள் மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் மட்டுமே

5)தமிழில் படியுங்கள்..தமிழைத் தவறில்லாது எழுதுங்கள்....இப்படியெல்லாம் கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களும் சமீபத்தில் பேசி விட்டனர்..ஆனால்..அரிச்சுவடியில் வண்ணப்படங்களுடன் தமிழ்ச்
சொற்களை கொடுத்துள்ளனர்.ஒரு கிண்ணம் படத்தைப் போட்டு 'கின்னம்' எனக் குறிப்பிட்டுள்ளனர்..(ஒருவேளை சம்பந்தப் பட்டவர்கள்..கலைஞரின் 'கன்னம்..கன்னம்..சந்தனக் கிண்ணம் பாடலைப் பாடியபடியே இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்களோ)

6)தமிழன்னைக்கு ஆறு இலக்கியப் படைப்புகள் அணிகலனாகச் சொல்லப்படுகின்றன

மணி முடி - சூடாமணி
காதுகள் - குண்டலகேசி
கைகள் - 'வளை' யாபதி
மார்பு - சீவக சிந்தாமணி
இடை - மணி'மேகலை'
கால்கள்- சிலம்பு(சிலப்பதிகாரம்)
கையில் இருப்பது திருமறையாம் 'திருக்குறள்'

7) வீட்டில் இருந்து வெளியே செல்கையில்..வாசலில் ஒரு பெரிய பாறாங்கல் என் கால்களைப் பதம் பார்த்து விட்டது...செம்மொழி மாநாடு பற்றி என் சில இடுகைகள் கிண்டல் செய்வது போல இருந்ததால்..கலைஞர் செய்த சதியே பாறாங்கல் சமாச்சாரம் என்கின்றனர் சிலர்.

8)கொசுறு ஒரு ஜோக்...

தமிழச்சி ன்னு ஒரு படம் எடுக்கப்போறியா...கதாநாயகி யார்..?
தமன்னா,அசின்,ஸ்ரேயா இவர்கள்ல யாராவது ஒருத்தர்தான்