Sunday, October 31, 2010

பயணம்..(கவிதை)

பயணிக்கின்றேன்
உற்றார்..உறவு
நண்பர்கள்
எதிரிகள்
நம்பிக்கைத் துரோகிகள்
ஏதுமறியாதோர்
யார் யாருடனோ
அவரவர் வழியில்
அவரவர் வெளியேற
இறுதியில்
நான் மட்டுமே!

Saturday, October 30, 2010

அறிமுகம்..(அரை பக்கக் கதை)

காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்.

Friday, October 29, 2010

எந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா?

எந்திரன் திரைப்படக் கதை தன்னுடையது என 'அமுதா'தமிழ் நாடன் என்னும் எழுத்தாளர் உரிமை கொண்டாடுகிறார்.இவர் உதயம் என்னும் தமிழ் பத்திரிகையில் ஏப்ரல் மாதம் 1996ஆம் ஆண்டு எழுதிய ஜுகிபா என்னும் கதையே எந்திரன் கதை என்கிறார்.
(www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/291010c.asp)


இதை பைத்தியக்காரன் bazz ல் போட்டப்போது அதில் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலைப் போடுகிறார்.

யுவ கிருஷ்ணா - எந்திரன் படத்தின் பாதி கதையின் கரு இதுதான்.

அப்படியானால் சுட்டது யார்?

ஷங்கரா - சுஜாதாவா

இது தேவையில்லை என்பதே என் கருத்து.
எந்திரன் படத்தின் கதை பல ஆண்டுகளாக தன் மனதில் இருந்தது என ஷங்கர் முன்னமேயே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எந்திரன் படத்தில் வசனம் மட்டுமே சுஜாதா..அதுவும் மூவரில் ஒருவர். ரோபோ பற்றிய சில நுணுக்கங்களைத் தெரிந்துக் கொள்ள சுஜாதா பயன்பட்டிருப்பார் ..அவரின் பங்களிப்பு அதற்கு மேல் அப்படத்தில் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் இன்று நம்மிடையே இல்லாத ஒரு ஜீனியஸ்ஸை இழுத்திருக்க வேண்டாம்.
சுஜாதா தொடாத சப்ஜெக்ட் இல்லை..இன்று எந்த எழுத்தாளரிடமும்..அவர் பாதிப்பு இருப்பதை மறைக்கமுடிவதில்லை.
தவிர்த்து..சுஜாதாவின் சில படைப்புகளை..ஆங்கிலக் கதைகள் சாயல் இருப்பதாகக் கூறுவர் உண்டு.
சாயல் இருக்கும்..ஏதேனும் பாதிப்பு இருக்கும்..ஆனால் அவரிடம் 'காபி' இருக்காது.
ஆகவே, நண்பர்களே! எந்திரன் சர்ச்சையில்..அவர் பெயரை இழுக்க வேண்டாம்

Thursday, October 28, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(29-10-10)

பெரும் கடன் சுமை, படத்தை வாங்க எந்த வினியோகஸ்தர்களும் முன் வராத நிலை..தரமற்ற கதை போன்றவற்றால் ஷூட்டிங், போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் எல்லாம் முடிந்தும் 70 தமிழ்ப் படங்கள்
வெளிவராமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம்

2)காதல் வசப்படுபவர்கள்..இதயத்தைப் பறி கொடுத்தோம் என்கிறார்கள்.ஆனால் அது தவறு..உண்மையில் காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப் பட்ட சமாச்சாரம்.காதல் கொள்பவர்கள் மூளையின் 12 பகுதிகள் சுழற்சியாக சுற்றி வந்து கோகைன் போதைப்பொருளினால் கிடைக்கும் கிளர்ச்சியை உண்டாக்கிறதாம்.

3)வேண்டாம் என்றால்..சேமிப்பு கணக்கு துவங்குங்கக் என வங்கிகளின் தொந்தரவு இனி இருக்காதாம்.இனி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் நிறுவனச் சான்றிதழ் மட்டும் போதாது.கூடுதலாக..பாஸ்போர்ட்,தொலை பேசி கட்டண ரசீது,வாக்காளர் அடையாள அட்டை ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம் வேண்டுமாம்

4)உலகில் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றனவாம்.அதற்கான காரணங்கள் மேலதிகமான வேட்டை அல்லது அவை வாழ்வதற்கான வாழ்விடங்கள் இல்லாமல் போனதே என இயற்கைப் பராமரிப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (I.Y.C.N) தெரிவித்துள்ளது.

5)இறந்த பிரபலங்கள் ஈட்டிய வருமானத்தில் உலக அளவில் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார்.அவர் ஈட்டிய வருமானம் 1210 கோடி ரூபாயாம்.

6)இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் மனத்தை வாட்டிய இடுகை இது,இதை எல்லோரும் படிக்க வெண்டும் என்பதால் இந்த மாத தமிழா தமிழாவின் மகுட இடுகை இதுதான்.வாழ்த்துகள் ஈரோடு கதிர்.

7)கவிஞர் ஜெயபாலனின் கவிதை ஒன்று

யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் ஃப்ராங்க்போர்ட்டில்
ஒரு சகோதரியோ ஃப்ரான்ஸ்
நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஓஸ்லோவில்!!

பயனில சொல்பவன்...

அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Wednesday, October 27, 2010

கொன்றன்ன இன்னா செயினும்...

அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.

Tuesday, October 26, 2010

இலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங்கள்! இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கையில் கிடைத்த தமிழர்களையும் பெண் போராளிகளையும் மிகவும் கொடூரமாக கொன்று குவித்துள்ளது இலங்கை ராணும். இதுகுறித்து இதுவரை வெளிவராத புதிய படங்களை வெளியிட்டுள்ளது தமிழ்வின் இணையதளம்.புலிகளுடனான போரில், பொதுமக்களை ராணுவம் கொல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெருமளவில் போர்க்குற்றம் செய்த நாடு என பல நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது இலங்கை. ஆனாலும் தொடர்ந்து, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே உள்ளன.அந்த வகையில் மிக அண்மையில் சில கொடூரமான படங்கள் வெளியாகியுள்ளன. இப்படங்கள் கடந்த 2009 மே மாதம் வன்னியில் நடந்த யுத்தத்தில், சிங்களப் படைகள் தமிழர் மீது நடத்திய வெறியாட்டத்தின்போது எடுக்கப்பட்டவை.ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு, மிகக் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மற்றும் போராளிகளைக் கொன்று உடல்களை தெருவில் வீசிவிட்டு சிங்களர்கள் செல்லும் காட்சிகள், உயிரோடு தமிழர்களை ஓடவிட்டு சுட்டுக் கொல்லும் கொடூரம் போன்றவை இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.போர்க்குற்றம் குறித்து பொதுமக்களும் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடம் உள்ள ஆதாரங்களைத் தரலாம் என ஐநா நிபுணர் குழு கூறியுள்ள நிலையில் இந்த படங்கள் வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.இவற்றையும் ஐநா போர்க்குற்ற விசாரணை நிபுணர் குழுவுக்கு ஆதாரங்களாக அனுப்பி வைக்க முடியும்.
புகைப்படங்கள்
-செய்தி - நன்றி தட்ஸ்தமிழ்

Monday, October 25, 2010

வடகரை வேலன் எழுதாதது ஏன்? -தன்னிலை விளக்கம்

வடகரை வேலன்..பதிவுலகிலிருந்து விலகியுள்ளார்..அவரை மீண்டும் எழுதச் சொல்லி..ஒரு இடுகை இட்டேன்.அந்த இடுகை இங்கே.
அதற்கு பதிலாக எனக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளார்.அதை என் வலைப்பூவிலும் போடச்சொன்னார்.
அந்த மின்னஞ்சலே இது.


அன்பின் TVRK சார்,


முதலில் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு நன்றிகள் பல.


நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் என்றழைப்பதுதான் எனக்கும்
பிடித்திருக்கிறது. தொடருங்கள்.


ஏன் எழுதவில்லை என உரிமையுடன் கேட்டிருக்கிறீர்கள். பலரும் கேட்டதுதான்.
என்றாலுமதை ஒரு புன்னகையுடன் கடந்திருக்கிறேன். நீங்கள் பதிவாகவே
போட்டிருப்பதால் பதில் சொல்வது, தங்கள் மீதிருக்கும் மரியாதையைச்
சொல்லும் முகமாகவும், அவசியமாகிறது.


நான் தற்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை எனக்குக் கிடைத்ததற்கு
நான் பிளாக் எழுதுகிறேன் என்பதும் ஒரு காரணம். ஏனெனில் என் பணிகளில்
ஒன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் (செர்ச் என்ஜின் ஆப்டிமைசேசன், கூகிள்
ஆட் வேர்ட்ஸ் கேம்பைன், சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் ). எனவே ஒரு
பிளாக்கராக இருந்ததும் பேஸ்புக்கிலும் ஆர்க்குட்டிலும் டிவிட்டரிலும்
இருந்தது சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்குக்கு பயனளிக்கிறது. என்
பிளாக்கை அலுவலகத்தில் அனைவரும் விரும்பிப் படிப்பது வழக்கம்.


இதே நேரத்தில்தான் பதிவர் அரவிந்த் - சாந்தி விவகாரம் வெடித்தது. அதில்
அநாவசியமாக என் பெயர் இழுக்கப் பட்டு தவறான விதத்தில் பரப்பப்பட்டது.
எனது அலுவலக நிர்வாகிள் அதை விரும்பவில்லை.


மேலும் வடகரை வேலன் என்பது என் தந்தையின் புனைப் பெயர். வடகரை வேலன் ஒரு
ஆணாதிக்கவாதி பெண்களை இழிவு படுத்துபவன் என்பது போன்ற ஆதாரமற்ற / இட்டுக்
கட்டிய குற்றச்சாட்டுக்கள் என் தந்தையின் பெயருக்கு களங்கம்
விளைவிக்கும்விதமாக இருந்தன.


எனவே இனி எழுதவேண்டாம்; குறைந்தபட்சம் வடகரை வேலன் என்ற பெயரில் எழுத
வேண்டாம் என முடிவு செய்தேன்.


ஆனால் என் பிளாக் வேறு விதத்தில் உபயோகமாக இருந்திருக்கிறது என்பது
பலரது அழைப்பில் இருந்து உணர்ந்து கொண்டேன். எனது "கதம்பம்" பதிவுகள்
மூலம் நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் பிறர் கண்டுகொள்ள உதவியாக
இருந்திருக்கிறேன். இரண்டாவதாக எனது பிளாக்கில் இருந்த பிளாக்ரோல் மூலம்
நல்ல பதிவுகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கவும் முடிந்திருக்கிறது. நல்ல
விதமாக பயன் தந்திருக்கிறேன் என்ற திருப்தி போதும்.சிறு சிறு பிரச்சினைகளை இருபக்கமும் பேசித் தீர்த்து வைத்த அனுபவம்
தற்போதைய வேலையில் மிகவும் பயன்படுகிறது. இரு ஊழியருக்கிடையிலோ,
கஸ்டமருடனோ அல்லது சப்ளையருடனோ ஏற்படும் விவகாரங்களை சுமுகமாகத்
தீர்த்து வைக்க உதவுகிறது. எனவே நிர்வாகிகளிடம் நல்ல பெயரும்
சம்பாதித்திருக்கிறேன்.


2008 மே மாதம் எழுத வந்தேன் கிட்டத் தட்ட இரு வருடங்கள் நானும் ஏதோ எழுதி
இருக்கிறேன். என்றாலும் பதிவுலகின் மூலம் கிடைத்த நட்பு மதிப்பு மிக்கது.
இப்பொழுதும் நான் அந்த உறவுகளைத் தொடர்கிறேன். இந்தப் பதிலைக் கூட
அபிஅப்பா வீட்டில் இருந்துதான் எழுதுகிறேன். என்னுடைய வீடு போல நான்
உணரும் சிலரது வீடுகளில் நமது தொல்காப்பியன் வீடும் ஒன்று. இந்த உறவுகள்
போதும் சார். என் உறவினர் வீடுகளில்கூட இல்லாத உரிமையும் பரிவும்
எனக்குக் கிடைக்கிறது. திருப்தியாக, சந்தோஷமாக இருக்கிறேன்.


இந்த வேலையில் கூட என்னுடைய டார்கெட்டை அச்சீவ் செய்ய பதிவர்கள் சிலர்
கொடுக்கும் லீடுகள் மிக உதவியாக இருக்கின்றன. சிதம்பரத்தில் ஒரு ஆர்டர்
விஷயமாக வந்தவன் அபி அப்பா வீட்டில் தங்கி இருக்கிறேன். குறை ஒன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா என்ற ராஜாஜியின் பாடல்தான் ஞாபகம் வருகிறது.


தற்பொழுது பஸ்ஸில் மட்டுமே இருக்கிறேன். அதிலும் எழுதுவதில்லை
குறிப்பிட்ட சிலரை மட்டும் பாலோ செய்து கொண்டு அங்கு நடக்கும் நல்ல
ஆரோக்கியமான விவாதங்களில் பங்கு கொள்கிறேன். தம்பி ஜீவ்ஸுடன் கம்ப ராமாயண
விவாதம் அவ்வகைகளில் ஒன்று.பொதுவாக பதிவர் உலகம் எப்படியாவது புகழ் பெறத் துடிப்பவர்களாலும்,
பிறரது பிரபலத்தில் வயிறு எரிபவர்களையும் கொண்டிருக்கிறது. மற்றவர்களை
அவர்கள் எழுத்தில் வெல்ல முடியாதவர்கள் இந்தக் கும்பல். எனவே அவர்கள்
இத்தகைய கீழ்த் தரமான செயல்களில் இறங்குகிறார்கள். இப்படிப் பிரபலமாக
அவர்கள் கொடுக்கும் விலை சமயங்களில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது;
நம்பிக்கைத் துரோகம் செய்தல், குடும்ப உறவைச் சிதைத்துக் கொள்ளுதல்
போன்றவை அதற்கான விலை என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. வெகு
குறைவானவர்களே இத்தகைய மனப் பிறழ்வுகளில் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள்
என்றாலும் அவர்கள் செய்யும் அலப்பறை அயர்ச்சியை உண்டாக்குகிறது. நல்ல
இலக்கியத் தேடல் உள்ள சிலர்கூட இந்தப் பிரபல ஆசையினால் மனசாட்சிக்கு
விரோதமான காரியங்களில் ஈடுபடுவதும் அதன் பிறகு அதை நியாயப் படுத்துவதும்
கேடு கெட்ட செயல். சரி அது அவர்கள் இஷ்டம்.


ஆனால் என்ன/எப்படி எழுதவேண்டும் என்பதை ஒரு சிலர் முடிவு செய்யும் நிலை
அராஜகமாக இருக்கிறதுஇந்த நிலை மாறும்வரை சற்று அமைதியாக இருப்பது என் தற்போதைய முடிவு.


தங்களுக்கும், தங்களைப் போலவே என் மீது உரிமை பாராட்டுபவர்களுக்கும் என்
சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்


வடகரை வேலன்

Sunday, October 24, 2010

எந்திரனும்..மன்மதன் அம்பும்

கடந்த ஜூலை 31 ஆம் நாள் மலேஷியாவில் எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடந்தது.இதில்..கலாநிதி மாறன்,ஷங்கர்,ரஜினி,ரஹ்மான்,வைரமுத்து,ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் தமிழ்ப்பட பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.நிகழ்ச்சி சன் டீவியிலும் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரெட் ஜயண்ட் மூவீஸ் தயாரிக்கும் மன்மதன் அம்பு படத்தில்.. கமல்,திரிஷா நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
எந்திரன் படத்தைப் போல பெரிய அளவில் பிரம்மாண்டமாய் நிகழ்ச்சியை நடத்த உள்ளனராம் தயாரிப்புத் தரப்பு.இப்படம் தெலுங்கு,ஹிந்தியிலும் டப் செய்யப் படுகிறது.
எந்திரனைவிட ஒரு திரையரங்கிலாவது அதிகமாக இப்படத்தை வெளியிட உள்ளனராம்.இதற்கான விளம்பரத்திற்கு பல கோடிகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
இப்படத்தின் இசை சிங்கப்பூரில் எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20ஆம் நாள் நடைபெற உள்ளது.விழாவில் நாயக,நாயகியர்,இயக்குநர்,இசை அமைப்பாளர்,தயாரிப்பாளர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் நிகழ்ச்சியில் பாடல்களை மேடையில் பாட வைக்கிறார்.
இவ்விழா நடைபெறும் முன் தினம் சென்னையிலிருந்து ஒரு சொகுசு கப்பலில் 500 ரசிகர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறாராம் தயாரிப்பாளர் (இசை வெளியீட்டு விழாவிற்கும் கட்சி மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் சென்று கூட்டம் சேர்ப்பது போல சேர்க்கும் நிலை இனி வந்துவிடும் போல உள்ளது!!)
ஆரோக்யமான போட்டியானால் பரவாயில்லை..
நீயா..நானா போட்டி எனில்...
நிகழ்ச்சி கலைஞர் டீவியில் ஒளி/ஒலி பரப்பப்படுமாம்.
கான மயிலாட வான்கோழி ஆடும் சரிதான்..ஆனால் இங்கு
மயிலுக்கே இந்த நிலையா?

நான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளது-ரஜினி

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் - மாணவர் ரஜினி நேர்காணல் .

நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்:

"ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்... இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்..."

கேபியின் கேள்விகளும் ரஜினி தந்த பதில்களும்:

கேபி: எந்திரனுக்குப் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். இப்போ மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர், புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவண பவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும், அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே...?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை தூக்கி வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் - கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம், இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே... இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர் கையில் இருக்கு!

கேபி: நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போறேன். அதில் நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னா, நீங்க டைரக்ட் பண்ணா, நானும் நடிக்கிறேன்.

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைச்சிட்டேன்.

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணு, அவள் ஒரு தொடர்கதை. அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்னு அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.

கேபி: அரசியலில் உனக்குப் பிடித்த தலைவர் யார்?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் யார்... தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராவ்பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: நீங்கள் கோபப்படுவதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு!

(நன்றி தட்ஸ்தமிழ் )

Saturday, October 23, 2010

திட்டு (கவிதை)

கண்ணில் கண்டோரை
கண்டமேனிக்கு திட்டித் தீர்த்தான்
நீ யாரப்பா?
என்றிட்டேன் தைரியமாக
என்னையும் திட்டினான்
விவரம் அறிந்தோர் கூறினர்
அவன் ஒரு 'பிளாக்கராம்" - அவனை
யாரோ திட்டினராம்
திட்டத் தெரியா
நீ
பிளாக்கரா என்று
அன்று ஆரம்பித்தானாம்
வசவு மழையை
இன்றுவரை ஓய்வில்லையாம்

Friday, October 22, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (22-10-10)

ஆண்டுதோறும் பெண்களின் மரணத்திற்கு 51 விழுக்காடும், ஆண்களின் மரணத்திற்கு 37 விழுக்காடும் காரணமாக இருப்பது உயர் ரத்த அழுத்தமே என ஒரு ஆய்வு அறிக்கைக் கூறுகிறதுநாம் சாப்பிடும் உணவில்..தவறி எறும்பு விழுந்து..அதை நாம் சாப்பிட்டால்..கண் நன்றாகத் தெரியும் என நம் பெற்றோர்கள் வேடிக்கையாய் சொல்வதுண்டு.அது தவறு.எறும்புகளுக்கு கண் துல்லியமாய் தெரியும் என்பதே உண்மை..அதுவே மருவி..இப்படிச் சொல்லப் படுகிறதுஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 1228950 கோடிகள்.நடப்பு நிதி ஆண்டில் மட்டும் முதல் மூன்று மாதங்களில் கடன் 1080 கோடி டாலர் அதாவது 48600 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது..(பொருளாதாரமாவது-வளர்ச்சியாவது)2010 ஆண்டு ஆகஸ்ட் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 67கோடி செல்ஃஃபோன் இணைப்புகள் உள்ளனவாம்.இதில் ஏறக்குறைய பாதிபேர் இரண்டு செல்ஃபோன்களை பயன்படுத்துபவர்கள்நான்கு ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் நடத்தப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை என்னும் ஆய்வறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவிற்கு 97ஆம் இடம் கிடத்துள்ளதாம்.ஒரு பொன்மொழி

எல்லாமே ஆட்டங்கண்டு வீழ்ச்சி அடைந்து முடிவுற்றாலும்

இதயம் தோல்வியுற்றாலும்

மரணமும் இருளும் மட்டுமே எஞ்சினாலும்

விளிம்பிற்கு வந்து இனி மரணம் மட்டுமே

என்றிருக்கும் போதும்

எந்த மனித வலிமையும் தடுக்கவோ

உதவவோ முடியாதென்றாலும்

இயற்கை கொடுத்துள்ள வலிமையால்

விதியை எதிர்த்து போரிட முடியும்(அரவிந்தர்)
 

Thursday, October 21, 2010

இந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா?

சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன்.. பாதிப்பே இந்த இடுகை
முன்பெல்லாம் குறைவான சம்பளம் வாங்கினாலும்..ஓரளவிற்கு உணவு,உடை,இருப்பிட வசதியுடன் ஒரு குடும்பம் நடத்த முடிந்தது.

அதிலும் குறிப்பாக சென்னை..பெருநகர்களிலேயே விலைவாசிகளில் ஓரளவு கட்டுப்பாடுடன் இருந்தது.ஆனால் இன்றைய நிலை யில் பெரும் மாற்றம்.எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்..கைக்கும்,வாய்க்குமே சரியாய் உள்ளது.சமீப காலங்களில் சராசரி விலைவாசி சென்னையில் 146 விழுக்காடு உயர்ந்துள்ளது.ஒரு படுக்கை அறை உள்ள 550 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை 5000க்கு குறைவில்லை.வீடு வாங்குவது என்பது..பலருக்கு பகல் கனவாகவே ஆகிவிட்டது.

ஒரு படத்தில் தங்கவேலு பாடுவார்..'கையில வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியல' என்று..இன்று கிட்டத்தட்ட மாத சம்பளம் வாங்குவோர் அனைவர் நிலையும் அதுதான்.

எல்லாவற்றிற்கும் விலைவாசி உயர்வைக் காரணமாய் சொன்னாலும்..முக்கியமாக மக்களின் லைஃப் ஸ்டைல் மாறிவிட்டதே காரணம்.

காலை டிஃபனாக இட்லி, தோசை சாப்பிட்ட நிலை மாறி, பல வீடுகளில் ஓட்ஸ் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.விலையும் சற்று அதிகம்..அதே நேரத்தில் வயிறும் நிறையாது.அப்படியே இட்லி, தோசை என்றாலும்..யாருக்கும் அரிசி, பருப்பை நனைத்து மாவாட்டுவதற்கெல்லாம் நேரமில்லை.தயாராக கடைகளில் ஈரமாவே கிடைக்கிறது.

மாலை பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள்..பேக்கரியில்..சமோசாவோ, பர்கரோ வாங்கி தின்றுவிட்டு டியூஷன் கிளாஸிற்கு விரைகிறார்கள்.வீட்டில் அவர்களுக்கு டிஃபன் செய்து கொடுக்க ஆள் இல்லை.

வாரம் ஒரு முறையேனும்..குடும்பத்துடன் ஓட்டலுக்குச் செல்ல வேண்டியுள்ளது.சினிமா போனால் கேட்கவே வேண்டாம்..நான்கு நபர் கொண்ட குடும்பத்திற்கு அதற்கான செலவு 1000 ரூபாய் ஆகிவிடுகிறது

இதெற்கெல்லாம்..காசு அதிகம் செலவிடுவதைத் தவிர்த்து..பல நேரங்களில் மருத்துவரிடம் செல்ல வேண்டியுள்ளது.

பலருக்கு உடல் எடையை குறைக்க வீட்டு வேலை,உணவுக் கட்டுப்பாடு ஆகியவை இல்லாததால் ஜிம் செல்ல வேண்டியுள்ளது.அதற்கு மாதம் பணச்செலவு.

தேவையோ, தேவை இல்லையோ அனைவரிடமும் செல்ஃபோன்.

என் நண்பர் ஒருவர் மாதம் 40000 சம்பாதிக்கிறார்.அவரும் கஷ்டம் என்கிறார்.கேட்டால்..சம்பளத்தில் பி.எஃப்., வீடு வாங்கிய கடன் (இருபது லட்சத்தில் சிறு ஃப்ளாட் வாங்கிவிட்டு..மாதத் தவணை வங்கிக்கு 15000 கட்டுகிறார்),வருமான வரி எல்லாம் போய் 18000 தான் கையில் கிடைக்கிறது.மளிகை,பால்,பயணச் செலவு,பிள்ளைகள் பள்ளிக்கான செலவு..என கணக்குச் சொல்கிறார்.இந்திய அரசு பட்ஜெட் போல மாதாமாதம் டெஃபிசிட்.அதை சரிக்கட்ட சொசைட்டி லோன் போட்டால்..அந்த பிடித்தம் வெறு..என புலம்புகிறார்.

இன்று பெரும்பாலோர் நிலை இதுதான்..இந்நிலை இப்படியே தொடருமானால்..நம் நாடும்..அமெரிக்க நாட்டைப் போல ஒரு காலத்தில் மிகப் பெரிய பொருளாதாரச் சீர்க்குலைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இதையெல்லாம் நாட்டுமக்கள் நினைத்தால் ஓரளவு தடுக்கலாம்..

ஒரு செலவை செய்யும் முன் அது அவசியம் தானா என ஒரு தடவைக்கு மேல் சிந்தியுங்கள்.

பிறருக்காக வாழாதீர்கள்..நமக்காக வாழுங்கள்..

வரக்கூடிய வருவாய் எவ்வளவு என்பதைவிட வரும் வருவாய்க்குள் செலவுகளைக் கட்டுப் படுத்துங்கள்.

'ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை'

ஒருவனுக்கு வரக்கூடிய வருவாய் குறைவாய் இருந்தாலும் பரவாயில்லை..செலவுகள் எல்லைக்குள் இருக்குமேயாயின்.

இதை அலட்சியம் செய்து வாழ்வானேயாயின்..அவனது வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்..
 

Wednesday, October 20, 2010

வழிமேல் விழி (கவிதை)

நீ

வந்தால் வருவாய்

என்றிட்டார்

எதிர்நோக்கி

காத்திருந்தேன்

சொன்னது வானிலை நிலையம்

என்பது தெரிந்தும்2) வண்ணத்துப் பூச்சி

மெகா சீரியல்

விருந்தினர் வருகை

மோப்பக் குழைந்த

அனிச்சமாய் முகம்

கேயாஸ் தியரி

திரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு

(Photo courtesy-chennai 365)

தென்னிந்திய மொழிகளில் 57 படங்கள் தயாரித்து இயக்கியவர் பந்துலு ஆவார்.இவர் 26-7-10ல் பிறந்தவர்.ஒரு நடிகராக வாழ்க்கையை துவக்கியவர் பின் பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மா பெரும் பல படங்களை தயாரித்தார்.

சிவாஜி கணேசன் நடித்த, வீர பாண்டிய கட்டபொம்மன் இவருக்கு ஆஃப்ரோ ஆசிய ஃபில்ம் ஃபெஸ்டிவல் விருதப் பெற்றுத் தந்தது.மேலும் கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் ஆகிய படங்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள் முதல் தேதி,,சபாஷ் மீனா,பலே பாண்டியா,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,தங்கமலை ரகசியம்,முரடன் முத்து ஆகியவை.

எம்.ஜி.ஆர்., நடிக்க இவர் இயக்கியவை ஆயிரத்தில் ஒருவன்,ரகசிய போலீஸ்115,தேடி வந்த மாப்பிள்ளை,நாடோடி,மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்.

ஜெயலலிதாவை முதன் முதல் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.'சின்னட கோம்பே' என்னும் கன்னடப் படத்தில் அறிமுகப் படுத்தினார்.பின் எம்.ஜி.ஆரின் ஜோடியாக முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது ஆயிரத்தில் ஒருவன் படத்தில்.

என்.டி.ராமாராவ்,நாகேஸ்வர ராவ் அவர்கள் நடித்த பல தெலுங்கு படங்கள் இயக்கியுள்ளார்.

இவரது கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி மனம் மகிழ்ந்து இப்பத்திற்கு வரி விலக்கு அளித்தார்.

'குழந்தைகள் கண்ட குடியரசு' என்ற இவர் படம் தேசிய விருது பெற்றது.

பலே பாண்டியா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி இரண்டும் நல்ல நகைச்சுவைப் படங்கள்.

பள்ளி ஆசிரியர் பற்றிய ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் இவர் பிரதம வேடத்தில் நடித்தார்.இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியானது.

1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவர் படத்திலிருந்து ஒரு பாடல்

Tuesday, October 19, 2010

சவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்பா!!!

பரிசல்..ஆதி..முயற்சி எடுத்து நடத்தும் சவால் சிறுகதைப் போட்டிக் குறித்து பரிசல் எழுதியுள்ள பதிவில்..

'பிரமிப்பாய் இருக்கிறது..75+ கதைகள் வந்துள்ளன (மொத்தம் 83 கதைகள்)' என்றுள்ளார்..ஆனால்..

உண்மையிலேயே பிரமிப்பா...நான் பரிசல் ஆக இருந்திருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டேன்..

சிறுகதைகளை திறம்பட எழுதும் பல (பிரபலம்!) பதிவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.கதைகள் எழுதியவர்கள் விவரம் பார்த்ததும்..நான் முதலில் போட்டி அறிவிக்கப் பட்டிருந்த பதிவைப் பார்த்தேன்..காரணம்..ஒருவேளை..இவர்களெல்லாம் கலந்துக் கொள்ளக் கூடாது..என பல பெயர்களை பரிசல் பட்டியல் இட்டிருந்தாரோ என்று..ஆனால்..அப்படியில்லை..

பின் ஏன் இவர்கள் கலந்துக் கொள்ளவில்லை..

ஒருவேளை பரிசுத் தொகை 1500 என்றிருந்தால் கலந்துக் கொண்டிருப்பார்களோ!!

அல்லது..பரிசல் நமது நண்பர் (அப்படியானால் முன்னர் போட்டி நடத்தியவர்கள் நண்பர்கள் இல்லையா? எனக் கேள்வி வேண்டாம்)..நாம் எழுதி..நம் கதை பரிசுக்குரியதாகி விட்டால்..பரிசல்-ஆதி க்கு பெயர் கெட்டுவிடும் என எண்ணியிருப்பார்களோ..

அப்படியிருக்க வாய்ப்பில்லை..பின்..

பரிசு சுஜாதா நாவல்களாம்..அது எதற்கு..அதுதான் நம்மிடம் உள்ளதே..என எண்ணியிருக்கக் கூடும்..

ஆகக் கூடி காரணம் எதுவானாலும்..பரிசு எதுவாயிருந்தாலும்..

பரிசுக்காக எழுதாது..ஒரு ஆரோக்கியமான போட்டி..மா பெரும் வெற்றி பெற..அதில் கலந்துக் கொண்டு... வெல்பவர்களுக்கும் உற்சாகம் ஏற்பட...இதில் கலந்துக் கொள்ளாத அந்த பிரபலங்களும் கலந்துக் கொண்டிருக்க வேண்டும்..

அப்படியில்லாதது..'இவன்(ர்) என்ன போட்டி நடத்துவது..நான் என்ன கலந்துக் கொள்வது' என்ற எண்ணம் காரணமாயின்..

மனவருத்தமே ஏற்படுகிறது.இதில் பிரமிப்பு எங்கே?

இலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய்க! - மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

 இலங்கை மண்ணில் செத்து மடியும் எமது தமிழ்ச்சாதியைக் காப்பாற்றி, அவர்கள் அங்க சம உரிமை பெற்றவர்களாக வாழ வகை செய்ய வேண்டும், என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:9.10.2010 அன்று சென்னை விமான நிலையத்தில் நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது, கடிதம் ஒன்றை அவர்களிடம் அளித்தேன்.அந்தக் கடிதத்தில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்துவரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திருப்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டுமென்றும், மேலும் தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன்.அம்மையாரும் அதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக என்னிடம் உறுதி அளித்தார்.இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாகவே தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது நன்றாகவே தெரியும்.1956ம் ஆண்டில் தீர்மானம்:29.1.1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து; அ.பொன்னம்பலனார் வழிமொழிந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள்தொட்டு; தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும், நாம் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், பேரணிகள் நடத்தியும், உரியவர்களிடத்தில் முறையீடுகள் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை நமது ஆட்சியையே இழந்திருக்கிறோம்.இலங்கைத் தமிழர்களைக் காக்கவும் - அவர்தம் உரிமைகளை அறவழியில் - அமைதி வழியில் - அரசியல் ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகிற வழிமுறைகளைப் பின்பற்றி, கழகம் முயற்சிகளை மேற்கொண்டு - அதற்கு ஒத்துவருகின்ற கட்சிகள், இலங்கைத் தமிழர்பால் பரிவுகொண்ட இயக்கங்கள் - அவற்றின் தலைவர்கள் - முன்னோடிகள் ஆகியோருடன் தொடர்புகொண்டு - அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் - செய்த தியாகங்களையும் உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடும் தமிழர்தம் தூயநெஞ்சங்கள் நன்கறியும்.வேண்டாம் சகோதர யுத்தம்:1956ம் ஆண்டிற்குப் பிறகு, அண்ணா விரும்பியபடி, 22.6.1958 அன்று தி.மு.க. சார்பில் நாடெங்கும் "இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்'' நடத்தப்பட்டது.அன்றையதினம், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "இலங்கையில் உள்ள ஒருசில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி, உயிரையும், உரிமையையும், உடைமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ்த் தமிழர்கள் நிலைகண்டு, இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது. நீண்டகாலமாக இலங்கையை தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முயற்சியில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டுமென்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டது.அதன்பிறகும், இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டுவரும் முயற்சிகள், எடுத்துவரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் (டெசோ) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து, இந்திய நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என்று 4.5.1986 அன்று வேண்டுகோள் விடுத்தோம்.அந்த வேண்டுகோள் முழுமையாக - மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.சரித்திரம் மறக்காது:இலங்கையில் நடைபெற்ற சகோதர யுத்தத்தின் காரணமாக, 1986ல் டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்; 1989ல் கொழும்பு நகரில் அமிர்தலிங்கமும், ஈழப் போருக்கு ஆதரவாளரான யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்கள். அதே ஆண்டில், பிளாட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் இலங்கையில் கொல்லப்பட்டார். 1990ம் ஆண்டில் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபாவும், அவரோடு 10 பேரும் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சகோதர யுத்தத்தால் விளைந்திடும் கொடுமைகளைப் பற்றியும், பேரிழப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, "சகோதர யுத்தத்தால் நாம் பாழ்பட்டு விட்டோம் என்பதை மறந்துவிடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் ஏற்படுத்திய விளைவுகளை, இப்போது நாம் பெறவேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு, ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்", என்று நான் சொன்னேன்.சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையிலே நடைபெற்ற சோகமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட - இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றை சரித்திரம் நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் செய்யாது.சட்டசபையில் தீர்மானம்:இலங்கையிலே போர் தொடங்கி மேலோங்கியபோது, தமிழர்கள் பேரிழப்பைச் சந்திக்கத் தொடங்கியதைக் கண்டு, தமிழகச் சட்டப்பேரவையில், "இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றமே கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்று கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள். அய்யோ! அந்தச் சிங்கள ராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர்கள் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தனர் என்ற சேதியும் கூட அறவே அற்றுப்போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே -மனிதநேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?"இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பு களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக்கூடிய பொறுப்பு - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும் போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான்; இலங்கையில் சீரழியும் - செத்துமடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.எனவே அந்த நல் விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை முன்மொழிகிறேன்'' - என்று இவ்வாறு நான் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விபரீத விளைவுகள்...ஆனால் இலங்கையிலே போர் நிற்கவில்லை, தொடர்ந்து நடந்தது; விபரீதமான விளைவுகளுக்குப் பிறகு, ஓய்ந்தது. எனினும், உரிமைகளுக்கான போராட்டம், இலங்கையிலே உச்சக்கட்டத்திலே இருந்தபோது, ஜெயலலிதா அம்மையார் என்ன சொன்னார் என்பதை இங்குள்ள தமிழர்களும், இலங்கையிலே உள்ள தமிழர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.18.1.2009 அன்று ஜெயலலிதா அளித்த பேட்டியில், "இலங்கை வேறு நாடு, எனவே, அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று, சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதிலே எந்தநாடும் விதிவிலக்கல்ல,'' என்று சொல்லியிருந்தார்.அப்படிச் சொன்னவருக்கு ஆதரவாகத்தான் - ஈழத் தமிழர்களுக்காக தான் மட்டுமே பிறவி எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் - ஒருசிலர்; குரல் உயர்த்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதை; வரலாறு உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறது.இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுதான் நிரந்தரமாகப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் பின்னணியில், இன்றைய (18.10.2010) ஆங்கில நாளேடு ஒன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது.அதில், போரின்போது இடப் பெயர்ச்சிக்கு ஆளான தமிழர்களை மறுகுடியமர்த்தலும், அவர்களுக்கான மறுவாழ்வும் முக்கியமானப் பிரச்சினையாகும் என்றும்; அதிபர் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவருவதென்பது இயலக் கூடியதாகும் என்றும், இலங்கைத் தமிழர்களுடைய - இலங்கை இஸ்லாமியர்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டுமேயானால் அரசியல் சட்டத்திருத்தம் தேவையான ஒன்றாகும் என்றும்; தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவையான அதிகாரப் பங்கீடு ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்றும்; இதுவரை இல்லாத வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.இன்னமும் ஒற்றுமையில்லையே...இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத்தான்; இது அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது."இன்னமும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையே'' என்று ராஜபக்சே போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது; கவைக்குதவாத வாதமாகவே இருக்கிறது - அந்த வீண்வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு; இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்று தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி; அந்தக் கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்...," என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

(நன்றி -தட்ஸ்தமிழ்)
(இனி நாம் - இன்னும் ஏழு மாதங்களில்  தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது )

Monday, October 18, 2010

தினமணிக்கு ஒரு பாராட்டு

(தினமணியில் வந்த தலையங்கம்)
ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளுடன் எதை வேண்டுமானாலும், எந்த முன்யோசனையும் இல்லாமல் எதிர்க்கலாம் என்பது இன்று அரசியல் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: போக்குவரத்து வாகனத் தொழிலுக்கான ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்கிற சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அண்மையில் நடத்திய போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசுகையில், கல்வித் தகுதிக்கும் சாலை விபத்துக்கும் தொடர்பில்லை என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த வாதம் உண்மைதான். வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாவதற்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் படித்தவர்கள், பட்டதாரிகள் என்பது நிச்சயம். அதற்காக கல்வித் தகுதியே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா?

உள்ளூரில் மட்டுமன்றி பெருநகரங்களிலும் பிற மாநிலங்களுக்கும் வாகனங்களை ஓட்டிச் சென்றாக வேண்டும். அங்கு வேற்று மொழியில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளைப் படிக்க முடியாத நிலையில் ஆங்கிலத்தில் உள்ள அறிவிப்புகளையாவது படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான அடிப்படைத் தகுதிக்காக மட்டுமே ஒருவர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை.

படிக்காத ஒருவரால் வாகனம் ஓட்ட முடியாதா என்று கேட்கலாம். ஒரு துறை பற்றிய அறிவைப் பெற தன்னார்வமும் தேடலும் போதுமானது. அத்துறையைத் தொழிலாகக் கொள்ள வேண்டுமானால், அதற்குக் கல்வித் தகுதி அவசியம். சாலையில் வாகனம் ஓட்டுவது தனிப்பட்ட விஷயம் அல்ல, பலருடைய உயிர்களோடு தொடர்புடையது. அந்தப் புரிதலும் பொறுப்புணர்வும் ஏற்படுத்த கல்வி மிகமிக அவசியம்.

நம் நாட்டில் லஞ்சம் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெறும் நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. அல்லது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக எந்தவொரு வாகனத்தை இயக்கவும் உரிமம் பெறுவதும் எளிது என்பதே உண்மை நிலை. கனரக வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறிப்பிட்ட காலம் இலகுரக வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிபந்தனைகள்கூட தளர்த்தப்பட்டு, 20 வயது பூர்த்தியாகியிருந்தால் நேரடியாக கனரக வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கப்படுவதால்தான் பல விபத்துகள் நடக்கின்றன.

ஆனால், மேலை நாடுகளில் கல்வித் தகுதி ஒருபுறம் இருக்க, வாகனம் பற்றிய அறிவும், போக்குவரத்து குறித்த விழிப்புணர்வுக்கும் தனி வகுப்புகளில் சேர்ந்து பயின்றாக வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இத்தகைய வகுப்புகளில் விபத்துகள் நேரிடும் தன்மை, தவிர்க்க வேண்டிய முறைகள், விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், காப்பீட்டின் அவசியம், சட்டச் சிக்கல்கள் என எல்லாவற்றையும் சொல்லித் தருகிறார்கள். ஓட்டுநர் வகுப்புகளில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் பாடம் கேட்டாகவேண்டும். அதன் பிறகு எழுத்து அல்லது நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் இதெல்லாம் இந்தியாவில் இல்லை. வாகன ஆய்வாளர் முன்பாக வண்டியை ஓட்டிக் காட்டினால் போதுமானது என்கிற நிலைமைதான் உள்ளது.

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை, நாட்டு நடப்புகளை செய்தித்தாளில் படிக்கக் கூடிய அளவுக்கான அறிவு பெற மட்டுமே. போக்குவரத்து தொடர்பான புரிதலுக்கு இத்தகைய பொதுஅறிவு போதுமானது என்கிற உலக நடைமுறையைக் கருத்தில் கொண்டே இந்தக் கல்வித் தகுதியை அரசு நிர்ணயிக்கிறது.

ஒரு ராணுவ வீரரின் பணி என்பது தலைமை இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதும், எதிரியைத் துப்பாக்கியால் சுடுவதும் மட்டும்தான் என்றாலும், உடல்தகுதியுடன் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் இரவுக் காவலர் பணியிடத்துக்கு ஆள்எடுத்தாலும்கூட, குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு இரவுக் காவலர் படித்திருந்தால் என்ன, எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தால்தான் என்ன என்ற கேள்வி இன்றைய தேதிக்கு கேலிக்கு இடம்தருவதாகும்.

தமிழ்நாட்டில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் இலவசமாக 8-ம் வகுப்புப் படித்து முடிப்பது மிகமிக எளிதானதாகும். மாணவர்களுக்கு மதிய உணவும் உண்டு. எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் சரியாகப் படிக்காத போதும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஒருவர் 8-ம் வகுப்பு வரை படிக்கத் தவறினால் அது யார் குற்றம்? இத்தகைய தவறான போக்குக்கு அரசியல் கட்சிகள் ஊக்கம் தருவது சரியாக இருக்க முடியாது.

ஓட்டுநர் உரிமத்துக்கும், இரவுக் காவலர் பணிக்கும்கூட கல்வித் தகுதி அவசியமாக இருக்கும்போது, பொதுத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் வேட்பாளருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதுதான் நியாயமானதாக இருக்கும்.

அத்தகைய புதிய காலகட்டத்துக்கு நாம் நகர்ந்தாகிவிட்டது. கல்வி அறிவு இல்லாமல் எதற்கும் உரிமை கோர முடியாது என்கின்ற நன்னிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, கல்வித் தகுதி கூடாது என்று சொல்வது சரியானதாக இருக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளாகவும், எதிரிக் கட்சிகளாகவும் மட்டுமே இருந்துவிடக் கூடாது. எதிர்காலச் சிந்தனையைக் கருத்தில்கொண்ட கட்சிகளாகவும் இருக்க வேண்டும்.

Sunday, October 17, 2010

Miracle Fish (short film)

8 year old Joe has a Birthday he will never forget. After friends tease him, he sneaks off to the sick bay, wishing everyone in the world would go away. He wakes up to find his dream may have become a reality

Saturday, October 16, 2010

மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்
காமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன்.
அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன் என்றார் ரஹ்மான்.

காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடல் யாரையும் கவரவில்லை என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் ரஹ்மான். இருப்பினும் இந்தப் பாடல் யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
(நன்றி தட்ஸ்தமிழ்)

இனி நாம்..
பல மனிதர்கள் பிரபலங்கள் ஆனதும்..தான் செய்வது தான் சரி..தான் செய்ததை புரிந்துக் கொள்ளும் திறன் மற்றவருக்கு இல்லை என்றெல்லாம் புகழ் உச்சிக்கு ஏற மமதையில் பிதற்றுவது உண்டு.இந்நிலையில் பாடல் பிரபலமாகவில்லை..என்பதற்கு..தன் தவறுதான் காரணம் என்று மன்னிப்புக் கோரும் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டுக்கு உரியவர்.அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
(எல்லாப் புகழுக்கும் இறைவன் காரணம்..)தவறுக்கு ஆண்டவனை இழுக்கவில்லை ரஹ்மான்.

Friday, October 15, 2010

தேடல் ..(கவிதை)
தேடினான்

தேடினர்

தேடியது கிடைத்ததும்

தேடினர் மகிழ

தேடினவன்

தேடாதிருந்திருக்கலாமோ

என்கின்றான்

Thursday, October 14, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (15-10-10)

சூப்பர் பக் நோய் பற்றி நாம் அனைவருமறிவோம்.இது குறித்து பல் வேறு நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.இந்நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் டூத் பேஸ்டில் பயன்படுத்தும் ரசாயணத்தில் கூட இந்நோய் பரவலாம் என்கிறார்கள்.மற்ரும் பயன்படுத்தும் சோப், அழகு சாதனப் பொருள்கள் இவற்றாலும் நோய் பெருகலாமாம்.
(அதுக்குத்தான் அந்த நாள்ல பெரியவங்க..ஆலும் வேலும் பல்லுக்குறுத் என்றும்..முகத்திற்கு மஞ்சளும், சிகைக்காய் பொடியும் போதும்னு சொல்றாங்க..என சைடுல சிந்து பாடறார் ஒரு மத்தியத்தர குடும்பத் தலைவர்)

2)ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும்..குறிப்பாக சச்சீனுக்கும் பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில்..காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வாங்கிக் குவித்து..இந்தியாவை இரண்டாம் இடத்திற்குக் கொண்டு வந்த வீரர்களுக்கும் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.
(இந்தியா இரண்டாம் இடம் என்று கேள்விப்பட்டதால்..ஒரு வேளை நாமும் இரண்டாம் இடத்தில் இருந்தால் போதும் என ஹாக்கி வீரர்கள் எண்ணிவிட்டனர் போலும்)

3)இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தெற்கு மும்பையில் ஆண்டிலியா என்ற பெயரில் மிகப் பெரிய ஆடம்பர மாளிகைக்குக் குடிபெயருகிறார்.இது 27 அடுக்கு மாளிகையாம்.அந்தப் பகுதியில் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் இந்த மாளிகை தெரியும்படி கட்டப் பட்டுள்ளதாம்.
(ஆமாம்..சுனாமியால் வீடு இழந்தோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனவா)

4)69 நாட்கள் மண்ணுக்குள் புதையுண்ட கனிமச்சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசு பத்திரமாக மீட்டது..நாட்டு மக்களுக்கு அந்த நாடு அளித்த இந்த சிறப்பு பாராட்டத்தக்கது
(25 ஆண்டுகளுக்கு முன் விஷவாயு கசிவால்..பல்லாயிரம் பேர் மாள..லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாக சம்பந்தப்பட்ட நபர் நாட்டைவிட்டுச் செல்லவும்..இழப்பீடு குறித்து கவலையும் படாத அரசு ஞாபகம் வந்துத் தொலைக்கிறதே..ஏன்)

5)இரண்டு வாரங்களில் 'எந்திரன்" படம் இந்தியா முழுதும் 225 கோடி வசூல் செய்து..இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதாம்..
(எல்லாம் அந்த ஐங்கரன் அருள்தான் என்கிறார் கலாநிதி மாறன்)
6)மீன்கொத்திப் பறவை போன்று உலகத்தில் வாழ வேண்டும்..அது நீருக்குள் இருக்கும் வரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும்.வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்று போய் விடும்.அது போல உலக ஆசைகளை விட்டுவிட பழகிக் கொள்ள வேண்டும். - ஒரு பொன் மொழி
(நீரிலிருந்து வந்த பின்தான் இப்படி நடக்கிறது..அதுபோல உலகை விட்டுப் போகையில் உலக ஆசையைத் துறக்கலாம்..என்கிறார் ஒரு ஏட்டிக்குப் போட்டி)

7) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இது..http://www.luckylookonline.com/2010/10/blog-post_12.htmlதமிழா தமிழாவின் மகுட இடுகை இதுவே.வாழ்த்துகள் யுவகிருஷ்ணா

8)விவேக சிந்தாமணியில் கண்களைக் கெண்டை மீனுக்கு உதாரணம் காட்டும் இந்த பாடலைப் பாருங்கள்

"தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகேந்தினாள்
'கெண்டை கெண்டை' என்று அக்கரை யேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்"


ஒரு அருமையான பாடல்

இவர் ரஜினிக்குப் போட்டியா..

இவரது நடனத்தைப் பார்த்தால் இவர் ரஜினிக்கு போட்டி எனச் சொல்லத் தோன்றுகிறது.நீங்களும் நடனத்தைக் கண்டுக் களியுங்கள்

Wednesday, October 13, 2010

மெய் சிலிர்க்க வைக்கும் சிலிகனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!
இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

(நன்றி தினமணி )

வடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்பின் ராஜேந்திரன்,
வணக்கம்.
பதிவர்கள் உங்களை வேலன்,அண்ணாச்சி என்றெல்லாம் அழைத்தாலும் , உரிமை எடுத்துக் கொண்டு உங்களை ராஜேந்திரன் என அழைப்பது அநேகமாக நானாகத்தான் இருக்கும்.அந்த உரிமையிலேயே இம்மடலை எழுதுகிறேன்.
பதிவர்களிடையே உங்களுக்கு இருந்த மரியாதையைக் கண்டு வியந்திருக்கிறேன்.சிறு சிறு சர்ச்சைகளை உங்கள் அணுகுமுறையில் தீர்த்த போது உங்களது ஆளுமை கண்டு பிரமித்திருக்கிறேன்.
என் ஆதங்கங்களையும் ஓரிரு முறை உங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்.
சமீபத்தில்..பதிவுலக பிரச்னை ஒன்றிற்காக நீங்கள் மனம் வருந்தி என்னிடம் தொலைபேசிய போது அந்த நிகழ்ச்சி உங்கள் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருந்தது என நான் உணர்ந்தேன்.
'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' என்பது போல உங்களைப் போன்றோர் இருந்த காரணத்தால் பதிவுலக அவ்வப்போதைய பிரச்னைகள் ஓரளவு நல்ல முறையில் தீர்க்கப்பட்டன..
ஆனால் திடீரென நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டது..என் போன்றோர்க்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் எழுத்துகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளாததால்..இழப்பு என் போன்றோர்க்குத்தான்.
உண்மையில் உங்கள் இந்த முடிவிற்குக் காரணம்..கீழ்கண்ட இரண்டில் ஒன்றாய் தான் இருக்கும்..
1)பதிவர்களிடையே காணப்படும் தனி மனிதத் தாக்குதல்
2) அச்சக வேலையைவிட்டு கணிணி துறையில் நீங்கள் இறங்கியதால் ஏற்பட்ட வேலைப் பளு

முதல் காரணம்..என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..சம்பந்தப் பட்ட பதிவர்கள் மனதில் ஏற்பட்ட வடுவே ஆறி..மீண்டும் பதிவிட ஆரம்பித்து விட்ட நிலையில்..இந்த பாதிப்பு உங்களையும் தற்காலமாகத் தாக்கிவிட்டு மறைந்திருக்க வேண்டும்
இரண்டாம் காரணம்..உண்மை என்றீர்களானால் அதையும் ஏற்க முடியாது..வேலைப் பளு இருக்கலாம்..முன் போல் எழுதமுடியாமல் இருக்கலாம்..ஆனால் அவ்வப்போது எழுத முடியும் அல்லவா? அதைச் செய்யுங்கள்.
என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என எண்ணுகிறேன்.

அன்புடன்
T V Radhakrishnan

Tuesday, October 12, 2010

நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..

தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்.

Monday, October 11, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 22

சாதாரணமாக காதலன் தன் மனம் கவர்ந்தவளைக் காணும் இடம் இன்று பெரும்பாலும் கடற்கரைகளே..
கடல் இல்லாத இடங்களில்..பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள். அவர்களுக்குத் தனிமை தேவைப்பட்டாலும்..இது போன்ற இடங்களுக்கு வருவோர் பெரும்பாலும்..தான், தன் துணை,தன் குடும்பம் தவிர வேறு பக்கங்களில் பார்வையை ஓட்டுவதில்லை.
காதலன் தன் காதலி எங்கு வருவாள்..அவளை எங்கு சந்தித்தால் உரையாடலாம் என்று தெரியாது அவளது நெருங்கிய தோழியிடம் கேட்கிறான்..'உன் நண்பியை எங்கு சந்திக்கலாம்..அவள் எங்கிருப்பாள்?' என்றெல்லாம்.
அந்தக் காதலியின் தோழி சற்று குறும்புக்காரியாய் இருப்பாள் போலிருக்கிறது..'நேரடியாக பதில் சொல்லாமல்..அவனை சற்று சுற்றியடிக்கக நினைக்கிறாள்..ஆகவே அவனுக்கான பதிலை ஒரு விடுகதையைப் போல சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுபவள் பெரும்பே தையே

ஊருக்கு அருகே பொய்கை உள்ளது.சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை (அருகே உள்ளது).அவ்வாற்றில் தன் இரையத் தேடும் நாரைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை (தனிமைப் பிரதேசம்)நாங்கள் எங்கள் கூந்தலுக்கு செங்கழுநீர் பூக்கள் பறிக்க அங்கு செல்வோம்.பெரும் பேதமைக் கொண்ட அவள் அங்கும் வருவாள்..என்கிறாள் தோழி.

அதாவது காதலி அந்த இடத்திலும். என உம் போட்டாலும்..அவள் அங்குதான் இவருக்காக காத்திருப்பாள் என பொருள் பட சொல்கிறாள்.ஆற்றங்கரைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற பதிலை நேரடையாகச் சொல்லவில்லை.

இப்பாடல் குறுந்தொகையில் தோழிகூற்று (மருதம்)..113ஆம் பாடல்..ஆசிரியர்-மாதீர்த்தனார்)

தமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை

தமிழ்ப் படங்கள் புற்றீசல் போல வாரம் மூன்று வெளியாகிக் கொண்டிருந்தன.இவை பட்ஜெட் அதிக பட்சம் 10 கோடி என வைத்துக்கொள்வோம்.
அக்டோபர் ஒன்றாம் நாள் ரஜினியின் பிரம்மாண்ட படம் 'எந்திரன்' வெளியானது.இதற்கான செலவு கிட்டத்தட்ட 200 கோடிகள்.வேறு விதத்தில் கூற வேண்டுமாயின் 20 சாதாரண படங்கள் எடுக்க எவ்வளவு பணம் தேவையோ..அவ்வளவு பணத்தை இந்த ஒரு படம் முழுங்கியுள்ளது.
அதனால்தான் மூன்று வாரங்கள் எந்த புதுப் படமும் வெளீயிடுவது இல்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதா?
இதனால் எவ்வளவு சிறிய படத் தயாரிப்பாளர்கள் நசுக்கப்பட்டுள்ளார்கள்.குறிப்பாக நவராத்திரி விடுமுறைக் காலங்களில் ஓரளவு வசூல் செய்திருக்கும் இப்படங்கள் வெளிவந்திருந்தால்.
எந்திரனைப் பொறுத்தவரை பார்க்க நினைப்பவர்கள் அனைவரும் அதைப் பார்த்துவிடுவர்..அதனால் அதன் வசூல் இதனால் பாதிக்கப் படாது என்றே தோன்றுகிறது.
சின்ன மீன்களை விழுங்கித்தான் பெரிய மீன் வாழும் என்ற தத்துவம் இதற்கும் பொருத்தமே.
பாவம் இந்த தயாரிப்பாளர்கள்..இவர்கள் படங்கள் அக்டோபர் 22க்கு மேல்தான் வெளியிடப்படுமாம்.
எல்லோர் நலனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டதாம்.
பணம் இருந்தால்..எந்த முடிவையும் எடுக்க வைத்துவிட்டு அவை ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என சொல்லிவிடலாம் போலிருக்கிறது.
'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா" என்ற கண்ணதாசன் வரிகளே ஞாபகம் வருகிறது.

Sunday, October 10, 2010

வெல்டன்..காமினி (சவால்-சிறுகதை)

நியோ டிடெக்டிவ் ஏஜென்சி என்னும் போர்டை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தாங்கி நின்றது அந்தக் கட்டிடம்.
அதன் முன் பிரபல நடிகர் கார் ஒன்று வந்து நின்றது.
அவர் மகளுக்குத் திருமணம்..அடுத்த மாதம் வைத்திருந்தார்..அதற்கான அழைப்பிதழ் கொடுக்க வந்திருக்கக் கூடும் என வாயிலில் அவரைக் காணக் கூடியிருந்தக் கூட்டம் பேசிக்கொண்டிருந்தது.

*** ***** **** ****

வந்ததிலிருந்து சிவா சரியில்லை..காமினி உணர்ந்துக் கொண்டாள்.அவனுடன் அவளுக்கு ஒரு வாரம் தான் பழக்கம்.சிவாவிடம் தான் எதிர்பார்த்ததைக் கூறியிருந்தாள்.அதனால் தான் அவன் அப்செட்டோ என எண்ணினாள்.
'காதலும் காமமும் ஆண் பெண் இணைப்புக்கு அடிப்படை..காதல் இல்லா காமம் ருசிக்காது.அதுபோல காமம் இல்லா காதலும் இனிக்காது.காதல் மட்டும் போதுமெனில் அதற்கு ஒரு பிராணி போதும்..காமம் மட்டும் போதுமானால் அதற்கு ஒரு விலைமகள் போதும்' என்றவாறே காமினியை அணைக்கப் பார்த்தான் சிவா.
'நிறுத்து..சிவா,,நிறுத்து..என்னா ஆச்சு இன்னிக்கு உனக்கு' என்ற காமினியின் கண்களில் அது பட்டது.சிவாவிற்கு உடன் ஒரு செல்லிடை பேசி வர..அவன் எழுந்து நின்று அவளுக்குத் தெரியாமல் ஏதோ பேசினான்.
இருவரும் பெசண்ட் நகர்..எலியட்ஸ் பீச்சில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.சிவாவின் கண்களில் காமத்துடன், குரோதமும் கலந்திருந்தது.அவன் பார்வை அவளது உடலின் கவர்ச்சி பிரதேசங்களை விழுங்கிக் கொண்டிருந்தது.
'நோ சிவா..இன்னிக்கு நீ சரியில்லை..நான் கிளம்பறேன்'
அப்போதுதான் தான் செய்யவிருந்த செயலை மறந்தது ஞாபகம் வந்தது அவளுக்கு.
அது எப்படி பெண்களுக்கு உடனே ஒரு பாதுகாப்பு உணர்ச்சி வந்து விடுகிறது.
காமினியின் பின்னாலேயே..'காமினி..காமினி..ஐ ஆம் சாரி' என ஓடினான் சிவா..அப்போதும் அவனது செல்லிடைபேசி அலறியது.அதை எடுத்துப் பேசப் பேச அவன் முகம் மாறியது.
அந்த நேரம் பார்த்து சுண்டல்காரப் பையன் 'சார் சுண்டல் என்றான்"
'டேய்..என் பொழப்பு உனக்கும் கிண்டலாப் போச்சு இல்ல" என அவன் மீது எரிந்து விழுந்து விட்டு..தனது பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தான்.காமினி மௌனமாக அதன் மீது அமர்ந்திருந்தாள்.
'சாரி, காமினி..மன்னிச்சுடு..இனிமே இப்படி நடக்க மாட்டேன்'
'சரி..சரி..வண்டியை எடு 'என்றாள் காமினி.
சிவா..வண்டியை ஸ்டார்ட் செய்ய..தன் உடல் அவன் மீது படாமல் ஜாக்கிரதையாக இருந்தாள்.ஆனால்..சென்னை நகர வீதி அந்த ஜாக்கிரதை உணர்வை சட்டை செய்யவில்லை.
தன் கோபத்தையெல்லாம் சிவா..வண்டியில் காட்ட வண்டி சீறிப் பாய்ந்தது.
அடையாறு சிக்னலில் வண்டி திரும்பும் போது..எதிரே வந்த லாரியின் மீது பைக் பயங்கரமாக மோத..இருவரும் வீசி எறியப்பட்டனர்.
சிவாவை ஹெல்மெட் காப்பாற்ற ..காமினி விழுந்த வேகத்தில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
விபத்தை வேடிக்கைப் பார்த்த கும்பலிலிருந்து ..ஒருவர் காமினியையும்,சிவாவையும் ஆட்டோவில் ஏற்றி..பக்கத்திலிருந்த மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார்.
சிவாவிற்கு புற நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த நேரத்தில்..காமினி ICU வில் அனுமதிக்கப் பட்டாள்.பின் ICUவெளியே வந்து அமர்ந்தான் சிவா.....
நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது..ஜன சந்தடி அடங்கியது..
திடுமென காமினி கண் விழித்தாள்..'காமினி..உன்னைக் காப்பாற்றிக் கொள்..காப்பாற்றிக் கொள்..' என மனதில் ஒரு குரல் எச்சரித்தது..
இரவு டூட்டி டாக்டர் உள்ளே நுழைந்து..நோயாளிகளின் கேஸ் ஷீட்டுகளை நோட்டம்விட்டு விட்டு..தன் கடமை முடிந்ததாக வெளியேறினார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்....கொரியன் பச்சை பஞ்சு மெத்தையாய் தாங்கிக் கொண்டது அவளை.
எழுந்து ஓடத் தொடங்கினாள்..ஆங்காங்கே நாய்கள் குரைக்கத் தொடங்க..திடீரென விழித்தான் சிவா..
ஓடிக்கொண்டிருந்த காமினியைப் பார்த்துவிட்டு , அவளை துரத்த ஆரம்பித்தான்..இரவு ரோந்து போலீஸ் வேன் ஒன்று அவர்களைப் பார்த்துவிட்டது..யாரோ பெண் ஓட ஆண் துரத்துகிறான்.கண்டிப்பாக ரேப் கேஸ் தான் என ஜீப்பைத் திருப்பச் சொன்னார் அதிலிருந்த காவல் அதிகாரி.
அடையாறின் ..சின்னச் சின்ன சந்துகளில் காமினி ஒட..சிவா துரத்த..அவர்கள் நுழைந்த தெருவில் எல்லாம் போலீஸ் ஜீப் நுழைய முடியாததால் போலீஸ் அதிகாரியும் இறங்கி ஓட..ஆங்காங்கே தென்பட்ட மக்கள் சினிமா சூட்டிங் என எண்ணினர்.
அவளைப் பிடித்துவிட்டான்...தன் பையிலிருந்த ரிவால்வரை எடுத்து.."சாரி..எனக்கு வேற வழி தெரியலை' என்று காமினியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'என்னைப் பற்றி எல்லா விஷயமும் உனக்குத் தெரியும் என நான் அறிவேன்..நாம் கடற்கரையில் இருக்கையில் என் நண்பன் ஒருவன் செல்ஃபோனில் தெரிவித்து விட்டான்..நீயாரென"
டெலிஃபோன் மணி போல அந்த நேரமும் சிரித்தாள் காமினி..'சிவா.. நீ திருடி வந்த டைமண்ட் விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது..நீ கடற்கரையில் என் மீது காம வயப்பட்டிருந்த போது..உன் பையிலிருந்த ரிவால்வர் கீழே விழ..அப்போது உனக்கு செல்லிடைப்பேசி வந்தது.உன் கால்சட்டையிலிருந்து விழுந்த ரிவால்வரைலிருந்து குண்டுகளை எடுத்து விட்டு மீண்டும் உன்னிடம் வெறும் ரிவால்வரைக் கொடுத்தேன்.அதை நீ கவனிக்க வில்லை.பின் நீ பிதற்ற ஆரம்பித்ததும்..நான் மன்னித்தது போல நடித்தேன்.கோபித்து வந்து உன் பைக்கில் அமர்ந்த நான் சைட் பேக்கில் இருந்த டயமண்ட் கற்களையும் எடுத்துக் கொண்டேன்' என்றாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்தான் சிவா..உடன் தன் பலத்தை உபயோகித்து அவளை துன்புறுத்த ஆரம்பித்தான்..அப்போது ஒரு கார் வர ஒடி ஒளிந்தான் சிவா.துரத்தி வந்த போலீஸ் அதிகாரியைக் காணோம்.இதைவிட பெரிய வேட்டைக் கிடைத்து விட்டதோ?அல்லது..இவர் ரேப் செய்ய கேஸ் கிடத்துவிட்டதோ..தெரியவில்லை
வந்த கார் அருகே நிற்க காமினி காரில் ஏறிக் கொண்டாள்.
**** **** **** ****
டயமண்டை திருடிய என் உறவுப் பையனிடமிருந்து..திரும்பிப் பெற்று என்னிடம் ஒப்படைத்தற்கு நன்றி என்றார் பிரபல நடிகர்.என் மகள் திருமணத்திற்கு வைர மாலைக்காக நான் வாங்கிவைத்திருந்த வைரங்கள் அவை..இந்த திருட்டு போலீசிற்குத் தெரிந்தால்..என் உறவு பையன் பெயர் கெடுவதோடு..எனக்கு வருமான வரியினரிடமிருந்து தேவையில்லா சிக்கல்கலும் வந்திருக்கும்..உங்களுக்கு நன்றி..என்றார் நடிகர் நியோ டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் பரந்தாமனிடம்.
அந்த பாராட்டு காமினிக்குத்தான்..சிவாவிடமட்டுமல்ல ,போலீசாரிடம் இருந்தும் டயமண்டை காப்பாற்றி இருக்கிறாள், 'வெல்டன் காமினி.போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டயமண்டைக் கொண்டு வந்துவிட்டியே!" என பாராட்டினார் பரந்தாமன்

Saturday, October 9, 2010

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

(மீள்பதிவு )

Friday, October 8, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (8-10-10)

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின்
இவர் தற்போது இந்து கடவுள் ராமர் பற்றிய காவியங்களை உருது மொழியில் மொழிபெயர்த்து வருகிறார்.இவர் ஏற்கனவே துளசிதாசர் எழுதிய ராம பக்த ஹனுமான் பற்றிய காவியத்தையும், கடவுள் துர்க்கையின் காவியத்தையும் உருதில் மொழி பெயர்த்திருக்கிறார்

2)சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும் அதிகக் குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இப்புதிய கிரகம் கிளைஸ் 581 என்று அழைக்கப்படுகிறது.இது பூமியைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரியதாக இருக்குமாம்.(அரசியல்வாதிகள் வேலி போட கிளம்பிவிடப் போகிறார்கள்)

3)மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைஞானி இளையராஜாவுடன் சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு,செந்தமிழ்ப் பாட்டு,செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

4)லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு இணையாகத் தயாராகி வருகிறதாம் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம்.50000 இருக்கைகளாம்..எல்லாம் குஷன் இருக்கைகள்.இனியாவது முக்கியப் போட்டிகளை சென்னைக்குத் தருவார்கள் என நம்புவோமாக

5)புவி வெப்பமடைவதால் ஏற்படும் சூறாவளி, கடுமையான மழை, துருவப் பிரதேசங்களில் பனிப்படலம் காணாமல் போவது ஆகியவை அதிகரித்துள்ளதால் கடளுக்குள் வரும் புதிய நீர் வரத்து 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.வரும் காலங்களில் இதன் விைள்வு என்னவாக இருக்கும் என விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லையாம்.

6)என்றோ கார் விபத்தில் மறைந்துவிட்ட டயானா ..காமென்வெல்த் போட்டிக்கு வருகை தந்தமைக்கு நன்றி கூறினாராம் கல்மாடி.அவரைப் பொறுத்தவரை சார்லஸுடன் யார் வந்தாலும் அவர் டயானா தான் போலும் (என்ன ஒரு வெட்கக் கேடு..இது கூட தெரியாதவர்)

7) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இதுதான்.http://maaruthal.blogspot.com/2010/10/blog-post_08.html இந்த வார மகுட இடுகை இதுதான்.வாழ்த்துகள் கதிர்

8) கல்யாண்ஜியின் எனக்குப் பிடித்த கவிதை ஒன்று

நீ வருவதற்காக


காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு

உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்

இப்போது

-கல்யாண்ஜி

9)உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

Thursday, October 7, 2010

முறித்துக்கொள்ளவா நட்பு..

நாம் ஒரு பதிவிடும்போதே அதை பலர் படிக்க வேண்டும் என விரும்புகிறோம்.சக பதிவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து படிக்கையில் மனம் குதூகலிக்கிறது.
அடுத்ததாக மனம் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது.
நாம் மற்றவர்கள் வலைப்பூவிற்கும் சென்று..அவர்கள் இடுகையைப் படித்து..பின்னூட்டம் இட்டால்..அந்த பதிவரும் நம் வலைப்பூ பக்கம் வந்து..நம் இடுகையையும் படித்து பின்னூட்டம் இடுவர்.
சுருங்கச் சொன்னால்..ஒத்தையடி பாதை அல்ல இது..நீ என்ன செய்கிறாயோ..அது உனக்குத் திருப்பிக் கிடைக்கிறது.
இந்த கூற்றை யாரும் மறுக்க முடியாது..அப்படி மறுப்பவர்கள் உண்மை பேசுபவர்களாக இருக்க முடியாது.
அடுத்தாக..இடுகையும் படிக்கின்றனர்,பின்னூட்டமும் வருகிறது..இனி வாசகர் பரிந்துரையில் இடுகை வர ஏங்குகிறோம்.யாரேனும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தால்..தமிழ்மண வாசகர் பரிந்துரை நிச்சயம்.நிலைமை இப்படியிருப்பதால் தான் பிறந்த நாள் வாழ்த்துகள்,கட்சி சம்பந்த பட்ட இடுகைகள்,சினிமா இடுகைகள் (திரைமணத்தில் இப்போது) பரிந்துரையில் பரிந்துரைக்கப் படுகின்றன.
இந்நிலையில்..நமக்கு வரும் பின்னூட்டங்கள் நம் எதிர்பார்ப்புக்கு இருக்க வேண்டும்..நம் எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும் என எண்ணுவது தவறாகிறது.
எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்துக் கொண்டவர்கள் இருப்பர்.
நம் இடுகையை பாராட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல மாற்று கருத்துகளையும் மகிழ்வுடன் ஏற்க மனம் மறுக்கிறது.
சமயங்களில் மாற்று கருத்து இடுவோரும்..வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. இப்போது இடுகைகள் போதாது என buzz,facebookஆகியவற்றி


லும் உடனுக்குடன் சூடாக பின்னூட்டங்கள்,சாட் பண்ணுதல் மூலம் கிடைத்து விடுகிறது.
முகம் அறியாமலேயே..நட்பு வட்டம் பெருகுகிறது.மனித நேயம் வளர்கிறது என்றெல்லாம் இருந்தாலும்..சமீப காலங்களில் சில சமயங்களில் வரம்புகள் மீறப்படுகின்றன.
சமீபத்தில் இப்படி தேவையில்லாமல் ஒரு சர்ச்சை உருவாகி..நான் இப்படித்தான் விமரிசிப்பேன்..வேண்டுமானால் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பொருள் படும் படி எழுத ஆரம்பித்து விட்டனர்.உங்களுக்கு நட்பு கொள்வதற்கும்,வேண்டாம் எனில் முறித்துக் கொள்ளச் சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது..அந்த தனி மனித சுதந்திரத்தை..இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் அதே நேரத்தில் உங்கள் மீது உள்ள தவறையும் உணருங்கள்.
நினைத்தபோது நட்பு கொள்ளுதலும் நினைத்த போது முறித்துக் கொள்வதும் தான் நட்பிற்கு அடையாளமா?
யாருக்காகவோ..அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா?
மனம் வருந்துகிறது..

Wednesday, October 6, 2010

திரைப்பட இயக்குனர்கள்-6..A.பீம்சிங்
                                     
                                     பாவ மன்னிப்பு படத்தில் ஒரு காட்சி
Posted by Picasaதமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் மாபெரும் வெற்றி பட இயக்குனர் வரிசையில் முதலாவதாகக் காணப்படுபவர் ஏ.பீம்சிங் ஆவார்.1924ல் பிறந்த இவர் 60க்கும் மேற்பட்ட தமிழ்,தெலுங்கு,ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார்.
பிரபல இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு விடம் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றிய இவருக்கு 1954ல் அம்மையப்பன் என்னும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடத்தது.பின் 'புத்தா பிக்சர்ஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 'பதி பக்தி' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.சிவாஜி,ஜெமினி,சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர்.இந்த கூட்டணி பின் தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்தது.
பின் தன் நிறுவனத்திலும் .பிற நிறுவனங்களிலும் பல படங்களை இயக்கினார்.ராசியாக எல்லா படங்களும் 'பா' என்ற எழுத்தில் தொடங்குமாறு பார்த்துக் கொண்டார்.
இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள்..பாசமலர்,பாவ மன்னிப்பு,பாலும் பழமும்,பார் மகளே பார்,பச்சை விளக்கு,பாகப்பிரிவினை,பந்த பாசம்,பழனி, பாலாடை,படித்தால் மட்டும் போதுமா,படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும்,களத்தூர் கண்ணம்மா..
ஹிந்தியில் கௌரி,லோஃபர்,சாது அவுர் சைத்தான்,காந்தன்,மை சுப் ரகேங்கி,பாய் பகன்
இவர் அளவிற்கு வெற்றி படங்களைக் கொடுத்தவர் வேறு எவருமில்லை எனலாம்.
1961ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர், பாவ மன்னிப்பு இரண்டும் வெள்ளிவிழா படங்கள்..தொடர்ந்து அதே ஆண்டு வந்த பாலு பழமும் மாபெரும் வெற்றி படம்.
ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' இவர் இயக்கத்தில் வந்து வெற்றிக்கனியைப் பரித்தது.
கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் 'விஸ்வநாதன்-ராமமூர்த்தி' இவரது இசையமைப்பாளர் ஆவார்.
பாவமன்னிப்பு, பாசமலர் பாடல்கள் பிரபலம்.இன்றும் கல்யாண வீடுகளில்..பாசமலர் படத்தில் வரும் 'வாராயென் தோழி' பாடலை நாதஸ்வரக் கலஞர்கள் வாசிக்காமல் இருப்பதில்லை.
இவரது மகன்களில் ஒருவரான லெனின் ஒரு பிரபல படத் தொகுப்பாளர் ஆவார்.
1978ஆம் ஆண்டு பீம்சிங் அமரர் ஆனார்.54 ஆண்டுகளே வாழ்ந்த ஒருவர் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியது..ஒரு மா பெரும் சாதனை ஆகும்.
அவரது படப்பாடல் ஒன்று...கேளுங்கள்..மகிழுங்கள்..

Tuesday, October 5, 2010

இறைவன் இருக்கின்றானா....

இந்த கேள்விக்கான பதில் இரண்டாய் இருக்கும்..நம்பினவருக்கு நாராயணன்..நம்பாதவருக்கு.....இறைவனையே நினைக்காத ஆத்திகவாதிகளும் உண்டு...இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளரும் உண்டு.

நமக்கு ஒருவரால்..ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால்..அவரை கடவுள் ரேஞ்சிற்கு உயர்த்துவதுண்டு.

நடிகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..ரசிகர்கள் தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் என்பார்கள்.

***** **** **** *****

அமிதாப் பச்சன்,ஷாருக்கான்,சல்மான்கான் படங்களுக்கு எதிராக..மாறி மாறி போர்க்கொடி தூக்குபவர்கள்..மகாராஷ்டிரத்தில் சிவசேனாவும்..ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நல நிர்மாண் சேனா அமைப்பினரும்.

**** ***** ***** ******

எந்திரன் ஹிந்தி பதிப்பை பாலிவுட்டினருக்குப் போட்டுக்காட்ட ரஜினிகாந்த் மும்பை சென்றார்.அங்கு பால் தாக்கரே வீட்டுக்குச் சென்று, அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்.."தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் "என்று கூறினார்.மேலும் கூறுகையில் 'என் பெற்றோர்கள் மராட்டியர்கள்.எனக்கும் மராட்டி படத்தில் நடிக்க ஆசை' என்றுள்ளார்.

**** ****** ***** *****

மனிதனுக்கு மனிதன்..அவ்வப்போது கடவுள்களும் மாறுபடுகின்றனர்..**** ***** ***** *****

இப்போது சொல்லுங்கள் இறைவன் இருக்கின்றானா..

இருந்தால் நன்றாயிருக்கும்.

Monday, October 4, 2010

மூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்

கையில் இருந்த பணத்தை எண்ணினான்..மீண்டும் எண்ணினான் முத்து..ஒரே மாதிரி தான் இருந்தது.ஐநூறு ரூபாய்.

இன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

அப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.

**** **** **** ***

'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்..பிறகு ரேஷன் வாங்கணும்..பால் காசு கொடுத்தாத் தான் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்குபால் இல்லை என்றாள் பாக்கியலட்சுமி.

'ம்..ம்..' என்றான்.

அப்படின்னா என்ன அர்த்தம்ங்க..என்றாள்

அடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு

அப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோவா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்

என்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.

***** ***** ****** *****

'முத்து..எவ்வளவு பணத்தோட வந்திருக்க?'

'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'

'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.

'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'

'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'

படம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..

**** ***** **** *****

குழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.

**** ***** ***** *****

தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்

உட‌ல் உறு‌ப்பு தான‌ம்

‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி மூளை‌ச்சாவு ஏ‌ற்படுபவ‌ர்களது உட‌ல் உறு‌ப்புகளை தான‌‌ம் செ‌ய்ய அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள் மு‌ன் வருவது த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. எ‌னினு‌ம், உறு‌ப்புகளை உ‌ரிய நேர‌த்‌தி‌ல் பய‌ன்படு‌த்த இயலாம‌ல் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ நடவடி‌க்கைக‌ள் ஏராளமாக உ‌ள்ளன.எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌த்து‌க்கு உ‌ள்ள ச‌ட்ட நடவடி‌க்கைகளை த‌ள‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏராளமானோ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர். இதையடு‌த்து உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் உ‌ள்ள மரு‌த்துவ‌‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கைக‌ளி‌ல் நடைமுறைகளை தள‌ர்‌த்‌‌தி, சுகாதார‌ம் ம‌ற்று‌ம் குடு‌ம்ப நல‌த்துறை உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.த‌மிழக‌த்‌தி‌ல் சாலை ‌விப‌த்துக‌ளி‌ல் உ‌யி‌ரிழ‌ப்போ‌ர் ஏராள‌ம். இ‌தி‌ல் தலை‌யி‌ல் அடிப‌ட்டு அதனா‌ல் மூளை‌ச்சா‌வு ஏ‌ற்ப‌டுபவ‌ர்களு‌ம் ஏராள‌ம். மூளை‌ச் சாவு எ‌ன்பது, உட‌ல் உறு‌ப்புக‌ள் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌‌க்க, அவ‌ர்களது மூளை செய‌லிழ‌ந்து, உ‌யி‌ர் வாழ வா‌ய்‌ப்பே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை‌யி‌ல், அவ‌ர்களது உற‌வின‌ர்க‌ள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் செ‌ய்ய மு‌ன் வரு‌கி‌ன்றன‌ர்.ஆனா‌ல் உட‌ல் உறு‌ப்புகளை தா‌ன‌ம் செ‌ய்வது என‌்று உற‌வின‌ர்க‌ள் முடிவெடு‌த்து ‌வி‌ட்டா‌ல் ம‌ட்டு‌ம் போதாது. அத‌ற்கென ‌சில மரு‌த்துவ ம‌ற்று‌ம் ச‌ட்ட நடைமுறைக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை எ‌ல்லா‌ம் முடி‌ப்பத‌ற்கு‌ள் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டவ‌ரது உட‌ல் உறு‌ப்புக‌ள் ‌வீணா‌கிறது. இதனா‌ல் தானமாக ‌கிடை‌க்க வே‌ண்டிய உட‌ல் உறு‌ப்புக‌ள் பய‌ன்படு‌த்த ‌முடியாத ‌நிலையை அடை‌கிறது.எனவே, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கு‌றி‌த்த ச‌ட்ட நடவடி‌க்கைகளை தள‌ர்‌த்‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள பு‌திய உ‌த்தர‌வி‌ல், மூளை சாவு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், மரு‌த்துவரே முத‌ல்க‌ட்ட ப‌ரிசோதனை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். இது உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் (மனை‌வி,குழ‌ந்தைக‌ள், பெ‌ற்றோ‌ர் அ‌‌ல்லது சகோதர, சகோத‌ரிக‌ள்) உட‌ல் உறு‌ப்பு தான‌ம் கொடு‌ப்பது தொட‌ர்பான ‌விரு‌ப்ப‌த்தை அ‌றியலா‌ம்.தான‌ம் கொடு‌க்க ‌விரு‌ம்‌பினா‌ல், அடு‌த்த க‌ட்டமாக ‌விசாரணை நட‌த்து‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌த்து, உடனடியாக மரு‌த்துவ‌ம் சா‌ர்‌ந்த ச‌ட்ட நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.அவரது புல‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பி‌ன்பு, உட‌ல் உறு‌ப்பு தான ச‌ட்ட‌ப்படி மூளை சாவு உறு‌தி செ‌ய்வத‌‌ற்கான 2வது ப‌ரிசோதனை நட‌த்த வே‌ண்டு‌ம். இற‌ப்பு‌க்கானகாரண‌த்‌தி‌ல் ச‌ந்தேக‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல், உடனடியாக ‌விசாரணை அ‌திகா‌ரி, உட‌ல் உறு‌ப்பு தான‌ம் ச‌ெ‌ய்வத‌ற்கான அனும‌தியை வழ‌ங்க வே‌ண்டு‌ம்.‌பிரேத ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் என ‌விசாரணை அ‌திகா‌ரி கரு‌தினா‌ல், அத‌ற்கான அனும‌தி கடித‌ம், உட‌ல் உறு‌ப்புக‌ளி‌ன் இய‌ங்கு‌நிலை கு‌றி‌த்து மரு‌த்துவ அ‌திகா‌ரி கொடு‌க்கு‌ம் சா‌ன்றை சம‌ர்‌ப்‌பி‌க்க வே‌ண்டு‌ம். அத‌ன் ‌பி‌ன் உட‌ல் உறு‌ப்புகளை தான‌ம் வழ‌ங்குவத‌ற்கு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
(நன்றி - வெப்துனியா)

Saturday, October 2, 2010

எந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்

நான் சாதாரணமாக அனைத்துப் படங்களும் பார்த்து விடுவேன்.ஆனால் 'எந்திரன்' படம் எனக்கு மறக்க முடியா அனுபவம்..அதைக் கடைசி வரிகளில் பார்க்கலாம்.900 ரூபாய் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்
எந்திரனை அனைவரும் பார்க்க வேண்டும்..ஏன் பார்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1)தமிழில் வந்த படங்களில் பிரம்மாண்ட பட வரிசையில் இதுவரை பேசப்பட்டு வந்தது. ஜெமினி எடுத்த சந்திரலேகா.அதுவும் அந்த Drum டேன்ஸிற்காக மட்டுமே.கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கழித்து அந்த சாதனை முரியடிக்கப் பட்டுள்ளது.அதற்காக எந்திரன் பார்க்கலாம்.
2)பல ஆண்டுகளாக ஷங்கர் மனதில் இருந்த கதை..சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால்..தள்ளிக் கொண்டே போனது.இப்படத்தை முதலில் எடுக்கத் துவங்கிய ஐங்கரன் நிறுவனமும்..சில நாட்கள் படப்பிடிப்பு கழிந்ததும்..கைவிட..ஆபத்பாந்தவனாக வந்தவர் கலாநிதி மாறன்.200 கோடிகள் செலவான இப்படத்தில் என்னதான் இருக்கிறது என அறிய இப்படத்தைக் காணலாம்.
3) இளம் நடிகர்கள் பலர் இருக்க 60 வயதைத் தொட்ட நாயகனும்..37 வயது நாயகியும்..படத்தின் வெற்றிக்கு எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதற்காகப் பார்க்கலாம்.
4) கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்...அவதார் படத்தைப் பார்த்து வியந்த நாம் கிட்டத்தட்ட அதே ரேஞ்சிற்கு எடுக்கப் பட்ட நம்ம ஊர் ஆட்கள் எடுத்த படத்தை பார்க்க வேண்டாமா
5)ரஹ்மானின் இசைக்காக பார்க்கலாம்
6)ரோபோ வாக ரஜினி...இந்த நடிப்பிற்காகப் பார்க்கலாம்
7) சுஜாதா வின் வசனங்கள் பல இடங்களில் பளீச்சிடுகிறது..வசனம் சுஜாதா, ஷங்கர்,கார்க்கி என்று போட்டாலும்..எவை எவை சுஜாதாவின் பேனா எழுதியது என கண்டுபிடித்து விடலாம். அந்த ஜீனியஸின் வரிகளுக்காக படம் பார்க்கலாம்.
7) ரத்தினவேலு வின் ஒளிப்பதிவிற்காக பார்க்கலாம்.
8)கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் ஆகிய பாடல்கள், ரஜினி,ஐஸ் நடனம்.லொகேஷன் ஆகியவற்றிற்காக பார்க்கலாம்
9) எல்லாவற்றிற்கும் மேலாக ஷங்கர் என்னும் கலைஞனின் 10 ஆண்டுகள்(விஞ்ஞானி 10 ஆண்டுகள் கஷ்டப்பட்டு அந்த் ரோபோ வை உருவாக்கினேன் என்று வசனம் சொல்கிறார்.உண்மையில் ஷங்கர் தனது 10 ஆண்டு கனவைத்தான் சொல்கிறார் என்லாம்) ரோபோ கனவு நனவானதிற்காகப் பார்க்கலாம்
10) கடைசியாக..ஆனால் முதலாவதாக..தமிழ்த் திரையின் சூப்பர் ஹீரோவின் அருமையான வில்லத்தனத்திற்காகப் பார்க்கலாம்.

குறையே இல்லையா..
சொல்லலாம்..
முதல் பாதி அசுர வேகம்..படம் ஆரம்பித்ததுமே..இடைவேளை வந்தாற்போன்ற உணர்வு..அருமையான திரைக்கதை அமைப்பு..ஆனால் அதற்கு பின் ஒரு மணி நேரம்..ஒரு பெண்ணிற்காக சண்டை..வில்லன் டேனிடொன்சங்க்பா (ஆரம்பகால பொதிகை ஜுனோன் கால மெகாத்தொடர் நாயகன்) விஞ்ஞானி ரஜினி..என வழக்கமான தமிழ்த் திரைப்பட திரைக்கதை (ஷங்கர் இந்த கட்டத்தில்..திரைக்கதைக்கு சற்று முயன்று வித்தியாசமாக சொல்லியிருக்கலாம்)
கட்டிடம் தீப் பிடித்து எரிவது..ரோபோ ரஜினி மக்களைக் காப்பாற்றுவது..சற்று சிரிப்பைத்தான் எற்படுத்துகிறது.
அவ்தார்,அனகொண்டா,ஸ்பைடெர்மேன் ஆகிய ஆங்கிலப் படங்களும்..திரீ இடியட்ஸ் (பிரசவ காட்சி) ஹிந்தி படமும் ஆங்காங்கே ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை.
சேர்ந்தார் போல கம்யூட்டர் கிராஃபிக்ஸ் கடைசி அரை மணீ நேரம் வருவது ரசிக்க முடிந்தாலும்..சற்று இருக்கையில் நம்மை கொட்டாவி விடவைக்கிறது.
சுஜாதாவிற்கு இன்னும் சற்று மரியாதைக் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில்..ரஜினியின் ரோபோ நடிப்பு, ஷங்கரின் உழைப்பு,டெக்னீஷியன்ஸ் அனைவரின் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக பார்க்கலாம்.
வெல்டன் ஷங்கர்

ஆமாம் ..என் அனுபவம் கடைசியில் சொல்கிறேன் என்றேனே என்ன தெரியுமா..

நான் முதல் நாள் பார்த்த..முதல் ரஜினி படம்..
அமெரிக்க ரசிகர்களுடன் $20 டிக்கெட் வாங்கி பார்த்தேன்..(ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 900 ஆச்சே ..அதைத்தான் சொன்னேன்)..ஹி..ஹி..ஹ்ஹி.


டிஸ்கி- சன் டி.வி., பங்குகள் கடந்த சில நாட்களில் கணிசமாக உயர்ந்து 530 ரூபாய் அளவில் தற்போது உள்ளது.

Friday, October 1, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (1-10-10)

1) விழிப்பு..தூக்கம் இப்படி ஏதுமின்றி ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பான இதயம் ஒரு நாள் ஒன்றிற்கு லட்சம் தடவைக்கு மேல் துடிக்கிறது2)அமெரிக்க தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் பெப்ஸி நிறுவனத் தலைவரும் இந்தியருமான இந்திரா நூயி

3)பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கவையாம்.பாம்பு விஷம் மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கிராம் நல்ல பாம்பு விஷம் 28000 ஆயிரம் ரூபாய்.கட்டுவிரியன் விஷம் 30000

கண்ணாடி விரியன் 40000.

விஷ எண்ணத்தை மனதில் வைத்துத் திரிபவர்களின் மதிப்பு..???

4)காமென்வெல்த் போட்டிக்காக ஒதுக்கீடு செய்த 70000 கொடி ரூபாயில்..பெருமளவில் ஊழல் நடந்துள்ளது என்றும்..பணிகள் செய்து முடிக்கப் படாமலேயே அதற்கான பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும்..இப்பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது என உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

5)60 ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு 8189 பக்கங்களாம். இருப்பதை மூவருக்கு பிரித்துக் கொடுப்பதைச் சொல்வதற்கு இவ்வளவு ஆண்டுகளும்..இவ்வளவு பக்க தீர்ப்பும் எதற்கு..என்கிறார்..வாங்கி வந்த பக்கோடா பொட்டலத்தை தன் மூன்று குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்த ஒரு அப்பா

6)சீனத் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமார் தயாரித்த 'பசங்க' படம் திரையிடப் படுகிறது.

7)இந்தியாவின் மா பெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தொடர்ந்து நான்காவது முறையாகப் பிடித்துள்ளார்.அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து பதினெட்டாயிரத்து நானூற்றுஐம்பது கோடி.

8) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இடுகை பனித்துளி ஷங்கரின் http://wwwrasigancom.blogspot.com/2010/09/part-3.html இந்த தொடர் இடுகை.தமிழா தமிழாவின் மகுட இடுகை இந்த வாரம் இதற்குத்தான்.வாழ்த்துகள் ஷங்கர்.