Thursday, June 30, 2011

முதுநிலை டாக்டரும்..சர்ஜனும்..

படித்து பெறமுடியா

டாக்டர் பட்டம்

அரசியலில் நுழைந்ததும்

தேடி பெறப்பட்டது

பின்னர் பார்த்தால்

நடிகரும் டாக்டராம்

இயக்குநரும் டாக்டராம்

உடனடித் தேவை எனக்கு

முதுநிலை டாக்டர் பட்டம்

அல்லது

சர்ஜன் பட்டம்

Sunday, June 19, 2011

இந்த ஆண்டின் அதிசய நிகழ்ச்சி

தேவி வார இதழில் விஜி என்பவர் எழுதியிருந்த இச் செய்தி என்னைக் கவர்ந்தது.அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு ஜூலை மாதம் , 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் நிகழவிருக்கிறது.

ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமை,5 சனிக்கிழமை,5 ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றன..இந்த அபூர்வ நிகழ்ச்சியை கணித பாஷையில் 'மனிபேக்' என்பர்.

1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 போன்ற தேதிகளையும் இந்த ஆண்டுதான் பார்க்கமுடியும்.இதில் 1-1-11ம்,11-1-11ம் ஜனவரியில் வந்துவிட்டது.மற்ற இரு தேதிகளும் நவம்பரில் வர இருக்கின்றன.

இந்த ஆண்டில் 11, 111 என்ற எண்களின் அனுபவமும் நமக்கு கிடைத்துள்ளது.

நீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு எண்களையும், தற்போதைய உங்கள் வயதையும் கூட்டினால் விடை 11, அல்லது 111 வரும்.இது அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும்.அது அதிசய கணித நிகழ்ச்சியாகும்.

Thursday, June 16, 2011

காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, June 14, 2011

இன்று தி.மு.க., விற்கு ஏற்ற பாடல்..இந்த பாடலின் சில வாரத்தைகளை சற்றே மாற்றினால்..இன்று தி.மு.க., விற்கு பொருத்தமான பாடல்.

அண்ணன் என்ற இடத்தில் கலைஞரையும்..ஒரு தொண்டன் இப்பாடலைப் பாடுவதாகவும் கற்பனை செய்தபடியே இப்பாடலைக் கேளுங்கள்
 

Monday, June 13, 2011

இன்று கருப்பு ஆடுகள்

இன்று(14-6-11) மாலை 6-45க்கு எனது கருப்பு ஆடுகள் நாடகம் முத்ரா சபாவின் ஆதரவில் தியாகராயநகர் இன்ஃபோஸிஸ் ஹாலில் (ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி..ஜாய் ஆலுக்காஸ் எதிர் தெரு) நடைபெறுகிறது.

பதிவுலக நண்பர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

நாடகவிவரம்-கருப்பு ஆடுகள்

நடைபெறும் இடம் - இன்ஃபோசிஸ் ஹால்

ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூல் கேம்பஸ்

கிருஷ்ணா தெரு (ஜாய் ஆலுக்காஸ் எதிரில்)

தி.நகர், சென்னைஇந்நாடகம் கோடை நாடக விழாவில் எனக்கு சிறந்த கதாசிரியருக்கான விருதை பெற்றுத் தந்தது.

Sunday, June 12, 2011

ராமனைத் தெரிந்தும்..தாடகையை அறியாதவர்களுக்கு..

சுந்தன் எனும் யக்ஷனுடைய மனைவி தாடகையும், அவன் மகன் மாரீசனும் ஆவர்.

தாடகையும் மாரீசனும் இந்த தேசத்தை நாசம் செய்து கோர வனமாக்கிவிட்டார்கள்.

அந்த தாடகைக்கு பயந்து அந்த வனத்திற்கு யாரும் வருவதில்லை.தாடகை ஆயிரம் யானை பலம் கொண்டவள்.அவளுடைய உபத்திரவத்தைப் போக்கவே உன்னை அழைத்து வந்தேன்.ரிஷிகளை தொந்தரவு செய்யும் இந்த அரக்கி உன்னால் கொல்லப்படுவாள்' என்பதில் சந்தேகம் இல்லை என விஸ்வாமித்திரர் ராமனிடம் கூறினார்.

இது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கலைஞர் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசுகையில்..'புராணத்தில், ராமாயணத்தில் ராமன்14 ஆண்டுகாலம் ஆட்சியிலே இல்லை.அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில்தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என எழுதியுள்ளார்கள்.ஆகவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தவறுகளை சுட்டிக்காட்டவும்,நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக் களையவும் தடுத்து நிறுத்தவும் நாம் முயலவேண்டும் என்றுள்ளார்..

நம் சந்தேகங்கள்..

1) ஜெ தாடகை என்னும் அரக்கியா?

2) ஆயிரம் யானை பலம் கொண்டவரா? ஜெ

3)கலைஞர் ராமனா

4) அதனால் தான் தான் பொறியாளர் இல்லை என்பதால்...சேது பாலம் கட்டியதாக புராணத்தில் சொல்லப்படும் ராமன் ஒரு பொறியாளரா? என அன்று கலைஞர் கேட்டிருப்பாரோ?

5)இங்கு தாடகையை அறிமுகப் படுத்தியவர் யார்?

6)மீண்டும் ஆட்சிக்கு வர இவர்களுக்கும் 14 ஆண்டுகள் ஆகும் என்கிறாரா?

Friday, June 10, 2011

விலக மறுப்பதேன்விலகிடுவேன்..

விலகிடுவேன் என்கிறாய்

ஆனாலும்

விலக மறுக்குது

உன் நிலைமை

நீயே விலகுவாய் என்ற

நிலையை எதிர்பார்த்து

நான்..

என்னுடனானது கூடாநட்பு

என அறிந்தும்

பிரிய மறுப்பதேன்

Wednesday, June 8, 2011

இன்டெர்னெட் காதல்

ராங் காலால் அவனது

ராணி ஆனாள்

மின்னஞ்சலால்

மிகுதியாய் போதை ஊட்டினாள்

எஸ்எம்எஸ் மூலம்

எழுச்சியூட்டினாள்

சாட் மூலம்

சாமரம் வீசினாள்

மணம் தீர்மானம் ஆனது

முகபுத்தகம் மூலம்

புகைப்படம் ஏமாற்றியது

புத்தகத்தில் - நேரில்

பார்த்த வேளையில்

பாகாய் உருகினான் -அவளோ

தன் கற்பனை நாயகன் கனவு

தடாலென வீழ்ந்ததை உணர்ந்தாள்

மணமுடிந்ததும்

மணமுறிவுதான் என

யார் அறிவார்Monday, June 6, 2011

காங்கிரஸின் ஊழல், அராஜக முகத்தின் வெளிப்பாடுஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கோரி யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொண்ட உண்ணாவிரத்தை காவல் துறையினரைக் கொண்டு மத்திய அரசு சீர்குலைத்த நடவடிக்கை ஊழலைக் காப்பாற்றும் அதன் உண்மையை முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த டெல்லி காவல் துறையினரிடம் அனுமதி பெற்றே பாபா ராம்தேவ் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். போராட்டத்திற்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு, பிறகு அதனை இரத்து செய்துவிட்டு, நள்ளிரவில் காவல் படையினரை அனுப்பி, தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கலைத்திருப்பது ஜனநாயக உரிமைகள் மீது காங்கிரஸ் கட்சியும், மன்மோகன் சிங் ஆட்சியும் கொண்டிருக்கும் மரியாதைக்கு அத்தாட்சியாகும்.நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்று மன்மோகன் சிங் அரசு தனது ஊடக பலத்தைக் கொண்டு பலமாக பரப்புரை செய்துக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றம் 10 விழுக்காடு அளவிற்கு தொடர்வதும், அதனால் ரூபாயின் வாங்கும் சக்தி குறைவதும், மக்களின் வாழ்வை சமநிலை இழக்கச் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், தன்னை தூயவர் என்று நிலைநிறுத்துக்கொள்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந்தியா வரலாறு காணாத ஊழலை சந்தித்துக்கொண்டிருக்கிறது.நாட்டை உலுக்கிய காமல்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், எல்.ஐ.சி. பங்குச் சந்தை முதலீட்டு ஊழல், வீட்டுக் கடனிற்கு இலஞ்சம் பெற்ற ஊழல் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழல் நாற்றம் வீசிகிறது. ஆனால் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் அரசும், காங்கிரஸ் கட்சியும் கூசாமல் பரப்புரை செய்கின்றனர். ஒரு வேளை இலஞ்சம், ஊழல் ஆகியவற்றில் நாடு வளர்கிறது என்று கூறுகிறார்களோ?


இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அயல் நாட்டு வங்கிகளின் கருப்புப் பணத்தின் அளவு நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. ஆனால், கருப்புப் பணத்தை வெறும் வரி ஏய்ப்பாக மட்டுமே காங்கிரஸ் அரசு பார்க்கிறதே தவிர, அது ஊழலில் சம்பாதிக்கப்பட்டு பணமாற்றம் செய்யப்பட்ட இந்த நாட்டின் சொத்து என்று கருதவில்லை. கருப்புப் பண வழக்கை விசாரித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இது வெறும் வரி ஏய்ப்பு அல்ல, இந்த நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டு அயல் நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. அவ்வாறு கூறுவதை இன்று வரை மன்மோகன் அரசு ஏற்கவில்லை. கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட இன்று வரை மறுத்து வருகிறது மத்திய காங்கிரஸ் அரசு.

ஒரு பக்கம் விலைவாசியேற்றத்தால் நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திணறிக்கொண்டிருக்கும் நிலையில், வரலாறு காணா ஊழல் இந்த நாட்டை தின்றுக்கொண்டிருக்கும் செய்தி, மக்கள் உள்ளத்தில் கோவக் கனலை உண்டாக்கியுள்ளது. இதனை உணர்ந்த - உண்மையான நாட்டுப் பற்றாளர்கள், மக்களுக்கு அறிமுகமான முகங்களை முன்னிறுத்தி ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதுதான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காந்திய சேவா சத்தியாகிரகப் படை எனும் அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்ட முதல் ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஆகும். 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தலைமையில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கிய சாகும்வரை போராட்டம் மக்களை சென்றடையா வண்ணம் ஊடங்களை மிகச் சாமர்த்தியமாக பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை சாகடித்தது மத்திய அரசு.
அதன் பிறகுதான் அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலிற்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டது. அது லோக்பால் சட்ட வரைவு தொடர்பான உத்தரவாதத்தை பெற்று முடிந்தது. இப்போது கடந்த சனிக்கிழமை யோகா குரு பாபா ராம்தேவ தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் தொடங்க, தனது ஊழல் முகம் நாட்டு மக்களிடம் பெரிதாக வெளிப்படுவதைத் தடுக்க, ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, இரவோடு இரவாக அந்தப் போராட்டத்தை ஒடுக்க அராஜக வழியை கையாண்டுள்ளது. சட்டம் ஒழுங்கை(?) நள்ளிரவில் நடைமுறைப்படுத்த காவல் படைகளை ராம்லீலா மைதானத்தில் கொண்டு வந்து தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஒடுக்குமுறையை கட்டவிழ்ந்துவிட்டுள்ளது.

ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கும் கட்சியாக தன்னை காட்டிக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் உண்மையாக முகம் இதன் மூலம் வெளிப்பட்டது மட்டுமின்றி, அது மறைத்துவரும் மற்றொரு முகமும் நேற்று வெளிப்பட்டது. அதுவே, பாபா ராம்தேவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் உதிர்த்த வார்த்தைகளாகும்.

பாபா ராம்தேவை ஒரு ‘முரடன்’ என்று திக் விஜய் சிங் வர்ணித்துள்ளார். சோனியாவின் முழு நேர ஊழியனாய், காங்கிரஸ் கட்சியின் அந்த முதல் குடும்பத்தின் விசுவாசமிக்க தொண்டனாய் திகழும் திக் விஜய் சிங், பாபா ராம்தேவ் யோகசனத்தை மற்றும் கற்றுக்கொடுக்க வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று உபதேசமும் செய்துள்ளார். அரசியல் அநாகரீகத்தின் உச்சகட்டம் அவருடைய பேச்சுகள்.

பாபா ராம்தேவ் ஒரு முரட்டுப் பேர்வழி என்றால் அவரிடம் மத்திய அரசு இத்தனை நாள் பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்? யார் அரசியல் ஈடுபடவேண்டும் என்ற சொல்ல காங்கிரஸ்காரன் யார்? அதுமட்டமல்ல, தனது நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார் ராம்தேவ் என்று வேறு பேசியுள்ளார்.

ஊழலுக்கும், கருப்புப் பணத்திற்கும் உறுதுணையாக நிற்கும் கட்சிக்கு, அவைகளை ஒழிக்க முற்படும் நடவடிக்கைகள் தவறான வழிகாட்டுதல் என்றுதான் தெரியும். போபர்ஸ் பீரங்கி பேரத்தில் தரகு பரிமாற்றம் நடந்தது உறுதியான பிறகும் கூட, ஊழல் நடக்கவில்லை என்று சாதித்த கட்சியல்லவா காங்கிரஸ். எனவே அதற்கு ஊழல், கருப்புப் பணக் குவிப்பு ஆகிய அனைத்தும் தேச வளர்ச்சிக்கு உகந்த நடவடிக்கையாகத்தான் தெரியும்.

இன்னமும் இந்தக் கட்சியை இந்திய நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனையானது. இந்த நாட்டை, நாட்டின் வளத்தை பெரு நிறுவனங்களும், அயல் நாட்டு நிறுவனங்களும் முழுமையாக சுரண்டிக் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்து, அவைகள் கொடுக்கும் இலஞ்சப் பணத்தில் கொழுத்துக்கொண்டிருக்கும் ஒரு கட்சியை மீ்ண்டும் மீண்டும் தேர்வு செய்து ஆளவிட்டதன் பலன் இன்று உச்ச கட்ட ஊழலையும், கருப்புப் பண வளர்ச்சியையும் இந்த நாடு கண்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸை ஒழிக்காமல் ஊழல் ஒழியாது என்பதையும், காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்த அகற்றாமல் கொண்டுவரப்படும் எந்த லோக்பாலும் இந்த நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றாது என்பதையும் இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(நன்றி -வெப்துனியா )

Sunday, June 5, 2011

கூடா நட்பு என கலைஞர் யாரைச் சொன்னார்..?சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை

ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,

'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்

பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " .இது கலைஞரின் பிறந்த நாள்  செய்தி  உடன் பிறப்புகளுக்கு .இந்நிலையில் இன்று திருவாரூர் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய கலைஞர்..கனிமொழி பற்றி பேசுகையில்..

திகார் ஜெயிலில் இன்று இருக்கிறார்..கலைஞர் டீ.வி., யில் பங்குதாரராய் இருந்த ஒரே காரணத்தால்..

இது மத்திய அரசு உத்தரவாலோ..அல்லது அவர்கள் அலட்சியத்தாலோ..அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ நடந்துள்ளது என்றுள்ளார்..இதிலிருந்து கூடா நட்பு என யாரச் சொல்லியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.டிஸ்கி-

கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்(ஒருவர் கொலைக்கு ஆளாகும்போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கை விட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்)

Thursday, June 2, 2011

யாரேனும் உண்டோ..?

யாரேனும் உண்டோ..?வானவூர்தி ஒலிக் கேட்டு

விண்ணைப் பாராதார்

மழை கொட்டுகையில்

மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்

விபத்து நடந்ததும்

விரைந்து சென்று

வேடிக்கைப் பார்க்காதார்

கடந்து சென்ற அழகைக் காண

கழுத்து வலிக்க திரும்பாதார்

பேருந்து நிறுத்தத்தில்

சரியாக நிறுத்தும் ஓட்டுநர்

ஆளும் கட்சியின் நற்செயலையும்

குறைகூறா எதிக்கட்சியினர்