Saturday, October 31, 2009

இந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க

பாட்டின் வரிகளை மட்டும் பாருங்கள்..நான் ரசித்த பாடல்.

படித்ததும் கேட்டதும்...

1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!

Friday, October 30, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 6

இளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..

கணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..

புது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..

புத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..

ஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா? நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..

ஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..

(முல்லைத்திணை-தலைவி கூற்று)

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப்பைம்போ துளரி, புதல
பீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையோடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே
என்னா யினல்கொல் என்னா தோரே...
- கிள்ளி மங்கலங்கிழார்

மழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..

இதற்கான அர்த்தம்..

அவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ? என்று வருந்தாதவன் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

பாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.

குறுந்தொகையில் வரும் பாடல் இது.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (30-10-09)

1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.

2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.

3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்

4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.

5)யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்.

6)வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று புகார் செய்வார்.பெரியநாயக்கன் பாளயத்தில் உண்மையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.மனுநீதி நாள் முகாமில் பங்குப்பெற்ற விவசாயி ஒருவர் தெருவில் இருந்த ஆறு புளியமரங்களைக் காணவில்லை..அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புகார் செய்துள்ளாராம்.

7)இந்தியாவில் அஜந்தா, எல்லோரா குகைகள் பிரசித்திப் பெற்றவை..மிக நீளமான குகை அமெரிக்காவின் கேடுகி மாநிலத்தில் உள்ள ஃப்ளீட் ரிஜ்கேல் சிஸ்டம் தான்..இதன் நீளம் 116.3 கிலோ மீட்டர்.

8) ஒரு ஜோக்
மெகா சீரியல் ஒன்றிற்கு கதை எழுத சான்ஸ் கிடைச்சிருக்காமே..என்ன கதை வைச்சிருக்க
ஆயா வடை வித்த கதை..காக்கா தூக்கிண்டுண்டு போச்சே..அதுதான்..சின்ன சீ ரியலாம்..அதைத்தான் 500 எபிசோடிற்குள் சொல்ல முடியும்.

Thursday, October 29, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 6

இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.

1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.
அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.

ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.

பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.

கலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது

பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.

1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.

1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு

1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்

1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்

1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.

1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை

அடுத்த பதிவில் சந்திப்போம்

வாய் விட்டு சிரியுங்க

என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

Wednesday, October 28, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவுகள் அவ்வப்போது யூத்ஃபுல் விகடனில் வருவது உண்டு..ஆனால் இப்போது எனது 'காதலாவது கத்திரிக்காயாவது..'சிறுகதையும்...வாய் விட்டு சிரியுங்க..பதிவும்..ஒரே சமயம் இரண்டும் யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளன.மேலும் சிறுகதை அதிகம் படிக்கப் படுவ தாயும் உள்ளது.
விகடனாருக்கு நன்றி

கொஞ்சி விளையாடும் தமிழ் - 5

'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இதற்கான அர்த்தம்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலயும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்)

Tuesday, October 27, 2009

Orphan ஆங்கிலப் படம்

தங்களின் மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்ததால்..9 வயது எஸ்தர் என்னும் ரஷ்யன் பெண்ணை தத்தெடுக்க முடிவெடுக்கின்றனர் அந்த தம்பதிகள்.ஆனால் அப்பெண் வீட்டிற்கு வருவதை மகன் விரும்பவில்லை.ஆனால்..வாய் பேசமுடியாத ,காது கேட்காத இளைய மகள் விரும்புகிறாள்.

ஆனால் எஸ்தர் பள்ளியில் யாருடனும் ஒட்டுவதில்லை.அவளால் உடன் படிக்கும் பெண் விழுந்து கால் காயம் எற்படுகிறது.அவள் போகும் இடமெல்லாம்..ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதால்..அதைப் பற்றி அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கேட்க..அதன் தலைவி அதை ஒப்புக் கொண்டு..மேலும் சில தகவல் தர அவளை எஸ்தர் கொன்று விடுகிறாள்.பின் அவள் பற்றி ரகசியம் தெரியும் மகனை கொல்ல முயற்சிக்கிறாள்..ஒரு நாள் இரவு தந்தை கொல்லப்படுகிறார்.

பின் தாயும்..இளைய மகளையும் கொல்ல முயலுகிறாள்.

இந்த ஹாரர் திரில்லர் படத்தில் இதற்கு மேல் கதையைச் சொன்னால் பார்க்கும் இன்டெரெஸ்ட் போய் விடும்

படத்தின் கடைசிக் காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வந்து..நகைத்தை கடித்துக் கொண்டிருப்போம்..இது இயக்குநரின் வெற்றி.

கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

படத்தின் இயக்கம் jaune collet serra
இசை john ottman
ஒளிப்பதிவு jeff Cutter

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு

படத்தில் எஸ்தராக நடித்த 12 வயது Isabella Fuhrman நடிப்பு சூப்பர்உன்னுடன் வாழ்வது அரிது...

பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும் .

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...


வாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.
1.நல்ல உணவு
2.நல்லதூக்கம்
3.அன்பான வாழ்க்கைத்துணை.

முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.

இரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..

உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.

தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.

ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.

மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.

இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..

மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.

Monday, October 26, 2009

குறுந்தொகையில் ஒரு பாடல்

தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.

அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.

தலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.

அதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.

திரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..

துரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.

அந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.

அதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா" என்றும் பாடல் உண்டு.

தூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.

அப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்

குறிஞ்சி- தோழிக்கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

- திருப்புத்தேளார்

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.

இதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.

Sunday, October 25, 2009

வாய் விட்டு சிரியுங்க..

பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்

2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?

3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்

4)நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.

5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு

6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்
என்ன சொல்ற நீ
நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.

Saturday, October 24, 2009

நான் நீயாக ஆசை ..


நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Friday, October 23, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 4


நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..

கலைஞர் என்னும் கலைஞன் - 5

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.

1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்

1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.

1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, October 22, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(23-10-09)

இந்தியாவில் நூறில் ஏழு பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதாம்.குறைந்த உடலுழைப்பு,மோசமான உணவு முறைகள்,பரம்பரை தன்மை உள்ளிட்ட காரணங்களினால்.. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறதாம்..

2)கேரளாவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40லட்சம் பேரின் உயிரை பணயம் வைத்துத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம்.இந்த மக்கள் அனைவரையும் அரபிக்கடலில் தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க வெண்டுமா அல்லது புதிய அணை கட்ட வேண்டுமா என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி என்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.

3)நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா..ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 சதவிகிதத்திற்கு மேல் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் பலர் கேரள மாநிலத்தில் பணியாற்றியபின் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.

5)நாம் ஒரு அடி எடுத்துவைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறதாம்.

6)கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா? கந்தசாமிக்குத் தெரிந்திருக்கும்..ஒரு சேவல் கூப்பிட்டால் (கூவினால்) எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்புடு தூரம்.

7)ஒரு ஜோக்..
டாக்டர்- உங்களுக்கு தூக்கத்தில நடக்கற வியாதின்னு யார் சொன்னாங்க
நோயாளி- எனக்கேத் தெரியும் டாக்டர்..ஆஃபீஸ்ல உட்காராம நடந்துக்கிட்டே இருக்கேனே

Wednesday, October 21, 2009

வைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி..

அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது தன் இடது உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு..சிறிது நீர்விட்டு கலக்கி..சிறு குச்சியில் அதைத் தோய்த்து..நெற்றியில் நீண்ட கோடு ஒன்றை இட்டுக் கொண்டார்.குழாயைத் திறந்து இடது கையை கழுவிக் கொண்டார்.பக்கத்து துவாலையில் கைகளைத் துடைத்துக் கொண்டார்.

அப்பாவின் செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த வைதேகி..அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையும்..தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

நைட் ஷிஃப்ட் முடிந்து வந்து நேரமாகியும்..இன்னும் காஃபிக்காக அடுக்களையில் நுழையா மகளை அழைத்த படியே வந்தாள் ரங்கநாயகி.

அங்கு..தன் கணவனையும், மகளையும், நிசப்தத்தையும் கண்டு.."ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்..

'என்ன ஆச்சு..அப்பாவுக்கும்..பொண்ணுக்கும்' என மௌனத்தை உடைத்தாள்.அதற்கு பதில் வராததால்..'யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து சொன்னால்தானே தெரியும்..' என்றபடி வைதேகியை நோக்கி.."ஏண்டி..ரெஷசன்ல வேலை போயிடுச்சா?' என்றாள்.

வைதேகி தலையைக் குனிந்துக் கொண்டாள்.கண்ணீர்த் துளிகள் இரண்டு..கால் கட்டைவிரல்களில் விழுந்தது.

'அது ஒண்ணுமில்லடி..அவளுக்கு..இந்த அரவாமுதனோட..அப்பாவோட "ஏ' ங்கிற இனிஷியல் வேண்டாமாம்..ஆமாம்..என்ன பேர் சொன்ன.." என்றார் வைதேகியிடம்.

"ஜேம்ஸ்" தன் செப்பு வாயைத் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள் வைதேகி..அது அவளுக்கேக் கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை..

'ஜேம்ஸ்..அவளுக்கு இப்ப ஜே ங்கற இனிஷியல் வேணுமாம்..வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு போயிண்டு இருந்தவள்..இனிமே ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போகட்டான்னு கேட்கறா.பெருமாள் பிரசாதம்..துளசியை மென்னவளுக்கு..அப்பம் முழுங்க ஆசையாம்..'கோபத்துடன்..அதே சமயம் அது வெளியே தெரியா நக்கலுடன் கூறினார்.

சற்றே..தைரியம் வந்த வைதேகி..'அம்மா..என் கூட கால்சென்டர்ல வேலை செய்யற ஜேம்ஸை எனக்குப் பிடிச்சு இருக்கு..அவரைக் கல்யாணம் பண்ணிக்க அப்பாவோட பர்மிஷனைக் கேட்டேன்..'என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..அவள் கன்னங்களில் 'பளார்..பளார்..' என நாலு அறை அறைந்த ரங்கநாயகி 'அடிப்பாவி..எவ்வளவு லேசா சொல்ற..நாம என்ன ஜாதி..அவன் என்ன ஜாதி..நம்ம குடும்பம் சாஸ்தோஸ்ரமான குடும்பம்..நம்ம ஜாதியைத் தவிர யார் வந்தாலும்..அவா தண்ணீ கேட்டாக் கூட..சொம்புல கொண்டு வந்து கீழ வைப்போம்.அவா குடிச்சுட்டு கீழ வச்சதும்..தண்ணீ தெளிச்சு எடுத்து வைப்போம்..அப்படி ஒரு குடும்பத்துல வந்து பொறந்துட்டு..அப்படிப்பட்ட அப்பாவுக்கு வந்து பொறந்துட்டு..உன் மூளை ஏண்டி இப்படிப் போச்சு..' என அழத் தொடங்கினாள்.

'அம்மா..இப்ப என்ன ஆச்சு..அப்பா சரின்னாதான்..இந்த கல்யாணம் நடக்கும்..இல்லேனா..காலம் பூரா நான் கல்யாணம் பண்ணிக்காமலேயே இருப்பேன்.வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...ஆனா ஒன்னு சொல்லட்டா..எனக்கு இருபத்தெட்டு வயசாச்சு..எனக்குக் கீழ நாலு பொண்ணுங்க..எல்லாருக்கும் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு பணம் தேவை..நாம இருக்கற நிலைல அது எவ்வளவு கஷ்டம் யோசனைப் பண்ணுங்க..இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..நம்ம குடும்பத்துக்கு ஒரு மகனா இருந்து ஒத்தாசை பண்ணுவான்' என்றாள்.

'இனிமே இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது..வேற மதத்துக்காரன்..வேற ஜாதிக்காரன் தயவு எனக்குத் தேவையில்லை.பணமாம்..பணம்..யாருக்கு வேண்டும் பணம்..பணம்னதுமே அப்பா வாயை இளிப்பான்னு நினைச்சியா..அப்படி ஒரு பெயரைச்சொல்லி வரப் பணம் எனக்கு வேண்டாம்..கடைசிவரை நம்ம ஜாதிதான் உயர்ந்ததுங்கற எண்ணம் இருக்கணும்.அன்னிக்கு டி.வி.ல பார்த்தியே..அந்த பொண்ணு என்ன சொல்லித்து..நான் இந்த ஜாதில பொறந்ததுக்கு பெருமாளுக்கு நன்றி சொல்லறேன்னுத்தே..அது பொண்ணு..உனக்கு கடைசியா சொல்றேன்..இனிமே என் மூச்சுக் காத்திலக் கூட அவன் பெயர் படக்கூடாது..' என்றார் கறாராக.

***** ***** ***** *****
அன்று இரவு நைட் ஷிஃப்டிற்கு வந்த வைதேகி..அலுவலகத்தில்..அவள் பதிலுக்குக் காத்திருந்த ஜேம்ஸை நளினமாக தவிர்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டாள்.

முதல் அழைப்பு வந்தது..

"குட் மார்னிங் சார்..கேத்ரின் ஹியர்..வாட் கேன் ஐ டு ஃபார் யு சார் " என்றாள் இயந்திரமாக....

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 3

கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.

இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..

எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.

உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து

Tuesday, October 20, 2009

ராஜபக்க்ஷேவும்..கேரளாவும்...

தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கற்றவருக்கு சென்ற இிடமெல்லாம் சிறப்பு என்று இருந்த நாட்டில்..இன்று ..தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் 'செருப்பு" என்ற நிலை உருவாகி வருகிறதே..ஏன்?

தனித் திராவிட நாடு என்ற கொள்கையுடன் இருந்த திராவிடக் கட்சி..தேசிய ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு..அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த உடன்..தனித் திராவிட நாடு கொள்கையை கை விட்டது.

அனால் இன்று நடப்பதென்ன..

இலங்கை தமிழர் நிலைக் குறித்து அறிந்துவர சென்ற..எம்.பி.க்கள் குழு..அரசு அனுப்பாததாகவே இருக்கட்டும்..சென்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள்..அவர்களில் ஒருவரிடம்..

இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும் ..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும் என்றாராம்..அந்த ராஜபக்க்ஷே..அதை இவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம்..

உடனே தன் கண்டனத்தை அவர் தெரிவித்திருக்க

வேண்டும்..உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..

ஆனால்..அப்படி சொன்னதற்காகவோ என்னவோ..மத்திய அரசு இலங்கைக்கு 500 கோடி உதவி உடன் செய்துள்ளது.

அவமானப்பட்டது தமிழன்தானே..மைய அரசுக்கு என்ன கவலை?

ஒருவேளை ஒரு சிங்கோ,முகர்ஜியோ ஆனால் கண்டனக் குரல் கொடுத்திருக்கும்..

வெளிநாட்டில்தான் இந்த கதை என்றால்..

முல்லைப்பெரியாறு விவகாரத்தில்..உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது..ஆய்வு மேற்கொண்டுள்ளது கேரள அரசு..இதற்கு நம் முதல்வர் கண்டனம் தெரிவித்தால்..அவர் இவ்விகாரத்தில் அரசியலை புகுத்துகிறாராம்..கேரள அமைச்சர்கள் கூறுகின்றனர்.

தவிர..உச்ச நீதிமன்றத்தில்..இரண்டுமாதம் வழக்கை தள்ளிப் போடக் கேட்கிறார்கள்.அதற்குள்..வேலையை மேற்கொள்ளலாமே!

உச்ச நீதிமன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.

வழக்கம்போல ..இந்த விவகாரத்திலும்..ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு..மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிடுவார் முதல்வர்.

தமிழனுக்கு சென்றவிடமெல்லாம்.....

அவமானத்தை தாங்க மட்டுமல்ல..உரிமைகளும் விட்டுக்கொடுத்து விடுவான் தமிழன்..

கேட்டால்..அதுதானே தமிழர் பண்பாடு என்றிடுவான்.

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ காத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?

5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.

6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.

7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.

8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்

9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு

_ கபிலன்

Monday, October 19, 2009

தேமதுரக் குரலோன் P.B.ஸ்ரீநிவாஸ்


ஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.

ஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.
இவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
என் அருகே நீ இருந்தால்-திருடாதே
பால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்
காற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய மிதிலை நகரினிலே-அன்னை
ஆண்டொன்று போனால்-போலீஸ்காரன் மகள்
எந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி
ஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ
மாம்பழத்து வண்டு-சுமைதாங்கி
யார்..யார்..அவள் யாரோ--பாசமலர்
அவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்
பொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு
உங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை
நிலவே என்னிடம் - ராமு
நேற்றுவரை நீ யாரோ-வாழ்க்கைப்படகு
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

ஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா? இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்

சுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'

சென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலம்.

Sunday, October 18, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 4

1960ல் வந்த படம் குறவஞ்சி..
இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.

1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி

1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.

1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.

1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.

1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.

1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.

பூவா...தலையா...(சிறுகதை)

தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல்.

அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு முதலில் விளையாடுவது என்பதைத் தீர்மானித்தான்.

இரு சிறுவர்கள் நடுவர்களாக நிறுத்தி வைக்கப் பட்டனர்.பூவா தலையாவில் வென்ற குழுத்தலைவரான சிறுவன் மற்றவனிடம்..'டேய்..நீ சச்சின்..நான் சேவாக், நாம தான் ஆரம்ப ஆட்டக்காரர்கள்' என்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உமாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் தன் பையனும் இடம்பெறும் நாள் வராதா...அவன் மனம் ஏங்கியது.

கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன.இந்தக் கேள்வி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது.

உமா...அந்த நாளை நினைத்தாள்.

நந்திதா மகப்பேறு மருத்துவ நிலையம்

'பாராட்டுக்கள்...'உமாவை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் கூறினார்..'இரண்டு மாதம் முடிந்துவிட்டது.'

உமாவிற்கும்..அவள் கணவன் சிவாவிற்கும் பகீரென்றது.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை உதட்டில் விரலை வைத்து 'சூ...சப்தம் போடாதீர்கள்' என்றது.

எதை வேண்டாம்...வேண்டாம் என கல்யாணமாகி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார்களோ அது நடந்துவிட்டது.

'மாதம் தவறாமல் பரிசோதனைக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்க' என்ற மருத்துவரிடம் 'சரி' என்பது போல தலையை அசைத்தான் சிவா.

பின் உமாவிடம் சில ஆலோசனைகளைக் கூறினார் மருத்துவர்.

அவர்கள் திரும்பிவரும்போது வழக்கத்துக்கு விரோதமாக எதுவுமே பேசாமல் வந்தனர்.

வீட்டை அடைந்ததும்..உமாவை இறக்கிவிட்டுவிட்டு 'நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்' என அவள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்..

வீட்டுக்குள் சென்று..சோர்வுடன் அமர்ந்த உமாவின் கைகள் அனிச்சையாகத் தொலைக்காட்சியை இயக்கியது.

'பொதிகை' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் மகப்பேறு பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

'இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டமாகத்தான் இருக்கும்' அவர் சொன்ன இந்த வரிகளைத் தவிர வேறு ஏதும் அவள் காதுகளில் விழவில்லை.

சிவா வண்டி திரும்பும் ஓசை கேட்டது.

அவள் எழுந்து விளக்குகளைப் போட்டாள்.குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காபி போடத் தயாரானாள்.சிவா எப்போதும் வெளியே சென்று வந்தால் காபி சாப்பிடுவது வழக்கம்.

நேரே சமையலறைக்கு வந்தவன் 'உமா..இப்போது நமக்குத் தேவையா?' என்றான்.

இன்னும் இரண்டு வருடங்களாவது தள்ளிப் போடணும்னு நினைச்சோம்...என்றவளின் குரல் தழுதழுத்தது.

'நான் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே..' என்றான். 'கலைச்சுடலாம்' என்றான்.பின்னர் மெதுவாக 'என்னுடைய மருத்துவ நண்பன் ஒருவனிடம் சொல்லி இந்த மாத்திரைகளை வாங்கி வந்தேன்.மூன்று வேளை சாப்பிட்டால் போதும்...'

இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டம் தானே என அவளும் இதற்கு சம்மதித்தாள்.

எட்டு மாதங்கள் கழித்து...கைகளையும்..கால்களையும் ஆட்டி...அழுது..சிரித்து.. பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டிய அந்த உயிர் சிதைந்தது.

பத்து வருடங்கள் பறந்துவிட்டன..

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

'அன்று அப்படி சம்மதித்தது தவறோ...?' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எந்தக் குழந்தையும் தவழ்ந்து விளையாடாத காலி மைதானமாகவா ஆகவேண்டும் வீடு..

நீண்ட நேரம் யோசித்தாள்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒரு விளம்பரம்..

'சென்னை அருகே இருந்த குழந்தைகள் குருகுலம் ஒன்று பற்றிச் சொல்லிவிட்டு...வர இருக்கும் பண்டிகையை நாம் இவர்களுடன் கொண்டாடுவோம்' என்றார் அந்தப் பிரபல நடிகர்.

அவர் நடுவில் இருக்க..அவரது வலப்புறமும்..இடப்புறமும் நிற்கும் குழந்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தது ஒளிக்கருவி.

திடீரென..இதில் ஒரு முகம் உமாவிற்கு பிடித்துப் போயிற்று.எவ்வளவு அகன்ற கண்கள்...தான் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் கைகளை...இங்கும்..அங்கும் வீசிக்கொண்டு அவன் என்ன செய்கிறான்..?

கிரிக்கெட்டா விளையாடுகிறான்?

ஓங்கி அவன் பந்தை அடிப்பதுபோல இருந்தது உமாவிற்கு.

உமா ஒரு முடிவிற்கு வந்தாள்.

பூவா...தலையா...போட்டாயிற்று..

அவளது வீட்டில் விளையாட..தொடக்க ஆட்டக்காரன் ஒருவனைத் தேர்வு செய்துவிட்டாள்

Saturday, October 17, 2009

வாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..

1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?

2.என் மனைவி ஸ்வீட்ஸ் செய்யறதிலே எக்ஸ்பர்ட்..உன் மனைவி எப்படி
அவ ஸ்வீட்ஸ் சாப்பிடறதிலே எக்ஸ்பர்ட்

3.இந்த சமயத்திலே நீ வீட்டுக்கு வந்தது என் மனைவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
ஏன் அப்படி சொல்ற
அவ செஞ்ச அல்வாவை உனக்கு கொண்டு வந்து தர்றாளே!

4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..?
பெண்2-எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சே...

5.மாமனார்-(தீபாவளிக்கு வந்திருக்கும் அமெரிக்க மாப்பிள்ளையிடம்) தீபாவளிக்கு..சரிகை வேட்டி..அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியிருக்கேன்..ஆனா இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?

6.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..

7.என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்

8.இன்ஸ்பெக்டர்- என்னடா..கபாலி ..மாமூல் வரல்லே..மாமியார் வூட்டுக்கு அனுப்பிடுவேன்
கபாலி-நிஜ மாமியார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்...சார்

( மீள்பதிவு )

Thursday, October 15, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(16-10-09)


அருண் வைத்தியநாதன் இயக்கி, பிரசன்னா,சிநேகா நடித்த படம் 'அச்சமுண்டு..அச்சமுண்டு'. இப்படம் சீன மொழியில் சப்டைடிலுடன் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்போது கெய்ரோவில் நடக்கும் 33ஆவது சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகியுள்ளதாம்.வாழ்த்துகள் அருண்

2)கருணாநிதி என்று அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகே அறியும் என விஜய்காந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

3)இலங்கை அதிபரை திருமாவளவன் சந்தித்த போது ராஜபக்க்ஷே 'இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால்..அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும்..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும்' என்றாராம்.அதுபற்றி திருமாவளவன் கூறுகையில் 'என்னை அவருக்கு அறிமகம் செய்த போது, அவர் நகைச்சுவையாக இதைக் கூறினார்.நானும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன்' என்றாராம்.
தமிழா..தமிழா..

4)பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ்ந்து வருவதாக ஈழத் தமிழர்கள் கூறியதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

5)உலகம் முழுதும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா.,அமைப்பின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.இந்நிலை நீடிக்குமேயாயின் மிகவும் மோசமான பாதிப்புகளை உலகு சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.

6)மனித உடலில் இருபது லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.இவை எப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.நாம் உணராமலேயே நாள் ஒன்றிற்கு அரை லிட்டர் வியர்வை வெளியேறுகிறதாம்.

7) ஒரு ஜோக்

படம் முதல் நாளே நொண்டுதே..
அதனால்தான் அப்பவே சுளுக்குன்னு பெயர் வைக்காதீங்கன்னு சொன்னேன்

தீபாவளி நல்வாழ்த்துகள்


தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை..வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் பின்னணியில் ஒபாமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இது செய்தி.

தீபம் என்றால் ஒளி..ஆவளி என்றால் வரிசை..வரிசை..வரிசையாய் விளக்கேற்றி..இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையென தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணர்..நரகாசுரன் என்னும் அரக்கனை கொன்ற போது..அவன் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற கேட்ட வரத்திற்கேற்ப தீபாவளி கொண்டாடப்படுவதாக கதை உண்டு.

ராமாயணத்தில்..ராமர்..ராவணனை அழித்து விட்டு..தன் வனவாசத்தை முடித்து..மனைவி சீதை,தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாள்..மக்கள் விளக்கேற்றி..மகிழ்ச்சி அடைந்தனராம்.அதுவே தீபாவளி என்றும் கதை உண்டு.

ராமாவதாரத்திற்குப்பின்னர் தான் கிருஷ்ணாவதாரம்..அதனால் ராமர் காலத்தில் தீபாவளியே கிடையாது என்பாரும் உண்டு.

ஸ்கந்தபுராணப்படி..சக்தியின் கேதார விரதம் முடிந்து, சிவன் சக்தியை தன்னில் பாதியாக்கி அர்த்தநாரீஸ்வரர் ஆன தினம் என்றும் சொல்லப்படுகிறது.

1577ல் தங்கக்கோவிலுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியதால்..இந்த நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து..சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

எது எப்படியோ..

பண்டிகை தினம் என்றாலே...மகிழ்ச்சியும்..கொண்டட்டமும் தானே!

அனைத்து பதிவர்கள், திரட்டிகள்,பின்னூட்டாதிபதிகள் அனைவருக்கும்..என் தீபாவளி நல்வாழ்த்துகள்.

வாழ்க..வளர்க

Wednesday, October 14, 2009

என் ஓட்டு தமிலிஷ்க்கே..

திரட்டிகள் எல்லாம் பதிவர்களின் பதிவுகளை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் திரட்டுகின்றன.

நம் எண்ணங்கள் பலரைச் சென்று அடைகின்றன..பதிவு நன்றாயிருந்தால்..மனதிற்குள்..இவனும் நல்ல எழுதுகிறான் என்று எண்ணுபவர்களும்..இவன் எழுத்தை..இரண்டெழுத்து பாராட்டுவோம் என்று பின்னூட்டம் இடுபவரும் மேலும் ..மேலும் எழுதுவதைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் தமிழ்மணத்தில்..ஆதரவு ஓட்டுகளும்..எதிர் ஓட்டுகளும் போடலாம்..ஆனால் என்னதான் டக்கர் அடித்தாலும்..நீங்கள் ஒரு குழுவாய் இருந்தால் ..தமிழ்மணத்தில் ஒரு குப்பை பதிவு கூட வாசகர் பரிந்துரையில் வரும்...அதே சமயம்..நீங்கள் தனி நபராய் , எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் பதிவு தரம் வாய்ந்ததாய் இருந்தாலும்..பரிந்துரையில் வருவது கடினம்..அவ்வளவு ஏன்..உங்களுக்கு நெகடிவ் ஓட்டே விழக்கூடும்.

ஆனால்..தமிலிஷில் இப்படி ஏதும் இல்லை..அதில் யார் ஆதரவு ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கூட பார்க்கலாம்..அநாவசியமான பாலிடிக்ஸ் இல்லை.

அக்டோபரில்..எனக்கு இதுவரை 19 பதிவுகளுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்து..அப்பதிவுகள் பாப்புலர் ஆகி உள்ளன.தவிர அதற்கு..நம்மை பாராட்டி தமிலிஷிலிருந்து மின்னஞ்சலும் அனுப்புகிறார்கள்.

ஆகவே இன்றைய நிலையில் என் ஓட்டு தமிலிஷிற்கே!

கொஞ்சி விளையாடும் தமிழ் - 2

தமிழில் பல அற்புதங்கள் உண்டு..

முன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .
அடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான "ஆ" வில் ஆரம்பம்
அடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.

அத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்

'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்

'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்

'எ' எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்,எய்தல்,எழுதல்

இனி தமிழ் சிலேடை-

இம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.

துணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு

2) வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமெராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்

Tuesday, October 13, 2009

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!!


லட்சக்கணக்கான பணம் தேவையில்லை.மிக நவீன சாதனங்கள் பயன்படுத்தவில்லை.அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைந்த செலவில்..சில நிமிடங்களில் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்தான்.

உடல் குளிரூட்ட முறையில் மருத்துவர்கள் இந்த இருதய அறுவை சிகிச்சையைச் செய்தார்கள்.

அறுவைசிகிச்சை செய்யும் நோயாளியின் உடலைச் சுற்றி பெரிய ஐஸ் கட்டிகளை வைத்து..உடல் வெப்ப நிலையை குறைக்கிறார்கள்.ரத்த ஓட்ட வேகத்தை குறைப்பதே இதன் நோக்கம்.

அறுவை சிகிச்சையின் போது இருதய இயக்கம் சில நிமிடங்கள் நின்றுவிடும் என்றாலும்,சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எற்படுவதில்லை.

இந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுத் தலைவர் டி.எச்.கோராடியா கூறுகையில்..இப்படிப்பட்ட அறுவைசிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என்றார்..

நோயாளியின் உடல் வெப்பம் ஐஸ் கட்டிகள் மூலம் 30 டிகிரி செல்ஷியஸிற்கு குறைக்கப்பட்டது..பின்னர் அறுவை சிகிச்சை மூன்றரை நிமிடங்களில் நடந்து முடிகிறது.

இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.அதாவது 100 கிலோ ஐஸ் கட்டிகளின் விலை.தவிர நான்கு பாட்டில் ரத்தம் தேவை.

ஆனால் இது நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்..!!!!

(11-10-84 அன்று தினமணியில் வந்த செய்தி,,இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள்

அரசு அனுப்பிய அதிகாரிகள்


அந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயில்வோரும்..மற்ற மொழிப் பயில்வோரும் ஒரே மாதிரி கவனிப்பதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.பல தந்திகளும்..கடித பரிமாற்றங்களும் செய்த பிறகு..

சில அதிகாரிகளை அரசு தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் நிலையை நேரில் கண்டறிய அனுப்பினர்.

குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜே விற்கு முன்னரே விவரம் தெரிவிக்கப்பட்டது.உடனே அவர்..தமிழ்க் கல்வி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளித்தார்.அவர்கள் யாரும் அறியா இடத்தில் கொட்டிலில் அடைக்கப் பட்டனர்.மற்ற மொழி படிப்போரில்..தமிழ் தெரிந்தோரைத் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு இவர்கள் பெயரை..உதாரணமாக சண்முகம்,சுப்ரமணி,பாலு என்ற பெயர்களை தற்காலிகமாக சூட்டினார்.பயத்தால் அல்ல., அந்த அதிகாரிகளை சமாளிக்கும் திறன் அவருக்கு உண்டு..மேலும் அப்படிப்பட்ட நிலை உருவானதற்கு அந்த அரசும் காரணமாய் இருந்தது..இருந்தாலும்..அப்பாவி யாய் உள்ள தமிழ் மாணவர்களின் உறவனரை ஏமாற்றவே அப்படிச் செய்தார்.

அதிகாரிகள் வந்தனர்..முதல் இருக்கைகளில் அமர்ந்திருந்த சண்முகத்திடமும்,சுப்ரமணியிடமும்,பாலுவிடமும்..நிலையை விசாரித்தனர்.

அம்மாணவர்கள், தங்களை அரசு நல்ல படியாக கவனித்துக் கொள்வதாகவும்..மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகை தங்களுக்கும் கிடைப்பதாகவும் கூறினர்..முன்னரே ராஜே சொல்லிக்கொடுத்த படி.

அதிகாரிகளும்..திருப்தியடைந்து..தங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய..அவரும் அரசுக்கு உடன் கடிதம்ம் எழுதி தன் திருப்தியை தெரிவித்தார்.

Monday, October 12, 2009

பனிப்பாவை (கவிதை)


வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

வாய் விட்டு சிரியுங்க

நீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்?
அப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..

2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..
வேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா

3.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
ஷூகர் டெஸ்ட் பண்ணனும்னா ஒரு கிலோ ஷூகருக்கு 20ரூபாய் ஆகும்னு சொல்றார்

4.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது
எப்படி
அவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்பேஷண்ட் ஆயிடறாங்களே

5.போலீஸ்காரங்க எல்லாம் வலையை எடுத்துக்கிட்டு எங்கே போறாங்க..
குற்றவாளியை வலைவீசி தேடத்தான்

6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா?
என் கணவரை மாத்திட்டேன்

Sunday, October 11, 2009

நகைச்சுவையின் நாயகன் சந்திரபாபு..


என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பின்..தமிழ்த்திரையில் சொந்தக்குரலில் பாடி..நகைச்சுவை விருந்து அளித்தவர் சந்திரபாபு ஆவார்.

பிறரை சிரிக்க வைப்பவன் வாழ்வு..சோகம் நிறைந்தது என்பார்கள்.இவர் வாழ்வும் அப்படித்தான்.1926ஆம் ஆண்டில் பிறந்த இவர்..திரையுலகில் நுழைய பல முயற்சிகள் செய்தார்.பலன் இல்லை 1951ஆம் வருடம் ஒரு நாள் ஜெமினி ஸ்டூடியோ கேண்டீனுக்குப் போனார்..ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வாங்கினார்.அதில் காப்பர் சல்பேட்டைக் கலந்தார்.மட..மட..என குடித்து விட்டார்.வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார்.அப்போது ஸ்டுடியோவில் வேலையில் இருந்த கணேஷ் என்பவரும் கேண்டீன் உரிமையாளருமான மணியன் என்பவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.காவல்துறை அவரை கைது செய்தது.

நீதிபதி முன் நிறுத்தப்பட்டவரைக் கண்ட நீதிபதி மனதில் என்ன தோன்றியதோ..இவரை ஒரு காட்சி நடிக்கச் சொன்னார்.

சந்திரபாபுவும்..ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி நடித்தார்.பின் நீதிபதி வாரம் தோறும் ஒரு நாள் காவல் நிலையம் சென்று கையெழுத்து இடவேண்டும்..என்ற சிறு தண்டனையையே அளித்தார்.

இச் செய்தியெல்லாம் அறிந்த ஜெமினி அதிபர் வாசன்..சந்திரபாபுவிற்கு அப்போது தயாரிப்பில் இருந்த 'மூன்று பிள்ளைகள்'படத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.ஆம்..இவரை மருத்துவமனையில் சேர்த்த கணேஷ் என்பவர் யார் தெரியுமா? அவர்தான் ஜெமினி கணேசன்.அப்போது அவர் ஜெமினியில் புரடக்சன் மேனேஜர் பதவியில் இருந்தார்.

பின் சந்திரபாபு பல படங்களில் நடித்தார்.சபாஷ் மீனா படக்கதையைக் கேட்ட சிவாஜி..தன்னுடன் நடிக்க சந்திரபாபுதான் சரியாய் இருக்கும் என அவரை ஏற்பாடு செய்யச் சொன்னார்.அதை பாபுவிடம் தயாரிப்பாளர்கள் சொல்ல..சந்திரபாபு..சிவாஜிக்கு அந்த படத்தில் எவ்வளவு சம்பளம் என்றார்.'ஒரு லட்சம்' என்றார் தயாரிப்பாளர்.எனக்கு 'ஒரு லட்சத்து ஒரு ரூபாய்' வேண்டும் என்றாராம்.அதை அறிந்த சிவாஜி..'பரவாயில்லை..கொடுங்கள்.ஏனெனில் அந்த பாத்திரத்தில் அவர் நடித்தால் தான் வெற்றி பெறும் 'என்றாராம்.

தமிழ்த்திரையுலகில்..முதலில் ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.அதுபோல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.சந்திரபாபு நடிக்கும் படங்களில் அவருக்கென ஒரு பாடலாவது இருக்கும்.அப்படி அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் ஹிட் டானவை.என் நினைவில் நின்றவரையில் சில பாடல்களும் படங்களும்.

உனக்காக எல்லாம் உனக்காக - புதையல்
சிரிப்பு வருது - ஆண்டவன் கட்டளை
புத்தியுள்ள மனிதரெல்லாம்-அன்னை
கொஞ்சம் தள்ளிக்கணும்- கடவுளைக் கண்டேன்
கவலை இல்லாத மனிதன்- கவலை இல்லாத மனிதன்
பிறக்கும் போதும்- கவலை இல்லாத மனிதன்
ஒன்னுமே புரியலே உலகத்திலே- குமாரராஜா
கோவா மாம்பழமே-மாமன் மகள்
தந்தனா பாட்டுப்பாடணும்-மகாதேவி
பம்பரக் கண்ணாலே-மணமகன் தேவை
குங்குமப் பூவே-மரகதம்
தடுக்காதே..என்னைத் தடுக்காதே-நாடோடி மன்னன்
பொறந்தாலும் ஆம்பளயா -போலிஸ்காரன்மகள்
ஹலோ மை டியர்-புதையல்
நான் ஒரு முட்டாளுங்க-சகோதரி
ராக் அண்ட் ரோல்-பதி பக்தி
தாங்காதம்மா தாங்காது-செந்தாமரை
ஒன்றக் கண்ணு டோரியா-வாலிப விருந்து
எப்போ வச்சுக்கலாம்-பந்த பாசம்
கண்மணிபாப்பா-தட்டுங்கள் திறக்கப்படும்
காதல் என்பது எதுவரை- பாத காணிக்கை

சந்திரபாபு..கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜிக்கு..'ஜாலி லைஃப் ஜாலி லைஃப்'என்ற பாடலும்..பெண் படத்தில் எஸ்.பாலசந்தருக்கு 'கல்யாணம்' பாடலும் பின்னணி பாடியுள்ளார்.

சந்திரபாபு.. எம்.ஜி.ஆர்.,நடிக்க மாடிவீட்டு ஏழை என்ற படம் எடுத்தார்.அப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் எம்.ஜி.ஆர்., தன் ஒத்துழைப்பைக் கொடுக்காததால்..படத்தை சந்திரபாபுவால் முடிக்க முடியவில்லை.அவர் மாடி வீடு போய் ஏழையானார்.கவலையுள்ள மனிதன் ஆனார்.

இதனிடையே ஷீலா என்ற பெண்ணை மணமுடித்தார்..ஆனால்..முதலிரவன்றுதான் அப்பெண் வேறு ஒருவரை விரும்பிய செய்தி தெரியவர..பாபு..அவர்கள் இருவரையும் இணைத்தார்.

மண வாழ்விலும் தோல்வி..அதனால் அவருக்கு மது துணையாயிற்று.

''தட்டுங்கள் திறக்கப்படும்' என்று கடைசியில் ஒரு படம் எடுத்தார்..அதில் ஊமை பாத்திரத்தில் நடித்தார்..படம் தோல்வி.

பின் வாழ்விலும்..திரையிலும் அவரால் கடைசிவரை மீளமுடியவில்லை.தன் 48ஆவது வயதில் காலமானார்.

ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்

விழுதுகள் (கவிதை)
அவனுக்கு அவன்மீதே

ஆத்திரம்

நாம் இருவர்

நமக்கு இருவர் - மறந்து

வீங்கிய வயிறுடன்

வீட்டினுள் மணவாட்டி

முத்தாய் மூன்றாவது

முளையிலேயே கிள்ளிடணும்

இல்லையேல் முடியாது

இனிதாய் வாழ்ந்திட

இரவு முழுதும் மனப்புயல்

இடி மழையோ வெளியே

மறுநாள் புயலில்

மரங்கள் பல சாய

ஆலமரமோ சாயவில்லை

ஆதாரம் விழுதுகளே..

வருந்திய மனதில்

வந்தது மகிழ்ச்சி

Saturday, October 10, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 3

1954ல் வந்த படங்கள்

மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.

அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் மலைக்கள்ளன்.கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.


அம்மையப்பன்..எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்

1956ல் வந்த படங்கள்

ராஜாராணி..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.

ரங்கோன் ராதா...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகல்

திண்ணை தூங்கி பண்டாரம்
திருவோடு ஏந்தும் பரதேசி
தெருவில உருளும்
திருப்பதி கோவிந்தா..கோவிந்தா
இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு
உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்
என்றும் எதிலும் பொதுநலம்


1957ல்
புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம்


புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா

மனம் என்னும் குரங்கு..


நம் மனம் இருக்கிறதே..அற்புதமான ஒன்று..

ஒரு செயலை செய்யக்கூடாது என்று எண்ணுவதும்..அதுதான்..செய்வதும் அதுதான்..செய்து முடித்தபின்..ஐயோ அப்படி செய்திருக்க வேண்டாமே என்று புலம்பச் சொல்வதும் அதுதான்.

நாம் ஒரு செயலைச் செய்து விட்டு...நான் அதைச் செய்யவில்லை என்று சொல்லவைப்பதும் அதுதான்..ஆனால்..செய்தது நாம் என்பதை அதனால் மறந்தோ..மறைத்தோ விட முடியாது.அதைத்தான் நாம்..மனசாட்சி என்கிறோம்.

நீதிமன்றங்களிலும் இப்போதெல்லாம்..சாட்சிகளிடம்..'சத்தியமா சொல்றேன்'னு முதல்லே சொல்லச் சொல்றாங்க. வள்ளுவரும் 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க' என்கிறார்.

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்..என்பது அவ்வை மொழி.

மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்கிறார் ஒரு பாடலில் கவியரசு.

மீண்டும் வள்ளுவனுக்கே போகலாம்..

எந்த ஒன்றை செய்வதானாலும்..மனம் சொன்ன உடனே செய்திடாதே..அப்படிசெய்துவிட்டு..பிறகு அதைப் பற்றி யோசிப்போம் என எண்ணாதேஅது உனக்கு இழுக்கை ஏற்படுத்தும்..அவப் பெயரை உண்டாகும்..நாம் செய்த செயலை எண்ணி நாமே வெட்கித் தலை குனிவோம்..நானா இப்படி செய்து விட்டேன்..என கூனிக் குறுகுவோம்..மீண்டும்..நண்பர் வட்டத்தில் எப்படி வலம் வருவோம் என்று அலைபாயும் அதே கேடுகெட்ட மனம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

மனம் என்னும் குரங்கை கட்டவிழ்த்து விடாதீர்கள்.அடக்கி ஆளுங்கள்..

கடந்த சிலநாட்களாக நாட்டில் நடந்த வரும் புவனேஸ்வரி விவகாரத்தில்..நடைபெற்ற பத்திகைகளின் செயலில் ஆகட்டும்..பின் உணர்ச்சிவசப்பட்டு..நமக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என எண்ணி..என்ன பேசுகிறோம் என எண்ணாமல் பேசிய நடிக,நடிகையர் விவகாரத்தில் ஆகட்டும்..மனம் போன போக்கில் நடந்ததால் ஏற்பட்ட செயல்கள் இவை.சற்று யோசித்து செயல் பட்டிருந்தால்..இரு தரப்பும் சமரசமாக முடிந்திருக்க வேண்டிய செயல் இது.

ரோசா..சுந்தர் விவகாரத்திலும்..மனம் என்னும் குரங்கு சொன்னதை ஒரு கணம் யோசித்திருந்தால் ..அந்த மனத்தை அடக்கிவைத்திருக்கலாம் ரோசா..

ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்?

Friday, October 9, 2009

சமூகம்

மல்லிகை மேனி
பன்னீர்ப்பூ பார்வை
குவளைக் கண்
தாமரை முகம்
தேன் சொட்டும் மலரிதழ்
அல்லி மொக்கு மார்பு
பூந்தளிர் இடை
இப்படி நீ பூவானதால்தான்
கசக்கியும் எறியமுடிகிறது
சமுதாய சாக்கடையில்

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (9-10-09)

பொருளாதார மந்தத்தால் பில்கேட்ஸின் கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய்தானாம்.முந்தைய ஆண்டு வருமானத்தை விட இது 35 ஆயிரம் கோடி குறைவாம்.

2)கரும்பில் கோணல் முடிச்சுகள்..எவ்வளவு இருந்தாலும்..அதைக் கடித்துத் துப்பி அதிலுள்ள சுவையை அனுபவிக்கிறோம்.அதுபோலவே வாழ்வில் வரும் சோதனைகளைக் கடந்து வந்தால்தான் அதன் இனிமையை அனுபவிக்க முடியும்.

3)மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்களும்..கல்லூரி பேராசிரியர்களும் துறைசார்ந்த வல்லுநர்களும் மட்டுமே தாங்கள் படித்து வாங்கிய (!!) பட்டங்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.நாமோ கலயாணப் பத்திரிகை முதல் அனைத்திலும் போட்டுக் கொள்கிறோம்.

4)ராஜராஜ சோழன் காலத்திலேயே விவசாயிகளிடம் மூன்றில் ஒரு பங்கு வரி வசூலிக்கப்பட்டது.அதற்கு முன்பு ஆறில் ஒரு பங்கு வரியாம்.அப்படி வசூலித்த வரிப்பணத்தில் தான்..மக்களுக்கு கோவில் கட்டுவது போன்ற வேலைகளைக் கொடுத்து ஊதியம் கொடுத்தானாம்.

5)இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அமுல் செய்யப்பட்ட பிறகு பத்னான்கரைக் கோடிக் குழந்தைகள் பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாம்..(ஆமாம்..இந்த புள்ளிவிவரம் எப்படி எடுக்கப்பட்டது?)

6)இந்த வார அரசியல்வாதிக்கான் ஜோக் சொல்லி விருது பெறுபவர் மருத்துவர் ஐயா ராமதாஸ்.அவர் சொன்னது
'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.

7)ஒரு ஜோக்

ஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க?
காலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை

Thursday, October 8, 2009

அந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்

நம் வலைப்பக்கம் அதிகம் படிக்கப் பட வேண்டும்..நிறைய பின்னூட்டங்கள் வர வேண்டும்..என்றெல்லாம் ஆசைப்படாத பதிவர்களே இருக்க முடியாது.அதுவும் பிரபல/மூத்த பதிவர்கள் பின்னூட்டங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அதேபோல..நமக்கு வரும் follwers அதிகரிக்க அதிகரிக்க..நம் ஆனந்தம் எல்லை மீறுகிறது.அதுவும் பிரபல பதிவர் நமக்கு ஃபாலோயர் ஆனால்..!!!!

ஆனால்..அப்படி ஆனந்தப்பட்ட எனக்கு அதிர்ச்சியும்..ஏமாற்றமுமே ஏற்பட்டது.

என் வலைப்பக்கத்திற்கு..மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பிரபல பதிவர்கள் ஃபாலோயர்ஸ் ஆனார்கள்..இவர்களெல்லாம்..இணையதளத்தில்..எவ்வளவு நாட்களாக இருக்கிறார்கள்..இவர்கள் மேல் மதிப்பும்..மரியாதையும் கொண்டேன்.

ஆனால்..அவர்கள் மீதான மதிப்பு..இவ்வளவு விரைவில் அழியும் என எண்ணவில்லை.

முதல் பதிவர்..அவர் புகைப்படம் என் வலைப்பூவின் முகப்பில்..இருந்தவரை ஃபாலோயராக இருந்துவிட்டு..அது மறைந்ததும்..தன் பெயரை டெலிட் செய்து விட்டார்.

எல்லோரும் அப்படியிருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன்..ஆனல்..அடுத்த சில நாட்களில் மற்றொருவர் இதே போல செய்தார்.

இரு தினங்களுக்கு முன்னர்..மீண்டும் ஒருவர் இதே போல கழண்டுக்கொண்டார்.

அவர்கள் ஃபாலோயராக இருப்பதும்..இல்லாததும் அவர்கள் விருப்பம்..ஒருவேளை..நம் வலைப்பூவின் தரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம்..ஆனால்..சரியாக அவர்கள் முகம் முகப்பில் மறைந்ததும் தான்..கழண்டுக் கொண்டுள்ளார்கள்..அவர்கள் விளம்பரப் பிரியர்கள் என்ற எண்ணத்தை இது தோற்றுவிக்கிறது.அதற்கு இ.வா.,க்கள் நாமதானா கிடைத்தோம்.

அவர்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும்..மரியாதையும் சென்றுவிட்டது.

நாகரிகம் கருதி..அவர்கள் பெயரை நான் குறிப்பிடவில்லை..இப்பதிவு கண்டதும்..மீண்டும் இணைவார்கள் என்றால்..அவர்கள் பெயரை நான் டெலிட் செய்து விடுவேன்..

இது உங்களுக்கும் நடந்திருக்குமேயானால்..தமிழ்மணம்,தமிழிஷ் இரண்டிலும் ஓட்டளியுங்கள்

திருநங்கையர்கள்


ஒன்பது,பொட்டை,அலி ,பேடி,அரவாணி என்றெல்லாம்..மனம் புண்படுமே என்றும் நினைக்காமல் பரிகசித்துக் கொண்டிருந்த சமுதாயம் மாற ஆரம்பித்திருக்கிறது.அவர்கள் அழகாக திருநங்கை என அழைக்கப்படுகின்றனர்.

கண்பார்வை சரியில்லாவிடின் கண்ணாடி அணிகிறோம்..இதைப் பெரிய குறையாக சொல்வதில்லை.

..உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ..அதிகரித்தாலோ..அதை இன்சுலின் மூலம் சரி செய்கிறோம்..

ரத்த அழுத்தம் உயர்ந்தாலோ..குறைந்தாலோ ஈடு செய்ய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம்..

இவற்றைப் போலத்தான் உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு...இது..

பிறப்பால் ஆண்களாகவும் பின் தம்மைப் பெண்களாக உணர்ந்து வாழ முற்படும் மூன்றாம் பாலினம் இவர்கள்.சில Biological மாறுபாட்டினால் இவர்கள் எதிர்பாலினமாக உணர்கிறார்கள்.அதிக மன உளைச்சலை சமுதாயம் இவர்களுக்குக் கொடுத்து வருகிறது.பொது இடங்களில் அவசரத்திற்கு இவர்களால் ஆண்கள் கழிப்பறையையோ, பெண்கள் கழிப்பறையையோக்கூட பயன்படுத்த முடியா நிலை.

திரையுலகில் இவர்களை கீழ்த்தர நகைச்சுவை காட்சிகளில் சித்தரிக்கிறார்கள்.ஈரமான ரோஜா என்ற படத்தில் திரையரங்கு காட்சி ஒன்றில் கேவலமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.இவர்கள் தட்டும் கும்மியும்..உடன் பாடலும்..பல படங்களில் சித்தரிக்கப் பட்டு..எள்ளி நகையாடப் பட்டிருக்கிறது.

இன்று இவர்கள் நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது..சமுதாயத்தில் இவர்களுக்கு சற்று அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.திருநங்கை என..அன்றே சீவக சிந்தாமணியில் சொல்லப்பட்டுள்ள பழந்தமிழ்ச் சொல்லால் அழைக்கப் படும் நிலை.

இந்நிலையில்..சமீபத்தில் வெளிவந்துள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தில்..மீண்டும் அறத பழசான ஈரமான ரோஜா திரையரங்க அருவருப்பான நகைச்சுவை இடம் பெற்றுள்ளது.

ஒரு ஐயர் பாத்திரமோ, நெல்லை மொழி பேசும் பாத்திரமோ, சென்னைத் தமிழோ, மலையாள நகைச்சுவையோ இப்படி எது வந்தாலும்...ரசிக்கிறோம்..தவறில்லை..

ஆனால் சக மனித குறைபாட்டை நகைச்சுவையாக சித்தரிப்பது...வேசி தொழில் செய்து பணம் சம்பாதிப்பது போல..

தணிக்கை அதிகாரிகள்..இனி இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் தயங்காமல் கத்திரிக்கோலை உபயோகிக்க வேண்டும். செய்வார்களா?

Wednesday, October 7, 2009

தேன் குரலோன் ஏ.எம்.ராஜா..


தமிழ்த் திரையில் நடிகர் திலகம்,எம்.ஜி.ஆர்., இருவருக்கும்..அவர்கள் குரல் போலவே பின்னணிப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.

அதேபோன்று..ஜெமினி கணேசனுக்கு..அவர் குரலுக்கு ஏற்ற வகையில் பாடியவர்..ஒருவர் ஏ.எம்.ராஜா..மற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

ஆனாலும்..பாரதிக்கு..செந்தமிழ் நாடென்றபோதினில் பாய்ந்ததாம் தேன்..நமக்கெல்லாம் ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் காதுகளில் தேன் பாய்கிறது.

ராஜா..தேன் நிலவு,ஆடிப்பெருக்கு,கல்யாண பரிசு போன்று பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.நமக்கு மறக்க முடியா அவர் பாடல்களில் சில..

1951ல் சம்சாரம் படத்தில் அவர் திரை வாழ்க்கை ஆரம்பித்தது.சம்சாரம் சகல தரும சாரம்..அவர் பாடிய முதல் பாடல்.

பின்..நம்மால் மறக்க முடியா..'வாராயோ வெண்ணிலாவே..தெரிந்துக் கொள்ளணும் பெண்ணே' போன்ற மிஸ்ஸியம்மா பாடல்களை?

அமரதீபத்தில் "தேன் உண்ணும் வண்டு..'பாடல் (சிவாஜிக்காக பாடியது)

இல்லறமே நல்லறம் படப்பாடல்கள்..'மைனர் லைஃபு ரொம்ப ஜாலி' மற்றும்..'நினைக்கும் போதே..ஆஹா" பாடல்

தனிமையிலே இனிமை காண முடியுமா? ஆடிப்பெருக்கு பாடல்

கலையே உன் வாழ்க்கையின், துயிலாத பெண் ஒன்று ஆகிய மீண்ட சொர்கம் பாடல்கள்

கண்களின் வார்த்தைகள்,ஆடாத மனமும்,அருகில் வந்தாள் ஆகிய களத்தூர் கண்ணம்மா பாடல்கள்.

குலேபகாவலியில் புரட்சித் தலைவருக்கு பாடிய 'மயக்கும் மாலை' பாடல்..அலிபாபாவில்..'மாசில்லா உண்மைக்காதலே' பாடல்.

ஒஹோ எந்தன் பேபி,பாட்டுப்பாடவா..ஆகிய தேன்நிலவிற்கான பாடல்கள்.

சிங்கார பைங்கிளியே பேசு..மனோகராவிற்காகவும்..'சிற்பி செதுக்காத' எதிர்ப்பாராதது படத்திற்கான( நடிகர் திலகத்திற்காக )பாடல்கள்.

பார்த்திபன் கனவில்..'இதய வானில் உதய நிலவே' பாடல்.

விடிவெள்ளிக்காக 'கொடுத்துப் பார்..பார்"(சிவாஜிக்காக)

கல்யாண பரிசு அனைத்து பாடல்களும்...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...எல்லாப் பாடல்களுமே தேன்..

இவரது மனைவி பின்னணைப் பாடகி கிருஷ்ணவேணி என்னும் ஜிக்கி..இவருடன் சேர்ந்து ராஜா பாடிய டூயட்டுகள் அனைத்தும் ஹிட்.

ஏ.எம்.ராஜா 1989ல் திருநெல்வேலியில் ஒரு கச்சேரிக்குப் போகும்போது..வள்ளியூர் ரயில் நிலயத்தில் வண்டி நின்றபோது இறங்கியவர்..கிளம்புகையில் ஏறும்போது வழுக்கி விழுந்து ரயில் ஏறி மரணத்தைத் தழுவினார்.

ஆனால்..தமிழிசை உள்ளவரை ராஜாவும் வாழ்வார்.

வாய் விட்டு சிரியுங்க..

என் கனவிலே சிம்ரன் கல்யாணத்திற்கு முன்னெல்லாம் வந்துக் கிட்டு இருந்தாங்க
இப்ப யார் வர்றாங்க
அதற்கான தேர்வு நடத்திக் கிட்டு இருக்கேன்

2)எங்க வீட்டு நாய் காணாமப் போயிடுச்சு...
அடடா..பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறதுதானே
என் நாய்க்கு படிக்கத் தெரியாதே

3)அந்த இலக்கியவாதியின் படைப்புகள் எல்லாம் அற்புதமானவை
எதையாவது படிச்சிருக்கியா
அதுக்கு முன்னாலே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு

4)என் மூளையை இன்ஷ்யூர் பண்ண முடியுமா?
சாரி சார்..இல்லாததை எல்லாம் பண்ண முடியாது

5)ராமதாஸ் தன் மகன் அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி ஏன் கேட்கிறார்..
அப்போ தான் தொகுதி பக்கம் வரலேன்னு மக்களால குறை சொல்ல முடியாது

6)முட்டாள்னு திட்டினியே..யாரு..என்னையா
சேச்சே..இந்த உலகத்தில உன்னைத் தவிர வேற முட்டாளே இல்லையா..என்ன..

என்றும் நீ என்னோடுதான்


மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்

சற்றேனும் அறிவாயோ?

பாலும், பழமும், தேனுமென

குழந்தை பருவத்தில்

கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை

மகிழ்ச்சிக் கொண்டேன்!

வாலிப வயதிலோ..விரைவு உணவென

கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி

குப்பைக்கூடையாகினாய்..

உயிர் குடிக்கும் மதுவை

உள்ளே செலுத்தியவாறு

கல்லைத் தின்னாலும்

செரிக்கும் வயதென

செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..

எனக்கும் மூப்புண்டு அறிவாயா?

அத்தனையும் தாங்கும்

அடித்தளம் முற்றும் அழிந்தது

மரண அழைப்பு வந்தது

புற்றென பெயரில்..

சென்றிடுவோம் ..வந்திடு

Tuesday, October 6, 2009

அண்ணாவும்..பெரியாரும்..


எனது அண்ணா பற்றிய பதிவில்..நண்பர் Peer...கீழ்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்..

///Peer said...

//பெரியார்..மணியம்மையைக் காட்டி வெளியே வந்த அண்ணா..//காரணம் சரியா?///


அவருக்கு அந்த பதிவில் சரியான விளக்கம் அளிக்காததுபோல் உணர்ந்ததால் இப்பதிவு

சுயமரியாதையின் தாக்கம் திராவிட கழகத்தில் இருந்தது.அதன் வெளிப்பாடாக பகுத்தறிவு வாதம் மக்களிடையே வைக்கப்பட்டது.இக்கட்சியில்..தலைவர்,தொண்டர் என்றெல்லாம் கிடையாது.தந்தை,அண்ணன்,தம்பி என உறவுமுறையிலேயே அனைவரும் அழைக்கப்பட்டனர்.

கட்சியில் ஈ.வெ.ரா.,வை பெரியார்..தந்தை பெரியார் என்றும்..மூத்த உறுப்பினரான அண்ணாதுரையை அண்ணா என்றும் அழைத்தனர் தொண்டர்களான தம்பிகள்.அண்ணாவின் உழைப்பு கழகத்தை மக்களிடம் செல்வாக்குப் பெறச்செய்தது.

பெரியாருக்கும்..அண்ணாவிற்கும்..பாசப்பிணைப்பு இருப்பினும்..கருத்து வேறுபாடுகளும் இருந்தன.

புரட்சிக் கவி பாரதிதாசனுக்கு ..பாராட்டு விழா நடத்தி..பொற்கிழி வழங்கினார் அண்ணா..இதை பெரியார் விரும்பாததுடன்..அவ்விழாவையும் புறக்கணித்தார்.மேலும்..மாணவர்..இளைஞர்கள் வளர்ச்சியில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் அண்ணாவிற்கு இருந்தது.

திராவிட கழக உறுப்பினர்கள் கருமை நிற சட்டை உடுத்த வேண்டும் என்றார் பெரியார்..அண்ணாவிற்கு அதில் உடன்பாடில்லை.போராட்டத்தில் ஈடுபடும் நேரம் மட்டும்..கருமை சட்டை அணிந்தால் போதும் என்றார்.ஆனாலும்..கட்சியின் தலைவருக்குக் கட்டுப்பட்டு..கருப்புச்சட்டை அணிந்தார் அண்ணா.

நம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை..துக்கநாளாக அனுசரிக்க பெரியார் சொன்னது..அண்ணாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.ஆகஸ்ட் 15ம் நாள்..துக்கநாள் அல்ல மகிழ்ச்சி நாள் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.இவ்வறிக்கை..கட்சியில் புயலை உருவாக்க..கட்சிப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கினார்.

பின் மீண்டும்..அண்ணாவும்..பெரியாரும் இணைந்தனர்.

1949 மே மாதம் 16ஆம் நாள் ராஜாஜியை..திருவண்ணாமலையில் சந்தித்து பேசினார் பெரியார்.மாறுபட்ட கருத்துடைய ராஜாஜியிடம் ..என்ன பேசினார் என அண்ணா வினவ..பெரியார் பதில் கூறவில்லை.ஆனால் ஜூலை மாதம் பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.இருப்பினும்..பெரியாருக்கு எதிராக கண்டனங்கள் வேண்டாம் என்றார்.

கருத்து வேறுபாடு முற்றிய நிலையில்..எதிர்காலம் பற்றி ஆலோசிக்க 1949 செப்டெம்பர் 17 ஆம் நாள் அண்ணா கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.அப்போதுதான் தி.மு.க., பிறந்தது.

பின்னரே..
தி.க., தி.மு.க., இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்.
தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் சொல்லப்பட்டது
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றது
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றது
பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்..தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றது.
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு என்றது...--எல்லாம்.

Monday, October 5, 2009

ஆனந்தம்


மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேற்றப் போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச் சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக் கண்ணீர் அல்ல

அண்ணாவும்..வினவு பதிவும்


அண்ணாவைப் பற்றி வினவு ஒரு பதிவு எழுதியுள்ளாரே..அப்பதிவிற்கு..ஏன் யாருமே எதிர் பதிவிடவில்லை என நோ எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு..வினவு பதிவின் லிங்கும் கொடுத்திருந்தார்.

ஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.

ஆனால்..அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால்..அண்ணா சிறந்தவரே!

பெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா..கடைசிவரை பெரியாரை மதிக்கத் தவறியதில்லை.அரசியலுக்கென ஒரு சில கொள்கைகளை சற்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.கடமை,கண்னியம்,கட்டுப்பாடை அண்ணா மீறியதில்லை.தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததும்...நாட்டில் விஷக்கிருமி பரவ ஆரம்பித்து விட்டது என்று சொன்னவரிடம் கூட இல்லம் தேடிச் சென்று ஆசி பெற்றவர் அவர்.

அண்ணாத்துரை முதலியார் என்றவர் அவர்..என்ற குற்றச்சாட்டிற்குப் போனால்...ஒவ்வொன்றும் அந்த காலகட்டங்களில் சரியாகத்தான் போயிருக்கும்..எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார்..
முந்தைய தலைமுறை..சட்டென மாற்றிவிட முடியாது..ஆகவே தானும் சற்று வளைந்து கொடுத்துத்தான் ஆகவேண்டிய நிலை.அவ்வளவு ஏன்..காமராஜ நாடார்,ராஜகோபாலாச்சாரி ஆகியவருடன் அரசியல் புரிந்த தருணம்.பெரியாரையும்..அப்போது 'நாயக்கரே' என்று அழைத்தவர்கள் உண்டு.

இவ்வளவு பேசுகிறோமே..இப்போது நடப்பது சாதி அரசியல் இல்லை என்று சொல்ல முடியுமா.இன்னமும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணைவேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தானே!

அடுத்து சம்பத் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தது..இது கட்சிகளுக்கு புதிதல்ல..காங்கிரஸிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து வென்றவர் எவர்.அது போல தாய்க்கழகத்திலிருந்து..பிரிந்து கட்சி ஆரம்பித்து வெற்றியடைந்தவர்கள் யார்? ஒரே ஒரு எம்.ஜி.ஆர்., அவ்வளவுதான்..மற்றவர்கள்..அவ்வப்போது நிலைமைக் கேற்ப கட்சியைஆரம்பித்து பின் கலைத்து ..ஏதேனும் திராவிடக் கட்சியுடன்..பதவிக்காக தன்மானம் இழந்து இணைந்தவர்கள்.

அதேபோல..1967ல் ஆட்சியை..அவர்களே..எதிர்ப்பாராமல் பிடித்ததும்..கட்சியின் தலைவரே..முதல்வர் பதவி ஏற்றது தவறல்ல..மேலும்..தி.மு.க.,வில் அப்போது அனைவரும் இளரத்தம்..அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி..அண்ணா மேடையிலேயே..பதவிக்கு வந்தால்..எனக்கு காவல்துறை மந்திரி பதவியைத் தாருங்கள்..காவல்துறையை பழிவாங்க வேண்டும் என்றார்.அப்படிப்பட்ட தருணத்தில் அனுபவமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்?

கடைசியாக..அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

வாய் விட்டு சிரியுங்க..

1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!

3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க

5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.

Sunday, October 4, 2009

படித்ததும்...கேட்டதும்...

1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது


2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.

3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன

Saturday, October 3, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 2

முதல் பதிவு

1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.

'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'

அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.

மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.

52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'

என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி

53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட்
'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.

பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி

திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்

1953 ல் வந்த படம் 'நாம்'

ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.

இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.

1954ல் வந்த படங்கள் அடுத்த பதிவில்..

Friday, October 2, 2009

சவம்

ஐஸ் வைத்தால்
காரியம் ஆகுமாம்
யார் சொன்னது?
அவன் அதுவானதும்
ஐஸ் வைக்கப்பட்டதில்
அவன்
காரியம் தான்
ஆயிற்று
இவர்கள் செலவில்

காந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்..

பொங்கலுக்கு விடுமுறை..சரிதான்..பொங்கல் சாப்பிடலாம்..கரும்பு கடிக்கலாம்,ஊர் சுற்றலாம்

கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாம்..சரி..முறுக்கு..சீடை கொறிக்கலாம்..

விநாயகர் சதுர்த்தி விடுமுறையாம்..கொழுக்கட்டை சாப்பிடலாம்

சரஸ்வதி பூஜை விடுமுறையாம்..வடை,பாயசம்,சுண்டலுடன் சாப்பாடு நிச்சயம்

தீபாவளி விடுமுறை..இனிப்புகளுடன்..பட்டாசு கொளுத்தி மகிழலாம்..

காந்தி ஜெயந்திக்கு பாழாய்ப் போன விடுமுறையாம்..

யாருக்கு வேண்டும்..டாஸ்மாக் கூட திறக்க மாட்டான்..விடுமுறையை கொண்டாட.

Thursday, October 1, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (2-10-09)

உடல் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கட்டாயம் யோகா தியானம் செய்ய வேண்டும்.இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி,சரியான தூக்கம்,சரியான ஓய்வு ஆகியவை மிகவும் அவசியம்.இவற்றை கடைபிடித்தால் நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார்

2)மனோரமாவிற்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாம்.(ஆசை யாரை விட்டது).,ஆகவேதான் தீடீரென தற்போது சமூக சேவை என இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

3)நாடு முழுதும் பொது இடங்களில் கோவில்கள்,மசூதிகள்,சர்ச்சுகள்,குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தைச் சேந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட உச்ச நீதிமன்றம்..தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

4)சீனா உருவாக உறுதுணையாக இருந்த வெளிநாட்டு தலைவர்கள் பட்டியலில் முன்னால் பிரதமர் நேருவின் பெயரும்..ரவீந்திரநாத் தாகூர் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.சீனாவில் கம்யூனிஸப்புரட்சி முடிவடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை 60 வெளிநாட்டவர் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஆனால் இதே நட்புறவை 1962ல் அவர்களே வலிய முறித்துக் கொண்டது குறித்து எதும் சொல்லவில்லை.

5)உலக பொருளாதார நெருக்கடியால் பல வெளிநாட்டு இளைஞர்கள் வேலை தேடி சீனாவிறகு படையெடுக்கின்றனராம்.அங்கு ஆங்கிலம் கற்பிப்பது,கம்யூட்டர் துறை ஆகியவற்றில் பணிபுரிகின்றனராம்.
இப்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பொறுத்தவரை சீனா பாதுகாப்பான இடமாம்.

6) ஒரு கொசுறு ஜோக்

நேருவிற்கும்..படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை என்று சோனியா கூறியுள்ளார் _ செய்தி
ஒருவேளை அவர் ஸ்மிதா படேலை எண்ணி சொல்லி இருப்பாரோ என்னவோ

கொஞ்சி விளையாடும் தமிழ் - 1

ஒருமுறை சங்கரன் பிள்ளையின் மனைவி ஊருக்குப் போயிருந்தாள்..சங்கரன் பிள்ளை..காலை உணவிற்காக ஒரு சட்டியில்..மாவைப் போட்டு வறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் நண்பர் ஒருவர் வந்தார்..என்ன சங்கரன் 'ஏதோ மாவை வறுக்கறீர்கள்' என்றார்..

அதற்கு 'சட்டியில் மா வறுக்கும் தொழில் சங்கரன் பிள்ளைக்கு அன்றி வேறு யாருக்கு உரியது?' என்றார் இரு பொருள்பட பிள்ளை அவர்கள்.

முதல் பொருள்..இந்த சங்கரன் பிள்ளை மா வறுத்துக் கொண்டிருக்கும் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

இரண்டாம் பொருள்..
சட்டியில்- சஷ்டி திதியில்
மா வறுக்கும்- மாமரம் போல நின்ற சூரபத்மனை வதைக்கும்
தொழில்-செயல்
சங்கரன் பிள்ளைக்கன்றி-சங்கரன் பிள்ளையான முருகனுக்கு அன்றி
வேறு யாருக்கு உரியது-வேறு யாருக்கும் இல்லை

என்பதாம்.

இப்படி அந்த நாட்களில் அனைவரிடமும் தமிழ் கொஞ்சி விளையாடியது..

ஆனால் இன்று..தமில் விலையாடுகிரது.