Friday, January 30, 2009

Flash News

பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ்..உடல் நலக்குறைவால் இன்று மரணமடந்தார்.
நாகேஷ்...

ரயில்வேயில் வேலை..

அதை உதறிவிட்டு திரையுலகில் நுழைந்தார்.

நீர்க்குமிழி,எதிர் நீச்சல்,யாருக்காக அழுதான்.சர்வர் சுந்தரம்.ஆகிய படங்களில் கதானாயகனாக நடித்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை செல்லப்பா,எதிர் நீச்சல் மாது, தில்லானா மோகனாம்பாள் வைத்தி...இப்படி சொல்லிக்கோண்டே போகலாம்..அவர் நாகேஷ் என்பதை மறந்து அந்த பாத்திரங்களாகவே மாறிய படங்களை.

மண்டபத்தில்...தருமி என்ற பாத்திரம் இருந்திருந்தால் கூட..இப்படித்தான் இருந்திருக்கும்..போல என எண்ணும்படியான நடிப்பு..திருவிளையாடலில்.நடிகர்திலகத்தையே தூக்கி சாப்பிடும் நடிப்பு.

அந்த பிறவி கலைஞனை..இழந்து தவிக்கிறது திரை உலகம்.

அவரை இழந்து தவிக்கின்றனர்..அவரது மகன்கள்.

அவரை இழந்து தவிக்கின்றனர்..அவர்பால் அன்பும்..பாசமும்..கண்ட சக கலைஞர்களும்...நாமும்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(31-1-09)

1.விவேகானந்தர் சிறுவனாய் இருந்த போது..ஒரு நாள் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டார்.பந்தயத்தில் அவரே எல்லோருக்கும் முன்னால் வந்துக் கொண்டிருந்தார்.தனக்குப் பின்னால் ஒரு சிறுவன் ஓடி வருவதைக் கண்ட அவர் 'சட்' டென வேகத்தைக் குறைத்து..அவனை முந்தி ஓடச் செய்தார்.தனக்கு கிடைக்க வேண்டிய முதல் பரிசை...தான் அடைவதைக் காட்டிலும்..இன்னொருவர் பெறுவதைக் கண்டு மகிழ்வதில்தான் ஆனந்தம் இருப்பதாகக் கூறினார்.(தன்னலம் கருதாமல் பிறர்க்கு உதவும் போது ஏற்படும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை)

2.ஆபிரகாம் லிங்கன் ஏழ்மையான நிலையிலிருந்து ஜனாதிபதி ஆனவர்.மரக்குடிலிலிருந்து (வெள்ளை) மாளிகைக்கு வந்தவர் என்று அவரை வர்ணிப்பார்கள்.ஒபாமாவும் அப்படித்தான்.சாதாரண நிலையிலிருந்து அதிபர் ஆனவர்.வெள்ளை மாளிகையில் முதல் கறுப்பர் என வர்ணிக்கப்படுபவர்..அதெல்லாம் சரி...லிங்கன் பதவி எற்புக்கும் 833 கோடி செலவானதா...தெரியவில்லை.

3.மும்பை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று..பிபாசாபாசு அரைமணி நேரம் நடனம் ஆடினார்.அதற்கு அவர் வாங்கிய தொகை ஒன்றரை கோடியாம்.

4.சீன நாட்டு தேசியக் கொடியில் 'gate of heavenly peace' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

5.நண்பர் 1 -(தனக்குத்தானே பேசிக்கொள்பவரிடம்)ஏன் நீங்கள் தனக்குத் தானே பேசிக் கொள்கிறீர்கள்
நண்பர்2 - என் பேச்சைக் கேட்க நான் ஒருவனாவது இருக்கிறேனே

6.ஒரு கவிதை-
உடல் பசி தீர்த்தவளின்
வயிற்றுப் பசி தீர்த்தேன்
அன்புடன் தந்தாள்
எய்ட்ஸை

தமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:

48 மணி நேர போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு இன்றும் வழமைபோல பொதுமக்கள் மீதும், சந்தைகள், மருத்துவமனைகள் மீதும், தொண்டு நிறுவனங்கள் மீதும் கண்மூடித்தனமாக சிறிலங்க இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாற்றியுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருவதற்காக 48 மணி நேர போர் நிறுத்தத்தை சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.

ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பு, தமிழகத்தையும், உலகையும் ஏமாற்ற சிறிலங்க அரசு நடத்தும் நாடகம் என்று குற்றம் சாற்றியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ப. நடேசன், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டப் பின்னர் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இன்னமும் தங்களது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதலை சிறிலங்க இராணுவத்தினர் நிறுத்தவில்லை என்று கூறியுள்ள நடேசன், “சிறிலங்க அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது உலகத்தை ஏமாற்றுவதற்கும் தமிழகத்தின் ஏழு கோடி தொப்புள் கொடி உறவுகளின் எழுச்சியை மழுங்கடிப்பதற்கான சூழ்ச்சியின் வெளிப்பாடே” என்று கூறியுள்ளார்.

நிரந்தர போர் நிறுத்தத்திற்குத் தயார்!

உடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைத்துள்ள மருத்துவமனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளதென கூறியுள்ளார்.

“அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும் அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்று தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் நம்புகின்றனர் என்று தனது அறிக்கையில் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.


நன்றி வெப் துனியா

Thursday, January 29, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்
என்ன சொல்றீங்க
சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்

2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு
நண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.

3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு

4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே

5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்
தொண்டர்-தலைவா...அரசியல்லே இருந்து விலகப்போறீங்களா?

6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு

சிதம்பரத்தின் மவுசு குறைகிறதா....

மத்தியில்...நிதி அமைச்சராக..கடந்த நான்கு ஆன்டுகளிலும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் சிதம்பரம்.கடந்த சில மாதங்களாக பணவீக்கம் இரட்டை எண்னில் இருந்ததால்...விலைவாசிகளும் உச்சத்திற்கு சென்றன.ஊடகங்கள்..பணவீக்க சிதம்பரம் என்று கூட கிண்டல் செய்தன.இன்னிலையில்..அவரிடமிருந்து நிதி இலாகாவை எப்படி தூக்குவது என அரசும் யோசித்து வந்தது.

மும்பை..வெடிகுண்டு நிகழ்ச்சிக்கு பிறகு..(25-11-08 ) உள்துறை அமைச்சர்..சிவராஜ் படீல் பதவி..விலக..காத்திருந்த மத்திய அரசு...சிதம்பரத்தை..நிதியிலிருந்து..ஹோம்(!!!) அனுப்பிவிட்டது.
நிதிப்பொறுப்பை..மன்மோகன் சிங்கே ஏற்றார்.

மன்மோகன் சிங்..உடல்நிலை சரியில்லா நிலையில்..அடுத்த மாதம்..இடைக்கால பட்ஜெட்..(தேர்தல் வருவதால்) தாக்கல் பட உள்ளது.ஏற்கனவே..வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி..வேலைப்பளு அதிகம் உள்ளநிலையில்..நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளார்.இருமாதங்கள் முன்புவரை..நிதி இலாகாவை ஏற்றுவந்த சிதம்பரமே நிதி அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம்.ஆனால்..சோனியாவிற்கு..சிதம்பரத்தின்..திறமையில் நம்பிக்கை இன்மை வந்து விட்டதா? என்று தெரியவில்லை.

தமிழன் உயிர் பற்றி கவலையில்லை....

அன்று...தமிழுக்காக ...உயிர் தமிழுக்கு..உடல் மண்ணுக்கு..என்றவாறே..உயிர் நீத்த..சிவலிங்கம்..அரங்கனாதான்...போல இன்று..உயிர் தமிழனுக்கு என உயிர் நீத்த முத்துக்குமரா...உன் தியாகத்தை என்ன வென்று சொல்ல...இந்த பதிவிடும் போது...எழுத்துக்கள் தெரியவில்லை...கண்களில் கண்ணீர்த்திரை..

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்க..தமிழனின் ஆதரவு தேவை..ஆனால்..தமிழன் உயிர் பற்றி கவலையில்லை.

முத்துக்குமரா! போய் வாய்யா..போய் வா...

உனக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.

Wednesday, January 28, 2009

விவேக் தகுதியானவர்தானா...

விவேக்...தமிழ்த் திரையுலகில்..சின்னக்கலைவாணர் என சொல்லிக் கொள்பவர்.

கலைவாணர் காமெடியில்..அருவருப்போ,ஆபாச வசனங்களோ,இரட்டை அர்த்தம் வரும் சொற்களோ வந்ததில்லை.கலைவாணரின் வசனம் ஆபாசம் என்று திரையில் அதை சென்சார் கட் செய்து..வெறும் வாயை மட்டும் அசைத்ததில்லை.பகுத்தறிவு கொள்கைகளையும்...பிறர் மனம் நோகாமல்...இனிப்பு தடவிய காப்சூல் போல தந்தவர்.விவேக் காமெடியில் ஆபாசம் தவிர வேறு இல்லை.

விவேக்...பகுத்தறிவு கொள்கைகளுக்காக கிடைத்த விருது..பத்மஸ்ரீ யாம்.அவரே சொல்லிக் கொள்கிறார்.எம்.ஆர்.ராதா சொல்லாததையா இவர் சொல்லிவிட்டார்.அவரை அப்படியே காபி அடித்து..அவர் பாணியிலேயே பேசினால்...போதுமா...உயர பறந்தாலும் குருவி...பருந்தாகுமா.

சமீபத்திய இவர் படங்களில்..இவர் ஆபாசமாக ஏதோ பேசப்போக..ரஜினி வாயைப்பொத்துவார்.(சிவாஜி)

படிக்காதவன்..படத்தில்..அசால்ட் ஆறுமுகமாம்..பெண் வேடம் போட்டு..குளிக்கும் போது..ஐயா..முத்தம் கொடுக்கிறாங்களே..நெருங்கிட்டங்களே..ரேப் பண்ணிடுவாங்களோ..என்றெல்லாம்..காமெடி என செய்துவிட்டு..உச்சக்கட்டமாக..ஜாக்கெட்டை திறந்து...சே...பெண்கள்...தியேட்டரில்...அருவருப்பில்..வேதனையடைகின்றனர்.

நாகேஷ். திறமையில் 25 சதவிகிதம் இவருக்கு இருக்கிறதா? அப்பேர்ப்பட்ட கலைஞனே...சமீபத்தில்..மனம் திறந்து ..தனக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லையே!! என வேதனையுடன் கூறியுள்ளார்.மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது..தனக்கு இன்னும் கிடைக்கவில்லையே...என மனம் புழுங்கினார்.

அவரைவிட...விவேக்..எந்த விதத்தில் உயர்ந்தவர்?

இதிலும் அரசியல் விளையாடுகிறதா?

நான் என்ன சொல்ல வருகிறேன்..என்பது..புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

Tuesday, January 27, 2009

அமெரிக்காவின் நிதி நெருக்கடியும்...வேலையிழப்பும்...

ஒபாமா பதவியேற்றதும் மகிழ்ச்சியில் இருந்த ஊழியர்களுக்கு , சென்ற திங்கள் கறுப்பு திங்களாக அமைந்தது.

அன்று ஒரே நாளில்..70000 ஊழியர்களுக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.

அவற்றில்..சில முன்னணி நிறுவனங்கள் என்பது வேதனையிலும் ..வேதனை.

கேட்டர் பில்லர்,ஃபைசர்,ஹோம் டிப்போ.ஸ்பிரிண்ட் நெக்ஸ்டல் ஆகிய நிறுவனங்களும் இதில் அடக்கம்.

இந்த ஆண்டு ஆரம்பித்து..25 நாட்களில்..இரண்டு லட்சத்திற்கு மேல் வேலை இழந்துள்ளனர்.இதுவரை..பொருளாதார சீர்குலைவால்..26 லசத்திற்கும் மேற்பட்டோர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாம்.

இதன் பிரதிபலிப்பு..யூரோப்..கிழக்கு ஆசிய நாடுகளிலும்..இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார நிலை சற்று வலுவாக உள்ளதால்...நாம் பயப்பட தேவையில்லை..என..பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.

பார்ப்போம்...ஒபாமா எடுக்கப்போகும் நடவடிக்கைகளை.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.

பிரணாப் முகர்ஜி..காலையில் முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் கூறுகின்றன.அவர் இலங்கை செல்லும் முன் அவரிடம் அதைப்பற்றி பேசியதாகக் கூறப்பட்டது.

ஒருவழியாக..பிரதமர் வாக்குறுதியை காப்பாற்றினார் என்று எண்ணியபோது..ராஜபக்சே..எங்கள் அழைப்பை ஏற்றுதான் அவர் இலங்கை வருகிறார் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி அவர்கூறியதாவது
எங்களது அழைப்பை ஏற்றே வருகிறார்!

தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்றே பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சகம், “எங்களது அழைப்பை ஏற்றுத்தான் இன்று பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார். இன்று மாலை அவர் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, அவர்களின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மக்களை விடுவித்துவரும் நிலையில், இரு தரப்பின் நலனை கருத்தில் கொண்டு இச்சந்திப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது.

மற்றுமோர் செய்தி...

காங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் இம்மாதம்29ல் கூடி மக்களவை தேர்தல் குறித்தும்..கூட்டணி பற்றியும் விவாதிக்க உள்ளது. பிரணாப் பயணத்தால்..கலைஞர் மனம் குளிர்ந்து..கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எண்ணினாலும் எண்ணும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.

Monday, January 26, 2009

சென்னை பதிவர் சந்திப்பு..25-1-09

நான் சென்ற முதல் பதிவர் சந்திப்பு..நண்பர் கோவி.யும் சிங்கையிலிருந்து வந்ததால்..தவற விடாமல் சென்றேன்.

முதலில்..எதிர்பாராது..லக்கிலுக்..உங்க நாடக அனுபவத்தை சொல்லுங்க..என சொல்லிவிட...அதற்கு தயாராக போகாத நான்..இன்று சபாக்க்ளும்..நாடகக் குழுக்களும் உள்ள நிலைச் சொன்னேன்.மேலும்..எனது 'சொல்லக்கொதிக்குது நெஞ்சம்' என்ற விருது பெற்ற நாடகம் பற்றி சொல்லி..அதுவும் சாதாரணமாகத்தான் போயிற்று..என்றும்..அதை புத்தகமாக வெளியிட முயன்றும்..பதிப்பாளர்களிடமிருந்து..சரியான பதில் இல்லை என்றும் தெரிவித்தேன்.

உடன் பத்ரி..சரியான மார்கெட்டிங்க் வேண்டும் என்றார். அமைச்சூர் குழுக்கள் நாடகம் போடுவதே சிரமம்...இதில்..மார்கெட்டிங்கிற்கு செலவு பண்ணமுடியா நிலை.

தமிழ் நாடக மேடைப் பற்றி..ஒரு விரிவான பதிவிட உள்ளேன்.

அடுத்து..புத்தக கண்காட்சியில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றி பேச்சு வந்த போது..அந்த இடம் பபாசி இடம்..ஆகவே பிரச்னை பண்ண விரும்பவில்லை..என்றார் பத்ரி.

இந்த சந்திப்பில்..தெரிந்துக் கொண்ட ஒரு விஷயம்...சுனாமி வரும் அறிகுறி தெரிந்ததும்..கடல் கரையை விட்டு..ஒரு கிலோ தள்ளிப் பொய்விடவேண்டும்..என்றும்...மீனவர்கள்..கடலில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் சென்று விட்டால்..பாதிப்பு இருக்காதாம்.சுனாமியில் உழைத்த சுகாதாரத்துறைyai அமெரிக்கா பாராடி..அங்கே கத்ரீனா புயல்,வெள்ளம் வந்தபோது..இவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்
லக்கிலுக்,பத்ரி,அதிஷா,நர்சிம்,வெண்பூ,அக்னிபார்வை,முரளிகண்ணன்,கேபிள் ஷங்கர்,பாலபாரதி,லக்ஷ்மி,டோண்டு,கோவி,புரூனோ..விஜய் ஆனந்த்..(என் நினைவிற்கு வந்தவரை)மற்றும் வந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)

வந்தவர்களுக்கு..கோக்..கொடுக்கப்பட்டது.பின் அதிஷா..அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார்.சந்திப்பு முடிந்ததும்,,அனைவரும்..டீ சாப்பிட்டுவிட்டு கலைந்தோம்.

இந்த சந்திப்பில் ஒரு முக்கிய விஷயம்..அறிந்தேன்..

கூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று.

முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

முதுகு வலி காரணமாக அவதிப்பட்ட முதல்வர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் கருணாநிதிக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கடும் வலியால் அவதிப்பட்டதாகவும், இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலி அதிகமாக உள்ளதால் குறைந்த ஒரு வார காலத்திற்கு முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், வெளியூர் பயணங்கள், பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு வார காலத்தில் முதல்வர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு, அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

Sunday, January 25, 2009

இந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...

இதுவரை..உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..இந்தியாவில் பார்க்க விரும்பிய இடங்களாக..தாஜ் மகால்,ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற இடங்கள் முன்னிலை வகித்து வந்தன.

திடீரென..ஒரு புது இடம் இப்போது..அனைத்து சுற்றுலா பயணிகளையும் பார்க்க தூண்டி வருகிறதாம்.

இதற்கு பிரதம காரணம் 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம்.

ஆசியாவின்..மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாரவி கருதப்படுகிறது.அங்கு வசிக்கும் ஒரு சிறுவனின் கனவு வாழ்க்கையையும்..பரம ஏழையான அவன்..கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம்..கோடீஸ்வரன் ஆவதையும் சொல்லும் படம் இது.குடிசைப்பகுதிகள் முழுவதையும் படம் காட்டுகிறதாம்.அதனால் அப்பகுதிகளை நேரில் பார்க்க மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

இப்பகுதியில் வாழும் 16000 க்கும் மேல் உள்ள மக்கள் பயன்படுத்த 6 டாய்லெட்டுகள் தான் உள்ளதாம்.அதை காணவும் ஆர்வமாம்.(இன்னொருத்தர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை)

தினம் தினம் செத்துப் பிழைக்கும்...இப்பகுதி ஏழைகள் வாழ்வில் படும் துன்பத்தைப் பார்க்க வசதி படைத்தோற்கு எவ்வளவு ஆசை???!!!

Saturday, January 24, 2009

செயலிழந்த நிலையில் கலைஞர்..

இலங்கை தமிழர்களை காப்பாற்ற ஃபெப்ரவரி 15க்குள் தி.மு.க.பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பெருவிழா, சங்க தமிழ் பேரவை சார்பில் நடந்தது.அதில் பெசிய கலைஞர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தன்னால் தான் கிடைத்தது என்பது போல பேசினார்.சோனியா காந்தி 'இதற்கான முழு சிறப்புக்கும்,பெருமைக்கும் உரியவர் நீங்கள்'என்று கடிதம் எழுதி இருந்தார்.இது எனது பேரன்,பெயர்த்திகள் பேணி காப்பாற்ற வேண்டிய பெட்டகம் (???!!!) என்றார்.

அவர் மேலும் பேசுகையில்..'தமிழுக்கு விழா எடுக்கிறோம்..ஆனால்..பக்கத்து நாட்டில்..தமிழ் குழந்தைகள்,தாய்மார்கள் வாழ முடியாமல்..துரத்தப்படுகிறார்கள்.பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய்..வெயிலில் உருகுகிறது..அதை எடுக்க முயன்றால்..கைகள் இல்லை..உதவிக்கு யாரையேனும் அழைக்கலாம் என்றால்..வாயும் பேசமுடியாது..அதுபோல நிலையில் இருக்கிறோம்.இந்த சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?மத்திய அரசு என்ன செய்யமுடியும்? என்பது தெரியும்.(பின் எதற்கு இறுதி வேண்டுகோள்)

தி.மு.க.பொதுக்குழுவில்..அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம்.அதன் முடிவை..மத்திய அரசும்,இலங்கையில் தமிழர்களை கொடுமைப்படுத்தும் கொடுமையாளர்களும் அறிவார்கள்.நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை,தமிழ் சமுதாயத்தை காப்போம்.என்றார்

நாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...

கண்ணதாசன் கடவுள் நம்பிக்கைப் பற்றி வருண் ஒரு பதிவு போட்டிருந்தார்.கடவுள் நம்பிக்கை..அவரால் பல பாடல்களை..எழுத உதவியது என்ற பொருள் வருமாறு எழுதி இருந்தார்.நாத்திகனாய் இருந்த போது அவர் எழுதிய ஒரு பாடல் பாருங்கள்..

நான் தெய்வமா..இல்ல
நீ தெய்வமா..நமக்குள்ள
யார் தெய்வம்..நீ
சொல்லம்மா. (நான் திவமா)

பணம் காசு கடன் தந்து
வீட்டை எடுத்தார்
பால்..பழம் கொடுத்து
உன் கண்னை மறைத்தார்

நடமாடும் நடைபாதை
என் வீடம்மா
நடமாட முடியாத
உனக்கேதம்மா (நான் தெய்வமா)

பசி எடுத்தாலும்
எனக்கேதும் தருவார் இல்லை
எது கொடுத்தாலும்
தாய் உனக்கு பசியே இல்லை

கதானாயகன் இறைவன் இல்லை என்பதுபோல பாடப்பட்ட பாடல்.கவிஞர் எழுதி..மகாலிங்கம் பாடிய இப்பாடல் இடம் பெற்ற படம் 'கவலை இல்லாத மனிதன்'.

கவிஞரின் சொந்த படம் இது.

Friday, January 23, 2009

இறுதி வேண்டுகோளும்...அப்பாவி தமிழர்களும்

இறுதி வேண்டுகோள்..என்றால் என்ன...ஆங்கிலத்தில் சொல்வதானால் Last request.அதாவது கடைசியாக பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

உதாரணமாக...உங்கள் நண்பனால்..உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும், அக்காரியத்தை அவர் ஒருவரால் தான் செய்யமுடியும்..நீங்களும் பலமுறைக் கேட்டும்..அவர் செய்யவில்லை..என்றால் என்ன பொருள்.

நீங்கள் நினைப்பதுபோல்..அந்த காரியத்தை முடிக்கும் சக்தி அவரிடம் இல்லை , அல்லது உங்களுக்கு செய்ய அவர் விரும்பவில்லை.

இந்நிலையில்...இறுதி என்ற வார்த்தை ஏன்..அதுவும்..நீங்கள் வேண்டும்போது. உங்கள் மனதில் உள்ளது 'பல முறை கேட்டு விட்டேன்..மரியாதையாய் செய்..இல்லாவிட்டால்.."

இல்லாவிட்டால் என்ன செய்வதாக எண்ணம்.அவரை மீறவும் முடியாது. அதிக பட்சமாக பதவியை துறக்கலாம்.அதனால் யாருக்கு பயன்? மீண்டும் அந்த பதவிக்கு வர நமக்கு..அவர் தயவு தேவைப்படலாம்.

ஆகவே..தற்சமயம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வேண்டுமானால்..இறுதி வேண்டுகோள் ஒன்று, இறுதி வேண்டுகோள் 2 என அறிவித்துக்கொண்டிருக்கலாம்.அப்பாவி தமிழினம் அங்கே..அழிந்ததும்..மத்திய அரசு உதவலாம்.

இப்பதிவு..வேதனையை தாங்கமாட்டாமல்..எழுதப்பட்டதே..தவிர..கலைஞர் மேல் குறை சொல்ல அல்ல என்பதை அபிமானிகள் புரிந்துக் கொள்வார்களாக!

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல்..(24-1-09)

1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!

அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்?

இந்த கேள்விக்கு உடனே நாம் ஷங்கர் என்போம்..ஆனால் அவரையும் மிஞ்சி விட்டாராம் முருகதாஸ்.

அதைப்பற்றிய ஒரு செய்தி.
ஷங்கர் பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். இந்தச் சம்பளத்தைத் தமிழ்ப் பட இயக்குனர்கள் யாரும் யோசித்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் ஷங்கரே வியக்கிற அளவுக்குப் பத்து கோடி சம்பளத்தை எட்டிவிட்டாராம் முருகதாஸ். இந்தி கஜினி வெற்றிக்குப் பிறகு முருகதாஸைச் சந்தித்த ஆமிர் கான், லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தாராம். சம்பளத்தையும் முறையாகக் கொடுத்து, தான் கேட்காமலே ஒரு தொகையையும் கொடுத்த அமீர் கானைப் பாராட்டி மகிழ்கிறார் முருகதாஸ்.

அடுத்து ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் முருகதாஸுக்குப் பேசப்பட்ட சம்பளம்தான் பத்துக் கோடி. பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ?

இந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு!
(நன்றி டி என்எஸ்)

Thursday, January 22, 2009

கோவி. சென்னை வருகை..

இலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தமாக..பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்புவதாக பிரதமர் டிசம்பர் திங்கள் 4ம் நாள்..கலைஞர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்தபோது உறுதிமொழி கொடுத்ததை...பிரதமரே..மறந்திருந்தாலும்..நாம் மறக்கவில்லை.

பின்னர் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கலைஞர்..ஒவ்வொரு நிமிஷமும்..ஒரு அப்பாவி தமிழன் இலங்கையில் இறக்கிறான் என்றார்.அந்த கணக்குப்படி பார்த்தாலும்..இதுவரை..70000 தமிழர்கள்..டிசம்பர் 4 முதல்..இந்த பதிவு இடும் நேரம் வரை இறந்திருக்கக்கூடும்.

இந்நிலையில்..தமிழக சட்டமன்றத்தில்...இன்று கலைஞர், பேரவைத் தலைவர் அனுமதியுடன் 'ஐயகோ!இலங்கையில் தமிழ் இனம் அழிகிறது.இந்திய பேரரசுக்கு "இறுதி வேண்டுகோள்" என்ற தீர்மானத்தை முன் மொழிவதாக இருக்கிறார்.

இச்செய்தி கேட்டதும்..உடல்நலக் குறைவால்..work from home செய்துவரும் மன்மோகன் சிங்..'தமிழ் மக்களின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வதாகவும்..உடனடியாக..தன் சார்பில் கோவியை சிங்கையிலிருந்து கலைஞரை சந்திக்க தன் தூதுவராக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

கோவியார்..கலைஞரை சந்தித்ததும் ..பிரனாப் இலங்கை அனுப்பும் தேதி நிச்சயிக்கப்படும் என தெரிகிறது.கோவியாரும்...தன் பயணத்தினால்..ஏற்பட்டுள்ள..முன்னேற்றம் குறித்து..நிருபர்களை..சென்னை மெரினாவில்..காந்தி சிலை அருகே.25-1-09.ஞாயிறன்று மாலை 5 மணி அளவில் சந்திக்கிறார்.

தந்தை...சகோதரன்..வில்லன் = ஒருவன்

கமல்,ரஜினி ஆகியவர்கள் போல்..பிரகாஷ்ராஜும்..இயக்குநர் பாலசந்தர் கண்டுபிடிப்பு. ..மணிரத்னம்.ஷங்கர்..ஆகியவர் படங்களிலும் நடித்துள்ள. . இவர்..பிரச்னை பண்ணாத நடிகர் என்ற
பெயரையும் பெற்றவர்.

ஒரு படத்தில் கதாநாயகியை துரத்தும் வில்லனாக வருவார், அடுத்த படத்தில் அதே நடிகைக்கு சகோதரனாக வருவார், இன்னொரு படத்தில் அதே நடிகைக்கு தந்தையாகவும் வருவார்.இடையிடையே..படத்தில் நகைச்சுவை ந்டிகனின் சுமையையும் சுமப்பார்.

தமிழ்த் திரை உலகில்..பாலையா,எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு வந்துள்ள குணச்சித்திர நடிகர் இவர் எனலாம். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்.

கல்கி படத்தில்..இவர் பாத்திரத்திற்குப்பின் தான்..மக்களிடையே 'இப்ப என்ன சொன்ன....அதுக்கு முன்னால...அதுக்கு அப்பறம்..'போன்ற வசனம் பிரபல்யமானது.கில்லி க்குப்பின் தான்..'செல்லம்'பிரபலமானது.

நடிப்பதைத்தவிர..பல அருமையான படங்களை தயாரித்திருக்கிறார்.

இவர் தயாரிப்பில் உருவான மொழி, வெள்ளித்திரை,அபியும் நானும் ஆகிய படங்கள்...தமிழ்த் திரையுலகின் மைல் கற்கள் எனலாம்.

ஆனாலும்...இவருக்கு நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தந்தது..இவரது குருநாதர் பாலசந்தர் நடிக்க இவர் எடுத்த பொய் படு தோல்வி அடைந்தது.

திரைப்படங்களில் சம்பாதித்த பணத்தை திரையிலேயே கொட்டும்..மற்றொரு கமல் இவர்.

Wednesday, January 21, 2009

சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...

நாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா?

இந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா? உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா?(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)

அளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா?

கையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா?

நாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.

நாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (???!!!!)

ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.

தங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா?

அவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா? நாம் மேலானவர்களா?

அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.

சுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.

(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )

..காளமேகமும்..நகைச்சுவையும்..

காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Tuesday, January 20, 2009

பிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...

இலங்கை தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.கலைஞரும்...கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால்..வருத்ததை அளிக்கிறது..ஏமாற்றத்தை அளிக்கிறது..என்ற அளவிலேயே அக்கட்சியை விமரிசனம் செய்ய முடிகிறது.

இன்னிலையில்...கள் இறக்கும் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இச்செய்தியைக் கேட்டதும்தான்..காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மதுவிலக்கு இல்லை என்ற ஞாபகம் வந்தது போலிருக்கிறது.

எதைத் தின்றால்..பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர் போல்...இலங்கை தமிழர் பிரச்னையை...எதைச் சொல்லி திசை திருப்பலாம் என்றிருந்தவர்களுக்கு காரணம் கிடைத்துவிட்டது.

தமிழகத்தில்..மகாத்மா,காமராஜர்,பெரியார் (அண்ணாவை ஏன் விட்டு விட்டார்கள்)ஆகியோர் போராடி..மதுவிலக்கை கொண்டுவந்து..மக்கள் நலனுக்காக வரலாறு படைத்தார்கள்.தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும்..அதற்காக இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை என் தலைமையில்..சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தங்கபாலு அறிவித்துள்ளார்.

ஐயா..தங்கபாலு...முதலில் உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்...மாநிலங்களில் போராடுங்கள்..அந்த மாநில மக்கள் நலனும் முக்கியமில்லையா? அங்கு மதுவிலக்கு அமுலுக்கு வந்ததும்...பிற கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்து மக்கள் பற்றி கவலைப்படலாம்.

படிக்காதவன்..பார்த்தவர் - விமரிசனம்

மூத்த பதிவர்கள் பெரும்பாலோர்..பொங்கல் வெளியீடுகளான படிக்காதவன்,வில்லு படங்கள் விமரிசனம் பதிவிட்டுவிட்ட..நிலையில்..நாமும் ஊரோடு ஒத்து வாழ எண்ணி..படிக்காதவன் பார்த்து ஒரு விமரிசனம் பதிவிடும் வெறியுடன்..தியேட்டருக்கு விரைந்தேன்.

டிக்கட் வாங்கி இருக்கையில் சென்று அமர்ந்தபோது, என் இருக்கைக்கு முன் வரிசையில்..கணவன்,மனைவி,அவர்களது மகள் 12 வயதிருக்கும் அமர்ந்திருந்தனர்.கணவன் நடுவே அமர..வலப்பக்கம் மனைவி,இடப்பக்கம் மகள்.

ஏங்க..என்ன படத்திற்கு வந்திருக்கோம்...இது மனைவி

படிக்காதவன் - கணவன்

ஐய்ய..பழைய படமா? ரஜினி நடிச்சது தானே..என்றாள்..மனைவி

இல்லை..இல்லை..அவர் மாப்பிள்ளை தனுஷ் நடிச்ச படம்.

இந்த படக்கதை 'வீட்டில எல்லாரும் படிச்சவங்க..தனுஷ்..படிக்கதவர்..'என கணவன் கதைச் சுருக்கத்தை சொல்ல ஆரம்பித்ததும்..குறுக்கிட்டாள் மகள்..

'அப்பா..இந்த படம் பார்த்திட்டோம்..தனுஷ்..மன்மத ராசா பாடுவாரே..'என்றாள் .

அக்கம் பக்கம் பார்த்து அவளை'உஷ்' என அடக்கிய அப்பா..'இது புதுபடம்..பிரதாப் போத்தன் தான்...'

'இல்லப்பா..தனுஷோட அப்பா..விஜயன்...இல்லை..இல்லை..மௌலி..இல்லை இல்லை மணிவண்ணன்..இல்லை இல்லை..'இது மனைவி.

'வாயை மூடப்போறீங்களா..இல்லையா ' என்றார் கணவன்.

இருவரும்..கப்சிப்...சிறிது நேரம் கழித்து..மனைவி மட்டும் 'இந்த படம் பார்த்தோம்னு சொன்னா..ஒத்துக்க மாட்டீங்களே...இவரை விட பெரிய படிப்பு படிச்ச நயன்தாரா இவரை காதலிக்கும்.'என முணுமுணுக்க ..கணவன்..'அது யாரடி நீ மோகினி" என்றார்.

'அப்பா...நான் சொன்னேன் இல்லை..ஒல்லி தனுஷ்...ரௌடிகளோட சண்டை போடறார் பாரு' என்றாள் மகள்.

'ஐய்யோ...படம்..பார்க்க விடுங்களேன்' என்று எனக்கே கத்த வேண்டும் போல இருந்தது.

கடைசி வரை..கணவரைத்தவிர மற்ற இருவரும்...படத்தை பார்த்து விட்டோம்..என்றே சாதித்தனர்.

படம் விட்டதும் அவர்கள் பின்னல் சென்ற நான்...அந்தக் கணவன்..'பொங்கல் முதல்...படிக்காதவன்..என்ற போஸ்டரைக்காட்டி..புதுபடம்தான்..என உணர்த்திக்கொண்டிருந்தார்.

ஆமாம்..படத்துக்கு விமரிசனமா? யார் படத்தை பார்த்தார்கள்...விமரிசிக்க

Monday, January 19, 2009

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா

இலங்கை தமிழர் பிரச்னையில்..திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தது பற்றி ஜெயலலிதா கூறுகையில்...

நேற்று என் அறிக்கையில்..அவர் நாடகமாடுகிறார் என்று கூறினேன்.அதை நிரூபிக்கும் வகையில்..நான்கு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.இதனால் பல பகுதிகளில்..அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.மக்களை திசைத் திருப்ப அவர்கள் நடத்திய நாடகம் இது.இதனால் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, தமிழர் பிரச்னையும் தீரவில்லை...என்றுள்ளார்.

இவர் ஆட்சியில் இருந்தபோது..மெரினாவில்..சொகுசு வேன் பக்கத்தில் நிற்க..இவர்..காவேரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தாரே..அது நாடகம் என்று நாம் சொல்லவில்லை..

இவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..என நாம் கேட்கவில்லை...

ஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..

மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?

ஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...

விடியற்காலையில்...சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும்...அப்பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தம் அருகே வந்திருக்கிறீர்களா?

சூரியன் உதிக்கும் முன்..நீங்கள் எழுபவராய் இருந்தால்..நான் சொல்லும் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.

பொறியியல் கல்லூரியில் ....EEE,ECE,IT படிக்கும் இளம்மொட்டுக்கள்...கண்களில் தூக்கம் கலையாமல்..ஆனால் அதே நேரம் வருங்காலம் பற்றிய கனவுகளுடன்..வெறும் வயிற்றுடன்..கல்லூரி பேருந்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.

இவர்கள் இப்படி என்றால்..இன்னொரு பக்கம்...படித்து முடித்து ....ஏதேனும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ..வாழ்நாளில் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் தங்கள் நிறுவன பேருந்திற்காக காத்திருக்கும் அவலம்.

இதுவரை இக்கட்சிகளை பார்ததில்லையெனில்...நாளை சென்று பாருங்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக..அம்முகங்களில் ஒரு வாட்டம்...எதிர்காலம் பற்றி கேள்விக்குறி...

உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி.ஐ.டி., துறையில் இன்னும் சற்று தீவிரம்.வெளிநாட்டு ப்ராஜக்ட்கள் நிறுத்தப்பட்டு வருவதால்..நம்ம ஊர் கம்பெனிகள்..செலவுகளைக் குறைக்க...கணிசமான அளவு
சம்பளக்குறைப்பு...ஆள்குறைப்பு செய்கிறார்கள்.50 பேர் செய்ய வேண்டிய வேலைகள்...20 பேர் செய்கிறார்கள்.

இந்நிலையில்...ஒபாமா நாளை பதவி ஏற்றதும்...அவுட் சோர்சிங் நிலைபாட்டில் என்ன முடிவெடுப்பார் என்று தெரியாத நிலை...

போதும் போதாதற்கு..இப்படிப்பட்ட நிலையில்தானா சத்யத்தின் அசத்ய நிலை வெளிவரவேண்டும்.கண்டிப்பாக இது நம் இந்திய நிறுவனங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்ததான் செய்யும்.

ஆனாலும்...இந்திய மென் பொருள் வல்லுநர்களே! மனம் தளராதீர்கள்.உங்களிடம் திறமை கொட்டிக் கிடக்கிறது.நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்..தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

தடுக்கி வீழ்ந்தால் தவறல்ல...அது மீண்டும் புத்துணர்ச்சியுடன்..எழத்தான்..நாம் வீழ்வது கண்டு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.

நாளையும் நமதே...அதை புரிய வைப்போம்.

வெற்றி நமதே!!!

Sunday, January 18, 2009

வாய் விட்டு சிரியுங்க...

உங்க மாமியாருக்கும் இந்த ஆஃபீஸ்ல வேலை வேணுமா? ஏன்?
வீட்ல முடிக்காம நிக்கும் சண்டையை இங்க தொடரத்தான்

2.அந்த அரசு அலுவலகத்திலே..மத்யானம் 1 முதல் 1.30 வரை..லஞ்ச் அவர்..இரண்டிலிருந்து மூணு வரை லஞ்ச அவர்

3.அந்த டீக்கடையில் உட்கார்ந்து..தயாரிப்பாளர்,இயக்குநர்,கதாசிரியர் எல்லாம் என்ன பண்றாங்க..
திரைக்கதை டிஸ்கஸனாம்..லோ பட்ஜெட் படமாம்

4.நோயாளி-(ஆபரேஷன் கட்டிலில்) சிஸ்டர் டாக்டர் ஏன் இன்னும் வரல்ல
நர்ஸ்-உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி இப்பத்தான் படிச்சுகிட்டு இருக்கார்..வந்திடுவார்.

5.அந்த ஓட்டலுக்குப் போனா தகாத உறவெல்லாம் ஏற்பட்டுடுமா?எப்படி..
இட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க

6.அந்த ஓட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமாம்
ஏன் அப்படி
ஸ்டாக் கிளியரன்சாம்.

Saturday, January 17, 2009

அபியும் நானும்..மற்றும் சர்தார்ஜியும்..

இப்போதுதான் அபியும் நானும் படம் பார்க்க முடிந்தது.

இப்பதிவு..படவிமரிசனம் இல்லை...ஆனாலும் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் (அபியை பெற்றிருந்தாலும் சரி..அபிராமனை பெற்றிருந்தாலும் சரி) பார்க்க வேண்டிய படம்.ஆனாலும்..இடைவேளைக்குப் பிறகு...திரைக்கதையை எப்படி இழ்த்துச் செல்வது..என தடுமாறியுள்ளது தெரிகிறது.

சரி..தலைப்புக்கு வருகிறேன்.

இப்படத்தில்..தலைவாசல் விஜய் ஒரு வசனம் சொல்கிறார்..

தில்லியில் ஒருமுறை..நாங்களெல்லாம்..ஒரு காரில் ஊரைச் சுற்றினோம்.ஒரு சர்தாஜிதான் டிரைவர்.சர்தாஜி ஜோக்ஸ்களை ஒருவருக்கொருவர் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். பயணம் முடிந்தது..காருக்கான பணத்தை வாங்கிக்கொண்ட சர்தார்ஜி...என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து..எங்கேனும் ஒரு சர்தாஜி பிச்சை எடுத்தால்..இதைப் போடுங்கள் என்றார்..ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.இன்றும் அந்த ஒரு ரூபாய் எங்கிட்டதான் இருக்கிறது என்பார்.

ஆம்..யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே தொன்றுகிறது.டாக்ஸி டிரைவர்களாகவும்..கடைவைத்திருப்பவர்களாகவும்,ராணுவத்தில் பணிபுரிபவராகவும்..இப்படி..உடலுழைப்பில் சாப்பிடுபவர்கள் அவர்கள்.அவர்களை மூடர்களாக்கி எவ்வளவு நகைச்சுவை.

சர்தார்ஜி ஜோக்ஸ்..என ஆனந்தவிகடன்..ஒரு முறை வெளியிட்டப்போது...மனம் வருந்தியவர்கள் அவர்கள்.உடன் ஆவி நிர்வாகமும்..இனி சர்தார்ஜி ஜோக்ஸ் கிடையாது..அதற்கு பதில் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் எனப்போடுகிறோம் என்றது.

நானும்..அப்படிப்பட்ட சில ஜோக்குகளை அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ் என பதிவிட்டுள்ளேன்.

சர்தார்ஜி ஜோக்ஸ் என பதிவிடுபவர்களும் இனி வேறு பெயரை உபயோக்கிக்கலாம்.

உழைத்து வாழும் அவர்களை மதிப்போம்.

2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..

இலங்கை ராணுவம் முல்லைத்தீவு பகுதியில் சண்டை இட்டு வருவதால் 2.3 லட்சம் தமிழர்கள் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.அவர்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.

முல்லைத்தீவு பகுதியில்..முப்படை தாக்குதல் நடந்து வருகிறது.போர் விமானங்கள் வேறு சரமாரியாக குண்டுகள் வீசி வருகின்றன.இந்த நிலையில்..முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள்..உயிரை கையில் பிடித்தபடி காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் புகுந்துள்ளனர்.பசியும், பட்டினியுமாக குழந்தைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.அவர்களின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா.சபை தன் கவலையைத் தெரிவித்துள்ளது.அவர்களுக்கு ஐ.நா.,சபை, மற்றும் உதவி நிறுவனங்களால் உணவு கிடைத்தாலும்..இருப்பிடம்,குடிநீர்,துப்புரவு,சுகாதார வசதிகள் இல்லை.

இதனிடையே...இலங்கை சென்ற வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், ராஜபக்சே வை சந்தித்து..இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசினார்.தவிர..இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து.(??!!)
பேசியதாகவும் தெரிகிறது.

திருமாவளவனின் உண்ணா நிலை 4 வது நாளாக தொடர்கிறது.

கலைஞரோ..இன்னும் சிலநாள் பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார். அவர் மனோகராவில் எழுதிய 'பொறுத்தது போதும்..பொங்கி எழு' என்ற வசனத்தை அவருக்கு ஞாபகமூட்டுகிறோம்.

Friday, January 16, 2009

தேங்காய்...மாங்காய்...பட்டாணி...சுண்டல்... (17-1-09)

1.பொங்கல் நாளில் சூரியனை..வாழை.கரும்பு,மஞ்சள்.இஞ்சி..ஆகியவற்றை வைத்து வழிபடுகிறோம்.அதன் காரணம் தெரியுமா?

வாழை-வாழையடி வாழையாக வாழை வளர்வது போல..நமது சமுதாயமும்,நமது குடும்பமும்..வாழ வேண்டும் என்ற கருத்தில் வாழை பொங்கல் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

கரும்பு-ஓங்கி உயர்ந்து வளரும் இயல்புடையது.அதுபோல நம் வாழ்க்கையும் ஓங்கி உயர்ந்து, வளர்ச்சி பெற வேண்டும் என்ற கருத்தில் பொங்கல் வழிபாட்டில் கரும்பு இடம் பெறுகிறது

மஞ்சள்,இஞ்சி-பூமிக்கடியில் ஆழமாக பதிந்து வளரும் இயல்புடையது.அதுபோல உயர்ந்த,புனிதமான கருத்துக்கள் நம் வாழ்க்கையை மங்களகரமாக நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவை இடம் பெறுகின்றன.

2.எல்லாம் நானே..என்ற அகந்தை வேண்டாம்..யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம், யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம்,யாரோ நெய்த ஆடையைத்தான் நாம் கம்பீரமாக அணிந்துக் கொள்கிறோம்,யாரோ விளைவித்த தானியங்களைத்தான் உண்ணுகிறோம்.சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களும் யாரோ செய்ததுதான். அதை ஞாபகத்தில் வையுங்கள்.

3.உலகத்தில் எந்த மூளையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாய்த்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல் இவையெல்லாமே எங்கிருந்தாலும் அழகுதான்.

4.புக்கர் பரிசுக்காக சிபாரிசு செய்யப்படும் நாவல்களை படிக்கும் நீதிபதிக்கு ஒரு நாவலை படிக்க கொடுக்கப்படும் பணம் எவ்வளவு தெரியுமா?கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 2.4 லட்சங்கள்.

5.ஒருமுறை அண்ணா..ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது..நடுவில் எம்.ஜி.ஆர். வர ஒரே ஆரவாரம்.அதைப்பயன்படுத்தி அண்ணாவிடம், எம்.ஜி.ஆர்.,உங்களை விட புகழ் பெறப் பார்க்கிறார்
என சிலர் புகார் கூற..அண்ணாவோ..'எம்.ஜி.ஆர்., பொன் முட்டையிடும் வாத்து..அவர் எப்போது வேண்டுமானாலும்..வரலாம்..போகலாம்'என்றார்.

*********************** **************************
ஒரு ஜோக்

தலைவர் என்ன யோசனையில் இருக்கிறார்?
அவரது கொள்ளு பேரன் கட்சியில் பதவி கேட்கிறானாம்..பேசாமல்..குழந்தைகள் அணி செயலாளர் ஆக்கிடலாமா..என்ற யோசனையில் இருக்கிறார்.

யாரைக் கொன்றுவிட்டு

ஆதவன் ஓடி ஒளிகிறான்

கீழ்வானத்தில் இரத்த சிவப்பு.

நடிகர்களை கெடுக்கும் எம்.ஜி.ஆர்.,

அரசியல் சாணக்கியரான கலைஞர் செய்த அரசியல் தவறுகளில்...மா பெரும் தவறு..எம்.ஜி.ஆரை.,கட்சியிலிருந்து நீக்கியதுதான்.

அண்ணாவே ஒருமுறை..தம்பி எம்.ஜி.ஆர்., தன் முகத்தை மக்களுக்குக் காட்டினால் போதும்..நமக்கு ஓட்டுகள் விழும்..என கூறியிருந்தார்.அப்படிப்பட்ட செல்வாக்கு பெற்றவரை..கட்சியை விட்டு அனுப்பாமல் ..சமரசமாய் போயிருக்க வேண்டும்.

பின் எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்து..ஆட்சியைப் பிடித்து...தன் இறுதிவரை தி.மு.க.,வை தமிழகத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் செய்தார்.,

எம்.ஜி.ஆர். இன் வெற்ரி ரஹசியம் தெரியாத பல நடிகர்கள் அரசியலில் நுழைய ஆசைப்பட்டு...முதல்வர் கனவு கண்டனர்.

சிவாஜி..தனிக் கட்சி ஆரம்பித்து...ஜானகி அணியுடன் கை கோர்த்து..தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார்.

கலைஉலகில் என்வாரிசு..பாக்கியராஜ் ..என்று அவர் சொன்னதை..வைத்துக்கொண்டு பாக்கியராஜ்..நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு..எனக் கூறிக் கொண்டு கட்சி ஆரம்பித்தார்...தோல்வி அடைந்தார்.

டி.ராஜேந்திரன்..ஒரு கட்சி ஆரம்பித்து..அவ்வப்போது இடைவெளி விட்டு நடத்தி வருகிறார்.தி.மு.க.வில் அவர் இருந்தபோதுதான் அவரால் எம்.எல்.ஏ.,ஆக முடிந்தது.

நான் எம்.ஜி.ஆர்., வரிசு..நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,என திடீரென விஜய்காந்த் அரசியல் நுழைந்தார்.ஓரளவு மக்கள் ஆதரவுடன் தாக்கு பிடித்து வருகிறார்..ஆனால்..இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது.

சரத்குமாரும்..தன் பங்குக்கு ஒரு கட்சி ஆரம்பித்து..தள்ளாடிக்கொண்டிருக்கிறார்.,

ஆக மொத்தம்..இந்த நடிகர்களுக்கு..முதல்வர் ஆசையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர்., ஆக இவர்கள் கெடக் காரணம் எம்.ஜி.ஆர்.,

எம்.ஜி.ஆரை நினைத்து..ஆட்சிக்குவர துடிக்கும்..நடிகர்களே...ஆரம்ப காலத்திலிருந்து அவர் அதற்காக எவ்வளவு கணக்குப் போட்டு காய்களை நகர்த்தினார் என்றும்.,உழைத்தார் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

Thursday, January 15, 2009

மத்திய அரசு செத்த பிணம்..

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பப்படுவதை கண்டித்தும்..போர் நிறுத்தம் கோரியும்...தமிழக அரசியல் கட்சிகளும்..அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந் நிலையில்..கடந்த மாதம் 4ம் நாள் கலைஞர் தலைமையில்..அனைத்துக்கட்சி தலைவர்களும் ..பிரதமரை சந்தித்து...போர் நிறுத்தத்தை வலியுறுத்தினர்.பிரதமரும்..பிரணாப் முகர்ஜியை இது விஷயமாக இலங்கை அனுப்புவதாகக் கூறினார்.

அப்படி உறுதிமொழி கொடுத்தும் 45 நாட்களுக்கு மேல் வாளாயிருந்து விட்டு..வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனனை இலங்கை அனுப்பியுள்ளார் பிரதமர் .தமிழன் உயிர்தானே..அமைச்சர் எதற்கு...அதிகாரி போதும் என எண்னியிருப்பார் போலும்.

இதற்கிடையே..சிவசங்கர் மேனன்..அடுத்த மாதம் நடைபெற உள்ள சார்க் மகாநாடு பற்றியும்,வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான மாநாடு குறித்தும்..இலங்கை அதிபருடன் சிவசங்கர் பேசுவார் என தெரிகிறது.

சிவசங்கர் மேனன்..எதற்கு செல்கிறார் என்று பாருங்கள்...மத்திய அரசு...தமிழன் என்ற குழந்தை அழாமல் இருக்க லாலிபாப் காட்டுகிறது.

நேற்று முதல் ..இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்னு அவர்கள் பேசுகையில்..இப்பிரச்னையில் இந்திய அரசு கல் போல உள்ளது..கல் என்றாலும் தூக்கி எறியலாம்..ஆனல் இது செத்த பிணமாய் உள்ளது என்று கூறியுள்ளார்.

உண்மைதான்..பிணத்திடம்...தமிழர் உயிர்களைக் காப்பாற்று ..என்றால்..அதனால் என்ன செய்ய முடியும்.?!

Wednesday, January 14, 2009

பொங்கலும்..அம்மாவும்...நாங்களும்..

அம்மா...

அவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.

ஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.

என் அம்மா....

அவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.

எங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.

தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.

1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.

ஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.

(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா?..அதுபோலத்தான்)

சாஃப்ட்வேர் துறையும்...வீட்டுக் கடன்களும்..

ரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு.

லட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று.

சரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது.

ஆனால் இன்று...

செய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,

இன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக கூறமுடியவில்லை.

அமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.

ஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள்.வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.

மீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம்.

ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.

நாளை நமதே..!!

(சத்யம் ஊழியர்கள் பற்றி நினைத்தேன்...அதுவே இப்பதிவு எழுதத் தூண்டியது)

வாய் விட்டு சிரியுங்க...

1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்

2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..
இதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி
என்ன சொல்ற நீ
அவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்

3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்
நோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்

4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..
தரகர்-யாருக்கு
வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...

5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு

6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நன்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..

Tuesday, January 13, 2009

தமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..

கடந்த நவம்பர் மும்பை குண்டுவெடிப்பில்...பாகிஸ்தானுக்குள்ள தொடர்பால்..இந்திய கிரிக்கட் குழு பாகிஸ்தான் செல்வதை.இந்திய அரசு தடை விதித்தது.

இது பாராட்டபட வேண்டிய முடிவு என எல்லா ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன.

இந்த நிலையில்..இந்திய கிரிக்கட் குழு அடுத்த மாதம் இலங்கை செல்கிறது.அங்கு 5 ஒரு நாள் போட்டியும்..ஒரு 20 ஓவர்கள் போட்டியும் நடைபெற இருக்கிறது.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்..இலங்கைக்கு.. பலமுறை முதல்வர் கூறியும்...வாய் மூடி மௌனமாய் இருக்கும் மத்திய அரசு..உண்மையில் அங்கு வாழ் தமிழர் மேல் அக்கறை கொண்டதாய் இருக்குமேயாயின்..அங்கும் இந்திய குழுவை அனுப்பாமல் தடை செய்ய வெண்டும்.

மத்திய அரசு செய்யுமா?

முதல்வர் இதை வலியுறுத்துவாரா?

அ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்?

அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,இருந்தவரை.. மக்களிடையே..தங்கள் கட்சி அது என்ற எண்ணம் இருந்தது. அவர் மறைந்ததும் கட்சி உடைந்தது.ஜானகி அணி என்றும்,ஜெ அணி என்றும் தேர்தலில் போட்டியிட..மக்கள் இரண்டையும் நிராகரித்தனர்.இதனிடையே..எம்.ஜி.ஆர்.உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது..அவரால் பணிகளை ஒழுங்காக செய்ய முடிய வில்லை..ஆகவே என்னை முதல்வராக ஆக்குங்கள் என ஜெ..தில்லிக்கு ராஜிவிடம் காவடி எடுத்ததுண்டு.

ராஜிவ்..1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை கலைத்து..ஜெ கூட்டணியில் சட்டசபை தேர்தலை 1991 ல் சந்திக்க இருந்த போது..கொலையானார்.ராஜிவ் அனுதாப அலையும்,அவர் மரணத்திற்கு தி.மு.க., காரணம் என்ற வதந்தியும் சேர்ந்து அம்மாவை ஆட்சியில் அமர்த்தியது.அச்சமயத்தில்தான்..நாடே வியக்கும்..படி..வளர்ப்புமகன் திருமணம்..மாபெரும் ஊழல்கள் என ஆட்சி நடந்தது,மக்கள் தி.மு.க.,ஆட்சியே பரவாயில்லை என எண்ணத்தொடங்கி..தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

1996ல் தி.மு.க.,ஆட்சியைப் பிடித்து..ஜெ மீது வழக்குகள் போடப்பட்டன.கலைஞர் இப்போதய இலவச ஆட்சியாய் இல்லாமல்..திறம்பட..அனைவரும் பாராட்டுமாறு அந்த ஆட்சி அமைந்தது .அதனால் மக்கள் ஆதரவு நிச்சயம் என்ற நிலையில்..கூட்டணி விஷயத்தில்..சற்று மெத்தனமாக இருக்க..2001ல்அ.தி.மு.க.கூட்டணி வலுவாய் அமைய.அ.தி.மு.க.வெற்றிப் பெற்றது.

அப்போதும் பாடம் படைக்காத ஜெ..வானளவு அதிகாரத்தைக் கையிலெடுத்து..கலைஞர் கைது,அரசு ஊழியர்கள் கைது என துக்ளக் ராஜ்யம் அமைக்க...மக்கள் வெறுப்பை சம்பாதித்தார்.

2006...அ.தி.மு.க.,விடமிருந்து ஆட்சி கலைஞரிடம் கொடுக்கப்பட்டது.இத் தேர்தலில் வலுவான கூட்டணியாக.,தி.மு.க.,பா.ம.க.,காங்கிரஸ்,இரண்டு கம்யூனிஸ்ட் என கூட்டணி அமைந்ததால்..தி.மு.க.,குறந்த இடங்களே போட்டியிட முடிந்தது.அதனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இத் தேர்தலில் விஜய்காந்த் வேறு ஓட்டுக்களைப் பிரித்தார்.அப்படியும் அ.தி.மு.க.,கிட்டத்தட்ட தனித்து போட்டி(வைகோ மட்டும் உடன் இருந்தார்)யிட்டு 60 இடங்களுக்குமேல் வென்றது.

அப்படிப்பட்ட..கட்சி..இடைத்தேர்தலில் இப்போது மாபெரும் தோல்வியை சந்தித்துள்லது.இதற்கான காரணம் என்ன? பண பலம் எனக்கூற முடியாது.அ.தி.மு.க.,வும் பணத்தை வாரி செலவழித்தது.

தலைப்புக்கு வருவோம்..ஜெ இன்னமும்...

இன்னும் மக்களுக்கு எட்ட முடியாத தலைவராய் இருக்கிறார்..
தினசரி..தேவையில்லாமல் ஏதேனும் காரணம் சொல்லி ..ஆர்ப்பாட்டம் என..மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறார்.
அவ்வப்போது அறிக்கை விடுவதோடு...தன் பணி முடிந்ததாய் நினைக்கிறார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் பிரசாரம் செய்தால் போதும் என எண்ணுகிறார்.
தி.மு.க.வின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களையும்..தேவையில்லாமல் விமரிசிக்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்னையில்..நிலைபாடு தவறு
தி.மு.க.,வில்.உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி.,அதேபோல உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இன்னிலை நீடித்தால்..விஜய்காந்த் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட முடியும்., அ.தி.மு.க.,தேவகவுடா கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்ளமுடியும்.,
ஜெ நன்கு யோசித்து..தன் நிலைப்பாடை திருத்திக் கொள்ளட்டும்.
தனி நபர் வெறுப்பும் வேண்டாம்...தனி நபர் துதியும் வேண்டாம்.
மக்கள் நலனை நினையுங்கள்...வெற்றி நிச்சயம்.

Monday, January 12, 2009

வாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..

1.வைகோ-(அம்மாவிடம்) அம்மா..சட்டசபை தேர்தல்ல ம.தி.மு.க.விற்கு 52 சீட் தந்துடுங்க
ஜெ- 52 சீட் தானே இப்பவே தரேன்
(சசிகலாவைக் கூப்பிட்டு..ஒரு பாக்கட் சீட்டுக்கட்டை வரவழைத்துக் கொடுக்கிறார்)

2.அன்புமணி-(தந்தையிடம்) அப்பா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?
ராமதாஸ்- தி.மு.க. மேல புகார் அறிக்கை ஒன்று தயார் செஞ்சுட்டேன்..இன்னிக்கு வெளியிட்டுடுவேன்..
அன்புமணி-பின்ன என்ன
ராமதாஸ்-நாளைக்கு தி,மு.க.வைப் பாராட்டி ஒரு அறிக்கை தயார் செய்யணுமே

3.காங்கிரஸ் தலைவர் ஒருவர்- நாம...திருமாவளவனை பாராட்டி ஒரு கூட்டம் போடுவோமா?
மற்ற ஒரு தலைவர்- எதற்கு..
முதல் தலைவர்- அவர்தானே சத்யமூர்த்தி பவனை எல்லோருக்கும் இப்ப ஞாபகப்படுத்தினார்.
(இது சம்பந்தமாக தகறாறு ஏற்பட..ஒவ்வொரு கோஷ்டியும்..இன்னொருவர் மீது மேசை,நாற்காலியை வீச ஆரம்பிக்கின்றனர்)

4.பிரேமலதா-(விஜய்காந்திடம்)சாரிங்க..கவலைப்படாதீங்க..அடுத்த தேர்தல்ல பார்த்துக்கலாம்..
விஜய்காந்த்-அதுக்கு கவலைப்படலை...உன் காரை தாக்கினது....வடிவேலுதான்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்..ஏன்னா..நாளைக்கு கலைஞரோட,இல்லை.ஜெ யோட இணைய சந்தர்ப்பம் கிடைக்கலாமே அதுக்குத்தான்.

5.அன்பழகன் வருத்தத்தோடு இருக்க
ஆர்காட்டார்- ஏன்..வருத்தமா இருக்கீங்க
அன்பழகன்- செயலாளர் பதவி பறிபோயிடுமோன்னுதான்
ஆர்காட்டார்-ஏன் அப்படி சொல்றீங்க
அன்பழகன்-உங்க கிட்ட இருந்த பொருளாளர் பதவி ஸ்டாலினுக்கு போச்சு.இப்ப அழகிரிக்கு பதவி ஏதாவது தரணும்னு சொல்றாரே..செயலாளர் கொடுத்துட்டார்னா..

6.ராதிகா-அரசியலே வேண்டாம்னேன்..கேட்கலை..ஒழுங்கா..அப்பான்னு கூட்டுகிட்டு இருந்தேன்..எல்லாம் போச்சு..

திருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்...

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., பெரும் வெற்றி பெற்றதை அடுத்து..தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்.

சமீப காலமாக..தி.மு.க.வை கழட்டிவிடலாமா? என்ற எண்ணத்தில் இருந்த காங்கிரஸ் தமிழக தலைவர்கள் இனி வாயடைத்து போய்விடுவார்கள்.தி.மு.க.வை விட்டால் வேறு கதியில்லை என்று..காங்கிரஸ் மேலிடம்..இனி அடக்கி வாசிக்கும்.பா.ம.க.,அணிக்குள் மீண்டும் வரும்.

பாராளுமன்ற தேர்தலுடன்...தமிழக சட்டசபை தேர்தலும் வரலாம்.பாராளுமன்றத்திற்கு காங்கிரஸிற்கு அதிக இடங்களும்..சட்டசபைக்கு..தி.மு.க.விற்கு அதிக இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்படும்.
மைனாரிட்டி..தி.மு.க. அரசு..என்ற நிலை மாறி..அறுதி பெரும்பான்மையுடன்..தி.மு.க., பதவிக்கு வரும்.

2011 கனவில் இருப்பவர்கள்..இனி 2014 கனவில் இருக்க வேண்டியதுதான்.

முன்னர்..தமிழக தேர்தல்கள் பற்றி அறிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.

Sunday, January 11, 2009

வருங்கால முதல்வர்கள் தோல்வி..

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றிப் பெற்றது.தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான்..39266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.2011ல் தாங்கள் தான் முதல்வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகர்கள் கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.

இவ் வெற்றிப் பற்றி..நமது சரடு நிருபருக்கு தலைவர்கள் அளித்தப் பேட்டி.

கலைஞர் - இவ் வெற்றி கடந்த 2 1/2 ஆண்டுகளான தி.மு.க. ஆட்சிமேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ,பொங்கல் திருநாளாம் தமிழ்புத்தாண்டுக்கு எனக்களித்த பரிசு.

ஜெ- இத் தேர்தலில் அராஜகம் தலை விரித்தாடியது.பணம் வினியோகிக்கப்பட்டது.அரசு இயந்திரங்கள் தவறாக செயல் பட்டன.இது குறித்து கூடிய விரைவில் வழக்கு தாக்கல் செய்வேன்.

விஜய்காந்த்- இத் தேர்தலில் தி.மு.க.தோல்வி அடைந்துள்ளது.தி.மு.க.,தேர்தல் பொறுப்பாளர் மு.க.அழகிரி 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம் என்றார்.ஆனால்..வெற்றி வாக்கு வித்தியாசம் 39266 தான்..ஆகவே தி.மு.க., 10734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.எங்கள் கட்சியைப் பொறுத்த மட்டில் 8 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொடர்கிறது.

ராமதாஸ்- பா.ம.க., நடுனிலை வகித்தாலும்...எங்கள் கட்சியினர்கள் வாக்கு தி.மு.க.விற்கு விழுந்ததால் தான் வெற்றிப் பெற்றனர்.

காங்கிரஸ்-இவ் வெற்றி அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி.மக்கள் சோனியா பக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம்.

கம்யூனிஸ்ட்டுகள்-விரைவில் பொலிட்பீரோ கூடி..கூட்டணிப் பற்றி முடிவெடுப்போம்.,

சரத்குமாரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

நோன்பு (சிறுகதை)

சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது.

பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.

கருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில் கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்.. இன்று சற்றே வாடிய ரோஜாப்போல...கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள் மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன் கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார்.

இப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.

அவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்...

அவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது.,

அவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது.

தொகுதி எம்.எல்.ஏ., வரும்போது...அல்லக்கைகள் படை சூழ வருவதுபோல..சிவகாமியை கவனிக்கும் மருத்துவருடன்..உதவியாளர்கள் என்ற சிறுகூட்டம் உள்ளே நுழைந்தது.

சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்...நர்ஸிடம்..'டிரிப்ஸ் ஏற்றுவதை நிறுத்த வேண்டாம்...ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாராய் வைத்திருங்கள்'என்றார்.

பிரகாசம்..தயங்கியவாறு அவரைப் பார்த்து..'டாக்டர்..'என இழுத்தார்.

புருவங்களை உயர்த்தி 'என்ன' என்பது போல பார்த்தவர் 'இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.இருபத்து நாலு மணி நேரம் தாண்ட வேண்டும்'என இயந்திரத் தனமாய் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.பிரகாசம்..கடைசியாய் போன மருத்துவரைப் பார்த்து..பரிதாப சிரிப்பு சிரித்தார்.

உதவியாளருக்கு என்ன தோன்றியதோ..அவர் பிரகாசத்தின் தோள்களைத் தட்டி 'இனி எல்லாம் அந்த ஆண்டன் கையில்..'என மேலே கையைக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

ஆண்டவன்..என்ற வார்த்தையைக் கேட்டதும்..சிவகாமியின் முகத்தைப் பார்த்தார் பிரகாசம்.

'அவர் ஆயுள் நீடிக்க வேண்டும்..அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..என வரலட்சுமி நோன்பும்,கனுப்பொங்கலும்,வெள்ளிக்கிழமைகளில் விரதமும்..என சதா சர்வகாலமும்..தன் கணவனின் நலத்தையே எண்ணிக்கொண்டிருந்தாளே..சிவகாமி..அவள் நலத்தைப் பற்றி..தான் என்றாவது நினைத்ததுண்டா?இது நாள் அவளை ஒரு மனிஷியாகக் கூட நினைக்கவில்லையே..ஒரு இயந்தரம் போலத்தானே..நினைத்திருந்தார்..'

'ஆண்டவா..இவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே! அவள் நலனுக்காக இனி நான் விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி வைத்திருக்கிறது? அவளில்லாமல் ஒரு வினாடிக்கூட இருக்க முடியாது..என உணர்ந்துக் கொண்டேன்' என அரற்றத் தொடங்கினார்.

வாடிய ரோஜா..சற்று சிரிப்பது போல இருந்தது.

சத்யமும்..இன்ஃபோசிஸும்

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடுகள் பற்றி..கடந்த மூன்று நாட்களாக மாறி..மாறி ஊடகங்களில் செய்திகளைக் கேட்கிறோம்..படிக்கிறோம்..

சத்யம் நிறுவனத்தை இன்ஃபோஸிஸ் வாங்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி..கறை படிந்த நிறுவனத்தை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.

'ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை நன்னெறிகள் உண்டு.அவற்றிலிருந்து எப்போதும்,எந்த காரணத்துக்காகவும்..நாம் விலகிவிடக் கூடாது.நாம் செய்வது பிஸினஸ் என்றாலும்..இந்த சமூகத்தில் நமக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது.முதலீட்டாளர்கள் நலனைக் காப்பது ஒரு கம்பெனியின் நோக்கமாக இருக்கலாம்.அதே சமயம் கம்பெனியில் பணிபுரிபவர்களின் நலனை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.இதுபோன்ற கொள்கைகள்தான் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான அஸ்திவாரம்' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்..சத்யம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லை என்பதும்,அவர்களின் கிரடிட் கார்ட் லிமிட் குறைக்கப்பட்டுவிட்டது என்றும்..அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன் தவணைப் பணத்தை நெருக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளதாகவும்..செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

Friday, January 9, 2009

தேங்காய்...மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(10-1-09)

1.தமிழகத்தின் ஜனத்தொகை 7 கோடிக்கும் அதிகம்.அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 1/2 முதல் 6 கோடிக்குள் இருக்கும் என வைத்துக் கொண்டாலும்..இதில் தி.மு.க.வில் 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அதாவது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தமிழர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்கள்.தேர்தலில் 33 முதல் 35 சதவிகிதம் வரை ஓட்டுப் பெறுபவர் ஆட்சி அமைக்கும் நிலை இருந்து வருகிறது.தி.மு.க. 10 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் ஆதரவுள்ள கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால்..அது அசைக்க முடியா கூட்டணி ஆகும்.(காங்கிரஸ் ஆதரவாளர்கள் 5 சதவிகிதம் இருப்பார்களா..என்பதே சந்தேகம்)ஆகவே தி.மு.க.,காங்கிரஸ்,பா.ம.க., (அல்லது விஜய்காந்த்)கூட்டணி அமைந்தால் 40 ம் நமதே எனலாம்.

2.மேன்மையான எண்ணங்களுடன் இருப்போர்..எப்போதும் தனித்து இரார்.உண்மையான நட்பு என்னும் செடி..மிக மெதுவாகத்தான் வளரும்.

3.கஷ்ட காலங்களில் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்றாலும்..நாய் கடிக்கத்தான் செய்யும்.

4. அண்ணாவின் ஆங்கிலப் புலமை உலகம் அறிந்தது.ஒருவரின் ஆங்கிலப் புலமையை சோதிக்க நினைத்த வெளிநாட்டவர்..Because என்று தொடர்ந்து மூன்று முறை வரும்படி வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேட்டனர்.
உடனே அண்ணா..சற்றுக்கூட யோசியாமல்..No sentence end with because, because..because is the conjunction என்று பதிலளித்தார்.

5'ஒரு பழமொழி
எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய்..இளம் பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்
(மலச்சிக்கலுக்கும்...அண்மையில் பிரசிவித்த தாய்க்கும் உண்டாகும் மூலத்திற்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து)

6.குழந்தைகளுக்கு ஒரு பாட்டு..

அம்மாவால் மட்டுமே முடியும்..
--------------------------------------

வட்டம்

வட்டமானி இல்லாமல்

அளவுகோல் இல்லாமல்

மையப் புள்ளியும் வைக்காது

சரியான விட்டங்களுடன்

மல்லிகைப்பூ போல

மென்மையும், மணமுமாய்

வட்ட தோசை

அம்மாவால் மட்டுமே

போட முடியும்.

உறவுகளும்..நாமும்...

உறவுகள்...

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!

Thursday, January 8, 2009

நான் ராமதாஸை ஆதரிக்கிறேன்

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்ரு.வாக்குப்பதிவு 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

தி.மு.க.விற்கு...மக்கள் தங்கள் பக்கம் என நீருபிக்க வேண்டியது கட்டாயம்..ஏனெனில்..நடப்பது அவர்கள் ஆட்சியாய் இருப்பதால்.

அ.தி.மு.க.விற்கோ..ஜெயித்தால்...தி.மு.க.ஆட்சியை மக்கள் விரும்பவில்லை..என்ற ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.

மூன்றாவதாக இருக்கும் விஜய்காந்திற்கோ..தன் கட்சியின் வாக்கு சதவீகிதம் தெரிந்துக்கொள்ள ஆசை.

சரத்குமாருக்கோ...ஒரு கணிசமான அளவு ஓட்டுக்கள் வாங்கிவிட்டால்..அதைவைத்து..ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டு வைத்து..குடும்ப உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.ஆகும் கனவு.

காங்கிரஸிற்கோ..வரும் பாராளுமன்ற தேர்தலில்..யார் முதுகில் சவாரி செய்யலாம்..என தீர்மானிக்கும் தேர்தல்.

இதற்கு இவர்கள் கடந்த சிலநாளில்..செலவழித்தகோடிக்கணக்கான பணம்...அடிதடியில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை...தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட..நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள்,காவல்துறை,ராணுவத்தினர் குவிப்பு..அரசு செலவழிக்கும் மக்கள் வரிப்பணம்..இத்தியாதி...இத்தியாதி...

ஒரு இடைத்தேர்தல் தேவையா..என்பதே கேள்வி.

பொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்.பிறக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது.லட்டுக்குள் மூக்குத்தி ஆகியவைக் களுக்கான செலவும் இல்லை.இந்த விஷயத்தில்.... ராமதாஸிற்கு என் முழு ஆதரவை தெரிவித்துக்
கொள்கிறேன்

படித்ததும்...கேட்டதும்...

1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்களாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது


2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.

3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்ரின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன

Wednesday, January 7, 2009

அப்பா........(சிறுகதை)

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

Tuesday, January 6, 2009

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்..

இப்போது பதிவர்கள் எண்ணிக்கையும்..பதிவுகளின் எண்ணிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.ஆகவே..ஒரு பதிவர் இடும் பதிவு..சில நேரங்களில் அரை மணி நேரம் கூட..முகப்பில் இருப்பதில்லை.

அதற்கு..அந்த நேரங்களில் எதுவும் பின்னூட்டம் இல்லையெனில்..அதன் ஆயுள் அவ்வளவுதான்.என்னதான் அப்பதிவரின் அடுத்த பதிவில்..முந்தைய பதிவு குறிப்பிட்டிருந்தாலும்.

முகப்பு பக்கத்தில் கிட்டத்தட்ட 16 இடுகைகளின் விவரங்கள் வருகின்றன..ஒவ்வொரு இடுகையின் சில வரிகள் வேறு இடங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.


ஆகவே...

இக்குறையைப் போக்க..

தமிழ்மணம் ஒவ்வொரு இடுகையின் ஒன்று அல்லது இரண்டு வரிகளை போட்டால் போதும்.

இரு இடுகைகள் நடுவே இடைவெளியையும் குறைத்தால்..இன்னும் சில இடுகைகளையும் காட்டமுடியும்.இதனால் முகப்பில் இடுகை காணப்படும் நேரம் சற்று அதிகரிக்கும்.

தமிழ்மணம் இதைச் செய்யுமா?

பதிவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க தம்ஸ் அப்பில் ஒரு கிளிக் செய்யவும்.

கேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்

இலங்கை‌த் த‌மிழ‌‌ர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி இல‌ங்கை‌க்கு‌ச் செ‌ன்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இல‌ங்கை‌க்கு‌ப் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களு‌ம் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.

இவ்வாறு அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறினார்.

நன்றி -வெப் துனியா

Monday, January 5, 2009

படித்ததும் கேட்டதும்....

1.இன்னும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணை வேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தான்.

2.ஒரு சமூகத்திற்கு அரசியல்தான் ஆணிவேர்..அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமாகத்தான் இருக்கும்

3.ஒருமுறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசினால்தான் நாம் கனவு காணும் சமத்துவ நாடு உருவாகும்.

4.கார்கில் யுத்தத்தில் நாட்டைக் காக்க போராடிய ராணுவ வீரர்களுக்கு செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல்.திரும்புகிற பக்கமெல்லாம் ஊழல்.பார்க்கிற பக்கமெல்லாம் லஞ்சம்.

5.teenage is the time when your children begin to question your answers

6.மனிதனின் தீயசெயல்களை மட்டுமே பார்த்து அதன் காரணமாக அவரை நாம் ஒதுக்கிவிடக்கூடாது.அந்த மனிதன் நாளடைவில் நல்லவனாக மாறக்கூடும்.ராமருக்கு தான் காட்டுக்குப்போக காரணம் கைகேயி என்று தெரிந்தும்..புறப்படும் வேலையில் அவளை நமஸ்கரித்துவிட்டு செல்லவில்லையா?யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் எனத் தெரிந்தும் ..ஏசு கிறிஸ்து கடைசி விருந்தின் போது அவன் பாதங்களை கழுவவில்லையா?தினமும் தன் மீது சகதியை எறிந்து அவமானப்படுத்திய பெண்மனிக்கு...நோய் வந்தபோது யாரும் சொல்லாமலேயே நபிகள் நாயகம் சென்று சேவை செய்யவில்லையா?

7.மனிதனைவிட மிருகங்கள் மேல்...ஏனென்றால்..அவற்றிடம்தான் ..பொறாமை,குரோதம்,சுயநலம்,அடுத்தவனைக் கெடுக்கும் ஈனத்தனம் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா..குழந்தைகள் போல.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...

1. அண்ணாசாமியின் நண்பர் ஒருவர் ஃபோன் செய்தார்..ரிசீவரை எடுத்தவரிடம்..நான் தான் பேசுகிறேன் என்றது..குரல்..
உடனே அண்ணாசாமி- என்ன ஆச்சர்யம்...இங்கேயும் நான் தான் பேசுகிறேன் என்றார்.

2.புத்தாண்டு அன்று அண்ணாசாமி..கலர் டி.வி.ஒன்று வாங்கச் சென்றார்..
அண்ணாசாமி-(கடைக்காரரிடம்)-கலர் டி.வி.இருக்கா?
கடைக்காரர்-பல மாடல்கள் இருக்கிறதே..உங்களுக்கு எது வேண்டும்
அண்ணாசாமி-பச்சைக் கலர் கொடுங்க

3.அண்ணாசாமி..தன் நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு..ஒரு குறிப்பிட்ட படத்துக்கு வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் மனைவி..ஏன் இப்படி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என வினவ...அதற்கு அண்ணாசாமி....இந்த படத்திற்கு..பிலோ 18 நாட் அல்லௌட் என்றார்.

4.முதல் முறையாக அண்ணசாமிக்கு போயிங்க் விமானத்தில் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஃப்ளைட்டிற்குள் சென்றதும் உற்சாகம் மேலிட...Boeing..Boeing..என கத்தினார்.உடன் விமானி..Be silent என்றார். அண்ணாசாமி ஓயிங்க்...ஓயிங்க் என கத்த ஆரம்பித்தார்.

5.அண்ணாசாமி ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றார்..அவரிடம்..5+4..எவ்வளவு எனக்கேட்க..9 என்றார். சரியான விடை என்ற தேர்வாளர்..அடுத்து..4ம் 5ம் எவ்வளவு என்றார். இப்படி தலைகீழாக கேட்டால்..எனக்குத் தெரியாதா..விடை 6 என்றார்.

Sunday, January 4, 2009

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை(??!!) அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.
இதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.

இந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.

ராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.

காங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.

காங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.

ராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..

பாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...

பொறுத்திருந்து பார்ப்போம்.

(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)

Saturday, January 3, 2009

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)

1.பெண்கள் தலையில் பின்னல் போடுவதன் தத்துவம் என்ன தெரியுமா?
பின்னலை மூன்று கால்கள் எடுத்துப் போடுவார்கள்.பக்கங்களில் இருக்கும் இரு இழைகளும் அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் குறிக்கின்றன.நடு இழையை வைத்து மற்ற இரு இழைகளும் மாறி மாறிப் பின்னப்படுவது அந்தப் பெண் நடுனாயகமாக இருந்து,பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு சிறப்பைத் தேடித் தரவேண்டும் என்பதுதானாம்.

2.இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
கேட்டுக் கெட்டது குடி
கேளாமல் கெட்டது கடன்
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு.

(இதன் பொருள்;- குச்சி,பின் போன்றவற்றை இட்டுக் குடைவதால் கெட்டது காது.மை.நெய் முதலியவைகளை இட்டுப் பராமரிக்காததால் கெட்டது கண்.செல்லம் கொடுத்து வளர்த்ததால் கெட்டது பிள்ளை.அக்கறையின்றி கவனிக்காமல் விட்டதால் கெட்டது நிலத்திலிட்ட பயிர்.வதந்திகள்,கோள் பேசுவதைக் கேட்டதனால் கெட்டாது குடும்பம்.கொடுத்ததை நினைவுபடுத்தாமல் கேளாமல் விட்டதால் கெட்டது கடன்.கண்டபடி உண்டதால் கெட்டது வயிறு..உறவினர் வீடுகளில் நல்லது,கெட்டதுகளில் கலந்து கொண்டு..ஒரு வேளையாவது உண்ணாமல் செல்வதால் கெட்டது அந்த உறவு)

3.பெரிசுகள் இளம் தம்பதிகளை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என ஆசிர்வதிப்பர்.அந்த பதினாறு என்ன என்ன தெரியுமா?
1.புகழ்,2.கல்வி,3.வலிமை,4.வெற்றி5.நன்மக்கள்6.பொன்7.நெல்8.நல்லூழ்9.நுகர்ச்சி10.அறிவு11.அழகு12.நோயின்மை13.வாழ்நாள்14.பெருமை15.இளமை16.துணிவு

அவரவர் பார்வையில்....(சிறுகதை)

அவள்:-

நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.

எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.

ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.

அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.

அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.

இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.

அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.

திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'

'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Thursday, January 1, 2009

கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்

ஒருவர் கவிஞராக இருப்பார்..அல்லது
எழுத்தாளராக இருப்பார்..அல்லது
திரைப்பட வசனகர்த்தாவாக இருப்பார்..அல்லது
இலக்கியவாதியாக இருப்பார்..அல்லது
திரைப்பட பாடலாசிரியராக இருப்பார்..அல்லது
அரசியல்வாதியாக இருப்பார்.....ஆனால்
தமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.
ஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.

இப்பதிவு...திரைப்பட பாடலாசிரியராக கலைஞர்.

பல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.

1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..

அருமைக் கன்னுக்குட்டி - என்
எருமைக் கன்னுக்குட்டி...
ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு
குற்றம் அறியான்டி
உதைப்பட்டு சாவான்டி....
என்று வரும் வரிகள்...

அடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...

பொதுநலம்..என்றும் பொதுநலம்
புகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்
பொதுநலம்.....
என்ற பாடல்..(இப்பாடல் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)

பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினில்
மறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.


மறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....

காகித ஓடம் கடலலை மேலே
போவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.

எல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...

பூமாலை..நீயே
புழுதி மண்மேலே-வீணே
வந்தேன்..தவழ்ந்தாய்....என்ற பாடல்.

தவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..
ராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.

எனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.
கடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா?

அண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து

எனக்கு வந்திருந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளில் அதி புத்திசாலி அண்ணாசாமியின் வாழ்த்து வித்தியாசமாக இருந்தது.

Happy New Year 2009 என்றும்

அடுத்த வரியில்

இனிய தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி இருந்தார்.அவரை அலை பேசியில் அழைத்து நன்றி தெரிவித்து விட்டு 'ஏன் இப்படி அனுப்பினீர்கள்?'எனக் கேட்டேன்.

சாதாரணமாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துடன்,பொங்கல் வாழ்த்தும் இணைந்து அனுப்புவேன்.இந்த ஆண்டு முதல் தமிழ் புத்தாண்டும்..பொங்கல் அன்று ஆனதால்..மூன்றிற்கும் சேர்த்து இவ்வாழ்த்து.இல்லாவிட்டால்..நாளடைவில்..பொங்கலுக்கு வாழ்த்து சொல்வது..விவசாயிகளை நாம் மறந்தது போல...மறந்து விடுவோம் என்றார்.

பதிவர்கள் அனைவருக்கும்..ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மறந்து விட்டேனே..

முன்னதாகவே...தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

'பொங்கும் மங்கலம்....எங்கும் தங்குக'