Wednesday, February 23, 2011

உலகின் மிகப் பெரிய ஜோக்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசினார்.

÷ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, வட்ட, நகர, கிராம இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்தில் அகில இந்திய பொதுசெயலாளர் பிரிவர்ந்சிங் பேசுகையில், "வரும் பஞ்சாயத்துத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

÷இதில் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக சிறப்பாக செயல்படும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.

÷மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசுகையில், "தமிழகத்தில் 63 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சியை பிடித்து விட முடியும்.

÷காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஒதுக்கப்படும் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர் காங்கிரஸýக்கு ஒதுக்க கேட்டு வருகிறோம்.

÷அதில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்.


அதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக அளவில் சீட் வழங்கப்படும்' என தெரிவித்தார்.

கூட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருவிபாபு தலைமை தாங்கினார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜாகிர் அப்பாஸ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தீனத்குமார், சுதாபிரசாத், நரேஷ்குமார், ஜெயசரவணன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், விஜய்ஆனந்த், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி துணைத் தலைவர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


(நன்றி தினமணி)


(காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்ன இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சொன்ன ஜோக் உலகளவில் முதலிடத்தை பெறும் ஜோக் என்பதில் ஐயமில்லை)

தலைவர்களின் எண்ணங்கள் - நகைச்சுவைசொக்கத்தங்கமே..கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..ஆட்சியில மட்டும் பங்கு கேட்காதீங்க..


மற்ற எது நடந்தாலும் பங்கு கொடுத்துடறேன்..

ஏமாந்தா கலைஞர் கோவணத்தைக் கூட பிடுங்கிக் கிட்டு விட்டுடுவார்னு சொன்னது உண்மை..ஆனா..அதை அவர் மனசில வெச்சுக்கல
 
 
போன  சட்டசபைத் தேர்தல்ல கடைசி நிமிஷத்திலே தி.முக., வைவிட கொஞ்சம் சீட் அதிகம் கொடுத்ததால் அம்மாகிட்ட ஓடினாப் போல இந்த முறை கலைஞர் கிட்ட ஓட வேண்டி இருக்குமோ


 ..மீண்டும் மக்களோட கூட்டணின்னு சொல்லிடலாம்னா பண்ருட்டிக்கூட சீட் வேணாம்னு சொல்லிடுவார் போல இருக்கே


(-தலைவரா ஆகணும்னு ஆசைப்படறதால காசா..பணமான்னு விஜய்யைக் கூட தலைவர்கள் லிஸ்ட்ல சேர்த்துட்டேன்)

முதல்  முதல் அரசியல் தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ


 பாருங்க விஜய்காந்த்..ஒழுங்கா நான் கொடுக்கறதை வாங்கிக்கங்க..இல்லன்னா..எந்தத் தொகுதியிலேயும் டெபாசிட் கூட வாங்க முடியாது

 

 என்ன சொன்னாலும் .கே., தயவு செஞ்சு எங்களையும் ஆட்டத்தில சேர்த்துக்கங்க


., காங்கிரஸ் கூட்டணி ஒடைஞ்சா..நம்ம பாடு ஆபத்து ஆச்சே. ஆச்சுன்னா என்னை தி.மு..,வில சேர்த்துப்பீங்களா

'‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை தா‌ண்டியத‌ற்கு டி.ஆர்.பாலுதா‌ன் காரண‌ம்'

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உ‌ள்‌ளி‌ட்ட படகு உரிமையாளர்கள் வற்புறுத்தியதால்தான் தாங்கள் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் கூறியதாக இலங்கை மாடக்கால் பகுதி அருள்தந்தை ஆனந்த குமார் தெரிவித்திருக்கிறார்.


செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அ‌வ‌ர், இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவி, வலையைச் சேதப்படுத்தும் வகையிலான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு தங்களை படகு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியதாகவும், படகுகளில் பெரும்பாலானவை முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்ததாக அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மீனவர்கள் 'எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு கூலி கிடைக்கும். குறைந்த அளவு மீன் பிடித்தால், படகு உரிமையாளர்கள் அவர்களுக்கு குறைந்த கூலிதான் தருவார்கள். இந்திய கடல்பகுதியில் குறைந்த அளவு மீன்களே கிடைக்கின்றன. அதனால்தான் இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் வருகிறார்கள். எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு படகு உரிமையாளர்களும் வற்புறுத்துகிறார்கள்'' எ‌ன்று அரு‌ள்த‌ந்தை ஆன‌ந்தகுமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌சிறை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு இலங்கை கடற்படை எந்த வகையிலும் காரணமில்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ள ஆன‌ந்தகுமா‌ர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரும், தி.மு.க.வினரும்தான் இந்த ‌நிக‌ழ்வுகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் வருவதால் தனது அரசியல் எதிரிகளைத் தோற்கடிப்பதற்குத்தான் மீனவர் பிரச்சனை தி.மு.க.வுக்கு உதவியிருக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ஆன‌ந்தகுமா‌ர், அதேபோல், இங்குள்ள அரசியல் தலைவருக்கும் இந்தப் பிரச்சனை பயன்பட்டிருக்கிறது எ‌ன்று‌ம் இந்த அரசியல் தலைவர் தன்மீது தமிழகத்திலுள்ள வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தி.மு.க அரசுக்கு உதவி வருகிறார் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சிறைபிடிக்கப்பட்ட ‌நிக‌ழ்வே, இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்திய நாடகம்'' என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் அவர்கள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

(நன்றி வெப்துனியா )

Tuesday, February 22, 2011

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இன்னும் கேள்விக்குறியா?

தி.மு.க.,, காங்கிரஸிற்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் ஐவர் குழு அமைத்து பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில்..அப்பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு,குறைந்த பட்ச செயல் திட்டம்,ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளது.ஆனால் தி.மு.க., தரப்பு அதெற்கெல்லாம் அவசியமில்லை என தெரிவிக்கிறது.

மேலும்..ஆட்சியில் பங்கு என்பதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும், அப்படியே இருந்தாலும் அதை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தி.மு.க., தரப்பு கூறுகிறது.

ஏற்கனவே 80 தொகுதிகள் கேட்டுவரும் காங்கிரஸின் இந்த நிபந்தனைகளால் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்று தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது.

கலைஞர் தரப்பில் டி.ஆர்.பாலு தில்லிச் சென்று சோனியாவை சந்திக்க உள்ளார்.

சோனியா தலையிட்டால் தான் சுமூகமான தீர்ப்பு ஏற்படும் எனத் தெரிகிறது..

அதுவரை......

திருமாவளவனுக்கு ஒரு கேள்வி

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்களை கலந்து கொள்ள சென்ற தன்னை கொழும்பு விமானநிலையத்தில் தடுத்தி மீண்டும் திருப்பி அனுப்பிய இலங்கையைக் கண்டித்து, சென்னையில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தனிச் செயலாளர்கள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இளஞ்சேகுவாரா ஆகியோர் இலங்கை சென்றனர்.

அவர்களை வல்வெட்டித் துறைக்கு அனுப்ப மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும்.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது...", என்றார்.
  திருமாவளவனுக்கு ஒரு கேள்வி

மத்திய அரசை குறைசொல்லும் இவர் அவர்கள் இணைந்த கூட்டணி யில் 
இருந்து  வெளியே வருவாரா ?

Monday, February 21, 2011

முதல் அரசியல் போராட்டம்- நடிகர் விஜய்

தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். 'சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்', என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.

பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம்.

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.

அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.

உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்", என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

(நன்றி தட்ஸ் தமிழ் )

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)

நம்ம தலைவரோட மகன் ஏன்..தன் பெயருக்குப் பின்னால வருங்கால எம்.பி., ன்னு போட்டுக்கறார்

கூட்டணியிலே 2016ல ராஜ்யசபா சீட் ஒதுக்கறேன்னு சொல்லியிருக்காங்களாம்2)நம்ப தலைவருக்கு 10 தொகுதி கூட்டணியிலே கொடுத்தும் ஏன் வருத்தமா இருக்கார்

10 வேட்பாளரை எங்கே போய்த் தேடரதுன்னு தான்3)தலைவர் கூட்டணி தொகுதி பங்கீடு முடிஞ்சு சந்தோஷமா வராரே..

ஆமாம் அவர் 80 தொகுதி கேட்டாராம்..60 தொகுதிக்கு நேரடி வேட்பாளராய் இருக்கலாம்னும் 20 தொகுதிக்கு டம்மி வேட்பாளரை நியமிக்கலாம்னு சொல்லியிருக்காங்களாம்4)தலைவர் வீட்டு வாசலிலே வரிசையா ஏன் இவ்வளவு கூட்டம்..

அவ்வளவும் உதிரிக் கட்சித் தலைவர்களாம்..எல்லாரையும் கூட்டணியிலே தலைவர் சேர்த்துக்கிட்டு இருக்காராம்5) விஜய்காந்த் கூட்டணி விஷயத்திலே இன்னும் ஏன் மௌனமாய் இருக்காராம்..

கடவுளோட கூட்டணி இன்னும் முறியலையாம்.6)தலைவர் ரொம்ப வெகுளின்னு எப்படிச் சொல்ற

அலைவரிசை ஊழல்னா கடல் வத்தியிருக்காதான்னு பேசறாரே7)தலைவர் உன் வீட்டு போர்ஷனுக்கு வாடகைக்கு வராரா..ஏன்?

தனக்கு சொந்த வீடு இல்லை என சொத்துக் கணக்குக் காட்டிவிட்டாராம்.8)(தலைவர் கூட்டத்தில் பேசுகிறார்) உங்களால்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்ய முடியும் என இறுமாப்பில் பேசாதீர்கள்..மக்கள் எங்களிடம் ஆட்சியைக் கொடுத்துப் பார்க்கட்டும்.எங்களாலும் முடியும் என நிரூபித்துக் காட்டுகிறோம்

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?-

 தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எச்சரிக்கை கலந்த அறிவுரை கூறும் வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில், இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?- என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்கு முன்பு நடிகர் விஜயகாந்த், தே.மு.தி.க. என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அந்தக் கட்சியைத் தொடங்கிய போது பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. போன்ற பல்வேறு கட்சிகளிலும் இருந்து அதிருப்தியாளர்கள் சிலரும் அதிலே சேர்வதில் அக்கறை காட்டினார்கள். அவர் எடுத்த எடுப்பிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாகத் தாக்கிப் பேச ஆரம்பித்ததையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு பார்ப்பன ஏடுகளும் அவரை போட்டி போட்டுக் கொண்டு ஆதரித்தன.

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் 234 தொகுதிகலும் தனியாகவே போட்டியிட்டார். அதில், அவரது கட்சி 234 தொகுதிகளிலும் 5 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று ஓட்டு வாங்கியது. நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அது தனது டெப்பாசிட்டையே பறிகொடுத்தது. என்றாலும், மொத்தத்தில் 8 சதவிகித ஓட்டுகளை அது 234 தொகுதிகளுக்குமாகச் சேர்த்து எடுத்து விட்டது.


விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே ஒரே ஒரு வேட்பாளர் தே.மு.தி.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல, விஜயகாந்தே தான்!


2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 11 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடந்தன. எல்லாத் தொகுதிகளிலும் விஜயகாந்த் கட்சி போட்டியிட்டது. அத்தனை தொகுதிகளிலும் தோல்வி, தோல்வி, படுதோல்வி தான்.

2006 லிருந்து இன்று வரையிலான கால கட்டங்களில் அவர் நிறைய சினிமாப் படங்களில் நடித்துக் கொண்டே இருந்தார். வெளிவந்த எல்லாப் படங்களுமே ஓடாமல் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. எனினும் அவர் பெரும்பாலான நேரத்தை சினிமா படப்பிடிப்பிலேயே கழித்து வந்தார்.

கடைசியாக 2010-ம் ஆண்டில் கூட தமது மைத்துனரின் தயாரிப்பில் உருவான ‘விருத்தகிரி’ என்ற சினிமாவின் படப்பிடிப்பிற்காக அவர் மலேசியா, ஹாங்காங் போன்ற வெளிநாடுகளிலேயே ஆறு, ஏழு மாதங்கள் தங்கி அந்தப் படத்தில் நடித்ததோடு படத்தையே அவர் தான் இயக்கினார்.

விக்கிரமாதித்தன் கதையில் விக்கிரமாதித்த மகாராஜா நாடாறு மாதம், காடாறு மாதம் போனதாக கதையிருக்கிறது. அதாவது விக்கிரமாதித்த மகாராஜா ஓர் ஆண்டில் ஆறு மாதம் நாட்டில் இருந்து ஆட்சி நடத்துவார். அடுத்த ஆறுமாதம் காட்டுக்குப் போய்விடுவார் என்பதே அந்தக் கதை.

விஜயகாந்தைப் பொறுத்த வரையில் அரசியலில் ஆறு மாதம், சினிமாவில் ஆறு மாதம் என்றுகூட அல்ல, பெரும்பாலான மாதங்கள் சினிமாவிலும், சில மாதங்களே அரசியலிலுமாக காலத்தைக் கழித்து வந்தார்.

இந்தக் கால கட்டத்திற்குள்ளாக அவரது கட்சியில் எல்லா மாவட்டங்களிலும் கோஷ்டிச் சண்டைகள் தலைவிரித்து ஆடின. பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தே.மு.தி.க.வை விட்டு விலகி வேறு கட்சிகளில் சேர்ந்தார்கள்.

எனினும் விஜயகாந்த் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் பெயரில் சென்னையிலிருந்து ஒரு அறிக்கை நாள் தவறாமல் வந்து கொண்டிருக்கும். அந்த அறிக்கைகள் முழுவதிலும் தி.மு.க. மீதும், தி.மு.கழக ஆட்சி மீதும், முதல்வர் கலைஞர் மீதும் புழுதிவாரித் தூற்றப்பட்டிருக்கும்.

அதனாலே பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அவரது அறிக்கைகளை, தங்களது தி.மு.க. துவேஷம் காரணமாக பெரிதுபடுத்தி பிரசுரித்து வந்தன. அந்த அறிக்கைகளைத் தவிர தமிழக அரசியலில் அவர் நேரடியாகப் பங்கு பெற்றது என்பது மிகமிக மிக மிகக் குறைந்த அளவு காலமே ஆகும்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தப்பித் தவறி அவர் பங்கு கொண்டாலும் தி.மு.க.வைத் தாக்குவது தவிர வேறு எதுவும் அவரது பேச்சில் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம், ‘‘தேர்தலில் நீங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்கள்’’ என்று அரைத்த மாவையே அரைப்பது போல திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.

விஜயகாந்தும் சளைக்காமல், "நான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேரமாட்டேன். மக்களோடும், தெய்வத்தோடும்தான் எனது கூட்டணி அமையும்" - என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார்.

எனினும் பார்ப்பன ஏடுகள், அவரது பேட்டிகளை, பேச்சுகளை பக்கம் பக்கமாக வெளியிடும். என்ன காரணம்? அவர் தி.மு.க.வை எதிர்க்கிறார், அவரது தி.மு.க. எதிர்ப்பு அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும் என்பதாக நினைத்து அந்தப் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்த் தும்மினாலும் இருமினாலும் உளறினாலும் ஓஹோ, ஓஹோ என்று புகழ்ந்தே எழுதும்.

இப்படி அந்த ஏடுகள் எல்லாம் தன்னை புகழ்ந்து எழுதுவதைக் கண்டு விஜயகாந்துக்கும் தலை நாளுக்கு நாள் கணத்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் உண்மையாகவே தன்மீது மதிப்பும், மரியாதையும் வைத்துத்தான் தன்னைப் புகழ்கிறார்கள் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டார்.

அடுத்து வரும் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும். அப்படிச் சேர்த்தால் ஜெயலலிதா வெற்றி உறுதியாகிவிடும். அவர் மீண்டும் பதவிக்கு வந்து பார்ப்பன ஆட்சியை ஸ்தாபித்து விடுவார் என்கிற பார்ப்பன ஜாதி அபிமானத்தினாலேயே அந்த ஏடுகள் தன்னை ஆதரிக்கின்றன என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ளவில்லை.

டிசம்பர் மாதம் வரையில் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்தைத் தொடர்ந்து புகழ்ந்துதான் எழுதி வந்தன. அந்தக் கால கட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சத்தீசும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ரகசிய பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் கிசுகிசு பாணியில் கசிந்து கொண்டு இருந்தன.

ஆகவே விஜயகாந்த் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பிலும், மகிழ்ச்சியிலும் அவை முன்னைவிட அதிகமாக விஜயகாந்தைப் புகழ ஆரம்பித்தன.

தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் மகத்தான சக்தியாக விஜயகாந்த் தான் விளங்குகிறார். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அவருக்கே உண்டு என்றெல்லாம் எழுதி வந்தன.

ஆனால், சமீபத்தில் சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில்,

1. எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை,

2. பார்ப்பன ஏடுகள் எதிர்பார்த்ததுபோல ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிக்கவுமில்லை.


ஆகவே பார்ப்பன ஏடுகளுக்கு அது நாள் வரை விஜயகாந்த் கட்சிமீது இருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. விஜயகாந்த் பார்ப்பன ஆட்சி மலரும் விதத்தில் ஜெயலலிதாவை ஆதரிக்க மாட்டாரோ என்ற சந்தேகம் அவைகளிடம் வலுத்துவிட்டது. இப்போது சில ஏடுகள் விஜயகாந்தை குறை கூறியும், குற்றம் சாட்டியும் எழுத ஆரம்பித் துள்ளன.


ஒரு ஏடு,

"கடந்த 5 ஆண்டு கால சட்டமன்றத்தில் விஜயகாந்தின் சட்டமன்றப் பணி என்று குறிப்பிட எதுவுமில்லை. எப்போதாவது ஓரிரு தடவைகள் தான் அவர் சட்டமன்றக் கூட்டங்களிலேயே கலந்து கொண்டார். அப்போதும் கூட அவர் தமது தொகுதியின் மேன்மைக்காகவோ அல்லது மக்கள் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ பேசியது இல்லை. அவரது சட்டமன்றப் பணி என்பது குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமற்றதாகவே அமைந்து விட்டது."

- என்று விஜயகாந்தை முதன் முறையாக குற்றம்சாட்டி குறைகூறி எழுதியிருக்கிறது.


அதுவும் தவிர,

கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த சட்ட மன்றக் கூட்டங்களில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசிய மொத்த நேரமே ஒன்றரை மணி நேரம்தான் என்ற குற்றச்சாட்டும் கூடவே எழுந்துள்ளது.

இதைத்தான் நாம் கடந்த 5 ஆண்டு காலமாக விஜயகாந்துக்கு சுட்டிக்காட்டிய வண்ணமே இருந்தோம்.

பார்ப்பன ஏடுகள் உங்களைப் பாராட்டுவதையெல்லாம் நம்பி விடாதீர்கள். பார்ப்பனத்தி ஜெயலலிதா, தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியில் அமர நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்ற ஜாதி அபிமானத்துடன் தான் அவர்கள் உங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை என்று நீங்கள் எப்போது அறிவித்தாலும் அந்த வினாடி முதலே பார்ப்பன ஏடுகள் உங்களை, கடுமையாகத் தாக்கி உங்கள் மதிப்பைக் குறைத்து, இகழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடும்.

என்று எச்சரித்தபடியே இருந்தோம்.

இப்போதுதான், அந்த எச்சரிக்கை மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது. விஜயகாந்த் அ.தி.மு. க.வுடன் கூட்டணியில்லை என்று உருவானால், அந்த வினாடி முதலே விஜயகாந்தின் கட்சியை நார் நாராகக் கிழித்து காற்றில் பறக்க விட்டு விடும், அந்தப் பார்ப்பன ஏடுகள்.

அது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. இனியாவது விஜயகாந்த் அந்த ஏடுகள் தன்னைப் புகழ்ந்து எழுதியது அல்லது எழுதுவது எதற்காக என்பதைப் புரிந்து கொள்வார் என்று நம்பலாமா?

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

(நன்றி -தட்ஸ்தமிழ் )Sunday, February 20, 2011

போங்கடா..நீங்க எல்லாருமே திருடன்கள்தான்..

அசோஷியேசன் ஆஃப் டெமாகிரிடிக் ரிஃபார்ம்ஸ் என்னும் அமைப்புக்கு  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் படி

2007-08,2008-09 க்கான இரண்டு நிதியாண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 717 கோடியே 69 லட்சங்கள்.பா.ஜ.க., வின் வருமானம் 251கோடியே 76 லட்சம்.

மார்க்ஸிஸ்ட் 122 கோடியே 53 லட்சம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 2 கோடியே 40 லட்சம்தான்.

நம் நாட்டில் ஜனநாயகம் வளர வேண்டும் என தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது.

ஆனால், சற்று நினைத்துப் பார்ப்போம்..

கோடிக் கணக்கில் ஆளும் கட்சிக்கு ஆயினும் சரி,எதிர்க்கட்சிக்கு ஆயினும் சரி நன்கொடைகளை தனியார் நிறுவனங்கள் வழங்குமே யாயின்..அதற்கான காரணம் ஜனநாயகம் தழைத்து ஓங்கத்தான் என்றால் மக்கள் வாயால் மட்டும் சிரிக்கமாட்டார்கள்.

இப்படி நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் பதிலுக்கு எவ்வளவு சலுகைகள் எதிர்பார்க்கும்.அவற்றை நிறைவேற்றிக் கொள்ள லஞ்சம்,கமிஷன் என எவ்வளவு கோடிகள் பிறகும் தனிப்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியிருக்கும்..

இப்படி செலவழிக்கும் பணத்தை ஈட்ட..யாரிடம் அந்நிறுவனங்கள் பணத்தைப் பறிப்பர்..

ஊழல்..ஊழல் என ஆளும் கட்சியாயினும் சரி, எதிர்க்கட்சியாயினும் சரி..குரல் கொடுக்குமேயானால்..மக்களுக்குத் தெரியும்..'உனக்குக் கிடைக்க வேண்டிய பங்குக் கிடைக்கவில்லை..அதனால்தான் நீ கூப்பாடு போடுகிறாய் என'

இந்நிலையில் ஒரு வேட்பாளர் தன் தொகுதியில் 16 லட்சம் வறை தேர்தல் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்கிறது.தனி வேட்பாளர் 16 லட்சம் செலவு செய்கிறார் என்றால்..மேலும் அத்தொகுதிக்கு கட்சி எவ்வளவு செய்யும்..கணக்கில் வராமல்..

பணக்காரன் மட்டுமே தேர்தலில் நிற்க முடியுமெனில் இதற்குப் பெயர் ஜனநாயகமா?

என்று கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல்..வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கும் காலம் வருமோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் நடக்கிறது எனலாம்.அதற்கான வழி வகுக்க தகுந்த சட்ட திட்டங்கள் உருவாக வேண்டும்.

அதுவரை..போக்கிரிகளையும், கிரிமனல் குற்றவாளிகளையும்..தான்  நம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.ஏனெனில், இந்த விஷயத்தில் தான் அனைத்துக் கட்சி உறுப்பினர் தகுதிகளும் உள்ளது எனலாம்.


Saturday, February 19, 2011

சூத்ரதாரிஉயர உயரப் பறக்குது

காத்தாடி

கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்

கட்டாந் தரையில்

கை நூல் அறுந்ததும்

கட்டுப்பாட்டை இழந்து

பறந்த காத்தாடி

விர் ரென கீழே விழ

விழுந்திடும் என

பறக்கையிலேயே தெரியும் என்கிறான்

சூத்ரதாரிகருணாமூர்த்தியும்..மாருதியும்

வாசலில் வந்து நின்ற மாருதியைப் பார்த்து, 'என்னய்யா, என்ன விஷயம்' என்றார் கருணாமூர்த்தி.

'ஒன்றுமில்லை' என்றவாறே, பற்களை எல்லாம் இழந்து..ஏற்கனவே கட்டிக் கொண்டிருந்த முப்பத்தி இரண்டு பற்களில், ஒன்று உடைந்துவிட,பதின்மூன்றை இழந்து மீதமிருந்த பதினெட்டுப் பற்களைக் காட்டி இளித்தான் மாருதி.

வழக்கமாய் எல்லோரும் சொல்வது போல கருணாமூர்த்தியும், "ஏய்யா, முப்பத்தி இரண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கறே!' என்றார் கருணாமூர்த்தி.

'அதுதாங்க வேணும்' என்றான் மாருதி.

'போனதடவை வந்த போதும் இதைத்தான் கேட்ட, ஆனா பதின்மூன்றை இழந்துட்டியே'

'இல்லீங்க..இந்த முறை அப்படி ஆகாது..பல் டாக்டரை எல்லாம் பார்த்து Baseஐ ஸ்ட்ராங்க பண்ணி வைச்சிருக்கேன்'

'சரி..சரி..இந்த முறையும் 31 தரேன்..அதைவைச்சு உன் பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து இரண்டு வருஷம் கழிச்சு மீதி ஒன்னைத் தரேன்'

'நீங்க சொன்னா சரி' என்ற படியே..இவ்வளவு நாட்களாகக் காட்டிக் கொண்டிருந்த வீராப்பையும்..அவிழ்த்து விட்டிருந்த வாலையும் சுற்றிக் கொண்டு வந்தான் மாருதி.


Friday, February 18, 2011

கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரிடன் வீட்டில் ரெய்ட் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரிடமும் சிபிஐ விசாரணையை ஆரம்பித்துவிட்டது.

கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், சரத்குமாருக்கு கொஞ்சம் பங்குகளும் உள்ளன.

சன் டிவியின் பங்குகளை தயாளு அம்மாள் திருப்பித் தந்தபோது கிடைத்த பணத்தை வைத்து கலைஞர் டிவியில் பங்குகளை வாங்கியுள்ளார் தயாளு அம்மாள். அதே போ ல சன் டிவியின் பங்குகள் மூலம் முதல்வர் கருணாநிதி தனக்குக் கிடைத்த பணத்தில் பிரித்துக் கொடுத்த ரூ. 2 கோடியை முதலீடு செய்து கனிமொழி கலைஞர் டிவி பங்குகளை வாங்கியுள்ளார்.

ஆனால், பங்குதாரர் என்ற அளவோடு தயாளு அம்மாள் நின்று கொண்டார். அதே போல பெயரளவுக்கே கனிமொழியும் கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்துள்ளார். மற்றபநிர்வாகத்திலோ அதன் பண பரிவர்த்தனைகளிலோ இருவருமே தலையிடுவதில்லை என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

முக்கிய முடிவுகளை சரத்குமார் தலைமையிலான அதிகாரிகளே எடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பலனடைந்த ஸ்வான் டெலிகாமின் தாய் நிறுவனமான டி.பி.ரியாலிட்டி தனது இன்னொரு துணை நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியைத் தந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பணத்தை கலைஞர் டிவி திருப்பித் தந்துவிட்டாலும் கூட, எதற்காக இந்த நிறுவனம் பணத்தை டிவியில் முதலீடு செய்ய முன் வந்தது என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

இதனால் இது தொடர்பாக கலைஞர் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் என்ற முறையில் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருந்தது.

இந் நிலைசில் சரத்குமாரின் வீட்டில் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தியதோடு அவரிடம் விசாரணையையும் ஆரம்பித்துவிட்டனர்.

அடுத்த கட்டமாக கனிமொழியிடம் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பே சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் கலைஞர் டி.வியின் வெறும் முதலீட்டாரான இன்னொரு இயக்குநர் தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது. அவர் தொலைக்காட்சி விவகாரங்களில் எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர் என்று சிபிஐ கூறியுள்ளது.

இந் நிலையில் சிபிஐயிடமிருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கனிமொழி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சிபிஐயிடமிருந்து எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. கலைஞர் டி.வியில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைகள் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாதிக்குமா என்று கேட்டதற்கு பதிலளிக்க கனிமொழி மறுத்துவிட்டார்.

(நன்றி -தட்ஸ்தமிழ் )

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(18-2-11)

125 வருடங்களாக கோலோச்சி நிற்கும் கோகோகோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியத்தை அமெரிக்காவிலிருந்து ஒலி பரப்பாகும் வானொலி ஒன்று வெளியிட்டுள்ளது.தற்போது உலகம் முழுதும் 200 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில்கள் இப் பானம் விநியோகிக்கப் படுகிறது (மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற சச்சீன் என்ன செய்யப் போகிறார்)2)2-ஜி ஸ்பெக்ட்ரம் விலை குறைவாக விற்றதன் மூலம் ஆ.ராசா 3000 கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என சி.பி.ஐ., ,மற்றும் அமுலாக்கப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.(3000கோடி வேறு யார் யாருக்கு விநியோகப் பட்டிருக்கும்).3)உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் திரைப்படத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.திரையரங்குகள் 2 காட்சிகளை ரத்து செய்துவிட்டதாகவும், 50 புதிய படங்கள் வெளியீடும் முடக்கப் பட்டுள்ளதாம்.4)உலக அளவில் அதிகம் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடம் சீனாவிற்கு.அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இதனால் இறக்கின்றனராம்.இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் 35 லட்சம் பேர் பலியாகக் கூடும் என எச்சரித்துள்ளனர் .இதனால் சீன திரைப்படம்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம்.(அன்புமணி சீன அரசியலுக்கு செல்லலாம்.)5)வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களை வழங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு 1,75,000 கோடி இழப்பு ஏற்படும்.அதைத் தாங்குவது அரசுக்கு சாத்தியமில்லை என்கிறார் பிரதமர்.ஆனால் லட்சக்கணக்கான கோடிகள் ஊழல் நடக்கிறதே..அதை மட்டும் அரசு எப்படி தாங்குகிறது..(ஏழைகள் தயவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைத்தால் போதுமே)6)எல்லாப் பத்திரிகைகளும் தலையங்கம் எழுதுகின்றன..ஆனால் சமீப காலங்களாக 'தினமணி'யில் வரும் தலையங்கங்கள் மிகவும் அருமையாகவும்..பல விஷயங்களை அறிந்துக் கொள்ளக் கூடிய தன்மைத்தாயும் உள்ளன..பாராட்டுகள் அதை எழுதுபவருக்கு.அதில் வந்த சமீபத்திய தலையங்கம் ஒன்றிலிருந்து சில பகுதிகள்..

அரசின் ஆதரவுடன் தவறுகள் மறைக்கப்படுகின்றன.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஊழல் வழக்குகளில் தீர்ப்புகள் காலவரையின்றி தள்ளிப் போடப்படுகின்றன.

இதனால்..ஜனநாயகத்தின் மீது வெறுப்பும்,சலிப்பும்,நம்பிக்கையின்மையும் ஏற்படுகிறது.

சட்டத்தின் பிடியிலிருந்து ஒருத்தர் தப்பலாம்..ஆனால் தருமத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

சட்டமும்,நீதியும் சாமான்யனுக்கு மட்டுமல்ல...அனைத்து இந்திய குடிமகனுக்கும் சமம் என்று உறுதிப் படுத்தினால் மட்டுமே அது முறையான மக்களாட்சியாக அமையும்.

Thursday, February 17, 2011

வழக்கு

தாத்தா சொத்தை

அப்பா விற்று

உருவாக்கினார்

அறிவாளியாய் அவனை

வளர்ந்ததும்

வேலை கிடைத்ததும்

காதல் திருமணமானதும்

தனக்கு சேர வேண்டிய

சொத்தை விற்றதற்காக

நீதிமன்றத்தில்

வழக்குத் தொடர்ந்தான்

அப்பா மீது

பரவிக்கொண்டிருக்கும் நோய்..

ஊரெங்கும்

பரவிக் கொண்டிருக்கிறது நோய்

சிக்கன்குன்யாவா

பன்றிக் காய்ச்சலா

எலிக் காய்ச்சலா

மாணவர்களால் இடையூறின்றி


தேர்வுகள் எழுதமுடியுமா?

அலுவலக வேலைகள்

நடந்திடுமா ஒழுங்காக

வாழ்க்கைச் சக்கரம்

உருண்டிடுமா சரியாக

விஞ்ஞானிகளும்

இந்நோய் மருந்து அறிந்திலர்

பெயர் மட்டும் சொல்கிறார்கள்

ஏதோ

கிரிக்கெட் காய்ச்சல் என.Wednesday, February 16, 2011

தமிழக மீனவர் பிரச்னையும்..கலைஞரும்..

தமிழக மீனவர் பிரச்னைக்கு


நான் எடுத்த நடவடிக்கைகள் நூறு

பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் பலநூறு

பிரதமர் அளித்த உறுதிமொழிகளும் சிலநூறு

நிருபமாவை அனுப்பி வைத்தவர் பிரதமர்

உரைமாற்றி படிக்கும் புகழ்

அமைச்சரும் தந்தார் உறுதிமொழி

தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தது

எம் கட்சிதான்

கழகக் கண்மணிகள்

கனிமொழியுடன் பல ஆயிரம் கைது

சட்டசபைத் தேர்தலுக்கு முன்

செயல்வீரர்களாக நாங்கள்

கைதாவோம் அடிக்கடி இப்படி

எங்கள் தியாகத்தை உங்களுக்கு அறிவிக்க

இன்றும் எழுதத் தீர்மானித்தேன்

வன்மையாக மீனவர் கைதானதைக் கண்டித்து

பிரதமருக்கோர் கடிதம்

வழிமீது விழி வைத்துக் காத்திருப்பேன்

அவரது உறுதிமொழிக் கடிதத்திற்கு


பிரதமரின் வழவழா பேட்டியும்..நம் கற்பனை கேள்வி பதிலும் ..

அடைப்புக்குள் இருப்பவை பிரதமர்  பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்
 அவர் சொன்னவை .
பின் வரும் கேள்வி பதில் நம் கற்பனை ..


//பிரதமர் -ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்று நான் ஆ.ராசாவுக்கு 2007 நவம்பர் மாதமே கடிதம் எழுதினேன்.அந்த கடிதத்துக்கு அன்றே அவர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், நான் கண்டிப்பாக வெளிப்படையான தன்மையை கடைப்பிடிப்பேன். எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என்று கருதியிருந்தேன்.//

கேள்வி -அப்போது  உறுதிமொழிக்கு மாறாக ராசா நடந்தார் என்று சொல்கிறிர்களா?
பதில் -நான் அப்படிச் சொல்லவில்லை..கருதியிருந்தேன் ..என்றுதான் சொன்னேன்

//பிரதமர் -2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது முழுக்க தொலை தொடர்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்டது. அதில், 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு'என்ற விதிமுறைகள் கொண்டு வந்தது பற்றியோ அல்லது யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி என்னிடமோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.//
 
கேள்வி - அப்போது ராசா செய்தது தவறு என்கிறிர்களா?
பதில் -நான் அப்படிச் சொல்லவில்லை..அவரேதான்  அனைத்து முடிவுகளையும் எடுத்தார் என்கிறேன்
 
//அதே போல ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் தான் விற்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ (TRAI)அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவையில்லை என்ற முடிவை ராசாவே எடுத்துவிட்டார். ஆனால் அந்த ஒதுக்கீட்டின் பின்னணியோ, அதன் பிறகு நடந்த விஷயங்களோ எனக்குத் தெரியாது.//
 

கேள்வி -அப்போது ராசா ஊழல்  செய்துள்ளதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் -அப்படிச் சொல்லவில்லை ,..எனக்குத் தெரியாது என்றுதான் சொன்னேன்

//2வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவியேற்ற போது ராசா மீண்டும் அதே துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான திமுக அவரைத் தேர்வு செய்தது. அதில் நாங்கள் தலையிடவில்லை. அந்த நேரத்தில் ராசா பற்றி தவறான விஷயங்கள் எதுவும் என் மனதில் இல்லை.
கேள்வி -இப்போது தவறான எண்ணங்கள் உள்ளதா //

பதில் -அப்படி நான் சொல்லவில்லை

//ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டது என்பதை கணித்து சொல்வது கடினம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு நான் பயப்படவில்லை//.
கேள்வி -அப்போது வேறு யார் பயப்படுகிறார்கள்
பதில் -அது எனக்குத் தெரியாது
 
//காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்//
 
கேள்வி -இதை நீங்களே சொல்கிறீர்களா அல்லது வேறு யாராவவது சொல்லச் சொன்னார்களா 
பதில் -அது எனக்குத் தெரியாது
 
//நான் பலவீனமான பிரதமர் என்று சொல்வது சரியல்ல. எனது நடவடிக்கை சரியான திசையிலே செல்கின்றன.//
 
கேள்வி - இதை நீங்களே சொல்கிறீர்களா அல்லது..
பதில்-அது எனக்குத் தெரியாது


Tuesday, February 15, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ்-24

காதல்...இந்த மூன்று எழுத்துச் சொல்லிற்குத்தான் எவ்வளவு வலிமை..
இந்தச் சொல் கோழையையும் வீரனாக்கியுள்ளது..வீரனையும் கோழை ஆக்கியுள்ளது.
சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறது..சாம்ராஜ்யத்தையும் அழித்திருக்கிறது.
காதல்வசப்பட்டவர்கள்..ஓருயிர் ஈருடல் எனச் சொல்லிக் கொள்வர்..அப்படியாயின் இருவரில் ஒருவர் உயிர்விட்டால் மற்ற உடல் உயிரின்றி எப்படியிருக்கும்?
காதலைனையோ..காதலியையோ பறிகொடுத்தபின் மற்றவரால் எப்படி இருக்க முடியும்?இதையே திருவள்ளுவர் சொல்கிறார்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து (1209)

நாம் ஒருவரே.வேறு வேறு அல்லர் எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கோண்டிருக்கிறது..எனக் காதலி சொல்வதாகச் சொல்கிறார்.

ஆனால் குறுந்தொகையிலோ, நெய்தல் திணையில் சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர்..தலைவன் பிரிந்ததும் என்னுயிரும் போய்விடுவது மேலானது எனத் தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.அதற்கு அவர் அன்றில் பறவையைக் கூறுகிறார்.அன்றில் பறவை ஒரு நீர்வாழ்ப் பறவை.ஆணும்,பெண்ணும் ஒன்றையொன்று விட்டுவிடாது இணைந்தே தண்ணீரில் வலம் வரும்.இரண்டுக்கும் இடையில் பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அதை நீண்ட காலப் பிரிவாய் எண்ணுமாம்.ஆகா..என்னவொரு அழகான சிந்தனை..

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய புன்மை நான் உயற்கே

குறுந்தொகை-57
சிறைக்குடி ஆந்தையார்
(காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் கூறுவது)
நீர்வாழ்ப் பறவை அன்றில் , ஆணும்,பெண்ணுமாக ஒன்றை ஒன்று பிரியாமல் வாழ்வன.தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன.அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடலாக நானும், தலைவனும் வாழ்கிறோம்.தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓர் உடலில் வாழும் இழிவு ஏற்படும்.அதற்குத் தலைவன் பிரிந்த உடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.

எதிர்பார்ப்பு .. (கவிதை)வாசமுடன்
மொட்டொன்று மலர்ந்து
மலராகியது
சூடுவோர் இன்மையால்
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து
உதிர்ந்து
மீண்டும் வளர்ந்து
மொட்டாய் நிற்கிறது
எதிர்பார்ப்புடன்

Monday, February 14, 2011

கேபிள் பதிவும்..அதனுடனான என் பதிவும்..
கேபிள் சங்கரின் இந்தப் பதிவிற்கு தொடர் பதிவாகக் கூட இதைக் கொள்ளலாம்..
எனது 'பாரத ரத்னா' என்ற நாடகத்தில்..ஆசிரியர் ஒருவர் தன் மாணவன் இழைத்த தவறைக் கண்டிக்கப் போக ஆசிரியர் கைது செய்யப்படுகிறார்.குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஆசிரியர் கூறும் செய்தி இதுதான்.இந்நாடம் சிறந்த நாடகத்திற்கான விருது பெற்றதுடன்..இந் நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருதும் எனக்குக் கிடத்தது.இந் நாடகம் வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது.

இனி நாடகக் காட்சி.

நீதிபதி- ராமசந்திரன் நீங்க ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ஆசிரியர் ராமசந்திரன்- நீதிபதி அவர்களே! நான் குற்றமற்றவன்..இவ்வளவு வருஷம் என் ஆசிரியர் வாழ்க்கையில் இல்லாத களங்கம் இப்போ ஏற்பட்டிருக்கு..அதித் துடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்..யுவர் ஆனர்..இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத சில பொது விஷயங்களைக் கூற எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன்


நீதிபதி- நீங்க சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம்


ராம- அந்த நாட்களிலெல்லாம்..குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது..பெற்றோர்கள் எங்களிடம் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்து..இவங்களை நல்ல குடிமகனா உருவாக்குங்க..ஏதாவது தப்பு பண்ணினா நல்லா தண்டியுங்க..அடியாத மாடு படியாது..இரண்டு போட்டாதான் உருப்புடுவான்னு சொல்லுவாங்க.பெற்றோர்களும் வீட்டில் குழந்தைகள் தப்பு பண்ணினா கண்டிப்பாங்க..மாணவன் நல்லா படிக்கலேன்னா பெற்றோரும் சரி ..ஆசிரியரும் சரி..இரண்டு அடி கொடுத்துத்தான் அவனை மாத்த முயற்சிப்பாங்க.இதுக்கு முக்கிய காரணம்..ஒவ்வொருவர் வீட்டிலேயும் நாலு இல்ல அஞ்சு குழந்தைகள் இருந்ததுதான்.எல்லாக் குழந்தைகள் மீதும் தனிப்பட்ட அக்கறையை பெற்றோரால் காட்ட முடியாது..அதனால அந்தப் பொறுப்பை ஆசிரியர் மேல சுமத்தினாங்க...இதுக்காகவே அப்ப எல்லாம் 'மாரல் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' கிளாஸ் இருந்தது.ஆனால் இன்னிக்கு எல்லாமே தலை கீழ்..எல்லாருக்கும் ஓரிரு குழந்தைகள்..பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் பெற்றோர்..குழந்தைகளை கவனிக்க அவங்களுக்கு நேரமில்லை.அந்தக் குற்ற உணர்ச்சியை மறக்க..அளவிற்கு அதிகமாக குழந்தைக்குச் செல்லம் கொடுக்க ஆரம்பிச்சாங்க..

தியாகம், சேவை,மனிதாபிமானம்,தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய நல்ல குணங்களை சொல்லித்தர பெற்றோருக்கு நேரமில்லை..அதனாலேயே குழந்தைகளுக்கும்..ஒழுக்கத்தையும், நல்ல குணத்தையும் போதிக்கும் ஆசிரியர்களிடம் மனம் லயிப்பதில்லை.இன்னிக்கு உலகம் முழுதும்..துப்பாக்கிச் சூடும்,கொலைகளும்,உள்நாட்டு புரட்சியும், தீவிரவாதிகளின் பயமுறுத்தலும்னு பரவியிருக்கு.

சட்டத்தைத் தன்னோட சட்டைப் பைக்குள்ளே மறைச்சுண்டு கொள்ளை அடிக்கும் சில அரசியல்வாதிகள்..போதை மருந்துக்கு அடிமையாகிவிட்ட இளம் தளிர்கள்..

இலைமறைவு காய்மறைவாக இருக்க வேண்டிய செக்ஸ் களியாட்டங்களை வெளிப்படையாக சித்தரிக்கும் திரைப்படங்கள்..இணையதள களியாட்ட இருப்பிடங்கள்..

இப்படிப்பட்ட மிக மோசமான நிலைமைக்குக் காரணம் ..வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்காததுதான்.

நான் பெற்றோரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்..தவறு செய்யும் குழந்தைகளை மென்மையாகவாவது தண்டியுங்கள் என்பதுதான்.குழந்தைகள் தவறு செய்தால்..அதைத் திருத்த முயலும் ஆசிரியர்கள் மீதே குற்றம் சுமத்தாதீர்கள்.நான் என் மகனை ரோஜாப் பூ போல வளர்க்கிறேன்னு சொல்லிட்டு..அவன் எதிர்காலத்தை அதிலுள்ள முள்ளைப் போல ஆக்காதீங்க.அவனை அடிக்காதீங்கன்னு குழந்தைக்கு துணை போகாதீர்கள்.

எந்த ஆசிரியனும்..காழ்ப்புணர்ச்சியால் குழந்தைகளை தண்டிக்க மாட்டாங்க..பாலியலைப் பற்றி அவனுக்கு போதிக்கத்தான் தெரியுமே தவிர..பாலியல் குற்றத்தைச் செய்ய மாட்டான்.நாட்டில் ஒரு சிறந்த குடிமகனாக தன் மாணவன் உருவாக வேண்டும் என்றுதான் ஆசிரியன் நினைப்பான்.இந்த விஷயத்தில் மாணவர்..பெற்றோர் இருவருக்கும் கவுன்ஸிலிங் தேவை.

யுவர் ஆனர்..நான் படித்த இன்னுமொரு சிறுகதை ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன்..

தன் மகன் செய்யும் தவறுகளை எல்லாம், பெரிதாக்காமல்..அவனை செல்லம் கொடுத்து வளர்த்து வந்தனர் அவனது பெற்றோர்..அவனை ஆசிரியர் கண்டிக்கும் போதெல்லாம் தடுத்தனர்.அந்த மகன் சிறி சிறு குற்றங்களைச் செய்யத் தொடங்கினான்.ஒருநாள் ஒரு கொலையச் செய்துவிட்டான்.நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தது.தூக்கிலிடும்போது தன் கடைசி ஆசையா தன் பெற்றோர்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டான்.அதுக்கு அனுமதி கிடைச்சது.தன் பெற்றோரைப் பார்த்ததும் அவன்..'அப்பா..அம்மா..இருபது வருஷத்துக்கு முன்னால..வாத்தியார் என்னை கண்டிச்ச போதெல்லாம்..நீங்க தடுக்காம இருந்திருந்தா..இன்னிக்கு உங்க மகன் சாகிறதைத் தடுத்திருக்கலாம் இல்லையா' ன்னான்.

யுவர் ஆனர்..என்னோட மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க அனுமதி அளித்தற்கு நன்றி.தவறு செஞ்சிருந்தா அதற்குரிய தண்டனையை யாராயிருந்தாலும் அனுபவித்துத்தான் தீரணும்.நான் தவறு செஞ்சதா..இந்த நீதி மன்றம் நினைச்சா அதற்குரிய தண்டனையை ஏற்க நான் தயாரா இருக்கேன்..

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை

கவிதையான இரவு

கனவில் நிலவு

நிலவு பற்றி கனவு

தனிமையில் சிரிப்பு

சிரிப்பில் தனிமை

இதுதானா காதல்?


5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.


6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.


7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.


8.காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்


9.பறக்கத் தெரியும்

திசை தெரியாது

காதல் ஓர்

இலவம் பஞ்சு


_ கபிலன்(மீள்பதிவு)

Sunday, February 13, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)

1) தன்னோட உரைன்னு போர்ச்சுகல் உரையைப் படித்துட்டு..அதனால் தப்பு இல்லைன்னு சொல்லிட்டாறாமே மைய அமைச்சர்

அதுவரைக்கும் தன்னோட நாடுன்னு நெனச்சு போர்ச்சுகல் போலையே

2)எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்னு பி.ஜெ.பி., சொல்லியிருக்கே

பி.ஜெ.பி., ஒன்னும் தீண்டத்தகாத கட்சியில்லைன்னு ஒரு சமயம் சொன்னாரே..அந்தக் கட்சித் தலைவர் கிட்ட இவங்க போய் கேட்கலாமே

3)சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சோனியா தமிழகத்திலே ஐவர் குழுவை அமைச்சிருக்காங்களே

தமிழகத்திலே காங்கிரஸ்ல ஐந்து கோஷ்டிகள்தான் இருக்குன்னு யாரோ தப்பாய் சொல்லியிருப்பாங்க

4)ராஜாவை விடுவிக்கக் கோரி விமானத்தை நிறுத்தும் போராட்டம் நடத்த்ப் போறாங்களாமே

இதுவரைக்கும் நடந்துள்ள ஊழல்களில் மாபெரும் ஊழல் அல்லவா? அதனால போராட்டமும் மாபெரும் நிலையில் இருக்கணும்னு நினைக்கறாங்கப் போல இருக்கு

5)தமிழகத்தில் இப்போது நடந்துவருமாட்சி 'பொற்கால ஆட்சி"ன்னு ஜெயகாந்தன் பேசியுள்ளாரே!

அது போகட்டும்..மேலவை எப்ப வருது?

6)ஒரு கிசு கிசு

புள்ளிவிவரங்கள் கட்சி விஷயங்கள் அடக்கி வாசிக்கப்படுதே ஏன்?

ஏதோ பிரம்மாண்டத் திட்டம் இருக்குன்னு சொல்றாங்க.

7)தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தா 225 விருதுகள் கொடுப்பதாகத் தலைவர் சொல்லியிருக்கார்

அவர் வாங்கி வைச்சிருக்கிற விருதையெல்லாம் கையிலேயே வைச்சிருக்க முடியுமா? அதையெல்லாம் இப்படித்தான் திருப்பித் தரணும்இந்திய அரசுக்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு அவமானம்

. ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சரின் உரை மாற்றம் 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரைக்குப் பதிலாக போர்ச்சுக்கல் நாட்டு அமைச்சரின் உரையை மாற்றிப் படித்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் மேற்படி கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.

தான் வாசிப்பது, தனது உரையல்ல என்பதை மூன்று நிமிடங்கள் வரை உணர்ந்து கொள்ள முடியாதவராக , மற்றொருவரின் உரையை வாசித்திருத்திருப்பதும், அதனை மூன்ற நிமிடங்களின் பின், அருகில் இருந்த ஐ.நாவின் இந்தியத் தூதர் சுட்டிகாட்டும் வகையில் இருந்ததும், இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவு. இந்திய அரசில் அங்கம் வகிப்பவர்களின் பொறுப்பற்ற செயலினை உலகத்தின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் அறிகையில்; ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் தலைவர்களின் உரைகளின் நகல்கள் அனைவருக்கும் அந்தந்த நாடுகளால் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போர்த்துக்கல் அமைச்சரின் உரையின் நகலை, தனது உரை நேரத்தின் போது கிருஷணா படிக்கத் தொடங்கியிருக்கின்றார்.

உரையின் முதற் பகுதிகளில் உள்ள பொதுவான விடயங்கள் கூறப்பட்டு போர்த்துக்கல் தொடர்பான விடயங்கள் வாசிக்கப்படும் போதே அருகில் இருந்த ஐ.நாவுக்கான இந்தியத் தூதுவர் உரை மாற்றப்பட்டிரப்பதை உணர்ந்து அமைச்சர் கிருஷணாவிற்கச் சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பின்னரே அவர் கிருஷ்ணா சரியான தனது உரையினைப் படித்தார் எனத் தெரிய வருகிறது. அதுவரையில் அந்த உரை தன்னுடையதல்ல என்பதை அமைச்சர் கிருஷணா உணர்ந்து கொள் முடியாதவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

இது ஒரு பெரிய விஷயமே இல்லை. சர்வதேச கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பேசும் ஆரம்பகட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாக தான் இருக்கும். மேலும் என் முன்னால் நிறைய அறிக்கை தாள்கள் இருந்ததால், தவறுதலாக உரையை மாற்றி வாசிக்க நேர்ந்தது என அவர் கூறியுள்ளார்.


அகோரம்..

நுதல் பிறைநிலா

விழிகள் மீன்

எள்ளூப் பூ நாசி

உரித்த ஆரஞ்சுச் சுளை இதழ்கள்

என்றெல்லாம் சொன்னது போதும்

புதிதாகச் சொல் என்றிட்டாள்...

என் தமிழுக்குச் சவால்

அகோரம் நீதான் என்றேன்.

கோபித்துக் கொண்டாள்?

என்ன தவறிழைத்தேன்...

எனக்குப் புரியவில்லை

Saturday, February 12, 2011

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி
"மிக மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைபேசியில் பேசுவதற்கான ஒரு நிலையை, கோடானு கோடி ஏழை மக்கள் வாய்ப்பைப் பெறுகின்ற அளவுக்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை, டெல்லியிலே கைதாகியிருக்கின்ற ராசாவுக்கு உண்டு. இந்த மக்களின் சார்பில் அவரைப் பாராட்டுகிறேன்," என்றார் முதல்வர் கருணாநிதி.

தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டம் சென்னை - சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.இதில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதுதான் இந்த வரலாற்றுவசனங்கள். அதற்கு பின்னுட்டமாக வந்த கடிதம் இதோமக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.நியாய கணக்கு:இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.(நன்றி -எஸ்.தளபதி, கீற்று)
சட்டம்..

நான்

சட்டம் படித்தவனல்ல

சட்டம் அறிந்தவன்

சட்டத்தை வளைக்காதவன்

சட்டத்தை மதிப்பவன்

சட்டத்தை மீறாதவன்

சட்டத்தின் ஓட்டைகள் அறிந்தவன்

சட்டத்திலிருந்து தப்பிக்கத் தெரிந்தவன்

என் தொழில் அரசியல்

Friday, February 11, 2011

இந்த வழக்குக்கு இணையான வழக்கே இல்லை - நீதிபதிகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.


இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு

2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து

சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந் நிலையில் டி.பி. ரியாலிட்டிஸ் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாக்கும் தனக்கும் எந்தவித நட்புறவும் இல்லை என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால்வாவுக்கு பங்குகள் உள்ளன என்பதையும் சரத்பவார் மறுத்துள்ளார்.


நன்றி தட்ஸ் தமிழ்

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-2-11)

அமெரிக்கா, இராக் மீது தொடுத்த யுத்தத்தில் 1,09,032 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.இதில் 66,081 பேர் அப்பாவி மக்கள்.இராக் படையைஸ் சேர்ந்தவர்கள் 15,196 பேர்.என விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள தகவல்

2)கலைஞர் தொலைக்காட்சியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்கும், கனிமொழிக்கு 20 சதவிகித பங்கும் தொலைக்காட்சியின் நிர்வாகிக்கு 20சதவிகித பங்கும் உள்ளதாம்.(.கலைஞருக்கு அவர் வசிக்கும் வீடு தவிர வேறு சொத்து இல்லை)

3)சீனாவில் பஞ்சம் வரும் அபாயம் உள்ளதாம்.கோதுமை பயிராகும் 140லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 50 லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதாம்..25 லட்சம் பொதுமக்கள் 27லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என ஐ.நா.வின் உணவு மகமை தெரிவித்துள்ளது

4)உலகிலேயே நீளமான நதி நைல் நதியாகும்.4145 மைல்.அடுத்து அமேசான் 3900 மைல்கள்.உலகின் 97 விழுக்காடு நீர் கடலில்தான் உள்ளது.இரண்டு விழுக்காடு அண்டார்டிக்,ஆர்டிக்கில் உள்ள உறந்த ஐஸ் ஆகும்.மீதம் ஒரு விழுக்காடே நதிகளின் மூலம் கிடைக்கிறது.இந்த ஒரு விழுக்காட்டிற்குத்தான் எவ்வளவு தகராறு மனிதர்களிடையே

5)விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்க வேண்டும்.இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.அவர்கலும் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவதே வழி என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,பிரியா தத் கூறியுள்ளார்.

6)ஒரு ஜோக்..

ஒரு கட்சியின் அறிவிப்பு

தலைவர் எதிர்பார்த்த கூட்டணி வரும் தேர்தலில் கிடைக்காததால் தலைவருக்கு தேறுதல் சொல்ல தொண்டர்களே அணிதிரண்டு வாரீர்.
7...சமீபத்தில் நான் ரசித்த ஒரு விளம்பரம்


Thursday, February 10, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)

செல்ஃபோன் கட்டணங்கள் உயரும்னு சொல்றாங்களே தலைவா
இதற்காக ஏழைகளுக்கு உதவினவரை கைது செய்யும் போதே இப்படி நடக்கும்னு தெரியும்

2)தலைவா..உன்னை..தொகுதி ஆலோசனைக் குழுவில சேர்க்கலைன்னா..நான் தீக்குளிப்பேன்
அவசரப்படாதே..அதைவிட நல்ல காரணமா..எனக்குக் கட்சி போட்டியிட டிக்கட் கொடுக்கலேன்னா அப்போ..தீக்குளி..எனக்குப் பயன்படும்

3)தலைவருக்குத் தரப்பட்ட கிரீடம்,வாள் இவற்றை ஏன் ஏலம் விட்டுட்டார்
தன்னோட சொத்து வீடு ஒன்னுதான்னு சொல்லியிருக்காரே..வாளையும்,கிரீடத்தையும் கையிலே வைச்சுண்டா...நாளைக்கே ஏதாவது சாமி வழக்கு போட்டுடுமேன்னுதான்

4)பூரண ஓய்வு எடுத்து வராறே தலைவர்.
...அவர் தேர்தல்ல தோத்துட்டா..ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துடுவார்
எப்படி
நிரந்தரமா மலைவாசஸ்தலத்துக்குப் போயிடுவாரே..சட்டசபை பணிலே ஈடுபட வேண்டாமே

5)சிலை திறப்புவிழாவில..தன்னைத்தானே புகழ்ந்துக்கிட்டு இருக்கார் தலைவர்
அவரை பாராட்ட்றவங்க அத்தனைப் பேரும் பாராட்டுவிழா எடுத்துட்டாங்களாம்..இனிமே யாருமில்லையாம்..அதனால தான்.

6)கூட்டணி பற்றி தலைவர் கிட்ட பேச வந்த கூட்டணிக் கட்சி செயலர் இவ்வளவு சீக்கிரம் பேச்சு வார்த்தையை முடிச்சுட்டார்
நீங்க எவ்வளவு தொகுதி ஒதுக்கினாலும் சம்மதம்னு சொல்ல..பேச்சு வார்த்தை எதற்கு

7)வெளிநாடு போன பிரதமர்கிட்ட விமான நிலையத்திலே என்ன கேட்டாங்க
நீங்க இந்திய பிரதமரா ன்னு
இவர் என்ன சொன்னார்
எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கிறாங்கன்னார்

8)தலைவர்-(பொதுக் கூட்டத்தில்)ஐ.மு.கூட்டணி ஊழலால் நாட்டுக்கே அவமானம்
தொண்டர்- தலைவா...நாம அந்த கூட்டனிலேதான் இருக்கோம்

9)நமக்கு 50 தொகுதிகள் ஒதுக்கச் சொல்லிக் கேட்போம்..அப்படித் தராவிட்டால்..'0' க்கு மதிப்பில்லை என்பது உணர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிடவும் தயார்.

10)தலைவர்- (பொதுக்கூட்டத்தில்)நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும்..சினிமாக்கள் ஒழிக்கப்படும்..
தொண்டர்-தலைவா..மொத்த எண்டெர்டன்மெண்ட்டும் உங்க ஆட்சியே போதும்னு சொல்றீங்களா

 

நான் இன்றி நீ இல்லை (கவிதை)


உன்னில் என்னைக்
காண்கிறேன் - நான்
வலது கையால் செய்வதை
இடது கையால் செய்கிறாய்
எனக்கோ இடது வகிடு
உனக்கோ வலது
நான் அடிப்பேன் எனில்
நீயும் அதை சொல்கிறாய்
நானின்றி நீ இல்லை
நன்கு உணர்

Wednesday, February 9, 2011

தேர்வு வேண்டாம்! ரஜினி மகள் ஓட்டம்!!


தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்காததால், அதிருப்தி அடைந்த சவுந்தர்யா, தேர்வை புறக்கணித்து சென்னைக்கு திரும்பிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, சட்டப் படிப்பு படிக்க சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், நகரி - புத்தூர் இடையே அமைந்துள்ள, ஒரு தனியார் (கே.கே.சி.,) கல்லூரியில் தொலை தூர சட்டப் படிப்பில் சேர்ந்துள்ளார்.இதற்கான தேர்வு கடந்த 1ம்தேதி புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கியது. இக்கல்லூரியில் தேர்வு எழுத வந்த சவுந்தர்யா, தனக்கு தனி அறை ஏற்பாடு செய்யும்படி முதல்வர் சுப்பிரமணிய நாயுடுவை சந்தித்து கேட்டுக் கொண்டார். மாணவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வளாகத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். உங்கள் ஒருவருக்கு மட்டும் தனியாக இடம் ஒதுக்க முடியாது என கல்லூரி முதல்வர் மறுத்துவிட்டார்.

இதனால், மன வருத்தத்துடன் அதிருப்தி அடைந்த சவுந்தர்யா, அன்று தேர்வு எழுதாமல் சென்னைக்கு திரும்பினார்.பின்னர், கடந்த 3ம்தேதி வியாழனன்று அவர் தேர்வுக்கு ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், சொந்த வேலை காரணமாக அன்று தேர்வு எழுத வரவில்லை என தெரிய வந்துள்ளது. மீண்டும் மூன்றாவது நாளாக, நேற்று முன்தினம் 5ம்தேதி இதே கல்லூரியில் நடந்த தேர்வுக்கு வந்த சவுந்தர்யா, அனைத்து மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தேர்வு எழுதினார். புத்தூர் கல்லூரியில், நடிகர் ரஜினிகாந்த் மகள் தேர்வு எழுத வருகிறார் என, தகவல் பரவியதை அடுத்து ஏராளமான ரசிகர்களும், மாணவர்களும் கூடி விட்டு பின்பு கலைந்து சென்றனர்.

அடுத்து ஒரு செய்தி
ரஜினி மனைவி லதாவுக்கு காலையில் பிடிவாரன்ட்: மாலையில் வழக்கு தள்ளுபடி

"செக் மோசடி வழக்கில், காலை நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருக்கு, "பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மாலையில், கடன்தொகை வழங்கியதை அடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுமர்சந்த் பாப்னா. இவர், சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், "ஆக்கர் ஸ்டுடியோ பெயரில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், "செக் கொடுக்கப்பட்டது. அந்த, "செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, "செக் மோசடி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது, அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளியே வரக்கூடிய, "பிடிவாரன்ட் காலை பிறப்பிக்கப்பட்டது.இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான "டிடியை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்.


முதல் செய்தி ஆணவத்தாலா
இரண்டாவது  செய்தி பப்ளிசிட்டிக்கா

இதைப் படித்த  போது ஒரு கதை ஞாபகம்  வந்தது.
ஏழையாய் இருந்து பணக்காரரான  ஒருவர் அதிக ஆடம்பரத்துடன்  வாழ்ந்த தன்  மகனிடம்
தான் ஆடம்பர மாய்  இல்லாததைச்  சொல்ல  மகன்..'ஆம் ..நீ  ஒரு ஏழைக்கு மகனாய்  பிறந்தே ..ஆனா  நான் ஒரு பணக்காரனுக்கு  மகனாச்சே  ' என்றானாம் .

    ஓர வஞ்சனை

சிரித்துப் பேசினால்

சிறந்தவன் என்கிறது

நட்பானவன் என்கிறது...

சிரித்துப் பேசினாள்

ஒருமாதிரி என்கிறது

ஓரம் கட்டுகிறது

ஓர வஞ்சனை சமுதாயம்


 

போருக்கு முன் தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதை ஆதரிக்கிறதா காங்கிரஸ்..?சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. இந்த பிரச்சினை 378 மீனவர்களை பலி கொண்டுள்ளது. போர் நின்ற பிறகும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தத் தமிழனும் உடந்தையாக இருக்க முடியாது. ஆகவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் சேர்ந்து கச்சத்தீவை சுற்றியிருக்கிற சர்வதேச எல்லையில் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும். இதற்கான முயற்சியை முதல் அமைச்சர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பேசினார்.

போருக்கு
முன் தமிழக மீனவர்கள் கொல்லப் பட்டதை ஆதரிக்கிறதா காங்கிரஸ்..?

Tuesday, February 8, 2011

வாய் விட்டு சிரிங்க...அரசியல் ஜோக்ஸ்
(தேர்தல் வரை வாரா வாரம் இனி அரசியல் ஜோக்ஸ் வரும்..)

1) தலைவர் எந்தக் கூட்டணியிலே இருக்காராம்?

காங்கிரஸ் வேணாம்னுட்டதாம்..அதனால மரம் வெடி மன்னாரை ஒபாமாகிட்ட அனுப்பியிருக்கார்.. பிரதமர் கிட்ட சிபாரிசு செய்யச்சொல்லி கேட்கறதுக்கு

2)மாநிலத்திலேயே இருந்துட்டதற்கு தலைவர் இப்போ ஏன் வருந்தறார்..

மாநிலத்திலே லட்சக் கணக்கிலேதான் ஊழல் பண்ண முடிஞ்சுதாம்.மத்திலே போயிருந்தா கோடிக் கணக்கில பண்ணியிருக்களாமேன்னு வருத்தப் படறார்

3)அந்த கட்சித் தலைவர் ஏன் நீதிமன்றத்தையே சுத்தி வந்துக் கிட்டு இருக்கார்..

எல்லாக் கோர்ட்டிலேயும் இன்னிக்கு அவரோட கேஸ்கள் ஒரே சமயத்திற்கு வருதாம்.

4)கூட்டணிக் கட்சிக்கு ஆதரவா ஏன் நம்ம தலைவர் பேச மாட்டேன்னு சொல்றார்

கடைசிலே கூட்டணியிலே இருந்து கழட்டிவிட்டுட்டா என்ன பண்றதுன்னுதான்.இறுதி முடிவு வரை காத்திருப்பார்

5) மக்களோட கூட்டணின்னு சொல்ற தலைவர் இப்போ எல்லாம் ஏன் ஒன்னும் பேசறதில்ல..

மக்கள் இவரை கூட்டணியிலே சேர்க்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்

6)நம்ம தலையெழுத்து இப்படி ஆகிப் போச்சேன்னு தலைவர் ஏன் வருத்தப் படறார்..

தமிழகத்திலே நடக்கற தேர்தலுக்கு டெல்லியிலே கூட்டணிக்கு போகணும்னே வருத்தம்..அப்புறம் இந்தியாவிலே பிறந்தவங்கக் கிட்ட மட்டுமல்லாமல் வெளிநாட்டிலே பொறந்தவங்கக் கிட்ட கூட்டணிக்கு பல்லை இளிக்க வேண்டியிருக்கேன்னு வருத்தம்..ம்..ம்..

7) இரும்பைவிட அசைக்க முடியா உலோகம் எது தெரியுமா?

நம்ம பிரதமர்தான்..என்ன நடந்தாலும் அசைஞ்சுக் கொடுக்கறதில்லையே

8)நீங்க விரும்பற கூட்டணி அமைப்பேன்னு தொண்டர்கள் கிட்ட சொன்ன தலைவராலே ஒன்னும் செய்ய முடியலையாமே..

ஆமாம்..தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி வேணும்னு தொண்டர்கள் சொல்றாங்களாமே

9)அந்தக் கட்சி தனித்து நின்னா 0 இடங்கள்லதான் வெற்றி பெறும்னு இந்தக் கட்சி சொல்லுதே..

ஆமாம்..இந்தக் கட்சி வெற்றி பெறதற்கு முன்னல இருக்கற 1 எந்தக் கட்சியாம்.அது இல்லேன்னா இவங்களும் 0 தான்

10) ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னியே..என்ன பெயர் வைக்கப் போற..

பி.ஜே.பி., இல்லம்

சிரித்துச் சிரித்து... (கவிதை)

நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

Monday, February 7, 2011

கிரிக்கெட் மைதானம் கட்ட மத்திய அமைச்சர் கண்டனம்

இந்தியன் பிரிமீயர் லீக் அணிகளில் கொச்சி அணியும் இடம்பெற்றுள்ளது.அதனால் கொச்சியில் ஒரு மைதானம் கட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அந்த மைதானத்திற்காக பல ஏக்கர் பரப்பில் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் அழிக்கப் பட உள்ளன.கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.
ஆனால் இந்த மைதானத்திற்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்பட எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் அந்த மாநில சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்,
மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பற்றிய பார்வை மாற வேண்டும்!

பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும். காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.

பசுமை இந்தியா...
'பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

இதே ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பிலுள்ள சுற்றுச் சூழல் துறைதான் அடையாறு பூங்காவிற்கு அனுமதி தராமல் காலம் கடத்தியது.

இதே ஜெய்ராம் ரமேஷ்தான் முல்லைபெரியாறு விவகாரத்திலும்..அணைக்கு அருகில் மறு அணைகட்ட ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளித்தது.