Wednesday, April 1, 2009

சந்திரபாபு நாயுடுவிற்கு 17 கோடி ரூபாய் கடன்

சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் 30 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.அதில் தனக்கு பலவேறு வங்கிகளில் 17 கோடிக்குமேல் கடன் இருப்பதாகவும்..தனக்கு சொந்தமாக ஒரு கார் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு சொந்தமாக வீடோ..நிலமோ இல்லை.அவர் கடன் விவரம்...

பேங்க் ஆஃப் பரோடா - 4,01,47,337

விஜயா பாங்க் -6,03,49,777

யுகோ வங்கி -6,42,42,710

எச்.டி.எஃப்.சி -47,47,133

தனியாரிடம் வாங்கியுள்ள கடன்-14,57,419

சொந்த வீடு நிலம் இல்லை

வங்கிகணக்கில் டிபாசிட்-11 லட்சம், கணக்கில் பணம்..23 ஆயிரம்..என்.எஸ்.சி.பாண்ட் 1000, சொந்த கார் அம்பாசிடர்..

நம் கேள்வி...சாமான்யன் வங்கியில் கடன் வாங்கச் சென்றால்...ஆயிரம் கேள்விகள்...ஆயிரம் செக்யூரிட்டிகள் கேட்கும் வங்கிகள்...எதுவும் இல்லாத இவருக்கு எப்படி கோடிகணக்கில் கடன் கொடுத்தன.மத்திய அரசின்..நிதித்துறை...இவ்விஷயத்தில்.. வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?

ஐயோ..பாவம்..நாயுடு..எதுவும் சம்பாதிக்க வில்லை என எண்ணும் வாக்காளனுக்கு..அவன் மனைவி பெயரில் உள்ள சொத்துக்களைப் பாருங்கள்.

ரங்காரெட்டி மாவட்டத்தில்...5 ஏக்கர் நிலம்- 9 கோடி
ஹைதராபாத் வீடு-3.3 கோடி
ஹைதராபாத் மற்றொரு வீடு- 6 கோடி
ஹைதராபாத் பஞ்சாரா பங்களா-8.9 கோடி
சென்னையில் விவசாய நிலம்-10.5 கோடி
வங்கி டிபாசிட்-11.26 லட்சம்
கம்பனி ஷேர்-15.69 கோடி
2779 (??!!) கிராம் தங்கம்-34 லட்சம்
32 கிலோ வெள்ளி நகை-5.8 லட்சம்
2 கார்-91.92 லட்சம்
ரொக்க பணம்-23,400

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..இந்த நாட்டிலே...நம்ம நாட்டிலே...

7 comments:

கோவி.கண்ணன் said...

இவரும் குபேரனிடம் கடன் வாங்கிய மற்றொரு பாலாஜியா ?

திருப்பதியில் லட்டு கிடைக்கும், நாயுடு ஆந்திரா அல்வா தருவாருன்னு நினைக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பாவம் நாயுடுக்காரு!
நம்ம தமிழகத்து அரசியல் கோமான்(ளி)கள் உதவி செய்வார்களா?

குடுகுடுப்பை said...

இம்புட்டு நல்லவங்களா இருக்காங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோவி
ஜோதிபாரதி
குடுகுடுப்பை

கோவி.கண்ணன் said...

ஹிட் கவுண்டரில் 65555 ன்னு எண்கள் கவனமீர்த்தது !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
ஹிட் கவுண்டரில் 65555 ன்னு எண்கள் கவனமீர்த்தது !//


நன்றி கோவி

மங்களூர் சிவா said...

ஏன்னா இவரு ரொம்பாஆஆஆஆ நல்லவர்!!