Sunday, April 26, 2009

கலைஞருக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்...

இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.

ஒரு அரசை...அதுவும்...மாநில அரசை..ஆளும் கட்சி..அம்மாநில மக்களுக்கு ஆற்றும் தொண்டை வைத்தே அடுத்த தேர்தலில் அது வெற்றி பெறும் வாய்ப்பை பெறுகிறது என்பது பொதுவான கருத்து எனலாம்.

ஆனால்...நம் ஜனநாயகத்தில்...இப்போ எல்லாம்..வலுவான கூட்டணி எந்த கட்சி அமைக்கிறதோ அதுவே...வெற்றி பெறும் நிலை உள்ளது.இல்லாவிடின்..1996-01 வரையிலான கலைஞர் ஆட்சி திறமையான ஆட்சி...திறமையாக செயல் பட்ட ஆட்சி.அதனாலேயே..2001 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம்..என்று நினைத்த அரசியல் சாணக்கியன் கலைஞர் தப்புகணக்கு போட்டார். ஜெ வோ மற்ற கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைத்து 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.

அப்போதுதான்..இதை உணர்ந்துக் கொண்ட கலைஞர்..2004,(நாடாளுமன்ற தேர்தல்)2006 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தார்.வெற்றி பெற்றார்.2006 தேர்தலில் விஜய்காந்த் ஓட்டுகளை பிரித்ததாலும்..பெரும்பான்மையான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதாலும்...கலைஞர் அரசு...அறுதி பெரும்பான்மை பெறாவிடினும் , அதிக இடங்களை பெற்ற கட்சி என்பதால்..ஆட்சி அமைத்தது.

இன்று..பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகியதால்...தமிழகத்தில் அவர் ஆட்சி நீடிக்க காங்கிரஸ் தயவு கண்டிப்பாக தேவையானது.

மேலும்..இப்போது அணியில் காங்கிரஸ் மட்டுமே பிரதானக் கட்சி.காங்கிரஸை விரோதித்துக் கொண்டால்...கலைஞர் ஆட்சி இழக்க நேரிடும்.அதனாலேயே..இலங்கை பிரச்னையில்..கலைஞரால் தனிப்பட்டு எம் முடிவும் எடுக்கமுடியவில்லை.

சரி..இதெல்லாம்...தெரிந்ததுதானே என்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்...

நம் மக்கள் ..தேர்தல் என்று வரும்போது...கடந்த வருஷங்களில் ஆட்சி செய்தவர்களின் திறமையை நினைப்பதில்லை..அன்றைய பிரச்னையை மட்டுமே நினைக்கின்றனர்.

இலங்கை பிரச்னையால்...கலைஞருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறமுடியா விடின்....தேர்தலுக்குப்பின் ஆட்சி கவிழ..வாய்ப்புள்ளது.பின் ஆட்சிக்கு வரும் கட்சியும்..இதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்..இதையெல்லாம் கணக்குப் போட்டே..கலைஞர் காங்கிரஸை விட்டு வெளியே வர நினைக்கவில்லை.

இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.அதற்காக தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஓட்டளிப்போம்.இலங்கை தமிழர் பிரச்னையில்..மெத்தனம் காட்டும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை தோற்கடிப்போம்.

நம் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு தெரிவிப்போம்.

FLASH NEWS:விடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் அறிவித்தும்...இலங்கை அரசு அதற்கு தயாராய் இல்லாததால்...உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

11 comments:

உடன்பிறப்பு said...

//இந்த என் பதிவிற்கு...பல கண்டன பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும்...சற்று ஆற அமர சிந்தித்தால் தெளிவு கிடைக்கும்.//

கூட்டத்தோடு சேர்ந்து கும்முபவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், தமிழனின் தலைவிதி அது. திராவிட குஞ்சுகள் என்றும் பிரியாணி பொட்டலங்கள் என்றும் விமர்சிக்க இந்த மெத்த படித்த மேதாவிகளுக்கு எந்த வித தகுதியும் கிடையாது

போர் நிறுத்தத்துக்கே ஓபாம முதலானவர்கள் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத ஊருக்கு வழி சொல்லும் ஜெயலலிதாவை ஆதரிக்க போகிறார்களாம். கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா

கோவி.கண்ணன் said...

//இந்நிலையில்...கலைஞர் எதிர்ப்பு பதிவுகள் பல நான் இட்டிருந்தாலும்...அவர் ஆட்சிதான் தமிழகத்திற்கு இப்போது தேவை.//

:)

ஆமாம் ஆமாம் ! இலவச டிவி இன்னும் சில கிராமங்களுக்கு கிடைக்கலையாம்

அக்னி பார்வை said...

இன்னொரு கோணத்தில் பார்த்தல் இரனடு பேருமல்லாத ஒருவர் நமக்கு தேவை...

நேற்று பதிவர் சந்த்திபில் உங்களை எதிர்பார்த்தேன்..:)

கோவி.கண்ணன் said...

//உடன் போர் நிறுத்தம் கோரி..கலைஞர் இன்று திடீர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.//

உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடந்து கலைஞர் சூஸ் குடிக்க வாழ்த்துகள், உண்ணா விரதத்தை மதித்து 10 ஆவது முறையாக மீண்டும் கொழும்பு செல்ல பிராணாப்புக்கு காங்கிரசு டிக்கெட் போட்டதாகவும் அறிய முடிகிறது.

சுரேஷ் சே said...

inamaana sondhame

ennudaya valaippadhivayum paarungal
yaarukkum anjamaatten

vizhundaal naangal vidhayaai vizhuvom
ezhundhaal meendum malayaai ezhuvom

www.thamizhiname.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
உடன்பிறப்பு
அக்னி பார்வை
THAMIZHAN

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
இன்னொரு கோணத்தில் பார்த்தல் இரனடு பேருமல்லாத ஒருவர் நமக்கு தேவை...

நேற்று பதிவர் சந்த்திபில் உங்களை எதிர்பார்த்தேன்..:)//

வேறு சில வேலைகள் இருந்ததால் சந்திப்புக்கு வர இயலவில்லை.உங்களையெல்லாம் பார்க்கமுடியாமைக்கு வருத்தமே

butterfly Surya said...

திமுக 25 -27 இடங்களில் வெற்றி பெறும்.

பாமக & தேமுதிக = 0

ராஜ நடராஜன் said...

Flash news மாதிரி பதிவுகளுக்கும் கூட மெதுவா நடந்து வருவது நல்லது போலவே தெரிகிறது.

உங்கள் பதிவில் சில உண்மைகள் இருந்தாலும்,குறிப்பாக முந்தைய ஆட்சியின் சாதனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அப்போதைய கள நிலைகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்ற உண்மையென்ற போதும் இந்த தேர்தல் கள நிலை உயிர்களோடு விளையாடும் அரசியல் களமாகி விட்டதால் முந்தைய கணக்கு செல்லவே செல்லாது உணர்வு பூர்வமாய்.

மணிகண்டன் said...

சார், நீங்க விஜயகாந்த் காங்கிரஸ் கூட மறைமுக ஒப்பந்தம் வைத்து ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கிறார் என்று சொன்னீர்களே. 40 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவித்திருக்கும் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து என்ன ?

அது என்ன, கலைஞர் அவர்களுக்கு மட்டும் வாக்கு செலுத்தி, அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தாலும் கூட அவர்களின் ஆதரவை வாபஸ் வாங்குவார்கள். அப்பொழுது கூட பிரச்சனை தானே. திமுகவுக்கு வாக்கு செலுத்த முடிவு எடுத்தவுடன் அவரது கூட்டணிக்கு முழுமையாக வாக்கு செலுத்த வேண்டியது தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வண்ணத்துபூச்சியார்
ராஜ நடராஜன்
மணிகண்டன்