1.மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித கர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம்.அதில் அறிவாளிகளும்(உங்களைச்சொல்லலைங்க), ஞானிகளும் கூட விதிவிலக்கல்ல.பிறரைவிட நாம் ஞானத்தில் பெரியவர்கள், அறிவில் பெரியவர்கள்..என்ற எண்ணம் இயல்பாகவே வந்துவிடுகிறது.பிறை தாழ்த்திப் பார்ப்பதில் ஒரு இன்பம்.
2.உலகத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் சில விஷயங்கள் அழகாகத்தான் இருக்கும்.சூரியன்,சந்திரன்,குழந்தைகள்,புன்னகை,முதுமை,கடல்..இவை எல்லாம் உலகம் முழுதும் அழகுதான்.
3.உப்பு...இனிப்பாக மாறுமா? கண்டிப்பாக மாறும்.வியர்வைவர உழைத்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.வியர்வை..உப்பு...அதனால் வாழ்வில் கிடைப்பது இனிப்பு.
4.அட்சயதிரிதியைக்கு மட்டுமல்ல..நம் வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளது தங்கம்.பொற்றாமரை பாதங்கள் என்கிறோம்.பொன்னான வாய்ப்பு..என்கிறோம்.குழந்தையை கொஞ்சும் போது 'என் தங்கமே'என்கிறோம்.பூமியை பொன் விளையும் பூமி என்கிறோம்.நல்ல காலத்தை பொற்காலம் என்கிறோம்...மனைவியை..ச்சின்னப்பையன் போன்றோர் தங்கமணி என்கிறார்கள்.
5.காய்கறிக்காரன்,ஆட்டோக்காரன் இவர்களுடன் பணத்திற்கு பேரம் பேசுகிறோம்.அவர்களிடம் கோபமாக பேசுகிறோம்.ஆனால் ..செய்தித்தாள்களில் அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான ஊழல்
பற்றி படிக்கும் போது கோபம் கொள்வதில்லை.ஏமாற்றுவது ஒரு குற்றம் என்ற மனப்பாங்கு..நம்பிக்கை நம்மைவிட்டு போய் விட்டது.
6.வழுக்கை
பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமியாய் ஆனது தலை
7.தலைவர் ஏன் திடீர் உண்ணாவிரதம் இருக்கார்..
வயிறு சரியில்லையாம்...டாகடர் ஒரு நாள் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கச் சொல்லியிருக்காராம்.
7 comments:
me the first
//3.உப்பு...இனிப்பாக மாறுமா? கண்டிப்பாக மாறும்.வியர்வைவர உழைத்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.வியர்வை..உப்பு...அதனால் வாழ்வில் கிடைப்பது இனிப்பு.///
அடிபாடை உண்மை சார்
சுண்டல் சூப்பர்.
************
காய்கறிக்காரன்,ஆட்டோக்காரன் இவர்களுடன் பணத்திற்கு பேரம் பேசுகிறோம்.அவர்களிடம் கோபமாக பேசுகிறோம்.ஆனால் ..செய்தித்தாள்களில் அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான ஊழல்
பற்றி படிக்கும் போது கோபம் கொள்வதில்லை.ஏமாற்றுவது ஒரு குற்றம் என்ற மனப்பாங்கு..நம்பிக்கை நம்மைவிட்டு போய் விட்டது.
*****************
இதுக்கு ஒரு காரணம் இருக்கு. நமக்கு பத்து ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை புரிந்து கொள்ள முடிகிறது. அதே 10 ஆயிரம் கோடி ருபாய் என்றால், நம் மனதிற்கு அதை உள்வாங்கி கொள்ளும் திறன் இல்லை. அது ஏதோ, எங்கேயோ நடக்கும் செயல். நமக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற மனப்பான்மை வந்துவிடுகிறது.
வருகைக்கு நன்றி
shabi
அக்னி பார்வை
மணிகண்டன்
//3.உப்பு...இனிப்பாக மாறுமா? கண்டிப்பாக மாறும்.வியர்வைவர உழைத்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.வியர்வை..உப்பு...அதனால் வாழ்வில் கிடைப்பது இனிப்பு.///
well said sir
:)))))))))))))))
வருகைக்கு நன்றி
சிவா
SUBBU
Post a Comment