Thursday, October 1, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (2-10-09)

உடல் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கட்டாயம் யோகா தியானம் செய்ய வேண்டும்.இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி,சரியான தூக்கம்,சரியான ஓய்வு ஆகியவை மிகவும் அவசியம்.இவற்றை கடைபிடித்தால் நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார்

2)மனோரமாவிற்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாம்.(ஆசை யாரை விட்டது).,ஆகவேதான் தீடீரென தற்போது சமூக சேவை என இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

3)நாடு முழுதும் பொது இடங்களில் கோவில்கள்,மசூதிகள்,சர்ச்சுகள்,குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தைச் சேந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட உச்ச நீதிமன்றம்..தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

4)சீனா உருவாக உறுதுணையாக இருந்த வெளிநாட்டு தலைவர்கள் பட்டியலில் முன்னால் பிரதமர் நேருவின் பெயரும்..ரவீந்திரநாத் தாகூர் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.சீனாவில் கம்யூனிஸப்புரட்சி முடிவடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை 60 வெளிநாட்டவர் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஆனால் இதே நட்புறவை 1962ல் அவர்களே வலிய முறித்துக் கொண்டது குறித்து எதும் சொல்லவில்லை.

5)உலக பொருளாதார நெருக்கடியால் பல வெளிநாட்டு இளைஞர்கள் வேலை தேடி சீனாவிறகு படையெடுக்கின்றனராம்.அங்கு ஆங்கிலம் கற்பிப்பது,கம்யூட்டர் துறை ஆகியவற்றில் பணிபுரிகின்றனராம்.
இப்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பொறுத்தவரை சீனா பாதுகாப்பான இடமாம்.

6) ஒரு கொசுறு ஜோக்

நேருவிற்கும்..படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை என்று சோனியா கூறியுள்ளார் _ செய்தி
ஒருவேளை அவர் ஸ்மிதா படேலை எண்ணி சொல்லி இருப்பாரோ என்னவோ

18 comments:

Anonymous said...

//ஒருவேளை அவர் ஸ்மிதா படேலை எண்ணி சொல்லி//

இருந்தாலும் இருக்கலாம் :)

யாசவி said...

good collection

Anonymous said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

சின்ன அம்மிணி
யாசவி
Ammu Madhu

venkat said...

nalla pathivu

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி venkat

Cable சங்கர் said...

விடுங்க..விடுங்க.. பச்சை புள்ளைங்க..ஒன்னும் தெரியாம பேசறதும்.. அதை நாம கண்டுக்காம போறதும் புதுசா என்ன..?

இது சோனியா சொன்னவிஷயத்துக்காக..

Unknown said...

It should have been Amisha Patel and NOT Smita Patil. Patils are Maharashtrians and Patels are Gujaratis.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramkumar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
விடுங்க..விடுங்க.. பச்சை புள்ளைங்க..ஒன்னும் தெரியாம பேசறதும்.. அதை நாம கண்டுக்காம போறதும் புதுசா என்ன..?

இது சோனியா சொன்னவிஷயத்துக்காக..//
நம்மால வேற என்ன செய்ய முடியும்...எல்லாவற்றிற்கும் அம்மா தாயே தானே
வருகைக்கு நன்றி Sankar

ரவி said...

யார் அந்த ஸ்மிதா படேல் ? படம் வெளியிட முடியுமா ?

சீனர் தலைகள் இந்தியர்களை நட்புறவோடு பார்ப்பதாக நினைவில்லை. இன்னும் அவர்களுக்கு நாம் போட்டியாளர்கள், எதிரிகள் தாம் போல. அருணாச்சலபிரதேசம் அவங்களுதுங்கறாங்களே ?

யோகா சக்கரை வியாதியை கட்டுப்படுத்துமா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
யோகா சக்கரை வியாதியை கட்டுப்படுத்துமா//

முதலில் இது நோயே யில்லை.உடலில் ஒரு குறைபாடு அவ்வளவுதான்..சரியான உணவு பழக்கங்கள்,தேவையான உடற்பயிற்சி ஆகியவை இருந்தாலே உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம்.அதன்படி யோகாவும் செய்யலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
யார் அந்த ஸ்மிதா படேல் ? படம் வெளியிட முடியுமா ?//

இங்கு சென்று அவர் புகைப்படத்தையும்..விவரங்களையும் காணுங்கள்


http://en.wikipedia.org/wiki/Smita_Patil

மங்களூர் சிவா said...

நல்ல சுண்டல்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

NO said...

அன்பான நண்பர் திரு TVR அவர்களே,

நான் சில நாட்களுக்கு முன் சொல்லியதுபோல வினவு கோஷ்டி உடனான இரண்டாவது ரவுண்டு ஆரம்பமாகிவிட்டாது! என்ன திரு கோவி அண்ணனை கொஞ்ச நாட்களாக கலாய்தத்தால் கொஞ்சம் தாமதம்!

Time இருந்தது என்றால் கொஞ்சம் வந்து போங்க!

வருத்தமான ஒரு விடயம், நான் அப்பொழுதே சொன்னதுபோல, அறிஞர் அண்ணாவை திரு வினவு கண்டபடி தூற்றி எழுதியதை தீமூகா / ஆதீமூகா சார்புள்ள பதிவர்கள் எவரும் கண்டிக்கவில்லை! Too bad!!!!
Hence I am made to take the cudgels on their behalf!!!!

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் அந்த பதிவை படிக்கவில்லை..முடிந்தால் லிங்க் கொடுக்கவும்

NO said...

அன்பான நண்பர் திரு TVRK

அந்த லிங்க் இதோ - http://www.vinavu.com/2009/09/16/annadurai/

மேலும் நான் இந்த subject ஐ பற்றியும் மற்றும் பலவற்றை பற்றியும் வினவில் எழுதிய பின்நூடத்தை அழித்துவிட்டார்கள்! மாற்று கருத்து பற்றி வாய் கிழிய பேசும் இந்த மகா யோக்கியர்கள் ( அவர்களே அவர்களைப்பற்றி சொல்லிக்கொள்வதுபோல), எல்லோரையும் வாய்க்கு வந்தபடி வசைபாடும் புரட்சி சுடர்கள், ஒரு நாலு வரி தங்களைப்பற்றி யாராவது விமர்சனம் செய்தால், அதற்க்கு அவர்கள் கொடுக்கும் பெயர், அவதூறு!

நான் முன்பு சொல்லியது போல, மற்றவர்கள் செய்தால் அவதூறு, அவர்கள் மற்றவர்களுக்கு செய்தால் - வரலாறு!

OK ஆனது ஆகிவிட்டது, எனினும், நான் திரு வினவிர்க்கு எதிராக சமீபத்தில் எழுதியதை வேறு யாராவது தங்கள் பதிவில் பதிக்க தயாரா என்று கேட்க்க நினைக்கிறேன்! யாராவது ஒப்புக்கொள்வார்களானால், நான் பதிவு செய்கிறேன், as usual as a comment! முடிந்தால் சொல்லுங்கள்!

நன்றி