
மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேற்றப் போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச் சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக் கண்ணீர் அல்ல
8 comments:
அதனால தான் நான் சைவத்துக்கு மாறீட்டேன்.
//ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக் கண்ணீர் அல்ல//
அழவைக்கும் வரிகள்...
கவிதை சுத்த சைவம்....
//சின்ன அம்மிணி said...
அதனால தான் நான் சைவத்துக்கு மாறீட்டேன்.//
நன்றி சின்ன அம்மிணி
நன்றி தமிழினி
//க.பாலாஜி said...
அழவைக்கும் வரிகள்...
கவிதை சுத்த சைவம்....//
நன்றி பாலாஜி
கவித கவித :)-
நீங்க எழுதச் சொன்ன தொடர் ஒருவழியா எழுதிட்டேன்.
//மணிகண்டன் said...
கவித கவித :)-
நீங்க எழுதச் சொன்ன தொடர் ஒருவழியா எழுதிட்டேன்.//
நன்றி மணி
/// மங்களூர் சிவா said...
:(((///
நன்றி சிவா
Post a Comment