இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.
1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.
அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.
ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.
பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.
கலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது
பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.
1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.
1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு
1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்
1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்
1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.
1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை
அடுத்த பதிவில் சந்திப்போம்
6 comments:
//எம்.ஜி.ஆருக்கு மாற்றாக//
:))
//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //
முழுநேர அரசியலில் இறங்கிவிட்டாரே..,
பூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா?
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//எம்.ஜி.ஆருக்கு மாற்றாக//
:))//
நினைத்துக் கொண்டு என்ற சொல்லை சேர்த்திருக்கணுமோ
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இனி படங்களே எடுக்கப்போவதில்லை //
முழுநேர அரசியலில் இறங்கிவிட்டாரே..,//
அப்படம் எடுத்து முடிக்க பட்ட துன்பங்களும் காரணம்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பூம்புகார் தயாரிப்பில் வந்த படங்களில் ஒரு மெல்லிய ஒற்றுமை இருக்கிறது கவனித்தீர்களா?//
கலைஞர்-அமிர்தம் கூட்டணியை சொல்கிறீர்களா
Post a Comment