Tuesday, October 20, 2009

ஆதலினால் காதல் செய் ...

1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ காத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?

5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.

6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.

7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.

8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்

9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு

_ கபிலன்

14 comments:

க.பாலாசி said...

//காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.//

உண்மைதான் தோழரே.....ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு முறையில் அமைகிறது.

காதலை பகிர்ந்துள்ளீர்கள்...அழகாக. ஒன்பதுமே முத்துக்கள்.

NO said...

அன்பான நண்பர் திரு T V R,

ஏதோ என்னால் முடிந்தது ..........................

செருப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, அதில் எனக்காக ஒரு செருப்பு காத்திருக்கிறது, என்னைக்கண்டதும் அதை மட்டும் நீ தொடாமல் இருக்கிறாயே அதுதான் காதலின் சக்தி

காதல் என்பது ஒருவரை அடிப்பது மட்டும் அல்ல இருவரும் அடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் வரவேண்டும்

காதல் ஒரு அற்ப உணர்வு ... manager ஐ டபாய்து ..... பர்சை தேய்த்து ... உன் முதுகெலும்பை வளைத்து ....உதிர்ந்திடும் பூ அல்ல அது .... தாலி கட்டாதவரை தொடரும் ... கட்டினால் மரணத்தில் கூட முடியும் வாழ்கை

இரவில் கண்ணீர்
ஈரமான இரவு
கனவில் கழுதை
கழுதை கத்துவது போன்ற கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிக்கப்படுவாய் பார்த்து
இதுதானா காதல்?

காதலில் ஜெயித்தவர்கள் கதை .... ஒவ்வொருவருக்கும் மாறுபடாது ..... இருபது மாத ஸ்ரீதேவி இப்போ பார்த்தால் எல்லாமும்தான் மூதேவி ....... தோற்றவர்கள் கதை வெவ்வேறு மாதிரி .... பாக்கிற வரைக்கும் மாதவி ..... எனகுன்ன வந்தாமட்டும் பத்தினி .... மாதவி மூதேவி ஆகாதவரை தாங்கமுடியும்.

திட்டு சதாய்ப்பு தாக்கல் எல்லாவற்றியும் அப்புறம் வைத்துக்கொள்ள்ளலாம் என்ற மென்மையான புரிதலே காதல்!

காதல் என்பது எது வரை - ஆண்களுக்கு பேங்க் பாலன்சு இருக்கும் வரை - Noவின் வரிகள்

திட்டத்தெரியும் அப்போதைக்கு மட்டும் ஆள் கண்ணில் தெரியாது
காதல் என்பது கொஞ்சம் நாள் பொறுத்து வெடிக்கும் Time Bomb!!!!

நன்றி

Note: I assure you that I am neither a misogynist nor someone who has contempt for people falling in love. The problem is most dont see the real fall comming round the corner!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி .பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி No

vasu balaji said...

அழகான கவிதை மாலை. பாராட்டுக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.//

அதுதானே காதல் அதுபோதும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

////பிரியமுடன்...வசந்த் said...
//காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.//

அதுதானே காதல் அதுபோதும்...////


வருகைக்கு நன்றி வசந்த்

Anonymous said...

Nice ones

புலவன் புலிகேசி said...

//6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.
//

ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள்...காதல் என்ற பெயரில்.நல்லா இருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புலவன் புலிகேசி said
ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள்...காதல் என்ற பெயரில்.நல்லா இருக்கு..//

:-))

நசரேயன் said...

தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தயாரா இருக்கேன்,ஆனா ..... சொல்லமுடியலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
தயாரா இருந்தேன் ஆள் சிக்கலை, தயாரா இருக்கேன்,ஆனா ..... சொல்லமுடியலை//

பாவம் அவ்வினம் பிழைத்துப் போகட்டும்