கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.
சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.
முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே
என்கிறார்.
அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.
இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..
எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.
உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து
14 comments:
தமிழில் இப்படியும் உள்ளதா - தெரியாத தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்
தமிழ் எண்களில் இன்னொரு சுவாரசியம் இருக்குங்க.
ஒன்ப(த்)து
தொன்நூறு
தொள்ஆயிரம்
வரப்போகும் பெரிய அடுத்த இலக்க எண்ணை போல ஒலி வரும்.
பாடத்தில் படித்திருக்கிறேன்!
சிலேடைப்புலவர் என்று!
நல்ல தகவல் நன்றிங்க
//cheena (சீனா) said...
தமிழில் இப்படியும் உள்ளதா - தெரியாத தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி//
வருகைக்கு நன்றி சீனா சார்
// ஹாலிவுட் பாலா said
வரப்போகும் பெரிய அடுத்த இலக்க எண்ணை போல ஒலி வரும்.//
ஆம்..பாலா..வருகைக்கு நன்றி
//வால்பையன் said...
பாடத்தில் படித்திருக்கிறேன்!
சிலேடைப்புலவர் என்று!//
வருகைக்கு நன்றி வால்
//வானம்பாடிகள் said...
நல்ல தகவல் நன்றிங்க//
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்
நோய்வாய்ப்பட்ட ஒரு புலவருக்கு பாலை வடிகட்டித் தரவேண்டும் என்று சொன்னதன் பேரில் தரும் பொழுது ,,அவர் முகம் சுழித்தாராம். என்ன புலவரே பால் கசக்கிறதா?என்று கேட்டதற்கு ,”பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை” என்று நோய்வாய்பட்ட நிலையிலும் சிலேடை செய்தாராம் ஒரு புலவர்.[காளமேகம்?]
ஆச்சரியம்
நன்றி
வருகைக்கு நன்றி goma
//கதிர் - ஈரோடு said...
ஆச்சரியம்//
நன்றி கதிர்
சூப்பர் புலமை
..Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர் புலமை//
நன்றி Starjan
Post a Comment