ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, October 6, 2009
அண்ணாவும்..பெரியாரும்..
எனது அண்ணா பற்றிய பதிவில்..நண்பர் Peer...கீழ்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்..
///Peer said...
//பெரியார்..மணியம்மையைக் காட்டி வெளியே வந்த அண்ணா..//காரணம் சரியா?///
அவருக்கு அந்த பதிவில் சரியான விளக்கம் அளிக்காததுபோல் உணர்ந்ததால் இப்பதிவு
சுயமரியாதையின் தாக்கம் திராவிட கழகத்தில் இருந்தது.அதன் வெளிப்பாடாக பகுத்தறிவு வாதம் மக்களிடையே வைக்கப்பட்டது.இக்கட்சியில்..தலைவர்,தொண்டர் என்றெல்லாம் கிடையாது.தந்தை,அண்ணன்,தம்பி என உறவுமுறையிலேயே அனைவரும் அழைக்கப்பட்டனர்.
கட்சியில் ஈ.வெ.ரா.,வை பெரியார்..தந்தை பெரியார் என்றும்..மூத்த உறுப்பினரான அண்ணாதுரையை அண்ணா என்றும் அழைத்தனர் தொண்டர்களான தம்பிகள்.அண்ணாவின் உழைப்பு கழகத்தை மக்களிடம் செல்வாக்குப் பெறச்செய்தது.
பெரியாருக்கும்..அண்ணாவிற்கும்..பாசப்பிணைப்பு இருப்பினும்..கருத்து வேறுபாடுகளும் இருந்தன.
புரட்சிக் கவி பாரதிதாசனுக்கு ..பாராட்டு விழா நடத்தி..பொற்கிழி வழங்கினார் அண்ணா..இதை பெரியார் விரும்பாததுடன்..அவ்விழாவையும் புறக்கணித்தார்.மேலும்..மாணவர்..இளைஞர்கள் வளர்ச்சியில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் அண்ணாவிற்கு இருந்தது.
திராவிட கழக உறுப்பினர்கள் கருமை நிற சட்டை உடுத்த வேண்டும் என்றார் பெரியார்..அண்ணாவிற்கு அதில் உடன்பாடில்லை.போராட்டத்தில் ஈடுபடும் நேரம் மட்டும்..கருமை சட்டை அணிந்தால் போதும் என்றார்.ஆனாலும்..கட்சியின் தலைவருக்குக் கட்டுப்பட்டு..கருப்புச்சட்டை அணிந்தார் அண்ணா.
நம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை..துக்கநாளாக அனுசரிக்க பெரியார் சொன்னது..அண்ணாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.ஆகஸ்ட் 15ம் நாள்..துக்கநாள் அல்ல மகிழ்ச்சி நாள் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.இவ்வறிக்கை..கட்சியில் புயலை உருவாக்க..கட்சிப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கினார்.
பின் மீண்டும்..அண்ணாவும்..பெரியாரும் இணைந்தனர்.
1949 மே மாதம் 16ஆம் நாள் ராஜாஜியை..திருவண்ணாமலையில் சந்தித்து பேசினார் பெரியார்.மாறுபட்ட கருத்துடைய ராஜாஜியிடம் ..என்ன பேசினார் என அண்ணா வினவ..பெரியார் பதில் கூறவில்லை.ஆனால் ஜூலை மாதம் பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.இருப்பினும்..பெரியாருக்கு எதிராக கண்டனங்கள் வேண்டாம் என்றார்.
கருத்து வேறுபாடு முற்றிய நிலையில்..எதிர்காலம் பற்றி ஆலோசிக்க 1949 செப்டெம்பர் 17 ஆம் நாள் அண்ணா கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.அப்போதுதான் தி.மு.க., பிறந்தது.
பின்னரே..
தி.க., தி.மு.க., இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்.
தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் சொல்லப்பட்டது
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றது
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றது
பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்..தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றது.
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடு என்றது...--எல்லாம்.
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.
//
இந்த கல்யாணத்தில் என்ன பிரச்சனை??
தெரிந்து கொள்வதற்காக கேட்கிறான்??
ஜோசப்
மிக்க நன்றி, TVR சார்...
அதாவது, அது மட்டுமே காரணம் அல்ல, அதுவே காரணகர்த்தாவாக இருந்தது.. நான் விளங்கியது சரியா?
இப்படி எல்லாம் பதில் வருமுன்னு தான் நான் கேள்வியே கேட்கிறதில்லை
வருகைக்கு நன்றி
JesusJoseph
Peer
//நசரேயன் said...
இப்படி எல்லாம் பதில் வருமுன்னு தான் நான் கேள்வியே கேட்கிறதில்லை//
கேள்வி கேட்டா பதில்தான் சரியாதுன்னு நினைச்சேன்..கேள்விக்கூடக் கேட்கத் தெரியாதா?
:-))))
எழுதுனா உங்கள போல சுறுக்கமா, நச்சுன்னு எழுதனும்! அருமை தலைவா!!
//கலையரசன் said...
எழுதுனா உங்கள போல சுறுக்கமா, நச்சுன்னு எழுதனும்! அருமை தலைவா!!//
மிக்க நன்றி கலையரசன்
nalla pathiuv
நன்றி venkat
Post a Comment