Friday, October 23, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 5

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.

1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்

1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.

1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல். //

காலத்தை வென்ற ட்யூன்

கல்லூரி மாணவர்கள் எல்லா காலங்களிலும் உபயோகப் படுத்தும் ட்யூன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.//

இந்தப் படத்தின் வசனங்கள் மூலமாகவே தன்னால் சிறப்பாக தமிழை உச்சரிக்க முடிவதாக அந்தக் காலத்திலேயே ஜெயலலிதா அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னதாக ஒரு பேட்டியில் எஸ் எஸ் ஆர் அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

present sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல். //

காலத்தை வென்ற ட்யூன்

கல்லூரி மாணவர்கள் எல்லா காலங்களிலும் உபயோகப் படுத்தும் ட்யூன்///

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
//மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.//

இந்தப் படத்தின் வசனங்கள் மூலமாகவே தன்னால் சிறப்பாக தமிழை உச்சரிக்க முடிவதாக அந்தக் காலத்திலேயே ஜெயலலிதா அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னதாக ஒரு பேட்டியில் எஸ் எஸ் ஆர் அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்//

கலைஞரின் வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் பேச சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,கண்ணாம்பா,விஜகுமாரி ஆகியோர் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
present sir//


நன்றி Starjan