இந்தியாவில் நூறில் ஏழு பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதாம்.குறைந்த உடலுழைப்பு,மோசமான உணவு முறைகள்,பரம்பரை தன்மை உள்ளிட்ட காரணங்களினால்.. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறதாம்..
2)கேரளாவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40லட்சம் பேரின் உயிரை பணயம் வைத்துத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம்.இந்த மக்கள் அனைவரையும் அரபிக்கடலில் தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க வெண்டுமா அல்லது புதிய அணை கட்ட வேண்டுமா என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி என்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.
3)நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா..ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 சதவிகிதத்திற்கு மேல் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் பலர் கேரள மாநிலத்தில் பணியாற்றியபின் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.
5)நாம் ஒரு அடி எடுத்துவைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறதாம்.
6)கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா? கந்தசாமிக்குத் தெரிந்திருக்கும்..ஒரு சேவல் கூப்பிட்டால் (கூவினால்) எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்புடு தூரம்.
7)ஒரு ஜோக்..
டாக்டர்- உங்களுக்கு தூக்கத்தில நடக்கற வியாதின்னு யார் சொன்னாங்க
நோயாளி- எனக்கேத் தெரியும் டாக்டர்..ஆஃபீஸ்ல உட்காராம நடந்துக்கிட்டே இருக்கேனே
14 comments:
4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்
http://valluvam-rohini.blogspot.com/2008/02/blog-post.html
இந்த பதிவைப் பாருங்கள் .
கரம் சுண்டல்.
//மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.//
ஆமாவா?அய்யோ...
இந்த மாதிரி விஷயத்துல ராமதாஸ் நல்லா கணக்கு போடுவார்...ஜோக்கு இன்னும் பெட்டரா போடுங்க
//goma said...
http://valluvam-rohini.blogspot.com/2008/02/blog-post.html
இந்த பதிவைப் பாருங்கள் .//
உங்கள் இடுகையைப் படித்தேன்.அருமையான பதிவு..வருகைக்கு நன்றி கோமா
//வருகைக்கு நன்றி said...
கரம் சுண்டல்.//
வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி
//பிரியமுடன்...வசந்த்
ஆமாவா?அய்யோ...//
ஆமாம் அய்யோ.....
//jackiesekar said...
ஜோக்கு இன்னும் பெட்டரா போடுங்க//
வைச்சுக்கிட்டா வஞ்சனைப் பண்றேன்..சட்டியிலே இருக்கறதுதானே அகப்பையில் வரும்..
//4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.//
ஆரம்பம் கண்ணு...இறுதி காது....சரிதான்...
நல்ல பகிர்வு....சுண்டல் சூப்பர் சாமியோவ்...
//க.பாலாசி said...
ஆரம்பம் கண்ணு...இறுதி காது....சரிதான்...
நல்ல பகிர்வு....சுண்டல் சூப்பர் சாமியோவ்//
வருகைக்கு நன்றி பாலாசி
எங்கே இருந்து புடிக்கறீங்க இது மாதிரி நல்ல விஷயங்கள
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
முதல் பாய்ண்ட்லேயே அடியேன் அவுட். நானும் இனிப்பானவனே...
//செந்தழல் ரவி said...
முதல் பாய்ண்ட்லேயே அடியேன் அவுட். நானும் இனிப்பானவனே...//
சர்க்கரை இனிப்பு என்று சொல்ல வேண்டுமா ரவி
:-))
Post a Comment