Monday, October 5, 2009

அண்ணாவும்..வினவு பதிவும்


அண்ணாவைப் பற்றி வினவு ஒரு பதிவு எழுதியுள்ளாரே..அப்பதிவிற்கு..ஏன் யாருமே எதிர் பதிவிடவில்லை என நோ எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு..வினவு பதிவின் லிங்கும் கொடுத்திருந்தார்.

ஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.

ஆனால்..அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால்..அண்ணா சிறந்தவரே!

பெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா..கடைசிவரை பெரியாரை மதிக்கத் தவறியதில்லை.அரசியலுக்கென ஒரு சில கொள்கைகளை சற்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.கடமை,கண்னியம்,கட்டுப்பாடை அண்ணா மீறியதில்லை.தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததும்...நாட்டில் விஷக்கிருமி பரவ ஆரம்பித்து விட்டது என்று சொன்னவரிடம் கூட இல்லம் தேடிச் சென்று ஆசி பெற்றவர் அவர்.

அண்ணாத்துரை முதலியார் என்றவர் அவர்..என்ற குற்றச்சாட்டிற்குப் போனால்...ஒவ்வொன்றும் அந்த காலகட்டங்களில் சரியாகத்தான் போயிருக்கும்..எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார்..
முந்தைய தலைமுறை..சட்டென மாற்றிவிட முடியாது..ஆகவே தானும் சற்று வளைந்து கொடுத்துத்தான் ஆகவேண்டிய நிலை.அவ்வளவு ஏன்..காமராஜ நாடார்,ராஜகோபாலாச்சாரி ஆகியவருடன் அரசியல் புரிந்த தருணம்.பெரியாரையும்..அப்போது 'நாயக்கரே' என்று அழைத்தவர்கள் உண்டு.

இவ்வளவு பேசுகிறோமே..இப்போது நடப்பது சாதி அரசியல் இல்லை என்று சொல்ல முடியுமா.இன்னமும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணைவேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தானே!

அடுத்து சம்பத் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தது..இது கட்சிகளுக்கு புதிதல்ல..காங்கிரஸிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து வென்றவர் எவர்.அது போல தாய்க்கழகத்திலிருந்து..பிரிந்து கட்சி ஆரம்பித்து வெற்றியடைந்தவர்கள் யார்? ஒரே ஒரு எம்.ஜி.ஆர்., அவ்வளவுதான்..மற்றவர்கள்..அவ்வப்போது நிலைமைக் கேற்ப கட்சியைஆரம்பித்து பின் கலைத்து ..ஏதேனும் திராவிடக் கட்சியுடன்..பதவிக்காக தன்மானம் இழந்து இணைந்தவர்கள்.

அதேபோல..1967ல் ஆட்சியை..அவர்களே..எதிர்ப்பாராமல் பிடித்ததும்..கட்சியின் தலைவரே..முதல்வர் பதவி ஏற்றது தவறல்ல..மேலும்..தி.மு.க.,வில் அப்போது அனைவரும் இளரத்தம்..அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி..அண்ணா மேடையிலேயே..பதவிக்கு வந்தால்..எனக்கு காவல்துறை மந்திரி பதவியைத் தாருங்கள்..காவல்துறையை பழிவாங்க வேண்டும் என்றார்.அப்படிப்பட்ட தருணத்தில் அனுபவமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்?

கடைசியாக..அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

35 comments:

ரவி said...

good post......

உடன்பிறப்பு said...

அண்ணாவை விமர்சிக்க கம்மூனிஸ்டுகளுக்கு எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை எந்த கம்மூனிஸ்டு தலைவரை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு கூட இன்னும் ஸ்டாலினசமோ அல்லது மாவோயிசமோ அவர்களுக்கு இன்னும் கற்று கொடுக்கவில்லை

venkat said...

அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவு உங்களுடையது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அனுபமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்?//

உண்மை, அழகான விளக்கம்

பீர் | Peer said...

//பெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா.//

காரணம் சரியா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
good post......//

நன்றி ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
அண்ணாவை விமர்சிக்க கம்மூனிஸ்டுகளுக்கு எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை எந்த கம்மூனிஸ்டு தலைவரை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு கூட இன்னும் ஸ்டாலினசமோ அல்லது மாவோயிசமோ அவர்களுக்கு இன்னும் கற்று கொடுக்கவில்லை//

விமரிசிக்கட்டும்..ஆனம் விமரிசனம் தரம் தாழக்கூடாது..
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//venkat said...
அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை//

நன்றி venkat

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதிவு உங்களுடையது//


நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அனுபமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்?//

உண்மை, அழகான விளக்கம்//வருகைக்கு நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பீர் | Peer said...
//பெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா.//

காரணம் சரியா?//

ஆம்..சொல்லப்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று

பீர் | Peer said...

இது காரணமாகச் சொல்லப்பட்டது சரியா, சார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
இது காரணமாகச் சொல்லப்பட்டது சரியா, சார்?//

Peer..தேர்தலில் நிற்கவோ..அரசியல் கட்சியாக ஆகவோ தி.க., தயாராய் இல்லை..ஆனால் இதை விரும்பாதவர்கள் இருந்தனர்..எல்லாக் காரணங்களும் ஒன்றாய் சேர்ந்தன.ஆமாம்..வினவு பதிவை படித்தீர்களா?

பீர் | Peer said...

நல்ல பதில் சார்.

(வினவும் படித்தேன்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
நல்ல பதில் சார்.

(வினவும் படித்தேன்)//


நன்றி Peer

ben said...

வினவு சொல்வதை அப்பிடியே விக்ரமன் சினிமா பாணியில் திருப்பி எழுதி உள்ளீர்கள். அண்ணா ஒப்பிட்டு பார்க்கையில் சிறந்தவரே (ராஜகோபலாச்சாரி, பக்தவத்சலம், எம்ஜிஆர், கருணா போன்றவர்களில்) ஆனால் திராவிட அரசியலை/கருத்தியலை முழுக்க முழுக்க பிழைப்புவாதத்தின் கூடாரமாக மாற்றியது அவர் தான் என்பதை ஒப்பு கொள்ள வேண்டிய கட்டாயம் என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்று உள்ளது.
அண்ணா என்றைக்கும் தமிழர்களின் 'sentimental favorite' என்பது மறுக்க முடியாத உண்மை.

Unknown said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

ஜோ/Joe said...

TVR ஐயா,
திமுக உதயத்துக்கு முன்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தது .. திமுக உருவான பிறகு அது பல இயக்கங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் வந்தது ..அதனால் முக்கியத்துவம் இழந்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்ட் இயக்கம் ..அதனால் நம் அண்ணா மீது அவர்களுக்கு காண்டு இருப்பதில் வியப்பேதும் இல்லை.

NO said...

அன்பான நண்பர் திரு TVR

பதிவுக்கு நன்றி! ஆனால் ஒன்று சார், வரம்பை தாண்டியாதாக தெரியவில்லை என்று நீங்கள் நினைப்பதுதான் தவறு !!!!! என்ன திரு வினவு அவர்களின் title ஐ பார்த்தும்கூடவா இப்படி சொல்லுறீங்க!

""""அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!""""

ஆம் வரம்பை சுத்தமாக மீறவில்லை!

""""""தேர்தல் பாதைக்குள் நுழைந்தபிறகு தி.மு.க.வின் கொள்கைகளை எல்லா சந்தர்ப்பத்திலும் காபரே நடனத்தில் ஆடை கழற்றுவது போல ஒவ்வொன்றாக உதறி எறிந்தார் """"""""

இங்கேயும் வரம்பை சுத்தமாக மீறவில்லை!

"""""""ஆட்சியைப் பிடித்தபோது கொள்கை என்று சொல்லிக்கொள்ளக் கோவணம் கூட இல்லாமல் முழு அம்மணமாகி நின்றார். இதுதான் அண்ணா தன் தம்பிமார்களுக்குத் தந்த அரசியல் பாடம்.""""""""""

இதுவும் வரம்பை சுத்தமாக மீறவில்லை!

இதை போல இன்னும் பல......................

Just for information see below the cut and paste of a part of the deleted (deleted by வினவு டீம்) comment that I made in வினவு on this subject. Only the relevant portions included!

/// அன்பான நண்பர் திரு வினவு மற்றும் அவரைவிட இனிமையான நண்பர்களே,


இந்த மாதிரி மக்கா target எல்லாம் உட்டுட்டு ஏன் சார் அறிஞர் அண்ணாவை பதம் பாத்துட்டீங்க? ஏன் அவரு சீனாக்காரனோ இல்லாட்டி ரசியகாரனோ இல்லேன்னு கோவமா? எல்லோரையும் இப்படி உட்டு தாக்கி கடைசில இப்போ அறிஞர் அண்ணாகிட்ட வந்திருக்கிறீர்கள்! அவரு என்ன சார் பாவம் பண்ணாரு?

சரி உடுங்க. பாவ புண்ணியம், நல்லது கேட்டது, நேர்மை ஞாயம், இதயெல்லாம் பார்த்தா நம்ம எழுதுறோம்! ஏதோ காலையில வந்தோமா, அன்னைக்கு கணக்குக்கு, ஸ்டாலின தவிர, மாவோ தவிர, லெனின் தவிர, மற்ற சில கொடுங்கோல் சர்வதிகாரர்களை தவிர எல்லோரையும் போட்டு வாய்க்கு வந்தபடி வசை பாடித்தானே நமக்கு பழக்கம்!!! அதே நேரத்துல திருமா வளவனைப்பற்றியும் அவர் கட்சியைப்பற்றியும் கண்டபடி எழுதினீர்கள்! என்ன எழுதினீங்க, பிழைப்பு வாத...மற்றும் *&&%*^ போன்று பல பொன்னான வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை செய்தீர்கள்!

சரி, அண்ணாவைப்பற்றி வருவோம். ஒத்துக்கறேன், அண்ணா அவர்கள் தனக்கு போட்டியா இருப்பதாக நினைத்த பலரை போட்டு தள்ளவில்லை! அதாவது உங்கள் ஆருயிர் தலைவன் ஸ்டாலின் trotsky யை செய்தது போல, Bhukarinயை செய்ததுபோல, ஜிநோவிவே, கமநேவு மற்றும் பலரை போட்டு தள்ளியதைப்போல! அவரக்கு அந்த தகுதி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்!

அதைவிட ஆயிரக்கணக்கானவர்களை தங்களது version of சமூக புரட்ச்சியை ஞாயப்படுத்த அண்ணா அவர்கள், நீங்கள் கும்பிடும் soviet களைப்போல, நிர்மூலமக்கவில்லை, கொடுரமான gulag இல போட்டு அடைத்து துன்புறுத்தவில்லை!

அதைவிட ஓர் கேவலம், ஒரு அறிவிலியின் பின்னூட்டம்! அண்ணாவின் personal வாழ்க்கைப்பற்றி அசிங்கமாக ஏதோ எழுதிருக்கிறார்! இந்த நண்பர் அந்த கால அதாவது Stalin கால Politbureau கூத்தாடிகள் செய்த அசிங்கங்கள், அதைவிட தங்கள் தெய்வம் மாவோவின் கடை கால ஆட்டங்கள் பற்றி எல்லாம் படித்ததில்லை போலும்.

So, நீங்கள் தகுதியாக நினைக்கும் எந்த தகுதியும் திரு அண்ணாவுக்கு இல்லை. அதான் இப்படி கண்டபடி அவரை திட்டுகிறீர்கள் போலும்!

அத்தான் அப்போவே சொல்லிவிட்டேனே! சரியாக படித்துவிட்டா, ஞாயம் எதுவென்று தெரிந்தா இந்த நண்பர்களெல்லாம் எழுதுகிறார்கள்??? // //

இன்னும் நிறையா எழுதினேன், அவங்கதான் போட மறுத்து விட்டார்கள்! Maximum அவர்கள் செய்யக்கூடியது , ஒரு IP அட்ரஸ் ஐ வைத்துக்கொண்டு, யாரென்று கண்டுபிடித்து வெளியிடுவோம் என்றெல்லாம் சொல்லி comment செய்பவர்களை அடக்கமுயல்வார்கள், அவ்வளவுதான் அவங்க! இது பேருதான் புரட்சி!!!! இதுதான் அவர்களின் புதிய ஜனநாயகம்!!!

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ben

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழினி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
TVR ஐயா,
திமுக உதயத்துக்கு முன்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தது .. திமுக உருவான பிறகு அது பல இயக்கங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் வந்தது ..அதனால் முக்கியத்துவம் இழந்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்ட் இயக்கம் ..அதனால் நம் அண்ணா மீது அவர்களுக்கு காண்டு இருப்பதில் வியப்பேதும் இல்லை.//

வினவு அவர்களின் பதிவுகளை நான் இதுவரை படித்ததில்லை.நோ சொன்னதால் அப்பதிவை படித்தேன்.மற்றபடி அண்ணா பற்றி மாற்றுக்கருத்து சொல்ல இன்று எந்த தலைவனுக்கும் தகுதி இல்லை என்பதே என் கருத்து.நன்றி ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

நோ..இப்பதிவு உங்களுக்காக இட்டது.மற்றபடி அவர்களின் அண்ணா பற்றிய வாதத்திற்கு மதிப்பளித்து எழுதியது அல்ல.ஜோ அவர்களின் பின்னூட்டம் உங்களுக்கான பதிலாக அமைகிறது.நன்றி நோ

NO said...

அன்பான நண்பர் திரு TVR,

Of course, I did fully understand the intent of your posting. Thanks again!

இது திரு ஜோ அவர்களுக்கு!!!! - Some of the quotable quotes by Joseph Stalin.....(I take it from your blog that you might be a catholic, hence some thing about Pope and Vinavists or Stalinists)

** When Stalin was told about the Pope's support for the allied war effort (against Nazi Germany) Stalin cut it short by a one liner......."How many divisions does the Pope have?" (divisions here meant Army divisions)

சொல்ல வருவது என்னவென்றால், சிறுபான்மையினரின் காவலர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும் இந்த கனவான்கள் கிருத்துவத்தின் மீதும் கிருத்துவ சபைகளின் மீதும் கட்டவிழ்த்த கொடூரங்கள் ஏராளம்! இந்த வேடதாரிகள், புரட்சி என்ற பெயரில் உடைத்த சர்ச்சுகள் எண்ணிலடங்காது! மார்க்சின் பெயரால் ஸ்டாலின் கொன்ற ஜெசுஇட்டுகளையும் இடித்த தேவாலயங்களையும் மறந்து இன்று இந்தியாவில் வந்து மத நல்லிணக்கம் பற்றி வாய் கிழிய பேசுகின்ற இந்த செலக்டிவே அமிநிசயா பிடித்த சிவப்பு நண்பர்கள், தங்களின் இரத்த கரை படிந்த சரித்திரத்திற்கு முதலில் பிராயச்சித்தம் தேடிவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்தால் நன்றாக இருக்கும்!

இதில் கொமெடி என்னவென்றால், ஹிட்லிரின் படைகள் மாஸ்கோவின் மிக அறிகில் வந்துவிட்ட நேரத்தில் , தோழர் ஸ்டாலினிற்கு மிகுவும் தேவையாகி போனவர் ஒருவர்! யார் தெரியுமா, The Metropolitian Aliyaa of Moscow (The head Priest of Russian Orthodox Church) who was one of the few that were not assasinated or jailed by the communists! மக்களை எப்படி கவருவது, தங்கள் நாட்டிற்காக இப்படி உயிரை விட செய்வது (ஸ்டாலின்நிர்க்காகவோ அல்லது கம்யூனிச ஆட்சிக்காகவோ யாரும் போராட மனமில்லாத பொழுது) என்று தெரியாமல், இந்த பாதிரியாரை கூப்பிட்டு, ரஷ்யாவின் மானத்தையும், ஆண்டவனின் தேசத்தையும் நீங்கள்தான் காப்பாற்றவேண்டும் இன்று மக்கள் முன் இவரை பெசச்செய்தார் இந்த மாபெரும் புரட்சியாளர்!

It can be said that Communists and Stalin won their war against Nazi's, not because of the people interest to protect communism but due to Hitler's madness, geography and finally due to such pleading by Russian orthodox church!!!!!!

போர் முடிந்த பின்னர், ஸ்டாலின் இதற்கு கைமாறாக செய்தது, அவருக்கு அளித்த Order of Stalin பரிசு! அந்த பரிசுத்தொகை அனைத்தையும் Metropolitian Aliyaa அவர்கள் போரில் எல்லாம் இழந்த எளிய மக்களுக்கு கொடுத்தார் என்பது வேறு கதை!

அதாவது மதம் மற்றும் கடவுள்களை நாங்கள் தரக்குறைவாக தாக்குவோம் அதே சமயத்தில் எங்களுக்கு வேண்டிய நேரத்தில் அதை உபயோகித்துக்கொள்வோம் என்பதுதான் இவர்களின் தத்துவோம்!!!! இதன் மறுபெயர் கடைந்தெடுத்த hypocracy !!!!!!

இவர்களைப்பற்றியும், இவர்கள் கும்பிடும் ஸ்டாலின் மற்றும் மாவோ பற்றியும் பக்கம் பக்கமாக எழுத முடியும்!!! என்ன, வினவு போன்ற காழ்புணர்ச்சி காவியங்களை சொர்ப்பம்பெயரே படிக்கிறார்கள், மற்றும் உலகம் எங்கிலும் இவர்களின் சாயம் முற்றிலுமாக வெளுத்துவிட்டது என்பதை நினைக்கும் பொழுது எதற்கு இதற்க்கெல்லாம் time ஐ வீண் செய்வது என்று தோன்றுவதால் யாரும் நேரத்தை செலவிடுவதில்லை!!!!!

நன்றி

ஜோ/Joe said...

No,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி .பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.

TVR ஐயா,
இன்னொரு விடயம் கவனித்தீர்களா ,அண்ணா நூற்றாண்டு நாளன்று அண்ணாவை திட்டுவதற்காகவே ஒரு பதிவு இட்டு தன் அரிப்பை தீர்த்துக்கொண்டது இட்லிவடை குழு .கிட்டத்தட்ட அதே வலையை வினவு குழுவும் செய்திருக்கிறது ..இட்லிவடக் குழும் வினவு குழுவும் ஒரே கோட்டில் ..வித்தியாசமாக இல்லை?

NO said...

அன்பான நண்பர் திரு ஜோ,

நீங்கள் எழுதியதை படித்த உடனே இட்லி வடைக்குசென்று அவர்கள் எழுதியதை படித்தேன்! If you have really read that properly as you have claimed to have, then you are either not familiar with Tamil prose or you are plainly dishonest with lots of preconceived notions trying to dictate things to you!!! since the former is unlikely, the latter seems to be the truth.

ஒரே சாம்பிள் கீழ சார்,

// //அண்ணா காட்டிய வழி, அண்ணா சொன்னது என்று மூச்சுக்கு முன்னூறு முறை ஜெபிக்கும் கலைஞர், அண்ணா தனது குடும்பத்தினர் எவரையுமே பதவிக்கிழுத்து பலனடைய வைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அண்ணாவின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்று கூட தகவலில்லை. // //

மேலே சொல்லி இருப்பது திரு அண்ணா அவர்களின் மேன்மையை, அதாவது எப்படி அவர் தனது குடும்பத்திற்கு ஒன்றும் செய்யவேஇல்லை என்பதை! அதை கலைஞருடன் compare செய்து எழுதிருக்கிறார்கள்! நீங்கள் கலைஞரின் அபிமானியாக இருந்தால், இட்லி வடை கலைஞரை கிண்டல் செய்கிறார்கள் என்றுவேண்டுமானாலும் சொல்லலாம். அவ்வளவுதான். இதில் அண்ணாவை தரக்குறைவாக வினவைப்போல எங்க சார் தாக்கி இருக்கிறார்கள்? (For that matter கலைஞரை பற்றிகூட தரக்குறைவாக ஒன்றும் இல்லையே, afterall கிண்டலுக்கும் தரக்குரைவிர்க்கும் வித்தியாசம் தெரியாதா?) மேலும் அண்ணாவைப்பற்றி உயர்வாகதானே எழுதிருக்கிறார்கள்?

இவ்வளவு clear ஆக இருந்தும் வினவு எழுதியதையும் இட்லி அண்ட் கோ எழுதியதையும் ஒன்றென்று நீங்கள் நினைப்பீர்களானால், sorry, something certainly is wrong with you and you seem to have your own agenda to grind!!!!!!!

இந்த subject ஐ பற்றி நான் பார்த்த இட்லி வடை லிங்க் http://idlyvadai.blogspot.com/2009/09/brand-name.html ஒரு வேளை வேற பதிவு இருக்குமானால் சொல்லுங்க, படித்துவிட்டு என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன்!

Dear Mr Joe is posturing as a righteous dove
In reality he seems to run his own show
unmindfull of his credibility taking a mighty blow

Correct me if I am wrong Sir,

நன்றி

மணிகண்டன் said...

idlyvadai published another article too. (what jeyakanthan said during anna's death).

hey man, don't say rubbish and then put a disclaimer at the end saying "correct me if i am wrong " :)-

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
idlyvadai published another article too. (what jeyakanthan said during anna's death).//

pl.give me the link

மணிகண்டன் said...

http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_2410.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
ஜோ
No
மணி

வால்பையன் said...

அண்ணா காலத்தில் நான் வாழவில்லை!
அதனால் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
அண்ணா காலத்தில் நான் வாழவில்லை!
அதனால் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!
//

நன்றி வால்பையன்

புருனோ Bruno said...

இன்று தமிழகம், கல்வி, சுகாதாரம், சாலை, மின்சாரம், குடிநீர் !! ஆகியவற்றில் (டெல்லி தவிர) பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னால் நிற்கிறது

இதற்கு காரணம் திராவிட கட்சிகளின் ஆட்சிதான்

--

திராவிட கட்சிகளை குறை கூறுபவர்கள் ஒரு முறை வட மாநிலங்களின் ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தால் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி டாக்டர்