Saturday, October 31, 2009

படித்ததும் கேட்டதும்...

1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!

23 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the first

உண்மைத்தமிழன் said...

ஸார்..

அனைத்தும் அருமை.. தேவையான செய்திகள்தான்..

நன்றிகள்..!

சகாதேவன் said...

//....sufferings of the past and the fears of the future...//
அதனால்தான்
we call the present, a present என்று படித்திருக்கிறேன்

Anonymous said...

வெறும் தகவலாகத் தராமல் அதனுள்ளெழும் உங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்களேன்.

vasu balaji said...

/'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்./

இது அரசியல் பண்பாடு.

/நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!/

அருமையான கவிதைங்க. அந்த அவலத்த படிச்சா புவனேசுவரின்னு இடுகை போட முடியாது. கண்ணில தண்ணிவரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸார்..

அனைத்தும் அருமை.. தேவையான செய்திகள்தான்..

நன்றிகள்..!//

நன்றி உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வடகரை வேலன் said...
வெறும் தகவலாகத் தராமல் அதனுள்ளெழும் உங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்களேன்.//

சில சமங்களில் நம் கருத்தைக் கூறுகையில்.அவை அலசி..ஆராயப்பட்டு..அதைச் சொன்ன பெரியவர்களின் செய்தியே கொச்சைப்படுத்த பட்டுவிடுமே என்ற பயம்தான்

வருகைக்கு நன்றி வடகரை வேலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி வானம்பாடிகள்

velji said...

நல்ல செய்திகள்.நன்றி.

(அது பெரியாரும்,ரஷ்ய அதிபரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்)

goma said...

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

arumaiyaana seythi.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//velji said...
நல்ல செய்திகள்.நன்றி.

(அது பெரியாரும்,ரஷ்ய அதிபரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்)//

காமராஜ் 100 என்ற நக்கீரன் பதிப்பகம் வெளியீட்டில் வந்த செய்தி இது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

arumaiyaana seythi.//

வருகைக்கு நன்றி Goma

அத்திரி said...

காமராஜர் மாதிரி ஒருத்தர்.ம்ம்ம்ஹும்.....................

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
காமராஜர் மாதிரி ஒருத்தர்.ம்ம்ம்ஹும்.....................//

வருகைக்கு நன்றி அத்திரி

பின்னோக்கி said...

காமராஜர் என்று ஒருவர் இருந்தார் என்பதை சொன்னால் கூட நம்ப முடியவில்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பின்னோக்கி said...
காமராஜர் என்று ஒருவர் இருந்தார் என்பதை சொன்னால் கூட நம்ப முடியவில்லை...///

உண்மைதான்

மங்களூர் சிவா said...

/நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!/

கார் , பங்களா, ரூமுக்கு ரூம் எல்சிடி டிவி, மொபைல்னு வசதியாதானே இருக்காளுவ ட்ரெஸ் வாங்க முடியலியாக்கும்???

T.V.ராதாகிருஷ்ணன் said...

வசதிக்காக விபச்சாரம் செய்பவர்கள் பற்ரிய கவிதை இல்லை இது சிவா..வயிற்றுப் பிழைப்புக்கு செய்பவர்கள் கவிதை

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல குறிப்புகள...
படித்து ரசித்தேன்..
மகிழ்ச்சி..

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல குறிப்புகள...
படித்து ரசித்தேன்..
மகிழ்ச்சி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்