திரட்டிகள் எல்லாம் பதிவர்களின் பதிவுகளை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் திரட்டுகின்றன.
நம் எண்ணங்கள் பலரைச் சென்று அடைகின்றன..பதிவு நன்றாயிருந்தால்..மனதிற்குள்..இவனும் நல்ல எழுதுகிறான் என்று எண்ணுபவர்களும்..இவன் எழுத்தை..இரண்டெழுத்து பாராட்டுவோம் என்று பின்னூட்டம் இடுபவரும் மேலும் ..மேலும் எழுதுவதைத் தூண்டுகிறார்கள்.
ஆனால் தமிழ்மணத்தில்..ஆதரவு ஓட்டுகளும்..எதிர் ஓட்டுகளும் போடலாம்..ஆனால் என்னதான் டக்கர் அடித்தாலும்..நீங்கள் ஒரு குழுவாய் இருந்தால் ..தமிழ்மணத்தில் ஒரு குப்பை பதிவு கூட வாசகர் பரிந்துரையில் வரும்...அதே சமயம்..நீங்கள் தனி நபராய் , எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் பதிவு தரம் வாய்ந்ததாய் இருந்தாலும்..பரிந்துரையில் வருவது கடினம்..அவ்வளவு ஏன்..உங்களுக்கு நெகடிவ் ஓட்டே விழக்கூடும்.
ஆனால்..தமிலிஷில் இப்படி ஏதும் இல்லை..அதில் யார் ஆதரவு ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கூட பார்க்கலாம்..அநாவசியமான பாலிடிக்ஸ் இல்லை.
அக்டோபரில்..எனக்கு இதுவரை 19 பதிவுகளுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்து..அப்பதிவுகள் பாப்புலர் ஆகி உள்ளன.தவிர அதற்கு..நம்மை பாராட்டி தமிலிஷிலிருந்து மின்னஞ்சலும் அனுப்புகிறார்கள்.
ஆகவே இன்றைய நிலையில் என் ஓட்டு தமிலிஷிற்கே!
39 comments:
நானும் என் ஓட்டும் தமிழிஷ்க்கு...
அது மட்டுமின்றி அதிக வாசகர்கள் தருவதும் தமிழிஷ்தான்
//பிரியமுடன்...வசந்த் said...
நானும் என் ஓட்டும் தமிழிஷ்க்கு...
அது மட்டுமின்றி அதிக வாசகர்கள் தருவதும் தமிழிஷ்தான்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வசந்த்
இதற்காக நான் தனியா பதிவே போடனும்னு நினைச்சுட்டு இருந்தேன், நீங்க ஆரம்பிச்சுட்டீங்க. தமிழிஸ்’ல் 50% forward மடல்கள் மட்டுமே வருது. அதைத் தடுக்க அவர்கள் முயற்சி செய்யலாம். செய்திகளையும் சேர்த்தே படிப்பதால் என்னுடைய வாக்கு தமிழிஸ்கு. அதே சமயத்தில் பின்னூட்டங்களுக்காக தமிழ்மணத்துக்கே என் வாக்கு. இரண்டும் வேறு வேறு அல்லவா?
அது ஏன் தமிளிஷ்ள பலருக்கு எளிதா பத்து வோட்டுக்கள் கிடைக்கும்போது தமிழ்மணம்ல வெறும் 4 வோட்டு கிடைக்க கூட கஷ்டமா இருக்கு ?
//ஆகவே இன்றைய நிலையில் என் ஓட்டு தமிலிஷிற்கே!//
பாஸ்வேர்ட் களவு போகாமல் இருந்தால் சரி.
:)
//')) said...//
இது கருவிப்பட்டைப் பிரச்சினை தாங்க.
இந்தப் பிரச்சினை பாருங்க ஐயா!
:)
நானும் ஓட்டு போட்டுடேன்.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ...என்று எழுதுவோம் ஓட்டுகளை எண்ணி, நம் எண்ணங்களை மாசு படுத்த வேண்டாமே...
இது என் மேலான பணிவான கருத்து
//நம்மை பாராட்டி தமிலிஷிலிருந்து மின்னஞ்சலும் அனுப்புகிறார்கள்.//
குறிப்பிட்ட அளவுக்கு ஹிட் இருந்தா அந்த மாதிரி மின்னஞ்சல் வரும்னு நினைக்கிறேன். ஆஹா நமக்கு இப்படி வருதேன்னு சந்தோஷப்பட்டிருக்கேன். :)
மெயில் அனுப்புகிறார்களா என்ன..?
நல்ல கருத்து உங்கள் கருத்தை வழி மொழிகின்றேன் நண்பா...யார் ஒரு ஓட்டை போட்டார்கள் என்பது எழுதியவனுக்கும் பார்வையாளனுக்கும் தெரிய வேண்டும்... அதுவும் இல்லாமல் இதில் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது..
தமிழிஷில் ஓட்டு போடுவது சுலபமாக இருக்குங்க. நீங்க தமிழிஷில் உங்களை பதிவு செய்து இருந்தால் போதுமானது. தமிழ் மணம் சமயத்தில் ரொம்ப வெறுப்படிக்குது. யாஹூ அட்ரஸ் கொடுத்து, என்ன என்னமோ கேட்கும். நேரம் நல்லா இருந்தால் எல்லாம் சரியாகப் போய் ஓட்டு விழும், இல்லாட்டி bad signature அப்படின்னு வந்துடும். (என் கையெழுத்து மோசம் என்று சொல்ல இவங்க யாருன்னும் கோபம் வருவது தனிவிசயம்) கொஞ்சம் லொள்ளாகத்தான் இருக்குது.
ஆனா, உங்க இடுகை எல்லாவற்றிக்கும் நான் ஓட்டு போட்டுவிடுவேங்க. (படிச்சுப் பார்த்துட்டுத்தான்). தமிழிஷில் நிச்சயம். தமிழ்மணம் வேலை செய்வதைப் பொருத்து.
நிறைய பேர் தமிழ் மணத்தைப் பற்றி குறைகள் இது மாதிரி சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தமிழ் மண நிர்வாகிகள் எந்த ஆக்ஷணும் எடுத்த மாதிரி தெரியவில்லீங்க.
//செய்திகளையும் சேர்த்தே படிப்பதால் என்னுடைய வாக்கு தமிழிஸ்கு. அதே சமயத்தில் பின்னூட்டங்களுக்காக தமிழ்மணத்துக்கே என் வாக்கு//
:-)))
//மணிகண்டன் said...
அது ஏன் தமிளிஷ்ள பலருக்கு எளிதா பத்து வோட்டுக்கள் கிடைக்கும்போது தமிழ்மணம்ல வெறும் 4 வோட்டு கிடைக்க கூட கஷ்டமா இருக்கு ?//
அதுதான் என் கேள்வியும்
//கோவி.கண்ணன் said...
பாஸ்வேர்ட் களவு போகாமல் இருந்தால் சரி.
:)//
இந்த இடுகைக்கு தமிழ்மணத்தில் 10அவுட் ஆஃப் 10 ஓட்டுகள்..ஆனால் பரிந்துரையில் இதுவரையில் இல்லை..ஏன் கோவி
//ILA(@)இளா said...
இந்தப் பிரச்சினை பாருங்க ஐயா!//
எப்படி சரி செய்வது இளா
//..:: Mãstän ::.. said...
:)
நானும் ஓட்டு போட்டுடேன்.//
வருகைக்கு நன்றி Mãstän
//goma said...
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே ...என்று எழுதுவோம் ஓட்டுகளை எண்ணி, நம் எண்ணங்களை மாசு படுத்த வேண்டாமே...
இது என் மேலான பணிவான கருத்து//
நன்றி goma
//சின்ன அம்மிணி said...
குறிப்பிட்ட அளவுக்கு ஹிட் இருந்தா அந்த மாதிரி மின்னஞ்சல் வரும்னு நினைக்கிறேன். ஆஹா நமக்கு இப்படி வருதேன்னு சந்தோஷப்பட்டிருக்கேன். //
ஆம்..வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
//Cable Sankar said...
மெயில் அனுப்புகிறார்களா என்ன..?//
ஆம்...ஒரு மின்னஞ்சல் பாருங்கள்
Congrats!
Your story titled 'கொஞ்சி விளையாடும் தமிழ் - 2' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th October 2009 12:54:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/125350
//எப்படி சரி செய்வது இளா///
எனக்கும் ஆரம்பத்தில் இந்த பிரச்சினை இருந்தது. பதிவர் கபீஷ் என்னுடைய வலைப்பத்தின் டேஷ்போர்டின் உள்ளே நுழைந்து உதவினார். அவர் என்ன செய்தார் என்பதை பதிவாக வெளியிட்டால் நலம்..
//jackiesekar said...
நல்ல கருத்து உங்கள் கருத்தை வழி மொழிகின்றேன் நண்பா...யார் ஒரு ஓட்டை போட்டார்கள் என்பது எழுதியவனுக்கும் பார்வையாளனுக்கும் தெரிய வேண்டும்... அதுவும் இல்லாமல் இதில் தமிழ்மணத்தில் ஓட்டு போடுவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது..//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஜாக்கி
//இராகவன் நைஜிரியா said...
ஆனா, உங்க இடுகை எல்லாவற்றிக்கும் நான் ஓட்டு போட்டுவிடுவேங்க. (படிச்சுப் பார்த்துட்டுத்தான்).//
நன்றி இராகவன்
//செந்தழல் ரவி said...
//எப்படி சரி செய்வது இளா///
எனக்கும் ஆரம்பத்தில் இந்த பிரச்சினை இருந்தது. பதிவர் கபீஷ் என்னுடைய வலைப்பத்தின் டேஷ்போர்டின் உள்ளே நுழைந்து உதவினார். அவர் என்ன செய்தார் என்பதை பதிவாக வெளியிட்டால் நலம்..//
நீண்ட நாட்களாக இப்பிரச்னை உள்ளது..சரி செய்யத்தான் தெரியவில்லை.
நன்றி ரவி
Please contact me. we will fix it up
'வாக்கு' அளிப்பதை இப்படி பகிரங்கமாக அறிவித்து விட்டீர்களே ஐயா.
எனது பல இடுகைகளில் ஒரு இடுகை கூட 15 வாக்குகள் பெற்றது இல்லை. அப்பொழுது நினைத்துக்கொள்வேன், எப்பொழுதுதான் பலரையும் கவரும் வண்ணம் எழுத வருமென.
தமிழ்மணம் மற்றும் தமிழிஸ் இரண்டுமே சிறப்பாக இருக்கிறது.
//ILA(@)இளா said...
Please contact me. we will fix it up//
நன்றி இளா..வார இறுதியில் அழைக்கிறேன்
//Rads said...
'வாக்கு' அளிப்பதை இப்படி பகிரங்கமாக அறிவித்து விட்டீர்களே ஐயா.
எனது பல இடுகைகளில் ஒரு இடுகை கூட 15 வாக்குகள் பெற்றது இல்லை. அப்பொழுது நினைத்துக்கொள்வேன், எப்பொழுதுதான் பலரையும் கவரும் வண்ணம் எழுத வருமென.
தமிழ்மணம் மற்றும் தமிழிஸ் இரண்டுமே சிறப்பாக இருக்கிறது//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Sir
ஆமாம்.. நானும் ஒரு ஓட்டு போட்டிருக்கிறேன். இப்போ 11/11 ஆனாலும் முகப்பில் வரவில்லை. :(
இதுவும் அரசியல்தாங்க...
கோவியார் சொல்வதும் அதிர்ச்சியாக இருக்கிறது.
டி வி ஆர்:
என்ன இப்படி சொல்லீட்டீங்க? :(
தமிழ்மணம்தான் என்னை பொறுத்தமட்டில் சிறந்த திரட்டி! அவங்களால் முடிந்த அளவு இம்ப்ரூவ் பண்ணுறாங்க!பண்ணிக்கொண்டு இருக்காங்க.
தமிலிஷ்ல மார்க் வாங்கி நீங்க எதைஇயும் சாதிக்கப்போவதில்லை சார். தமிமணத்தில் பரிந்துரைக்கபடலினாலும் உங்கள் பதிவு தரம் குறைதது என்ற அர்த்தமும் இல்லை.
நான் உங்க கருத்தை ஏற்றுக்கொள்லாததால உங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுக்கிறேன். மன்னிக்கவும். :(
//வருண் said...
டி வி ஆர்:
என்ன இப்படி சொல்லீட்டீங்க? :(
தமிழ்மணம்தான் என்னை பொறுத்தமட்டில் சிறந்த திரட்டி! அவங்களால் முடிந்த அளவு இம்ப்ரூவ் பண்ணுறாங்க!பண்ணிக்கொண்டு இருக்காங்க.
தமிலிஷ்ல மார்க் வாங்கி நீங்க எதைஇயும் சாதிக்கப்போவதில்லை சார். தமிமணத்தில் பரிந்துரைக்கபடலினாலும் உங்கள் பதிவு தரம் குறைதது என்ற அர்த்தமும் இல்லை.
நான் உங்க கருத்தை ஏற்றுக்கொள்லாததால உங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கொடுக்கிறேன். மன்னிக்கவும். :(//
ஆமாம்..பீரின் பின்னூட்டத்திற்கு உங்க பதில்?
//பீர் | Peer said...
ஆமாம்.. நானும் ஒரு ஓட்டு போட்டிருக்கிறேன். இப்போ 11/11 ஆனாலும் முகப்பில் வரவில்லை. :(
இதுவும் அரசியல்தாங்க...
கோவியார் சொல்வதும் அதிர்ச்சியாக இருக்கிறது.//
வருகைக்கு நன்றி Peer
T V R: I am not in a position to advise you but you should make constructive criticism. You are putting down a aggregator promoting another one- of course without even realizing that. :(
They may have used special filter (just like we are moderating and removing "insulting" responses). You expect them to pleased with your title? They are also human beings, NOT GOD :)
Let me tell you this, even tamilish owner wont like this kind of title. That is my opinion. I have nothing against tamish but you dont have to put down tamizmaNam and expect them to appreciate it by "recommending" this post!
After all, bloggers' recommendation and marks are ONLY a small part of TM services. There are so many things they do are high qulaity service and not comparable with tamish or any other thiratti :) So, over all tamizmaNam wins over any other thiratti, imho!
நன்றி வருண்
//ஒரு குப்பை பதிவு கூட வாசகர் பரிந்துரையில் வரும்...அதே சமயம்..நீங்கள் தனி நபராய் , எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் பதிவு தரம் வாய்ந்ததாய் இருந்தாலும்..பரிந்துரையில் வருவது கடினம்..அவ்வளவு ஏன்..உங்களுக்கு நெகடிவ் ஓட்டே விழக்கூடும்.//
ரொம்பவும் சரி நண்பரே.
எனக்கு இந்த ஓட்டுகளின் மீது அதிக நாட்டம் இல்லை. நல்ல பதிவுகளைப் பாராட்டியும் நன்றி சொல்லியும் வருகின்ற மின்மடல்களும் கைப்பேசி அழைப்புகளும் சிறந்த தூண்டுகோள்கள் எனக்கு.
என் மண்ணின் மணத்தை தமிழ்கூறு நல்லுகத்திற்கு பரிமாறுவதில் மிகப் பெரிய நிறைவு கிடைக்கிறது.
//சுப.நற்குணன் said...
//ஒரு குப்பை பதிவு கூட வாசகர் பரிந்துரையில் வரும்...அதே சமயம்..நீங்கள் தனி நபராய் , எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் பதிவு தரம் வாய்ந்ததாய் இருந்தாலும்..பரிந்துரையில் வருவது கடினம்..அவ்வளவு ஏன்..உங்களுக்கு நெகடிவ் ஓட்டே விழக்கூடும்.//
ரொம்பவும் சரி நண்பரே.///
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சுப.நற்குணன்
Your story titled 'என் ஓட்டு தமிலிஷ்க்கே..' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th October 2009 04:48:01 PM GMT
நன்றி tamilish
Here is the link to the story: http://www.tamilish.com/story/125489
இன்றைய நிலையில் என் ஓட்டு தமிலிஷிற்கே!
நன்றி Starjan
Post a Comment