ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, October 27, 2009
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...
வாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.
1.நல்ல உணவு
2.நல்லதூக்கம்
3.அன்பான வாழ்க்கைத்துணை.
முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.
இரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..
உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.
தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.
ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.
மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.
இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..
மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நல்ல தகவல்
இருங்க ஒரு தூக்கம் போட்டுட்டு வரேன்
:))))
//முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.//
பரிசீலித்து தான் பாருங்களேன். நைட்டு சோறு கிடைக்காது நைனா...
தூக்கத்தினைப் பற்றின உங்களின் பதிவு நன்று...ஆமா....கடைசியில முடிவு முற்றுபெறாம இருக்கிறதே தலைவரே....
வருகைக்கு நன்றி சிவா
//க.பாலாசி said...
தூக்கத்தினைப் பற்றின உங்களின் பதிவு நன்று...ஆமா....கடைசியில முடிவு முற்றுபெறாம இருக்கிறதே தலைவரே....//
பதிவை இரவு தட்டச்சு செய்தேன்..முடிக்கும் முன் தூக்கம் வந்து விட்டது
பாலாஜி இதைச் செய்யுள் போல படியுங்கள்..இந்த அடிகளை கடைசியில் போட்டுக்கொள்ளுங்கள்..இப்போது முற்றுப்பெறுகிறதா?
ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது
தேவையான தகவல். நன்றி.
நல்ல தகவல்... தூக்கம் மனிதனின் மனதினை கணிக்கின்றது... கவனிக்கின்றது...தூக்கத்தில் புலம்புவது உண்டா?
நல்ல பதிவு...:)
//வானம்பாடிகள் said...
தேவையான தகவல். நன்றி//
நன்றி வானம்பாடிகள்
// raja said...
நல்ல தகவல்... தூக்கம் மனிதனின் மனதினை கணிக்கின்றது... கவனிக்கின்றது...தூக்கத்தில் புலம்புவது உண்டா?//
விழித்துக் கொண்டே புலம்புபவரைத் தெரியும்
//வேந்தன் said...
நல்ல பதிவு...:)//
நன்றி வேந்தன்
//முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.//
ஏன் பயமா?
//பீர் | Peer said...
//முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.//
ஏன் பயமா?//
பயமா..எனக்கா..ச்சீ..ச்சீ..ஒரு மரியாதை அவ்வளவுதான்..ஹி...ஹி..
தகவல்களுக்கு நன்றி சார்]
ஆவ்.....
// பிரியமுடன்...வசந்த் said...
தகவல்களுக்கு நன்றி சார்]
ஆவ்.....//
நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்..சிலருக்கு படித்தால் தூக்கம் வந்துவிடும்...உங்களுக்கு ஒரு கொட்டாவி வந்ததுமே தூக்கம் வந்து விட்டதே!!
அவசியமான தகவல்கள்.
//ராமலக்ஷ்மி said...
அவசியமான தகவல்கள்.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment