ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, October 13, 2009
அரசு அனுப்பிய அதிகாரிகள்
அந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயில்வோரும்..மற்ற மொழிப் பயில்வோரும் ஒரே மாதிரி கவனிப்பதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.பல தந்திகளும்..கடித பரிமாற்றங்களும் செய்த பிறகு..
சில அதிகாரிகளை அரசு தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் நிலையை நேரில் கண்டறிய அனுப்பினர்.
குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜே விற்கு முன்னரே விவரம் தெரிவிக்கப்பட்டது.உடனே அவர்..தமிழ்க் கல்வி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளித்தார்.அவர்கள் யாரும் அறியா இடத்தில் கொட்டிலில் அடைக்கப் பட்டனர்.மற்ற மொழி படிப்போரில்..தமிழ் தெரிந்தோரைத் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு இவர்கள் பெயரை..உதாரணமாக சண்முகம்,சுப்ரமணி,பாலு என்ற பெயர்களை தற்காலிகமாக சூட்டினார்.பயத்தால் அல்ல., அந்த அதிகாரிகளை சமாளிக்கும் திறன் அவருக்கு உண்டு..மேலும் அப்படிப்பட்ட நிலை உருவானதற்கு அந்த அரசும் காரணமாய் இருந்தது..இருந்தாலும்..அப்பாவி யாய் உள்ள தமிழ் மாணவர்களின் உறவனரை ஏமாற்றவே அப்படிச் செய்தார்.
அதிகாரிகள் வந்தனர்..முதல் இருக்கைகளில் அமர்ந்திருந்த சண்முகத்திடமும்,சுப்ரமணியிடமும்,பாலுவிடமும்..நிலையை விசாரித்தனர்.
அம்மாணவர்கள், தங்களை அரசு நல்ல படியாக கவனித்துக் கொள்வதாகவும்..மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகை தங்களுக்கும் கிடைப்பதாகவும் கூறினர்..முன்னரே ராஜே சொல்லிக்கொடுத்த படி.
அதிகாரிகளும்..திருப்தியடைந்து..தங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய..அவரும் அரசுக்கு உடன் கடிதம்ம் எழுதி தன் திருப்தியை தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
தமிழ்வழிக்கல்வி அவ்வளவு மோசமான நிலையை எட்டும் என்றா நினைக்கிறீர்கள் ??
அரசு அனுப்பியதா..
இல்லை ஏதேனும் கட்சி அனுப்பியதா?
செம உள்குத்துங்கோ
அப்புடி போடு அருவாள. செம பஞ்ச்.
//செந்தழல் ரவி said...
தமிழ்வழிக்கல்வி அவ்வளவு மோசமான நிலையை எட்டும் என்றா நினைக்கிறீர்கள் ??//
:-)))
///கதிர் - ஈரோடு said...
அரசு அனுப்பியதா..
இல்லை ஏதேனும் கட்சி அனுப்பியதா?
செம உள்குத்துங்கோ//
அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்த அதிகாரியின் அதிகாரி பெயர் அரசுங்க
//வானம்பாடிகள் said...
அப்புடி போடு அருவாள.//
போட்டுட்டேங்க
இதென்ன கூத்தா இருக்கு...
//goma said...
இதென்ன கூத்தா இருக்கு//
எதுங்க?
இது இது..
அருமைங்க... எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.
//இராகவன் நைஜிரியா said...
இது இது..
அருமைங்க... எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க.//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி இராகவன்
நடந்ததா? நடக்கப்போவதா??
நீங்கள் சொல்வது இந்த பிரச்சனை மாதிரி இல்லையே ராஜே என்ற பெயரிலேயே தெரிகிறது
//மங்களூர் சிவா said...
நடந்ததா? நடக்கப்போவதா??//
நடந்துகொண்டிருப்பதா?
//வெண்ணிற இரவுகள்....! said...
நீங்கள் சொல்வது இந்த பிரச்சனை மாதிரி இல்லையே ராஜே என்ற பெயரிலேயே தெரிகிறது//
உங்களுக்கு வெள்ளந்தி மனம் வெண்ணிற இரவுகள்
Post a Comment