Thursday, October 8, 2009

திருநங்கையர்கள்


ஒன்பது,பொட்டை,அலி ,பேடி,அரவாணி என்றெல்லாம்..மனம் புண்படுமே என்றும் நினைக்காமல் பரிகசித்துக் கொண்டிருந்த சமுதாயம் மாற ஆரம்பித்திருக்கிறது.அவர்கள் அழகாக திருநங்கை என அழைக்கப்படுகின்றனர்.

கண்பார்வை சரியில்லாவிடின் கண்ணாடி அணிகிறோம்..இதைப் பெரிய குறையாக சொல்வதில்லை.

..உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ..அதிகரித்தாலோ..அதை இன்சுலின் மூலம் சரி செய்கிறோம்..

ரத்த அழுத்தம் உயர்ந்தாலோ..குறைந்தாலோ ஈடு செய்ய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம்..

இவற்றைப் போலத்தான் உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு...இது..

பிறப்பால் ஆண்களாகவும் பின் தம்மைப் பெண்களாக உணர்ந்து வாழ முற்படும் மூன்றாம் பாலினம் இவர்கள்.சில Biological மாறுபாட்டினால் இவர்கள் எதிர்பாலினமாக உணர்கிறார்கள்.அதிக மன உளைச்சலை சமுதாயம் இவர்களுக்குக் கொடுத்து வருகிறது.பொது இடங்களில் அவசரத்திற்கு இவர்களால் ஆண்கள் கழிப்பறையையோ, பெண்கள் கழிப்பறையையோக்கூட பயன்படுத்த முடியா நிலை.

திரையுலகில் இவர்களை கீழ்த்தர நகைச்சுவை காட்சிகளில் சித்தரிக்கிறார்கள்.ஈரமான ரோஜா என்ற படத்தில் திரையரங்கு காட்சி ஒன்றில் கேவலமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.இவர்கள் தட்டும் கும்மியும்..உடன் பாடலும்..பல படங்களில் சித்தரிக்கப் பட்டு..எள்ளி நகையாடப் பட்டிருக்கிறது.

இன்று இவர்கள் நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது..சமுதாயத்தில் இவர்களுக்கு சற்று அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.திருநங்கை என..அன்றே சீவக சிந்தாமணியில் சொல்லப்பட்டுள்ள பழந்தமிழ்ச் சொல்லால் அழைக்கப் படும் நிலை.

இந்நிலையில்..சமீபத்தில் வெளிவந்துள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தில்..மீண்டும் அறத பழசான ஈரமான ரோஜா திரையரங்க அருவருப்பான நகைச்சுவை இடம் பெற்றுள்ளது.

ஒரு ஐயர் பாத்திரமோ, நெல்லை மொழி பேசும் பாத்திரமோ, சென்னைத் தமிழோ, மலையாள நகைச்சுவையோ இப்படி எது வந்தாலும்...ரசிக்கிறோம்..தவறில்லை..

ஆனால் சக மனித குறைபாட்டை நகைச்சுவையாக சித்தரிப்பது...வேசி தொழில் செய்து பணம் சம்பாதிப்பது போல..

தணிக்கை அதிகாரிகள்..இனி இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் தயங்காமல் கத்திரிக்கோலை உபயோகிக்க வேண்டும். செய்வார்களா?

8 comments:

goma said...

சிந்திக்க வைத்த பதிவு.
இவர்களைப் படைக்கும் பொழுது மட்டும் இறைவன், மனம் ஒரு நிலைப்படாமல், மதில் மேல் பூனையாக நின்றானோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா

பீர் | Peer said...

திரைத்துறையின் இத்தகைய விஷமம், வருந்தத்தக்க விஷயம்.

திருநங்கையர், பிச்சை எடுப்பதையும், ஏமாற்றி பிழைப்பதையும் விட்டு சமூக அங்கீகாரத்திற்கான தொழில் செய்ய முன்வர வேண்டும்.

(மும்பையிலிருந்து வரும்போது, நான் பணம் கொடுத்த பின்பும், என் விலையுயர்ந்த செருப்பை எடுத்துக்கொண்டு போனதோடு, என் அருகில் இருந்தவரை கீழ்தரமாக திட்டி அவமானப்படுத்தியதும் வருந்தத்தக்க நிகழ்வு)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பீர்

cheena (சீனா) said...

காலம் மாறுகிறது - சிந்தனைகளும் மாறுகின்றன - இன்னும் மாறும் - கவலை வேண்டாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சீனா Sir

மங்களூர் சிவா said...

வருத்தமான விசயம்.
படம் பார்க்கலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா