Monday, October 12, 2009

பனிப்பாவை (கவிதை)


வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

16 comments:

மணிகண்டன் said...

எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-

vasu balaji said...

/எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-/

அதே!

கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.

க.பாலாசி said...

//வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்//

ஆரம்பமே அசத்தல்....

முடிவு அழகு....

நல்ல கவிதை.....

மணிஜி said...

நல்லாயிருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
எதுக்கு கவிதை எழுதும்போது டைட்டில்ல கவிதைன்னு பிராக்கெட்ல போடறீங்க :)-//

பதிவு ஏன் இவ்வளவு சின்னதாய் இருக்குன்னு நீங்க பின்னூட்டம் போட்டுட்டா என்ன செய்யறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கவிதை அழகு. புல்லின் நுனிப் பனி போல் படிக்கச் சிலிர்ப்பு.//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாஜி said...
நல்ல கவிதை.....//
நன்றி பாலாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தண்டோரா ...... said...
நல்லாயிருக்கு...//

நம்ம வலைப்பூ பக்கம் வந்ததற்கும்...கருத்துக்கும் நன்றி தண்டோரா

புலவன் புலிகேசி said...

//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//
அழகு..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// புலவன் புலிகேசி said...
//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//
அழகு..........///


நன்றி புலவன் புலிகேசி

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உள்ளேன் ஐயா//

மகிழ்ச்சி நசரேயன்

Unknown said...

//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//

கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.

ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
ஆயிரம் பொற் காசுகள் லேது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//veerapandian said...
//வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே//

கவிதையில் சொற் குற்றம் இல்லை..இருந்தாலும் மன்னித்து விடலாம்.

ஆனால் பொருட் குற்றம் உள்ளது..மன்னிக்க முடியாதது.
இப்ப உள்ள பாவைகள் வெட்கத்துடன் மறைய மாட்டாங்க..நீங்க தான் வெட்கப்பட்டு ஓடிப் போகணும்.
ஆயிரம் பொற் காசுகள் லேது.//

அவையில் ..என் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தது எவர்

Radhakrishnan said...

அருமையான கவிதை ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Rads said...
அருமையான கவிதை ஐயா.//

நன்றி Rads