Sunday, October 11, 2009

நகைச்சுவையின் நாயகன் சந்திரபாபு..


என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பின்..தமிழ்த்திரையில் சொந்தக்குரலில் பாடி..நகைச்சுவை விருந்து அளித்தவர் சந்திரபாபு ஆவார்.

பிறரை சிரிக்க வைப்பவன் வாழ்வு..சோகம் நிறைந்தது என்பார்கள்.இவர் வாழ்வும் அப்படித்தான்.1926ஆம் ஆண்டில் பிறந்த இவர்..திரையுலகில் நுழைய பல முயற்சிகள் செய்தார்.பலன் இல்லை 1951ஆம் வருடம் ஒரு நாள் ஜெமினி ஸ்டூடியோ கேண்டீனுக்குப் போனார்..ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வாங்கினார்.அதில் காப்பர் சல்பேட்டைக் கலந்தார்.மட..மட..என குடித்து விட்டார்.வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார்.அப்போது ஸ்டுடியோவில் வேலையில் இருந்த கணேஷ் என்பவரும் கேண்டீன் உரிமையாளருமான மணியன் என்பவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.காவல்துறை அவரை கைது செய்தது.

நீதிபதி முன் நிறுத்தப்பட்டவரைக் கண்ட நீதிபதி மனதில் என்ன தோன்றியதோ..இவரை ஒரு காட்சி நடிக்கச் சொன்னார்.

சந்திரபாபுவும்..ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி நடித்தார்.பின் நீதிபதி வாரம் தோறும் ஒரு நாள் காவல் நிலையம் சென்று கையெழுத்து இடவேண்டும்..என்ற சிறு தண்டனையையே அளித்தார்.

இச் செய்தியெல்லாம் அறிந்த ஜெமினி அதிபர் வாசன்..சந்திரபாபுவிற்கு அப்போது தயாரிப்பில் இருந்த 'மூன்று பிள்ளைகள்'படத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.ஆம்..இவரை மருத்துவமனையில் சேர்த்த கணேஷ் என்பவர் யார் தெரியுமா? அவர்தான் ஜெமினி கணேசன்.அப்போது அவர் ஜெமினியில் புரடக்சன் மேனேஜர் பதவியில் இருந்தார்.

பின் சந்திரபாபு பல படங்களில் நடித்தார்.சபாஷ் மீனா படக்கதையைக் கேட்ட சிவாஜி..தன்னுடன் நடிக்க சந்திரபாபுதான் சரியாய் இருக்கும் என அவரை ஏற்பாடு செய்யச் சொன்னார்.அதை பாபுவிடம் தயாரிப்பாளர்கள் சொல்ல..சந்திரபாபு..சிவாஜிக்கு அந்த படத்தில் எவ்வளவு சம்பளம் என்றார்.'ஒரு லட்சம்' என்றார் தயாரிப்பாளர்.எனக்கு 'ஒரு லட்சத்து ஒரு ரூபாய்' வேண்டும் என்றாராம்.அதை அறிந்த சிவாஜி..'பரவாயில்லை..கொடுங்கள்.ஏனெனில் அந்த பாத்திரத்தில் அவர் நடித்தால் தான் வெற்றி பெறும் 'என்றாராம்.

தமிழ்த்திரையுலகில்..முதலில் ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.அதுபோல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.சந்திரபாபு நடிக்கும் படங்களில் அவருக்கென ஒரு பாடலாவது இருக்கும்.அப்படி அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் ஹிட் டானவை.என் நினைவில் நின்றவரையில் சில பாடல்களும் படங்களும்.

உனக்காக எல்லாம் உனக்காக - புதையல்
சிரிப்பு வருது - ஆண்டவன் கட்டளை
புத்தியுள்ள மனிதரெல்லாம்-அன்னை
கொஞ்சம் தள்ளிக்கணும்- கடவுளைக் கண்டேன்
கவலை இல்லாத மனிதன்- கவலை இல்லாத மனிதன்
பிறக்கும் போதும்- கவலை இல்லாத மனிதன்
ஒன்னுமே புரியலே உலகத்திலே- குமாரராஜா
கோவா மாம்பழமே-மாமன் மகள்
தந்தனா பாட்டுப்பாடணும்-மகாதேவி
பம்பரக் கண்ணாலே-மணமகன் தேவை
குங்குமப் பூவே-மரகதம்
தடுக்காதே..என்னைத் தடுக்காதே-நாடோடி மன்னன்
பொறந்தாலும் ஆம்பளயா -போலிஸ்காரன்மகள்
ஹலோ மை டியர்-புதையல்
நான் ஒரு முட்டாளுங்க-சகோதரி
ராக் அண்ட் ரோல்-பதி பக்தி
தாங்காதம்மா தாங்காது-செந்தாமரை
ஒன்றக் கண்ணு டோரியா-வாலிப விருந்து
எப்போ வச்சுக்கலாம்-பந்த பாசம்
கண்மணிபாப்பா-தட்டுங்கள் திறக்கப்படும்
காதல் என்பது எதுவரை- பாத காணிக்கை

சந்திரபாபு..கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜிக்கு..'ஜாலி லைஃப் ஜாலி லைஃப்'என்ற பாடலும்..பெண் படத்தில் எஸ்.பாலசந்தருக்கு 'கல்யாணம்' பாடலும் பின்னணி பாடியுள்ளார்.

சந்திரபாபு.. எம்.ஜி.ஆர்.,நடிக்க மாடிவீட்டு ஏழை என்ற படம் எடுத்தார்.அப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் எம்.ஜி.ஆர்., தன் ஒத்துழைப்பைக் கொடுக்காததால்..படத்தை சந்திரபாபுவால் முடிக்க முடியவில்லை.அவர் மாடி வீடு போய் ஏழையானார்.கவலையுள்ள மனிதன் ஆனார்.

இதனிடையே ஷீலா என்ற பெண்ணை மணமுடித்தார்..ஆனால்..முதலிரவன்றுதான் அப்பெண் வேறு ஒருவரை விரும்பிய செய்தி தெரியவர..பாபு..அவர்கள் இருவரையும் இணைத்தார்.

மண வாழ்விலும் தோல்வி..அதனால் அவருக்கு மது துணையாயிற்று.

''தட்டுங்கள் திறக்கப்படும்' என்று கடைசியில் ஒரு படம் எடுத்தார்..அதில் ஊமை பாத்திரத்தில் நடித்தார்..படம் தோல்வி.

பின் வாழ்விலும்..திரையிலும் அவரால் கடைசிவரை மீளமுடியவில்லை.தன் 48ஆவது வயதில் காலமானார்.

ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்

16 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் //

பல நகைச்சுவையாளர்கள் வாழ்க்கை அப்படித்தான் தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எனக்கு 'ஒரு லட்சத்து ஒரு ரூபாய்' வேண்டும் என்றாராம்.//
ரீமேக் படத்தில் கவுண்டமணிக்குக்கூட அதிகச் சம்பளம் கொடுத்தார்களாமே..

goma said...

அந்த காலத்துப் படங்கள் எல்லாமே நினைவில் அகலாமல் இருக்கிறது என்றால் , கலைவாணர்,தங்கவேலு சந்திரபாபு போன்ற நடிகர்கள் தந்த தரமான நகைச்சுவை காட்சிகள்தானே

Robin said...

//ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்// :(

vasu balaji said...

அருமையான நடிகர். அருமையான தகவல்.

மங்களூர் சிவா said...

/

சந்திரபாபு.. எம்.ஜி.ஆர்.,நடிக்க மாடிவீட்டு ஏழை என்ற படம் எடுத்தார்.அப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் எம்.ஜி.ஆர்., தன் ஒத்துழைப்பைக் கொடுக்காததால்..படத்தை சந்திரபாபுவால் முடிக்க முடியவில்லை.அவர் மாடி வீடு போய் ஏழையானார்.கவலையுள்ள மனிதன் ஆனார்.
/

ம்

பிழைக்க தெரியாதவர்.

ஈரோடு கதிர் said...

அருமையான நினைவுகூறல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் //

உண்மை..ஆனால் இவருக்கு அதிகம் துன்பங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//எனக்கு 'ஒரு லட்சத்து ஒரு ரூபாய்' வேண்டும் என்றாராம்.//
ரீமேக் படத்தில் கவுண்டமணிக்குக்கூட அதிகச் சம்பளம் கொடுத்தார்களாமே..//

அப்படிப்பார்த்தால் நாகேஷ் மணிக்கணக்கிற்கு பணம்..இப்போது வடிவேலுவும் அப்படித்தானாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அந்த காலத்துப் படங்கள் எல்லாமே நினைவில் அகலாமல் இருக்கிறது என்றால் , கலைவாணர்,தங்கவேலு சந்திரபாபு போன்ற நடிகர்கள் தந்த தரமான நகைச்சுவை காட்சிகள்தானே//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Robin said...
//ஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்// :(//

வருகைக்கு நன்றி Robin

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அருமையான நடிகர். அருமையான தகவல்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ம்

பிழைக்க தெரியாதவர்.//

மனதில் நினைப்பதை பட் டென பேசிவிடுபவர்.யார் தவறிழைத்தாலும்..தவறு என் அவர்களிடமே சொல்பவர்..ஆகவேதான் எம்.ஜி.ஆர்.,உடன் மனக்கசப்பு ஏற்பட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கதிர் - ஈரோடு said...
அருமையான நினைவுகூறல்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்

முரளிகண்ணன் said...

அசத்தலான நடிகரைப் பற்றிய அருமையான தொகுப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
அசத்தலான நடிகரைப் பற்றிய அருமையான தொகுப்பு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி