Tuesday, October 20, 2009

ராஜபக்க்ஷேவும்..கேரளாவும்...

தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

கற்றவருக்கு சென்ற இிடமெல்லாம் சிறப்பு என்று இருந்த நாட்டில்..இன்று ..தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் 'செருப்பு" என்ற நிலை உருவாகி வருகிறதே..ஏன்?

தனித் திராவிட நாடு என்ற கொள்கையுடன் இருந்த திராவிடக் கட்சி..தேசிய ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு..அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த உடன்..தனித் திராவிட நாடு கொள்கையை கை விட்டது.

அனால் இன்று நடப்பதென்ன..

இலங்கை தமிழர் நிலைக் குறித்து அறிந்துவர சென்ற..எம்.பி.க்கள் குழு..அரசு அனுப்பாததாகவே இருக்கட்டும்..சென்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள்..அவர்களில் ஒருவரிடம்..

இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும் ..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும் என்றாராம்..அந்த ராஜபக்க்ஷே..அதை இவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம்..

உடனே தன் கண்டனத்தை அவர் தெரிவித்திருக்க

வேண்டும்..உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..

ஆனால்..அப்படி சொன்னதற்காகவோ என்னவோ..மத்திய அரசு இலங்கைக்கு 500 கோடி உதவி உடன் செய்துள்ளது.

அவமானப்பட்டது தமிழன்தானே..மைய அரசுக்கு என்ன கவலை?

ஒருவேளை ஒரு சிங்கோ,முகர்ஜியோ ஆனால் கண்டனக் குரல் கொடுத்திருக்கும்..

வெளிநாட்டில்தான் இந்த கதை என்றால்..

முல்லைப்பெரியாறு விவகாரத்தில்..உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது..ஆய்வு மேற்கொண்டுள்ளது கேரள அரசு..இதற்கு நம் முதல்வர் கண்டனம் தெரிவித்தால்..அவர் இவ்விகாரத்தில் அரசியலை புகுத்துகிறாராம்..கேரள அமைச்சர்கள் கூறுகின்றனர்.

தவிர..உச்ச நீதிமன்றத்தில்..இரண்டுமாதம் வழக்கை தள்ளிப் போடக் கேட்கிறார்கள்.அதற்குள்..வேலையை மேற்கொள்ளலாமே!

உச்ச நீதிமன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.

வழக்கம்போல ..இந்த விவகாரத்திலும்..ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு..மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிடுவார் முதல்வர்.

தமிழனுக்கு சென்றவிடமெல்லாம்.....

அவமானத்தை தாங்க மட்டுமல்ல..உரிமைகளும் விட்டுக்கொடுத்து விடுவான் தமிழன்..

கேட்டால்..அதுதானே தமிழர் பண்பாடு என்றிடுவான்.

11 comments:

மணிகண்டன் said...

மத்திய அரசு யாரு ? தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் இன்று மத்திய அரசில் ஒரு அசைக்கமுடியாத அங்கம். அப்படி இருக்கும்போது இந்தியா தமிழனை வஞ்சிக்கறதுன்னு எழுதினா என்ன அர்த்தம் ?

என்னவோ திராவிட கட்சிகள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டு தியாகம் பண்ணிட்டா மாதிரி எழுதறீங்களே ?

உச்ச நீதி மன்றத்துல வழக்கு நிலுவைல இருக்கும்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன ? அப்படி செய்வது நீதிமன்ற அவமதிப்பாகுமா ? அல்லது கேரளஅரசுக்கு ஒரு தடையும் இல்லையா ? சும்மா வெறுமே தமிழக அமைச்சர்கள் கதை விட்டுக்கொண்டு இருக்கிறார்களா ? அணையின் உயரத்தை ஏற்றாமல் புது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் நட்டம் என்ன ? இதைக்குறித்து தமிழக அரசு அறிக்கை ஏதாவது தயார் செய்துள்ளதா ?

தமிழகத்தில் இருந்து சென்ற எம்பிக்கள் குழுவில் திருமா போகவேண்டிய அவசியம் என்ன ? அந்தக்குழு அங்கு சாதித்தது என்ன ? திருமாவை ராஜபக்சே நக்கலடித்தவுடன் திரும்பிவந்தால் காம்ப்பில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவார்களா ? ராஜபக்சே திருமாவை சிவப்பு கம்பளத்தில் வரவேற்பார் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள் ?

ஏன் இந்த ஒன்றுக்கும் உருப்படாத குழுவில் வைகோவை கூப்பிடவில்லை ?

பீர் | Peer said...

செந்தழல் ரவி பதிவில் இட்டிருந்த பின்னூட்டம் இங்கும் பொருந்தும் என்பதால், மீள் பின்னூட்டம்.

திருமா அரசு பிரதிநிதியா போகலையே.. தன்னோட செலவில் போயிருக்கிறார். சரி.. இருக்கட்டும், அடுத்த நாட்டு அரண்மனைல போயி மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயான்னு வீர வசனம் பேசிவிட்டு வருவதால் மட்டும் தமிழனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது, திருமா என்பவன் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பதைத்தவிர.

அந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - குறள்.

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

T.V.Radhakrishnan said...

மணி .பீர்

வருகைக்கும் உங்கள் கருத்துக்களைக் கூறியதற்கும் நன்றி

கதிர் - ஈரோடு said...

//உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..//

திரும்பி வரவேணாமா?

வானம்பாடிகள் said...

அட போங்க. நாலே நாளில் இலங்கைத் தமிழருக்கு விடுதலை வாங்கித்தந்த தமிழினக் காவலர்னு போஸ்டரே போட்டுட்டானுங்க. இவனுங்கள எல்லாம்....

T.V.Radhakrishnan said...

//கதிர் - ஈரோடு said...
//உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..//

திரும்பி வரவேணாமா?//

அவன்தான் நம்மைக் கண்டு பயப்படவெண்டும்..அதை விடுத்து..

T.V.Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
அட போங்க. நாலே நாளில் இலங்கைத் தமிழருக்கு விடுதலை வாங்கித்தந்த தமிழினக் காவலர்னு போஸ்டரே போட்டுட்டானுங்க. இவனுங்கள எல்லாம்....//

இவனுங்கள எல்லாம்..!!!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல பதிவு

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல பதிவு..//

வருகைக்கு நன்றி Starjan

நசரேயன் said...

தமிழன் எல்லாம் தன்மானம் இழந்து பல காலம் ஆச்சு

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
தமிழன் எல்லாம் தன்மானம் இழந்து பல காலம் ஆச்சு//

:-((