1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.
2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.
3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்
4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.
5)யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்.
6)வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று புகார் செய்வார்.பெரியநாயக்கன் பாளயத்தில் உண்மையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.மனுநீதி நாள் முகாமில் பங்குப்பெற்ற விவசாயி ஒருவர் தெருவில் இருந்த ஆறு புளியமரங்களைக் காணவில்லை..அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புகார் செய்துள்ளாராம்.
7)இந்தியாவில் அஜந்தா, எல்லோரா குகைகள் பிரசித்திப் பெற்றவை..மிக நீளமான குகை அமெரிக்காவின் கேடுகி மாநிலத்தில் உள்ள ஃப்ளீட் ரிஜ்கேல் சிஸ்டம் தான்..இதன் நீளம் 116.3 கிலோ மீட்டர்.
8) ஒரு ஜோக்
மெகா சீரியல் ஒன்றிற்கு கதை எழுத சான்ஸ் கிடைச்சிருக்காமே..என்ன கதை வைச்சிருக்க
ஆயா வடை வித்த கதை..காக்கா தூக்கிண்டுண்டு போச்சே..அதுதான்..சின்ன சீ ரியலாம்..அதைத்தான் 500 எபிசோடிற்குள் சொல்ல முடியும்.
16 comments:
//யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்\\
சிந்திக்க வேண்டிய விசயம்
ஜோக் அருமை. இது மெகா சீரியல் காலம் அதனால அந்த கதையை 500 எபிசோடுக்குள் முடிச்சாலே மிகப் பிரமாதமாக வரும்.
// 1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா. //
அவ்வளவு காலேஜ் இருக்கா என்ன இந்தியாவில் அல்லது அவ்வளவு உடல் நலமில்லாதவர்கள் இருக்கின்றனரா?
//2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.//
அதுக்குதுதான் நிறைய மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தியா உருவாக்குகின்றதா?
// 4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.//
ஏங்க இந்த ப்ளாஸ்டிக் பெட்ரோலியம் ப்ராடக்டா. அதனால திமிங்கிலம் மட்டுமல்ல, பல உயிர்களும் அழிஞ்சுடும் போலிருக்கே...
ஐயா எல்லாமே நச்சுன்னு இருக்கு..
பாட்டி வடை சுட்ட கதையையும், காக்கா அதை தூக்கிட்டுப் போனதையும் 500 எபிஸோடுக்குச் சொல்லணும்னா பாட்டி, காக்கா ரெண்டு பேரோட சொந்தக்காரங்க கதையை அலசி, ஆராய்ஞ்சு அதுக்கப்புறம்தான் வடை சுடுறதை காண்பிக்க முடியும்..
ஸோ, ஆயிரம் எபிஸோடில்கூட இதை இழுக்கலாம்..!
ஜோக் ரசித்தேன்..
வருகைக்கு நன்றி Venkat
அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி ராகவன்
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐயா எல்லாமே நச்சுன்னு இருக்கு..
பாட்டி வடை சுட்ட கதையையும், காக்கா அதை தூக்கிட்டுப் போனதையும் 500 எபிஸோடுக்குச் சொல்லணும்னா பாட்டி, காக்கா ரெண்டு பேரோட சொந்தக்காரங்க கதையை அலசி, ஆராய்ஞ்சு அதுக்கப்புறம்தான் வடை சுடுறதை காண்பிக்க முடியும்..
ஸோ, ஆயிரம் எபிஸோடில்கூட இதை இழுக்கலாம்..!//
நீங்க உங்க ஆட்களை விட்டுக்கொடுப்பீங்களா
//பிரியமுடன்...வசந்த் said...
ஜோக் ரசித்தேன்..//
நன்றி வசந்த்
//வால்பையன் said...
அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!//
வருகைக்கு நன்றி Arun
தஞ்சையில் தெற்கு அலங்கம் என்றொரு பகுதி.அங்குதான் தமிழகத்திலேயே அதிகம் மருத்துவர்களும்,பார்மசிகளும் இருக்கின்றன.சும்மா ஒரு தகவலுக்காக
தகவலுக்கு நன்றி மணிஜி...நீங்க எப்படி இருக்கீங்க
//1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.
//
அப்படியா
நான் சீனா என்று நினைத்தேன்
வருகைக்கு நன்றி Doctor
//யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்\\
ஆமாம்ல
!
வருகைக்கு நன்றி சிவா
Post a Comment