Monday, October 19, 2009

தேமதுரக் குரலோன் P.B.ஸ்ரீநிவாஸ்


ஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.

ஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.
இவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்
என் அருகே நீ இருந்தால்-திருடாதே
பால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்
காற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்
இன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்
அழகிய மிதிலை நகரினிலே-அன்னை
ஆண்டொன்று போனால்-போலீஸ்காரன் மகள்
எந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி
ஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ
மாம்பழத்து வண்டு-சுமைதாங்கி
யார்..யார்..அவள் யாரோ--பாசமலர்
அவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்
பொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு
உங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை
நிலவே என்னிடம் - ராமு
நேற்றுவரை நீ யாரோ-வாழ்க்கைப்படகு
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

ஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா? இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்

சுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'

சென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலம்.

24 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பால் வண்ணம் பருவம் கண்டு..., பாடலைவிட்டுவிட்டீர்களே தல.,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ராஜ்குமார் 70ன் கடைசியில்தான் சொந்தக் குரலில் பாட ஆரம்பித்தாராம். அதுவரை அவருக்கு அவர்தான் சிம்மக் குரல் கொடுத்துவந்தாராம்..,

சகாதேவன் said...

ஜாதகம், பிரேமபாசம் படங்களின் பாட்டு என்ன சொல்லுங்களேன்.எனக்கு மறந்து விட்டது

venkat said...

மலரும் நினைவுகள்

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
பால் வண்ணம் பருவம் கண்டு..., பாடலைவிட்டுவிட்டீர்களே தல.//

அதை மறக்க முடியுமா மூன்றாவது பாடல் அதுதான்,

JesusJoseph said...

ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்

இது எனக்கு ரெம்ப பிடித்த பாடல.

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ராஜ்குமார் 70ன் கடைசியில்தான் சொந்தக் குரலில் பாட ஆரம்பித்தாராம். அதுவரை அவருக்கு அவர்தான் சிம்மக் குரல் கொடுத்துவந்தாராம்..,//
தகவலுக்கு நன்றி சுரேஷ்

T.V.Radhakrishnan said...

//சகாதேவன் said...
ஜாதகம், பிரேமபாசம் படங்களின் பாட்டு என்ன சொல்லுங்களேன்.எனக்கு மறந்து விட்டது//

ஜாதகம் படத்தில்..'சிந்தனை என் செல்வமே'
பிரேம பாசத்தில்..அவனல்லால் புவியில் ஒரு அணுவும் அசையாதே

வருகைக்கு நன்றி சகாதேவன்

T.V.Radhakrishnan said...

//venkat said...
மலரும் நினைவுகள்//

:-)))

T.V.Radhakrishnan said...

//JesusJoseph said...
ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்

இது எனக்கு ரெம்ப பிடித்த பாடல.

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com//

வருகைக்கு நன்றி Joseph

வருண் said...

***அடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், ஆடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.

சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்! :)

அடுத்தவீட்டுப்பெண்ணில் வரும் பாடல்,

*வாடாத புஷ்பமே!
வற்றாத செல்வமே!
தேடாத தெய்வீக பிம்பமே! னு போகும்னு நினைக்கிறேன்!

PBS songs are all classics, for sure! :)

T.V.Radhakrishnan said...

நன்றி வருண்..
மாற்றிவிட்டேன்

Toto said...

சிற‌ப்புத் தேன்கிண்ணம் ரொம்ப ந‌ல்ல‌ இருந்த‌து ஸார்.. ந‌ன்றி.

-Toto
www.pixmonk.com

செந்தழல் ரவி said...

வருண் வயது தெரிந்துவிட்டது ஹி ஹி :))

நானும் ரசித்திருக்கிறேன்...குரல் வளமும் இசை அறிவும், தற்பெருமை இல்லாத குணமும் ரொம்பவே பிடிக்கும்...

T.V.Radhakrishnan said...

//Toto said...
சிற‌ப்புத் தேன்கிண்ணம் ரொம்ப ந‌ல்ல‌ இருந்த‌து ஸார்.. ந‌ன்றி.

-Toto
www.pixmonk.com//

நன்றி toto

T.V.Radhakrishnan said...

//செந்தழல் ரவி said...
நானும் ரசித்திருக்கிறேன்...குரல் வளமும் இசை அறிவும், தற்பெருமை இல்லாத குணமும் ரொம்பவே பிடிக்கும்//

அதுமட்டுமல்ல ரவி..அவர் பொதுமக்களிடம் பழகும் விதம்..அடடா..கொஞ்சம் கூட கர்வம் இருக்காது.

மங்களூர் சிவா said...

தலைப்பு 100% கச்சிதம். மிக அருமை.

T.V.Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
தலைப்பு 100% கச்சிதம். மிக அருமை.//

வருகைக்கு நன்றி சிவா

நேசன்..., said...

சமீபத்தில் ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பற்றி நிறைய செய்திகளை அறிய முடிந்தது!இவர் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடித் தான் SPB முதல் பாடலைப் பாட வாய்ப்புப் பெற்றாராம்!.....

ஹாலிவுட் பாலா said...

நான் ஊரில் இருந்தப்ப, சுஜாதா சாரை-தான் நாரத கான சபாவில் அங்கே பார்ப்பேன் (அப்ப வுட்லண்ட்ஸ் இருந்தனால இவரை பார்க்க முடியலையோ).

T.V.Radhakrishnan said...

//நேசன்..., said...
சமீபத்தில் ஜெயா டிவியில் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பற்றி நிறைய செய்திகளை அறிய முடிந்தது!இவர் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடித் தான் SPB முதல் பாடலைப் பாட வாய்ப்புப் பெற்றாராம்!.....//
அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்

T.V.Radhakrishnan said...

//ஹாலிவுட் பாலா said...
நான் ஊரில் இருந்தப்ப, சுஜாதா சாரை-தான் நாரத கான சபாவில் அங்கே பார்ப்பேன் (அப்ப வுட்லண்ட்ஸ் இருந்தனால இவரை பார்க்க முடியலையோ).//

இருக்கலாம்..வருகைக்கு நன்றி பாலா

Deepa (#07420021555503028936) said...

அருமையான பகிர்வு. அழகான பல பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி.
எனக்கு மிகப் பிடித்தவற்றை டௌன்லோட் செய்யப் போகிறேன்!

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Deepa