Sunday, October 11, 2009

விழுதுகள் (கவிதை)




அவனுக்கு அவன்மீதே

ஆத்திரம்

நாம் இருவர்

நமக்கு இருவர் - மறந்து

வீங்கிய வயிறுடன்

வீட்டினுள் மணவாட்டி

முத்தாய் மூன்றாவது

முளையிலேயே கிள்ளிடணும்

இல்லையேல் முடியாது

இனிதாய் வாழ்ந்திட

இரவு முழுதும் மனப்புயல்

இடி மழையோ வெளியே

மறுநாள் புயலில்

மரங்கள் பல சாய

ஆலமரமோ சாயவில்லை

ஆதாரம் விழுதுகளே..

வருந்திய மனதில்

வந்தது மகிழ்ச்சி

15 comments:

மணிகண்டன் said...

மறுபடியும் கவிதை. நல்லா இருக்கு. அரசாங்கம் ரொம்ப கஷ்டப்பட்டு மக்கள் தொகையை குறைக்க முயற்சி பண்ணினா, நீங்க ஆலம் விழுதுன்னு எழுதறீங்களா ? :)-

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அய்யா!

நாடகம் போடுவியன்னு தெரியும்

கவிதையில கலக்குறியளே!

goma said...

கவிதை நடை அருமை.ஆனால் பொருள் பார்த்தால் ,மூன்றாவது குழந்தைக்கு ஒப்புதல் அளிக்க நினைப்பது ஆலம் விழுதெனத் தங்களை தாங்கும் என்ற சுயநலப் போக்கில் என்பதுதான் மனதை நெருகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
மறுபடியும் கவிதை. நல்லா இருக்கு. அரசாங்கம் ரொம்ப கஷ்டப்பட்டு மக்கள் தொகையை குறைக்க முயற்சி பண்ணினா, நீங்க ஆலம் விழுதுன்னு எழுதறீங்களா ? :)-///


வரும் முன் காப்போம் ஓ.கே.,வந்தபின் ஏற்றுக்கொள்வதே தர்மம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜெயபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
கவிதை நடை அருமை.ஆனால் பொருள் பார்த்தால் ,மூன்றாவது குழந்தைக்கு ஒப்புதல் அளிக்க நினைப்பது ஆலம் விழுதெனத் தங்களை தாங்கும் என்ற சுயநலப் போக்கில் என்பதுதான் மனதை நெருகிறது//

சில எதிர்ப்பார்ப்புகளுக்கு சுயநலநோக்கு இருந்தாலும்..தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

goma said...

ஏற்றுக் கொள்ளப் பட்டது.
சுயநலம் இல்லாமல் வளர்ச்சியே வராதே.
புரிய வைத்ததற்கு உண்மையிலேயே நன்றி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
ஏற்றுக் கொள்ளப் பட்டது.
சுயநலம் இல்லாமல் வளர்ச்சியே வராதே.
புரிய வைத்ததற்கு உண்மையிலேயே நன்றி//

நன்றி goma

ஈரோடு கதிர் said...

நன்று

மங்களூர் சிவா said...

/
மணிகண்டன் said...

மறுபடியும் கவிதை. நல்லா இருக்கு. அரசாங்கம் ரொம்ப கஷ்டப்பட்டு மக்கள் தொகையை குறைக்க முயற்சி பண்ணினா, நீங்க ஆலம் விழுதுன்னு எழுதறீங்களா ? :)-
/

ஹா ஹா சபாஷ் சரியான கேள்வி
:))

மங்களூர் சிவா said...

கவிதை நல்லா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கதிர் - ஈரோடு said...
நன்று//

வருகைக்கு நன்றி கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா
ஹா ஹா சபாஷ் சரியான கேள்வி
:))//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
கவிதை நல்லா இருக்கு.//

நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
கவிதை நல்லா இருக்கு.//

நன்றி சிவா