Tuesday, October 13, 2009

இருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை!!!!


லட்சக்கணக்கான பணம் தேவையில்லை.மிக நவீன சாதனங்கள் பயன்படுத்தவில்லை.அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைந்த செலவில்..சில நிமிடங்களில் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்தான்.

உடல் குளிரூட்ட முறையில் மருத்துவர்கள் இந்த இருதய அறுவை சிகிச்சையைச் செய்தார்கள்.

அறுவைசிகிச்சை செய்யும் நோயாளியின் உடலைச் சுற்றி பெரிய ஐஸ் கட்டிகளை வைத்து..உடல் வெப்ப நிலையை குறைக்கிறார்கள்.ரத்த ஓட்ட வேகத்தை குறைப்பதே இதன் நோக்கம்.

அறுவை சிகிச்சையின் போது இருதய இயக்கம் சில நிமிடங்கள் நின்றுவிடும் என்றாலும்,சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எற்படுவதில்லை.

இந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுத் தலைவர் டி.எச்.கோராடியா கூறுகையில்..இப்படிப்பட்ட அறுவைசிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என்றார்..

நோயாளியின் உடல் வெப்பம் ஐஸ் கட்டிகள் மூலம் 30 டிகிரி செல்ஷியஸிற்கு குறைக்கப்பட்டது..பின்னர் அறுவை சிகிச்சை மூன்றரை நிமிடங்களில் நடந்து முடிகிறது.

இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.அதாவது 100 கிலோ ஐஸ் கட்டிகளின் விலை.தவிர நான்கு பாட்டில் ரத்தம் தேவை.

ஆனால் இது நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்..!!!!

(11-10-84 அன்று தினமணியில் வந்த செய்தி,,இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள்

16 comments:

மங்களூர் சிவா said...

அப்படி என்றால் ஏன் இப்போது இது நடைமுறையில் இல்லை. சம்பாதிக்க முடியாது என்றா????

இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள் அறிய மிக்க ஆவல்.

Tech Shankar said...

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
௨௦ ரூபாய்க்கு ஒரு இதய அறுவை சிகிச்சை
100ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு
13ரூபாய்க்கு ஒரு கிலோ உப்பு
33ரூபாய்க்கு ஒரு கிலோ ஜீனி. என்ன கொடுமை சார் இது? சாதாரண மக்களாகிய எங்களால் வாழவே முடியாதோ. அதனால் சீக்கிரத்தில் இதயவியாதி வந்துடுமோ?
20ரூபாயில் இதய ஆப்பரேசனும் நடந்திடுமோ?

goma said...

அறுவை சிகைச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளியிடம் முதலில் கேட்டுப் பாருங்கள்’.....எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...என்னைக் காப்பாத்துங்க...”என்றுதான் சொல்லுவார்.
இப்பொழுது தெரிகிறதா
தவறு யார் மீது என்று .

வெண்ணிற இரவுகள்....! said...

அருமையான பதிவு

vasu balaji said...

நல்ல தகவல். யார் அந்த பிழைக்கத் தெரியாத மருத்துவர்கள்?

க.பாலாசி said...

நானும் ஆரம்பத்தில் மிக நல்ல செய்தியாயிருக்கே என்று படித்தேன். கடைசியில் இது நடந்தது 25 வருடத்திற்கு முன்பு என்பதை அறிந்ததும் ‘அதானே பார்த்தேன்‘ என்றாகிவிட்டது.

உங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைகிறதா என்று பார்ப்போம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள் அறிய மிக்க ஆவல்.//
எனக்கும்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ்நெஞ்சம் said...
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
௨௦ ரூபாய்க்கு ஒரு இதய அறுவை சிகிச்சை
100ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு
13ரூபாய்க்கு ஒரு கிலோ உப்பு
33ரூபாய்க்கு ஒரு கிலோ ஜீனி. என்ன கொடுமை சார் இது? சாதாரண மக்களாகிய எங்களால் வாழவே முடியாதோ. அதனால் சீக்கிரத்தில் இதயவியாதி வந்துடுமோ?
20ரூபாயில் இதய ஆப்பரேசனும் நடந்திடுமோ?//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப ஆசை 20 ரூபாய்க்கு மருத்துவமனை செல்ல ஆட்டோகூட கிடைக்காது இன்று

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
அறுவை சிகைச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளியிடம் முதலில் கேட்டுப் பாருங்கள்’.....எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை...என்னைக் காப்பாத்துங்க...”என்றுதான் சொல்லுவார்.
இப்பொழுது தெரிகிறதா
தவறு யார் மீது என்று //

இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது..அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் அது தவறாய் எண்ண முடியவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
அருமையான பதிவு//

வருகைக்கு நன்றி வெண்ணிற இரவுகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நல்ல தகவல். யார் அந்த பிழைக்கத் தெரியாத மருத்துவர்கள்?//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாஜி said...
உங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைகிறதா என்று பார்ப்போம்....//

பார்ப்போம்

ரவி said...

வீஎஸ்கே சாரை காணவில்லை, புருனோவை காணவில்லை, தேவன்மாயம் இல்லை, முருகானந்தம் டாக்டரும் இல்லை. எங்கப்பா போனீங்க ?

அரசு மருத்துவமனைகளில் இலவசம்தானே ? இல்லையா ? தெரியவில்லை.

பெங்களூர் சாய்பாபா மருத்துவமனையிலும் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்..

இதுபற்றி விளக்கமாக முன்பே எழுதி இருக்கிறேன்...

இருந்தாலும், எதற்கும் மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுதல் நன்று என்று பேசிக்கொள்கிறார்கள்.

ரவி said...

பாபா பிறந்தநாளின்போது எழுதப்பட்ட இடுகை. உங்கள் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_20.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
பாபா பிறந்தநாளின்போது எழுதப்பட்ட இடுகை. உங்கள் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பில்லை.

http://tvpravi.blogspot.com/2007/02/blog-post_20.html//

உங்கள் இந்த இடுகையை முன்னரும் படித்திருக்கிறேன்..இப்போதும் படித்தேன்.நீங்கள் சொல்வது போல அவரைப் பற்றி மற்ற விஷயங்கள் நமக்கு வெண்டாம்..ஆனால் மக்களுக்கு பல நன்மைகளையும்
செய்கிறார் அது போதும்.அனந்தபுர் மாவட்டத்தில் அவராலேயே தண்ணீர் பஞ்சம் இல்லை.நான் பிரசாந்தி நிலயம் சென்றிருக்கிறேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இருந்தாலும், எதற்கும் மருத்துவ காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ளுதல் நன்று என்று பேசிக்கொள்கிறார்கள்//
மருத்துவ காப்பீடு இருந்தாலும் பல சமயங்களில் பல மருத்துவ சிகிச்சைகள் கவர் ஆகாது என காப்பீடு நிறுவனங்கள் கூறி கிளைம்களை தள்ளுபடிசெய்வதாகவும் பேசிக் கொள்கிறார்கள்