ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Saturday, October 10, 2009
மனம் என்னும் குரங்கு..
நம் மனம் இருக்கிறதே..அற்புதமான ஒன்று..
ஒரு செயலை செய்யக்கூடாது என்று எண்ணுவதும்..அதுதான்..செய்வதும் அதுதான்..செய்து முடித்தபின்..ஐயோ அப்படி செய்திருக்க வேண்டாமே என்று புலம்பச் சொல்வதும் அதுதான்.
நாம் ஒரு செயலைச் செய்து விட்டு...நான் அதைச் செய்யவில்லை என்று சொல்லவைப்பதும் அதுதான்..ஆனால்..செய்தது நாம் என்பதை அதனால் மறந்தோ..மறைத்தோ விட முடியாது.அதைத்தான் நாம்..மனசாட்சி என்கிறோம்.
நீதிமன்றங்களிலும் இப்போதெல்லாம்..சாட்சிகளிடம்..'சத்தியமா சொல்றேன்'னு முதல்லே சொல்லச் சொல்றாங்க. வள்ளுவரும் 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க' என்கிறார்.
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்..என்பது அவ்வை மொழி.
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்கிறார் ஒரு பாடலில் கவியரசு.
மீண்டும் வள்ளுவனுக்கே போகலாம்..
எந்த ஒன்றை செய்வதானாலும்..மனம் சொன்ன உடனே செய்திடாதே..அப்படிசெய்துவிட்டு..பிறகு அதைப் பற்றி யோசிப்போம் என எண்ணாதேஅது உனக்கு இழுக்கை ஏற்படுத்தும்..அவப் பெயரை உண்டாகும்..நாம் செய்த செயலை எண்ணி நாமே வெட்கித் தலை குனிவோம்..நானா இப்படி செய்து விட்டேன்..என கூனிக் குறுகுவோம்..மீண்டும்..நண்பர் வட்டத்தில் எப்படி வலம் வருவோம் என்று அலைபாயும் அதே கேடுகெட்ட மனம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
மனம் என்னும் குரங்கை கட்டவிழ்த்து விடாதீர்கள்.அடக்கி ஆளுங்கள்..
கடந்த சிலநாட்களாக நாட்டில் நடந்த வரும் புவனேஸ்வரி விவகாரத்தில்..நடைபெற்ற பத்திகைகளின் செயலில் ஆகட்டும்..பின் உணர்ச்சிவசப்பட்டு..நமக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என எண்ணி..என்ன பேசுகிறோம் என எண்ணாமல் பேசிய நடிக,நடிகையர் விவகாரத்தில் ஆகட்டும்..மனம் போன போக்கில் நடந்ததால் ஏற்பட்ட செயல்கள் இவை.சற்று யோசித்து செயல் பட்டிருந்தால்..இரு தரப்பும் சமரசமாக முடிந்திருக்க வேண்டிய செயல் இது.
ரோசா..சுந்தர் விவகாரத்திலும்..மனம் என்னும் குரங்கு சொன்னதை ஒரு கணம் யோசித்திருந்தால் ..அந்த மனத்தை அடக்கிவைத்திருக்கலாம் ரோசா..
ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்?
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அவசியமான பதிவு ஐயா
நல்லா சொன்னீங்க ....
எனது பதிவு
நல்ல பதிவு, ஆனால் கூடவே நிங்கள் இதையும் எழுதி இருக்கலாம்.
நம் நமதை எப்படி கட்டு படுத்துவது, நம் எண்ணங்களை எப்படி கட்டு படுத்துவது, எண்ணம் ஆராய்தல் போன்றவை பற்றியும் எழுதி இருக்கலாம்.
You have written about the problem but what about the solution.
//அத்திரி said...
அவசியமான பதிவு ஐயா//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி அத்திரி
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லா சொன்னீங்க ....//
நன்றி Starjan
//குப்பன்.யாஹூ said...
You have written about the problem but what about the solution.//
இதற்கு ஒரே solution
மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்..அதற்கு கட்டுப்படக்கூடாது.
நல்ல செயல்,நல்ல சிந்தனை,தியானம் இவை ஓரளவு மனதைக் கட்டுப்படுத்தும்.
மனம் என்பது மிகப் பெரிய குரங்குதாங்க. கட்டுப் படுத்துவது என்பது மிகக் கடினமானதுதாங்க. ஆனால் கட்டுபடுத்தினால், நாம் சொல்படி எல்லாம் ஆடுங்க.
சரியான நேரத்தில் வந்த சரியான கட்டுரைங்க.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி இராகவன்
நல்ல பதிவு
மனதை அடக்க நினைத்தால் அலையும்,
மனதை அறிய நினைத்தால் அடங்கும்
-- வேதாத்திரி மகரிஷி
மனதை கவனித்தால் போதும், தானாக அடங்க ஆரம்பித்து விடும்,
மனதிலிருந்து விலகி நின்று பார்க்க முயற்சி செய்வோம்.,
வாழ்த்துக்கள்
தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்
மிக்க வருந்தமான விஷயம்.
சுந்தர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
//இயற்கை said...
நல்ல பதிவு//
நன்றி இயற்கை
//நிகழ்காலத்தில்... said...
மனதை அடக்க நினைத்தால் அலையும்,
மனதை அறிய நினைத்தால் அடங்கும்
-- வேதாத்திரி மகரிஷி
மனதை கவனித்தால் போதும், தானாக அடங்க ஆரம்பித்து விடும்,
மனதிலிருந்து விலகி நின்று பார்க்க முயற்சி செய்வோம்.,
வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி நிகழ்காலத்தில்
//மங்களூர் சிவா said...
தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்
மிக்க வருந்தமான விஷயம்.
சுந்தர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.//
நன்றி சிவா
Post a Comment