1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது
2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.
3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன
15 comments:
முன்பே படித்ததென்றாலும், சூப்பர்.. சார்.
படித்ததும் புடித்தது
தொகுப்பு அருமை
படித்ததும்...கேட்டதும்..."
அருமை அருமை ..
வருகைக்கு நன்றி
Peer
ஜெரி ஈசானந்தா.
goma
Starjan
5.கேளிக்கைகளை வாங்களாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
சின்ன ல.
மாற்றை குறைத்து வாங்குபவரா அல்லது விற்பவரா ?
தட்டச்சுப் பிழை..சரி செய்து விட்டேன்..நன்றி ரவி
அருமை.
நன்றி இராகவன்
//2.புகழை விரும்பாத கொடையாளி/
பின்னூட்டம் விருமாத பதிவர் :)
இந்த மாதிரியும் முயற்சி செய்யுங்க
வருகைக்கு நன்றி
சின்ன அம்மிணி
சூப்பர் தலைவா! என்னது? எல்லாம் சொல்றாங்கன்னு நானும் சொல்றனா? அப்டி எல்லாம் இல்லைங்கண்ணா!!
எனக்கு இந்த தொகுப்பு புதியது. அருமையான தொகுப்பு
//கலையரசன் said...
சூப்பர் தலைவா! என்னது? எல்லாம் சொல்றாங்கன்னு நானும் சொல்றனா? அப்டி எல்லாம் இல்லைங்கண்ணா!!//
நன்றி கலையரசன்
//Varadaradjalou .P said...
எனக்கு இந்த தொகுப்பு புதியது. அருமையான தொகுப்பு//
நன்றி Varadaradjalou
Post a Comment