Friday, August 29, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.

8 comments:

அது சரி said...

சூப்பர். அய்யாசாமிக்கு அடுத்து நான் நாயை வாடகைக்கு எடுக்கலாம்னு இருக்கேன் :0)

ஒரு நாளைக்கு வாடகை எவ்வளவுங்க? முக்கியமா, எத்தனை நாள்ல காரியத்தை முடிக்கும்??

Kanchana Radhakrishnan said...

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் நம்பர்.502.உங்களது முறை வரும்போது தெரிவிக்கப்படும் பணத்தைக்கட்டி நாயைக் கூட்டிச்செல்லலாம்.ஒரே நாளில் வேலை முடியும் என நம்பப்படுகிறது.
வருகைக்கு நன்றி.

சின்னப் பையன் said...

மீ த 503ர்ட்.....:-)))

Kanchana Radhakrishnan said...

//மீ த 503ர்ட்.....:-)))//


உங்கள் பின்னூட்டம் உங்க தங்கமணிக்கு forward செய்யப்படுகிறது :-)))

அது சரி said...

என்னது 502?? ரொம்ப அநியாயமா இருக்கே! பாவப்பட்ட பையன்னு கொஞ்சம் முன்னுரிமை குடுக்க கூடாதா?

அந்த நாய் ஒரு நாளக்கு ஒரு காரியம் முடிக்கும்னு வச்சிகிட்டாலும், நம்ம டர்ன் வரதுக்கு ஒன்ற வருசம் ஆகுமே! ஏங்க எதுனா ப்ளாக்ல ஒரு டோக்கன் கெடைக்குமா?? எவ்ளோ செலவானாலும் பரவால!

மங்களூர் சிவா said...

:)))))))

Kanchana Radhakrishnan said...

என்னது 502?? ரொம்ப அநியாயமா இருக்கே! பாவப்பட்ட பையன்னு கொஞ்சம் முன்னுரிமை குடுக்க கூடாதா?

//அந்த நாய் ஒரு நாளக்கு ஒரு காரியம் முடிக்கும்னு வச்சிகிட்டாலும், நம்ம டர்ன் வரதுக்கு ஒன்ற வருசம் ஆகுமே! ஏங்க எதுனா ப்ளாக்ல ஒரு டோக்கன் கெடைக்குமா?? எவ்ளோ செலவானாலும் பரவால!//



அதுசரி..உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

Kanchana Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
:)))))))//

;-))))))))